<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,65,960,1027" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 11 2026 12:06:42 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260812T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="12082026-TRY-06" position.sequence="06" ex-ref="12082026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">கழகத்தின் வாளாகவும் கேடயமாகவும் திகழுகிறது கழக வழக்கறிஞர் அணி! கழகத் தோழர்களுக்குக் காவலர்களாக –    </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="64">களத்தில் போராளியாக களமாடுகிறது தி.மு.க. வழக்கறிஞர் அணி!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">தென் மண்டல – கழக வழக்கறிஞரணிக் கூட்டத்தில் – முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. உரை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="THANGAM_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="RajendranSalem_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">மதுரை, ஆக. 12–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">“கழ­கத்­தின் வாளா­க­வும் கேட­ய­மா­க­வும் திக­ழு­கி­றது கழக வழக்­க­றி­ஞர் அணி” என்­றும் – “கழ­கத் தோழர்­க­ளுக்­குக் காவ­லர்­க­ளாக, களத்­தில் போரா­ளி­யாக கள­மா­டும் வழக்­க­றி­ஞர் அணி” என்­றும் – தென் மண்­டல கழக வழக்­க­றி­ஞ­ர­ணிக் கூட்­டத்­தில் பேசிய முன்­னாள் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு எம்.எல்.ஏ. குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இக்­கூட்­டத்­தில் அவர் பேசி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">உங்­கள் அனை­வ­ருக்­கும் என்­னு­டையவணக்­கத்தை நாள்­மு­தற்­கண் பணி­வன்­போடு தெரி­வித்­துக் கொள்ள விரும்­பு­கி­றேன்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கழக சட்­டத்­து­றை­யி­னு­டைய கலந்­து­ரை­யா­டல் கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு உங்­க­ளி­டத்­திலே உரை­யாற்­று­வ­தற்­கான நல்ல வாய்ப்பை வழங்­கி­யி­ருக்­கக்­கூ­டிய சட்­டத்­து­றைக்­கும், குறிப்­பாக சட்­டத்­து­றை­யி­னு­டைய செய­லா­ளர் மதிப்­பிற்­கு­ரிய அண்­ணன் என்.ஆர். இளங்கோ அவர்­க­ளுக்­கும் என்­னு­டைய மன­மார்ந்த நன்­றி­யி­னைத் தெரி­விக்க விரும்­பு­கி ­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தில், தாய் கழ­கத்­திற்­குத் துணை­யா­கப் பல்­வேறு அணி­கள் துணை அமைப்­பு­க­ளா­கச் செயல்­பட்டு வரு­வதை நாம் நன்­றாக அறிந்­தி­ருக்­கி­றோம். ஒரு காலத்­தில் சார்பு மன்­றங்­கள் என்­கின்ற வகை­யில், அவை கழ­கத்­திற்கு பல­மூட்டி வந்த காலம் ஒன்று உண்டு. அதற்­குப் பின்­னாலே கழ­கத்­திலே பல்­வேறு அணி­களை உரு­வாக்­கக்­கூ­டிய வாய்ப்பு வந்­த­போ­தும், அந்த அணி­கள் ஒவ்­வொன்­றும் தனக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய பொறுப்­பி­னைத் திறம்­பட நிறை­வேற்­றிச் செய­லாற்றி வந்­தா­லும், நம்­மு­டைய வழக்­க­றி­ஞர் அணிக்கு மட்­டும் மற்ற அணி­க­ளுக்கு இல்­லாத ஒரு பெரும்­பெ­ருமை உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">களத்­திலே சட்­டத்­துறை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மற்ற அணி­கள்,’அணி­கள்’ என்று அழைக்­கப்­பட்­டா­லும், வழக்­க­றி­ஞர் அணி ஒன்­று­தான் கழ­கத்­திலே ‘சட்­டத்­துறை’ என்ற அள­வில் அழைக்­கப்­பட்ட ஒரு அணி. அது வேறு எந்த அணிக்­கும் கிடைக்­காத ஒரு கௌர­வம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">நான் சட்­ட­மன்­றத்­திலே கூட்­டு­ற­வுத் துறை­யி­னு­டைய மானி­யக் கோரிக்கை விவா­தம் வரு­கி­ற­போது ஒன்­றைக் குறிப்­பி­டு­வேன். அர­சாங்­கத்­திலே பல்­வேறு துறை­கள் இருக்­க­லாம்; ஆனால், பல்­வேறு துறை­கள் இருந்­தா­லும்கூட்­டு­றவு ஒன்று மட்­டும்­தான் ஒரு ‘இயக்­கம்’ என்ற வகை­யில் அறி­யப்­பட்­டது என்று சொல்­வேன். ‘Cooperative Movement’ என்று வரக்­கூ­டிய சிறப்பை அந்­தத் துறை பெற்­றது என்று சொல்­வேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அதே­போல, கழ­கத்­திலே பல்­வேறு அணி­கள் இருந்­தா­லும், அணி­க­ளுக்­கெல்­லாம் மேலாக அது ஒரு ‘துறை’ என்­கின்ற அள­வில் அந்­தச் சிறப்­பைப் பெற்­றி­ருக்­கக்­கூ­டி­யது இந்­தத் துறை. இந்­தச் சிறப்பு இன்று நேற்று ஏற்­பட்­டது அல்ல; கழ­கத்­தின் தொடக்க காலத்­தி­லி­ருந்து மூத்த வழக்­க­றி­ஞர்­கள் பெரும்­பா­லா­னோர் இடம்­பெற்­றி­ருக்­கக்­கூ­டிய ஒரு அமைப்பு, ஒரு அர­சி­யல் கட்­சிக்கு வாய்க்­கப்­பெற்­றது என்று சொன்­னால், தமிழ்­நாட்­டின் அர­சி­யல் வர­லாற்­றில் நான் உறு­தி­யோடு சொல்­வேன், அந்த வாய்ப்­பைப் பெற்ற ஒரே இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அந்த வழி­வ­ழி­யாக வந்த பரம்­ப­ரை­யில் தான் இன்­றைக்கு அண்­ணன் என்.ஆர். இளங்கோ போன்­ற­வர்­கள் அந்த மூத்த வழக்­க­றி­ஞர்­க­ளாக இன்­றைக்கு அந்­தப் பணி­யி­னைத் திறம்­பட செய்­வ­தோடு, தங்­க­ளுக்­குப் பின்­னாலே நாற்­றாங்­கா­லில் உங்­க­ளைப் போல ஏரா­ள­மான வழக்­க­றி­ஞர்­களை இன்­றைக்கு வழி­ந­டத்தி வந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">வழக்­க­றி­ஞர் அணி­யி­னு­டைய பணி என்­பது நீதி­மன்­றங்­க­ளிலே மட்­டும் முடங்­கிப் போவ­தைத்­தாண்டி, இன்­றைக்கு அர­சி­யல் தளத்­திலே இயங்­கக்­கூ­டிய இந்த அணி மிக முக்­கி­ய­மான பணி­க­ளைச் செய்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">குறிப்­பா­கச் சொல்ல வேண்­டு­மென்­றால், வேறு எந்த அர­சி­யல் கட்­சி­யும் எண்­ணிப்­பார்க்­காத அள­வில், தேர்­தல் களத்­தி­லும் மிக முக்­கி­ய­மான பங்­காற்­றக்­கூ­டிய ஒரு பொறுப்­பினை வேறு எந்த அர­சி­யல் கட்­சி­யி­லும் இல்­லாத வகை­யில் ஒரு அணி மேற்­கொண்­டி­ருக்­கி­றது என்று சொன்­னால், அது திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய வழக்­க­றி­ஞர் அணி என்­பதை நாம் பெரு­மை­யா­கச் சொல்ல முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தேர்­த­லுக்கு முன்­பும் சரி, தேர்­தல் நடை­பெற்ற காலத்­தி­லும் சரி, ஏன் தேர்­தல் முடி­வு­கள் வந்­த­தற்­குப் பிறகு தேர்­த­லுக்­குப் பின்­னால் இருக்­கக்­கூ­டிய காலங்­க­ளி­லும் சரி, இந்த மூன்று காலங்­க­ளி­லும் தேர்­தல் பணி­யி­னு­டைய பொறுப்பை மிகச்­ச­ரி­யாக நம்­மு­டைய வழக்­க­றி­ஞர் அணி நிறை­வேற்­றிக் கொண்­டி­ருக்­கி­றது. கார­ணம், வழக்­க­றி­ஞர் அணி தன்­னு­டைய பொறுப்­பு­களை விரி­வு­ப­டுத்தி அதை ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">உதா­ர­ணத்­திற்கு நான் ஒன்­றைச் சொல்ல வேண்­டு­மென்­றால், கடந்த காலத்­தை­எ­டுத்­துக்­கொள்­வோம்;மிகக்­கு­று­கிய காலத்தை எடுத்­துக்­கொள்­வோம். இந்த ஒரு மாத காலத்தை மட்­டும் கூட நீங்­கள் எடுத்­துக்­கொண்­டால், இந்த அணி­யி­னு­டைய செயல்­பா­டு­களை உற்று கவ­னித்­தீர்­கள் என்­றால் ஒன்றை புரிந்­து­கொள்ள முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் இந்த ஒரு வார காலத்­தில் மிகப்­பெ­ரிய எழுச்­சி­யைப் பெற்­றி­ருக்­கி­றது. எனக்கு முன்­னாலே பேசிய அருமை அண்­ணன் மூர்த்தி அவர்­கள் அதை அழ­கா­கச் சொன்­னார். திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தேர்­த­லுக்­குப் பிறகு இயற்­கை­யாக ஏற்­ப­டக்­கூ­டிய ஒரு சிறு சோர்­விலே நம்­மு­டைய தோழர்­கள் சிக்­கி­யி­ருந்த நேரத்­தில், வீறு­கொண்டு எழுந்து அத்­தனை பேரை­யும் வீதிக்கு வர­வ­ழைத்து, ‘திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­றைக்­கும் தமிழ்­நாட்­டின் வர­லாற்­றில் அழிக்க முடி­யாத, அசைக்க முடி­யாத ஒரு இயக்­கம்; இந்த இயக்­கம் ஓர் எஃகுக் கோட்டை’ என்­பதை நிரூ­பிக்­கக்­கூ­டிய ஒரு வாய்ப்பை, ஆளக்­கூ­டிய தமி­ழ­க­வெற்­றிக்­க­ழ­கம் தானாக நமக்­குத் தந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஆயி­ரம் பேர் கூடி, பொதுக்­கூட்­டங்­கள் நடத்தி, விளக்க உரை­கள் நடத்தி, மாநா­டு­கள் நடத்தி நமக்­குக் கிடைத்­தி­ராத ஒரு எழுச்­சியை, நம்­மு­டைய இளை­ஞ­ர­ணி­யின் செய­லா­ளர், எதிர்க்­கட்­சித் தலை­வர் மரியா­ தைக்­கு­ரிய உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­களை ஒரு காலை நேரத்­தில் அவர்­கள் செய்த அந்­தக்­கைது இயற்­கை­ யா­கவே நமக்­கு­வ­ரு­கி­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">எதிர்க்­கட்­சித் தலை­வர் கைது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">உங்­க­ளுக்­கெல்­லாம் நினை­வி­ருக்­ கும், 2001-இல் இதே­தான் நடந்­தது. நள்­ளி­ர­விலே சென்று கலை­ஞரை கைது செய்­தார்­கள். இந்த நாடே கொந்­த­ளித்­தது. திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தோழர்­கள் அத்­தனை பேரும் வீதிக்கு வந்­தார்­கள். அன்­றைக்­குத் தமிழ்­நாட்­டிலே திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தோழர்­க­ளைச் சிறை­யில் வைப்­ப­தற்­குக் கூட இடம் கிடை­யாது. மதுரை சிறைச்­சாலை­ யின் வெளியே இருக்­கக்­கூ­டிய அர­ச­ரடி மைதா­னத்­தில் அன்­றைக்கு இரவு முழு­வ­தும் கழிக்­கக்­கூ­டிய நிலைமை கழ­கத் தோழர்­க­ளுக்கு வந்­தது. கிளைச் சிறை­க­ளில் வைக்க முடி­ய­வில்லை; கல்­யாண மண்­ட­பத்­தில் வைக்க முடி­ய­வில்லை;எந்த இடத்­தி­லும் வைக்க முடி­ய­வில்லை.அத்­தனை கழ­கத் தோழர்­கள் அன்­றைக்­குக் களத்­திற்கு வந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அதே போன்ற ஒரு உணர்வை மீண்­டும் தட்­டி­யெ­ழுப்­பிய நிகழ்­வாக இந்த முறை நம்­மு­டைய எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் கைது திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு அமைந்­தது. ஆனால், அது அமை­கி­ற­போது அந்த இடத்­தைச் லாவ­க­மா­கக் கையா­ளக்­கூ­டிய பொறுப்பு யாருக்கு வந்­தது என்று கேட்­டால், கழ­கத்­தி­னு­டைய சட்­டத்­து­றைக்கு, கழ­கத்­தி­னு­டைய வழக்­க­றி­ஞர் அணிக்கு வந்­தது. அந்­தப் பொறுப்பைஅது ஏற்­றுக்­கொண்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கழ­கத்­தி­னு­டைய தோழர்­கள் அத்­தனை பேரும் தொலைக்­காட்­சி­யிலே பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள்; ‘என்ன நிக­ழப்­போ­கி­றது, என்ன நடை­பெ­றப்­போ­கி­றது’ என்று. அங்கே அந்த இடத்­திற்கு நம்­மு­டைய சட்­டத்­து­றை­யி­னு­டைய செய­லா­ளர் என்.ஆர். இளங்கோ அவர்­க­ளும் மூத்த வழக்­க­றி­ஞர்­க­ளும் செல்­லக்­கூ­டிய அந்­தக் காட்­சி­யி­னைப் பார்த்­த­வு­டன் நம்­மி­டத்­திலே ஒரு நம்­பிக்கை பிறக்­கி­றது ,’ஆஹா! வந்­து­விட்­டார்­கள், நமக்கு எந்­தப் பிரச்­சி­னை­யும் வராது’ என்று, அவர்­க­ளுக்­குப் பாது­காப்­பாக அவர்­கள்­செல்­கி­றார்­கள்.காவல்­துறை அதி­கா­ரி­க­ளி­டத்­தில் கடு­மை­யாக நம்­மு­டைய வாதங்­களை முன்­வைக்­கி ­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அதற்­குப்­பின்­னால், அவ­ரைக் கைது செய்து அழைத்­துச் செல்­வ­தற்கு முன்­பாக, இந்த மிகக் குறு­கிய கால­கட்­டத்­திற்­குள்­ளாக ஒரு ராஜ­தந்­திர நட­வ­டிக்கை என்று கூட நான் சொல்­ல­லாம்; அதைப் பற்றி நான் விரி­வா­கச்­சொல்ல­ விரும்­ப­வில்லை. அந்த இடைப்­பட்ட மிகக் குறு­கிய கால அள­விற்­குள்­ளாக உயர்­நீ­தி­மன்­றத்­தின் கத­வு­க­ளைத் தட்டி, உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­ச­ரி­டத்­திலே ஓர் உத்­த­ர­வி­னைப் பெறு­கி­றார்­கள். ‘நம்­மு­டைய எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­களை 12 மணிக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வ­தற்கு முன்­பாக நீங்­கள் கைது செய்­யக்­கூ­டாது; ஆனால்­அ­வர்­கள்­கை­து­செய்­து அ­ழைத்­துச்­செல்­லும்­நிலை­யி­லும்­மு­றை­யிட்டு, அப்­படி நீங்­கள் அவரை அழைத்­துச் சென்­றி­ருக்­கி­றீர்­கள்­என்­று­சொன்­னால், அன்­றைக்­குள்­ளா­கவே அவரை விடு­விக்க வேண்­டும்’ என்­கின்ற உத்­த­ரவை இந்த வழக்­க­றி­ஞர் அணி அன்­றைக்­குப் பெறு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">நாட்­டில் இருக்­கக்­கூ­டிய அத்­தனை பேரும் தொலைக்­காட்­சி­யில் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றோம். எல்­லோ­ரும் ‘என்ன தீர்ப்பு வரு­கி­றது’ என்று பார்க்­கி­ற­போது, மிகச் சரி­யான, மிக அற்­பு­த­மான தீர்ப்பை அன்­றைக்கு கழ­கத்­தி­னு­டைய வழக்­க­றி­ஞர் அணி நமக்கு பெற்­றுத் தரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">காவல்­துறை திண­றி­யது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தஞ்சை மாந­க­ரத்­திற்கு அவரை அழைத்­துச் செல்­கி­றார்­கள். சென்­னை­யி­லி­ருந்து தஞ்சை மாந­க­ரத்­திற்கு எந்த வழி­யில் அழைத்­துச் செல்ல முடி­யும் என்­ப­தற்கு அன்­றைக்­குக் காவல்­துறை எவ்­வ­ளவு திண­றி­யது என்று நாம் பார்த்­துக் கொண்­டி­ருந்­தோம். அரி­ய­லூர் வழி­யாக அழைத்­துக் கொண்டு வரு­கி­றார்­களா, கும்­ப­கோ­ணத் தின் வழி­யாக அழைத்­துக்­கொண்டு வரு­கி­றார்­களா, அல்­லது திரு­வெ­றும்­பூர் வழி­யாக வரு­கி­றார்­களா என்ற குழப்­ப­மெல்­லாம் முடிந்து, அவரை தஞ்சை நக­ருக்கு அழைத்­துச் சென்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஆனால், எந்­தக் காவல் நிலை­யத்­தில் அவர் மீது வழக்கு பதி­யப்­பட்­டதோ, அந்­தக் காவல் நிலை­யத்­திற்கு அவரை அழைத்­துச் செல்ல முடி­யாத அள­விற்கு கழ­கத்­தின்தோழர்­கள், 25 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட தோழர்­கள் தஞ்சை மாந­க­ரத்­தில் அன்­றைக்­குக் குழு­மி­யி­ருந்­தார்­கள். அப்­படி குழுமி­ யிருக்­கக்­கூ­டிய ஒரு எழுச்சி வாய்ந்த நிலை­யில், கழ­கத்­தி­னு­டைய எதிர்க்­கட்­சித் தலை­ வரை, கழ­கத்­தி­னு­டைய மாண்­பைக் கட்­டிக் காக்­கக்­கூ­டிய ஒரு அற்­பு­த­மான காரி­யத்­தைக் கழ­கத்­தி­னு­டைய வழக்­க­றி­ஞர் அணி அன்­றைக்­குச் செய்து காட்­டி­யது என்­பதை திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய ஒவ்­வொரு தோழ­ரும் மறந்­து­விட முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அது­மட்­டு­மல்ல தோழர்­களே, இது­தான் நமக்­குக் கிடைக்­கக்­கூ­டிய ஒரு மிக முக்­கி­ய­மான ஒன்று. கழ­கத்­தி­னு­டைய தோழர்­கள் ஆங்­காங்கே இருக்­கி­றீர்­கள்; உங்­க­ளுக்­குப் பாது­காப்­பாக நாங்­கள் இருக்­கி­றோம். தோழர்­களே, நாம் இன்­றைக்கு எதிர்க்­கட்­சி­யில் இருக்­கி­றோம். ஆளுங்­கட்­சி­யில் இருக்­கி­ற­போது கழ­கத்­தி­னு­டைய வழக்­க­றி­ஞர் அணி பல காரி­யங்­க­ளைச் செய்­தி­ருக்­கி­றது. இதே இடத்­தில் நாம் கூட்­டம் போட்­டுப் பேசி­யி­ருக்­கி­றோம். எப்­படி தேர்­தல் களத்தை அணு­கு­வது என்­பது பற்றி நமக்கு பாடங்­கள் நடத்­தி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இப்­போது எதிர்க்­கட்­சி­யில் இருக்­கி­றோம். எதிர்க்­கட்­சி­யில் வரு­கி­ற­போது கூட நம்மை எப்­படி பாது­காத்­துக் கொண்டு வர வேண்­டும், நாம் ‘Defensive’ ஆக மாத்­தி­ரம் இருக்­கக் கூடாது, தேவைப்­பட்ட நேரத்­தில் நம்­மு­டைய வாதங்­களை வலு­வாக வைத்து, நமக்கு வரக்­கூ­டிய ஆபத்­து­க­ளை­யும் தடுத்து நிறுத்தி, எதி­ரா­ளிக்கு எதி­ரா­கத் திருப்­பி­யும் போரா­டக்­கூ­டிய அந்­தச் சக்­தியை வழங்­கக்­கூ­டிய அள­வில் நம்­மு­டைய வழக்­க­றி­ஞர் அணி மிகச் சிறப்­பா­கச் செயல்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">நமக்­காக போரா­டக்­கூ­டி­ய­வர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இது ஒரு பக்­கம் நடந்து கொண்­டி­ருக்­கி­றது. அதே நேரத்­தில் பார்த்­தீர்­கள் என்­றால், கொளத்­தூர் தொகு­தி­யில், மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரம்­மூ­ல­மாக நாடு முழு­தும் வாக்­க­ளித்து வந்­த­தற்கு அப்­பு­றம், இது­வரை அதில் எந்­தப் பிரச்­சி­னை­ யும் இல்லை என்­று­தான் நம்­பிக் கொண்­டி­ருந்­தார்­கள். முதன்­மு­றை­ யாக அந்த எண்­ணத்தை உடைத்து, ‘மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரத்­தில் தவறு நடந்­தி­ருக்­கி­றது, இந்த இயந்­தி­ரம் வேலை செய்­ய­வில்லை, பழு­து­பட்­டி­ருக்­கி­றது, இந்­தத் தேர்­த­லில் முறை­கேடு நடப்­ப­தாக நாங்­கள் கரு­து­வ­தற்கு முகாந்­தி­ரங்­கள் இருக்­கி­றது’ என்­பதை அங்கே சென்று நிறு­வக்­கூ­டிய அள­வில், ஒரு பக்­கம் இந்த வேலை­கள்; இன்­னொரு பக்­கம் பார்த்­தீர்­கள் என்­றால் நமக்­கா­கப் போரா­டக்­கூ­டிய வேலை­கள். இவற்­றை­யெல்­லாம் ஒருங்­கி­ணைத்­துக்­கொண்டு ஒரு குறு­கிய கால­கட்­டத்­தில் வழக்­க­றி­ஞர் அணி இன்று எடுத்­துச் சென்­றி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">என­வே­தான், இந்த அணி­யி­னு­டைய முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்து, இன்­றைக்கு மிகக் குறு­கிய கால அழைப்­பில் தமிழ்­நாடு முழு­வ­தி­லும் இருந்து, நம்­மு­டைய தென்­மண்­ட­லத்­தி­லி­ருந்து இவ்­வ­ளவு பேர் வந்­தி­ருக்­கி­றீர்­கள். ‘வந்­தி­ருக்­கக்­கூ­டி­ய­வர்­கள் ஒட்­டு­மொத்­த­மாக எல்­லோ­ரும் வாருங்­கள்; வழக்­க­றி­ஞர்­கள் அல்­லது அடி­மட்­டத்­தில், காவல் நிலைய அள­வில் இருக்­கக்­கூ­டிய எல்லா வழக்­க­றி­ஞர்­க­ளும் வாருங்­கள்’ என்று கூப்­பிட்­டி­ருந்­தால், இந்த மண்­ட­பத்­தில் நிச்­ச­ய­மா­கக் இட­மி­ருந்­தி­ருக்­காது. ஆனால், மாவட்ட அள­வில் இருக்­கக்­கூ­டிய முக்­கி­ய­மான நிர்­வா­கி­கள் வாருங்­கள் என்­று­தான் அழைப்பு வந்­தது. அந்த அழைப்­பி­லேயே இத்­தனை பேர் வந்­தி­ருக்­கி­றீர்­கள் என்­ப­து­தான் வழக்­க­றி­ஞர் அணி­யின் உயி­ரோட்­ட­மும் உணர்­வோட்­ட­மும் மிக்க செயல்­பாட்­டைக் காட்­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">எனவே, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு வழக்­க­றி­ஞர் அணி ஒரு போர்­வீ­ரன் போன்­றது. தலை­வர் கலை­ஞர் அவர்­கள் சொல்­வார்­கள்: “ஒரு போர்­வீ­ரன் களத்­திற்­குப் போகி­றான் என்­றால், எந்­தக் கையில் அவன் வாளை ஏந்­து­கி­றான், எந்­தக் கையில் கேட­யத்தை ஏந்­து­கி­றான் என்­பதை அவனே முடிவு செய்­வான்” என்று. அப்­படி போர்க்­க­ளத்­திற்­குப் போகக்­கூ­டிய அந்­தப் போர்­வீ­ரன் கையில் வாளா­க­வும் கேட­ய­மா­க­வும் இருக்க வேண்­டிய நிலை இது. வாளாக நின்று போரா­ட­வும் வேண்­டும்; கேட­ய­மாக இருந்து வரக்­கூ­டிய கேடு­க­ளி­லி­ருந்து நம்­மைக்­காப்­பாற்­ற­வும் வேண்­டும். இந்த இரண்டு பொறுப்­பு­க­ளை­யும் வழக்­க­றி­ஞர் அணி மிகச் சிறப்­பாக எடுத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10">தூய்­மை­யான அணி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அந்த வகை­யில், நம்­மு­டை­ய­ம­து­ரை­யில் நீங்­கள் இதை நடத்­து­வது சாலப் பொருத்­த­மா­ன­ஒன்று. கார­ணம், 2,000 வரு­டங்­க­ளுக்கு முன்­னால், காப்­பிய காலங்­க­ளி­லேயே முதன்­மு­றை­யா­கப் பிரா­து­கொ­டுத்து, வழக்கு தொடுத்து, வழக்கை நடத்­திய இடம் இந்த இடம்.கண்­ணகி! முதன்­மு­றை­யாக வழக்கு தொடுத்து, ஒரு அர­ச­னி­டமே நேர­டி­யா­கப் போராடி, “நீ செய்­தது தவறு” என்று தன் வழக்­குக்­குத் தானே வாதாடி, யார் குற்­ற­வாளி என்­பதை நிரூ­பித்­து­விட்­டுப் போகக்­கூ­டிய வாய்ப்­பைப் பெற்ற மண் இது. தமிழ்­நாட்­டிற்­குத்­தான் அந்­தச் சிறப்பு உண்டு, வேறு எங்­குமே இருக்­காது. நீதி பரி­பா­ல­னத்­தைப் பார்த்­தீர்­கள் என்­றால், மனி­தர்­கள் மட்­டு­மல்ல, ஒரு மாடு கூட வந்து தனக்­கான நீதி­யைப் பெற முடி­யும் என்று ஒரு காலத்­தில் நிரூ­பிக்­கப்­பட்­ட­தா­கச் சொல்­லக்­கூ­டிய இடம் நம்­மு­டைய தமிழ்­நாடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">எனவே, நீதி பரி­பா­ல­னத்­தில் நமக்கு என்று ஒரு நீண்ட பாரம்­ப­ரி­யம் இருக்­கி­றது. அந்­தப் பாரம்­ப­ரி­யத்­தில், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­கின்ற இந்த ஜன­நா­யக இயக்­கத்­திற்கு, கழ­கத்­தி­னு­டைய தலை­மைக்கு, கழ­கத்­தி­னு­டைய தோழர்­க­ளுக்கு ஒவ்­வொரு கட்­டத்­தி­லும் வழக்­க­றி­ஞர் அணி­யா­கிய நீங்­கள் உத­வி­க­ளைச் செய்­தி­ருக்­கி­றீர்­கள். தேர்­தல் காலத்­தில் பெரும் உத­வி­யைச் செய்­தி­ருக்­கி­றீர்­கள்; தேர்­த­லுக்­குப் பின்­னால் எதிர்க்­கட்­சி­யாக இருக்­கக்­கூ­டிய காலத்­தி­லும் மிகப்­பெ­ரிய அள­வில் செய்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இங்கே பேசும்­போது சொன்­னார்­கள், கடந்த காலத்­தில் பல­ருக்­குப் பல வாய்ப்­பு­கள் கிடைக்­கா­மல் போயி­ருக்­கக்­கூ­டிய சூழ்­நி­லையை அண்­ணன் மூர்த்தி அவர்­க­ளும் சொன்­னார். ஆனால் இன்­றைக்கு நிலைமை என்ன என்­பதை நீங்­கள் பார்த்­தி­ருப்­பீர்­கள். ஆளுங்­கட்­சி­யில் இருக்­கக்­கூ­டிய ஒரு வழக்­க­றி­ஞரே, ‘என்ன கார­ணத்­தி­னால் தனக்கு அந்­தப் பொறுப்பு கிடைக்­க­வில்லை’ என்று பகி­ரங்­க­மா­கச் சொல்­லக்­கூ­டிய ஒரு நிலைமை இன்­றைக்கு இருக்­கி­றது. அப்­படி ஒரு சொல்லை நம்­மு­டைய வழக்­க­றி­ஞர் அணி­யைப் பற்றி யாரா­வது சொல்­லி­விட முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">எந்த அள­விற்கு ஒரு தூய்­மை­யான அணி­யாக, எல்­லோ­ரும் மதிக்­கக்­கூ­டிய அணி­யாக, பாராட்­டக்­கூ­டிய அணி­யாக, ஆளக்­கூ­டிய பொறுப்­பில் இருந்­தா­லும் எதிர்க்­கட்­சிப் பொறுப்­பில் இருந்­தா­லும் எல்­லா­வற்­றி­லும் மிகச் சிறப்­பாக இன்­றைக்கு இயங்­கிக் கொண்­டி­ருக்­கும்­இந்­த­அ­ணிக்கு, விரு­து­ந­கர் வடக்கு மாவட்­டக் கழ­கத்­தின் சார்­பி­லும், என்­னு­டைய தனிப்­பட்ட சார்­பி­லும், இந்­நி­கழ்­விற்­குத் திர­ளாக வருகைதந்து இந்த அணி­யி­னைச் ஆங்­காங்­கே­சி­றப்­புற வழி­ந­டத்­திக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய வழக்­க­றி­ஞர் பெரு­மக்­க­ளுக்­கும் என் மன­மார்ந்த வாழ்த்­து­க­ளை­யும் நன்­றி­யை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>