<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,66,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 11 2026 03:57:45 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260811T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="11082026-VLR-05" position.sequence="05" ex-ref="11082026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup812387_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup812572_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="m5bw_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="m6bw_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="17.5">க</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ட்­டப்பா என்­பது பாகு­பலி திரைப்­ப­டத்­தில் வரும் புகழ்­பெற்ற கதா­பாத்­தி­ரம்.  புரட்­சித் தமி­ழர் என்­ற­ழைக்­கப்­ப­டும் நடி­கர் சத்­ய­ராஜ் ஏற்று திறம்­பட நடித்த பாத்­தி­ரம். அந்­தப் படம் இரண்டு பாகங்­க­ளாக வெளி­வந்து, இந்­தியா முழு­வ­தும் பெரு­வெற்றி பெற்­றது. அதில் முதல் பாகத்­தின் இறு­தி­யில் பாகு­ப­லி­யின் விசு­வா­ச­மான தள­ப­தி­யான கட்­டப்பா அவரை முது­கில் குத்தி கொல்­லும் காட்சி காட்­டப்­ப­டும். கட்­டப்பா ஏன் பாகு­ப­லியை முது­கில் குத்­திக் கொன்­றார் என்ற கேள்வி இரண்­டா­வது பாகத்தை எதிர்­நோக்கி அனை­வ­ரை­யும் காத்­தி­ருக்க வைக்­கும் உத்­தி­யாக மாறி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எட்­டப்­பர்  எட்­ட­ய­பு­ரத்து மன்­னர். அவ­ருக்­கும் கட்­ட­பொம்­ம­னுக்­கும் எல்­லைத் தக­ராறு போன்­றவை இருந்­த­தால் அவர் ஆங்­கி­லே­யர் துணை­யு­டன் கட்­ட­பொம்­ம­னு­டன் போரிட்­டுள்­ளார். கட்­ட­பொம்­மனை 
ரக­சி­ய­மா­கக் காட்­டிக் கொடுத்து துரோ­கம் இழைக்­க­வில்லை. ஆனால் 1959-ஆம் ஆண்டு வெளி­யான வீர­பாண்­டிய கட்­ட­பொம்­மன் திரைப்­ப­டத்­தில் புனை­வாக அவ்­வாறு சித்­த­ரிக்­கப் பட்­ட­தால் எட்­டப்­பர் என்ற பெயரை துரோ­கத்­தின் உரு­வ­க­மா­கக் கூறும் வழக்­கம் உரு­வா­கி­விட்­டது. அது தவ­றா­னது என்­பது வர­லாற்று ஆய்­வா­ளர்­கள் பலர் கருத்து.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சமீ­பத்­தில் காங்­கி­ரஸ் தொண்­டர்­க­ளி­டம் பேச சென்னை வந்த ராகுல் காந்­தி­யி­டம் யாரோ இதைக் கூறி­யி­ருக்­கி­றார்­கள். அத­னால் அவர் ஊட­கங்­க­ளி­டம் பேசும்­போது ‘தொகுதி மறு­சீ­ர­மைப்பு மசோ­தாவை தமிழ்­நாட்­டில் யாரா­வது ஆத­ரித்­தால் அவர்­கள் எட்­டப்­பர் ஆகி­வி­டு­வார்­கள்” என்று கூறி­னார். அவ­ருக்கு அதைச் சரி­யாக உச்­ச­ரிக்க வரா­மல் கட்­டப்­பா­வை­யும், எட்­டப்­ப­ரை­யும் கலந்து முத­லில் உச்­ச­ரித்­தது சுவா­ர­சி­ய­மாக இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தி.மு.க.-வுடன் கூட்­டணி அமைத்து த.வெ.க.-வை எதிர்த்து தேர்­த­லில் போட்­டி­யிட்ட காங்­கி­ரஸ், தேர்­தல் முடி­வு­கள் வந்­த­தும் த.வெ.க.-விற்கு பாய்ந்து சென்று ஆத­ரவு அளித்­த­து­டன், 2029 தேர்­தல் கூட்­ட­ணிக்­கும் உடன்­ப­டிக்கை செய்து கொண்­டது. இத­னைப் பலர் 
கட்­டப்பா முது­கில் குத்­தி­ய­து­டன் ஒப்­பிட்டு பேசி வரு­
கி­றார்­கள். ஆனால் காங்­கி­ரஸ் தி.மு.க. முது­கில், தமிழ்­நாட்டு முது­கில் குத்­து­வது இது முதல் முறை­யல்ல. இந்­தித் திணிப்­பில் இருந்து அதனை பட்­டி­யல் போட்­டால் பெரிய புத்­த­கமே எழு­த­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஆனா­லும், இந்­திய கூட்­டாட்சி அமைப்­பில் பா.ஜ.க.-வின் இந்­துத்­து­வத்­திற்கு எதி­ராக மதச்­சார்­பின்மை பன்­மைத்­து­வம் ஆகி­ய­வற்றை ஆத­ரிப்­ப­தா­லும், வெவ்­வேறு காலங்­க­ளில் செயல்­ப­டுத்­திய மக்­கள் நல, சோஷ­லிஸ நோக்­குள்ள திட்­டங்­கள் ஆகி­ய­வற்­றா­லும் தி.மு.க-.வும், பிற மாநில முற்­போக்கு ஜன­நா­யக சக்­தி­க­ளும் அத­னு­டன் கூட்­டணி காண்­பது தவிர்க்க முடி­யா­த­தாக இருந்து வந்­துள்­ளது என­லாம். ஆனால் காங்­கி­ரஸ் அடிப்­ப­டை­யில் மாநி­லக் கட்­சி­க­ளுக்கு எதி­ரா­கவே இயங்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. அதன் வர­லாறு முழு­வ­தும் தமிழ்­நாட்டு நல­னுக்­கா­க­வும், மாநில சுயாட்­சிக்­கா­க­வும் ஓயாது போராடி வரும் கட்சி. தமிழ்­நாட்­டில் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய வளர்ச்­சி­யில் இந்­தி­யா­வில் முத­லி­டத்­தில் நிறுத்தி திரா­விட மாடல் பொரு­ளா­தார வளர்ச்சி என்­பதை சாதித்­துக் காட்­டிய கட்சி. இந்­துத்­துவ பார்ப்­ப­னீய அடிப்­ப­டை­களை எதிர்த்து இந்­திய அள­வில் சம­ர­ச­மின்றி போராடி வரும் கட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்ற வாரம் கூட வந்தே மாத­ரம் பாட­லின் விரி­
வ­டிவை தேசிய பாட­லென்று வரை­ய­றுத்து, அதனை அவ­ம­திப்­பது குற்­றம் என்று நாடா­ளு­மன்­றத்­தில் சட்­டத்­தி­ருத்­தம் கொண்டு வந்த போது அதனை எதிர்த்து 
கடு­மை­யாக வாதிட்ட கட்சி தி.மு.க.-தான். கனி­மொழி அவர்­கள் கடு­மை­யான மொழி­யில் கண்­டித்­தார். ராஜா இந்­திய தேசப்­பி­ரி­வி­னைக்கே அந்த பாட­லும், சாவர்க்­க­ரும்­தான் கார­ணம் என்று குற்­றம் சாட்­டி­னார். நேர் மாறா­கக் கேரள காங்­கி­ரஸ் அர­சின் தலை­மைச் செய­லர் சுதந்­திர தினத்­தன்று வந்தே மாத­ரம் முழு பாட­லை­யும் பாட சுற்­ற­றிக்கை அனுப்­பி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">காங்­கி­ர­ஸின் தமிழ்­நாட்டு நல­னுக்கு எதி­ரான செயல்­பா­டு­க­ளின் முக்­கிய வெளிப்­பா­டு­தான் த.வெ.க. மூலம் அது நட த்திய தொகுதி மறு­வ­ரை­ய­றைக்கு எதி­ரான நாடாளு மன்ற உறுப்­பி­னர் சந்­திப்பு. அதன் நோக்­கம் தி.மு.க. தமிழ்­நாட்டு நல­னுக்கு எதி­ராக பா.ஜ.க.-வின் தொகுதி மறு­சீ­ர­மைப்பு திட்­டத்­திற்கு தி.மு.க. ஆத­ரவு அளிக்­கப்­போ­கி­றது என்ற புர­ளி­யைப் பரப்­பு­
வ­து­தான். இந்த குற்­றச்­சாட்­டின் உண்­மைத்­தன்­மையை நாம் விரி­வா­கப் புரிந்து கொள்­வது அவ­சி­யம். 
அப்­போ­து­தான் எது தமிழ்­நாட்டு நலன், யார் அதற்­காக நிற்­கி­றார்­கள் என்­பது புரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">காங்­கி­ரஸ் தமிழ்­நாட்டு நல­னுக்­காக நிற்­ப­தாக இருந்­தால் ராகுல் காந்தி டி.கே.சிவ­கு­மா­ரி­டம் காவிரி ஆணைய தீர்ப்­புக்­குக் கட்­டுப்­பட்டு தண்­ணீர் திறந்­த­விட சொல்­லி­யி­ருக்­க­லாமே? அது­தானே ஒரு தேசி­யத் தலை­வ­ருக்கு இருக்க வேண்­டிய மாண்பு? செல்­லு­மி­ட­மெல்­லாம் அர­ச­மைப்­புச் சட்­டப் புத்­த­கத்தை கையி­லேந்­திக் காட்­டும் ராகுல் காந்தி, அந்த அர­ச­மைப்பு சட்­டப்­படி அமைக்­கப்­பட்ட ஆணை­யத்­தின் தீர்ப்­பினை மதிக்­கச் சொல்ல வேண்­டாமா? காவிரி விஷ­யத்­தில் கட்­டப்பா வேலை பார்த்­து­விட்டு, தமிழ்­நாட்டு நல­னைத் 
தவிர வேறு அர­சி­யலே அறி­யாத தி.மு.க-வை எட்­டப்­பர் என்று பேச என்ன துணிச்­சல் இந்த காங்­கி­ரஸ் 
­கா­ரர்­க­ளுக்கு?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தொகுதி மறு­வ­ரை­ய­றை­யின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">உண்மை நிலை என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாடா­ளு­மன்­றத்  தொகுதி மறு­வ­ரை­யறை என்­பது ஒவ்­வொரு பத்­தாண்­டும் சென்­சஸ் என்ற மக்­கள் தொகைக் கணக்­கெ­டுப்பு முடிந்­த­பி­றகு, அதன் தர­வு­க­ளின்­படி செய்­யப்­பட வேண்­டி­ய­தா­கும். அது­தான் அர­ ச­மைப்­புச் சட்ட விதி­கள் கூறு­வது. இதில் மூன்று அம்­சங்­கள் அடங்­கி­யுள்­ளன. ஒன்று மக்­கள் தொகை அடிப்­ப­டை­யில் எல்லா மாநி­லங்­க­ளி­லும் கூடி­ய­வரை ஒரே சீராக இத்­தனை இலட்­சம் பேர்­க­ளுக்கு ஒரு பிர­தி­நிதி என்று வரை­ய­றுக்க வேண்­டும். உதா­ர­ண­மாக 1950 ஆண்டு குறைந்த பட்­சம் ஐந்து இலட்­சம் பேர் அதிக   பட்­சம் ஏழரை இலட்­சம் பேருக்கு ஒரு நாடாளு மன்ற உறுப்­பி­னர் என்று வரை­யறை செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரண்­டா­வது, தொகு­தி­க­ளின் புவிப்­ப­ரப்பு எல்­லை­களை தேவைப்­ப­டும்­படி திருத்தி அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மூன்­றா­வது தனித்­தொ­குதி ஒதுக்­கீடு போன்­ற­வற்­றை­யும் அறு­தி­யிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">குடும்­பக் கட்­டுப்­பாடு திட்­டத்தை மாநி­லங்­கள் செயல்­ப­டுத்த பிர­தி­நி­தி­கள் எண்­ணிக்கை பற்­றிய கவலை தடை­யாக இருக்­கக் கூடாது என்­ப­தால் 1976-ஆம் ஆண்டு மாநி­லங்­க­ளின் நாடா­ளு­மன்­றத் தொகு­தி­கள் எண்­ணிக்­கையை 25 ஆண்­டு­க­ளுக்கு மாற்­றக் கூடாது என்று உறை­நிலை ஒன்று அர­ச­மைப்­புச் சட்ட திருத்­தம் மூலம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மொத்த எண்­ணிக்­கை­யும் அதிக பட்­சம்  550 என்று வரை­ய­றுக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த 25 ஆண்­டு­கள் முடிந்­த­போது தென் மாநி­லங்­கள் மக்­கள் தொகையை குறைத்­தி­ருக்க, வட மாநி­லங்­கள் பல­வற்­றில் மக்­கள் தொகை அதி­க­ரித்து இருந்­த­தால், 2001 சென்­சஸ் அடிப்­ப­டை­யில் தொகுதி மறு சீர­மைப்பு நடந்­தால் தென் மாநி­லங்­கள் பாதிக்­கப்­ப­டும் என்று மீண்­டும் உறை­நிலை மேலும் 25 ஆண்­டு­க­ளுக்கு நீடிக்­கப்­பட்­டது. ஆனால் மாநில வாரி­யாக தொகு­தி­க­ளின் எண்­ணிக்­கையை மாற்­றா­மல், தொகு­தி­க­ளின் எல்­லை­களை மட்­டும் மறு­வ­ரை­யறை செய்ய ஒரு குழு 2002-ஆம் ஆண்டு அமைக்­கப்­பட்டது. அதன் அறிக்கை 2008-ஆம் ஆண்டு கொடுக்­கப்­பட்டு அம­லுக்கு வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது 2026-ஆம் ஆண்டு வந்­து­விட்­டது என்­ப­தால் இதன்­பி­றகு எப்­போது சென்­சஸ் நடத்தி முடிக்­கப்­பட்­டா­லும், உடனே மறு­சீ­ர­மைப்பு குழு அமைத்து மாநி­லங்­க­ளின் புதிய மக்­கள் தொகைக்கு ஏற்ப தொகு­தி­களை மறு­வ­ரை­யறை செய்­தாக வேண்­டும். அதா­வது அர­ச­மைப்பு சட்­டப்­படி கட்­டா­யம் செய்­தாக வேண்­டும். அது தேர்­வல்ல. சட்­டம். அப்­படி செய்­தால் தமிழ்­நாடு உட்­பட தென் மாநி­லங்­கள், வேறு சில மாநி­லங்­கள் பாதிக்­கப்­ப­டும். அவற்­றின் பிர­தி­நி­தித்­து­வம் குறை­யும். உத்­தி­ரப் பிர­தே­சம், பீஹார் போன்­ற­வற்­றின் பிர­தி­நி­தித்­து­வம் அதி­க­ரிக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கவ­னத்­திற்­கு­ரிய விஷ­யம் என்­ன­வென்­றால் 2021-ஆம் ஆண்டு சென்­சஸ் கோவிட் நோய் கார­ண­மாக அந்த ஆண்டு நடை­
பெ­ற­வில்லை. எந்த கார­ணத்­திலோ கோவிட் நோய் ஒய்ந்­த­பி­ற­கும் பா.ஜ.க. அரசு சென்­சஸ் எடுக்­க­வில்லை. இப்­போது 2027-ஆம் ஆண்­டு­தான் எடுக்­கப்­போ­கி­றது. அப்­படி எடுக்­கும் சென்­சஸ் 2026-ஆம் ஆண்­டுக்­குப் பிற­கா­னது என்­ப­தால் அதன் முடி­வு­கள் தெரிந்­த­வு­டன் தொகுதி மறு­சீ­ர­மைப்பை பா.ஜ.க. அரசு மேற்­கொள்ள எந்த தடை­யும் இல்லை என்­ப­து­டன் செய்தே ஆக­வேண்­டும் என்­ப­து­தான் நிலமை. அதைத் தடுக்க வேண்­டும் என்­றால் அர­ச­மைப்­புச்  சட்­டத் சீர்­தி­ருத்­தம் மூன்­றில் இரண்டு பங்கு ஆத­ர­வு­டன் செய்ய வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பொது­வாக சென்­சஸ் எடுத்து தர­வு­கள் தொகுக்­கப்­பட சில ஆண்­டு­கள் ஆகும். பின்­னர் அதன்­படி தொகுதி மறு­சீ­ர­மைப்­பைச் செய்­ய­வும் பல ஆண்­டு­கள் ஆகும். ஆனால் இப்­போது எல்­லாமே கணினி மய­மாக இருப்­ப­தால் 2027-ஆம் ஆண்டே சென்­சஸ் இறுதி செய்து, 2028-ஆம் ஆண்டே தொகுதி மறு­வ­ரை­ய­றை­யைச் செய்து, அதன்­படி 2029-ஆம் ஆண்டு தேர்­தலை பா.ஜ.க. நட த்தாது என்­ப­தற்கு எந்த உத்­தி­ர­வா­த­மும் இல்லை. இவ்­வாறு செய்ய அது எந்த அர­ச­மைப்­புச் சட்ட சீர்­தி­ருத்­த­மும் செய்ய வேண்­டி­ய­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அப்­படி துரி­த­மாக முடிக்க முடி­ய­வில்லை என்­றா­லும், 2029-ஆம் தேர்­த­லுக்­குப் பிறகு அமை­யும் ஆட்சி தொகுதி மறு­வ­ரை­ய­றையை 2027 சென்­சஸ் படி செய்­து­தான் ஆக­வேண்­டும். அதில்தமிழ்­நாடு போன்ற மாநி­லங்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டு­வதை தடுக்க முடி­யாது. அப்­படி பாதிப்பு  நிகழ்ந்­தால் எல்லா மாநி­லங்­க­ளும் போட்டி போட்­டுக்­கொண்டுமக்­கள் தொகையை அதி­க­ரிக்க முற்­ப­ட­லாம். ஏற்­க­னவே சந்­தி­ர­பாபு நாயுடு அவ்­வாறு பேசி­யுள்­ளார். அது பெரும் விப­ரீ­தத்­தில்­தான் கொண்டு போய் விடும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதைத் தடுக்க வேண்­டும் என்­றால் மீண்­டும் அர­ச­மைப்பு சட்ட சீர்­தி­ருத்­தம் கொண்­டு­வர வேண்­டும். மேலும் 25 ஆண்­டு­க­ளுக்கு/ 50 ஆண்­டு­க­ளுக்கு மாநில வாரி தொகுதி எண்­ணிக்கை உறை­நிலை என்று கூற வேண்­டும். அல்­லது நிரந்­த­ர­மா­கவே 1975 விகி­தா­சா­ரம் தொட­ரும் என்று நிர்­ண­யிக்க வேண்­டும். அவ்­வாறு செய்ய மூன்­றில் இரண்டு பங்கு ஆத­ரவு வேண்­டும். அப்­போது இன்­னொரு கேள்வி எழும். மொத்த எண்­ணிக்கை 543 என்­பதே தொடர வேண்­டுமா என்ற கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மொத்த எண்­ணிக்­கையை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அதி­க­ரிப்­பதா, வேண்­டாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">துவக்­கத்­தில் அதி­க­பட்­சம் ஏழரை இலட்­சம் பேருக்கு ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் என்று அர­ச­மைப்பு சட்­டம் கூறி­யது. இன்­றைக்கு சரா­ச­ரி­யாக 22/26 இலட்­சம் பேருக்கு ஒரு உறுப்­பி­னர் என்று மாறி­யுள்­ளது. இது மக்­க­ளின் வாக்­கின் மதிப்பை குறைக்­கி­றது. இது ஒரு விழு­மி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது மட்­டு­மல்­லா­மல் நாடு முழு­வ­தும், எல்லா மாநி­லங்­க­ளி­லும், எத்­தனை பேருக்கு ஒரு உறுப்­பி­னர் என்ற மதிப்பு அதி­கம் வேறு­ப­டக் கூடாது என்­றும் அர­ச­மைப்பு சட்­டம் கூறு­கி­றது. இது மாநி­லங்­க­ளி­டையே மக்­கள் தொகைப் போட்­டிக்கு வழி­வ­குத்­து­வி­டும் என்­ப­தால் கூட்­டாட்சி விழு­மி­யத்­திற்கு எதி­ராக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அதா­வது மக்­க­ளாட்சி விழு­மி­யம் என்று பார்த்­தால் நாடு முழு­வ­தும் சமச்­சீ­ராக பிர­தி­நி­தித்­து­வத்­தின் மதிப்பு இருக்க வேண்­டும். கூட்­டாட்­சி­யம், மாநில உரி­மை­கள் என்று பார்த்­தால் மக்­கள் தொகையை கட்­டுப்­ப­டுத்­திய மாநி­லங்­கள் தண்­டிக்­கப்­ப­டக் கூடாது. இந்த இரண்டு விழு­மி­யங்­க­ளை­யும் எப்­படி  இணைப்­பது என்று பல­ரும் விவா­தித்­துள்­ளார்­கள். ஆங்­கில ஆய்­வே­டு­க­ளில் ஏகப்­பட்ட கட்­டு­ரை­க­ளைக் காண­லாம். சிக்­க­லான தத்­து­வக் கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது பாஜக அரசு புதிய நாடா­ளு­மன்­றக் கட்­டி­டம் கட்­டி­யுள்­ளது. அதில் 850 பேர் அமர இருக்­கை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அது மொத்த உறுப்­பி­னர் எண்­ணிக்­கையை 850-ஆக அதி­க­ரிக்க விரும்­பு­கி­றது. அதற்­கான அர­ச­மைப்பு சட்ட சீர்­தி­ருத்­தத்தை அது ஏப்­ரல் மாதம் கொண்­டு­வந்­தது. மிக­வும் தந்­தி­ர­மாக அதனை மக­ளி­ருக்­கான தனித்­தொ­குதி ஒதுக்­கீட்­டு­டன் இணைத்­துக் கொண்­டு­வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்­தச் சட்­டத் திருத்­தத்­தில் மாநி­லங்­க­ளுக்­கான பிர­தி­நித்­துவ விகி­தா­சா­ரம் (proportionate representation) மாறாது என்­ப­தற்­கான எந்த உத்­தி­ர­வா­த­மும் இல்லை என்­ப­தால் தி.மு.க மிகக் கடு­மை­யாக எதிர்த்­தது. சட்ட நகலை முதல்­வர் ஸ்டாலினே எரித்­தார். தமிழ்­நாடு முழு­வ­தும் மறு­சீ­ர­மைப்பு வேண்­டாம் என்ற முழக்­கம் ஒவ்­வொரு வீட்­டி­லும் கோலங்­க­ளில் எழு­தப்­பட்­டது. கருப்­புக் கொடி பறக்க விடப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த சட்­டத்தை மூன்­றில் இரண்டு பங்கு ஆத­ரவு இல்­லா­த­தால் நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்ற முடி­ய­வில்லை. அப்­போது உள்­துறை அமைச்­சர் திடீ­ரென்று அனைத்து மாநி­லங்­க­ளுக்­கும் 50% தொகுதி அதி­க­ரிப்பு செய்­கி­றோம். அப்­போது விகி­தா­சா­ரம் மாறாது என்­றார். ஆனால் இது புதிய மக்­கள் தொகை கணக்­கெ­டுப்பு முடி­யும் வரை தற்­கா­லிக ஏற்­பாடா, நிரந்­தர ஏற்­பாடா என்று தெளி­வாக இருக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க, காங்­கி­ரஸ் உள்­ளிட்ட பல்­வேறு கட்­சி­க­ளின் நிலைப்­பாடு மாநி­லங்­க­ளின் விகி­தா­சார பிர­தி­நி­தித்­து­வம் மாறக்­கூ­டாது என்­ப­தா­கவே இருந்­தது. கூடவே மொத்த தொகு­தி­கள் எண்­ணிக்­கை­யை­யும் அதி­க­ரிக்­கத் தேவை­யில்லை என்ற கருத்­தும் தெரி­விக்­கப்­பட்­டது. இங்­கே­தான் நாம் கவ­ன­மா­கப் புரிந்­து­கொள்ள வேண்­டும். இரண்டு தனித்­தனி பிரச்­சி­னை­கள் உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒன்று, மாநி­லங்­க­ளின் 1975 பிர­தி­நி­தித்­துவ விகி­தா­சா­ரத்­தைக் காப்­ப­தன் மூலம் கூட்­டாட்­சி­யம் சீர்­கு­லை­யா­மல் பாது­காப்­பது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரண்டு, ஒட்­டு­மொத்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கா­மல் தடுப்­பது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">(மூன்­றா­வ­தாக இன்­னொரு பிரச்­சி­னையை சிலர் கூறு­கி­றார்­கள். அது தொகு­தி­க­ளின் பரப்­பினை, எல்­லை­களை பா.ஜ.க. தனக்கு ஏற்­ற­வாறு வடி­வ­மைக்­கும் என்­பது. ஆங்­கி­லத்­தில் ஜெர்­ரி­மாண்­டெ­ரிங். இந்­தப் பிரச்­சினை யார் மறு­வ­ரை­யறை செய்­தா­லும் வரும்; காங்­கி­ரஸ் மீதும் இந்த குற்­றச்­சாட்­டு­கள் அறு­ப­து­க­ளில் எழுந்­துள்­ளன. இதற்கு தல­மட்­டத்­தில்­தான் பேசி/போராடி தீர்வு காண முடி­யும்)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கவ­னம்: உண்­மை­யான சிக்­கல் என்ன? 
மறு­வ­ரை­யறை என்­பது ஏன் ஒரு டைம் பாம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">டைம் பாம் என்­பது என்­ன­வென்­றால் ஒரு சிறிய கடி­கா­ரத்­து­டன் வெடி­குண்­டின் திரியை பிணைத்து                விடு­வார்­கள். அந்­தக் கடி­கா­ரத்­தில் செட் செய்­யப்­பட்ட, நிர்­ண­யிக்­கப்­பட்ட நேரம் வந்­த­வு­டன் திரி கொளுத்­தப்­பட்டு குண்டு வெடித்­து­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொகுதி மறு­வ­ரை­யறை என்­பதை 2026-க்குப் பிற­கான சென்­சஸ் முடிந்­த­வு­டன் செய்தே ஆக­வேண்­டும் என்று டைம் பாம் செட் செய்­தா­கி­விட்­டது. அடுத்த ஆண்டு சென்­சஸ் நடக்­கப்­போ­கி­றது. அதன் முடி­வு­கள் வந்­த­வு­டன் மறு­சீ­ர­மைப்­புக் குழு அமைத்து இப்­போ­துள்ள 543 தொகு­தி­களை மறு­பங்­கீடு செய்­து­தான் ஆக­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­படி செய்­தால் மாநில விகி­தா­சார பிர­தி­நி­தித்­து­வம் மாறக்­கூ­டாது என்று விரும்­பும் கட்­சி­கள், மீண்­டும் அர­ச­மைப்பு சட்ட சீர்­தி­ருத்­தம் செய்­தாக வேண்­டும். 2029 தேர்­தல் வரை அது நிச்­ச­யம் முடி­யாது. ஒரு­வேளை அதற்­குள் மறு­சீ­ர­மைப்பு செய்­ய­மு­டி­ய­வில்லை என்­றா­லும், அதற்­குப் பின் அமை­யும் நாடா­ளு­மன்­றத்­தி­லும் ஆட்சி மாறி­னா­லும், பா.ஜ.க., அதன் கூட்­ட­ணிக் கட்­சி­கள் வலு­வாக இடம்­பெற்­றால் அர­ச­மைப்­புச் சட்ட சீர்­தி­ருத்­தம் செய்ய முடி­யாது. டைம் பாம் வெடித்­து­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாறாக இப்­போதே பா.ஜ.க. அரசு 850 உறுப்­பி­னர்­க­ளாக மாற்­று­வோம். மாநி­லங்­க­ளின் 1975 விகி­தா­சார பிர­தி­நி­தித்­து­வத்தை நிரந்­தர விகி­தா­சா­ர­மாக மாற்­று­வோம் என்று கூறி­னால் அது மாநில நல­னுக்கு உகந்த தீர்வா என்­பதை பரி­சீ­லிக்க வேண்­டிய நிலை­யில் இருக்­கி­றோம். அதா­வது மக்­கள் தொகை எப்­படி  கூடி­னா­லும் குறைந்­தா­லும், மொத்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் 7.2% தமிழ்­நாட்டு உறுப்­பி­னர்­க­ளாக இருப்­பார்­கள் என்று அர­ச­மைப்பு சட்­டம் மாற்­றப்­பட்­டால் அது மாநில நல­னுக்கு உகந்­ததா இல்­லையா என்­ப­து­தான் கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த வாய்ப்பு இருப்­ப­தால்­தான் தி.மு.க. மசோதா வரைவு எப்­ப­டி­யி­ருக்­கி­றது என்­பதை பார்த்த பிற­கு­தான் முடிவு செய்ய முடி­யும் என்று கூறு­கி­றது. தொகுதி எண்­ணிக்கை அதி­க­ரிப்­பின் மூலம் டைம் பாம் வெடிப்­பது தடுக்­கப்­ப­டு­மா­னால் அது­தானே நல்­லது? எண்­ணிக்கை அதி­க­ரிப்பு+ மாநில விகி­தா­சார உறை­நிலை என்­பதை பல மாநி­லக் கட்­சி­க­ளும் ஏற்­கும் வாய்ப்பு உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஆனால் காங்­கி­ரஸ் திடீ­ரென்று 543 மாறவே கூடாது, மாறி­னால் பேரா­பத்து என்று கூக்­கு­ர­லி­டு­ வ­தும், இந்த மாற்று சாத்­தி­யத்தை பரி­சீ­லிப்­பதே மாநில நல­னுக்­குத் துரோ­கம் என்­ப­தும் மிக மோச­மான நாட­கம் என்­பது மட்­டு­மல்­லா­மல், உண்­மை­யான மாநில நல­னுக்கு எதி­ரா­க­வும் உரு­வாக வாய்ப்­பி­ருக்­கி­றது. ஏனெ­னில் மாநில கட்­சி­க­ளின் முது­கில் குத்­தும் காங்­கி­ர­ஸின் போக்­கி­னால், பா.ஜ.க.-வை 2029 தேர்­த­லில் அத­னால் வீழ்த்த முடி­யுமா என்­பதே பெரி­தும் ஐயத்­திற்­கு­ரி­ய­து­தான். வேறு புதிய கட்­சி­கள், காக்­ரோச் கட்சி போன்­றவை தோன்றி அத­னைச் செய்­ய­லாம். ஆனா­லும் மூன்­றில் இரண்டு பங்கு இடங்­கள் சாத்­தி­ய­மா­குமா என்று தெரி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சாத்­தி­ய­மா­க­வில்லை என்­றால் டைம் பாம் வெடித்தே தீரும். வெடித்­தா­லும் தி.மு.க. போரா­டும். இந்­தித் திணிப்பை எதிர்த்து போரா­ட­வில்­லையா? அப்­படி ஒரு போராட்­டம் வெடித்­தால் அது மாநில சுயாட்­சிக்­கான போராட்­ட­மா­க­வும் இருக்­கும். ஆனால் அந்­தப் போராட்­டத்­திற்­குக் கொடுக்க வேண்­டிய விலை அதி­க­மாக 
இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காங்­கி­ரஸ் போரா­டுமா என்று தெரி­யாது. காலனிஆதிக்­கத்­திற்கு எதி­ராக1942-ஆம் ஆண்டு போரா­டிய பிறகு, அது எந்­தப் போராட்­டத்தை மேற்­கொண்­டது என்று சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. சுதந்­திர இந்­தி­யா­வில் பெரும்­பா­லான போராட்­டங்­கள் காங்­கி­ரஸை எதிர்த்­து­தான் நடந்­துள்­ளன. மேலும் மாநி­லங்­க­ளுக்கு இடை­
யி­லான விகி­தா­சா ­ரம் பாதிப்­ப­தால் காங்­கி­ர­ஸிற்கு பெரிய பிரச்­சினை கிடை­யாது. ஆனால் தொகு­தி­கள் எண்­ணிக்கை அதி­க­ரித்­தால் அதற்கு கடு­மை­யான பிரச்­சினை ஏற்­ப­டும். இங்­கே­தான் காங்­கி­ரஸ் நல­னுக்­கும், தமிழ்­நாட்டு நல­னுக்­கும் முக்­கி­ய­மான முரண்­பாடு தோன்­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அனை­வ­ரும் ஆழ்ந்து சிந்­திக்க வேண்­டிய தரு­ணம் இது. கட்­டப்பா யார்? எட்­டப்­பர் யார்?</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>