<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,64,957,832" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Aug 09 2026 04:02:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260809T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="09082026-VLR-03" position.sequence="03" ex-ref="09082026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="88">விஜய் கூட்டத்தின் பொய்களை, த.வெ.க ஆட்சியே நொறுக்கிவிட்டது! </lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup833178_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">தனது கட்­சிக்­குக் கொள்­கைத் தலை­வர்­கள் என்று 5 பேரை அறி­வித்­தார் விஜய். ஆனால், அவர்­க­ளுக்­கும் அந்­தத் தலை­வர்­க­ளுக்­கும் எந்­தச் சம்­பந்­த­மும் கிடை­யாது. அவர்­க­ளைப் பற்றி அவ­ருக்­கும் எது­வும் தெரி­யாது. அவ­ரு­டைய ரசி­கர்­க­ளுக்­கும் தெரி­யாது. விஜய்க்­கும் அவ­ரது கூட்­டத்­திற்­கும் தெரிந்­தது பொய்..  பொய்.. பொய்.. அந்­தப் பொய்­க­ளைப் பரப்­பு­வ­து­தான் அவர்­க­ளின் ஒரே கொள்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2024 நாடா­ளு­மன்­றத்  தேர்­த­லுக்கு முன்பே த.வெ.க. என்ற கட்­சி­யைத் தொடங்­கு­வ­தாக அறி­வித்த விஜய், நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் பங்­கெ­டுக்­கா­மல், அதைத் திட்­ட­மிட்டு தவிர்த்­து­விட்டு, சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தன் கட்­சி­யைப் பங்­கெ­டுக்­கச் செய்­தார். அதற்­குக் கார­ணம், இப்­போ­தும் அவ­ரது ஆட்­சி­யைத் தன் விருப்­பப்­படி இழுத்­துப் பிடிக்­கும் டெல்லி பா.ஜ.க.வின் உத்­த­ர­வுப்­ப­டி­தான்!   ஆனால், இது வெளிப்­ப­டை­யாக வெளியே தெரிந்து விடக்­கூ­டாது என்­ப­தற்­காக, ‘த.வெ.க.வின் கொள்கை எதிரி பா.ஜ.க.’ என்று பேசி­னார். பேசி­யது மட்­டும்­தான். செய­லில் கொள்கை எதி­ரியை விமர்­சிக்­க­வில்லை. ஏன், ‘பா.ஜ.க.’ என்ற பெய­ரைக் கூட உச்­ச­ரிப்­ப­தற்கு இன்று வரை தொடை­ந­டுங்­கும் கட்­சி­யாக த.வெ.க இருக்­கி­றது. கொள்கை எதி­ரியை விமர்­சிக்க மாட்­டோம்-­அந்­தக் கட்­சி­யின் பெய­ரையே சொல்ல மாட்­டோம் என்­ப­து­தான் த.வெ.க.வின் கொள்­கை­யாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">பாசி­சமா? பாயா­சமா? என்று பா.ஜ.க. வின் ஜன­நா­யக விரோ­தச் செயல்­பா­டு­களை எளி­தா­கக் கடந்து சென்ற விஜய்­யின் நோக்­கம், தி.மு.க.வை நோக்­கிப் பொய்­க­ளைப் பரப்­பு­வ­தும், அதனை தன் ரசி­கர் கூட்­டத்­தின் மூல­மாக சமூக வலைத்­த­ளங்­க­ளில் பரப்­பு­வ­தும், அதற்­கா­கவே இரண்டு மூன்று நிறு­வ­னங்­களை வைத்­தி­ருப்­ப­தும்­தான். 2026 சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்கு முன்­பாக அவர் பரப்­புரை செய்த விரல் விட்டு எண்­ணக் கூ­டிய ஊர்­க­ளில் தி.மு.க. வுக்கு எதி­ராக 
மட்­டுமே பேசி­னார். அது­வும் பொய்ப் பொய்­யா­கப் பேசி­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.முக. ஆட்­சி­யில் சட்­டம்-­ஒ­ழுங்கு கெட்­டு­விட்­ட­தாக ஆதா­ர­மின்றி விஜய் பேசி­யதை அவ­ரது ‘விர்ச்­சு­வல் வாரி­யர்ஸ்’ எனப்­ப­டும் சமு­க­வ­லை­த­ளக் கூட்­டம் வகை­தொ­கை­யில்­லா­மல் பரப்­பி­யது. பெண்­க­ளுக்­குத் தமிழ்­நாட்­டில் பாது­காப்­பிலை என்­றும், நட­மா­டவே முடி­ய­வில்லை என்­றும் விஜய் அடுத்­த­டுத்­தப் பொய்­களை அவிழ்த்­து­விட அதை­யும் பரப்­பி­யது அவ­ரது கூட்­டம்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">இந்­தி­யா­வி­லேயே பெண்­கள் பாது­காப்­பாக வாழக்­கூ­டிய முதல் 10 நக­ரங்­க­ளில் 6 நக­ரங்­கள் தமிழ்­நாட்­டில்­தான் இருக்­கின்­றன என்­கிற ஆய்­வ­றிக்­கை­க­ளுக்கு மாறாக, விஜய்­யின் பொய் அறிக்கை பரப்­பப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எல்­லா­வற்­றுக்­கும்  மேலாக, கரூ­ரில் தன்­னைப் பார்க்க வந்து கூட்ட நெரி­ச­லில் 41 உயிர்­கள் பலி­யா­ன­தற்­குக்­கூட பொறுப்­பேற்­கா­மல் தி.மு.க. மீது பழி­யைப் போட்­டார் விஜய். அத்­து­டன், பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் இரட்டை இலக்­கத்தை எட்­டிய இந்­தி­யா­வின் ஒரே மாநி­ல­மா­கத் தமிழ்­நாட்டை உரு­வாக்­கிக் காட்­டிய திரா­விட மாடல் ஆட்­சி­யின் மீது, கடன் சுமையை ஏற்றி வைத்த அரசு என்ற அவ­தூறை விஜய்­யும் அவ­ரது கூட்­ட­மும் திட்­ட­மிட்டே பரப்­பி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">‘’தமிழ்­நாடு அர­சின் கடன் வாங்­கும் எல்லை எது­வரை உள்­ளது, அதில் தி.மு.க. ஆட்­சிக்­கா­லத்­தில் வாங்­கிய கடன் அந்த எல்­லைக்­குட்­பட்டு இருந்­ததா? எல்­லை­யைத் தாண்டி இருந்­ததா? மாநில அர­சின் நிர்­வா­கத்­திற்­காக வாங்­கப்­பட்ட கடன் தொகை எவற்­றில் முத­லீடு செய்­யப்­பட்­டது? அது என்­னென்ன வகை­யில் மக்­க­ளுக்­குப் பயன் தரும் திட்­டங்­க­ளாக மாறின?’’ என்­பவை அனைத்­தும் வெளிப்­ப­டை­யா­கவே உள்­ளன. அப்­படி இருந்­தும், விஜய் கூட்­டம் கடன் சுமை பற்­றிய பொய்யை மட்­டுமே 
பரப்­பி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­ச­ரா­கப் பத­வி­யேற்­றுக் கொண்ட விழா மேடை­யி­லும் கடன் பாட்­டு­தான் பாடி­னார் விஜய். ‘‘பத்­தரை  இலட்­சம் கோடி கடனை வைத்­து­விட்­டுப் போய்­விட்­டார்­கள்’’ என்று 
தி.மு.க. அரசு மீது குற்­றம் சாட்­டி­னார். அது குற்­றச்­சாட்டு மட்­டு­மல்ல,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தன் மீது நம்­பிக்கை வைத்து வாக்­க­ளித்­த­வர்­களை ஏமாற்­று­வ­தற்­கான அடை­யா­ளச் சீட்டு. அவர் அள்­ளி­விட்ட வாக்­கு­று­தி­கள் எதை­யும் நிறை­வேற்­றப் போவ­தில்லை என்­பதை, சொல்­லா­மல் சொல்­லித் தப்­பிப்­ப­தற்­கான கார­ணம்­தான் அது. அன்றே நம் திரா­விட நாய­க­ரான கழ­கத் தலை­வர், ‘’தமிழ்­நாடு அர­சி­டம் போது­மான அள­வில் பணம் உள்­ளது, திட்­டங்­களை நிறை­வேற்ற மனம்­தான் வேண்­டும்’’ என்று நெற்­றிப் பொட்­டில் அடிப்­பது போல தன் கருத்­தைப் பதி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தி­யா­வில் எந்த மாநி­ல­மும் கடன் வாங்­கா­ததுபோல­வும், இந்­திய ஒன்­றிய அர­சும் கடனே இல்­லா­மல் திட்­டங்­க­ளைத் தீட்­டு­வது போல­வும், தமிழ்­நாட்டை 5 ஆண்­டு­கள் ஆட்சி செய்த ‘திரா­விட நாய­கர்’ தலை­மை­யி­லான தி.மு.க ஆட்­சி­தான் இவ்­வ­ளவு கடனை வாங்கி வைத்­தது போல­வும், த.வெ.க ஆட்­சி­யில் கடன் இல்­லா­மல் கஜா­னா­வில் பணத்தை நிரப்பி வைத்­து­வி­டு­வது போல­வும் பாவ்லா செய்­தது விஜய் கூட்­டம். அது­மட்­டு­மல்ல, தமிழ்­நாடு அர­சின் கடன் தொகை­யான பத்­தரை இலட்­சம் கோடி ரூபாயை மாநி­லத்­தின் மக்­கள் தொகை எண்­ணிக்­கைக்­கேற்ப பிரித்து, ஒவ்­வொ­ரு­வர் தலை­யி­லும் ஏறத்­தாழ 1 இலட்­சத்து 25 ஆயி­ரம் ரூபாய் கடனை தி.மு.க. அரசு ஏற்றி வைத்­தி­ருக்­கி­றது என்று த.வெ.க.வின் பொய் உற்­பத்தி நிறு­வ­னங்­கள் தொடர்ந்து பரப்பி வந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பிறக்­கப் போகும் குழந்­தை­யின் பிஞ்­சுத் தலை­யி­லும் 1,25,000 ரூபாய் கடன் என்­பது போல ‘மீம்ஸ்’ போட்டு விமர்­சித்­தார்­கள். தங்­களை அறி­வா­ளி­கள் போல நினைத்­துக் கொள்­ளும் கோமா­ளிக் கூட்­டத்­தில் முற்­றிப் போன சிலர், இந்­தத் தொகைக்­கான காசோலை அல்­லது வரை­வே­லையை அமைச்­சர்­க­ளி­டம் கொடுப்­பது போல­வும், அர­சுக்கு அனுப்பி வைப்­பது போல­வும் ரீல்ஸ் போட்டு, “என் கடனை நான் அடைத்­து­விட்­டேன்” என்று கிச்­சு­மூச்சு மூட்­டி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டி­யெல்­லாம் ஒரு மாநி­லத்­தின் கடனை அடைக்க முடி­யாது என்­பதை உணர்ந்­த­வர்­க­ளான உண்­மை­யான பொரு­ளா­தார வல்­லு­நர்­கள், த.வெ.க ஆட்­சி­யால் தமிழ்­நாட்­டில் ஏற்­பட்­டி­ருக்­கும் அவல நிலை­யைக் கண்டு பத­றி­னார்­கள். விஜய் நடித்த ‘தமி­ழன்’ என்ற படத்­தில், நாட்­டின் கட­னில் ஒரு குடி­ம­கன் தன் பங்கை அடைப்­பது போல ஒரு காட்சி உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சினி­மாவை நம்பி வாக்­க­ளித்­த­வர்­கள், சினிமா காட்சி போலவே செயல்­பட முனைந்­தி­ருக்  கி­றார்­கள். இவ்­வ­ள­வு­தான் விஜய் கூட்­டத்­தின் பொரு­ளா­தார அறிவு.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆட்­சி­யைப் பிடிப்­ப­தற்கு த.வெ.க.வினர் என்­னென்ன பொய்­க­ளைத் திட்­ட­மிட்டு, கட்­ட­மைப்­பு­டன் பரப்­பி­னார்­களோ, எத்­த­கைய சதிக்­கோட்­பா­டு­களை உரு­வாக்­கி­னார்­களோ, அவை­ ய­னைத்­தும் அவர்­கள் ஆட்­சி­யில் அவர்­க­ளையே திருப்­பித் தாக்­கு­கி­றது. ‘கட்டி வைத்த பொய்க் கோட்­டை­கள்’ தகர்ந்து தரை­மட்­ட­மா­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க ஆட்­சி­யில் பார்ட்டி ஃபண்ட் என 30% வசூ­லிக்­கப்­பட்­ட­தா­க­வும், அதைத் தவிர்த்­தாலே தங்­கள் வாக்­கு­று­தி­க­ளை­யெல்­லாம் நிறை­வேற்றி விட முடி­யும் என்­றும் விஜய் தொடங்கி, அவரை மிஞ்­சிய அவ­ரு­டைய அமைச்­ச­ரவை சகாக்­கள் கூவிக்­கொண்டே இருந்­த­னர். அரசு வழக்­க­றி­ஞர்­கள் நிய­ம­னம், குவா­ரி­க­ளில் ஆய்வு என்ற பெய­ரில் வசூல், செங்­கல் சூளை, வாரச்­சந்தை வரை விட்டு வைக்­காத த.வெ.கவி­ன­ரின் மாமூல் என எல்­லாப் பக்­க­மும் இந்த ஆட்­சி­யில் பார்ட்டி ஃபண்ட்­தான். இவை குறித்து சொந்­தக் கட்­சிக்­கா­ரர்­களே புகார் செய்­தும் நட­வ­டிக்கை இல்லை. தி.மு.க ஆட்சி குறித்த த.வெ.கவின் விமர்­ச­னத்­தில் உண்மை இருந்­தி­ருந்­தால், முதல் பட்­ஜெட்­டி­லேயே உபரி வரு­வா­யைப் பெருக்கி வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­யி­ருக்­க­லாமே? ஏன் செய்ய முடி­ய­வில்லை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">த.வெ.க அர­சின் முதல் பட்­ஜெட்­டில் உள்ள வரு­வாய்ப் பற்­றாக்­கு­றையை சமா­ளிக்க ஏறத்­தாழ 1இலட்­சத்து 73ஆயி­ரம் கோடி ரூபாய் கடன் வாங்­கப் போவ­தும் பட்­ட­வர்த்­த­ன­மாக வெளிப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">விஜய் அளித்த வாக்­கு­று­தி­க­ளான ஆண்­டுக்கு 6 சிலிண்­டர், மக­ளி­ருக்கு மாதம் 2500 ரூபாய், மாநி­லம் முழு­வ­தும் மக­ளி­ருக்­கான இல­வச பஸ் பய­ணம், பட்­ட­தாரி இளை­ஞர்­க­ளுக்கு மாதம் 4000 ரூபாய், முழு­மை­யான பயிர்க் கடன் ரத்து உள்­ளிட்ட எது­வுமே பட்­ஜெட்­டில் இடம்­பெ­றாத நிலை­யில் எதற்­காக புதி­தாக 1 இலட்­சத்து 73ஆயி­ரம் கோடி ரூபாய் கடன் வாங்க வேண்­டும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த 20ஆண்­டு­க­ளில் பள்­ளிக்­கல்­விக்­கான நிதி குறைக்­கப்­பட்­டி­ருப்­பது இது­தான் முதல் முறை. தி.மு.க அர­சின் 2026ஆம் ஆண்­டுக்­கான இடைக்­கால பட்­ஜெட்­டில் ஒதுக்­கப்­பட்ட தொகை­யை­விட 4 ஆயி­ரம் கோடி ரூபாய் த.வெ.க.வின் பட்­ஜெட்­டில் குறை­வாக ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. தி.மு.க. ஆட்­சி­யின் உப­ரி­யாக மதிப்­பீடு செய்து கூடு­தல் நிதி ஒதுக்­கி­ய­தா­க­வும், தற்­போது சரி­யான மதிப்­பீட்­டு­டன் நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தால் இந்­தக்குறை­வான ஒதுக்­கீடு சரி­தான் என்­றும் பள்­ளிக்­கல்­வித் துறை அமைச்­சர் வியாக்­யா­னம் செய்­தி­ருக்­கி­றார். கல்­வித்­துறை போல மேலும் சில துறை­க­ளுக்­கும் நிதி ஒதுக்­கீடு குறைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">முறை­யான மதிப்­பீட்­டின் அடிப்­ப­டை­யில் நிதி­யைக் குறைத்து ஒதுக்­கி­னால் எதற்­காக 1 இலட்­சத்து 73ஆயி­ரம் கோடி ரூபாய் கடன் வாங்க வேண்­டும்? யாரு­டைய இலா­பத்­திற்­காக கடன் வாங்­கு­கி­றது த.வெ.க அரசு? இந்­தக் கூடு­தல் கடன் தொகையை ‘தாய்­மா­மன் சீர்’ மோதி­ரம் திட்­டத்­தில் பயன் பெறும் மற்­றும் பயன்­பெற முடி­யாத அனைத்­துக் குழந்­தை­க­ளின் தலை­யி­லும் ஏற்­று­கி­றதா விஜய் அரசு?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாநில அர­சின் கடன் பற்றி எந்த நிர்­வாக அறி­வு­மின்றி, தனக்­கா­கக் கூடும் கூட்­டத்தை உணர்ச்­சி­வ­சப்­ப­டுத்­து­வ­தற்­காக தி.மு.க ஆட்சி மீதான பொய்­க­ளைக் கட்­ட­மைத்­தது விஜய்­யும் அவர் கூட்­ட­மும். இப்­போது அவர் தலை­மை­யி­லான த.வெ.க அரசே அந்த பொய்­க­ளைத் தகர்ப்­ப­தைக் கண்­கூ­டா­கப் பார்க்­கும் காலம் அமைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­தும் வெள்ளை அறிக்கை என்ற அரை­குறை அறிக்­கையை வெளி­யிட்டு புதிய பொய்­க­ளைக் கட்­ட­மைத்­தார். ஆனால், 2026 இடைக்­கால பட்­ஜெட்­டுக்கு முன்­பாக</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தி.மு.க அரசு வெளி­யிட்ட பொரு­ளா­தார ஆய்­வ­றிக்கை தான் தமிழ்­நாட்­டின் நிர்­வா­கத்­திற்­கான ஆதார ஆவ­ண­மாக நிலைத்து நிற்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">த.வெ.க அர­சின் வெள்ளை அறிக்கை வெளி­யான நாளி­லேயே திரா­விட மாடல் ஆட்­சி­யில் நிதி­ய­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்று சிறப்­பா­கச் செயல்­பட்ட தங்­கம் தென்­ன­ரசு அவர்­கள் ஊட­கத்­தி­ன­ரைச் சந்­தித்து, ‘’இது வெள்ளை அறிக்­கை­யல்ல, வெற்று அறிக்­கை­தான் என்­பதை ஆதா­ரங்­க­ளு­டன் நிரூ­பித்­த­து­டன், த.வெ.க ஆட்சி ஒரு­வேளை 5 ஆண்­டு­களை நிறைவு செய்­தால் அப்­போது, தமிழ்­நாடு அர­சின் கடன்­தொகை தற்­போ­துள்­ள­தை­விட இரு மடங்கு இருக்­கும் என்று அறை­கூ­வல் விடுத்­துச் சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">பத­வி­யேற்ற நாளில் அவர் பேசிய ‘பஞ்ச் டய­லாக்’ என்­பது, தன்னை நம்­பிய கூட்­டத்­தின் முன் அவர் போட்ட வெற்­றுக் கூச்­சல் என்­பது நிரூ­ப­ண­மா­கி­விட்­டது. விஜய் கூட்­டம் கட்­ட­மைத்த அத்­தனை பொய்­க­ளும் த.வெ.க.வின் சொற்ப ஆட்­சிக்­கா­லத்­திற்­குள்­ளா­கவே நொறுங்கி விழப் போவதை விஜய் பார்க்­கத்­தான் போகி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்டை ஆட்சி செய்த எந்த முத­ல­மைச்­ச­ரும் ஒரே ஆண்­டில் இந்த அளவு கடன் வாங்­க­வில்லை என்­கிற வகை­யில் வர­லாற்­றுச் சாதனை மிக்க  கடன் தொகையை மாநி­லத்­தின் மீது ஏற்­றி­யி­ருக்­கி­றார் விஜய்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>