<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="504,64,957,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Aug 09 2026 03:40:24 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260809T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="09082026-CHN-08" position.sequence="08" ex-ref="09082026-CHN-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="31">கானல் நீரில் கப்பல் ஓட்ட நினைக்கிறார்    ‘காகிதப் புலி’க் கனவான்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup834279_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">  </lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="18">ஆ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">யிரம் பொதுக்கூட்டங்கள்; பத்து மாநாடுகள் தர இயலாத ஓர் எழுச்சியை இளைய தலைவர் கைது  தி.மு.க.வுக்கு பெரும் சக்தியை  கொடுத்திருக்கிறது. அதற்குக் கொள்கையற்ற கோட்டை கொடுமுடி ஜோசப் விஜய் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ரஷ்ய நாட்டு ஜார் மன்னன் ஏகாதிபத்திய ஆட்சியில்தான், எதிர்த்து ‘இம்..’ என்று முனங்கினாலோ, அல்லது ‘ஏன்?....’ என்று கேட்டாலோ, சைபிரியா பாலைவனம் போன்ற பனிப் பிரதேசங்களுக்குக் கடத்துவதன் மூலம் வனவாசம் அனுப்பி அவர்களுக்குக் கொடூரத் தண்டனை அளிக்கப்பட்டது. இப்போது ஜோசப் விஜய் எனும் பனையூர் பாசிசத் துக்ளக் ஆட்சியில் கேள்விகள் கேட்கும் எதிர்க்கட்சி  சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், தலைவர்கள் அனைவருக்கும் பொய் வழக்குகள், சிறை எனக் குவிந்து வருகின்றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவர் காகிதப் புலி அல்ல; கலைஞரது கையும், மெய்யும் தழுவி உச்சி மோந்த வளர்ப்புப் புலி! இவர் துருப்பிடித்த ‘திருப்பாச்சி’ திரைப்பட அரிவாள் அல்ல; அவைக் களத்துக்கு வராத அட்டைக்’கத்தி’யும் அல்ல; இவர் திருக்குவளைக் கரு வளர்ந்த கந்தக ஸ்டாலின் உமிழ்ந்த காராக்கிரகம் வடித்த வேல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மீது தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொய் வழக்குப் புனைந்து சென்னையில் அவரது நீலாங்கரை இல்லத்தில் காலை 7.20 மணி அளவில் காவல் துறைப் பட்டாளத்தை குவித்துச் சுற்றி வளைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் 12 மணி வரை கைது செய்யக்கூடாது என்று கூறியபோதும் அதனை மீறி, காவல்துறை மூத்த அதிகாரிகளின் துணையோடு காலை 10.55 மணி அளவில் கைது செய்து, அலைக்கழிக்கப்பட்டுத் தஞ்சைக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இரவு நெருங்கும் வேளையில் தஞ்சாவூர் கிழக்குக் காவல் நிலை யம் என்று அவரை அழைத்துச் சென்றவர்கள் அங்குச் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காரணம் காட்டி 6:45 மணி அளவில் அருகிலுள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குக் காவல்துறைக் கண் காணிப்பாளர் சுந்தரவதனம், துணைக் கண்காணிப்பாளர் அழகேசன் ஆகியோர் தலைமையில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக உதயநிதி ஸ்டாலின் விசாரிக்கப்பட்டபின், அவர்; சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரவு 8.15 மணி அளவில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">உதயநிதி ஸ்டாலின் தீவிரவாதியா? தேடப்படும் பயங்கரவாதக் குற்றவாளியா? அவர் முன்னாள்  துணை முதல்வராக இருந்தவரல்லவா? தற்போது அவர் எதிர்க்கட்சித் தலைவர். இந்நிலையில் அவரை கைது செய்து தஞ்சைக்கு இழுத்துச்செல்ல வேண்டிய அவசியம் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சட்டமன்றம் மறுநாள் இருந்தும் சபாநாயகர் ஒப்புதல் பெறப்பட்டதா? இது சர்வாதிகார ஆட்சியல்லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சர்வாதிகார நாட்டில் கூட நடைபெறாத தனது ஏவல் துறையான காவல்துறையை ஏவிக் காட்டாட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் தற்குறிகளின் தலைவன் ஜோசப் விஜய். தருமம் தவறிய அரசியல் சட்டங்களும் விதிமுறைகளும் கேலிக்குத்தாகும் நிலையைச் சாடிய பாரதியார், கொடுங்கோல் ஆட்சியில் நிகழும் நீதியின்மையைக் குறித்துப் “பேய் அரசு செய்தால், பிணம் தின்னும் சாத்திர ங்கள்...” என்று கடுமையாகத் தான் எழுதிய பாஞ்சாலி சபதம் எனும் காவியத்தில் பாடி யிருப்பார். ஆம்; இன்று கோட்டையில் அமர்ந்திருக்கும் ஒரு நகைச்சுவைக் கோமாளி யின் சேட்டைகளால் நாடே சீரழிந்துக் கொண்டிருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பிரமிடுகள் எழுப்பி பிணம் தின்னும் பேயாட்சி தொடர்ந்து கொண்டிருக்கின்றது... கோட்டையில் அமர்ந்துள்ள ஒரு ஜோக்கர் முதலமைச்சர் தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருப்பதால் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை. உதயநிதி ஸ்டாலின் மீது அப்படி வழக்கு பதிவு செய்யப்படுவதற்கான காரணங்கள் என்ன? தி.மு.க. சார்பாகக் கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தஞ்சாவூரில் விவசாயிகளுக்காக ஒரு மிகப் பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் நான்கு அன்று நடந்தது. அக் கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள், விவசாயச் சங்கத் நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் என நிறைய பேர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் கலந்து கொண்டு 25 நிமிடம் உரையாற்றினார் உதயநிதி ஸ்டாலின்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">காவிரி நீர் விவகாரம் குறித்தும் மாநில உரிமைகள் குறித்தும் பொய் வாக்குறுதிகள் கொடுத்து முழுக்க முழுக்க ஜோசப் விஜய் நடத்தி வருகிற துரோகங்கள் குறித்தும், மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரமாக முயற்சி செய்வது குறித்தும் பேசினார். அதே நேரத்தில் தமிழ்நாட்டு ஆளும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடர்ச்சியாக தி.மு.க. ஆட்சியில் திறக்கப்பட்ட மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்காதது குறித்தும், அதனால் வறட்சியால் தஞ்சை பாலைவனமாக மாறிவிட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">விவசாயப் பகுதிகள் காய்ந்து போனது பற்றியும் ஜூன், ஜூலை வரை கர்நாடகம் நமக்குத் தர வேண்டிய 42 டி.எம்.சி தண்ணீரைக் கர்நாடகம் தராதது குறித்தும் இதுவரை வாய் திறக்காதது ஏன் என்று முதலமைச்சர் விஜய் குறித்தும் பேசினார். ஆகவே இவற்றையெல்லாம் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கிற இந்த அவல நிலையை குறித்து சட்டமன்றத்தில் நான் பேசுவேன் என்று அறைகூவல் விடுத்தார். “நாம் ஒன்றாகச் சேர்ந்து போராடுவோம்; நம் ஒற்றுமையை காட்டுவோம்” என்று அவர் வலியுறுத்திப் பேசினார். இதற்குப் பதில் சொல்வதற்குத் தெம்பு இல்லாத; திராணியில்லாத; வக்கில்லாத ஒரு முதலமைச்சர் செயல்படாமல் இருக்கிறார் என்றெல்லாம் சுட்டிக்காட்டிப் பேசினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால், அதையெல்லாம் விட்டு விட்டு அவர் பேசாத செய்தியை வெட்டியும், ஒட்டியும் பரப்பி வந்தனர். யாரையும் அவர் தவறாக பேசவில்லை. முழுக்க, முழுக்க விவசாயி களுக்காக தான் பேசினார். ஆனால், கவனத்தை திசை திருப்பும் வகையில் பொய்ச் செய்தியைப் பரப்புவதில் முழுமூச்சாக   ஜோசப் விஜய் அரசு செயல்பட்டு வருகிறது. அவருடைய ஆட்சியில் போஸ் கொடுக்க வேண்டியது; ரீல்ஸ் போடுவது; அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் பள்ளிக் கூடத்திற்குச் சென்று அங்கு இருக்கக்கூடிய மாணவர்கள் எல்லாம் வரச் சொல்லி அவரது கட்சி பெயரைச் சொல்லி கோஷம் போடச் சொல்வது; அதை “ரீல்”சாக வெளியிடச் செய்வது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால், அதற்கு மாறாக, அவர் மீது பொய் வழக்கு போட்டுத் திசை திருப்பும் நோக்கத்தில் செயல்பட்டு இருக்கிறார் ஜோசப் விஜய். அவரின் ஆட்சியில் சர்வாதிகார அலங்கோலங்களைப் பற்றிச் சட்டமன்றத்தில் மறுநாள் பேசுவார் என்று எண்ணி சட்டமன்ற கூடுகிற முதல் நாளில் இப்படித் திட்டமிட்டு வேண்டுமென்றே திசைதிருப்பு வகையில் அவரை முடக்க வேண்டும் என்பதற்காக அவர் மீது பொய் வழக்கு பாய்ச்சி சென்னையில் கைது செய்து, தஞ்சைக்கு இழுத்துச் சென்று, நீதிமன்றத்தின் உத்தரவால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதனால் விஜய் அரசு தோற்றுப் போயிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அவர் பேசியது குறித்து அவர் மீது ஒன்பது பிரிவுகளில் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. அதைப் படித்தாலே ஏன் இந்த ஆட்சி கோமாளியாக வெறித்தனத்தோடு திமுக மற்றும் தலைவர்கள் கைது செய்ய செயல்படுகிது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்து  அரசியலமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதித்து ஆணவக் கொக்கரிப்பில் அறிவிக்கப்படாத ஹிட்லரின் வாரிசாகத் தன்னைப் பறைசாற்றும் விதத்தில் கோட்டையில் அமர்ந்து, மக்களுடைய பிரச்சினையான புகையும் எரிமலையின் மீது அமர்ந்து கொண்டு புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிற ஜோசப் விஜய் அரசானது உதயநிதி ஸ்டாலின் மீது ஒன்பது சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.   மீது பதியப்பட்டுள்ள 9 சட்டப்பிரிவுகளின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">1. BNS 61: குற்றச்சதி (Criminal conspiracy), section 79: words intenting to insult the modest of a women),  2.192: கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் தன்னிச்சை யாக தூண்டுதல் அளிப்பது. (Wantonly giving provocation with intend to cause riot) 3. BNS 196: வெவ்வேறு குழுக்களிடையே பகைமை அல்லது வெறுப்புணர்வைத் தூண்டுதல் (Promoting enmity hatred between different groups), 4. BNS- 296 (b): பொது இடத்தில் ஆபாசமான வார்த்தை களைப் பேசுவது, ஆபாசச் செய்திகளில் ஈடுபடுவது (Uttering obscene acts in a public place causing annoyance), 5. BNS 79.BNS 35/351 (2): ஆகியவற்றுடன் தொடர்புடைய பெண்களின் மாண்பைக் குலைக்கும் பிரிவு. பெண்களின் கற்பு அல்லது மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கில் அல்லது வார்த்தைகள், சைகைகள், செயல்களைப் பயன்படுத்துதல் (word gesture or act intented to insult the modesty of a women), 6. BNS 351 (2): குற்ற வியல் மிரட்டல் விடுத்தல் (Criminal intimidation) 
7. BNS. 352: பொது அமைதியைக் குறைக்கும் நோக்கில் வேண்டு மென்றே அவமதிப்பு செய்தல் (Intentional insult with intent to breach of the peace) 8. தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4. பெண்களைத் துன்புறுத்தல் அல்லது அச்சுறுத்தலுக்கான தண்டனை (Section 4 of Tamil Nadu prohibition of harrasment of Women Act.), 9. தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 67: ஆகும். மின்னணு வடி வத்தில் ஆபாசமான அல்லது தவறான தகவல்களை வெளியிடுதல் பரப்புதல் (TNPHW Section - 67). இது உண்மையில் I.T Act பிரிவு 67. ஆகும். திமுக ஐடி பிரிவினர் இந்த வீடியோவைப் பகிர்ந்ததால் இப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மேற்குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளில் உதயநிதி ஸ்டாலின் வழக்கை உருவாக்கி நாட கமே நடத்தப்பட்டு இருக்கிறது ஜோசப் விஜய் அரசு. தினமலர் ஏடு இது குறித்து வெளியிட்ட செய்தியில் “உதய நிதியை தூக்கியே ஆகணும்” விஜய் வீட்டில் நடந்த நள்ளிரவு “மீட்டிங்” என்று தலைப்பிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மூன்றாம் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அந்த அளவுக்கு ஜனநாயகத்தை படுகொலை செய்யும் விதத்தில் ஈடுபட்டு வருகிற “ஜோசப் விஜய்யின் அரசை சர்க்கஸ் கூடாரா மாக நான் பார்க்கிறேன்; தஞ்சாவூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மேகதாது அணை, காவிரி நீர் திறப்பு போன்ற பிரச்சினைகளில் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச, த.வெ.க அரசுக்குத் தைரியம் இல்லை எனவும், மூன்று மாதங்களில் ஒவ்வொரு அமைச்சரும் என்ன செய்கின்றனர் என்பதையும் ஆதாரத்துடன் பேசினேன். இதற்குப் பதில் சொல்லவில்லை “டம்மி’’ முதல்வர் . நான் பேசாத ஒன்றைப் பேசியதாக வெட்டி, ஒட்டி, சில விஷயங்களை சேர்த்துப் பரப்பி வருகின்றனர்......” என்று உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் பதிலளித்திருக்கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">“பெண்களைத் தாழ்த்திப் பேசும் எண்ணம் துளியும் எனக்கு இல்லை; எனது தாய், தந்தை என்னை அப்படி வளர்க்கவில்லை; எனக்குத் திருமணம் ஆகி மனைவி இருக்கிறார். அவருடன் தான் வாழ்ந்து வருகிறேன். எனக்கு மகள், தங்கை இருக்கின்றனர்; தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் தாயாக, தங்கையாக நினைக்கிறேன். ஆனால், பொய் வழக்கு போட்டு என்னைப் பயமுறுத்தலாம் என்று த.வெ.க அரசு நினைத்தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதற்கெல்லாம் பயப்படுபவன் நான் அல்ல! நான் பேசியது முழுதாகக் கேட்காமல், சில தலைவர்கள் கண்டனம் தெரிவித்தது வருத்தம் அளிக்கிறது. கைதுக்கு நான் பயப்பட மாட்டேன்; இன்னும் நூறு முறை பேசுவேன்; இரட்டை அர்த்தத்தில் நான் பேசவில்லை. த.வெ.க அரசை ஆட்சியாக நான் பார்க்கவில்லை; சர்க்கஸ் கூடாரமாகப் பார்க்கிறேன். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது; அதிமுக எம்.எல்.ஏ.க்களைச் சோபா அனுப்பி விலைக்கு வாங்க முயற்சி என இப்படிச் செயல்படும் முதல்வர் விஜய்க்கு மக்கள் தக்கப் பதில் கொடுப்பார்கள்” என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அறைகூவல் விடுத்திருக்கிறார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">உதயநிதி பேச்சில் எங்காவது பெண்களை இழிவு படுத்தும் அவமானச் சொற்கள் இடம்பெற்று இருக்கின்றனவா? பெண்களின் கற்புக்கும், மாண்புக்கும் இழுக்கு ஏற்படுத்து வகையில் அவர் பேசி இருக்கிறாரா? அல்லது வார்த்தைகளோ, சைகைகளோ பயன்படுத்தியிருக்கிறாரா? பொது அமைதியைக் குலைக்கும் நோக்கில் வேண்டும் என்றே நடந்து கொண்டிருக்கிறாரா? கலவரத்தை தூண்டும் விதத்திலோ, தன்னிச்சையாகத் தூண்டுதலோ செய்யும் விதத்தில் நடந்து கொண்டாரா? அல்லது வெவ்வேறு குழுக்களிடையே பகமை வெறுப்புணர்வு தூண்டுகிற முறையில் பேசி இருக்கிறாரா? என்பது குறித்து சாதாரண மனிதன் கூட அவருடைய உண்மையான பேச்சைப் படித்தால் அல்லது காணொளியில் கேட்டால் விஜய் அரசு போட்டிருப்பது அப்பட்டமான பொய் வழக்கு என்பது தெரிய வரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அரசியல் எதிரிகளை வீழ்த்தலாம் என்று நினைத்து முசோலினி போல் முடியாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். தான் போட்டிருக்கும் நாகரிக கோட்டும், கோட்டைத் தர்பாரும் சட்டத்தின் ஆட்சியில் நிரந்தரமானதல்ல என்பதை நாடாள்வோர்  புரிந்து கொள்ள வேண்டும் நாணல்கள் வளைவதுண்டு; ஆனால், வீழ்வதில்லை! அது புயலைப் புறந்தள்ளி வானத்தை நோக்கி நிமிர்ந்து இருக்கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பொய் வாக்குறுதிகள் தந்து கோட்டை ஏறி கொலுப் பொம்மையாக இருக்கும் அரசியல் வியாபாரியான ஜோசப் விஜய்யின் 2026 நிதிநிலை அறிக்கையைப் பெயர் மாற்ற அறிக்கை எனக் கூறலாம். தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட பொற்காலத் திட்டங்கள் யாவும் பெயர் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது . * “உலகம் உங்கள் கையில் “ எனும் திட்டம் (வெற்றி மடிக்கணினி), *”கலைஞரின் கனவு இல்லம்” (வெற்றி வீடு திட்டம்), “முதல்வர் படைப்பகம்” (டிஜிட்டல் நூலகம்) “அன்புச் சோலைத் திட்டம் (மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கும் மையங்கள்), முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் (பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்) *நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டம் (மண்ணின் மகள் திட்டம்), “விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம்” (நவீன மிதிவண்டி திட்டம்” என இப்படி அனைத்தும் பெயர் மாற்றம் செய்த துக்ளக் அரசுதான் இந்த ஜோசப் விஜய்யின் கோமாளி அரசு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தேர்தல் காலத்தில் கோயப்பல்ஸ் வாக்குறுதிகளைத் தந்தவர் ஜோசப் விஜய். அவர் அறிவித்த வாக்குறுதிகள் அவரது நிதிநிலை அறிக்கையில் காணவில்லை. வெற்றித் தாள்களாக உள்ளன. அவர் கூறியபடி ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் எங்கே? வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் ரூபாய் 4,000 எங்கே? தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2,500 எங்கே?, ரூ.20- இலட்சம் வரை பிணையில்லாக் கல்விக்கடன் எங்கே? மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணத்திட்டம் எங்கே?, விவசாயக் கடன் முழுவதும் இரத்து எங்கே? 25 இலட்சம் ரூபாய் வரை பிணையில்லாத் தொழில் முனைவோர் கடன் எங்கே? மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் ரூ. 20,000 உதவித்தொகை என்று சொன்னாரே, எங்கே? இவை அனைத்தும் கானல் நீராகிப் போனது. காற்றடித்த பலூனாக உடைந்து போனது . நீர்க்குமிழிகளாகக் கண் சிமிட்டி அழிந்து போயின!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கானல் நீரில் கப்பல் ஓட்ட நினைக்கிறார் காகிதப் புலி ஜோசப் விஜய்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>