<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,376,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Aug 07 2026 04:01:51 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260807T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="07082026-TRY-02" position.sequence="02" ex-ref="07082026-TRY-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#ff6600" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup798938_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">“எ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">ப்­போ­தும் எனக்கு அதிக விளம்­ப­ரம் தேடித் தரு­கி­ற­வர்­கள் எனது 
எதி­ரி­கள் தான்” என்­பார் தந்தை பெரி­யார். அப்­ப­டித் தான் நடந்து கொள்­கிறார் முத­ல­மைச்­சர் விஜய். எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நி­தியை கைது செய்து முடக்க நினைத்­த­தன்  மூல­மாக ஒட்­டு­மொத்த திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தொண்­டர்­க­ளும் எழுச்­சி­யும் மலர்ச்­சி­யும் கொண்ட வீரர்­க­ளாக எழுந்து நிற்­கி­றார்­கள். சமூக வலைத்­த­ளங்­க­ளில் கட்சி சார்­பற்­ற­வர்­க­ளும் உத­ய­நிதி மீதான நட­வ­டிக்­கை­யைக்  கண்­டித்து கொந்­த­ளித்­துப் பேசி­வ­ரு­கி­றார்­கள். முத­ல­மைச்­சர் விஜய், தனக்­குத் தானே ‘சூனி­யம்’ வைத்­துக் கொண்­டார் என்­பதே நேற்­றைய நிகழ்­வு­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">முத­ல­மைச்­ச­ராக விஜய் வந்­தது முதல் தமிழ்­நாடு அனைத்­துத் துறை­களிலும் அத­ல­பா­தா­ளத்­துக்­குச் ­சென்றுகொண்­டி­ருக்­கி­றது. பாலி­யல் வன்­கொ­டு­மை­கள் நடக்­காத நாள் இல்லை. எங்­கும் போதைப் பொருள் நட­மாட்­டம். கொலை, கொள்ளை, திருட்டு, அரி­வாள் வெட்டு, பெட்­ரோல் குண்டு வீச்­சு­கள் என சட்­டம் ஒழுங்கு சந்தி சிரிக்­கி­றது.பல்­வேறு குற்­றச் சம்­ப­வங்­களில் த.வெ.க. நிர்­வா­கி­களே கைதாகி வரு­கி­றார்­கள். அமைச்­சர்­களே 
பல்­வேறு சர்ச்­சை­க­ளில் சிக்கி வரு­கி­றார்­கள். இது எதை­யும் முத­ல­மைச்­சர் விஜய்­யால் தடுக்க முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">தமிழ்­நாட்­டின் உரிமை சார்ந்த பிரச்­சி­னை­க­ளில் வாய்­மூ­டிக் கிடக்­கி­றார். காவி­ரிப் பிரச்­சி­னை­யில் தமிழ்­நாட்­டின் உரி­மையை மொத்­த­மாக தாரை வார்த்து விட்­டார். மாதம் தோறும் வழங்க வேண்­டிய நீரைக் கூட கர்­நா­ட­கம் தர மறுக்­கி­றது. அதைத் தட்­டிக் கேட்க யோக்­கி­யதை அற்ற முத­ல­மைச்­ச­ராக அவர் இருக்­கி­றார். மேக­தாது அணை­யைக்  கட்­டித்  தீரு­வோம் என்­ப­தில் கர்­நா­ட­கம் உறு­தி­யாக இருக்­கி­றது. அதைத் தடுக்க முடி­ய­வில்லை. இத்­த­கைய கையறு நிலை­யில் இருக்­கும் முத­ல­மைச்­சர் விஜய், தனது முகத்­திரை கிழிந்து விட்­டதை மறைக்க எதிர்க்­கட்­சித் தலை­வர் 
உத­ய­நி­தி­யைக் கைது செய்து பிரச்­சி­னை­யைத் திசை திருப்­பப் பார்த்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தொண்­டர்­க­ளின் வீறு­கொண்ட போராட்­டத்­தின் விளை­வாக, ‘நாங்க அவரை கைது செய்­யப் போவது இல்லை, பேசிட்டு விட்­டு­வி­டு­வோம்’ என்று மழுப்­பல் பதிலை நீதி­மன்­றத்­தில் 
சொன்­னது விஜய் அரசு. அப்­ப­டிச்  சொல்­லும் சூழ்­நி­லையை உரு­வாக்கி  வைத்­த­வர்­கள் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தீரர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">‘உங்­க­ளைக் கைது செய்­தி­ருக்­கி­றோம்’ என்று சொல்­லி­விட்டு, ‘கைது செய்­யப் போவ­தில்லை’ என்று நீதி­மன்­றத்­தில் சொன்­ன­தைப் போல ஏமாற்­றுக் காரி­யம் இருக்க முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">‘12 மணி வரைக்­கும் எந்த முடி­வும் எடுக்க வேண்­டாம்’ என்று சென்னை உயர்­நீ­தி­மன்­றம் சொன்ன பிற­கும், அதற்கு முன்­ன­தாக சென்­னை­யில் கைது செய்து தஞ்­சா­வூ­ருக்கு அழைத்­துச் சென்­றது ஏன்? முத­ல­மைச்­சர் விஜய் இதன் மூல­மாக என்ன சொல்ல விரும்­பு­கி­றார்? ‘நீதி­மன்­றத்தை மீறி­ய­வன் நான்’ என்று நினைக்­கி­றாரா? நீதி­மன்­றங்­கள் என்­றால் என்­ன­வென்­றா­வது அவ­ருக்­குத் தெரி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">முத­ல­மைச்­சர் விஜய்க்கு திராணி இருந்­தால் எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி தஞ்­சா­வூ­ரில் கேட்ட கேள்­விக்­குப் பதில் சொல்­லட்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">“எந்த மாதிரி அமைச்­சர்­கள் அமைந்­தி­ருக்­கி­றார்­கள்? திருட்டு லாட்­டரி விற்­கிற ஒரு அமைச்­சர், திருட்டு விசிடி விற்­கிற ஒரு அமைச்­சர், பிளாக்­கில் டிக்­கெட் விற்­கிற ஒரு அமைச்­சர், உருட்­டுக் கட்­டை­யு­டனே சுத்­திக் கொண்­டி­ருக்­கிற ஒரு அமைச்­சர், எல்­லா­வற்­றுக்­கும் மேலாக போதைப் பவு­டர் அமைச்­சர். இப்­படி மொத்த கேபி­னெட்­டுமே ஒரு ஜோக்­கர் கூட்­ட­மாக 
இன்­றைக்கு தமிழ்­நாட்­டில் அமைந்­தி­ருக்­கி­றது” என்று குற்­றம் சாட்டி 
இருக்­கி­றார் எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி. இதற்­குப் பதில் சொல்­லத் திராணி இருக்­கி­றதா முத­ல­மைச்­சர் விஜய்க்கு?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">சொந்­தக் கட்­சிக்­கா­ரரை, “அவ­னைத் தூக்கி வைத்து ஜட்­டி­யோட வைத்து அடித்தே கொன்­னு­டு­வேன்” என்று மிரட்­டு­கி­றார் சமூ­க­ந­லத் துறை அமைச்­சர் ஜெக­தீஸ்­வரி. ‘என்­னோட வீடியோ இருக்­குன்னு 
மிரட்­டு­கி­றார்­கள்’ என்று அவரே பேட்டி தரு­கி­றார். மிரட்­டு­வது யார்? 
அவ­ரது கட்­சிக்­கா­ரர்­கள் தானே? இவர்­கள் மீதெல்­லாம் நட­வ­டிக்கை உண்டா?  விஜய் ரசி­கையை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளாக்­கிய குற்­றச்­சாட்­டில் சிக்கி இருக்­கும் ஸ்ரீவை­குண்­டம் சர­வ­ணன்­மீது இன்­று­வரை நட­வ­டிக்கை இல்லை. அந்த ரசி­கையை கட்­சியை விட்டு நீக்­கி­விட்­டார்­கள். அரசு வழக்­க­றி­ஞர் நிய­ம­னத்­தில் பல லட்­சம் லஞ்­சம் என்று சொன்ன த.வெ.க. உறுப்­பி­னர் ஞான­செ­ளந்­த­ரி­யைக் கட்­சியை விட்டு நீக்­கி­விட்­டார்­கள். இவர் யாரைக் குற்­றம் சாட்­டி­னாரோ அவர்­கள்­மீது நட­வ­டிக்கை இல்லை. இத்­த­கைய துப்­புக் கெட்ட ஆட்­சிக்கு தூய ஆட்சி என்று பெயர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">ஆனால் தஞ்­சா­வூ­ரில் ஆர்ப்­பாட்­டம் நடத்­திய அடுத்த நாளே எதிர்க்­கட்­சித் தலை­வ­ரைக் கைது செய்­கி­றார்­கள். அவர் ஆபா­ச­மா­கப் பேசி­விட்­டார்  என்ற  அவ­தூறை அவர்­களே  கிளப்பி அசிங்­கப்­ப­டுத்த நினைத்­தார்­கள். அதில் அவர்­களே  அசிங்­கப்­பட்டு நிற்­கி­றார்­கள். தனது தலை­யில் தானே மண் அள்­ளிப் போட்­டுக் கொண்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">ஆபா­ச­மா­க­வும் அசிங்­க­மா­க­வும் கெட்ட வார்த்­தை­க­ளைச் சர­ள­மாக 
பயன்­ப­டுத்­து­வ­தி­லும் கை தேர்ந்­த­வர் முத­ல­மைச்­சர் விஜய் தான். அவர் மீது எத்­தனை வழக்­கு­கள் போடு­வது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">முத­ல­மைச்­சர் விஜய்­யின் மனைவி சங்­கீதா மண­வி­லக்கு கேட்டு 
செங்­கல்­பட்டு நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொடுத்­தார். சங்­கீ­தாவை அசிங்­கப்­ப­டுத்­தி­யது விஜய் ரசி­கர்­கள் தான். இவர்­கள் மீது எத்­தனை லட்­சம் வழக்­கு­கள் போடு­வது? தனது மனை­வி­மீது கொச்­சை­யான அவ­தூறு கிளப்­பி­ய­வர்­ க­ளைத்  தடுக்க துப்பு இல்லை. உத­ய­நிதி மீது வழக்கு போடத்  துடிப்­ப­தற்கு வெட்­க­மாக இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">கட்­டிய மனை­வியை ‘வொர்த் இல்லை’ என்று சொன்­ன­வ­ருக்கு ‘வொர்த்’  யார்  என்­பதை ஊருக்­குக் காட்­டும் நாளாக  ஆகஸ்ட் 4 
அமைந்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>