<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,72,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Aug 09 2026 03:57:33 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260809T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="09082026-TRY-09" position.sequence="09" ex-ref="09082026-TRY-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup804881_09_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup804867_09_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup804854_09_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup804796_09_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">உலக அர­சி­யல் நிலை மோச­மா­கத்­தான் இருக்­கி­றது! இந்­திய அர­சி­யல் நிலை­யும் கல­வ­ர­மா­கத்­தான் இருக்­கி­றது! இப்­போது என்ன பிரச்­சி­னை­யென்­றால், பொது­வாக நிலை­யான அர­சி­ய­லும், நீடித்த பொரு­ளா­தார வளர்ச்­சி­யும் கொண்ட திரா­விட நல் தமிழ் நாட்­டி­லும் அலங்­கோல ஆட்சி நடக்­கத் தொடங்­கி­யுள்­ள­து­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இந்­தி­யா­வில் ஜென் ஸீ தலை­முறை முதி­யோ­ருக்கு அர­சி­யல் பாட­மெ­டுக்­கும் கரப்­பான் பூச்சி வடி­வ­மெ­டுக்­கி­றது என்­றால், தமிழ் நாட்­டில் ஒரு ஜென் ஸீ கும்­பல் நடி­க­ரின் தற்­கா­தல் பிம்­பத்தை துரத்­திச் சென்று மடி­யும் விட்­டில் பூச்­சி­க­ளாக வெளிப்­பட்டு வெட்­கித் தலை­கு­னிய வைத்­து­விட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இளைய தலை­மு­றைக்கே ஒரு அவப்­பெ­யரை தமிழ்­நாடு தந்­து­விட்­டது! நடி­க­ரைக் காணச்­சென்று நசுங்­கிச் சாகும் கும்­பல் எங்கே, ஜந்­தர் மந்­த­ரில் போலீஸ் தடி­யை­யும் வெறுங்­கை­யால் தடுத்து நிறுத்­தும் வீராங்­க­னை­கள் எங்கே! மக்­களை நடிக பிம்ப வெறி­யேற்றி மயக்­கிய ஊட­கங்­கள் இதற்­கும் பழியை திரா­விட இயக்­கத்­தின் மீதே போடு­வ­து­தான் வேடிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">விஜய் ஆட்சி புரட்சி செய்­யா­விட்­டால் பர­வா­யில்லை! ஆனால் ஒரு அர­சி­யல் விபத்­தாக அல்­லவா மாறி வரு­கி­றது? ஒவ்­வொரு வார­மும் அரங்­கே­றும் அலங்­கோ­லங்­க­ளுக்கு அள­வில்­லா­மல் போய்க்­கொண்­டி­ருக்­கி­றது! இங்கே நடப்­பது என்­ன­வென்றே ஒரு­வ­ருக்­கும் விளங்­காத மர்­ம­மாக இருக்­கி­றது! அதற்­கெல்­லாம் மையத்­தில் எதை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் பதுங்கி வாழ்­கி­றார் பேசாப் பதுமை முத­ல­மைச்­சர் ஜோசப் விஜய்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">அவர் ஏதா­வது பேசி­னால்­தானே நாட்­டில் நடக்­கும் பிரச்­சி­னை­கள் அவ­ருக்­குத் தெரி­யுமா என்­பதே மக்­க­ளுக்­குப் புரி­யும்? எந்த பிரச்­சி­னைக்­கும் வாயைத் திறக்­கா­விட்­டால் அவர் என்ன நினைக்­கி­றார் என்றே யாருக்­கும் தெரி­வ­தில்லை. தலை­ய­றுந்த கோழி போல அமைச்­சர்­க­ளும், அதி­கா­ரி­க­ளும் ஆளா­ளுக்கு ஏதோ பேசு­கி­றார்­கள், செயல்­ப­டு­கி­றார்­கள். ஊட­கங்­க­ளும், சமூக ஊட­கங்­க­ளும் ஆட்­சி­யின் குள­று­ப­டி­களை விமர்­சிக்­கத்­தான் செய்­கின்­றன. ஆனால் அதைப்­பற்றி ஆளும் கட்­சி-­­அது இன்­னும் கட்­சி­யா­கவே வடி­வெ­டுக்­க­வில்­லை-­­ஆ­ளும் கூட்­டம் கவ­லைப் படு­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இத்­த­னைக்­கும் நடி­கர் விஜய் தனிப்­பெ­ரும்­பான்­மை­யு­டன் ஆட்­சிக்கு வர­வில்லை. அவரை எதிர்த்­துப் போட்­டி­யிட்ட கட்­சி­கள் சில­வற்­றின் ஆத­ர­வு­டன்­தான் கூட்­டணி ஆட்சி அமைத்­துள்­ளார். காங்­கி­ரஸ் கட்சி அவர் அமைச்­ச­ர­வை­யில் பங்­கேற்­றுள்­ளது. ஆனால் ஒன்­றி­யத்­தில் காங்­கி­ரஸ் பா.ஜ.க. -வுடன் கடு­மை­யாக மோதி­னா­லும், த.வெ.க. பா.ஜ.க.  குறித்து மூச்­சு­ வி­டாது. கார­ணம் ஒன்­றிய அர­சின் அதி­கா­ரத்­தைக் கண்டு பயம். பா.ஜ.க. ஆத­ர­வாக பேசி­னால் காங்­கி­ரஸ் ஆத­ரவை விலக்­கிக் கொண்டு விடும். அத­னால் அதைக் கண்­டும் பயம். அத­னால் எதைக் குறித்­தும் பேசு­வ­தில்லை. ஆனால் செய்­யும் செயல்­க­ளெல்­லாம் பா.ஜ.க. -வையும் மிஞ்­சும் சங்­கித்­த­ன­மான செயல்­கள்­தான். ஒரு சில­வற்றை பரி­சீ­லிப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">திட­லுக்­குச் சென்ற போலீஸ்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">நீட் தேர்வு முறை­கே­டு­களை ஒட்டி டில்­லி­யி­லும், வட மாநி­லங்­க­ளி­லும் எழுந்­துள்ள இளை­ஞர்­கள் எழுச்சி பா.ஜ.க.  அர­சிற்கு அதிர்ச்சி வைத்­தி­யம் கொடுத்­துள்­ளது. அந்த நேரத்­தில் தமிழ்­நாட்­டி­லும் அதன் நீண்­ட­கால கோரிக்­கை­யான நீட் தேர்­வையே ரத்து செய்ய வேண்­டும், அதி­லி­ருந்து விலக்கு அளிக்­க­வேண்­டும் என்ற கோரிக்­கையை வலி­யு­றுத்தி மாண­வர்­கள், இளை­ஞர்­கள் போரா­டி­யது இயற்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">புதி­தாக ஆட்­சிக்கு வந்­துள்ள நடி­கர் விஜய்க்கு அத­னைக் கண்டு அச்­சம். எங்கே ஒன்­றிய பா.ஜ.க.  அரசு தன்­மீது நட­வ­டிக்கை எடுத்­து­வி­டுமோ என்ற பயம். அத­னால் அந்த போராட்­டங்­களை பல இடங்­க­ளில் தடுக்­க­வும், ஒடுக்­க­வும் முற்­பட்­டார். அவ­ருக்­கும் இந்த போராட்­டங்­க­ளுக்­கும் தொடர்­பில்லை என்று ஒன்­றிய அர­சிற்­குத் தெரிய வேண்­டுமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">வாய்­தி­றந்து பேசவே அஞ்­சும் நடி­கர் பேச்­சுக்­குக்­கூட நீட் விலக்­குக் கோரிக்­கையை ஆத­ரித்து அறிக்கை விட­வில்லை. அவர் ரசி­கர்­க­ளுக்­கும் அர­சி­யல் ஆர்­வம் கிடை­யாது என்­ப­தால் அவர்­க­ளை­யும் போரா­டச் சொல்ல முடி­யாது. அவர்­க­ளு­டைய ஒரே ஆசை விஜயை பார்ப்­ப­து­தான். அதற்­காக உயி­ரை­யும் கொடுப்­பார்­களே தவிர, மற்ற பொது­நல அர­சி­யல் கோரிக்­கை­க­ளுக்­காக எது­வும் செய்ய மாட்­டார்­கள். விஜ­யும் அவர்­களை அப்­படி போரா­டச் சொல்ல மாட்­டார். ஏனெ­னில் அவர்­கள் அர­சி­யல் மய­மா­கி­விட்­டால் பிறகு அவர் பின்­னால் ஓடி­வர மாட்­டார்­கள் என்ற அச்­சம் இருக்­கு­மல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இதன் உச்­ச­கட்­ட­மான நிகழ்­வு­தான் திரா­வி­டர் கழ­கத்­தின் நீட் தேர்வு, பொரு­ளா­தார நலி­வுற்­றோர் இட ஒதுக்­கீடு ஆகி­ய­வற்­றிற்கு எதி­ரான பிரச்­சார பய­ணத்­திற்­குத் தடை விதித்­தது. திரா­வி­டர் கழ­கத்­தின் பிர­ச்சா­ரங்­கள் முழுக்க முழுக்க அமைதி வழி­யில் நடப்­பவை. பெரி­யாரே சில சட்­டம் மீறிய குறி­யீட்டு எதிர்ப்பு வடி­வங்­க­ளைக் கொண்ட போராட்­டங்­கள் நட த்திய­போது கூட தொண்­டர்­கள் பொது அமை­தி­யைக் குலைக்­கும் எந்த செய­லை­யும் செய்ய மாட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">தி.க. தொண்­டர்­கள் சிறை நிரப்­பு­வார்­கள். அவர்­கள் மீதான தாக்­கு­தலை அற­வ­ழி­யில் எதிர்­கொள்­வார்­கள். ஆனால் ஒரு­போ­தும் பொதுச்­சொத்தை சேதப்­ப­டுத்­தியோ, அமை­திக்கு பங்­கம் விளை­வித்தோ செயல்­பட மாட்­டார்­கள். அவ்­வி­தம் செய்­வதை காலித்­த­னம் என்றே கரு­தக் கூடி­ய­வர் பெரி­யார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">அப்­ப­டிப்­பட்ட உயர் மர­பைக் கொண்ட பண்­பாட்டு இயக்­க­மான திரா­வி­டர் கழ­கத்­தின் பிர­சா­ரப் பய­ணத்தை நடி­கர் விஜய் அரசு தடை செய்­த­து­டன், பெரி­யார் திட­லுக்கு காவல்­து­றை­யி­னரை அனுப்பி அங்கே யாரும் தடையை மீறி செயல்­ப­ட­வி­டா­மல் தடுத்­தது. ஆசி­ரி­யர் வீர­மணி நீதி­மன்­றத்தை அணுகி அனு­மதி பெற்று பிர­சா­ரம் செய்­வோம் என்ற முதிர்ச்­சி­யான முடிவை எடுத்­து­விட்­டார். பிரச்­சினை என்­ன­வென்­றால் எத­னால் விஜய் திட­லுக்கு காவல்­து­றையை அனுப்­பும் அள­விற்­குச் சென்­றார் என்ற கேள்­வி­தான். யாரை மகிழ்­விக்க இத­னைச் செய்­கி­றார், எந்த அச்­சத்­தால் இத­னைச் செய்­கி­றார் என்­பதே கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">தமிழ்­நாட்­டின் ‘நீட் தேர்வு’ எதிர்ப்­பின் பின்­னணி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">நீட் தேர்வை பா.ஜ.க.  நீங்­க­லாக தமிழ்­நாட்­டின் அர­சி­யல் கட்­சி­கள், இயக்­கங்­கள் எவை­யும் ஏற்­க­வில்லை. ஏனெ­னில் தமிழ்­நாடு கல்வி, பொது சுகா­தா­ரம் இரண்­டி­லும் நாட்­டி­லேயே தனிப்­பாதை அமைத்து முன்­னே­றிய மாநி­லம் என்­ப­து­தான். அதற்­குக் கார­ணம் அதன் சமூக நீதித் தன்­னு­ணர்வு. பெரி­யார் விதைத்த பகுத்­த­றிவு. ஒன்­றிய அரசே தரும் புள்­ளி­வி­வ­ரங்­கள் இந்த வித்­தி­யா­சத்தை ஐயத்­திற்கு அப்­பால் எடுத்­துச் சொல்­லும். வட மாநி­லங்­க­ளுக்கு இந்த வர­லாறு கிடை­யாது என்­ப­தால் அவர்­க­ளுக்கு நீட் தேர்வு முறை­கே­டு­கள்­தான் பிரச்­சி­னையே தவிர, நீட் தேர்வே பிரச்­சி­னை­யல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">தமிழ்­நாட்­டில் மருத்­து­வக் கல்வி அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கி­ய­தாக சிறப்­பா­ன­தாக நடை­பெற்று வந்­தது. பள்ளி இறு­தித் தேர்வு மதிப்­பெண்­கள் அடிப்­ப­டை­யில் அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளில் சேர்க்கை உரிய இட ஒதுக்­கீட்­டு­டன் நடை­பெற்று வந்­தது. இதில் அகில இந்­திய அள­வி­லான ஒரு நுழை­வுத் தேர்வை புகுத்­தி­யது, கிரா­மப்­புற, எளிய குடும்­பத்து மாணவ, மாண­வி­ய­ருக்கு பெரும் இடை­யூ­றாக அமைந்­தது. இந்த நுழை­வுத் தேர்­வில் அதிக மதிப்­பெண்­கள் பெறும் திறன் பள்­ளிக் கல்­வி­யால் மட்­டும் வரு­வ­தாக இல்லை. அதற்­கென்று தனிப்­பட்ட பயிற்சி தேவைப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">அதற்­கென உரு­வான கோச்­சிங் செண்­டர் எனப்­ப­டும் தனி­யார் பயிற்சி நிலை­யங்­க­ளில் அதிக பணம் செலுத்தி பயிற்சி பெற வேண்­டிய தேவை உரு­வா­னது. இந்த பொதுத்­தேர்­வும் ஒன்­றிய கல்வி வாரி­ய­மான CBSE பாட திட்­டத் ­தினை அனு­ச­ரித்து நடத்­தப்­பட்ட தால் தமிழ்­நாட்டு பள்­ளிக்­கல்­வித்­து­றை­யின் பாடத்­திட்­டத்­தில் படித்­த­வர்­க­ளுக்கு உகந்­த­தாக இல்லை. பிற்­ப­டுத்­தப்­பட்ட, தாழ்த்­தப்­பட்ட சமூக மாண­வர்­க­ளின் மருத்­து­வக் கல்­விக் ­கான முயற்சி குரூ­ர­மாக முடக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">அரி­ய­லூ­ரைச் சேர்ந்த மாணவி அனிதா பள்ளி இறு­தித் தேர்­வில் மிகச்­சி­றந்த மதிப்­பெண்­க­ளைப் பெற்­றி­ருந்­தும், நீட் தேர்­வில் போதிய மதிப்­பெண்­கள் பெறா­த­தால் மருத்­து­வக் கல்வி கற்­கும் வாய்ப்பை இழந்­தார். அவர் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் தொடர்ந்த வழக்­கி­லும் நீதி கிடைக்­காத போது உயிர் நீத்­தார். தமிழ்­நாடே பொங்கி எழுந்­தது. அதி­லி­ருந்து எத்­த­னையோ சட்­டப் போராட்­டங்­கள், அறப்­போ­ராட்­டங்­கள் சட்ட மன்ற தீர்­மா­னங்­கள் என தொடர்ந்­தா­லும் ஒன்­றிய பா.ஜ.க.  அர­சின் அர­சி­யல் வன்­மத்­தால் நீட் தேர்­வி­லி­ருந்து தமிழ்­நாட்­டிற்கு விலக்கு அளிக்­கப்­ப­டா­மல் அந்­தத் தேர்வு தொடர்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">தமிழ்­நாட்­டில் அறு­ப­து­க­ளி­லி­ருந்தே திரா­விட இயக்­கத்­தின் எழுச்சி கார­ண­மாக உரு­வா­கி­யி­ருந்த சமூக நீதி குறித்த விழிப்­பு­ணர்வு பிற்­ப­டுத்­தப்­பட்ட, தாழ்த்­தப்­பட்ட மாண­வர்­க­ளி­டையே கல்வி கற்­பது குறித்த ஆர்­வத்தை முயற்­சியை உரு­வாக்­கி­யி­ருந்­தது. அத­னால் மருத்­து­வக் கல்­லூ­ரி­யி­லும் எளிய குடும்­பத்து மாண­வர்­கள் இடம்­பெற்று வந்­தார்­கள். இதன் விளை­வாக பொது சுகா­தா­ரத்­து­றை­யும் சமூக அக்­க­றை­யு­டன் செயல்­ப­டு­வது சாத்­தி­ய­மா­னது. ஏனெ­னில் எளிய பின்­ன­ணி­யி­லி­ருந்து வந்த மருத்­து­வர்­களே முக்­கிய நிர்­வா­கப் பொறுப்­பு­க­ளுக்கு வரும்­போது அவர்­கள் மக்­க­ளின் சுகா­தா­ரத் தேவை­கள் குறித்த விழிப்­பு­ணர்­வு­டன் இயங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">நான்2005-ஆம் ஆண்டு கள ஆய்­விற்­காக ஒரு குக்­கி­ரா­மத்­திற்கு சென்­ற­போது அங்கே ஒரு­வரை சந்­தித்­தேன். அவர் சாலைப்­ப­ணிக்­காக ஒப்­பந்­தக்­கா­ர­ரின் உத­வி­யா­ள­ராக வட மாநி­லங்­க­ளில் பணி­யாற்­றி­யி­ருந்­தார். அவர் என்­னி­டம் வட மாநி­லங்­க­ளுக்­கும், தென் மாநி­லங்­க­ளுக்­கும் என்ன வேறு­பாடு என்று எளி­மை­யாக விளக்­கி­னார். “சார் தமிழ்­நாட்­டில் ஆரம்ப சுகா­தார நிலை­யங்­க­ளில் மருத்­து­வர்­கள் இல்லை. மருந்­து­கள், சிகிச்சை வச­தி­கள் இல்லை என போரா­டு­வார்­கள். வட மாநி­லங்­க­ளில் ஆரம்ப சுகா­தார நிலை­யம் என்று ஒன்றை அரசு உரு­வாக்க வேண்­டும் என்­பதே அவர்­க­ளுக்­குத் தெரி­யாது” என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இதைத்­தான் அதே ஆண்டு தென் மாநி­லங்­க­ளை­யும், வட மாநி­லங்­க­ளை­யும் வளர்ச்சி, அர­சி­யல் தன்­னு­ணர்வு ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் ஒப்­பிட்ட பிரின்ஸ்­டன் கல்­லூரி பேரா­சி­ரி­யர் பிரேர்னா சிங்­கும் தன் ஆய்­வில் விரி­வாக எழு­தி­யுள்­ளார். தமிழ்­நாட்டு பொரு­ளா­தார ஆய்­வா­ளர்­கள் கலை­ய­ர­ச­னும், விஜய்­பாஸ்­க­ரும் எழு­திய Dravidian Model: Interpreting Political Economy of Tamil Nadu நூலி­லும் சமூக நீதி தன்­னு­ணர்­வுக்­கும், பொது சுகா­தா­ரத் துறை­யின்வளர்ச்­சிக்­கும் உள்ள தொடர்பை விளக்கி எழு­தி­யுள்­ள­னர்.  
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">தமிழ்­நாட்­டின் சமூக நீதி தன்­னு­ணர்­வுக்­காக வாழ்­நாள் முழு­வ­தும் உழைத்­த­வர் பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரி­யார். அத­னால்­தான் இந்த மாநி­லத்தை பெரி­யார் மண் என்று சொல்­கி­றோம். அப்­ப­டிப்­பட்ட வர­லாற்­றைக் கொண்ட மாநி­லத்­தில் ஒன்­றிய அரசு தன் மேலா­திக்க மனோ­பா­வத்­தி­னால் மக்­கள் விரோத நீட் தேர்வை திணித்­தால் எதிர்ப்பு உரு­வா­கத்­தான் செய்­யும். தந்தை பெரி­ யாரின் பணியை அவ­ருக்­குப் பின் அரை நூற்­றா ண்­டுக்­கா­ல­ மாக செய்து வரும் ஆசி­ரி­யர் வீர­மணி அந்த எதிர்ப்­பின் நெருப்பை அணை­யா­மல் காப்­பது இயல்பே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">அத­னால்­தான் கடந்த பத்­தாண்­டு­க­ளாக திரா­வி­டர் கழ­கம் நீட் தேர்வை எதிர்த்து பல­வி­த­மான பிர­ச்சா­ரப் பய­ணங்­களை மேற்­கொண்டு வரு­கி­றது. தி.மு.க முத­லி­லி­ருந்தே திரா­வி­டர் தன்­னு­ணர்வு என்­னும் இரட்­டைக் குழல் துப்­பாக்­கி­யில் திரா­வி­டர் கழ­கத்­தின் மற்­றொரு குழல். அ.இ.அ.தி.மு.க அர­சிற்கு தி.மு.க-வு­டன் எத்­தனை முரண்­பாடு இருந்­தா­லும் திரா­வி­டர் கழ­கத்­தின் பிர­சா­ரத்­திற்கு இடை­யூறு செய்ய நினைக்க மாட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">நடி­கர் விஜய் தனக்கு நிறைய ரசி­கர்­கள் உண்டு என்­ப­தால் அவர்­கள் ஆத­ர­வில் அர­சி­யல் கட்சி துவங்கி முதல்­வ­ராக ஆசைப்­பட்­டார். மக்­க­ளாட்­சி­யில் அதற்கு தடை கிடை­யாது. ஆனால் அவ­ருக்கு அர­சி­யல் தன்­னு­ணர்வு எல்­லாம் கிடை­யாது என்­ப­தால் சில ஆலோ­ச­கர்­கள், பயிற்­சி­யா­ளர்­களை நிய­மித்­துக் கொண்­டார். அரி­ய­லூர் அனிதா உயிர் நீத்­த­போது அவர் இல்­லத்­திற்கு அந்த ஆலோ­ச­கர்­கள் அறி­வு­ரை­யின் பேரில் சென்று, அவர்­கள் கூறி­ய­ப­டியே தரை­யில் அமர்ந்து ஆறு­தல் கூறி­விட்டு வந்­தார். அதி­லி­ருந்து தனக்­கும் நீட் தேர்­வில் உடன்­பாடு கிடை­யாது என்­றும் கூறி வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">அவர் கட்சி தொடங்­கி­ய­போது பெரி­யார் பெய­ரைச் சொல்­லா­மல் ஆத­ரவு கிடைக்­காது என்­ப­தால் கொள்­கைத் தலை­வர்­க­ளில் அவ­ரும் ஒரு­வர் என்­றார். ஆனால் வச­தி­யாக அவ­ரு­டைய கட­வுள் மறுப்­பில் உடன்­பாடு கிடை­யாது; சமூக நீதி தத்­து­வத்­தில் உடன்­பாடு உண்டு என்று சொல்­லி­வைத்­தார். அப்­போ­து­தான் தன் நாயக பிம்ப வழி­பாட்­டை­யும், கட­வுள் வழி­பாட்­டை­யும் இணைத்து பகுத்­த­றிவை பலி­யிட முடி­யும் என்ற அவர் ஆலோ­ச­கர்­க­ளின் வழி­காட்­டு­தல்­தான் கார­ண­மாக இருக்­க­லாம். அவ­ருக்­குச் சொந்­த­மாக, அந்த அளவு சிந்­திக்­கத் தெரி­யும் என்­ப­தற்­கான சான்­று­கள் எது­வும் இன்­று­வரை கிடைக்­க­வில்லை. தேர்­த­லில் வெற்­றி­பெற்­ற­தும் திட­லுக்­குச் சென்று ஆசி­ரி­ய­ரி­டம் வாழ்த்­துக்­கூட பெற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">இவ்­வ­ள­வும் செய்­து­விட்டு எதற்­காக பிர­ச்சா­ரப் பய­ணத்தை முடக்க வேண்­டும்? திட­லுக்கு போலீசை அனுப்­ப­வேண்­டும்? விஜய்க்கே இதெல்­லாம் தெரி­யுமா, இந்த முடி­வு­களை யார் எடுக்­கி­றார்­கள் என்­பதே ஒரு மர்­மம்­தான். ஏனெ­னில் அவர்­தான் பேசு­வதே இல்­லையே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">திருப்­ப­திக்­குச் சென்ற பட்­ஜெட்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">ஒரு பக்­கம் திட­லுக்கு போலீஸ் சென்­றால், மறு­பக்­கம் வேளாண்­துறை அமைச்­சர் அவர் தாக்­கல் செய்­யப்­போ­கும் வேளாண் துறை நிதி­நிலை அறிக்­கை­யின் வரைவு நக­லு­டன் திருப்­பதி கோயி­லுக்­குச் சென்று, அதனை சந்­நி­தி­யில் வைத்து வழி­பட்­டுள்­ளார். அது முழு நகலா, குறிப்­பு­களா என்­ப­தல்ல பிரச்­சினை. எதற்­காக அரசு ஆவ­ணத்தை கோயி­லுக்கு எடுத்­துச் செல்­கி­றார் என்­ப­து­தான் கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">மதச்­சார்­பின்மை என்­றால் என்ன? தனி நபர்­க­ளுக்கு மத நம்­பிக்கை இருக்­க­லாம். அர­சிற்கு எந்த ஒரு குறிப்­பிட்ட மதச்­சார்­பும் இருக்­கக் கூடாது என்­ப­து­தானே? இவர் திருப்­பதி கோயி­லுக்கு எடுத்­துச் சென்­றால் நிதி­ய­மைச்­சர் வேளாங்­கண்­ணிக்கு எடுத்­துச் செல்­வாரா? அரசு என்­பது அனைத்து மக்­க­ளுக்­கும் பொது­வா­னது. அதில் இறை­நம்­பிக்கை இல்­லாத பெரி­யா­ரி­யர்­க­ளும் இருப்­பார்­கள். அவர்­கள் மன­மெல்­லாம் இது போன்ற செயல்­க­ளால் புண்­ப­டாதா? நானும் ஒரு வாக்­கா­ளன்­தான். எனக்கு இறை நம்­பிக்கை கிடை­யாது. என்­னு­டைய அரசு எப்­படி நிதி­நிலை அறிக்­கையை ஆல­யத்­தில் வைத்து வழி­ப­ட­லாம்? இது என்ன அமைச்­சர் வினோத்­தின் இல்ல நிகழ்ச்­சியா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">மேலும் இறை­நம்­பிக்­கை­யா­ளர்­களே இவ்­வி­தம் செய்ய மாட்­டார்­கள். மூத­றி­ஞர் ராஜாஜி இருந்­தார். அவர் இறை நம்­பிக்­கை­யா­ளர்­தான். ஆனால் அவர் இதைச் செய்ய மாட்­டார். ஏனெ­னில் இறை நம்­பிக்கை வேறு, மூட நம்­பிக்கை வேறு. இறை நம்­பிக்கை இருந்­தால் மன­தி­னுள் வழி­ப­ட­லாம். அமைச்­சர் தனிப்­பட்ட முறை­யில் கோயி­லுக்­குச் சென்று வர­லாம். அரசு ஆவ­ணத்தை அங்கு கொண்டு செல்­வ­தன் தேவை என்ன? இது மூட நம்­பிக்கை; இறை நம்­பிக்­கை­யல்ல. மனி­த­னின் செயல்­க­ளுக்கு கட­வு­ளைப் பொறுப்­பாக்­கு­வது மூட நம்­பிக்கை. தங்­கள் செய­லுக்கு மனி­தர்­கள் பொறுப்­பேற்க வேண்­டும்; அவர்­கள் ஆற்­றலை மீறிய செயல்­க­ளுக்கு இறை­வன் துணை இருக்க வேண்­ட­லாம். இந்த வேறு­பாடு கூட தெரி­யாத ஒரு கூட்­டம்­தான் பெரி­யார் பெய­ரைச் சொல்­லிக்­கொண்டு ஆட்­சிக்கு வந்­துள்­ளது. அவ­மா­னம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.8">கர்­நா­டக விஜய மர்­மம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">ஜூன் 12 விவ­சா­யத்­திற்கு திறந்­து­விட மேட்­டூர் அணை­யில் தண்­ணீ­ரில்லை. காவிரி டெல்டா மாவட்­டங்­க­ளில் விவ­சா­யி­கள் தவிக்­கி­றார்­கள். திருப்­பதி சென்ற வேளாண் அமைச்­சர் வினோத் டெல்டா மாவட்­டங்­க­ளுக்­குச் செல்­ல­வில்லை. விவ­சா­யி­கள் துயரை அறி­ய­வில்லை; துயர் நீக்க எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை. அதற்­குப் பதில் முதல்­வர் விஜய் பெங்­க­ளூர் போகப் போகி­றார் என்­றார். உடனே அமைச்­சர் ராஜ­மோ­கன் முரண்­பட்டு முதல்­வரே சொன்­னால்­தான் அது உறு­தி­யான தக­வல். பிறர் கூறி­னால் அதை நம்­ப­வேண்­டாம் என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">அதை­ய­டுத்து கர்­நா­டக முதல்­வர் டி.கே.சிவ­கு­மார் ‘விஜய் பேச்­சு­வார்த்­தைக்கு வரு­கி­றேன் என்­கி­றார். நான் ஹெலி­காப்­டர்­கள் தயா­ராக வைத்­துள்­ளேன். அவ­ரைக் கூட்­டிச் சென்று வறண்ட நிலங்­க­ளைக் காட்­டு­கி­றேன்’ என்­றார். உடனே தமிழ்­நாட்­டில் அனைத்­துக் கட்சி தலை­வர்­க­ளும் காவிரி ஆணை­யம் தீர்ப்பு வழங்­கிய பிறகு எதற்கு பேச்­சு­வார்த்தை, முத­லில் தண்­ணீர் திறந்­து­வி­டச் சொல்­ல­வேண்­டும் என்று அறிக்கை விட்­டார்­கள். அதற்­கும் விஜய் எது­வும் கூற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">அடுத்த நாள் விஜய் அமைச்­சர்­கள், அதி­கா­ரி­க­ளு­டன் பேசு­கி­றார்; பதி­மூன்று பேர் கொண்ட குழு பெங்­க­ளூர் செல்­லப்­போ­கி­றது என்று கூறப்­பட்ட து அல்­லது தக­வல் கசி­ய­வி­டப்­பட்­டது. அது­வும் அதி­கா­ர­பூர்­வ­மான தக­வல் அல்ல. மதி­யம் டி.கே.சிவ­கு­மார் ‘‘இப்­போ­தைக்கு விஜய் வரு­வது நல்­ல­தல்ல. இங்கே சூழ்­நிலை சரி­யில்லை என்­ப­தால் பிறகு பார்த்­துக்­கொள்­ள ­லாம்’’ என்று அறி­வித்­தார். அதற்­கும் தமிழ்­நாடு அரசு சார்­பில் எந்த பதி­லும் கூறப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">காவிரி பிரச்­சினை என்ன விஜ­யின் சொந்த திரைப்­பட விவ­கா­ரமா– அவர் தன் விருப்­பப்­படி திட்­ட­மிட?  முதல்­வர் என்­ப­வர் மன்­ன­ரல்ல, மக்­கள் ஊழி­யர். அவ­ரு­டைய பதவி மக்­கள் பொது­வெளி அலு­வல் (public office). அவர் எடுக்­கும் முடி­வு­கள் மக்­க­ளுக்­குத் தெரி­விக்­கப்­பட வேண்­டும். அண்டை மாநில முதல்­வர் சொல்­லித்­தான் தமிழ்­நாட்டு மக்­கள் தெரிந்­து­கொள்ள வேண்­டும் என்­றால் விஜய்க்­கும் அவர்­க­ளுக்­கும் என்ன உறவு? எது என்ன அகந்­தையா, அறி­யா­மையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.3">முதல்­வர் விஜய்க்­குத்­தான் பேச வராது. அரசு செய்­திக்­கு­றிப்­பா­வது வெளி­யி­ட­லாமே? கர்­நா­டக முதல்­வ­ரி­டம் பேச்­சு­வார்த்­தைக்கு ஒப்­பு­தல் கேட்­கப்­பட்­டுள்­ளது என்று செய்­திக்­கு­றிப்பு வெளி­யி­ட­லாமே? முதல்­வ­ரின் பொது­வெளி செயல்­பா­டு­கள் அனைத்­தும் மக்­க­ளுக்­குத் தெரி­விக்­கப்­பட வேண்­டும் அல்­லவா? இந்த அரசு செயல்­ப­டு­கி­றதா, எப்­படி செயல்­ப­டு­கி­றது என்­பதே மர்­ம­மாக இருக்­கி­றது. தமிழ்­நாட்டு நல­னில் அக்­கறை கொண்­டோர் இன்­னும் எத்­தனை காலம் இதனை அனு­ம­திக்­கப் போகி­றார்­கள் என்று தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">நன்றி :</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">“மின்­னம்­ப­லம்’’ இணை­ய­த­ளம்
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>