<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,33,959,1167" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Aug 09 2026 03:56:15 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260809T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="09082026-TRY-07" position.sequence="07" ex-ref="09082026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">09.08.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">ஒன்றிய அரசுக்குச் செலுத்தப்படும் வரிகளின் மூலம் ஒன்றிய அரசால் பகிர்ந்தளிக்கப்படும் வரித் தொகுப்பில் இருந்து – மாநிலங்களுக்கு</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="37"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="66">50 சதவிகித நிதிப் பகிர்வும் – தமிழ்நாட்டிற்குரிய நிதிப் பகிர்வும் உறுதி செய்யப்பட வேண்டும்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">சட்டப் பேரவையில் – நிதி அமைச்சரின் அரசினர் தீர்மானம் மீதான விவாதத்தில் – தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup805773_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="ThangamTennara_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, ஆக. 9–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஒன்­றிய அர­சுக்கு செலுத்­தப்­ப­டும் வரி­க­ளின் மூலம் மாநி­லங்­க­ளுக்குஒன்­றிய அர­சால் பகிர்ந்து அளிக்­கப்­ப­டக்­கூ­டிய வரித் தொகுப்­பில் இருந்து மாநி­லங்­க­ளுக்கு 50 சத­வி­கி­தம் நிதிப் பகிர்வு  உறுதி செய்­யப்­படு வது­டன், அதில் தமிழ்­நாட்­டிற்கு உரிய நிதிப்­ப­கிர்­வும் உறுதி செய்­யப்­பட வேண்­டும்” என்று சட்­டப் பேர­வை­யில் நிதி அமைச்­சர் முன்­மொ­ழிந்த அர­சி­னர் தனித் தீர்­மா­னம் மீதான விவா­தத்­தில் பேசு­கை­யில் தங்­கம் தென்­ன­ரசு எம்.எல்.ஏ. குறிப்­பிட்­டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாடு சட்­டப்­பே­ர­வை­யில் மாநி­லங்­க­ளுக்­கான நிதிப் பகிர்வு தொடர்­பாக அரசு கொண்டு வந்த தீர்­மா­னத்­தின்  மீதான விவா­ 
தத்­தில்   முன்­னாள் நிதி­ய­மைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு பேசி­ய­தா­வது:-–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த அவை­யில் இன்று முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய மிக முக்­கி­ய­மான இந்த தீர்­மா­னத்­தின் மீது, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில் அளிக்­கப்­பட்­டுள்ள திருத்­தத்­தினை முன்­மொ­ழிந்து கழ­கத்­தின் சார்­பில் கருத்­துக்­களை இந்த அவை­யிலே வழங்­கு­வ­தற்கு வாய்ப்­பினை வழங்கி இருக்­கக்­கூ­டிய கழ­கத்­தி­னு­டைய தலை­வர் அண்­ணன் தள­பதி அவர்­க­ளுக்­கும், நம்­மு­டைய எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­க­ளுக்­கும், பேர­வைத் தலை­வ­ரான தங்­க­ளுக்­கும், இந்த பேர­வைக்கு ஆறா­வது முறை­யாக என்னை அனுப்பி வைத்து மக்­கள் பணி­யாற்ற வாய்ப்­ப­ளித்­தி­ருக்­கக்­கூ­டிய திருச்­சுழி தொகு­தி­யி­னு­டைய வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்­கும் நான் முதற்­கண் என்­னு­டைய நன்­றி­யினை தெரி­வித்­துக் கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்று முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளு­டைய நினைவு நாள். மாநில சுயாட்­சிக் கொள்­கை­க­ளுக்­கா­க­வும், மாநில உரி­மை­க­ளுக்­கா­க­வும் தன்­னு­டைய வாழ்­நா­ளெல்­லாம் போரா­டிய அந்த மகத்­தான தலை­வர் துயி­லு­மி­டம் நோக்கி நான் தொழுது வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அர­சின் சார்­பாக கொண்டு வரப்­பட்­டுள்ள இந்த தீர்­மா­னத்தை கழ­கத்­தி­னு­டைய சார்­பில் வர­வேற்­கக்­கூ­டிய அதே வேளை­யில் மிக முக்­கி­ய­ மா­னது ஒரு திருத்­தத்­தை­யும் நான் முன்­மொ­ழிய கட­மைப்­பட்­டி­ருக்கி றேன். நம்­மு­டைய நிதி­ ய­மைச்­சர் அவர்­கள் கொண்டு  வந்­தி­ருக்­கக்­கூ­டிய இந்த தீர்­மா­னத்­தின், நாலா­வது பத்­தி­யில் முதல் தீர்­மா­னம் கீழ்க்­கண்­ட­வாறு அமைந்­திட வேண்­டும் என்ற திருத்­தத்தை நான் முன்­மொ­ழி­ 
கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தமிழ்நாட்டிற்குரிய நிதிப்பகிர்வை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">உறுதி செய்வீர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­திய அர­சி­ய­ல­மைப்­பின் நிதி­சார் கூட்­டாட்­சிக் கொள்­கை­கள் சமத்­து­வம் மற்­றும் நியா­யம் ஆகி­ய­வற்­றுக்கு இணங்க, ஒன்­றிய அர­சுக்கு செலுத்­தப்­ப­டும் வரி­க­ளின் மூலம் மாநி­லங்­க­ளுக்கு ஒன்­றிய அர­சால் பகிர்ந்து அளிக்­கப்­ப­டக்­கூ­டிய வரித்­தொ­குப்­பி­லி­ருந்து மாநி­லங்­க­ளுக்கு 50% நிதிப்­ப­கிர்­வி­னை­யும் அதனை ஒட்டி தமிழ்­நாடு மாநி­லத்­திற்கு உரிய நிதிப்­ப­கிர்­வி­னை­யும் உறுதி செய்ய வேண்­டும் என்­கின்ற இந்த திருத்­தத்தை நான் இங்கே முன்­மொ­ழிய கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கார­ணம் இந்த அவை­யிலே கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய தீர்­மா­னம் அத­னு­டைய வடி­வில் பொதுப்­ப­டை­யாக ஜென­ரிக்­காக இருக்­கி­றது. எனவே நான் 16 ஆவது நிதிக்­கு­ழு­வின் முன்பு நம்­மு­டைய அர­சின் சார்­பாக ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருக்­கக்­கூ­டிய கருத்­துக்­க­ளின் மற்­றும் அர­சி­னு­டைய நிலைப் 
பாட்­டின் அடிப்­ப­டை­யில், நிதிப்­ப­கிர்வு என்­பது *50 சத­வீ­த­மாக* மாநி­லங்­க­ளுக்கு இருக்க வேண்­டும் என்­றும், அது குறிப்­பா­க­வும், வெளிப்­ப­டை­யா­க­வும் ஸ்பெசி­பிக் அண்ட் எக்ஸ்­பி­ளி­சிட்­டா­க­வும் இருக்க வேண்­டும் என்ற வகை­யில் நான் இந்த திருத்­தத்தை முன்­மொ­ழிந்து அந்த திருத்­தம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்­டும் என்று நான் வலி­யு­றுத்த கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த பேர­வை­யிலே கொண்டு வரப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய இந்த தீர்­மா­னம், தமிழ்­நாட்­டிற்­கான நிதி எவ்­வ­ளவு கிடைக்­கி­றது, அல்­லது எவ்­வ­ளவு கிடைக்­க­வில்லை என்­பதை குறித்த விவா­தம் மட்­டு­மல்ல. மாறாக இது இந்­திய கூட்­டாட்சி தத்­து­வத்­தி­னு­டைய எதிர்­கா­லத்தை பற்­றி­யது ஒரு விவா­தத்­திற்­கான தீர்­மா­ன­மா­க­ வும் அமைந்­தி­ருக்­கி­றது. நாம் இழந்­தி­ருக்­கக்­கூ­டிய உரி­மை­கள் குறித்த விவா­த­மாக இந்த விவா­தம் அமைந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இந்திய கூட்டாட்சியின் வலிமை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாநில அர­சி­னு­டைய உரி­மை­க­ளுக்­கும், ஒன்­றிய அர­சுக்­கும் இடை­யில் இருக்­கக்­கூ­டிய இந்த பொறுப்­பு­க­ளுக்­கு­மான இடை­யே­யான சம­நிலை குறித்த விவா­த­மா­கவே நான் இந்த விவா­தத்தை காண்­கி­றேன். இந்­திய கூட்­டாட்­சி­ யி­னு­டைய வலிமை எதில் இருக்­கி­றது என்ற கேள்வி இன்­றைக்கு வந்­தி­ருக்­கி­றது. அந்த கேள்­விக்­கான விடை மாநி­லங்­க­ளி­னு­டைய வலி­மை­யில் தான் அது இருக்­கி­றது என்­பது தான் அதற்­கான உரிய பதி­லாக இருக்க முடி­யும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நம்­மை­யெல்­லாம் வளர்த்து ஆளாக்­கியபேர­றி­ஞர் பெருந்­தகை அண்ணா அவர்­கள் அதை குறித்து மிக அரு­மை­யாக சொன்­னார்­கள். ஒன்­றிய அர­சி­னு­டைய வலிவு என்­பது மாநி­லங்­கள் ஒவ்­வொன்­றி­னு­டைய தனித்­தனிவலி­மை­யை­யும் கூட்­டி­ய­தால் ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய வலி­மையே தவிர, மாநி­லங்­க­ளுக்கு அல்­லது இருக்­கக்­கூ­டிய இந்த வலி­மை­யி­னு­டைய ஒட்­டு­மொத்த வலி­மையே தவிர, அது ஒன்­றிய அர­சிற்­கான தனிப்­பட்ட வலிமை அல்ல என்று அவர்­கள் வலி­யு­றுத்­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாநில அதி­கா­ரங்­கள் ஒன்­றிய அரசு இன்­றைக்கு அவர்­கள் குவித்­துக் கொள்­வ­தால், மாநி­லங்­கள் இன்­றைக்கு பல­வீ­ன­ம­டை­யுமே தவிர ஒன்­றிய அர­சிற்கு அத­னால் புதிய வலிவு ஏதும் ஏற்­பட்டு விடாது என்று அண்ணா அவர்­கள் அன்­றைக்கு எடுத்­துச் சொன்­னதை நான் இங்கே எடுத்­துச் சொல்ல விரும்­பு­கி­றேன். அதை ஒட்­டித்­தான் கடந்த காலங்­க­ளி­லும், நிதி ஆயோக் கூட்­டங்­க­ளிலேநம்­மு­டைய முன்­னாள் முத­ல­மைச்­சர்அண்­ணன் தள­பதி அவர்­கள், தமிழ்­நாட்­டி­னு­டைய இந்த கருத்தை மிக வலி­மை­யாக அங்கே எடுத்து வைத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு சூழ்­நிலை என்ன? மாநி­லங்­க­ளுக்­கான இருக்­கக்­கூ­டிய இந்த வரு­வாய் ஆதா­ரங்­கள் குறை­கி­றது. சட்­டம் இயற்­றப்­ப­டக்­கூ­டிய நம்­மு­டைய கட­மை­கள் இன்­றைக்கு கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது, நம்­மு­டைய அதி­கா­ரங்­கள் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. அதே வேளை­யில் என்ன சூழ்­நிலை? மாநி­லத்­திலே இருக்­கக்­கூ­டிய மக்­க­ளு­டைய எதிர்­பார்ப்பு மாநில அரசை நோக்கி இன்­றைக்கு வந்து கொண்­டி­ருக்­கி­றது, அதி­க­ரித்­துக் கொண்­டி­ருக்­கி­றது. இந்த முரண்­பாட்­டைத்­தான் இந்த தீர்­மா­னத்­திலே நாம் இன்­றைக்கு விவா­திக்க வேண்டி இருக்­கி­றது. சுருக்­க­மாக சொன்­னால், செலவு பொறுப்பு என்­பது மாநி­லங்­க­ளி­டத்­திலே இருக்­கி­றது. ஆனால் வரு­வாய் ஆதா­ரங்­கள் யாரி­டத்­திலே இருக்­கி­றது என்று சொன்­னால் அது ஒன்­றிய அர­சி­டத்­திலே இருக்­கி­றது. இந்த முரண் 
பாட்டை தீர்க்­கா­மல் தமிழ்­நாட்­டி­னு­டைய எதிர்­கால வளர்ச்­சியை நாம் தீர்­மா­னிக்க முடி­யாது. எனவே தான் இந்த விவா­தம் இன்­றைக்கு மிக முக்­கி­ய­மான விவா­த­மாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">உற்பத்தித் துறையில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முதன்மை மாநிலம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாம் அனை­வ­ரும் நன்­றாக அறி­வோம், தமிழ்­நாடு இன்­றைக்கு இந்­தி­யா­விலே மிகப்­பெ­ரிய, இரண்­டா­வது மிகப்­பெ­ரிய பொரு­ளா­தா­ரம், தி செகண்ட் லார்­ஜஸ்ட் எகா­னமி இன் த ஸ்டேட் என்று நீங்­கள், தி கண்ட்ரி என்று நீங்­கள் எடுத்­துக் கொண்­டால் அது தமிழ்­நாட்­டைச் சொல்­லக்­கூ­டிய அள­விற்கு நாம் வளர்ந்­தி­ருக்­கக் கூடிய ஒரு மாநி­ல­மாக இருக்­கி­றோம். இன்­றைக்கு இந்­தி­யா­வி­னு­டைய மொத்த உள்­நாட்டு உற்­பத்தி மதிப்­பில், ஜிஎஸ்­டி­பி­யில், 9 சத­வீ­த­மான பங்­க­ளிப்பை நாம் தரு­கி­றோம். மொத்த ஏற்­று­ம­தி­யில் 11 சத­வீ­த­மான பங்­க­ளிப்பை நாம் தந்­தி­ருக்­கி­றோம். உற்­பத்தி துறை­யிலே நாம் முதன்மை மாநி­ல­மாக இருக்­கி­றோம். தொழிற்­சா­லை­க­ளிலே 11 சத­வீ­தம் நம்­மி­டத்­திலே இருக்­கி­றது. பெண் தொழி­லா­ளர்­க­ளு­டைய பங்­க­ளிப்­பில் நாம் முதன்­மை­யாக இருக்­கி­றோம். நம்­மு­டைய இயற்கை வளங்­கள், குறிப்­பாக மனித வளம், கல்­வி­ய­றிவு இந்த வளர்ச்­சிக்கு அடிப்­படை கார­ணங்­க­ளாக இருந்­தி­ருக்­கி­றது. இந்த வளர்ச்சி தான் ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வி­னு­டைய பொரு­ளா­தா­ரத்­திற்கு தூணாக தமிழ்­நாடு இன்­றைக்கு வந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­ன­டிப்­ப­டை­யில், நாம் இன்­றைக்கு பெற்­றி­ருக்­கக்­கூ­டிய உண்­மை­யான பொரு­ளா­தார வளர்ச்சி என்­பது 11.19 சத­வீ­த­மாக வந்­தி­ருக்­கி­றது என்று சொன்­னால், நாம் கட்­டிக்­காத்து வளர்த்­தி­ருக்­கக்­கூ­டிய இந்த வளர்ச்­சிக்கு நாம் அளித்­தி­ருக்­கக்­கூ­டிய மிகப்­பெ­ரிய பங்­க­ளிப்பு தனி­ந­பர் வரு­மா­னங்­கள் இன்­றைக்கு 3.63 லட்­ச­மாக கூடி­யி­ருக்­க­லாம். ஆனால், நம்­மு­டைய மாநி­லத்­திலே இன்­றைக்கு தொடர்ச்­சி­யாக நாம் கடை­பி­டித்து வரக்­கூ­டிய நல்ல நிதி நிர்­வா­கங்­களை கணக்­கிலே எடுத்­துக் கொள்­ளா­மல், நம்­மு­டைய நிதி ஒழுங்­கிற்கு, பிஸ்­கல் டிசிப்­ளி­னுக்கு உரிய முக்­கி­யத்­து­வம் தரா­மல், இன்­றைக்கு நிதிப் பகிர்­விலே நம்­மு­டைய மாநி­லம் தொடர்ந்து இன்­றைக்கு புறக்­க­ணிக்­கப்­பட்­டுக் கொண்டு வந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">வருவாய் அதிகாரங்கள் 
ஒன்றிய அரசிடம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான்பல­முறை இந்த அவை­யிலே சொல்­லி­யி­ருக்­கி­றேன். ஒன்­றிய அரசு இன்­றைக்கு நாம் கொடுக்­கக்­கூ­டிய ஒவ்­வொரு ரூபாய்க்­கும் 29 பைசா நமக்கு வரு­கி­றது. இதே இது உத்­த­ர­பி­ர­தே­சத்தை நீங்­கள் எடுத்­துக் கொண்­டால், 2 ரூபாய் 73 பைசா. பீகா­ருக்கு 7 ரூபாய் 6 பைசா. நான் மற்ற மாநி­லங்­கள் குறை சொல்­ல­வில்லை. நீங்­கள் கொடுங்­கள், எல்லா மாநி­லங்­க­ளுக்­கும் கொடுக்­கி­றது நீங்­கள் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றீர்­கள். ஆனால், தமிழ்­நாட்­டிற்கு இந்த புறக்­க­ணிப்பு ஏன் என்­பது தான் தொடர்ச்­சி­யாக என்­னு ­டைய கேள்­வி­யாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">குறிப்­பாக ஜிஎஸ்டி, ஜிஎஸ்டி வந்­த­தற்­குப் பிறகு நம்­மு­டைய பிஸ்­கல் அட்­டா­னமி என்­பது முழு­மை­யாக இல்லை. ஒரு பொரு­ளுக்கு எந்த பொரு­ளுக்கு எந்த அள­விலே நாம் வரி விதிக்­க­லாம் என்­கின்ற உரி­மையை நாம் இழந்­தி­ருக்­கி­றோம். ஒட்­டு­மொத்­த­மான வரு­வாய் அதி­கா­ரங்­கள் இன்­றைக்கு ஒன்­றிய அர­சில் குவிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. கடந்த ஆண்­டிலே கூட ரேட், அந்த ரேட் ரேஷ­ன­லை­சே­ஷன் ஃபார் ஜிஎஸ்டி வரு­கிற போது ஜிஎஸ்டி கவுன்­சி­லில் நாங்­கள் அதைத்­தான் சொன்­னோம். நீங்­கள் இப்­போது விகி­தங்­களை குறைப்­ப­ தற்­காக பார்க்­கி­றீர்­கள். ஆனால் நீங்­கள் எதிர்­பார்க்­கக்­கூ­டிய பாயன்சி வர­வில்லை, ஒரே நிமி­ஷம், பாயன்சி வர­வில்லை, வராது. அதன் கார­ண­மாக மாநி­லங்­க­ளுக்கு வர­வேண்­டிய வரி வரு­வாய்­கள் குறை­யும் என்று நாங்­கள் அன்­றைக்கு எதிர்­பார்த்­துச் சொன்­னோம். இன்­றைக்கு அது­தான் நடை­மு­றை­யிலே வந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மாநிலங்களுடைய சுமை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என­வே­தான் இந்த மாநில, ஒன்­றிய அர­சி­னு­டைய நிதி­ 
யு­த­வித் திட்­டங்­கள், அதை­யெ­டுத்­துக் கொண்டு பார்த்­தீர்­கள் என்று சொன்­னால், ஒரு புறம் ஒன்­றிய அர­சி­னு­டைய பங்­க­ளிப்­போடு நடக்­கக்­கூ­டிய இந்த திட்­டங்­க­ளில், ஒன்­றிய அர­சின் திட்­டங்­க­ளில் மாநில அர­சி­னு­டைய நிதி பங்­க­ளிப்பு உயர்ந்து கொண்டே போகி­றது. ஒரு காலத்­திலே 25 சத­வீ­தம் இருந்­தது. இப்­போது 40 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டி­ருக்­கி­றது. எனவே நமக்கு வர­வேண்­டிய வரு­வாய் பகிர்­வி­லும் குறைவு, இன்­னொரு வகை­யிலே ஒன்­றிய அர­சிற்கு நாம் கொடுத்­தி­ருக்­கக் கூடிய நிதிப் பங்­க­ளிப்பு என்­பது மாநி­லங்­க­ளு­டைய சுமையை இன்­றைக்கு உயர்த்­திக் கொண்டே இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதுல இன்­னொரு பெரிய முக்­கி­ய­மான விஷ­யம், இந்த வரித் தொகுப்­பி­லி­ருந்து நமக்கு வரு­வதை குறைக்­கக்­கூ­டிய அதே வேளை­யில், செஸ் அண்ட் சர்­சார்­ஜஸ் என்­கின்ற வகை­யிலே, ஒட்­டு­மொத்த வரித் தொகுப்­பி­லி­ருந்து வரக்­கூ­டிய இந்த பகிர்­வுக்­குத் தாண்டி, அதற்கு வெளியே இன்­றைக்கு இந்த நிதிக் குவி­யலை ஒன்­றிய அரசு தன்­னி­டத்­திலே கொண்­டி­ருக்­கி­றது. அதற்­கான காம்­பன்­சே­ஷன் என்ன என்­ப­தற்கு இன்­றைக்கு வரை ஒன்­றிய அரசு நம்­மி­டத்­திலே சரி­யான முறை­யிலே விளக்­கங்­க­ளைக் கொடுக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தச் சூழ்­நி­லை­யில் தான் கடந்த ஆண்­டும் நாம் நிதிக்­கு­ழு­விலே பேசி­யி­ருக்­கி­றோம், ஃபைனான்ஸ் கமி­ஷன்ல சொல்­லி­யி­ருக்­கி­றோம். 9ஆவது நிதிக்­கு­ழு­விலே 7.9 சத­வீ­த­மாக இருந்த நம்­மு­டைய வரிப் பகிர்வு நமக்கு முடிச்­சிட்­டேன் ஜஸ்ட் கன்­கு­ளூட் பண்­றேன். 9ஆவது நிதிக்­கு­ழு­விலே நமக்கு 7.93 சத­வீ­த­மாக இருந்த இந்த நிதிப் பங்­க­ளிப்பு என்­பது, 15ஆவது நிதிக்­குழு காலத்­திலே 4.079 சத­வீ­த­மாக குறை­கி­றது. 9 லிருந்து 4 க்கு வந்­துட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">16 ஆவது நிதிக்­கு­ழு­விலே நம்­மு­டைய தமிழ்­நாட்­டி­னு­டைய வாதங்­களை எவ்­வ­ளவு சிறப்­பாக நாம் வைத்­தி­ருந்­தா­லும் கூட, நமக்கு கிடைத்­தி­ருக்­கக்­கூ­டிய உயர்வு என்­பதை பார்த்­தீங்­கன்னா ரொம்ப மீகர், மிக மிக குறைவு. 0.018 பர்­சன்­டேஜ், இந்த சத­வீத புள்ளி, புள்ளி தான் நமக்­கான உயர்வு கிடைத் 
தி­ருக்­கி­றது. கேர­ளா­வுக்கு அதி­க­மாக கிடைத்­தி­ருக்­கி­றது, கர்­நா­ட­கா­வுக்கு அதி­க­மாக கிடைத்தி­ருக்­கி­றது, தவ­றில்லை அவர்­க­ளுக்கு கொடுங்­கள். ஆனால், நாம் இன்­றைக்கு கிடைத் தி­ருக்­கக்­கூ­டிய அள­வு­கோல்­கள் குறிப்­பாக நான் சொல்ல வேண்­டும் என்று சொன்­னால் நம்­மு­டைய நிதி ஒழுங்கு, நம்­மு­டைய வரி­வ­சூல் திறன், நம்­மு­டைய மனி­த­வள மேம்­பாடு, நம்­மு­டைய நக­ர­ம­ய­மாக்­கக் கூ­டிய திட்­டங்­கள், இன்­னும் சொல்ல வேண்­டும் என்­றால் நாம் சந்­திக்­கக்­கூ­டிய ஏஜிங் ப்ராப்­ளம், பென்­ஷன் போன்­றி­ருக்­கக்­கூ­டிய பல்­வேறு தமிழ்­நாட்­டிற்­கென்று பிரத்­யே­க­மாக இருக்­கக்­கூ­டிய பிரச்சினை­கள் இது எதை­யுமே இன்­றைக்கு நிதிக்­குழு கணக்­கிலே எடுத்­துக் கொள்ள முடி­யாத ஒரு சூழ்­நிலை இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே இவற்­றுக்­கெல்­லாம் ஒரு நல்ல தீர்வு காணக்­கூ­டிய வகை­யிலே இந்த தீர்­மா­னத்தை நாம் வர­வேற்க வேண்­டிய அதே கால­கட்­டத்­தில், 50 சத­வீ­தம் இன்­றைக்கு மாநி­லங்­க­ளுக்கு கொடுக்­கக்­கூ­டிய அந்த வரிப்­ப­கிர்­வில் 50 சத­வீ­த­மாக அது குறிப்­பி­டப்­பட வேண்­டும். ஏனென்­றால் இத்­த­னைக்கு பிறகு மீண்­டும் 41 சத­வீ­த­மா­கத் தான் அது நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. எனவே மாநி­லங்­க­ளுக்குஇருக்­கக்­கூ­டிய அந்த நிதிப்­ப­கிர்­வில் 50 சத­வீ­த­மாக அது குறிப்­பி­டப்­பட வேண்­டும். அதில் தமிழ்­நாட்­டிற்கு உரிய பங்­கினை தர­வேண்­டும் என்­கின்ற அந்த திருத்­தத்­தை­யும் நான் முன்­மொ­ழிந்து, இதை உள்­ள­டக்கி இந்த தீர்­மா­னத்­தி­ னு­டைய உள்­ளார்ந்த கருத்­துக் க­ளுக்கு திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில்அந்த கருத்­துக்­க­ளோடு, இந்த தீர்­மா­னத்­தின் கருத்­துக் க­ளோடு ஒன்­றி­ணைந்து அதை வர­வேற்று இந்த அள­வில் அமை­கி­றேன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்வாறுசட்டப் பேரவையில் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>