<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,92,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 13 2026 03:30:40 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260813T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="13082026-CBE-03" position.sequence="03" ex-ref="13082026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">   5   ஆண்டுகால கழக ஆட்சியில் விவசாயிகள்   போராட்டம்   இல்லாமல் வாழ்ந்தார்கள்      !</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="34">சட்டப்பேரவையில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரை...   முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">மாற்றத்தையே காணோம்; ஏமாற்றம்தான் அதிகமாக உள்ளது!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">என்று ஒரு வார்த்தை சொன்­னார். அதில் எங்­க­ளுக்­கெல்­லாம் வருத்­தம். இது பேசிய இயக்­கம். திரா­விட இயக்­கங்­கள் பேசிய இயக்­கம். கொள்­கை­யைப் பேசிப் பேசி ஆட்­சி­யைப் பிடித்­த­வர்­கள் நாங்­கள்; மக்­க­ளு­டைய மன­தைத் தொட்­ட­வர்­கள்; நாங்­கள் மக்­கள் மன­தி­லி­ருந்து வந்­த­வர்­கள். அத்­த­கைய உணர்­வுள்­ள­வர்­கள் திரா­விட இயக்­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">நாங்­கள் Tension. ஆக, இருந்­தோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">நீங்­கள் Relax ஆக இருக்­கி­றீர்­கள் !</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நாங்­க­ளாக இருந்­தா­லும் சரி, அ.தி.மு.க.-வாக இருந்­தா­லும் சரி. நாங்­கள் எல்­லாம் முர­சொலி--. இன்­னும் சொல்­லப்­போ­னால், நாங்­கள் அமைச்­ச­ராக இருந்­த­பொ­ழுது, கலை­ஞர் அவர்­கள் இருந்­த­போ­தும் சரி, மு.க. ஸ்டாலின் அவர்­கள் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போ­தும் சரி, எங்­க­ளுக்­கெல்­லாம், மந்­தி­ரி­க­ளுக்­கெல்­லாம் ஒருபர­ப­ரப்பு இருக்­கும். காலை­யில் 6.00 மணிக்­கெல்­லாம்அங்கே போக வேண்­டும். காலை 6.00 மணி, 7,00 மணி, 8.00 மணி­யைத் தாண்­டி­னால்­தான் எங்­க­ளுக்­கெல்­லாம் நிம்­ம­தி­யாக இருக்­கும். ஏனென்­றால், கலை­ஞ­ரா­னா­லும் சரி, எங்­க­ளு­டைய முதல்­வ­ராக இருந்­தா­லும் சரி, காலை­யில் newspaper-ஐப் பார்த்­து­விட்டு, தொலைக்­காட்­சி­யைப் பார்த்­து­விட்டு, முதல்­வ­ராக இருந்த எங்­கள் அண்­ணன் தள­பதி அவர்­கள், அந்­தந்த துறை­க­ளின் அதி­கா­ரி­க­ளைத் தொடர்­பு­கொண்டு நேர­டி­யா­கப் பேசு­வார்­கள். அந்­தத் துறை­யின் அமைச்­ச­ரைத் தொடர்­பு­கொண்டு, இந்த இடத்­தில் இந்­தப் பிரச்­சினை என்று பேசு­வார்­கள். Collectors-க்கும் tension. ஆக, tension-லேயே ஐந்­தாண்டு காலம் இருந்­தோம். ஐந்­தாண்டு கால­மாக இருந்­தா­லும், ஐந்­தாண்டு கால­மும் tension ஆக நாங்­கள் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­ க­ளைப் பார்த்­தோம். ஆனால், நீங்­கள் எல்­லாம் relax ஆக இருக்­கி­றீர்­கள். அது­தான் எங்­க­ளுக்கு ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கி­றது. நீங்­கள் relax ஆக இருக்­கி­றீர்­கள். நீங்­கள் எல்­லாம் relax ஆக இருக்­கி­றீர்­கள். நாங்­கள் எல்­லோ­ரும் tension ஆக இருந்­தோம். இங்கே அமர்ந்­தி­ருக்­கக்­கூ­டிய IAS அதி­கா­ரி­கள் எல்­லோ­ரும் tension ஆக இருப்­பார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அமைச்­சர் Bussy ஆனந்த், busy ஆக­தான் இருக்­கி­றார். அவர் busy ஆக இருக்­கி­றார்.  ஏனென்­றால், எல்லா கட்­சித் தொண்­டர்­க­ளை­யும் அவர் பார்க்க வேண்­டி­யுள்­ளது. புதி­தாக வந்த இயக்­கம். நாங்­கள் 1996-ல் அமைச்­ச­ராக இருந்­த­போது, எங்­க­ளுக்­கும் அது­போ­லத்­தான். இளை­ஞர்­க­ளும் எங்­களை வந்து பார்ப்­பார்­கள், கேட்­பார்­கள். இனி­மேல்­தான் உங்­க­ளுக்­குத் தெரி­யப்­போ­கி­றது. பாருங்­கள். எதிர்ப்­பாக மேடை­யில் பேசு­வது எளிது, ஆட்சி நடத்­தும்­போ­து­தான் கஷ்­டங்­கள் தெரி­யும். பாருங்­கள், தற்­போது மூன்று மாதங்­கள்­தான் ஆகி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">விவ­சா­யி­கள் போராட்­டம் இல்­லா­ம­லேயே 5 ஆண்­டுக்­கா­லம் வாழ்ந்­தார்­கள். அதைப் பாராட்ட வேண்­டும். (மேசை­யைத் தட்­டும் ஒலி) ஐந்­தாண்டு காலம் விவ­சா­யி­கள் தமி­ழ­கத்­தில் போராட்­டம் இல்­லா­மல் வாழ்ந்­தார்­கள். நான் முதன்­மு­த­லாக தஞ்­சை­யில் போய் விவ­சா­யக் கருத்­துக் கேட்­புக் கூட்­டத்தை நடத்­தும்­போது எப்­படி வெடித்­தது? அத­னைத் தாங்கி ஒவ்­வொன்­றாக--, இன்­னும் சொல்­லப்­போ­னால், இங்­கி­ருக்­கின்ற  முன்­னாள் அமைச்­சர் பெரு­மக்­கள், கே.என். நேரு அவர்­கள் பெரிய விவ­சாயி, மாடு­க­ளெல்­லாம் வளர்க்­கி­றார், அவர் கிட்­டத்­தட்ட 1,000 மாடு­களை வளர்க்­கி­றார், விவ­சா­யம் 1,000 ஏக்­கர் வாழை, தென்னை, நெல் பயிர்­கள். அதே­போல, அண்­ணன் எ.வ.வேலு அவர்­கள் tractor 
ஓட்­டு­வார், வய­லில் அண்டை வெட்­டு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">Ceiling-ஆ? (சிரிப்பு). ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்­கர் என்று பேசி­விட்­டேன். Non-ceiling அப்­போது இருந்­தது. இப்­போது செங்­கோட்­டை­யன் அவர்­க­ளுக்கு எவ்­வ­ளவு இருக்­கி­றது என்று கணக்­குப் பார்த்­தால் தெரி­யும். (சிரிப்பு) அவர் தென்னை விவ­சாயி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">நெல்­லுக்கு கிள்­ளிக் கொடுக்­கி­றீர்­கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அமைச்­சர் அவர்­கள் எந்­தப் போராட்­டம் என்று தெரி­யா­மல் பேசு­கி­றார். அது திரு­வண்­ணா­ம­லை­யில் SIPCOT-க்கு நிலம் எடுக்­கும்­போது நடந்த போராட்­டம். அதைப் பற்­றி­யும் அவர் பேசு­கி­றார். விவ­சா­யி­க­ளுக்கு நெல் விலையை உயர்த்தி, இது­வரை அவர் கேட்­க­வே­யில்லை. எங்­கள் ஆட்­சி­யில் திடீர் திடீ­ரென்று மழை பெய்­யும். உங்­கள் ஆட்­சி­யில் மழையே பெய்­ய­வே­யில்லை. திடீர் திடீ­ரென்று விவ­சா­யம் எல்­லாம் பாதிக்­கப்­பட்டு, உட­னுக்­கு­ட­னேயே எங்­க­ளு­டைய அன்­றைய  முத­ல­மைச்­சர் அவர்­கள் அங்கு சென்று பார்த்து, நாங்­கள் அங்கு ஓடிச் சென்று பார்த்து, மழை பெய்­தா­லும் நானும், சக்­க­ர­பாணி அவர்­க­ளும் சாலை­யில் சென்று நிற்க வேண்­டும். தஞ்சை டெல்டா பகு­தி­யில் சென்று நிற்­போம். அங்கு இருந்­தோம், அங்கு இருந்து விவ­சா­யி­க­ளின் போராட்­டக் களத்­தில் உட்­கா­ர­வில்லை. பச்­சைத் துண்­டு­வி­னு­டைய ஆதிக்­கம் அதி­கம். எங்­க­ளு­டைய ஆட்­சி­யில்­தான் பச்­சைத் துண்டு அதி­க­மாகவளர்ந்­தது. விவ­சா­யி­கள் சங்­கம் நிமிர்ந்து நடந்­தார்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆனால், இப்­போது நீங்­கள் சொன்­னீர்­கள்­தான், ஆட்­சிப் பொறுப்­பேற்­றால்,  முத­ல­மைச்­சர் அவர்­கள் சொன்­னாரே, நாங்­கள்ஆட்­சிக்கு வந்­தால், நான் விவ­சாயி வீட்­டுப் பிள்­ளை­யாக பிறப்­பேன் என்று சொன்­னாரே அது மக்­கள் மன­தில் இருந்­தது. அத­னால்­தான் மாற்­றத்தை, சரி இவர்­கள்­தான் கொடுத்­தார்­கள். எடப்­பாடி அவர்­கள்­தான் கொடுத்­தார்­கள். முந்­தைய ஆட்சி வந்து, இந்த ஆட்சி வந்து,  ஒரு புது ஆட்சி வந்­தால், நெல்­லுக்கு எதும் அள்­ளிக் கொடுப்­பார்­கள் என்று பார்த்­தால் இப்­போது கிள்­ளிக் கொடுத்­தி­ருக்­கி­றார். நாங்­கள் நெல்­லுக்கு 2,550 ரூபாய் கொடுத்­தோம், இப்­போது 2,750 ரூபாய் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். 200 ரூபாய் ஏற்­றிக் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நாங்­க­ளும் கடந்த ஆட்­சி­யில், நான் இதே இடத்­தில்­தான் அமர்ந்து கூறி­னேன். (கடந்த ஆட்­சி­யில் இதற்கு முன் தான் அமர்ந்­தி­ருந்த இருக்­கை­யைச் சுட்­டிக் காட்டி கூறி­னார்.) நாங்­கள் கரும்பு விலையை அறி­வித்­து­விட்டு, அடுத்த பட்­ஜெட்­டி­லி­ருந்து நாங்­கள் கரும்­புக்கு டன்­னுக்கு 4,000 ரூபாய் கொடுப்­போம் என்று இதே இடத்­தில் அமர்ந்­து­தான் நான் கூறி­னேன். இடைக்­கால பட்­ஜெட் தாக்­கல் செய்­யும்­போது, செங்­கோட்­டை­யன் அவர்­கள் இல்லை என்று நினைக்­கி­றேன். அப்­போது அவ­ரு­டைய பத­வியை அவர் resign செய்­து­விட்­டார் என்று நினைக்­கி­றேன். (சிரிப்பு) அப்­போது resign செய்­து­விட்­டார். அப்­போது அவர் இல்லை. 4,000 ரூபாய் கொடுப்­போம் என்று அந்த இடத்­தில் அமர்ந்து அறி­வித்­தேன். அதே­போல், நெல்­லுக்கு 2,550 ரூபாய் கொடுத்­தோம். 3,500 ரூபாய் கரும்­புக்கு விலை உயர்த்தி கொடுத்­தோம். நாங்­கள் ஆட்­சிக்கு வந்­தால் கரும்­புக்கு விலை 4,500 ரூபாய் கொடுப்­போம் என்று நீங்­கள் சொன்­னீர்­கள். நெல்­லுக்கு விலை 3,500 கொடுப்­போம் என்று சொன்­னீர்­கள். அதைத்­தான் கூறி­னேன், இப்­போது கிள்­ளிக் கொடுக்­கி­றீர்­கள் என்று கூறு­கி­றேன், மூன்று மாதத்­தில் கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள், போகப்­போக கொடுப்­பீர்­கள் என்­கிற நம்­பிக்கை இருக்­கி­றதா என்று தெரி­ய­வில்லை. ஏனென்­றால்,  முத­ல­மைச்­சர் அவர்­கள் நிதி­நிலை நெருக்­கடி இருக்­கி­றது என்று சொல்­லி­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">ரூ 20 ஆயி­ரம் கோடி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">விவ­சா­யக் கடனை தள்­ளு­படி செய்த கழக அரசு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதை நாங்­கள்­தான் கொடுத்­து­விட்­டோம், இதை ஏன் இவ்­வ­ளவு தூரம் படித்­துக்­கொண்டு என்­கி­றேன்? நாங்­கள் எங்­க­ளு­டைய தேர்­தல் அறிக்­கை­யில் சொன்­னோம், ரூ.2,500 நெல்­லுக்­குக் கொடுப்­போம் என்று சொன்­னோம். கரும்­புக்கு ரூ.4,000 கொடுப்­போம் என்று சொன்­னோம். அதை எங்­க­ளு­டைய ஆட்சி முடி­யும்­போது, ரூ.2,555 ஆக சன்ன இர­கத்தை நாங்­கள் உயர்த்­திக் கொடுத்­தி­ருக்­கின்­றோம்; படிப்­ப­டி­யா­கக் கொடுத்­தோம். நீங்­கள் ரூ.3,500 சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். ஆக, இப்­போது நீங்­கள் சொன்ன வார்த்­தை­க­ளைத்­தான் மக்­கள், விவ­சா­யி­கள் அதி­க­மாக நம்­பி­விட்­டார்­கள். நம்  முதல்­வர் அவர்­கள் ‘அடுத்த ஜென்­மம் இருந்­தால் வேளாண் குடும்­பத்­தில் நான் பிறக்க வேண்­டும்’ என்று சொன்­னார்­கள். ஆக, அந்த உணர்வு இருக்­கின்ற கார­ணத்­தி­னால், விவ­சா­யி­யா­கப் பிறக்க வேண்­டும் என்ற உணர்வு இருக்­கின்ற கார­ணத்­தி­னால், இப்­போது முத­ல­மைச்­சர் ஆன கார­ணத்­தி­னால், விவ­சா­யி­க­ளெல்­லாம் நம்­பி­விட்­டார்­கள். விவ­சா­யி­கள் நம்பி, இப்­போது நெல் விளைய வைத்தி­ ருப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கடன் தள்­ளு­படி என்று சொன்­னார்­கள். கலை­ஞர் அவர்­கள்­தான் முதன்­மு­த­லில், 1996-ல் ரூ.7,000 கோடி விவ­சா­யி­க­ளுக்­கா­கத் தள்­ளு­படி செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒரு பைசா­வுக்­காக போரா­டிய விவ­சா­யி­கள் பல குண்­டடி பட்டு இறந்­தார்­கள். ஆனால், அன்­றை­ய­தி­னம் 1996 ஆம் ஆண்டு கலை­ஞர் அவர்­கள் முத­ல­மைச்ச­ ராக இருந்­த­போது, ரூ.7,000 கோடியை ஒரே stroke-ல் தள்­ளு­படி செய்­தார். எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் பொறுப்­பேற்­ற­தற்கு பிறகு, 2021 ஆம் ஆண்டு 19,600 கோடி ரூபாயை தள்­ளு­படி செய்­தார். எப்­ப­டி­யென்­றால், ரூ.12,000 கோடி விவ­சாய கடனை தள்­ளு­படி செய்­தார்; அதே­போல், நகைக் கட­னை­யும் சேர்த்து செய்­தார்­கள். ஆக, ரூ.20,000 கோடி அள­விற்கு தள்­ளு­படி செய்த இயக்­கம், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்; எங்­க­ளு­டைய தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் தள்­ளு­படி செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">கலை­ஞர் 6 மாதத்­திற்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">வட்­டி­யில்லா கட­னைக் கொடுத்­தார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவற்­றை­யெல்­லாம் தெரிந்­து­கொண்­டு­தான் தேர்­தல் அறிக்கை தயார் செய்ய வேண்­டும். RBI விதி­ 
க­ளின்­படி, தள்­ளு­படி செய்த ரூ.6,000 கோடியை 3 மாதத்­தில் நீங்­கள் திரும்ப கட்ட வேண்­டும். ரூ.20,000 கோடி அள­விற்கு வாங்­கிய கடனை தள்­ளு­படி செய்­வோம் என்று நீங்­கள் வாக்­கு­றுதி அளித்­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சரி. தற்­போது இந்த மாதிரி கூறு­வது நல்­ல­தல்ல; மாற்­றத்­திற்கு நல்­ல­தல்ல. இது தெரிந்­து­தான் நாங்­கள் தேர்­தல் அறிக்­கை­யில், விவ­சாய கடனை தள்­ளு­படி செய்­வோம் என்று சொல்­ல­வில்லை. நாங்­கள் சொல்­ல­வில்லை; நீங்­கள் சொன்­னீர்­கள். 5 ஏக்­கர் வரை நாங்­கள் முழு­மை­யா­கத் தள்­ளு­படி செய்­வோம் என்று. இன்­னும் கூடு­த­லாக நீங்­கள் சொன்­னீர்­கள். அவ­ர­வர்­கள் ஒரு ஏக்­க­ருக்கு ரூ.50,000, ரூ.1,00,000 வாங்­கி­விட்டு, தள்­ளு­படி செய்­வார்­கள் என்று நினைத்­துக் கொண்டு பணத்தை செலுத்­த­வில்லை. இன்­னும் சொல்­லப்­போ­னால், ஒரு விவ­சாயி ரூ.1,00,000 வரை கூட்­டு­ற­வுக் கடன் வாங்­கி­னால், ஒரு வரு­டம் வரை வட்­டி­யில்லா கடன் அளிக்­கப்­பட்டு வந்­தது. இதன்­கா­ர­ண­மா­கத்­தான் விவ­சா­யி­கள் போரா­டு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கலை­ஞர் அவர்­கள் முதல்­வ­ராக இருந்­த­போது, 6 மாத காலத்­திற்கு வட்­டி­யில்லா கடனை கொடுத்­தார். (மேசை­யைத் தட்­டும் ஒலி) எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் பொறுப்­பேற்ற பிறகு, 1 வரு­டம் வரை வட்­டி­யில்லா கடன் வழங்­கப்­பட்­டது; ஒரு இலட்­சம் ரூபாய் கடன் வாங்­கி­னால், ஒரு வரு­டம் வரை வட்டி கிடை­யாது. ஒரு வரு­டம் கடந்து ஒரு நாள் வந்­தா­லும், ஒரு இலட்­சம் ரூபாய்க்­கான அந்த ஒரு வரு­டத்­திற்­கான முழு வட்­டி­யும் சேர்க்­கப்­ப­டும். அந்­தப் பிரச்­சி­னை­தான் தற்­போது நில­வு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தேர்­தல் அறிக்­கை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">நீங்­கள் சொன்­ன­தைச் செய்­ய­வில்லை!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">விவ­சா­யி­கள் ஏன் கத்­து­கி­றார்­கள் என்­றால், தற்­போது வாங்­கிய கடனை தள்­ளு­படி செய்­து­வி­டு­வார்­கள் என்று நினைத்து, அவர்­கள் வாங்­கிய கடனை காலத்­திற்­குள் கட்­டா­மல் இருந்­து­விட்­டார்­கள். அவர்­கள் loan-யும் வாங்க முடி­ய­வில்லை. தவணை தவ­றிய கடன் என்ற கார­ணத்­தி­னால், விவ­சா­யி­கள் கட­னும் வாங்க இய­ல­வில்லை. கொடுத்த கடனை செலுத்த முடிய­ வில்லை. வாங்­கிய கட­னில் சுமார் 21,000 கோடி ரூபாய் அள­விற்கு நீங்­கள் தள்­ளு­படி செய்­தாக வேண்­டும். ஆனால் 6,000 கோடி ரூபாய்­தான் தள்­ளு­படி செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. அந்த 6,000 கோடி ரூபாய் தள்­ளு­படி செய்­வ­தற்கு, பல போராட்­டங்­கள் செய்து, ஒரு step-ல் ஒரு bit போட்­டீர்­கள். 2,500 ரூபாய். அடுத்­த­தாக இரண்­டா­வது bit போட்டு, 50,000-லிருந்து 75,000 என்று அறி­வித்­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒரு இலட்­சம் வரை பயிர்க் கடன் கொடுக்­கப்­ப­டு­மென்று சொன்­னீர்­கள். அதைக்கொடுக்­க­வில்லை. விவ­சா­யி­க­ளுக்கு ஆண்­டுக்கு ரூ.15,000/- முன்­க­ட­னா­கக் கொடுப்­போம் என்று தேர்­தல் அறிக்­கை­யில் அறி­வித்­தி­ருக்­கின்­றீர்­கள். அதை­யும்இந்த நிதி­நிலை அறிக்­கை­யில் கொடுக்­க­வில்லை. இவை­ய­னத்­தும் நீங்­கள் சொல்­லி­ய­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் முத­ல­மைச்­சர் அவர்­கள் பொறுப்­பேற்ற பிறகு, நாங்­கள் தேர்­தல் அறிக்­கை­யிலே குறிப்­பிட்ட ஒரு கோடியே 31 இலட்­சம் பெண்­க­ளுக்கு மாதம் மாதம் ஆயி­ரம் ரூபாய் மக­ளிர் உரி­மைத் தொகையை கொடுத்­துக் கொண்­டி­ருந்­தோம். தொடர்ச்­சி­யாக கொடுத்­துக் கொண்­டி­ருந்­தோம். நாங்­கள் சொன்­ன­பி­றகு தற்­போது நீங்­கள் கொடுக்­கின்­றீர்­கள். அதே­போல நான் முதல்­வன் திட்­டத்­தின்­மூ­ல­மாக 48 இலட்­சம் மாண­வர்­கள், இளை­ஞர்­கள் சிறப்பு பயிற்சி பெற்று வேலை­வாய்ப்பு பெற தகு­தி­யு­டை­ய­வர்­க­ளாக, எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் ஆட்­சிக் காலத்­தில் இத்­திட்­டம் உரு­வாக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னும் சொல்­லப்­போ­னால், I.A.S., I.P.S. முதல்­நிலை தேர்­வு­க­ளில், முன்­பெல்­லாம் 10 பேர், 20 பேர்­தான் தேர்ச்சி பெற்­றார்­கள். நான் முதல்­வன் திட்­டத்­தின்­மூ­ல­மாக ஊக்­கத்­தொகை கொடுத்து, பொரு­ளா­தார உத­வி­கள் செய்து கிட்­டத்­தட்ட 57 பேர் நம்­மு­டைய தமி­ழ­கத்­தில் I.A.S., I.P.S. அதி­கா­ரி­க­ளாக தேர்ச்சி பெற்­றி­ருக்­கி­றார்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) அது­வும் எங்­க­ளு­டைய முதல்­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் கொண்­டு­வந்த சிறப்­புத் திட்­ட­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல விடி­யல் பேருந்து மூல­மாக 45 சத­வி­கித பெண்­கள் இப்­போது வேலைக்­குச் செல்­கின்­ற­னர். இந்­தி­யா­வி­லேயே தமிழ்­நாட்­டில் இருக்­கின்ற பெண்­கள்­தான், 45 சத­வி­கித பெண்­கள் பல தொழிற்­சா­லை­க­ளுக்கு வேலைக்­குச் செல்­கி­றார்­கள். கார­ணம், விடி­யல் பேருந்து திட்­டம். அதில் நீங்­கள் விடி­யலை எடுத்­து­விட்டு மக­ளிர் பேருந்து என்று மாற்­றி­விட்­டீர்­கள். ஆக, திட்­டத்­தின் பெயரை மாற்­றி­யி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">எங்­கள் எதிர்க்­கட்­சித் தலை­வர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">விளை­யாட்­டுத்­து­றை­யில் பல சாத­னை­க­ளைச் செய்­தார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எதிர்க்­கட்­சித் தலை­வர்  உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள், என்­றைக்கு பொறுப்­பேற்­றார்­களோ அன்று முதல் இரவு பக­லாக, மழை­யாக இருந்­தா­லும், வெள்­ள­மாக இருந்­தா­லும் இன்­னும் சொல்­லப்­போ­னால் இளை­ஞர் நலன் மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத் துறை அமைச்­ச­ராக அவ­ரு­டைய ஆட்­சிக் காலத்­தில் இளை­ஞர்­க­ளுக்கு விளை­யாட்டு பயிற்சி, ஒவ்­வொரு ஊராட்­சி­யி­லும் விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள் வழங்­கப்­பட்டு, விளை­யாட்டு மைதா­னங்­கள் உரு­வாக்­கப்­பட்டு, நல்லஆரோக்­கி­ய­மான இளை­ஞர்­களை உரு­வாக்க வேண்­டு­மென்ற நோக்­கத்­திலே அவர் உழைத்­தார். கிரா­மம் முழு­வ­தும் விளை­யாட்­டுப் பயிற்சி, உல­க­ள­வி­லான விளை­யாட்­டுப் போட்­டி­கள் தமிழ்­நாட்டை நோக்கி வரு­வ­தற்கு சாதனை புரிந்­த­வர்  எதிர்க்­கட்­சித் தலை­வர்  உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள். அவர், மகா­ப­லி­பு­ரத்­திலே ஒரு event நடத்­தி­னார், உல­க­ள­வி­லான chess போட்டி மற்­றும் கார் பந்­தய போட்­டியை சென்­னை­யிலே நடத்­தி­னார். ஆக, இவ்­வ­ளவு சாத­னை­களை செய்­தோம். ஆக, ஐந்­தாண்டு காலத்­தில் விவ­சாயி ­களும் மகிழ்ச்­சி­யாக இருந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இங்கே இருக்­கின்ற விவ­சா­யி­க­ளைப் பற்றி சொன்­னால், முன்­னாள் அமைச்­சர் ஓ. பன்­னீர்­செல்­வம் அவர்­க­ளும் விவ­சா­யி­தான். ஓ.எஸ். மணி­யன் அவர்­கள் வேளாண் நிதி­நிலை அறிக்­கை­யின்­போது சட்­ட­மன்­றத்­தில் அடிக்­கடி எழுந்து எங்­க­ளுக்கு ஆலோ­சனை கூறு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தற்­போது வாழைக்கு  என்ற ஒரு திட்­டத்­தைச் சேர்த்­தி­ருக்­கி­றீர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) வாழைக்கு   என்ற திட்­டம் நாங்­கள் கொண்­டு­வ­ர­வில்லை. தற்­போது அந்­தத் திட்­டத்தை அறி­வித்­துள்­ளீர்­கள். Horticulture Department-ல் உள்ள ஒரு திட்­டம். அது­போல இந்த ஆட்­சிக்­கும்  இன்­னும் சொல்­லப்­போ­னால்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அப்­ப­டியே சரி­யாக விடு­கி­றார்­கள். அது உண்­மையா அல்­லது  என்று தெரி­ய­வில்லை. இப்­படி technical ஆக பேசி ஆட்­சிக்கு வந்­துள்­ளீர்­கள்;  ஆனால் நாங்­கள் reality-ஆக செய்து கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">Acting கிடை­யாது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">Action ஆக இருந்­தோம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னும் நான் subject-க்கே வர­வில்லை. தற்­போது சேமிப்­புக் கிடங்­கு­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில், நேற்­றைக்­குக்­கூட பாட்­டாளி மக்­கள் கட்­சி­யின் தலை­வர்  அன்­பு­மணி ராம­தாஸ் அவர்­கள் அறிக்கை விட்­டி­ருக்­கி­றார்­கள். காவிரி டெல்டா பகு­தி­யில் 10 இலட்­சம் நெல் மூட்­டை­கள் தேங்­கி­யி­ருக்­கின்­றன. 10 இலட்­சம் மூட்­டை­கள் அங்கே இருக்­கின்­றன. வெகு விரை­வில் மழை வர இருக்­கி­றது. அவை­ஒ­யெல்­லாம் open godown-ல் அடுக்­கி­யி­ருக்­கின்­றன. அங்கு ஒவ்­வொரு Purchase Centre-லும் நெல் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கடந்த ஆட்­சி­யில் நாங்­கள் இருக்­கும்­போது, நானும்  சக்­க­ர­பாணி அவர்­க­ளும் அந்த spot-க்கு சென்­றோம். அங்கு அப்­போது துணை முத­ல­மைச்­ச­ராக இருந்த எங்­கள் மரி­யா­தைக்­கு­ரிய எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள், திடீ­ரென்று தஞ்­சைக்கு ஆய்­விற்­குச் சென்று, இரவு அடாத மழை என்று நாங்­கள்  கேள்­வி­பட்­ட­போது நாங்­கள் wagon-ல் அனுப்­பி­வைத்­தோம். திடீ­ரென்று மழை வந்த கார­ணத்­தி­னால், அப்­போது துணை முத­ல­மைச்­ச­ராக இருந்த மரி­யா­தைக்­கு­ரிய எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள், தஞ்­சைக்­குச் சென்று ஆய்வு செய்து, உட­னுக்­கு­டன் மாற்று ஏற்­பா­டு­கள் செய்து, அந்த மூட்­டை­களை உட­னுக்­கு­டன் 	மாற்றி அமைத்து வைத்­தோம். அத்­த­கைய action, acting கிடை­யாது; action ஆக 
நாங்­கள் செய்து கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆகவே, அந்­த­ள­விற்கு உணர்­வுப்­பூர்­வ­மாக நாங்­கள் பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றோம். நாங்­கள், இன்­னும் சொல்­லப்­போ­னால்,உங்­கள் பக்­கம் இருப்­ப­வர்­க­ளெல்­லாம், படத்­தைப் பார்த்து வந்­த­வர்­கள். நாங்­க­ளெல்­லாம் கொள்கை  பிடித்து, முர­சொலி படித்து, தினந்­தோ­றும் செய்தி படித்து, பொதுக் கூட்­டத்­தில் பேசி, வந்­த­வர்­கள்­தான் இந்­தப் பக்­கம் உள்­ள­வர்­கள். அண்ணா தி.மு.க. ஆக இருந்­தா­லும் சரி, தி.மு.க. ஆக இருந்­தா­லும் சரி; நாங்­கள் பேசி வந்­த­வர்­கள். ஆகவே, மக்­க­ளு­டைய பணி­கள் பற்றி தெரி­யும். அந்த அடிப்­ப­டை­யில்­தான், நாங்­கள் மக்­க­ளின் உணர்­வுக்­கேற்ப எங்­க­ளு­டைய முத­ல­மைச்­ச­ராக இருந்த எங்­கள் அண்­ணன் தள­பதி  ஸ்டாலின் அவர்­கள், எங்­க­ளைப் பணி­யாற்ற வைத்­தார்­கள். மக்­க­ளும் அங்கு மகிழ்ச்­சி­யாக இருந்­தார்­கள். விவ­சா­யி­கள் போராட்­டம் இல்­லா­மலே வாழ்ந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">வேளாண் துறைக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">குறை­வான நிதி ஒதுக்­கீடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அத்­த­கைய நாங்­கள் பட்­ஜெட் போட்டு, மக்­க­ளு­டைய கருத்­து­களை வாங்கி, நாங்­கள் பட்­ஜெட்­டாக அறி­வித்­தோம். ஆகவே, நீங்­கள் அறி­வித்­துள்ள நிதி ஒதுக்­கீட்­டைப் பார்த்­தால்-- வேளாண் பட்­ஜெட்­டில் வேளாண் துறைக்கு எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது கிட்­டத்­தட்ட 15 ஆயி­ரத்து 230 கோடி ரூபாய். உங்­க­ளு­டைய ஆட்­சி­யில் உரு­வாக்­கி­யது 14 ஆயி­ரத்து955 கோடி ரூபாய். ஆக, இப்­போது இந்த வேளாண்மைதுறைக்கு 275 கோடி ரூபாய் குறை­வாக நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. விவ­சாயி­களுக்கு இல­வச மின்­சார மானி­யம் தி.மு.க. ஆட்­சி­யில் வழங்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆகவே, இது கடந்த ஆண்டு பட்­ஜெட் புத்­த­கம்; பச்சை, நீலம் வண்­ணங்­க­ளில் உள்­ளது. உங்­கள் பட்­ஜெட் இந்த நிறம், இந்த பட்­ஜெட். இந்த கலர் பட்­ஜெட்.இரண்டு வேளாண் பட்­ஜெட் புத்­த­கங்­களை ஒப்­பிட்டு காண்­பித்­தார்)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதில் நீங்­கள் படித்­த­து­தான், நாங்­கள் எங்­க­ளு­டைய பட்­ஜெட்­டில் படித்­த­து­டன் ஒப்­பிட்டு பார்த்­தோம். உங்­க­ளு­டைய Secretary-க்குத் தெரி­யும். உங்­க­ளு­டைய செய­லா­ள­ருக்­குத் தெரி­யும். ஆகவே, விவ­சா­யி­க­ளுக்கு மின்­சா­ரத்தை அவர் சொன்­னார் இல­வச மின்­சா­ரத்­திற்­காக நாங்­கள் ஒதுக்­கி­யது ரூ.8,186 கோடி, நீங்­கள் ஒதுக்­கி­யது ரூ.7,432 கோடி. ஆக, ரூ.754கோடி குறை­வாக இருக்­கி­றது. எனக்­கென்­ன­வென்­றால்,இல­வச மின்­சா­ரத்தை நிறுத்­தப் போகி­றீர்­களா என்ற doubt அது­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போன்று, நுண்­ணீர் பாச­னத் திட்­டம், அதில் எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் ரூ.1,168 கோடி நாங்­கள் ஒதுக்­கீடு செய்­தி­ருந்­தோம். ஆனால், உங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் ரூ.785 கோடி அறி­வித்­தி­ருக்­கின்­றீர்­கள். உங்­க­ளு­டைய திட்­டத்­தின் பெயர் நீர் மேலாண்­மைக்­கான துளித் துளித் தண்­ணீர் திட்­டம் என்று போட்­டி­ருக்­கி­றீர்­கள்.  நாங்­கள் நுண்­ணீர் பாச­னத் திட்­டம் கொண்­டு­வந்­தோம். நீங்­கள் நீர் மேலாண்­மைக்­கான துளித் துளித் தண்­ணீர் திட்­டத்தை போட்­டி­ருக்­கி­றீர்­கள். அதில் ரூ.383 கோடி minus ஆக, குறை­வாக இருக்­கி­றது. அதே­போன்று, குறுவை பயிர் காப்­பீடுதிட்­டத்­திற்கு எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் ரூ.841 கோடி நாங்­கள் ஒதுக்­கி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆனால், உங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில், இப்­போது அறி­வித்­தி­ருக்­கி­றீர்­கள் ரூ.648 கோடி. ஆக, ரூ.193 கோடி குறைவு. உங்­க­ளு­டைய புத்­த­கத்­தில் இருக்­கி­றது. இது நான் புத்­த­கத்­தில் படித்­த­து­தான்; எங்­க­ளுக்­குத் தெரி­யாது. ஆக, குறுவை தொகுப்­புத் திட்­டத்­திற்கு ரூ.210 கோடி நாங்­கள் கொடுத்­தோம். நாங்­கள்டெல்டா பகு­தி­க­ளுக்­கும் கொடுத்­தோம். நீங்­கள் கொடுத்தகுறுவை தொகுப்பு ரூ.134 கோடி ஒதுக்­கி­யி­ருக்­கி­றீர்­கள். ரூ.75 கோடி குறை­வாக உள்­ளது. மண்­ணு­யிர் காத்து மன்­னு­யிர் காப்­போம் திட்­டத்­தில் ரூ.142 கோடி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">இல­வச மின்­சா­ரம் கொடுத்­தோம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல, மின்­சா­ரத் திட்­டம், எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில், எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் 2 இலட்­சம் மின் இணைப்பு பெரிய வரப் பிர­சா­தம். பெரிய வரப்­பி­ர­சா­தம். (மேசை­யைத் தட்­டும் ஒலி) அத­னால்­தான், பயி­ரி­னு­டைய விளை நிலப்­ப­ரப்பு அதி­க­மா­கி­யது. 2 இலட்­சம் மின் இணைப்­பு­கள் விவ­சா­யி­க­ளுக்கு கொடுக்­கப்­பட்­டது. தற்­போது, இந்த ஆட்­சி­யில் புதிய மின் இணைப்பு விஷ­ய­மாக அறி­விப்பே இல்லை. இருக்­கின்ற மின்­சா­ரமே வரு­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆக, நாங்­கள் 2 இலட்­சம் இல­வச மின் இணைப்­பு­ கள் கொடுத்­தோம். 2 இலட்­சம் இல­வச மின் 
இணைப்­பு­கள் கொடுத்­த­த­னால்­தான் தற்­போது விவ­சாய நிலம் அதி­க­மா­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னும் சொல்­லப்­போ­னால், எங்­க­ளு­டைய  ஆட்­சிக் காலத்­தில் அதி­க­மான நெல் விளைச்­சல், அதி­க­மாக நெல் கொள்­மு­தல், விவ­சா­யி­கள் நெல் அதி­க­மாக உற்­பத்தி செய்­யப்­பட்டு அதை பாது­காப்­ப­தற்கு உங்­க­ளால் முடி­ய­வில்லை இப்­போது. அது­தான். அதே­போல, ‘C’ and ‘D’ வாய்க்­கால் தூர் வாரு­கின்ற பணிக்கு எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் 13 கோடியே 80 இலட்­சம் ரூபாய் வழங்­கி­னோம். இப்­போது, உங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் 10 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. ஆக, 3 கோடி ரூபாய் குறை­வாக ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதே­போல, புதிய விதை சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­திற்கு 15 கோடி ரூபாய் நாங்­கள் ஒதுக்­கீடு செய்­தோம். இப்­போது, 7 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. 8 கோடி ரூபாய் குறை­வாக இருக்­கி­றது. மக்­காச்­சோள சாகு­படி திட்­டத்­திற்கு 41 கோடி ரூபாய் நாங்­கள் ஒதுக்­கீடு செய்­தோம். உங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் 36 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. 5 கோடி ரூபாய் குறை­வாக ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சூரிய மின்­சக்தி pumpsets அமைக்க நாங்­கள் 24 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­தி­ருந்­தோம். நீங்­கள் 23 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­துள்­ளீர்­கள். இதை­யெல்­லாம் ஏன் சொல்­கி­றேன் என்­றால், நீங்­கள் ஒதுக்­கீட்டை அதி­க­ரிப்­பீர்­கள் என்ற ஆர்­வத்­தில் மக்­க­ளும், விவ­சா­யி­க­ளும் இருந்­தார்­கள். எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் போடப்­பட்ட திட்­டங்­கள் அனைத்­துத் திட்­டங்­க­ளை­யும் நான் படிக்­க­வில்லை. குறை­வா­கத்­தான் படித்­துள்­ளேன். இந்­த­ள­விற்கு குறை­வாக வேளாண் பட்­ஜெட்­டிற்கு நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை உங்­க­ளு­டைய கவ­னத்­திற்­கும்,  முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் கவ­னத்­திற்­கும் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேளாண் திட்­டத்­தில் பெயர் மாற்­றம். எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் மாடித் தொகுப்­புத் திட்­டம் என்று நாங்­கள் அறி­வித்து செயல்­ப­டுத்­திக் கொண்­டி­ருந்­தோம். இப்­போது உங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் அதே திட்­டத்­திற்கு, வெற்றி இல்­லத்­த­ரசி வீட்­டுத் தோட்­டம் என்று வேறு புதிய பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. நாங்­கள் பொது­வாக வெறும் மாடித் தோட்­டம் என்று பெய­ரில் சென்னை போன்ற இடங்­க­ளில் தோட்­டம் இல்­லாத பகு­தி­க­ளுக்­கெல்­லாம், வீடு­க­ளுக்­கெல்­லாம் மாடித்தோட்­டம் மூல­மாக அவ­ர­வர் வீட்­டி­லேயே தேவை­யானகாய்­க­றி­களை மாடி­யைப் பயன்­ப­டுத்தி வளர்ப்­ப­தற்கு, தொகுப்­புத் திட்­டத்தை அறி­வித்து செய­லாற்­றிக் கொண்­டி­ருந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">உங்­க­ளின் அறி­விப்­பு­க­ளெல்­லாம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தோல்­வி­யில் முடிந்­துள்­ளது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பெயர் மாற்­றத்தை சொல்­கி­றேன். எங்­க­ளு­டைய உழ­வன் செயலி திட்­டத்­திற்கு நீங்­கள் AI உழ­வர் செயலி என்­றும், பனை மேம்­பாட்டு இயக்­கத்­திற்கு, பனை பாது­காப்பு இயக்­கம் என்­றும், எண்­ணெய் வித்­துக்­கள் இயக்­கத்­திற்கு, பயறு வகை­கள் மற்­றும் எண்­ணெய் வித்­துப் பயிர்­க­ளில் தன்­னி­றை­வுக்­கான இயக்­கம் என்­றும், ஒருங்­கி­ணைந்த தென்னை வளர்ச்­சித் திட்­டம் என்­பது தென்­னைக்­கான சிறப்­புத் திட்­டம் என்­றும் பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது. அதே­போல, விவ­சா­யி­க­ளுக்கு விருது வழங்­கும் திட்­டத்­தில் மக்­கள் சேவ­கர்­கள் விருது விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கும் திட்­டம் அறி­வித்­தி­ருந்­தோம். நீங்­கள் அந்­தத் திட்­டத்­திற்கு மக்­கள் சேவ­கர் அஞ்­ச­லை­யம்­மாள் சிறு, குறு விவ­சாயிவிருது என்று அறி­வித்­தி­ருக்­கி­றீர்­கள். நீடித்த நிலை­யானபருத்தி இயக்­கம் என்­பது வெற்றி விவ­சாயி விருது என்று மாற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">SC, ST கூடு­தல் மானி­யத் திட்­டம் அறி­வித்து ஆண்­டு ­தோ­றும் செயல்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­தோம். அந்­தத் திட்­டத்­திற்கு அண்­ணல் அம்­பேத்­கர் வேளாண் உத­வித் திட்­டம் என்று பெயர் மாற்­றத்தை நீங்­கள் உரு­வாக்கி அறி­வித்­தி­ருக்­கி­றீர்­கள் என்­பதை நான் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். அதே­போல, நெல்­லுக்கு, கரும்­புக்குகடன் தள்­ளு­படி முழு­மை­யாக தள்­ளு­படி செய்­வீர்­கள் என்று நம்­பிக்­கொண்­டி­ருக்­கின்­றோம். விவ­சா­யி­கள் நம்­பிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். அதில் கால்­ப­கு­தி­தான் தள்­ளு­படி செய்­துள்­ளீர்­கள். முக்­கால் இலட்­சம் ரூபாய் என்­பதை ஒரு இலட்­சம் என்று அறி­விக்­கப்­ப­டும் என்று சொன்­னீர்­கள். ஐந்து இலட்­சம் ரூபாய்­வரை தள்­ளு­படி செய்­யப்­ப­டும் என்று சொன்­னீர்­கள். அது அறி­விக்­கப்­ப­ட­வில்லை. கடன் தள்­ளு­ப­டி­யைப் பொறுத்­த­வ­ரை­யில் அது failure ஆக உங்­க­ளு­டைய அறி­விப்பு failure என்று சொல்­ல­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல, அரிசி விலை உயர்வு. இப்­போது நெல் விலையை அறி­வித்­தி­ருக்­கி­றீர்­கள். நெல் விலையை உயர்த்­திக் கொடுத்­தா­லும், அதை­விட கூடு­த­லாக தனி­யார் நெல் வியா­பா­ரி­கள் நெல்லை வாங்­கு­கி­றார்­கள். இந்த ஆண்டு DPC-ல் நெல்லை கொள்­மு­தல் செய்­வது என்­பது கொஞ்­சம் கடி­னம். எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் வியா­பா­ரி­கள் நெல்லை வாங்­க­வில்லை. அர­சாங்­கம்­தான் வாங்­கி­யது. ஆனால், இப்­போது வியா­பா­ரி­கள் நெல்லை கூடு­தல் விலை கொடுத்து வாங்­கு­கி­றார்­கள். நீங்­கள் கொடுத்த அறி­விப்­பை­விட நெல் விலை வெளி market -ல் அதி­க­மாக வாங்­கு­கிறார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">குறுவை சாகு­ப­டி­யைக்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">காப்­பாற்­றுங்­கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">குறுவை சாகு­படி பாதிப்­பிற்­காக வறட்சி நிவா­ர­ணம்­தான் நாங்­கள் கேட்­டோம். வறட்சி நிவா­ர­ணம் பற்றி நாங்­கள் கேட்­ட­போ­து­தான்  முத­ல­மைச்­சர் அவர்­கள் பேப்­பர் படிக்­க­வில்­லையா என்று கேட்­டார்­கள். வறட்சி ஏற்­பட்­ட­தால் குறுவை சாகு­படி பாதிக்­கப்­பட்டு, மூன்­றரை இலட்­சம் ஏக்­கர் நிலத்­தில் மட்­டும்­தான் தற்­போது குறுவை சாகு­படி செய்­யப்­பட்­டுள்­ளது. ஆகவே அதை­யா­வது காப்­பாற்ற வேண்­டும். குறுவை சாகு­ப­டியை நம்­பி­யுள்ள விவ­சா­யி­க­ளுக்கு வறட்சி நிவா­ர­ணம் வழங்க வேண்­டும். குறுவை சாகு­படி பொய்த்­துப்­போன கார­ணத்­தால் விவ­சா­யத் தொழி­லா­ளர்­க­ளுக்­கும் நிவா­ர­ணம் வழங்க வேண்­டும் என்­கிற கோரிக்­கையை எங்­க­ளு­டைய எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள்வைத்­துள்­ளார்­கள். அதை­யும் பரி­சீ­லிக்க வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பொதுப் பணித் துறை அமைச்­சர் அவர்­கள் கருப்பு அரிசி பற்­றிச் சொன்­னார்­கள். தி.மு.க ஆட்­சி­யில்­தான் கருப்பு அரிசி ஒழிக்­கப்­பட்­டது. Colour sorter ஒவ்­வொரு ஆலை­யி­லும் அமைக்­கப்­பட வேண்­டும் என்று அப்­போது உண­வுத் துறை அமைச்­ச­ரா­கப் பொறுப்பு வகித்த  சக்­க­ர­பாணி அவர்­க­ளின் முயற்­சி­யால் அறி­விக்­கப்­பட்டு, அனைத்து அரிசி ஆலை­க­ளி­லும் Colour sorter அமைக்­கப்­பட்­டது. கருப்பு அரிசி வரு­வ­தற்­குத் தற்­போ­தைய கார­ணம் என்­ன­வென்­றால், கொள்­மு­தல் செய்­யப்­பட்ட நெல் மூட்­டை­களை அவ்­வப்­போது நீங்­கள்அப்­பு­றப்­ப­டுத்த வேண்­டும். 10 இலட்­சம் நெல் மூட்­டை­கள்பொது வெளி­யில் வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அவற்றை அப்­பு­றப்­ப­டுத்தி பாது­காப்­பாக வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">அரசு ஊழி­யர்­கள் மத்­தி­யில் குழப்­பம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அரசு ஊழி­யர்­கள் மற்­றும் ஆசி­ரி­யர்­க­ளின் ஓய்­வூ­திய நிதி 14,000 கோடி ரூபாய் அள­விற்கு பட்­ஜெட்­டில் குறைக்­கப்­பட்­டுள்­ளது. திரா­விட மாடல் ஆட்­சி­யில், அரசு ஊழி­யர்­கள் மற்­றும் அரசு ஆசி­ரி­யர்­க­ளின் கோரிக்­கை­க­ளுக்­கி­ணங்க, உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட ஓய்­வூ­தி­யத் திட்­டம் (TAPS) அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு, 11,000 கோடி ரூபாய் அள­விற்கு நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது. தற்­போ­தைய அரசு, ஏற்­கெ­னவே ஒதுக்­கீடு செய்த 11,000 கோடி ரூபாய் ஒதுக்­கீட்டை முழு­மை­யாக இரத்து செய்­த­தோடு மட்­டு­மல்­லா­மல், மேலும் 3,000 கோடி ரூபாய் அள­விற்­கும் நிதி­யொ­துக்­கீட்டை குறைத்­துள்­ளது. இத­னால், அரசு ஊழி­யர்­கள் மத்­தி­யில் குழப்­ப­மான ஒரு சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது. பழைய ஓய்­வூ­தி­யத் திட்­டம் உண்டா? TAPS திட்­டம் உண்டா? எனக் கேள்வி எழு­கி­றது. அரசு அதற்­கான விளக்­கத்தை பதி­லு­ரை­யில் அளிக்க வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">அரிசி விலை உயர்வு!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அரிசி விலை உயர்­கி­றது. அரிசி விலை ஒரு கிலோ 80 ரூபாய் அள­விற்கு உயர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் 40 ரூபாய், 45 ரூபாய் என்ற அள­வில்­தான் இருந்­தது. விலை­வாசி உயர்­வும், மளி­கைப் பொருட்­க­ளின் விலை­யும் உயர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. ஆகவே, அதை­யும் கட்­டுப்­ப­டுத்த வேண்­டு­மென்று  முத­ல­மைச்­சர் அவர்­க­ளை­யும்,  துறை அமைச்­சர்­க­ளை­யும் கேட்­டுக்­கொள்­கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்த பட்­ஜெட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில், “பழைய கள்; புதிய மொந்தை” என்று கிரா­மத்­தில் ஒரு பழ­மொழி சொல்­வார்­கள். அதே பழைய கள் புதிய மொந்­தை­யில், அதா­வது புதிய கல­யத்­தில். அவ்­வா­று­தான் இந்த பட்­ஜெட்டை நான் கரு­து­கி­றேன். தி.மு.க. வேளாண் பட்­ஜெட்­டில் தாக்­கல் செய்து குறிப்­பிட்­ட­தைத்­தான், இவர்­க­ளும் குறிப்­பி­டு­கி­றார்­களே என்று கிரா­மத்­தில் வசிக்­கும் மக்­கள் பேசிக்­கொள்­கி­றார்­கள்.  பொதுப் பணித் துறை அமைச்­சர் அவர்­கள் கூடு­த­லாக நம்­பிக்­கை­யா­க--­நி­தி­யொ­துக்­கீடு செய்ய வேண்­டும். தமிழ்­நாட்­டில் வசித்து வரு­ப­வர்­க­ளில் 60 சத­வி­கி­தம் பேர், 70 சத­வி­கி­தம் பேர் விவ­சா­யி­க­ளாக இருக்­கி­றார்­கள். அரசு கொடுக்­கின்ற திட்­டங்­கள் குறை­வான திட்­டங்­க­ளாக உள்­ளன. நாங்­கள், அண்ணா மறு­ம­லர்ச்­சித் திட்­டம், கலை­ஞ­ரின் அனைத்­துக் கிராம ஒருங்­கி­ணைந்த வேளாண் வளர்ச்­சித் திட்­டம் போன்­ற­வற்­றைத் தந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">12,525 ஊராட்­சி­க­ளி­லும் நாங்­கள் ஒவ்­வொரு 
திட்­டத்­தை­யும் முழு­மை­யா­கக் கொண்டு சென்­றோம்.ஆகவே, இவை அனைத்து விவ­சா­யி­க­ளும், அனைத்துமக்­க­ளும் பயன்­பெ­றும் திட்­டங்­க­ளா­கும். இவ்­வ­ளவு விவ­சா­யி­க­ளுக்­கும் திட்­டங்­க­ளைக் கொண்டு வர வேண்­டு­மென்று உங்­க­ளைக் கேட்டு, இவ்­வ­ளவு நேரம் பேச வாய்ப்­ப­ளித்த  பேர­வைத் தலை­வர் அவர்­க­ளுக்கு நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொண்டு, எனக்­குப் பேசு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளித்து, வாய்ப்பு தந்த எங்­க­ளு­டைய எதிர்க்­கட்­சித் தலை­வர் மரி­யா­தைக்­கு­ரிய உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்­கும்  நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு எம்.ஆர்.கே.பன்­னீர் செல்­வம் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>