<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,263,959,1117" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Aug 10 2026 14:30:39 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260811T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="11082026-TRY-07" position.sequence="07" ex-ref="11082026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் - மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. நிகழ்ச்சி ஏற்பாட்டில் நடைபெற்ற –    “முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நாள் மாபெரும் கருத்தரங்கில்” இந்து என்.ராம் உறுதி!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ram_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">சென்னை, ஆக. 11 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்­பில் – மாவட்­டச் செய­லா­ள­ரும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான பி.கே.சேகர்­பாபு  எம்.எல்.ஏ.வின் சிறப்­பான நிகழ்ச்சி ஏற்­பாட்­டில் நடை­பெற்ற,- “முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் நினைவு நாள் மாபெ­ரும் கருத்­த­ரங்­கில்” சிறப்­பு­ரை­யாற்­றிய இந்து என்.ராம் அவர்­கள், “தமிழ்­நாட்­டில் கலை­ஞ­ரு­டைய இடத்தை யாரா­லும் நிரப்ப முடி­யாது.” என்­றும்  “மு.க.ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யில், கலை­ஞர் அவர்­கள் காட்­டிய பாதை­யில் தி.மு.க. தொடர்ந்து சிறப்­பாக இயங்­கும் !” என்­றும் உறு­தி­ப­டக் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­நி­கழ்­வில் இந்து என். ராம் அவர்­கள் ஆற்­றிய உரை வரு­மாறு :- –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞர் தொட்ட துறை­க­ளில் எல்­லாம் முத்­திரை வைத்­தார். சிறு­க­தை­கள், நாவல்­கள், நாட­கம் இதெல்­லாம் தெரிந்த விஷ­யம்­தான். இருந்­தா­லும், அதை மீண்­டும் ஆய்வு செய்­வ­து­போன்று இன்­றைக்கு சொல்­கி­றோம். நாட­கங்­கள், திரைப்­ப­டம், வச­னம் எழு­து­வது என அனைத்­துத் துறை­க­ளி­லும் அவர் சிறந்த முறை­யில் செய­லாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞர் பற்றி அனை­வ­ருக்­கும் தெரிந்த விஷ­யம், அவர் “Not born with a silver spoon”. நிலப்­பி­ர­புத்­து­வம் மேலோங்கி இருந்த ஒரு தஞ்சை மாவட்­டத்­தில் தனது சாத­னை­களை நிகழ்த்­தி­னார். சிறு வய­தி­லி­ருந்தே, அது ஒரு பெரிய சவால்; போராட்­டம்­தான். அதற்கு கார­ணம் அவரே சொல்­லி­யி­ருக்­கி­றார், “உழைப்பு, உழைப்பு, உழைப்பு!”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்­ன­தான் பெரிய மேதை­யாக இருந்­தா­லும், உழைப்பு இல்­லை­யென்­றால் ஒன்­றுக்­கும் செல்­லாது; செல்­லாத காசாக வீணா­கி­வி­டும். அத­னால்­தான் அவ­ரு­டைய கல்­ல­றை­யில், “ஓய்­வெ­டுக்­கா­மல் உழைத்­த­வன், இதோ ஓய்­வெ­டுத்­துக் கொண்­டி­ருக்­கி­றான்” என்று எழு­தச் சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சுய­ம­ரி­யாதை அவ­ரு­டைய மூச்சு. தோளில் போட்­டி­ருக்­கும் துண்டை இடுப்­பில் கட்ட வேண்டி வரும் என்­ப­தற்­கா­கவே, நாதஸ்­வ­ரம்பயில்­வதை அவர் நிறுத்­தி­விட்­டார். அதைச் சிறு வய­தி­லேயே அவ­ரால் பொறுத்­துக்­கொள்ள முடி­ய ­வில்லை. ஜாதி­யின் கொடு­மைக்கு அது ஒரு முக்­கி­ய­மான நிகழ்­வாக இருந்­தது. 14 வய­தி­லேயே இந்­தித் திணிப்பு எதிர்ப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேச்சு சுதந்­தி­ரம், கருத்து சுதந்­தி­ரம், எழுத்­துச் சுதந்­தி­ரம் இதெல்­லாம் அவ­ருக்­குள் ஆழ­மாக ஊறி­விட்­டன. பல நேரங்­க­ளில் கோபம் வரும்; கடு­மை­யான விமர்­ச­னம் வரும்; பல குற்­றச்­சாட்­டு­கள் வரும். இரண்டு முறை அவ­ரு­டைய ஆட்­சியை மோச­மான முறை­யில் ஒன்­றிய அரசு கலைத்­து­விட்­டது. முதல் முறை காங்­கி­ரஸ் அரசு; இரண்­டா­வது முறை சந்­திர சேகர் தலை­மை­யி­லான கூட்­டாட்சி அரசு. அப்­படி இருந்­தா­லும் அவ­ருக்கு அந்­தக் கருத்­துச் சுதந்­தி­ரத்­தின் மீது அதிக மதிப்பு இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாங்­கள் சில நேரங்­க­ளில் அவர்­களை விமர்­ச­னம் செய்­வோம். ‘தி இந்து’ பத்­தி­ரி­கை­யில் நான் ஆசி­ரி­ய­ராக இருக்­கும்­போது, அதற்கு முன்­னால் கூட சில விஷ­யங்­க­ளில் வேறு­பாடு வரும். அதைப் பற்றி விமர்­ச­னம் செய்­வோம்; சில நேரங்­க­ளில் கடு­மை­யா­கக் கூட விமர்­ச­னம் செய்­தி­ருக்­கி­றோம். போன் செய்து “என்ன இது­போன்று எழு­தி­விட்­டீர்­கள்?” என்று கேட்­ப­தைத் தவிர வேறு எந்த நட­வ­டிக்­கை­யும் அவர் எடுத்­த­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்குஎவ்­வ­ளவு பேரை கைது செய்­கி­றார்­கள்! ‘நக்­கீ­ரன்’ கோபால் மீது அநி­யா­ய­மாக வழக்கு போடு­கி­றார்­கள். இப்­போது நடந்­தது உங்­க­ளுக்­குத் தெரி­யும்... உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­களை மோச­மான முறை­யில் கைதுசெய்து கொண்டு போனார்­கள். இதை­யெல்­லாம் பொறுத்­துக் கொள்ள முடி­ய­வில்லை. அவர்­க­ளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்­டும்; அவர்­கள் ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கி­றார்­கள்; அவ­ச­ரப்­ப­டத் தேவை­யில்லை. இருந்­தா­லும் தொடக்­கக் கட்­டத்­தி­லேயே காணப்­ப­டும் இந்­தச் சகிப்­பின்மை ஒரு மோச­மான அறி­குறி என்­று­தான் சொல்­வேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­சர் விஜய் அவர்­க­ளி­டம் நாங்­கள் எதிர்­பார்ப்­பது, இந்­தச் செயல்­களை இப்­போது வாபஸ் பெற வேண்­டும்; மாற்­றி­ய­மைக்க வேண்­டும். அதற்கு மேல் நான் இங்கு பேச வேண்­டி­ய­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது ஒரு பத்­தி­ரி­கை­யா­ள­ருக்கு முக்­கி­ய­மான விஷ­யம். பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு மட்­டு­மல்ல; அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு, எழுத்­தா­ளர்­க­ளுக்கு, திரைத் துறை­யைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு என அனை­வ­ருக்­கும் இது ஒரு முக்­கி­ய­மான விஷ­யம். விமர்­ச­னத்­தைச் சகித்­துக் கொள்­வார்­களா? கடு­மை­யான எதிர்ப்­பைக் கூட சகித்­துக் கொள்­வார்­களா? ஜன­நா­ய­கத்­தில் இவர்­க­ளுக்கு நம்­பிக்கை இருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நீதி­மன்­றங்­கள் அநி­யா­ய­மா­கக் கைது செய்து, அநி­யா­ய­மாக வழக்கு போடு­ப­வர்­கள் மீது விலக்கு கொடுப்­பார்­களா? சரி­யான முடி­வுக்கு வரு­வார்­களா? இந்­தியா முழு­வ­தும் இதைப் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். சில நாட்­க­ளி­லேயே ஒரு சில மோச­மான அறி­கு­றி­கள் இருக்­கின்­றன; அதை வாபஸ் பெற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">விமர்­ச­னம் நல்­லது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞ­னு­டைய வாழ்க்கை அதற்கு நன்­றாக ஒரு மாதி­ரி­யாக இருக்­கி­றது. அத­னால் அனைத்து விஷ­யங்­க­ளி­லும் அவ­ருக்­குக் கோபம் வராது என்று சொல்ல முடி­யாது. சில விஷ­யங்­க­ளுக்கு எதி­ரா­க­வும் எழு­து­வார்; அவ­ரால் எழுத முடி­யும் அல்­லவா? நீங்­கள் ஏதா­வது சொன்­னால் விமர்­ச­னத்­திற்­குப் பதில் கொடுக்க முடி­யும். தின­மும் அதைச் செய்­வார். எனக்­குப் பல­முறை, பல உதா­ர­ணங்­கள் அதில் இருக்­கின்­றன. நான் ஆக்­டிவ்-ஆ பத்­தி­ரி­கை­யா­ள­ராக இருக்­கும்­போது எழு­தும்­போது, உடனே போன் செய்து “என்ன இந்தமாதிரி எழு­தி­விட்­டீர்­கள்?” என்று சொன்­னால், “நான் உங்­க­ளைப் பார்க்­கி­றேன்” என்று கூறி அங்கு போனால், அங்கு வேறு மாதிரி அந்­தப் பேச்சு போய்­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரண்­டா­வது, அணு­கு­முறை. தமிழ்­நாட்­டில் மட்­டு­மல்ல, பல மாநி­லங்­க­ளில் முத­ல­மைச்­ச­ரையோ, பெரிய தலை­வர்­க­ளையோ பார்ப்­பது அவ்­வ­ளவு எளி­தல்ல. காங்­கி­ரஸ் கட்­சி­யி­லும் அப்­ப­டித்­தான்; பா.ஜ.க.விலும் அப்­ப­டித்­தான். சில இடங்­க­ளில் வேறு மாதிரி இருக்­க­லாம். ஆனால் கலை­ஞ­ரைப் பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் அணுக முடி­யும். அறி­வா­ல­யத்­திற்கோ, கோபா­ல­பு­ரத்­திற்கோ சென்­றால் அவ­ரைப் பார்க்­கும் வாய்ப்பு மிக­வும் அதி­கம். அவர் செல்­லும்­போது பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளைப் பார்த்­தால் நிறுத்­திப் பார்ப்­பார்; “என்ன?” என்று கேட்­பார்; அவர்­கள் சொல்­வ­தற்கு ஒரு சுவா­ரஸ்­ய­மான பதில் கொடுப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாநில உரி­மை­க­ளைப் பற்றி ஆழ­மான சிந்­தனை உடை­ய­வர். ஒரு நாளி­லும் அதை விட்­டுக் கொடுக்­க­வில்லை. இன்­றைக்­குத் தி.மு.க. பத­வியை இழந்­தது, பவர் இழந்­ததா? சேகர் பாபு அவர்­களே, என்ன நடந்­தது என்று அன்­னைக்கு பார்த்­தோம். ஊழி­யர்­கள் அனை­வ­ரும் மாநி­லம் முழு­வ­தும் வெளி­யில் வந்து இதை எதிர்த்­தார்­கள். யாரா­வது சொல்­லிச் செய்­தார்­களா? அது தானா­கவே நடந்­து­விட்­டது. அமைப்பு இருக்­கி­றது; அதே நேரத்­தில் ஒரு இயல்­பான எதிர்­வினை அங்கு நடந்­தது. அத­னால் தி.மு.க. பத­வியை இழந்­த­த­னால், பவர் இழந்­தது என்று சொல்ல மாட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆதவ் அர்­ஜுனா சட்­ட­ச­பை­யில் பேசி­னார். அதைப்­பற்றி நான் அதி­க­மா­கப் பேசத் தேவை­யில்லை. ஆனால் தி.மு.க. ஒன்­றுமே இல்லை என்­பது போலச் சில போக்­கு­கள் இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சோவி­யத் ஒன்­றி­யத்­தின் தலை­வ­ரான ஜோசப் ஸ்டாலின் ஒரு முக்­கி­ய­மான விஷ­யத்­தைச் சொன்­னார். இரண்­டாம் உல­கப்­போ­ரின் போது, “போப் ஆண்­ட­வரை நம் பக்­கம் கொண்டு வர வேண்­டும்” என்று சொல்­லும்­போது, சோவி­யத் தலை­வர் ஜோசப் ஸ்டாலின் என்ன சொன்­னார் என்­றால், “போப்­பி­டம் எத்­தனை படைப்­பி­ரி­வு­கள் உள்­ளன?”.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதா­வது, உங்­க­ளுக்கு எத்­தனை எம்.பி.க்கள் இருக்­கி­றார்­கள்? தொகுதி மறு­வ­ரை­யறை மசோதா விரை­வில் வரப்­போ­கி­றது. தி.மு.க. என்ன நிலை எடுக்­கப்­போ­கி­றது? இன்­றைக்கு ‘தி இந்­து’­வில் கூட ஒரு சிறப்­புச் செய்தி வந்­தி­ருக்­கி­றது. அத­னு­டைய விவ­ரங்­க­ளுக்­குள் நான் போகத் தேவை­யில்லை. என்ன எதிர்­பார்க்­கி­றார்­கள், கோரிக்­கை­கள் என்ன, எப்­படி அணு­கு­வார்­கள் என்­பது பற்றி ‘தி இந்­து’­வில் இன்­றைக்கு முதன்­மைச் செய்தி வந்­தி­ருக்­கி­றது. எனவே, நாடு முழு­வ­தும் இதைத்­தான் பார்க்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தி.மு.க. திடீ­ரென்று மாறுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. ஒன்­றிய அர­சாங்­கம் கொண்டு வரப்­போ­கும் புதிய போர்­வை­யில் வரக்­கூ­டிய தொகுதி மறு­வ­ரை­யறை மசோ­தா­விற்கு என்ன நிலை எடுக்­கப் போகி­றார்­கள், என்ன சொல்­லப் போகி­றார்­கள், எப்­படி வாக்­க­ளிக்­கப் போகி­றார்­கள் எம்.பி.க்கள் என்­பது இன்­றைக்கு இந்­தியா முழு­வ­தும் ஒரு முக்­கி­ய­மான பிர­தா­ன­மான விஷ­ய­மாக இருக்­கி­றது. சரி­யான முடிவு எடுப்­பார்­கள் என்­று­தான் நான் நம்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="12">இன்­றைக்­குத் தி.மு.க. பத­வியை இழந்­தா­லும், பலத்தை இழக்­க­வில்லை. ஒரு முக்­கி­ய­மான அகில இந்­தி­யக் கட்­சி­யா­கத் தான்இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞர் அவர்­க­ளுக்கு டெல்­லிக்­குச் சென்று பிர­த­மர் ஆக வேண்­டும் என்று ஆசை இல்லை; அதில் மிக­வும் தெளி­வாக இருந்­தார். ஜெய­ல­லிதா அவர்­க­ளுக்­கும் அந்த ஆசை இருந்­தது; அதைத் தவறு என்று சொல்ல முடி­யாது. ஆனால் அந்த கவ­னம் முழு­மை­யா­கத் தமிழ்­நாட்­டில் இருந்­த­த­னால் தான், இந்த அள­வுக்­குக் கட்­சி­யைப் பல­மாக வைத்­துக்­கொண்டு, ஆட்­சி­யில் இருந்­தா­லும் பல­முறை தோல்வி அடைந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே மாதி­ரி­தான் முன்­னாள் முத­ல­மைச்­சர் என் நண்­பர் மு.க. ஸ்டாலின் அவர்­க­ளும். அவர் கலை­ஞ­ரின் கார்­பன் காப்பி இல்லை. கார்­பன் காப்­பி­யாக இருப்­பது நல்­லது இல்லை. அவர் பாணியே வேறு; நடை­மு­றை­யில் செய­லாற்­று­வார். “உழைப்பு, உழைப்பு, உழைப்பு” தான் அவ­ரு­டை­ய­தும். இன்­றைக்­கும் நாங்­கள் நடைப்­ப­யிற்சி போகும்­போது பார்க்­கி­றேன், எப்­படி உழைக்­கி­றார் என்று!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கட்­சி­யைப் பாது­காத்து வளர்த்து, வெற்­றி­யி­லும் தோல்­வி­யி­லும் சிறந்த முறை­யில் தொடர்ந்து தக்­க­வைப்­பது மிக­வும் கஷ்­ட­மான ஒரு விஷ­யம். அத­னால் இன்­றைக்­கும் தி.மு.க. தொண்­டர்­கள், தலை­வர்­கள் என்ன பாராட்­டு­கி­றார்­கள் என்­றால், அவர் வெறும் எழு­து­வது மட்­டு­மல்ல, பேச்சு மட்­டு­மல்ல, அதில் சிறந்­த­வர் என்று அனை­வ­ருக்­கும் தெரி­யும். அனைத்­தை­யும் ஒன்­றா­கக் கொண்டு வந்து கட்­சியை வளர்த்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால்­தான் அகில இந்­தி­யக் கட்சி எது­வும் தமிழ்­நாட்­டில் 1967-க்குப் பிறகு ஆட்­சி­யைக் கைப்­பற்­ற­வில்லை. இது இந்­திய அர­சி­ய­லின் ஒரு நிரந்­தர அம்­ச­மா­கி­விட்­டது என்று சொல்­ல­லாம். பல மாநி­லங்­க­ளில் இதைப் பார்க்க முடி­யாது. ஒரு மாநி­லக் கட்சி, ஒரு பெரிய மாநி­லத்தை முழு­வ­து­மாக மாற்­றி­விட்டு, அகில இந்­தி­யக் கட்­சி­க­ளான காங்­கி­ரஸ், பா.ஜ.க. ஒரு நாளும் இங்கே அதி­கா­ரத்­தைப் பிடிக்க முடி­யாது என்ற நிலையை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil155" fontStyle="Regular" size="12">இதில் பெரி­யா­ரு­டைய பங்­க­ளிப்பு இருக்­கி­றது; பேர­றி­ஞர் அண்­ணா­வி­
னு­டைய பங்­க­ளிப்பு இருக்­கி­றது; 
கலை­ஞ­ரு­டைய பங்­க­ளிப்பு இருக்­கி­றது; மு.க.ஸ்டாலின் அவர்­க­ளு­டைய 
பங்­க­ளிப்பு இருக்­கி­றது. அது இன்­னும் தொட­ரும். இந்­தக் கட்­சிக்கு நல்ல எதிர்­கா­லம் இருக்­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தோற்­றது ஒரு அதிர்ச்­சி­தான்; அதை யாரும் எதிர்­பார்க்­க­வில்லை, நானும் எதிர்­பார்க்­க­வில்லை. ஆனால் இது ஒன்­றும் புதிய பெரிய அனு­ப­வம் இல்லை. அத­னால் இந்­தச் சூழ்­நி­லை­யில் கலை­ஞ­ரு­டைய வாழ்க்கை, அர­சி­யல், அவ­ரு­டைய மேதைமை எல்­லாம் நமக்­குச் சிறந்த பாடங்­க­ளைக் கொடுக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதைச் சொல்­லி­விட்டு, இந்த நிகழ்ச்­சியை ஏற்­பாடு செய்­த­வர்­க­ளுக்­கும், என்னை அழைத்­த­வர்­க­ளுக்­கும் நன்றி சொல்­லி­விட்டு விடை­பெ­று­கி­றேன். நன்றி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு – இந்து என்.ராம் அவர்­கள் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>