<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="12/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,66,958,1190" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 11 2026 23:12:12 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260812T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="12082026-VLR-09" position.sequence="09" ex-ref="12082026-VLR-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">தமிழ்­நாட்டு மக்­கள் அனை­வரது உள்­ளங்களிலும் எங்­கள் தலை­வர் இருக்­கி­றார்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="110">திரா­விட மாடல் ஆட்­சி­யின் சிறப்­பு­களை வட­ மா­நி­லங்­க­ளுக்­கும் உணர்த்­தி­ய­வர் எங்­கள் தலை­வர்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">சட்­டப் பேர­வை­யில் எஸ்.ரகு­பதி பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="RagupathyC_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">சென்னை, ஆக. 12 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">சட்­டப் பேர­வை­யில் – நிதி 
மற்­றும் வேளாண் துறை நிதி நிலை அறிக்­கை­கள் மீதான விவா­தத்­தில் கலந்து கொண்டு பேசிய திரு­ம­யம் தொகுதி கழக உறுப்­பி­னர் – முன்­னாள் அமைச்­சர் எஸ்.ரகு­பதி, “தமிழ்­நாட்டு மக்­கள் அனை­வ­ரது உள்­ளங் களிலும் வாழ்­கி­றார், எங்­கள் 
தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின்”  அவர்கள் என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">சட்­டப் பேர­வை­யில் எஸ்.ரகு­பதி பேசி­ய­தா­வது: –
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">அன்­னைத் தமி­ழாம் நம்­மு­டைய தமிழ் மொழிக்கு செம்­மொழி என்­கின்ற அந்த அந்­தஸ்­தைப் பெற்­றுத் தந்து, இயல், இசை, நாட­கம் என்­கின்ற முத்­த­மி­ழோடு நான்­காம் தமி­ழாக கணி­னித் தமி­ழைத் தந்து தமிழ்­நாட்டு இளை­ஞர்­க­ளுக்­கெல்­லாம், ஒரு சிறந்த எதிர்­கா­லத்தை கணி­னி­ ம­ய­மாக்­கல் மூல­மாக உரு­வாக்­கித் தந்த எங்­க­ளு­டைய அன்பு தெய்­வம் தலை­வர் கலை­ஞ­ரு­டைய நினைவு நாளில் இன்­றைக்கு நாங்­கள் முத­லில் அவரை வணங்­கு­கி­றோம். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">நம்­மு­டைய நிதி­ய­மைச்­சர் அவர்­கள் கையில் ஜெப மாலை­யோடு வந்து நிதி­நிலை அறிக்­கையை வாசித்­தார்­கள். நம்­மு­டைய வேளாண்­மை–­உ­ழ­வர் நலத் துறை அமைச்­சர் அவர்­கள் திருப்­பதி ஏழு­ம­லை­யானை தரி­சித்­து­விட்டு  லட்டு, புளி­யோ­த­ரை­ யோடு வந்து இங்கு வேளாண்­மைத் துறை­யி­னு­டைய அறிக்­கையை வாசித்­தார்­கள். ‘ஒன்றே குலம், ஒரு­வனே தேவன்’ என்­கின்ற பேர­றி­ஞர் பெருந்­தகை அண்­ணா­வின் வழி­யிலே வந்­த­வர்­கள் நாங்­கள். எனவே, என்­றைக்­குமே திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் திரா­விட மாடல் ஆட்­சியை முன்­னெ­டுத்­துச் செல்­கிற ஒரு இயக்­கம். அத­னு­டைய தலை­வர்­தான், இன்­றைக்கு தமி­ழ­கத்­திற்கு மட்­டு­மின்றி இந்­தியா முழு­வ­தும் விந்­தி­யத்­திற்கு வடக்­கே­யும் உள்­ள­வர்­கள் தெரிந்­து­கொள்­கின்ற வண்­ணம் திரா­விட மாடல் ஆட்­சியை இன்­றைக்கு வட­நாட்­டிற்­கும் உணர்த்­தி­ய­வர் எங்­க­ளு­டைய முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) அந்­தத் தலை­வர் எங்கே என்று கேட்­கின்­ற­வர்­க­ளுக்­கெல்­லாம் என்­னு­டைய உரை­யில் பல்­வேறு விளக்­கங்­கள்­மூ­லம் எங்­கெங்­கெல்­லாம் அவர் இருக்­கின்­றார் என்­பதை நான் விளக்க இருக்­கின்­றேன். அந்த ஈடு இணை­யற்ற தலை­வ­ரு­டைய புதல்­வ­ராக, வேங்­கை­யின் மைந்­த­னாக, எதற்­கும் அஞ்­சாத சிங்­க­மாக, எது வந்­தா­லும் துணிந்­து­நின்று போரா­டக்­கூ­டிய வல்­லமை பெற்­ற­வ­ராக (மேசை­யைத் தட்­டும் ஒலி) எங்­க­ளு­டைய இளங்­க­லை­ஞர் என்று இன்­றைக்கு திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய தொண்­டர்­க­ளாலே புக­ழப்­ப­டு­கிற எங்­க­ளு­டைய சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­களே, (மேசை­யைத் தட்­டும் ஒலி) தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­களே, அமைச்­சர் பெரு­மக்­களே, எங்­க­ளு­டைய அன்­புக்­கு­ரிய சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சி­யி­னு­டைய துணைத் தலை­வர், கொறடா, துணைக் கொறடா, முன்­னாள் அமைச்­சர் பெரு­மக்­கள், அனைத்து சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், முன்­னாள் முத­ல­மைச்­சர்­கள் இரு­வர் இங்கே இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">எனவே, முன்­னாள் முத­ல­மைச்­சர் ­க­ளுக்­கும், அனை­வ­ருக்­கும் முத­லில் என்­னு­டைய நெஞ்­சார்ந்த நன்­றி­யை­யும், வணக்­கத்­தை­யும் இந்த உரை­யில் பேசு­வ­தற்­கான வாய்ப்­பினை எனக்கு உரு­வாக்­கித் தந்­தி­ருக்­கின்ற நம்­மு­டைய சட்­ட­மன்ற பேர­வைத் தலை­வர் அவர்­கள் என்­னு­டைய நெடு­நா­ளைய நண்­பர் ஆவார். அவர்­களை இந்த உச்­சத்­தில் உட்­கார வைத்து அழகு பார்க்க வேண்­டு­மென்று நாங்­கள் அன்­றைக்கே நினைத்­தி­ருந்­தோம்.         இன்­றைக்கு அவ­ருக்கு  வாய்ப்பு   கிடைத்­தி­ருக்­­   கிறது. உட்­கார்ந்­தி­ருக்கி­றார்­கள். வாழ்த்­து­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">நிதி­நிலை அறிக்­கைக்­குள் செல்­வ­தற்கு முன்­னால், ஒரு சில கருத்­து­களை நான் இங்கே சொல்ல வேண்­டிய அவ­சி­யம் இருக்­கி­றது. உதா­ர­ண­ மாக மாநில தக­வல் ஆணை­யம் என்று ஒன்று இருக்­கி­றது. அந்த மாநில தக­வல் ஆணை­யத்­தி­டம் சில கேள்­வி­களை சிலர் கேட்­டி­ருக்­கி­றார்­கள். அதன் நகல்­கூட என்­னி­டம் தரப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால், அந்த மாநில தக­வல் ஆணை­யத்­தின் உறுப்­பி­னர்­கள் நிய­மிக்­கப்­ப­டா­த­தால்  இன்­னும் தக­வல்­கள் அளிக்­கப்­ப­ட­வில்லை என்று சொல்­கி­றீர்­கள். நாங்­கள் எதி­லும் வெளிப்­ப­டை­யா­ன­வர்­கள்; ஒளிவு மறைவு கிடை­யாது; இப்­ப­டிச் சொல்­கின்ற இந்த அரசு, இன்­னும் ஏன் அவர்­களை நிய­மிக்­க­வில்லை? பதில் தர­வில்லை? தங்­க­ளுக்கு வேண்­டி­ய­வர்­க­ளை­யெல்­லாம் பல்­வேறு பொறுப்­பு­க­ளில் நிய­மித்­தி ­ருக்­கி­றீர்­கள்,  அது  குறித்து  தக­வல்­க­ளைக் கேட்­கின்­ற­போது, தக­வல் ஆணை­யத்­தில் இன்­னும் உரிய ஆணை­யர்­கள் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை என்­கிற தக­வ­லைத் தரு­கி­றார்­கள்; எனவே, விரைந்து நிய­மித்து, மாநில தக­வல் ஆணை­யம் செயல்­பட வேண்­டும்; அதன்­மூ­ல­மாக மக்­கள் பல செய்­தி­க­ளைத் தெரிந்­து­கொள்ள இந்த அரசு வெளிப்­ப­டை­யான உண்­மை­யான அர­சாக, போலித்­த­னம் இல்­லாத அர­சாக செயல்­ப­டு­கி­றோம் என சொல்­கிற நீங்­கள் நிச்­ச­யம் அதைச் செய்ய வேண்­டு­மென்று  முத­லில் நாங்­கள்  கேட்­டுக்­கொள்­ளக் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">அடுத்­தாக ஒரு ஆங்­கில பத்­தி­ரி­கை­யில் ஒரு செய்தி வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கி­றது. திரு. பிர­வீன் சக்­ர­வர்த்தி என்­கின்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அவர்­க­ளது தலை­மை­யில் காங்­கி­ரஸ் கட்­சி­யில் All India Professionals’ Congress மற்­றும் Data Analytics wing ஆகிய அமைப்­பு­கள் செயல்­ப­டு­வ­தா­க­வும், இதன்­வா­யி­லாக பிர­வீன் சக்­ர­வர்த்தி அவர்­கள் தமிழ்­நாடு அர­சின் கொள்­கை­களை வடி­வ­மைப்­ப­தி­லும்,   Montek Singh Ahluwalia போன்­ற­வர் தலை­மை­யி­லான Revenue Augmentation Committee அமைப்­ப­தி­லும், ஆலோ­ச­னை­க­ளை­யும், அறி­வு­ரை­க­ளை­யும் வழங்­கு­வ­தாக அந்த ஆங்­கி­லப் பத்­தி­ரிகை செய்தி தெரி­வித்­தி­ருக்­கி­றது. அது உண்­மையா?அப்­ப­டி­யொரு Committee இருக்­கி­றதா?அவ­ருக்­கென்று தனி­யாக ஒரு அதி­கா­ரத்தை இந்த அரசு தந்­தி­ருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">பத்­தி­ரி­கைச் செய்­தி­களை அடிப்­ப­டை­யாக வைத்­துக்­கொண்டு மட்­டு­மல்ல, பல்­வேறு தக­வல்­கள் இன்­றைக்கு வந்த கார­ணத்­தி­னால் அதைச் சொன்­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">வீண் செலவு குறை­யும் என்­பது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">எதன் அடிப்­ப­டை­யில்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">அடுத்­த­தாக நம்­மு­டைய நிதி, திட்­டம் மற்­றும் வளர்ச்­சித் துறை அமைச்­சர் அவர்­கள் 8 மற்­றும் 9–வது பக்­கத்­தில் ஒன்று சொல்­லி­யி­ருக்­கி­றார். அதா­வது, வளர்ந்­து­வ­ரும் இளம் contractors–க்கு எல்­லாம் நாங்­கள் வாய்ப்பு கொடுப்­ப­தற்­காக பல்­வேறு விதி­மு­றை­க­ளை ­யெல்­லாம் தளர்த்­தி­யி­ருக்­கின்­றோம். அது அவர்­க­ளுக்­கெல்­லாம் கிடைக்­கும். Tender–ல் ஆரோக்­கி­ய­மான   போட்டி    உரு­வா­கும்.  அத­னால்,   அர­சின்  வீண்­செ­ல­வு­கள் குறை­யும். ஆரோக்­கி­ய­மான போட்டி உரு­வா­கின்­ற­போது வீண்­செ­லவு குறை­யும் என்று சொல்­வது எந்த அடிப்­ப­டை­யில் என்­பது எங்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">அடுத்­தது, கசிவு, கசிவு என்று இதில் நிறைய இடங்­க­ளில் இருக்­கி­றது. கட்­ட­டங்­க­ளில் எங்­கே­யா­வது கசிவு இருந்­தால் சொல்­வார்­கள். என்­னவோ புதிய வார்த்­தையை கண்­டு­பி­டித்­தி­ருக்­கி­றீர்­கள். கசிவு, கசி­வு­நீர் கொட்­டின குட்­டை­கள் என்று சொல்­லித்­தான் நாங்­கள் கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றோம். கசிவு என்ற புதிய வார்த்­தை­யைக் கொண்டு வந்­தி­ருக்­கிற உங்­க­ளுக்கு என்ன சொல்­வது? எதை­யும் சொல்ல முடி­யாது. 
அடுத்­த­தாக எந்த tender–யும் நீங்­கள் இன்­னும் வைக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">அதை நாங்­கள் வர­வேற்­கி­றோம். இப்­போது bill வாங்­கு­வ­தற்கு ஒவ்­வொரு அலு­வ­ல­கத்­திற்­கும் சென்று பாருங்­கள். அமைச்­சர் அவர்­களே, Police Department உங்­கள் கையில்­தான் உள்­ளது. நீர்­வ­ளத் துறை­யில் 3 சத­வி­கி­தம் கொடுத்­தால்­தான் bill என்று சொல்­கி­றார்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) பொதுப் பணித் துறை­யில் 5 சத­வி­கி­தம் கொடுத்­தால்­தான் bill என்று சொல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">‘மக்­க­ளின் வரிப் பணத்­தில் இருந்து ஒரு பைசா­வும் தொடமாட்­டோம், தொட விட­மாட்­டோம்,தொட்­டால் விட­மாட்­டோம், இதற்கு முன் தொட்­ட­வர்­க­ளை­யும் விட­மாட்­டோம்’ என்று நிதி­நிலை அறிக்­கை­யில் நீங்­கள்­தான் சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். சனிக்­கி­ழமை அன்று பனை­யூ­ரில் நடக்­கும் அந்த வாரச் சந்­தை­களை போய் பார்த்­தீர்­கள் என்­றால், இதிலே  கொண்­டி­ருக்­கி­றார்­கள். இது உங்­க­ளு­டைய நிதி­நிலை அறிக்­கை­யில் இருக்­கி­றது. (குறுக்­கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">நீங்­கள் தொட்­டால் விட­மாட்­டேன்என்று சொல்­வ­தெல்­லாம் subjectதானே! அந்த subject—நீங்­கள் கொடுத்­தி­ருக்­கின்ற நிதி­நிலை அறிக்­கை­யி­    லி­ருந்து பேசு­கி­றேன். அதி­லி­ருந்து பேசக்­கூ­டாது என்று சொன்­னால் நான் என்ன செய்ய முடி­யும்?  அதை வைத்து பேசு­கி­றேன். (குறுக்­கீடு) சரி, right விட்­டு­வி­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">அதா­வது, எங்­க­ளு­டைய ஆட்­சிக்­கா­லத்­தில், எங்­க­ளு­டைய தலை­வர், முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள், சாலை விபத்­திலே காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு உட­ன­டி­யாக, வைத்­தி­யம் பார்த்து காப்­பாற்ற வேண்­டும். ஏனென்­றால், அதற்­கு­முன்­னர் யாரும் கவ­னிக்க மாட்­டார்­கள். பார்த்­தால், police–ல் FIR போட்டு, நம்மை சாட்­சிக்கு கூப்­பிட்­டு­வி­டு­வார்­கள் என்று யாரும் பார்க்க மாட்­டார்­கள். எனவே, 48 மணி­நே­ரத்­திற்­குள், “இன்­னு­யிர் காப்­போம்–­ நம்மை காக்­கும் 48” என்­கின்ற திட்­டத்­தைக் கொண்­டு­வந்து, உட­ன­டி­ யாக அவர்­களை மருத்­து­வ­ம­னை­ க­ளில் கொண்டு சென்று சேர்த்து, அவர்­க­ளுக்கு இரண்டு இலட்­சம் ரூபாய் வரை—­கா­ய­ம­டைந்­த­வர் ராஜஸ்­தான் மாநி­லத்தை சார்ந்­த­வரோ, கேரள மாநி­லத்­தைச் சார்ந்­த­வரோ அல்­லது கர்­நா­டக மாநி­லத்­தைச் சார்ந்­த­வரோ, எந்த மாநி­லத் ­தைச் சார்ந்­த­வர்­கள் என்­றெல்­லாம் பார்க்­க­வில்லை. உயி­ரைக் காப்­பாற்ற வேண்­டும். தமிழ்­நாட்­டிலே விபத்­தி­னால் ஓர் உயிர் போகக்­கூ­டாது என்­கின்ற அந்த சீரிய நோக்­கத்­தோடு (மேசை­யைத் தட்­டும் ஒலி) இரண்டு இலட்­சம் ரூபாயை உட­ன­டி­யாக (மேசை­யைத் தட்­டும் ஒலி) யார் பணத்­தை­யும், யாரை­யும் எதிர்­பார்க்க வேண்­டாம். அந்­தக் காய­ ம­டைந்­த­வ­ரின் தாய் வரு­கி­றாரா, தந்தை வரு­கி­றாரா, மகன் வரு­கி­றாரா, மகள் வரு­கி­றாரா என்­றெல்­லாம் பார்க்க வேண்­டாம். நீ உட­ன­டி­யாக அவர்­க­ளுக்­கான வைத்­தி­யத் ­தைச் செய்; அதற்­கான பணத்தை இந்த அரசு தரும் என்று தந்­த­வர் எங்­க­ளு­டைய முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள். இன்­றைக்கு அந்­தத் திட்­டத்­தைப் பற்றி இதில் எது­வும் குறிப்­பி­ட­வில்லை. விபத்­துக் காப்­பீட்­டுத் திட்­டம் என்று போட்­டி­ருக்­கி­றீர்­களே தவிர, road accident–களில் இரண்டு இலட்­சம் ரூபாய், எந்­தக் கேள்­வி­யு­மில்லை. FIR இருந்­தால் போது­மா­னது. எந்த cards–ம், எது­வும் தேவை­யில்லை. அந்­தத் திட்­டம் இருக்­கின்­றதா என்­பதை நம்­மு­டைய மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் அவர்­கள், தன்­னு­டைய மானி­யக் கோரிக்­கை­யில்­கூட 
சொல்­ல­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">குறிப்­பி­டா­த­தால்­தான் அதைப்­பற்றி பேச வேண்­டி­ய­தா­கி­விட்­டது. அடுத்­தது, ‘வெற்றி 150 நாட்­கள்’. இந்த அரசு, ஒன்­றிய அர­சி­டம் surrender ஆகி­விட்­டது என்­ப­தற்­கான எடுத்­துக்­காட்­டான முதல் திட்­டம், அந்­தத் திட்­டம். VB–G RAM G. 40 சத­வி­கி­தம் மாநில அரசு நிதி; 60 சத­வி­கி­தம் மத்­திய அரசு நிதி. அந்­தத் திட்­டம் கிரா­மப்­புற வேலை­வாய்ப்­பு­ க­ளுக்­கா­னது. நாங்­கள் வேண்­டா­மென்று எதிர்த்­தோம். அத­னால் எங்­க­ளுக்கு 3,591 கோடி ரூபாய் பணம் வர­வில்லை. பணம் வர­வில்லை என்­றா­லும்­கூட, அந்த மக்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பைக் கொடுத்­தோம். ஆனால், எந்­தக் காலத்­தி­லும் நாங்­கள் உங்­க­ளுக்கு பணிய மாட்­டோம் என்று சொல்­லி­விட்டு, நாங்­கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை­வாய்ப்­புத் திட்­டம்­தான் வேண்­டு­மென்று வலி­யு­றுத்­தி­னோம். VB–G RAM G திட்­டத்தை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. ஆனால், இன்­றைக்கு ஒன்­றிய அர­சுக்­கு—­சத்­த­மே­யில்­லா­மல் செய்து விடு­வீர்­கள். அது­தான் உங்­க­ளு­டைய சாதனை! எப்­படி election–ல் சத்­தமே இல்­லா­மல் வந்­தீர்­களோ; அது­போல சத்­தமே இல்­லா­மல் surrender ஆகி­வி­டு­கி­றீர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">பட்­ஜெட்டில் இருக்­கும் நிறைக் குறை­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">சொல்­வதுதான் எங்­க­ளு­டைய கடமை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">முன்­னாள் அமைச்­சர் நம்­மு­டைய தங்­கம் தென்­ன­ரசு அவர்­கள் 
பேசி­யது போன்­ற­வற்­றை­யெல்­லாம்      இன்­றைய பள்­ளிக் கல்­வித் துறை அமைச்­சர் அவர்­கள் சொன்­னார். நான் கொஞ்­சம் சத்­த­மா­கப் பேசி­விட்­டேன். அத­னால், அவ­ருக்கு ஏதோ நான் கோப­மாக கொந்­த­ளித்து பேசு­வ­து­போல் தோன்­றி­யி­ருக்­கி­றது. எதிர்க்­கட்சி விமர்­சித்­து­தான் ஆக­வேண்­டும். பட்­ஜெட்டை வர­வேற்­கி­றேன் என்று சொல்­லி­விட்டு உட்­கா­ரு­வ­தற்கு எதற்கு நான் இங்கே வரு­கி­றேன். இதற்­கா­கவா என்னை திரு­ம­யம் தொகு­தி­யி­லி­ருந்து மக்­கள் தேர்ந்­தெ­டுத்து அனுப்­பி­யி­ருக்­கி­றார்­கள்? அர­சுக்கு வேண்­டிய ஆலோ­ச­னை­க­ளை­யும் சொல்ல வேண்­டும். பட்­ஜெட்­டில் என்ன நிறை குறை­கள்இருக்­கி­றது அதை சொல்ல வேண்­டும். அது­தான் எங்­க­ளு­டைய கடமை. அந்­தக் கட­மை­யைத்­தான் நாங்­கள் செய்­கின்­றோம். நாங்­கள் முத­ல­மைச்­ச­ரைப்­பற்றி தப்­பாக சொல்­ல­வில்­லையே; மற்ற அமைச்­சர்­க­ளை­தான் சொல்­கி­றோம். முத­ல­மைச்­சர் அவர்­கள், உங்­க­ளி­டம் சொல்­லிக்­கொண்­டே­தான் இருக்­கி­றார், யாரும் லஞ்­சம் வாங்­கக்­கூ­டாது, எது­வும் பண்­ணக்­கூ­டாது என்று;  என்­ப­து­தான் எங்­க­ளுக்குவருத்­தம். (மேசை­யைத் தட்­டும் ஒலி)
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">மொத்­த­மாக இந்த வர­வு–­செ­ல­வுத் திட்­டத்­தில் என்­னென்ன நிறை குறை­கள் என்­ப­தற்கு வந்­து­வி­டு­வோம். 2026–2027 இடைக்­கால வர­வு–­செ­ல­வுத் திட்­டத்­தில் இருந்த 3,93,272 கோடி ரூபா­யி­லி­ருந்து, திருத்­திய வர­வு –­ செ­ல­வுத் திட்ட மதிப்­பீ­டு­கள், 2026–2027–ல் 4,05,802 கோடி ரூபா­யாக உயர்த்­தப்­பட்­டி­ருக்­கி­றது. அதா­வது, நீங்­கள் வந்த பிறகு, 12,530 கோடி ரூபாயை உயர்த்­தி­யி­ருக்­கி­றீர்­கள். நாங்­கள் அளித்த வர­வு  –­  செ­ல­வுத் திட்­டத்­   திற்­கும், இப்­போது இருக்­கக்­கூ­டிய வர­வு –­ செ­ல­வுத் திட்­டத்­திற்­கும் இடை­யே­யுள்ள வித்­தி­யா­சம் 12,530 கோடி ரூபாய் உயர்வு. ஆனால், இவ்­வாறு உயர்த்­தி­ய­தோடு இல்­லா­மல், MGNREGS–ல் வர வேண்­டிய தொகை 3,451 கோடி ரூபாய் claim செய்­தி­ருக்­கி­றோம். Metro Rail second phase; அதை­யும் நீங்­கள் கேட்­டு­விட்­டீர்­கள். அதை 9,523 கோடி ரூபாய் கடன் வாங்கி கட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றோம். அந்த நிதி­யை­யும் மத்­திய அர­சி­டம் கேட்­டி­ருக்­கி­றீர்­கள். அந்த வகை­யில் 12,974 கோடி ரூபாய். இரண்­டை­யும் சேர்த்­தால், சுமார் 26,000 கோடி ரூபாய், எங்­க­ளு­டைய பட்­ஜெட்­டை­விட தற்­போது நீங்­கள் கூடு­த­லாக செல­விற்கு பட்­ஜெட் போட்­டி­ருக்­கி­றீர்­கள். ஆனால், நாங்­கள் குறை­வாக செலவு செய்­கி­றோம்; நாங்­கள்    செல­வைக்    குறைத்­தி­ருக் ­கின்­றோம் என்று சொல்­கி­றீர்­கள். ஆனால், இங்கு 26,000 கோடி ரூபாய் உங்­கள் பட்­ஜெட் மூல­மாக கூடு­த­லாக செலவு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை இந்த அவை­யின் கவ­னத்­திற்­குக்  கொண்­டு­வ­ரக்   கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">விடி­யல் பய­ணத்­தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="10.2">எங்­கள் தலை­வர் இருக்­கி­றார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">200 யூனிட் மின்­சா­ரம் குறித்­தெல்­லாம்  யாருக்­கும் கிடைக்­க­வில்லை. மூன்­றரை இலட்­சம் பேர் மனு கொடுத்­தி­ருப்­ப­தாக செய்தி       வந்­தி­ருக்­கி­றது; பலர் இன்­றைக்­குக் காத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள்; யாருக்­கும் கிடைக்­க­வில்லை. நீங்­கள் சொன்ன மக­ளிர் உரி­மைத் தொகை,யாருக்­கும் கிடைக்­க­வில்லை. ஆனால், எங்கே இருக்­கி­றார் எங்­க­ளு­டைய  தலை­வர்  என்று  கேட்­ட­வர்­க­ளுக்­குச் சொல்­கி­றோம்; மக­ளிர் உரி­மைத் தொகை  வாங்­கு­கிற ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய உள்­ளத்­தி­லும் இருக்­கி­றார்; (மேசை­யைத் தட்­டும் ஒலி) புது­மைப் பெண் திட்­டம், தமிழ்ப் புதல்­வன் திட்­டம் ஆகி­ய­வற்­றின்­மூ­லம் பய­ன­டைந்­தி­ருக்­கிற பய­னா­ளி­க­ளின்      உள்­ளத்­தி­லும் இருக்­கி­றார்; அதே­போல, அரசு நக­ரப் பேருந்­தில் பய­ணம் செய்­ப­வர்­க­ளு­டைய விடி­யல்          பய­ணத்­தில் அவர் இருக்­கி­றார்; விடி­யலை நீங்­கள் எடுத்­து­விட்­டீர்­கள், பர­வா­யில்லை; தமிழ்­நாட்­டிற்கு விடி­யல் எங்­க­ளால் மீண்­டும் கிடைக்­கும்; எனவே, அந்த விடி­யல் பய­ணத்­தில் அவர் இருக்­கி­றார். (மேசை­யைத்    தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">காலை உண­வுத் திட்­டத்­தில் இருக்­கி­றார்; இவ்­வாறு ஒவ்­வொரு திட்­டங்­க­ளாக அடுக்­கிக்­கொண்டே போக­லாம். அத­னால், எல்லா வகை­யி­லும், தமிழ்­நாட்டு மக்­க­ளு­டைய இத­யங்­க­ளி­லும் அவரை இருக்­கச் செய்­தி­ருக்­கின்­றோம். ஆனால், ஓட்­டுப்­போ­டும் அந்த நேரத்­தில்­தான், சின்­னக் குழந்­தை­க­ளுக்கு எந்­தத் திட்­டம் குறித்­தும் தெரி­யா­த­தால், அவர்­கள் குறுக்கே புகுந்­த­னர். ஆனால், நீங்­கள் தற்­போது அறி­வித்­துள்ள 812 கோடி ரூபா­யில் ‘அண்­ணன் சீர்’       நிச்­ச­ய­மாக கொடுக்க முடி­யாது. ஏனென்­றால், 2022–2023–ல் மட்­டும் நாங்­கள் மூவ­லூர் இரா­மா­மிர்­தம் அம்­மை­யார், முத்­து­லெட்­சுமி ரெட்டி அம்­மை­யார் திரு­மண நிதி­யு­த­வித் திட்­டங்­க­ளின்­கீழ் நிதி­யு­தவி வழங்­கப்­பட்ட பெண்­க­ளு­டைய எண்­ணிக்கை மட்­டும் 1 இலட்­சம். எல்லா பெண்­க­ளை­யும் கணக்­கிட்­டால் நிச்­ச­ய­மாக 2 இலட்­சம், 3 இலட்­சம் எண்­ணிக்கை வரும். ஒரு சவ­ரன் தங்­கம் இன்­றைக்கு ரூ.1,05,000/– ஆக உள்­ளது. உங்­க­ளு­டைய அதிர்ஷ்­டம் அது ஒரு இலட்­சத்­திற்கு வரட்­டும். பட்­டுப் புடவை விலை ரூ.10,000/–க்கு வரட்­டும். இவ்­வாறு ரூ.1,10,000/–ஐ, ரூ.1,00,000/– ஆக மாற்­றி­னால்­கூட அண்­ணன் சீர் திட்­டத்­திற்கு 2,000 கோடி ரூபாய்க்­குக் குறை­யா­மல் நிதி வேண்­டும். ஆனால், நிதி­ய­மைச்­சர் அவர்­கள் அதற்கு ஒதுக்­கி­யி­ருப்­பதோ 812 கோடி ரூபாய் மட்­டும்­தான். மிதி­வண்­டி­கள் வழங்­கு­வ­தா­கச் சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். நாங்­கள் ரூ.3,900/– மதிப்­பி­லான மிதி­வண்­டி­கள் கொடுத்­தோம். Modern branded cycles கொடுக்­க­வுள்­ள­தாக நீங்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். அதன் விலை மதிப்பு 8,000 ரூபாய் என்று சொல்­கி­றார்­கள். அந்த 8,000 ரூபாய் மதிப்­பி­லான சைக்­கிள் கொடுத்­தீர்­க­ளென்­றால், அதற்­கான செல­வுத் தொகை­யை­யும் கணக்­கிட்­டுப் பார்த்­துக்­கொள்­ளுங்­கள். எனவே, நீங்­கள் போட்­டி­ருப்­ப­தெல்­லாம் அரை­கு­றை­யா­கத்­தான் இருக்­கி­றது. (மணி­ய­டிக்­கப்­பெற்­றது) முழு­மை­ய­டை­கின்ற தொகை அதில் ஒதுக்­கப்­ப­ட­வில்லை. எனவே, இந்த பட்­ஜெட்­டில் நீங்­கள். . . (குறுக்­கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">ஒவ்­வொரு ஆண்­டி­லும் மீளப்­பெ­றும் சாத்­தி­யக்­கூ­று­க­ளி­னு­டைய அடிப்­ப­டை­யில், நீங்­கள் கொடுத்­தி­ருக்­கிற நிதி­நிலை அறிக்­கை­தான். அரசு உத்­த­ர­வா­தங்­கள் முந்­தைய ஆண்­டின் மொத்த வரு­வாய் கணக்கு வர­வு­க­ளில் 75 சத­வி­கி­தம் அல்­லது மாநில மொத்த உள் நாட்டு உற்­பத்தி மதிப்­பீட்­டில் 7½ சத­வி­கி­தம், இவற்­றில் எது குறை­வா­னதோ அந்த அள­வுக்கு கடன் வாங்­கு­தல் அமை­யப்­பெற வேண்­டும். அதை எங்­க­ளு­டைய அரசு மொத்த வரு­வாய் வர­வு­க­ளில் 23.46 சத­வி­கி­த­மா­க­வும், மாநி­லத்­தின் மொத்த உள் நாட்டு உற்­பத்தி மதிப்­பீட்­டில்1.86 தான் நாங்­கள் வாங்­கி­யி­ருக்­கி­றோம். அதே அள­விற்கு நீங்­கள் maintain செய்து காண்­பித்­தாலே போதும்.புதி­தாக நாங்­கள் ஏதோ கடன் எல்­லாம் வாங்கி வைத்­து­விட்­டோம் என்று சொல்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">அடுத்­தது, நாங்­கள் GDP growth rate இந்­தி­யா­வி­லேயே இரண்­டா­வதுஇடத்­திலே 11.19 சத­வி­கி­தம் கொண்டுவந்­தி­ருக்­கி­றோம். (மேசை­யைத் தட்­டும் ஒலி) நீங்­கள் 11.19 முடி­யாது.ஆனால், 10 சத­வி­கி­த­மா­வது கொண்டுவர முயற்சி செய்­யுங்­கள். அப்­போ­து­தான் தமிழ்­நாடு வள­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இந்த நேரத்­தில்எனக்­குப் பேசு­வ­தற்­கான வாய்ப்­பினை அளித்த நம்­மு­டைய பேர­வைத் தலை­வர் அவர்­க­ளுக்­கும், என்னை மூன்­றா­வது முறை­யா­கத் தேர்ந்­தெ­டுத்து, சட்­ட­மன்­றத்­திலே பேசு­வ­தற்­கான வாய்ப்­பை­யும், தொகு­திக் குறை­க­ளை­யும், மக்­க­ளுக்­கான குறை­க­ளை­யும் சொல்­லக்­கூ­டிய வாய்ப்பை உரு­வாக்­கித் தந்­தி­ருக்­கிற, எந்­நா­ளும் என் நெஞ்­சில் இருக்­கக்­கூ­டிய திரு­ம­யம் தொகுதி மக்­க­ளுக்­கும், என்­றைக்­கும் நான் உழைக்­கின்ற புதுக்­கோட்டை மாவட்ட மக்­க­ளுக்­கும் இந்த நேரத்­தில் என்­னு­டைய நெஞ்­சார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொண்டு, என்­னு­டைய தொகு­திக் கோரிக்­கை­களை மனு­வாக பேர­வைத் தலை­வர் அவர்­க­ளி­டம் தந்­து­வி­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">இவ்­வாறு சட்­டப்­பே­ர­வை­யில் எஸ்.ரகு­பதி பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>