<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,63,958,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 08 2026 23:12:08 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260809T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="09082026-MDU-06" position.sequence="06" ex-ref="09082026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">தமிழ்நாட்டில் நடைபெறுவது</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="30"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">வெற்றி அரசு அல்ல; வெட்டி அரசு! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">சட்டப் பேரவையில் – ரிஷிவந்தியம் க.கார்த்திகேயன் பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="VasanthamK.Ka_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சென்னை, ஆக.9–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சட்டப் பேரவையில், நேற்று முன்தினம், நிதி நிலை மற்றும் வேளாண் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய ரிஷிவந்தியம் தொகுதி கழக உறுப்பினர் க.கார்த்திகேயன், ‘‘தமிழ்நாட்டின் அனைத்துத் திட்டங்களின் பெயர்களிலும்வெற்றி, வெற்றி என்று போட்டுக் கொள்ளும்ஆட்சியாளர்களே! தமிழ்நாட்டில் நீங்கள் நடத்துவது வெற்றி அரசு அல்ல! வெட்டி அரசு!” என்று குறிப்பிட்டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சட்டப் பேரவையில் அவர் பேசியதாவது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">60 ஆண்டுகாலம் இந்தப் பேரவை மண்டபத்தில் வீற்றிருந்து, ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப் பேற்று, தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி, முத்தமிழறிஞர் கலைஞர் ஐயா அவர்களுக்கு என்னுடைய முதல் வணக்கம்.  2026–2027 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த தமிழ்நாட்டு மக்களின் தாயுமானவர், ஓய்வறியா சூரியன், எங்கள் கழகத் தலைவர் அவர்களுக்கு வணக்கங்கள். (மேசையைத் தட்டும் ஒலி) கழகத்தின் இளைய சூரியன், எதிரிகள் எத்தனைவியூகங்கள் அமைத்தாலும், சக்கர வியூகத்தைஉடைத்து வெளியேறிய, அபிமன்யூ போன்ற மாபெரும் வீரர், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும், (மேசையைத் தட்டும் ஒலி) திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களின் இன்றைய அரசியல் அடையாளம், உழைப்பவரே உயர்ந்தவர் எனும் தாரக மந்திரத்தோடு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முத்திரை நாயகர்களில் ஒருவராகத் திகழும் எதிர்க்கட்சிக் கொறடா, எங்கள் அண்ணன் எ.வ.வேலு அவர்களை யும், சட்டமன்றக் குழுத் துணைத் தலைவர், திருச்சி மண்டலத்தினுடைய தலைவர் அருணை அண்ணன், திரு. நேரு அவர்களையும் வணங்குகின்றேன்.  பேரவைத் தலைவர் அவர்களே, (குறுக்கீடு) என்னைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறச் செய்த, மலையமான் திருமுடிக்காரி ஆண்ட மண்ணான, பெருமைமிகு ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களுக்கும், கழகத்தினுடைய அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், கூட்டணிக் கட்சித் தோழர்களுக்கும், தொகுதியின் பொறுப்பாளர், அருமைஅண்ணன் பெருநற்கிள்ளி உள்ளிட்ட அனை வருக்கும் என் நன்றிகலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">2026–2027 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேச வாயப்பளித்த, நடுநிலை தவறாத, பேரவைத் தலைவர் அவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கின்ற,நடுநிலை தவறமாட்டீர்கள் என்ற உணர்வோடு,உங்களுக்கும் (பேரவை துணைத் தலைவர்) என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">திராவிட மாடல் ஆட்சியில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">பல சாதனைகள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">  
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கள்ளக்குறிச்சி மாவட்டம், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் புதியதாக பிரிக்கப்பட்டாலும், பிறந்த குழந்தை போல் இருந்த மாவட்டத்தில், எங்கள் திராவிட மாடல் ஆட்சியில்தான், பல சாதனைகள் அங்கே நிகழ்த்தப்பட்டது.  அதில் சிலவற்றை நான் இங்கே பதிவிடுகிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கள்ளக் குறிச்சிக்கு புதிய பேருந்து நிலையம், பாவந்தூர் ஊராட்சியில் புதிய அரசு கலைக் கல்லூரி, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, கல்வராயன்மலையில் பொதுப் பணித் துறையின் சார்பில் ஆய்வு மாளிகைகள், திருவண்ணாமலை முதல் கள்ளக்குறிச்சி வரை நான்கு வழிச் சாலை, திருவண்ணா மலை முதல் அடரி வரை தியாகதுருகம் வழியாக நான்கு வழிச்சாலை, வானா புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம், புதிய வட்டாட்சியர் அலுவலகம், 60 ஊராட்சிகளை உள்ளடக்கிய ரிஷி வந்தியம் ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து, வானாபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு, புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அதேபோல், எங்கள் மாவட்டத்தி லுள்ள ஐந்து ஒன்றிய அலுவலகங்களுக்கு புதிய ஒன்றிய அலுவலகம், அதுமட்டுமல்ல, மணலூர் பேட்டை பகுதியில் ஐம்பது ஆண்டுகால விவசாயிகளின் கோரிக்கையை யேற்று, 75 கோடி ரூபாயில் தடுப்பணை, அதேபோல், கூத்தக்குடி முதல் கள்ளக்குறிச்சி வரை நான்கு வழிச் சாலை, உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூர் பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தியது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் கூவனூர் மற்றும் திருக்கோவிலூர் உயர்மட்ட மேம்பாலம், தியாகதுருகம் பகுதியில் 75 கோடி ரூபாயில் புதிய மாதிரிப்பள்ளி, திருக்கோவிலூர் புதிய மருத்துவமனைக் கட்டடங்கள், மாவட்டத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான இலவச வீட்டுமனைப் பட்டா, நயினார் பாளையம் மற்றும் ரிஷிவந்தியத்தில், புதிய தீயணைப்பு நிலையம், கள்ளக்குறிச்சி மற்றும் ஜி.அரியூரில் துணை மின் நிலையங்கள். அதுமட்டுமல்ல, உளுந்தூர்பேட்டையில் 20 ஆயிரம் பேர் பயன்பெறுகின்ற காலணி தொழிற்சாலை என எண்ணற்ற, இன்னும் எண்ணிலடங்கா திட்டங்களைத் தமிழகத் 
திற்குத் தந்த திராவிட மாடல் நாயகர், முத்த மிழறிஞர் தளபதி அவர்களுடைய வழியிலே, இந்த நிதிநிலை அறிக்கையில், இன்றைய தினம் பேச வாய்ப்பளித்த, பேரவைத் துணைத் தலைவர் அவர்களுக்கு நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">எங்கள் மாவட்டம் தொடர்பான சில கோரிக்கைகளை முதலிலேயே நான் முன்வைக்க விரும்புகிறேன்.  பொதுவாக, தற்காலிக விரிவுரையாளர்கள், 8,000 பேர் பணி நிரந்தரம் கேட்டு, தொடர்ந்து போராடிக் கொண்டு வருகிறார்கள்.  அது எங்கள் ஆட்சிக்காலத்திலும் இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உடனடியாக, (குறுக்கீடு) நான் பேசி முடித்துவிட்டு, பதில் சொல்பவர் களெல்லாம் வரிசையாக சொல்லிவிடலாம்.  உங்களுக்கும் சிரமம் இருக்காது.  எனக்கும் சிரமம் இருக்காது.  அதுதான் நன்றாகவும் இருக்கும்.  ஆகவே, 8,000 பேர், அவர் களுடைய பணி நிரந்தரத்தையும், ஊதிய உயர்வையும் வழங்கினால் நன்றாக இருக்கும்.  அதுமட்டுமல்ல, அண்ணன் பொதுப் பணி அமைச்சர்கூட வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான்.  ஏற்கெனவே இருந்த, எங்கள் பொதுப் பணித் துறை அமைச்சர் அவர்களும் வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான்.  இருவரும் அதிகமான திட்டங்களை நிறைவேற்றுவீர்கள் என்றுதான் கோரிக்கை வைக்கிறோம்.  முழுமையாக கோரிக்கையை ஏற்று, அதன்பிறகு நீங்கள் விளக்கங்களை அளித்தீர்களென்றால் சிறப்பாக இருக்கும்.  எங்களுடைய பொறுப்பு அமைச்சர் அண்ணன் வன்னியரசு அவர்களும் இருக்கிறார்கள்.  அவரும் முழுமையாக காதில் வாங்கி, மாவட்டத்தி னுடைய பிரச்சி னைகளைத் தீர்க்க வேண்டுமென்ப தற்காகத்தான் எங்களை இங்கே அனுப்பியிருக்கிறார்கள்.  உங்களுக்கு குறைகள் இருந்தாலும்,நிறைகள் இருந்தாலும் பதிலியே தெரிவிக்குமாறு கேட்டுக் 
கொள்கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நெல் கொள்முதல் நிலையங்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அதேபோல், தமிழகத்திலே 9 மாவட்டங்களில் உள்ளாட்சிப் பதவிகளின் பதவிக்காலம் இன்னும் முடியவில்லை. Chairman ஆக இருந்தாலும், District Chairman ஆக இருந்தாலும், Councillor ஆக இருந்தாலும் இன்னும் பதவியில் இருக்கி றார்கள்.  ஆனால், எப்பொழுது சட்டமன்றத் தேர்தல் வந்ததோ, அந்தத் தேர்தல் வந்ததி லிருந்து இன்றுவரை, அந்த உள்ளாட்சிகள் செயல்படாமல் இருக்கிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்கள் இருக்கையில் இல்லை.  அதுசார்பாக மாண்புமிகு பொதுப் பணித் துறை அமைச்சர் அவர்கள் இருக்கிறீர்கள்.  அவரிடம் சொல்லுங்கள்.  எதைக்கேட்டாலும்—ஏனென்றால் 9 மாதங்களாக குடிநீர் பிரச்சினைஇருக்கிறது. கழிவுநீர் வாய்க்கால் பிரச்சினை இருக்கிறது.  (குறுக்கீடு) ஆகவே, மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் அண்ணன் இருந்திருக் 
கிறார்.  நான் கவனிக்கவில்லை.  Sorry.  ஆகவே, யாரைக் கேட்டாலும், எங்கு கேட்டாலும், இன்னும் எங்களுக்கு பதில் வரவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மேலேயிருந்து உத்தரவு வரவில்லை என்று சொல்கிறார்கள். அந்த மேலே என்பது உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்களா அல்லது முதலமைச்சர் அவர்களா என்று தெரிய வில்லை. யாராக இருந்தாலும் அந்த பணிக ளெல்லாம் விரைந்து நடந்தால்தான் அங்குள்ள மக்கள் பயனடைவார்கள். இந்த 9 மாவட்டத்திலும் இதுபோன்ற பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">எங்களுடைய பகுதியிலுள்ள முக்கிய கோரிக்கைகள். கள்ளக்குறிச்சி மாவட்டம் என்பது புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டம். அந்த மாவட்டத்திலுள்ள நெல் கொள்முதல் நிலை யங்களில் TNCSC சார்பாக கொள்முதல் செய்கிறார்கள். ஆனால், அவற்றை stock செய்வதற்கு இடமில்லாமல் மிகப்பெரிய சிரமமாக இருக்கிறது. அந்த நெல் மூட்டைகளையெல்லாம் Dharani Sugars and Chemicals Limited இயங்காமல் இருப்பதால் அதில் வைத்திருக்கிறார்கள். மீதமுள்ள நெல் மூட்டைகள் வைக்க இடமில்லாமல் மழையில் நனைகின்றன. ஆகவே, அதன்காரணமாக mill–க்கு செல்கின்ற நெல் தரமில்லாமல் செல்கிறது. அதனால், ரேஷன் கடைகளுக்கு தரமில்லாத அரிசி வருகிறது. அதற்கு காரணம் அவை சரியான, பாதுகாப்பான இடத்தில் இல்லாமல் இருப்பதுதான். அதற்கு வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டு மல்ல, மாவட்டத் தலைநகரான கள்ளக் குறிச்சியில் வீட்டு வசதி வாரியத்தின்மூலம் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். ரிஷிவந்தியம் தொகுதியில் ஒரு அரசு தொழில்நுட்பக் கல்லூரி அமைத்தால் அங்குள்ள கிராமப்புற மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதுமட்டு மல்ல, மக்கள்தொகை அடிப்படையில் தியாகதுருகம், சின்னசேலம் ஆகியவை பெரிய ஒன்றியங்களாக இருக்கின்றன. இதை இரண்டாகப் பிரித்தால் அங்குள்ளவர்களுக்கு பெரும் வசதியாக இருக்கும்; நிருவாகத்திற்கும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமல்ல, எங்களுடைய மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பொறுப்பு அமைச்சராக இருக்கக்கூடிய வன்னி அரசு அவர்களுக்கும் நன்கு தெரியும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அந்த இரண்டு ஒன்றியங்களைப் பற்றியும் இங்குள்ள பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கும் தெரியும். ஏனென்று கேட்டால் அவர் எங்களுடைய கட்சியில்தான் இருந்தார்; எங்களோடுதான் இருந்தார். எனக்கும் மிகவும் நெருக்கமானவர், அன்பானவர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">பேரவைத் துணைத் தலைவர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">உறுப்பினர் அவர்களுக்கு ஓர் அன்பான கோரிக்கை. தயவுசெய்து அவர் பெயரைக் குறிப்பிடாமல், அமைச்சர் அவர்கள் என்று குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">க.கார்த்திகேயன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இல்லை, இல்லை. (குறுக்கீடு) பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, எங்களுடைய நட்பில் ஏன் தலையிடுகிறீர்கள்? நாங்கள் நல்ல நட்புடன் இருக்கிறோம் என்று சொல்கிறேன். நீங்கள் அதை ஏன் பிரிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இன்னும் சொல்லப்போனால் எனக்கு உறவினர்; முன்புறம் அமர்ந்துள்ள அண்ணன் நேரு அவர்களுக்கும் அவர் உறவினர். எங்கள் அண்ணன் வேலு அவர்களுடைய மாவட்டத்தைச் சேர்ந்தவர். தயவுசெய்து விட்டுவிடுங்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் என்பது இரண்டு மாவட்டங்களில் வருகிறது. பாதி கிராமங்கள் கள்ளக்குறிச்சி தொகுதியிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், உளுந்தூர் பேட்டை தொகுதியிலும் மீதமுள்ள பாதி கிராமங்கள் விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தொகுதியிலும் வருகின்றன. இதனால் என்ன பிரச்சினை என்றால் அங்குள்ள மக்கள் பயனடைவதற்கு சிரமமாக உள்ளது. எந்த மாவட்ட ஆட்சித் தலைவரைப் பார்ப்பது என்பது போன்ற குழப்பங்கள் உள்ளன.ஆகவே, இரண்டு மாவட்டத்திற்கும் பொதுவாகஇருக்கின்ற இரண்டு ஒன்றியங்களான திருக்கோவிலூர் மற்றும் திருவெண்ணெய்  நல்லூர் ஆகியவற்றை ஆய்வு செய்து அதற்கு தக்க வழிவகை செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுகொள்கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">விவசாயிகளை வஞ்சித்துள்ள அரசு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">பட்ஜெட்டுக்கு வந்துவிடுகிறேன். மக்கள் பெரிதும் எதிர்பார்த்த மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2,500/– காணவில்லை என்று அனைவரும் பேசிக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, வேலையில்லாத படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகை ரூ.4,000/– கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். இல்லத்தரசிகள் எதிர்பார்த்த 6 இலவச சிலிண்டர்கள் கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். நாம் எல்லாம் உண்ணும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து தருகின்ற விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி இல்லை என்று சொல்கிறார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அதுமட்டுமல்ல, விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற நெல்லுக்கு ரூ.3,500–ம், கரும்புக்கு ரூ.4,500–ம் தருவதாகவும் தெரிவித்த நீங்கள் தற்போது விவசாயிகளை வஞ்சித்துள்ளீர்கள். அதுமட்டுமல்ல, ‘வெற்றி வான் மகள்’ திட்டத்தின்மூலம் 100 பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பதாக தெரிவித்திருக்கீறீர்கள். இங்கிருக்கக்கூடிய பெரும்பான்மை யானவர்கள் கிராமத்தில் விவசாயம்தான் செய்கிறோம். ஏனென்றால் இந்த ட்ரோன்களை இயக்குவதற்கு. .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">நாளைக்குகூட என் கிராமத்திற்கு வாருங்கள்; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கின்ற சாத்தனூர். எங்கள் ஊரில் இருக்கின்ற பெண்களே drone–ல் மருந்து அடிக்கிறார்கள். Drone–ல் survey பண்ணுகிறார்கள். ஆக, இது ஏற்கெனவே பத்தாண்டு காலமாக நடைமுறையில் இருக்கின்ற ஒரு விஷயம். அதை ஏதோ புதிதாக கொண்டுவந்ததுபோல் அறிவித் திருக்கின்றீர்கள். ஆகவே, நல்ல திட்டங்களை அறிவித்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். அதுமட்டுமல்ல, ஒரு சின்ன சந்தேகம். நீங்கள் 717 TASMAC கடைகளை மூடிவிட்டதாக சொல்கிறீர்கள். ஆனால், இன்றுவரை இன்றுவரை அதில் ஒரு வெளிப்படைத்தன்மையாக இந்தந்த கடைகளையெல்லாம் மூடியிருக்கிறோம். இதையெல்லாம் மூடவில்லை என்ற ஒரு பட்டியலை நீங்கள் வெளியிட்டால் மிகச்சிறப்பாக இருக்கும். இன்றுவரையில் அந்தப் பட்டியல் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், இதே TASMAC கடைகளில், கடந்த ஆண்டு வருமானம் ரூ. 51,000 கோடி என்று சொல்லியி ருக்கிறீர்கள். ஆனால், இந்த வருடம், ரூ. 51,000 கோடி எங்கள் ஆட்சியில். இப்போது ரூ. 56,000 கோடி என்று நீங்கள் சொல்லி
யிருக்கிறீர்கள். ஆனால், 717 கடைகளை மூடினால் வருவாய் குறையத்தான் செய்யும். ஆனால், உயருவதாக காண்பித்து இருக்கிறீர்கள். இது எந்த அடிப்படையில் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அதேபோல், இந்த நிதிநிலை அறிக்கையில் பல துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதை இந்த நேரத்தில் நான் தெளிவுப்படுத்துகிறேன். மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, இந்த ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டால், உடனே EB Minister எழுந்துவிட வேண்டாம். நான் பேசியபிறகு கடைசியாகச் சொல்லுங்கள். இந்த ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டால் மக்கள் தினமும் பாதிக்கப்பட்டு போராடுகிறார்கள். மின்சாரத்தை உற்பத்திச் செய்யும் எரிசக்தி துறைக்கு எங்களுடைய திராவிட மாடல் அரசு கடந்த நிதியாண்டில் ரூ. 18,091 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது. அதைக் குறைத்து இப்போது ரூ. 15,828 கோடியாக அறிவித்தி ருக்கிறீர்கள். உங்களது ஆட்சியில் எரிசக்தி துறைக்கு ரூ. 2,263 கோடி நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழ்நாட்டு மக்களுக்கு மின்வெட்டு தொடரும் தொடரும் என்பதை இந்த நிதிநிலை அறிக்கையே காட்டுகிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">எங்களது ஆட்சியில் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் ‘புதுமைப் பெண் திட்டம்’, இளைஞர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன் திட்டம்’ என திட்டங்கள் பல தந்து உயர் கல்வியை வளர்த்தது எங்களது திராவிட நாயகர் ஆட்சி. ஆனால், திராவிட நாயகரால் வளர்க்கப்பட்ட உயர் கல்வித் துறைக்கு இந்த ஆண்டு 112 கோடி ரூபாய் நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. இது உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இழைக்கப் பட்ட பெரும் துரோகம் ஆகும். இதுபோல, இந்த நிதிநிலை அறிக்கை, நிதி ஒதுக்கீடுகளை குறைத்து, திட்டங்களின் வளர்ச்சியைத் தடுத்து தமிழ்நாட்டை பின்னோக்கி இழுக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">எங்களது ஆட்சியில் 4,332 திருக்கோயில்களுக்கு 8,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. அதற்கு உதாரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் ஒரு சிறிய மாவட்டம்; நான்கு தொகுதிகளை உள்ளடக்கியது. எங்கள் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டு கோயில்கள்; ஜம்பை ஜம்புகேஸ்வரர், ஆதி திருவரங்கம், ரிஷிவந்தியம் அர்த்த நாரீஸ்வரர் போன்ற கோயில்களுக்கு எல்லாம் 54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ஐந்தாண்டுகளில் மிகச் சிறப்பாக குடமுழுக்கு நடைபெற்றிருக்கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்த நிதிநிலை அறிக்கையில் எதிர்வரும் ஐந்தாண்டுகளில் மூன்றாயிரம் கோயில்கள் புனரமைத்து குடமுழுக்கு நடத்தப்படுமென்று கூறப்பட்டிருக்கிறது. இது ஆன்மிக பக்தர்களிடம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது. ஆகவே, கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஆன்மிகத்திற்கு திராவிட மாடல் ஆட்சியில்தான் எண்ணற்ற திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை இந்த நேரத்தில் தெளிவுபடுத்துகின்றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்த நிதிநிலை அறிக்கையில் உங்களது கட்சியின் பெயர் விளங்கும்வகையில், வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டத்தின்மூலம் 30,000 பேருக்கு தலா ஐந்து வெள்ளாடுகள் வழங்கப்படுமென்று சொல்லியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 12,620 கிராம ஊராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் உள்ளன. ஒரு ஊராட்சியில் இரண்டு பேருக்கு மட்டும் ஆடு கொடுப்பது வெற்றித் திட்டமா அல்லது வெற்று விளம்பரத் திட்டமா என்பது எனக்குப் புரியவில்லை. மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, கடந்த திராவிட மாடல் ஆட்சியில் மாநில அரசின் சொந்த வருவாய் ரூ. 2.29 லட்சம் கோடி. ஆனால், இந்த ஆட்சியில் அது ரூ. 2.26 லட்சம் கோடியாக இருக்குமென நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளீர்கள். மூன்றாயிரம் கோடி ரூபாய் வருவாய் குறைந்துள்ளது; எங்கே போனது என்று எங்களுக்குத் தெரியவில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, –– முதலமைச்சர் அவர்கள்தான் இல்லை; இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாணவர் பருவத்தில் எல்லாரும் போல நானும் college–ல் படிக்கும்போது, அவருடைய படத்தை விரும்பிப் பார்ப்பேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">உங்களுடைய முதலமைச்சரை சொல்கிறேன். அப்படியெனில், முதலமைச்சர் அவர்களை புகழ்ந்து பேசினால் உங்களுக்குப் பிடிக்காதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் Love today என்று ஒரு படம் வந்தது. அதை ஆறு முறை பார்த்தேன். நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் உங்களுடைய முதல்வர் படத்தை ஆறு முறை பார்த்திருக்கிறேன். நானும் ஒரு நல்ல நடிகராக, ஒரு நல்ல dancer ஆக, ஒரு fighter ஆக அவரை ரசிப்பவர்களில் ஒருவராக நானும் இருந்திருக்கின்றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">நடிகர் என்பதில் உங்களைப்போல் நானும் அதை ஆதரிக்கின்றேன்; விரும்புகின்றேன். ஆனால், என்பதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய தீர்ப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சட்டமன்றக் கூட்டத் தொடருக்குக் கிளம்பலாம் என்று கிராமத்திலிருந்து நான் கிளம்பினேன். எனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ஒரு மகளின் பெயர் தாமரை, மற்றொரு மகள் பெயர் மஹன்யா, மற்றொரு மகள் பெயர் ஆராதனா. எங்கே செல்கிறீர்கள் என்று என்னுடைய மூன்று மகள்களும் கேட்டார்கள். நான் சட்ட மன்றத்திற்குச் செல்கிறேன் என்று சொன்னேன். அப்போது, என்னுடைய பெரிய மகளும், சிறிய மகளும், ‘அப்பா ஒரு விஷயம் சொல்ல வேண்டும் அப்பா’ என்று சொன்னார்கள். ‘என்னம்மா, சொல்லும்மா, நான் urgent ஆக train–க்கு விருத்தாசலம் போகணும்’ என்று சொன்னேன். அதற்கு என் மகள்,  என்று என் மகள்கள் சொல்கிறார்கள். (குறுக்கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">பேரவைத் தலைவர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">உறுப்பினர், நீங்கள் எங்கள் தலைவருடைய படங்களை யெல்லாம் ஒரு ரசிகராக விருப்பமாகப் பார்த்ததாகச் சொன்னீர்கள். நீங்கள் பேசியதையெல்லாம் நான் எனது அறையிலிருந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">க.கார்த்திகேயன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">எங்கள் கிராமப் பகுதியில், பெற்றோர், தங்கள் குழந்தை களிடம் அடிக்கடி ஒருசில வார்த்தைகளைச் சொல்வார்கள். ‘நல்ல பெயர் எடுக்க வேண்டும்; நல்ல பெயர் எடுக்க வேண்டும்’ என்று சொல்வார்கள். அதை இந்த அரசு நிர்வாகம் தவறாகப் புரிந்துகொண்டு, இருக்கின்ற நல்ல பெயர்களையெல்லாம் தொடர்ந்து எடுத்துக்கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்’ பெயரை, ‘வெற்றி வீடு திட்டம்’ எனவும், ‘உலகம் உங்கள் கையில்’ எனும் திட்டத்தை, ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ எனவும், ‘நான் முதல்வன்’ திட்டத்தை ‘வெற்றி திறன் பயிற்சித் திட்டம்’ எனவும், ‘சமூக–பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்’ பெயரை, ‘வெற்றி தொழில்முனைவோர் திட்டம்’ எனவும், (மணியடிக்கப்பெற்றது) ‘ஆடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டத்தின்’ பெயரை, ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்’ எனவும் திராவிட மாடல் அரசு கொண்டு வந்த திட்டங்களின்மீது  வருகின்றார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை என்பது சுயமாக, சிந்திக்கத் தெரியாத, சொல்வதையும் புரிந்து கொள்ளாத, முடியாதவர்களின்  பட்ஜெட் என சொல்லலாம். ஆக மொத்தத்தில், இந்த நிதிநிலை அறிக்கை வெற்றி நிதிநிலை அறிக்கை அல்ல, வெற்று நிதிநிலை அறிக்கை என்பதுதான் உண்மை. எதை எடுத்தாலும் இந்த ஆட்சியாளர்கள் வெற்றி அரசு, வெற்றி அரசு என தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஆனால், மக்களின் மனதில்  (மணியடிக்கப்பெற்றது) இது வெறும் வெட்டி அரசு, வெட்டி அரசு, வெட்டி அரசு என்பதே பதிவாகிறது. ஆகவே, இந்த நிதிநிலை அறிக்கை என்பது cipher, cipher, zero என்று என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தொகுதிக் கோரிக்கைகள்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதியை மையமாகக் கொண்டு புதிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கட்டித் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஒன்றியம், வேங்கூர் மதுரா செட்டிதாங்கல் ஊராட்சியில் இயங்கிவரும் கால்நடை மற்றும் காய்கறி வாரச்சந்தைக்கு சுற்றுசுவர் அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதியின் காப்பு காட்டின் எல்லைப் பகுதியில் நீர்த்தேக்க குளங்கள் அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, மேலத்தேனூர், கீழத்தேனூர், சேரந்தாங்கல் ஆகிய ஊராட்சிகளை பிரித்து தனி ஊராட்சியாக அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, ஜி.அரியூர் ஊராட்சி, அம்மன்கொல்லைமேடு துணை கிராமத்தை பிரித்து தனி ஊராட்சியாக அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, ஈருடையாம்பட்டு ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையைம் அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, மூங்கில் துறைப்பட்டு, வாணாபுரம், மணலூர்பேட்டை, வேங்கூர் மதுரா செட்டிதாங்கல் ஆகிய ஊராட்சிகளில் உழவர் சந்தை அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, மணலூர்பேட்டை பேரூராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிந்தியம் தொகுதி, ஜி.அரியூர் ஊராட்சி யில் தனியாக மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, மூங்கில் 
துறைப்பட்டு, பணலுர்பேட்டை, ஜி.அரியூர், புதுப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் இயங்கி வரும் துணை சுகாதார நிலையங்களை நவீன வசதிகளுடன் தரமுயர்த்த வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, திருப்பாலபந்தல் ஊராட்சியில் சார்பதிவாளர் அலுவலகம் அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, காடியார், பூமாரி, மேமாளுர், பழங்கூர் ஆகிய ஊராட்சிகளில் அரசு துணை சுகாதார நிலையம் அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தயம் தொகுதி, தகடி ஊராட்சியில் உள்ள நாதேஸ்வரர் திருக்கோவில், டி.முடியனூர் ஊராட்சி–அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், சோழவாண்டிபுரம்–கைலாச நாகர் திருக்கோவில், திம்மச்சூர் ஊராட்சி–விஸ்வநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்பாலபந்தல் மத்தியநாதேஸ்வரர் கோவில் ஆகிய திருக்கோவில்களை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு செய்து தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கரடி ஊராட்சி, செவிலியர் குடியிருப்புக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, மொகலார் ஊராட்சி–ஜி.அரியூர் வரை பேருந்து வசதி செய்து தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">காட்டுஎடையார், கெடிலம் ஆற்றில் அமைந்துள்ள தடுப்பணையைச் சீரமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, தகடி, மேமாளுர், ஆகிய ஊராட்சியில் கால்நடை மருத்துவ மணை அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, வடமாமாந்தூர் ஊராட்சிக்கு ஈருடையாம்பட்டு துணை மின் நிலையத்திலிருந்து மின் இணைப்புத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, முஸ்குந்தா நதி வாய்க்கால்களை தூர்வாரித் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, வடமாமாந்தூர் காலனிப் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதியில் ஒரு சிப்காட் ஏற்படத்தித் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட வனப் பகுதிகளில் ஆங்காங்கே சிறு சிறு குடிநீர் தொட்டிகள், குளங்கள் அமைக்க வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சாத்தனூர் அணையிலிருந்து ராமராஜபுரம் கால்வாய்க்கு கோடைகாலங்களிலும் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, மூங்கில் துறைப்பட்டு ஊராட்சியில், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் துணைமின் உற்பத்தி திட்டம் பொதுமக்களின் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, மூங்கில் 
துறைப்பட்டு ஊராட்சியை பேரூராட்சியாகத் தரமுயர்த்தித் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, புதுப்பட்டு ஊராட்சி, காவல்நிலையம் அரசு மகளிர்மேல்நிலைப் பள்ளி அமைத்துத் தர வேண்டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, பொரசப்பட்டு ஊராட்சியின் குறுக்கே உயர் அழுத்த மின்சாரப் பாதையை கிராமத்திற்கு வெளியே செல்லுமாறு அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, மூங்கில் 
துறைப்பட்டு ஊராட்சியில் கிளை நூலகத்தை முழுநேர நூலகமாக மாற்றித் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, மணலூர்பேட்டை ஆற்றுபாலம் அருகில் நடைபாதையுடன் கூடிய விளையாட்டு மற்றும் அறிவியல் பூங்கா அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, மணலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இரவுக் காவலர் மற்றும் துப்புரவு பணியா ளர்கள் நியமனம் செய்து தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, மணலூர்பேட்டை பேரூராட்சியில் துணை வேளாண்மை கட்டடம், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் மற்றும் தானியக் கிடங்கு அமைத்துத்  தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, ஆதி திருவரங்கம் ஸ்ரீஅரங்கநாதர் கோவிலுக்கு மணலூர் ர் பேட்டையில் யாத்திரி நிவாஸ் ஏற்படுத்தித் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, மணலூர்பேட்டை, திருவரங்கம், மூங்கில்துறைப்பட்டு, வாணாபுரம், ரிஷிவந்தியம், ஜி.அரியூர் திருப்பாலபந்தல் ஆகிய ஊராட்சிகளில் அரசு திருமண மண்டபம் அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, மணலூர்பேட்டை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடங்களை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் பேரூராட்சியிலிருந்து பெங்களூர், பாண்டிச்சேரி, சேலம் போன்ற நகரங்களுக்கு பொதுமக்கள் சென்றுவர பேருந்து வசதி அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, மணலூர்பேட்டை பேரூராட்சி துணை மின் நிலையத்தில் சுமார் 200 மின்மாற்றிகள் உள்ளதால் மின்சார அலுவலகத்தை பிரித்து 1–2 அலுவலகம் அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, சீர்ப்பனந்தல் ஊராட்சிக்கு, சாத்தனூர் வலது புற கால்வாய்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">பி1–ல் இருந்து தனி கிளை வாய்க்கால் அமைத்துத் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம், மணலூர்பேட்டை அருள்மிகு பிரயோக வரதராஜபெருமாள் திருக்கோவிலைப் புதுப்பித்து குடமுழுக்கு செய்து தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ரிஷிவந்தியம் தொகுதி, முஸ்குந்தா நதியின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டித் தர வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இவ்வாறு பேரவையில் க.கார்த்திகேயன்பேசினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>