<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,32,959,779" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 08 2026 03:41:40 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260808T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="08082026-CHN-08" position.sequence="08" ex-ref="08082026-CHN-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20"> சென்னை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">08.08.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">ஒன்றிய அரசுக்குச் செலுத்தப்படும் வரிகளின் மூலம் ஒன்றிய அரசால் பகிர்ந்தளிக்கப்படும் வரித் தொகுப்பில் இருந்து – மாநிலங்களுக்கு</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="37"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="66">50 சதவிகித நிதிப் பகிர்வும் – தமிழ்நாட்டிற்குரிய நிதிப் பகிர்வும் உறுதி செய்யப்பட வேண்டும்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">சட்டப் பேரவையில் – நிதி அமைச்சரின் தனித் தீர்மானம் மீதான விவாதத்தில் – தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup637302_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626431_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626360_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="ThangamTennara_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சென்னை, ஆக. 8–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஒன்றிய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளின் மூலம் மாநிலங்களுக்குஒன்றிய அரசால் பகிர்ந்து அளிக்கப்படக்கூடிய வரித் தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு 50 சதவிகிதம் நிதிப் பகிர்வு  உறுதி செய்யப்படு வதுடன், அதில் தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப்பகிர்வும் உறுதி செய்யப்பட வேண்டும்” என்று சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் முன்மொழிந்த அரசினர் தனித் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசுகையில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. குறிப்பிட்டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்­நாடு சட்­டப்­பே­ர­வை­யில் மாநி­லங்­க­ளுக்­கான நிதிப் பகிர்வு தொடர்­பாக அரசு கொண்டு வந்த தீர்­மா­னத்­தின்  மீதான விவா­தத்­தில்   முன்­னாள் நிதி­ய­மைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு பேசி­ய­தா­வது:-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இன்று முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் நினைவு நாள். மாநில சுயாட்­சிக் கொள்­கை­க­ளுக்­கா­க­வும், மாநில உரி­மை­க­ளுக்­கா­க­வும் தன்­னு­டைய வாழ்­நா­ளெல்­லாம் போரா­டிய மகத்­தான தலை­வர் கலை­ஞ­ரின் துயி­லி­டத்­தில் தொழுது வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மாநில அர­சின் சார்­பில் கொண்டு வரப்­பட்­டுள்ள தீர்­மா­னத்தை திமுக வர­வேற்­கி­றது. அதே நேரத்­தில் அதில் முக்­கி­ய­மான திருத்­தம் ஒன்றை முன்­மொ­ழி­வது என்­னு­டைய கடமை. தீர்­மா­னத்­தின் நான்­கா­வது பத்­தி­யில் இந்­திய அர­சி­ய­ல­மைப்­பின் நிதி­சார் கூட்­டாட்­சிக் கொள்­கை­க­ளுக்கு இணங்க, ஒன்­றிய அர­சுக்கு செலுத்­தப்­ப­டும் வரி­க­ளின் மூலம் மாநி­லங்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டும் வரித்­தொ­கை­யில் 50 சத­வீத நிதிப் பகிர்வை உறுதி செய்ய வேண்­டும் என்ற திருத்­தம் இடம்­பெற வேண்­டும். அத­னு­டன் தமிழ்­நாட்­டிற்­கு­ரிய உரிய பங்­கும் உறுதி செய்­யப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">16-வது நிதிக்­கு­ழு­வி­டம் தமிழ்­நாடு அரசு ஏற்­க­னவே வலி­யு­றுத்­திய நிலைப்­பாட்டை பிர­தி­ப­லிக்­கும் வகை­யில், மாநி­லங்­க­ளுக்­கான 50 சத­வீத நிதிப் பகிர்வு தீர்­மா­னத்­தில் வெளிப்­ப­டை­யாக இடம்­பெற வேண்­டும். தற்­போ­தைய தீர்­மா­னம் மிக­வும் பொது­வான வடி­வில் இருக்­கி­றது.  இந்த விவா­தம் தமிழ்­நாட்­டிற்கு கிடைக்­கும் நிதி­யைப் பற்­றிய விவா­தம் மட்­டு­மல்ல, இந்­திய கூட்­டாட்­சி­ யின் எதிர்­கா­லம்குறித்த விவா­த­மா­க­வும், மாநில உரி­மை­கள் பாது­காக்­கப்­பட வேண்­டிய அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தும் விவா­த­ 
மா­க­வும் இது அமைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மாநி­லங்­க­ளுக்­கும், ஒன்­றிய அர­சுக்­கும் இடை­யி­லான அதி­கார மற்­றும் பொறுப்­பு­க­ளின் சம­நி­லையே இந்­திய கூட்­டாட்­சி­யின் அடித்­த­ளம். ஏனெ­னில், இந்­திய கூட்­டாட்­சி­யின் வலிமை மாநி­லங்­க­ளின் வலி­மை­யில்­தான் இருக்­கி­றது.  பேர­றி­ஞர் அண்ணா கூறி
­ய­து­போல், ஒன்­றிய அர­சின் வலிமை என்­பது தனிப்­பட்ட அதி­கா­ரத்­தில் அல்ல; மாநி­லங்­க­ளின் ஒட்­டு­மொத்த வலி­மை­யின் வெளிப்­பா­டா­கும். மாநில அதி­கா­ரங்­களை ஒன்­றிய அரசு தொடர்ந்து குவித்­துக் கொண்­டால் மாநி­லங்­கள்பல­வீ­ன­ம­டை­யும்; அத­னால் ஒன்­றிய அர­சுக்கு புதிய வலிமை உரு­வா­காது என்ற அண்­ணா­வின் கருத்து இன்­றும் பொருந்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கடந்த ஆட்­சி­யில் நிதி ஆயோக் கூட்­டங்­க­ளி­லும் தமிழ்­நாட்­டின் நிலைப்­பாட்டை முன்­னாள் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் தெளி­வாக எடுத்­து­ரைத்­தார். தற்­போ­தைய சூழ­லில் மாநி­லங்­க­ளின் வரு­வாய் ஆதா­ரங்­கள் தொடர்ந்து குறைந்து வரு­கி­றது. மாநி­லங்­க­ளின் சட்­டப்­பூர்வ அதி­கா­ரங்­கள் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. அதே சம­யம், மக்­க­ளின் அனைத்து எதிர்­பார்ப்­பு­க­ளும் மாநில அர­சு­க­ளையே நோக்கி அதி­க­ரித்து வரு­கி­றது. குறிப்­பாக செல­வுப் பொறுப்­பு­கள் மாநி­லங்­க­ளி­டம் இருக்­கின்­றன. ஆனால் வரு­வாய் ஆதா­ரங்­கள் ஒன்­றிய அர­சி­டம் குவிந்­துள்­ளன. இந்த முரண்­பாட்டை சரி­செய்­யா­மல் தமிழ்­நாட்­டின் எதிர்­கால வளர்ச்­சியை உறுதி செய்ய முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்­நாடு இன்று நாட்­டின் இரண்­டா­வது பெரிய பொரு­ளா­தார மாநி­ல­மாக திகழ்­கி­றது, நாட்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் 9 சத­வீத பங்­க­ளிப்­பை­யும், மொத்த ஏற்­று­ம­தி­யில் 11 சத­வீத பங்­க­ளிப்­பை­யும் வழங்­கு­கி­றது.  உற்­பத்­தித் துறை­யில் முன்­னணி மாநி­ல­மாக தமிழ்­நாடு விளங்­கு­வ­தோடு, தொழிற்­சா­லை­கள், பெண் தொழி­லா­ளர் பங்­க­ளிப்பு, மனி­த­வள மேம்­பாடு, கல்­வி­ய­றிவு உள்­ளிட்ட பல்­வேறு துறை­க­ளில் தமிழ்­நாடு முன்­ன­ணி­யில் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்த வளர்ச்­சியே இந்­திய பொரு­ளா­தா­ரத்­தின் முக்­கிய தூணாக தமிழ்­நாட்டை மாற்­றி­யுள்­ளது. தமிழ்­நாட்­டின் உண்­மை­யான பொரு­ளா­தார வளர்ச்சி விகி­தம் 11.19 சத­வீ­த­மா­க­வும், தனி­ந­பர் வரு­மா­னம் ரூ.3.63 லட்­ச­மாக உயர்ந்­தி­ருக்­கி­றது. மாநி­லத்­தின் சிறந்த நிதி ஒழுங்கு, வரி வசூல் திறன் உள்­ளிட்ட அம்­சங்­கள் இருந்­த­போ­தி­லும், நிதிப்பகிர்­வில் தமிழ்­நாடு தொடர்ந்து புறக்­க­ணிக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒன்­றிய அர­சுக்கு தமிழ்­நாடு செலுத்­தும் ஒவ்­வொரு ரூபாய்க்­கும் வெறும் 29 பைசா மட்­டுமே திரும்ப கிடைக்­கி­றது. அதே நேரத்­தில் உத்­த­ர­பி­ர­தே­சத்­திற்கு ரூ.2.73, பீகா­ருக்கு ரூ.7.06 வழங்­கப்­ப­டு­கி­றது. மற்ற மாநி­லங்­க­ளுக்கு நிதி வழங்­கு­வ­தில் நமக்கு எந்த எதிர்ப்­பும் இல்லை என்­றா­லும், தமிழ்­நாடு மட்­டும் ஏன் தொடர்ந்து புறக்­க­ணிக்­கப்­ப­டு­கி­றது என்­பதே எங்­க­ளது கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஜிஎஸ்டி அம­லுக்கு வந்த பிறகு மாநி­லங்­க­ளின் நிதி­சார் சுயாட்சி கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. எந்த பொரு­ளுக்கு எவ்­வ­ளவு வரி விதிக்க வேண்­டும் என்ற அதி­கா­ரத்தை மாநி­லங்­கள் இழந்­து­விட்­டது, வரு­வாய் அதி­கா­ரங்­கள் அனைத்­தும் ஒன்­றிய அர­சி­டம் குவிக்­கப்­பட்­டுள்­ளது.  ஜிஎஸ்டி கவுன்­சி­லில் விகி­தக் குறைப்­பு­கள் குறித்து ஆலோ­சிக்­கப்­பட்­ட­போது, மாநி­லங்­க­ளின் வரு­வாய் பாதிக்­கப்­ப­டும் என்று தமிழ்­நாடு முன்­கூட்­டியே எச்­ச­ரித்­தது,தற்­போது அதுவே நடை­மு­றை­யில் உண்­மை­யா­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒன்­றிய அர­சின் பங்­க­ளிப்­பு­டன் செயல்­ப­டுத்­தப்­ப­டும் திட்­டங்­க­ளில் மாநி­லங்­க­ளின் நிதிச்­சுமை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கி­றது. முன்பு 25 சத­வீ­த­மாக இருந்த மாநில பங்­க­ளிப்பு தற்­போது 40 சத­வீ­த­மாக உயர்ந்­தி­ருக்­கி­றது. இத­னு­டன், வரித்­தொகை பகிர்­விற்கு வெளியே செஸ் மற்­றும் சர்­சார்ஜ் வசூ­லின் மூலம் ஒன்­றிய அரசு பெரு­ம­ளவு நிதியை தன்­னி­டமே வைத்­துக்கொள்­கிறது, அதற்­கான இழப்­பீடு குறித்து இது­வரை தெளி­வான விளக்­கம் அளிக்­கப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">9-வது நிதிக்­குழு காலத்­தில் தமிழ்­நாட்­டின் வரிப் பகிர்வு 7.93 சத­வீ­த­மாக இருந்த நிலை­யில், 15-வது நிதிக்­கு­ழு­வில் அது 4.079 சத­வீ­த­மாக குறைந்­தி­ருக்­கி­றது. 16-வது நிதிக்­கு­ழு­வி­லும் தமிழ்­நாடு வலு­வான வாதங்­களை முன்­வைத்­த­போ­தி­லும், கிடைத்த உயர்வு வெறும் 0.018 சத­வீத புள்­ளி­யா­கத்­தான் இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கேரளா மற்­றும் கர்­நா­ட­கா­வுக்கு அதி­க­ள­வில் உயர்வு கிடைத்­தி­ருப்­ப­தில் எந்த ஆட்­சே­ப­னை­யும் இல்லை என்­றா­லும், தமிழ்­நாட்­டின் நிதி ஒழுங்கு, வரி வசூல் திறன், மனி­த­வள மேம்­பாடு, நக­ர­ம­ய­மாக்­கல், முதி­யோர் மக்­கள் தொகை அதி­க­ரிப்பு, ஓய்­வூ­தி­யச் சுமை போன்ற தனித்­து­வ­மான அம்­சங்­கள் நிதிக்­கு­ழு­வால் போது­மான அள­வில் கருத்­தில் கொள்­ளப்­ப­ட­வில்லை. இந்த அனைத்து கார­ணங்­க­ளை­யும் கருத்­தில் கொண்டு, மாநி­லங்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும்வரிப் பகிர்வு 50 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட வேண்­டும், அதில் தமிழ்­நாட்­டிற்குஉரிய பங்கை உறுதி செய்ய வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவ்­வாறு சட்­டப்பேர­வை­யில் தங்­கம் தென்­ன­ரசு குறிப்­பிட்­டார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>