<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,563,958,1245" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 08 2026 23:03:23 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260809T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="09082026-CHN-02" position.sequence="02" ex-ref="09082026-CHN-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">முதல்வர் மாறியதும் முதலீடும் மாறியது!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="30"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="66">17–வது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழ்நாடு! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="36">புள்ளி விவரத்தால் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="DC1_02_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சென்னை, ஆக.9–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">உள்­கட்­ட­மைப்பு, வணி­கச் சூழல், வளங்­கள், நிதி நிலைத்­தன்மை என முத­லீ­டு­களை ஈர்க்­கும் அனைத்து அம்­சங்­க­ளி­லும் தமிழ்­நாட்­டின் தரத்­தை­யும் சூழ­லை­யும் தேசிய சரா­ச­ரிக்­கும் மேல் உயர்த்தி விட்­டுச் சென்­றி­ருக்­கி­றது மு.க.ஸ்டாலின் தலை­மை­ யி­லான தி.மு.க. அரசு. முத­லீ­டு­களைஈர்ப்­ப­தற்­கான கள­மாக தமிழ்­நாட்டைமாற்ற மேற்­கொண்ட 5 ஆண்டு கால அய­ராத முயற்­சி­யால்­தான் உள்­கட்­ட­மைப்­பில் நம்­பர் ஒன் மாநி­லம் என்ற அந்­தஸ்து கிடைத்­தி­ருக்­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மு.க.ஸ்டாலின் தலை­மை­யி­லான ஆட்­சி­யில் கடந்த நிதி­யாண்­டின் 4ம் காலாண்­டில், அதா­வது, முந்­தைய காலாண்­டில் 58 தனி­யார் திட்­டங்­கள் உட்­பட மொத்­தம் 183 திட்­டங்­கள்தொடங்­கப்­பட்­டுள்­ளன. இதன்­படி ரூ.44,036.71 கோடி அள­வுக்கு முத­லீடு ஈர்க்­கப்­பட்­டி­ருக்­கி­றது என ஒரு புள்ளி விவ­ரம் தெரி­விக்­கி­றது. அடுத்­த­தாக முதல்­வர் விஜய் தலை­மை­யில் த.வெ.க. அரசு பொறுப்­பேற்­றது. இந்த அர­சின் முதல் காலாண்­டில் 62 தனி­யார் திட்­டங்­கள்உட்­பட மொத்­தம் 121 திட்­டங்­கள் மூலம் ரூ.11,236.73 கோடி அள­வி­லான திட்­டங்­கள் மட்­டுமே மேற்­கொள்­ளப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதா­வது, தனி­யார் முத­லீட்­டில் 77.63 சத­வீ­த­மும், ஒட்­டு­மொத்த அள­வில் முந்­தைய காலாண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 74.48 சத­வீ­த­மும் குறைந்­தி­ருக்­கி­றது. இதன் கார­ண­மாக, முத­லீட்டை ஈர்ப்­ப­தில்கடந்த காலாண்­டில் 6வது இடத்தைபிடித்­தி­ருந்த தமிழ்­நாடு, தற்­போ­தைய ஆட்­சி­யில் 17வது இடம் பெற்று பெரும் பின்­ன­டைவை சந்­தித்­துள்­ளது என்­கின்­ற­னர் நிபு­ணர்­கள். ஆனால், இதே­போன்று கேர­ளம், மேற்கு வங்­கம் ஆகிய மாநி­ லங்­க­ளி­லும் ஆட்சி மாற்­றம் ஏற்­பட்­டது. கேரள முதல்­வ­ராக வி.டி.சதீ­ஷன், மேற்கு வங்க முதல்­வ­ராக சுவேந்து அதி­காரி பொறுப்­பேற்ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கர்­நா­ட­கா­வில் புதிய முதல்­வ­ராக டி.கே.சிவ­கு­மார் பொறுப்­பேற்­றார். ஆனா­லும், புதிய தலை­மை­யின் கீழ் அந்த மாநி­லங்­கள் வளர்ச்­சிப் பய­ணத்தை தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. தமிழ்­நாடு உட்­பட இந்த 4 மாநி­லங்­க­ளி­லும் ஏப்­ரல் - ஜூன் காலாண்­டில் தான் ஆட்சி மாற்­றம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. தமிழ்­நாடு, கேர­ளம், மேற்கு 
வங்­கம் ஆகி­ய­வற்­றில் தேர்­தலை தொடர்ந்து ஆட்சி மாற்­றம் நடந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கர்­நா­ட­கா­வில் சித்­த­ரா­மையா கடந்த ஜூன் 3ம் தேதி முதல்­வர் பத­வி­யில் இருந்து வில­கி­ய­தும், புதிய முதல்­வ­ராக டி.கே.சிவக்­கு­மார் பொறுப்­பேற்­றார். ஆக, புதிய முதல்­வ­ரின் கீழ் நிர்­வா­கம் முற்­றி­லும் மாறி விட்­டது. 4 மாநி­லங்­க­ளி­லும் புதிய முதல்­வர்­க­ளின் தலை­மை­யின் கீழ் முத­லீ­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தைத் தான் புள்ளி விவ­ரங்­கள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன. இந்த மாநி­லங்­க­ளில், முந்­தைய காலாண்டை விட அதிக வளர்ச்­சியை பெற்­றது கேர­ளம் தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இங்கு வி.டி.சதீ­ஷன் தலை­மை­யில் புதிய அரசு அமைந்­த­தும் முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்­கான பணி­கள் விறு­வி­றுப்­பாக மேற்­கொள்­ளப்­பட்­டன. இதன் பல­னாக 16 தனி­யார் திட்­டங்­கள் மூலம் ரூ.2,363.38 கோடி முத­லீடு ஈர்க்­கப்­பட்­டது. இது முந்­தைய காலாண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 1,139.12 சத­வீ­தம் உயர்­வா­கும். இத்­து­டன் சேர்த்து மொத்­தம் 63 திட்­டங்­க­ளில் ரூ.12,032.8 கோடி முத­லீடு ஈர்க்­கப்­பட்­டுள்­ளது. இது முந்­தைய காலாண்டை விட 294.94 சத­வீ­தம் அதி­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இதற்கு முந்­தைய காலாண்­டில் பின­ராயி விஜ­யன் தலை­மை­யி­லான அர­சில் 21 தனி­யார் திட்­டங்­கள் மூலம் ரூ.190.73 கோடி­யும், மொத்­தம் 83 திட்­டங்­கள் மூலம் ரூ.3,046.77 கோடி முத­லீ­டும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இதன் மூலம் இந்த மாநி­லம் 20வது இடத்­தில் இருந்து 16 இடத்­துக்கு முன்­னே­றி­யுள்­ளது. கர்­நா­ட­கா­வில், டி.கே.சிவக்­கு­மார் முதல்­வ­ரா­கப் பத­வி­யேற்ற பிறகு புதிய முத­லீ­டு­ கள் 232.53 சத­வீ­தம் அதி­க­ரித்து ரூ.83,326.36 கோடி­யாக உள்­ளது. மொத்­தம் 400 திட்­டங்­க­ளில் இந்த முத­லீடு மேற்­கொள்­ளப்­பட்டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">முந்­தைய காலாண்­டில் சித்­த­ரா­மையா தலை­மை­யி­லான ஆட்­சி­யில் மொத்­தம் 319 திட்­டங்­க­ளில் ரூ.25,058.64 கோடி முத­லீடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. முத­லீடு அதி­க­ரிப்­பால் இந்த மாநி­லம் கடந்த காலாண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 9வது இடத்­தில் இருந்து 3வது இடத்­துக்கு முன்­னே­றி­யுள்­ளது. அதா­வது மொத்த முத­லீடு 232.53 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது.  இதே போல், மேற்கு வங்­கத்­தில் மம்தா பானர்ஜி ஆட்­சி­யில் கடந்த காலாண்­டில் மொத்­தம் 102 திட்­டங்­க­ளில் 11,350.3 கோடி முத­லீடு பெறப்­பட்­டுள்­ளது. இதில், ரூ.6,447.54 கோடி­யி­லான 27 திட்­டங்­கள் தனி­யார் முத­லீடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அடுத்­த­தாக ஆட்சி மாற்­றம் ஏற்­பட்டு சுவேந்து அதி­காரி முதல்­வ­ரா­கப் பத­வி­யேற்­றார். இதில் மொத்­தம் 72 திட்­டங்­க­ளில் 34,003.65 கோடி முத­லீடு பெறப்­பட்­டுள்­ளது. இதில் ரூ.33,090.4கோடி மதிப்­பி­லான 25 திட்­டங்­கள் தனி­யார் முத­லீடு. முந்­தைய மம்தா தலை­மை­யி­லான ஆட்­சி­யில்கடந்த நிதி­ யாண்­டின் 4ம் காலாண்­டில் பெறப்­பட்­டதை விட மொத்த முத­லீடு 199.58 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. தனி­யார் முத­லீடு 416.23 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மேற்­கண்ட 4 மாநி­லங்­க­ளில், புதிய முதல்­வர் தலை­மை­யில் பின்­தங்­கிப்­போ­னது தமிழ்­நாடு தான் என்­பதை மேற்­கண்ட ஆய்­வ­றிக்கை சுட்­டிக்­காட்­டு­கி­றது. தமிழ்­நாட்­டில் தனி­யார் முத­லீடு முந்­தைய மு.க.ஸ்டாலின் தலை­மை ­யி­லான ஆட்­சி­யில் கடந்த காலாண்­டில் பெறப்­பட்ட முத­லீட்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் தனி­யார் முத­லீடு 77.63சத­வீ­த­மும், மொத்த முத­லீடு 74.48 சத­வீ­த­மும் குறைந்­த­தால், 6 வது இடத்­தில் இருந்து 17வது இடத்­துக்கு தமிழ்­நாடு தள்­ளப்­பட்­டுள்­ளது கடும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">* மேற்கு வங்­கம் கர்­நா­ட­கத்­தில் ஈர்க்­கப்­பட்ட பெரிய முத­லீ­டு­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தனி­யார் அமைப்பு வெளி­யிட்ட மேற்­கண்ட காலாண்டு அள­வி­லான புள்­ளி­வி­வர ஒப்­பீட்டு ஆய்­வ­றிக்­கை­யின்­படி, விக்­ரம் சோலார் நிறு­வ­னத்­தின்சோலார் தக­டு­கள் தயா­ரிப்­புக்­கான ரூ..27,000 கோடி முத­லீடு மீண்­டும் மேற்கு வங்­கத்­திற்­குள் வந்­துள்­ளது, முக்­கி­ய­மான ஒன்­றாக கரு­தப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இது இந்த மாநி­லத்­தின் காலாண்டுமுத­லீட்­டில்பெரும்­பகுதி­யாக உள்­ளது. இது­போல், கர்­நா­டகா மாநி­லத்­தில் ரூ.16,500கோடி மதிப்­பி­லான பம்ப் ஸ்டோரேஜ்திட்­டம், மற்­றும் ஜிண்­டால் அலு­மி­னி­யம் நிறு­வ­னத்­தின் ரூ. 6,000 கோடி முத­லீடு முக்­கி­யத்­து­வம் பெற்­றுள்­ளது. இது­போல், ஹெப்­பால் தொடங்கி சென்ட்­ரல் சில்க் போர்டு வரை சுரங்­கப்­பாதை திட்­டத்தை ரூ.1,300 கோடி­யில் செயல்­ப­டுத்­தும் திட்­ட­மும் தொடங்கி வைக்­கப்­பட்­டுள்­ளது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">நன்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15.5">தின­க­ரன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">8.8.2026</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>