<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,553,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 08 2026 03:36:11 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260808T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="08082026-CHN-03" position.sequence="03" ex-ref="08082026-CHN-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="55">டெல்டா மாவட்டங்களை வறட்சிப் பகுதிகளாக அறிவித்திடுக! மேகதாது விவகாரத்தில் அரசு எடுத்த நிலை என்ன?</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய   எவ்வளவு காலம் தேவை என்பதையும் சொல்ல வேண்டும்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup830511_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Cartoon7.8.202_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">கூட்ட வேண்­டும் என்று, தொடர்ந்து வலி­யு­றுத்தி கேட்­டுக்­கொண்டு வரு­கி­றோம்.  திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் மட்­டு­மல்ல, தமிழ்­நாட்­டில் இருக்­கின்ற அனைத்­துக் கட்­சி­க­ளும், அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தைக் கூட்ட வேண்­டும் என்று வலி­யு­றுத்தி வரு­கி­றார்­கள். ஏன் கேட்­டுக்­கொள்­கி­றோம் என்­றால், கர்­நா­டகா முத­ல­மைச்­ச­ரும் அந்த அர­சும் மேக­தாது விஷ­யத்­தில், மிக­வும் வேக­மா­கச் செயல்­பட்டு வரு­கி­றார்­கள் என்­ப­தால்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">கர்­நா­டக முத­ல­மைச்­சர் வேகம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">ஜூன் 11-ஆம் தேதி, ஒன்­றிய நிதி­ய­மைச்­சர் திரு­மதி. நிர்­மலா சீதா­ரா­மன் அவர்­களை, கர்­நா­டக முத­ல­மைச்­சர் நேரில் பார்த்து மேக­தாது அணை கட்­டு­வ­தற்கு நிதி­யு­தவி வேண்­டும் என்று கோரிக்கை வைத்­தி­ருக்­கி­றார்.  ஜூன் 12-ஆம் தேதி ஒன்­றிய ஜல்­சக்தி துறை அமைச்­சர் திரு.சி.ஆர்.பாட்­டீல் அவர்­களை நேரில் பார்த்து, மேக­தாது திட்­டத்­துக்கு நீங்­கள் ஒப்­பு­தல் அளிக்க வேண்­டும் என்று கோரிக்கை வைத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">ஜூலை 27-ஆம் தேதி அன்று நாடா­ளு­மன்­றத்­தில், ஒன்­றிய ஜல்­சக்தி துறை இணை அமைச்­சர் மேக­தா­து­வில் அணை கட்ட தமிழ்­நாடு, புதுச்­சேரி மாதி­ரி­யான கீழ்­ப­டுகை மாநி­லங்­கள், அதா­வது `லோயர் லிபே­ரி­யன் ஸ்டேட்ஸ்’ - அவற்­றின் அனு­மதி தேவை­யில்லை என்று கூறி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அதே நாள் ஜூலை 27-ஆம் தேதி, டெல்­லி­யில் கர்­நா­ட­கா­வைச் சேர்ந்த அனைத்­துக் கட்சி எம்.பி.-க்கள் கூட்­டத்தை, கர்­நா­டக முத­ல­மைச்­சர் அவர்­கள் நடத்­தி­யி­ருக்­கி­றார்.  கர்­நா­டகா அமைச்­சர் ராம­லிங்கா ரெட்டி, கர்­நா­டக அர­சின் டெல்லி பிர­தி­நிதி, கர்­நா­டக அர­சின் தலைமை வழக்­க­றி­ஞர், மூத்த அதி­கா­ரி­கள் எல்­லோ­ரு­ட­னும் சேர்ந்து, மேக­தாது சம்­பந்­த­மாக அந்த மாநில முத­ல­மைச்­சர் ஆய்­வுக் கூட்­டத்­தை­யும் நடத்தி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">எல்­லா­வற்­றுக்­கும் மேல், ஆகஸ்ட் 2-ஆம் தேதி பெங்­க­ளூ­ரில் அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தைக் கூட்­டு­வோம் என்று கர்­நா­டக முத­ல­மைச்­சர் அனைத்­துக் கட்­சி­க­ளுக்­கும் அழைப்­பும் விடுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">திரு.சீதா ராமையா, திரு.பச­வ­ராஜ் பொம்மை, திரு.எடி­யூ­ரப்பா, திரு.குமா­ர­சாமி, திரு.வீரப்ப மொய்லி என ஐந்து முன்­னாள் முத­ல­மைச்­சர்­கள் உட்­பட அந்த முக்­கி­ய­மான கூட்­டத்­தில், முக்­கி­ய­மான தலை­வர்­கள் அனை­வ­ரும் கலந்­து­கொண்­டுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">ஒரு மாதத்­தில் பல நட­வ­டிக்­கை­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">கர்­நா­டக முத­ல­மைச்­சர் அந்­தக் கூட்­டத்­தில் ஊட­கங்­க­ளைச் சந்­தித்து, தெளி­வாக பேட்­டி­யும் கொடுத்­தி­ருக்­கி­றார்.  இப்­படி அவர்­கள் ஸ்டெப் பை ஸ்டெப்­பாக ஒரு மாதத்­தில் பல நட­வ­டிக்­கை­க­ளைத் தொடர்ந்து எடுத்து வரு­கி­றார்.  மாநில நலன் என்று வந்­தால், அவர்­கள் எப்­படி அர­சி­யல் வேறு­பா­டு­கள் எல்­லாம் பார்க்­கா­மல், மாறு­பா­டு­க­ளைக் கடந்து, மறந்து ஓர­ணி­ யில் நிற்­கி­றார்­களோ, அதே­போல நாமும் நம் ஒற்­று­மையை கர்­நா­டக அர­சுக்­கும், ஒன்­றிய அர­சுக்­கும் காட்ட வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் நாங்­கள் அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தைக் கூட்ட வேண்­டும் என்று எங்­கள் கோரிக்­கை­யைத் தொடர்ந்து  வைத்­துள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">விவ­சா­யி­கள் மேல் அக்­கறை உள்ள ஒரு அரசு, இவற்­றை­யெல்­லாம் கேட்­கா­மல் தானா­கவே செய்ய வேண்­டும். ஏன் அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தைக் கூட்ட மறுக்­கி­றீர்­கள் என்­ப­து­தான், சிம்­பி­ளாக நான் கேட்­கக்­கூ­டிய கேள்வி.  நாம் தொடர்ந்து அழுத்­தம் கொடுத்த பிறகு இப்­போது ஜூலை 28-ஆம் தேதி­யன்று, பிர­த­ம­ருக்கு இரண்­டா­வது கடி­தத்தை நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் எழு­தி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">எங்­கள் தலை­வர் முத­ல­மைச்­ச­ ராக இருந்­த­போது, தமிழ்­நாட்­டின் பிரச்­சி­னை­க­ளுக்­காக கடி­தங்­கள் எழு­து­வதை விமர்­சித்து, இப்­போது இங்கு இருக்­கின்ற முத­ல­மைச்­சர் அவர்­கள் என்­னென்ன பேசி­யி­ருக்­கி­றார் என்­பதை இங்கு ரீவைண்ட் செய்து பார்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">இன்­றைக்கு நம் அர­சின் நிலை என்ன?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">மாண்­பு­மிகு பேர­வைத் தலை­வர் அவர்­களே, நாங்­கள் கேட்­ப­தெல்­லாம் ஒன்றே ஒன்­று­தான். அனைத்­துக் கட்­சிக் கூட்­டம்  கூட்­ட­வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">காவி­ரிப் பிரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தற்­காக, கர்­நா­டக அரசு தொடர்ந்து அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தைக் கூட்­டிக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.  அங்கு இருக்­கின்ற அனை­வ­ரின் கருத்­து­க­ளை­யும் கேட்­கி­றார்­கள்.  ஏன், தமிழ்­நாடு அரசு அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தைக் கூட்­டு­வ­தைத் தவிர்க்­கின்­றது என்­ப­து­தான் எங்­க­ளின் கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">பேர­வைத் தலை­வர் வாயி­லாக இன்­னொன்றை இங்கு தெரி­விக்க விரும்­பு­கி­றேன்.  இந்த அரசு ஒரு `புது டெக்­னிக்கை’ தொடர்ந்து கடைப்­பி­டித்து  வரு­கி­றார்­கள்.  எதை­யா­வது ஒன்றை செய்­வ­தற்கு முன்பு, அந்­தச் செய்­தியை இவர்­களே அதை  கசிய (லீக்) செய்து விடு­கி­றார்­கள்.  அதற்கு எதிர்ப்பு பல­மாக இருந்­தால், யூ டர்ன் போட்­டு­வி­டு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">எந்த முடி­வும் எடுக்­க­வில்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">முத­ல­மைச்­சர் அவர்­கள் கர்­நா­டகா செல்­கி­றார் என்று வேளாண் துறை அமைச்­சர் ஒரு பேட்டி கொடுக்­கி­றார்.  பிறகு, அவரே அதை மறுத்து பேசு­கி­றார்.  இன்­னும் இரண்டு அமைச்­சர்­கள் அதி­கா­ர­பூர்­வ­மாக எந்த முடி­வும் எடுக்­க­வில்லை என்று சொல்­கி­றார்­கள்.  13 பேர் கொண்ட ஒரு குழு செல்­கி­றது என்று மீண்­டும் செய்­தி­க­ளில் பார்த்­தோம். கடை­சி­யில் என்­னா­யிற்று என்­றால்,  ``தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் இங்கு வர­வேண்­டாம்.  நாங்­கள் தண்­ணீர் கொடுப்­ப­தற்கு தயா­ராக இல்லை’’ என்று கர்­நா­டக முத­ல­மைச்­சர் தெரி­விக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">அனைத்­துக் கட்­சிக்­ கூட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">முத­லில், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் கர்­நா­டகா செல்­வ­தாக இருந்­தாரா? அப்­படி இருந்­தால், ஏன் செல்­ல­வில்லை? இப்­பொ­ழுது உங்­கள் நிலை என்ன என்­ப­து­தான், எங்­க­ளின் கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இரண்­டா­வது பிரச்­சினை பயிர்க்­க­டன் பற்றி சொல்ல விரும்­பு­கி­றேன்.  தேர்­தல் வாக்­கு­று­தி­யில் நீங்­கள் கொடுத்த வாக்­கு­றுதி. பயிர்­க­டன் முழு­மை­யா­கத் தள்­ளு­படி செய்­வோம் என்று சொன்­னீர்­கள். ஆனால், கொடுக்­க­வில்லை.  இதற்­கும் சேர்த்­து­தான் விவ­சா­யி­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ளார்­கள்.  தள்­ளு­படி செய்ய கால அவ­கா­சம் வேண்­டு­மென்­றால், எவ்­வ­ளவு காலம் தேவைப்­ப­டும் என்­ப­தைச் சொல்ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">டெல்­டா­வில் உள்ள அனைத்­துத் தரப்பு விவ­சா­யச் சங்­கப் பிர­தி­நி­தி­க­ளை­ யும் சந்­தித்­துப் பேசும்­படி, முத­ல­மைச்­சர் அவர்­கள் ஒரு கூட்­டத்­தைக் கூட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">குறு­வை­யில் நஷ்­டத்­தைச் சந்­தித்து இருக்­கின்ற விவ­சா­யி­க­ளுக்கு இந்த அரசு உரிய இழப்­பீடு வழங்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">எங்­கள் ஆட்­சி­யில் 6.5 லட்­சம்ஹெக்­டர் அள­வுக்கு, குறுவை நெல் சாகு­படி நடந்­தது. ஆனால், இந்த ஆட்­சி­யில் இந்த வரு­டம் வெறும் 1.5 லட்­சம் ஹெக்­டர் அள­வுக்­குத்­தான் குறுவை சாகு­படி நடந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">நீங்­கள் `ஸ்பெஷல் பேக்­கேஜ்’ என்று சொல்லி ரூ.134 கோடி அறி­வித்­தி­ருக்­கி­றீர்­கள்.  அதை எத்­தனை பேருக்­குக் கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள் என்­பதை இந்த அவை­யில் தெரி­விக்க வேண்­டும். ஏதா­வது, கணக்­கெ­டுப்பு எடுத்­தி­ருக்­கி­றீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">மாண்­பு­மிகு பேர­வைத் தலை­வர் அவர்­களே `ஸ்பெஷல் பேக்­கே­ஜில்’ நீங்­கள் கொடுத்­தது ரூ.134 கோடி.  அது அனைத்து அர­சி­லும் கொடுக்­கின்ற ஸ்பெஷல் பேக்­கேஜ்­தான்.  இப்­போது அவர்­கள், `வறட்சி நிவா­ரண நிதி’ கேட்­கி­றார்­கள்.  இவை இரண்­டுக்­கும் வித்­தி­யா­சம் தெரிந்­து­கொள்ள வேண்­டும்.  தின­மும் காலை­யில் பேப்­பர் படித்­தால் மட்­டும் பத்­தாது, அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தைக் கூட்டி, அனைத்து விவ­சா­யி­க­ளை­யும் அழைத்­துக் கலந்து பேசி, அவர்­க­ளின் கோரிக்­கை­கள் என்ன என்று தய­வு­செய்து நீங்­கள் கேட்டு தெரிந்­து­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">  </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">என்ன பயம், என்ன தயக்­கம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">மாண்­பு­மிகு பேர­வைத் தலை­வர் அவர்­களே, நான் மீண்­டும் திரும்ப திரும்ப கேட்­ப­து­தான்.  கர்­நா­ட­கா­வில் அவர்­கள் அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தைக் கூட்டி, அவர்­க­ளின் கோரிக்­கை­களை எல்­லாம் கேட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.  ஆனால், இந்த த.வெ.க. அரசு அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தைக் கூட்­டு­வ­தற்கு என்ன பயம், என்ன தயக்­கம் என்­ப­தைக் கேட்­டுக்­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.8">திசை திருப்­பப் பார்க்­கி­றார்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">குறு­வையை பாதித்த நிலை­யில் இன்­றைக்கு சம்­பா­வும் பாதிக்­கப்­ப­டும் நிலை­யில் விவ­சா­யி­க­ளின் தொடர் கோரிக்கை வாயி­லாக, டெல்டா மாவட்­டங்­களை வறட்சி பாதித்த மாவட்­டங்­க­ளாக அறி­விக்­க­வும், அதற்­கான நிவா­ர­ணங்­களை பெற­வும் அவர்­கள் தொடர்ந்து கேட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.  அதை­யும் இந்த அரசு கவ­னத்­தில் எடுத்­துக் கொண்டு ஆவன செய்ய வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இப்­போது நாம் என்ன விஷ­ய­மாக பேசிக்­கொண்டு இருக்­கி­றோம்.  பேர­வைத் தலை­வர் அவர்­களே, நீங்­கள் சொன்­ன­தால், உங்­க­ளின் வார்த்­தையை மதித்து, ஒத்­தி­வைப்­புத் தீர்­மா­னம் எதற்கு கொடுத்­தோமோ அதைப்­பற்றி மட்­டும் பேசி­னேன்.  ஏன் தண்­ணீர் வர­வில்லை. எப்­போது தண்­ணீர் வர­வேண்­டும் என்று கேட்­கி­றேன்.  பயிர்­க­டன் தள்­ளு­படி எப்­போது செய்­வீர்­கள் என்று கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">அதற்கு சம்­பந்­தமே இல்­லா­மல் சட்­டத்­துறை அமைச்­சர் அவர்­கள் திசை திருப்­பப் பார்க்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">மாண்­பு­மிகு பேர­வைத் தலை­வர் அவர்­களே. தொகுதி மறு­வ­ரை­ய­றை­யைப் பற்றி ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வுக்­கும் முன்­மா­தி­ரி­யாக முதன்­மு­றை­ யாக பேசி­யது, எங்­கள் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், எங்­கள் கழ­கத் தலை­வர் அவர்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">சென்ற ஆண்டு  தென் மாநி­லங்­க­ளில் இருந்து 5 முத­ல­மைச்­சர்­களை, சென்­னைக்கு வர­வ­ழைத்து ஒரு மிகப்­பெ­ரிய ஆலோ­ச­னைக் கூட்­டத்தை நடத்தி, இந்­தத் தொகுதி மறு­வ­ரை­ய­றையை எதிர்த்து முதன்­மு­றை­ யாக இந்­தி­யா­வி­லேயே குரல் கொடுத்த தலை­வர் எங்­க­ளின் தலை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">நாளை முத­ல­மைச்­சர் தொகுதி மறு­வ­ரை­யறை பிரச்­சினை பற்றி பேசு­வ­தற்­காக அனைத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும் அழைத்­தி­ருக்­கி­றீர்­கள். இதற்­கான சரி­யான முடிவை எங்­க­ளின் தலை­வர், ஆலோ ­சனை செய்து முடிவை எடுப்­பார்.  இப்­போது நாம் பேசிக்­கொண்டு இருப்­பது நிதி­நி­லைமை, வேளாண்மை பட்­ஜெட்டை பற்றி, அதற்கு எங்­கள் உறுப்­பி­னர்­கள் கேள்வி கேட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.  முடிந்­தால் அதற்கு பதில் சொல்­லுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.8">இவ்­வாறு சட்­டப் பேர­வை­யில், எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் உரை ஆற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>