<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,69,957,949" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 13 2026 03:31:52 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260813T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="13082026-CBE-05" position.sequence="05" ex-ref="13082026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup817353_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup814743_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="18.5">த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">டி எடுத்து சுற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள் தமிழ்­நாடு காங்­கி­ரஸ்­கா­ரர்­கள். யாருக்கு எதி­ராக சுற்­று­வது என்று தெரி­யா­ம­லேயே அவர்­கள் சுற்­று­வ­து­தான் கேலிக்­கூத்­தாக உள்­ளது. தவ­றான நேரத்­தில் தாறு­மா­றாக தடி­யைச் சுழற்­று­வ­தால் எங்­கே-­­எப்­படி அடி விழும் என்று தெரி­யாத நிலை­யில் விஜய் தலை­மை­யி­லான த.வெ.க. அர­சை­யும் உள்ளே இழுத்து விட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தொகுதி மறு­வ­ரை­யறை தொடர்­பாக விஜய் நடத்­திய கலந்­தாய்­வுக் கூட்­டம் என்­பது காங்­கி­ர­சின் கம்பு சுற்­ற­லுக்­குள் சிக்­கிக் கொண்­டது போன்ற நிலையை த.வெ.க. அர­சுக்கு உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மக்­கள் தொகை அடிப்­ப­டை­யில் மாநி­லங்­க­ளில் உள்ள தொகு­தி­க­ளின் எண்­ணிக்கை மறு­வ­ரை­யறை செய்­யப்­ப­டும் என்று ஒன்­றிய பா.ஜ.க. அரசு தெரி­வித்­த­போதே அதனை எதிர்த்து நின்­றது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். முந்­தைய ஒன்­றிய அர­சு­க­ளின் மக்­கள்­தொ­கைக் கட்­டுப்­பாட்­டுத் திட்­டங்­களை முறை­யா­கக் கடைப்­பி­டித்து, சரி­யாக செயல்­ப­டுத்­தில் தமிழ்­நாடு உள்­ளிட்ட தென்­மா­நி­லங்­க­ளுக்கு முக்­கிய பங்கு உண்டு. மக்­கள்­தொ­கை­யைக் கட்­டுப்­ப­டுத்தி சமூ­க-­­  பொ­ரு­ளா­தார வளர்ச்­சியை மேம்­ப­டுத்தி, இந்­தி­யா­வின் வளர்ச்­சிக்­குத் தமிழ்­நாடு துணை நின்­றது. தென்­மா­நி­லங்­கள் பல­வும் இதே பாதை­யில் பய­ணிக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நாட்­டின் வளர்ச்­சிக்­கும் மேம்­பாட்­டிற்­கும் பங்­க­ளித்த மாநி­லங்­க­ளைத் தண்­டிப்­பது போல மக்­கள்­தொகை அடிப்­ப­டை­யில் தொகுதி மறு­வ­ரை­யறை என்ற பெய­ரில் தென்­மா­நி­லங்­க­ளின் நாடா­ளு­மன்­றத் தொகு­தி­க­ளைக் குறைப்­பது நேர்­மை­யான ஜன­நா­ய­க­மல்ல என்­ப­தை­யும்,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தென்­மா­நி­லங்­க­ளில் உள்ள தொகு­தி­க­ளின் தய­வின்றி, வட­மா­நி­லங்­க­ளில் உய­ரும் தொகு­தி­க­ளின் எண்­ணிக்­கை­யைக் கொண்டே நாடா­ளு­மன்­றத்­திற்­கா­னப் பெரும்­பான்­மை­யைப் பெறும் வாய்ப்பு உரு­வா­கும் என்­ப­தால் இந்த பார­பட்­ச­மான தொகுதி மறு­வ­ரை­ய­றையை நடை­மு­றைப்­ப­டுத்­தக்­கூ­டாது என்­றும், நேர்­மை­யான முறை­யில்-­­ ச­ரி­யான அள­வில் (Fair Delimitation) நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என்­ப­தைத்­தான் தி.மு.க. தொடக்­கம் முதலே வலி­யு­றுத்தி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">திரா­விட மாடல் அர­சின் முத­ல­மைச்­ச­ரான கழ­கத் தலை­வர் அவர்­கள் இது குறித்து அமைச்­ச­ர­வைக் கூட்­டத்தை நடத்தி, அதில் எடுத்த முடி­வின்­படி அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்தை 5-3-2025 அன்று கூட்­டி­னார். தமிழ்­நாட்­டில் உள்ள அனைத்­துக் கட்­சி­க­ளும் இதில் கலந்து கொண்­டன. இப்­போது ஆட்­சி­யில் உள்ள த.வெ.க.வும் பங்­கேற்­றது. இதில் 3 முக்­கிய முடி­வு­கள் எடுக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">*மக்­கள்­தொ­கை­யைக் கார­ணம்­காட்டி தமிழ்­நாடு உள்­ளிட்ட தென்­மா­நி­லங்­க­ளின் தொகு­தி­க­ளைக் குறைப்­பதை ஏற்­கவே முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">*1971ஆம் ஆண்டு மக்­கள் தொகைக் கணக்­கெ­டுப்­பின்­ப­டி­தான் தொகுதி மறு­வ­ரை­யறை செய்­யப்­ப­ட­வேண்­டும். இல்­லை­யெ­னில், மேலும் 25 ஆண்­டு­க­ளுக்கு தொகுதி மறு­வ­ரை­ய­றையை ஒத்­தி­வைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">*நாடா­ளு­மன்­றத்­தில் தமிழ்­நாட்­டின் விகி­தாச்­சார­ மான 7.18 சத­வீ­தத்­தைக் குறைப்­ப­தற்கு ஒரு போதும் ஒப்­புக்­கொள்ள மாட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">-இந்த முக்­கிய முடி­வு­க­ளுக்கு அ.தி.மு.க., த.வெ.க  உள்­ளிட்ட அனைத்­துக் கட்­சி­க­ளும் ஒப்­பு­தல் அளித்­தன. பா.ஜ.க. மட்­டுமே இந்­தக் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­ள­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இதன்­பி­றகு, 22-3-2025 அன்று மக்­கள் தொகை அடிப்­ப­டை­யி­லான தொகுதி மறு­வ­ரை­ய­றை­யால் பாதிக்­கப்­ப­டும் மாநில முத­ல­மைச்­சர்­கள், துணை முத­ல­மைச்­சர்­கள், அர­சி­யல் கட்­சி­க­ளின் தலை­வர்­கள் அடங்­கிய கூட்­டத்தை தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ராக இருந்த கழ­கத் தலை­வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்­கள் சென்­னை­யில் நடத்தி,  Fair Delimitation என்­பதை வலி­யு­றுத்­தி­னார். இதில் காங்­கி­ரஸ் கட்சி ஆளும் கர்­நா­டகா, தெலங்­கானா மாநில முத­ல­மைச்­சர்­க­ளும் கலந்து கொண்டு ஒப்­பு­தல் அளித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">நாடா­ளு­மன்­றத்­தில் தொகுதி மறு­வ­ரை­ய­றைக்­கான மசோ­தாவை 17-4-2026 அன்று ஒன்­றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்­த­போது அதன் நகலை எரித்­த­வர் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ராக இருந்த திரா­விட நாய­கர். தமிழ்­நாட்­டில் சட்­ட­மன்­றத் தேர்­தல் பரப்­புரை பர­ப­ரப்­பாக இருந்த அந்த நேரத்­தி­லும், கட்சி அர­சி­ய­லைக் கடந்து மாநி­லத்­தின் நலனை முன்­னி­றுத்­திய இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பா.ஜ.க அர­சுக்­குத் தேவை­யான மூன்­றில் இரண்டு பங்கு பெரும்­பான்மை கிடைக்­காத வகை­யில், எதிர்க்­கட்­சி­களை ஒருங்­கி­ணைத்து, பா.ஜ.க. அர­சுக்கு நாடா­ளு­மன்­றத்­தில் முதல் தோல்­வியை ஏற்­ப­டுத்­தி­ய­தி­லும் தி.மு.க.வின் பங்­க­ளிப்பு முதன்­மை­யா­னது.  Fair Delimitation என்­கிற தி.மு.க.வின் உறு­தி­யான நிலைப்­பாட்டை காங்­கி­ரஸ் கட்­சி­யும் நன்­றாக அறி­யும். ஆனால், தொகுதி மறு­வ­ரை­யறை மசோ­தாவை எதிர்த்து அதன் நகலை எரிக்­கும் போராட்­டத்­தைத் தமிழ்­நாடு முழு­வ­தும் தி.மு.க.வினர் நடத்­திய நாளில், விசில் சின்­னம் கோலம் போட்டு விளை­யா­டிக் கொண்­டி­ருந்­தார் த.வெ.க. தலை­வர். அவ­ரு­டன் கூட்­டணி சேர்ந்­து­கொண்டு, No Delimitation என்று குட்­டை­யைக்  குழப்ப நினைக்­கி­றது காங்­கி­ரஸ் கட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இதற்­காக முத­ல­மைச்­சர் விஜய் தலை­மை­யில் நடந்த எம்.பி.க்கள் கலந்­தாய்­வுக் கூட்­டத்தை தி.மு.க. புறக்­க­ணித்­தது. அதற்­கா­னக் கார­ணத்தை மிகத் தெளி­வாக எடுத்­து­ரைத்­தார் தி.மு.க.வின் துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ரும்-­­நா­டா­ளு­மன்ற தி.மு.க. குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி எம்.பி. அவர்­கள். தி.மு.க. இந்­தக் கூட்­டத்தை முழு­மை­யா­கப் புறக்­க­ணித்த நிலை­யில், அதில் கலந்­து­கொண்ட நாடா­ளு­மன்ற மக்­க­ளவை உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் 2024 தேர்­த­லில் கழ­கத் தலை­வர் தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யில் நின்று வென்­ற­வர்­கள்­தான். கழ­கத்­தின் ஆத­ர­வில் மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர்­க­ளா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்­க­ளும் கலந்து கொண்­டார்­கள். கூட்­டத்தை நடத்­திய முத­ல­மைச்­சர் விஜய்­யின் த.வெ.க.வுக்கு ஒரு எம்.பி.கூட கிடை­யாது. தொகுதி மறு­வ­ரை­யறை என்­பது மக்­கள் பிரச்­சி­னை­யல்ல என்று திரு­வாய் மலர்ந்­த­வர்­தான் விஜய். அவர் தலை­மை­யில் கலந்­தாய்­வுக் கூட்­டம் என்­பது அர­சி­ய­லின் அவல நகைச்­சுவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">காவி­ரிப் பிரச்­சி­னைக்­காக அனைத்­துக் கட்­சி­கள் கூட்­டத்­தைக் கூட்ட வேண்­டும் என தி.மு.க. தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கி­றது. பல கட்­சி­க­ளும் இதை வலி­யு­றுத்­து­கின்­றன. த.வெ.க அரசு அதற்கு எந்த ஏற்­பா­டும் செய்­ய­வில்லை. மேட்­டூர் அணை திறக்­கப்­பட வேண்­டிய நாளி­லி­ருந்து ஏறத்­தாழ 2 மாதங்­கள் கடந்­து­விட்­டது. இன்­ன­மும் திறக்­கப்­பட­ வில்லை. டெல்டா மாவட்ட ஆறு­க­ளில் ஆடிப் பெருக்கு நாளி­லேயே தண்­ணீர் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஆற்­றி­லி­ருந்து வய­லுக்­குத் தண்­ணீர் பாய்ச்ச வேண்­டிய விவ­சா­யி­கள், வீட்­டி­லி­ருந்து வாளி­யில் தண்­ணீர் எடுத்து வந்து, ஆற்­றில் வைத்து பூசை செய்த வேத­னை­யைத் தமிழ்­நாடு இந்த ஆடிப்­பெ­ருக்­கில்­தான் பார்த்­தது.ஆடிப் பெருக்கு நாளில் காவிரி விவ­சா­யி­ க­ளுக்  ­காக ஆர்ப்­பாட்­டம் நடத்­திய எதிர்க்­கட்­சித் தலை­வர்-­­க­ழ­கத்­தின் இளம்­த­லை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­களை மறு­நாள் கைது செய்து அலைக்­க­ழித்­தது விஜய் அரசு. காவிரி உரி­மைக்­கா­கப் போரா­டு­கிற விவ­சாயி ­களைக் கைது செய்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">காவிரி ஆணை­யம் உத்­த­ர­விட்­டா­லும் கர்­நா­டகா தண்­ணீர் தர மறுத்து வரு­கி­றது. தமிழ்­நாட்­டிற்­கா­னத் தண்­ணீர் உரி­மையை முழு­மை­யா­கத் தடுக்­கும் வகை­யில்மேக­தாது அணை­யைக் கட்­டியே தீரு­வோம் என்று கர்­நா­டக அரசு பிடி­வா­த­மாக நிற்­கி­றது. கர்­நா­ட­கத்தை ஆட்சி செய்­வது காங்­கி­ரஸ் கட்சி. தமிழ்­நாட்­டில் த.வெ.க.வின் கூட்­டணி ஆட்­சி­யில் பங்­கேற்­றி­ருப்­ப­தும் காங்­கி­ரஸ் கட்­சி­தான்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்டு மக்­களை வஞ்­சிக்­கும் கர்­நா­டக காங்­கி­ரஸ் ஆட்­சி­யைக் காப்­பாற்­று­வ­தற்­காக தமிழ்­நாட்­டின் காங்­கி­ரஸ் எம்.பி.க்கள் விரித்த வலை­தான், தொகுதி மறு­வ­ரை­யறை தொடர்­பான எம்.பி.க்­கள் கலந்­தாய்­வுக் கூட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஒரு கட்­சி­யின் எம்.பி.க்களை அழைப்­பது முத­ல­மைச்­ச­ரின் மர­பல்ல. அந்­தந்­தக் கட்­சி­யின் தலை­வர்­க­ளைத்­தான் முத­ல­மைச்­சர் அழைக்க வேண்­டும். தலை­மைச் செய­ல­கத்தை த.வெ.க.வின் தலைமை அலு­வ­ல­கம் போல செயல்­ப­டுத்தி, கர்­நா­ட­கத்தை ஆளு­கின்ற கூட்­ட­ணிக் கட்­சி­யான காங்­கி­ர­ஸைக் காப்­பாற்றி, தமிழ்­நாட்­டின் உயிர் ஆதா­ரப் பிரச்­சி­னை ­யான காவிரி நீர் உரி­மை­யைப் பின்­னுக்­குத் தள்­ளும் வேலையை விஜய் அரசு செய்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாட்டு மக்­க­ளின் வாக்­கு­க­ளைப் பெற்று, கர்­நா­டக காங்­கி­ரஸ் அர­சுக்கு வேலை பார்க்­கி­றாரா விஜய்? தொகுதி மறு­வ­ரை­யறை விவ­கா­ரத்­தில் அன்­றும் இன்­றும் உறு­தி­யாக இருக்­கி­றது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். நாடா­ளு­மன்­றத்­தில் தமிழ்­நாட்­டின் விகி­தாச்­சா­ர­மான 7.18 சத­வீ­தம் குறை­யக்­கூ­டாது என்­ப­து­தான் அந்த உறுதி. அது­தான் Fair Delimitation. இதற்கு மாற்­றாக, No Delimitation என்­பது போகாத ஊருக்கு காட்­டு­கிற வழி. பா.ஜ.க.வின் ஸ்லீப்­பர் செல்­கள் மட்­டுமே இந்த வேலையை செய்­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ராகுல்­காந்தி முதல் மாணிக்­கம் தாக்­கூர் வரை பா.ஜ.கவின் ஸ்லீப்­பர் செல்­க­ளா­கத்­தான் செயல்­ப­டு­கி­றார்­கள் என்ற சந்­தே­கம் வலு­வாக உள்­ளது. சமூக வலைத்­த­ளங்­க­ளில் காங்­கி­ரஸ் கட்­சியை CongRSS என்றே எழு­து­கி­றார்­கள். த.வெ.க.வைப் பொறுத்­த­வரை, அந்­தக் கட்சி தொடங்­கப்­பட்ட பிறகு, நாடா­ளு­மன்­றத் தேர்­தல் வந்­தது. அதில் போட்­டி­யி­டு­வ­தைத் தவிர்த்து, தங்­களை பா.ஜ.க.வின் ஸ்லீப்­பர் செல் என்று அடை­யா­ளம் காட்­டிக்­கொண்­டு­தான் அர­சி­யல் களத்­திற்கே வந்­தது. இரண்டு ஸ்லீப்­பர் செல் கட்­சி­கள் கூட்­டணி சேர்ந்­து­கொண்டு, தி.மு.க மீது பழி­போட எடுக்­கும் அற்­பத்­த­ன­மான முயற்­சி­கள் ஒரு­போ­தும் வெற்றி பெறாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அர­சி­யல் சட்­டம் காட்­டு­கிற வழி­மு­றை­யின்­படி தொகுதி மறு­வ­ரை­யறை என்­பது நடை­மு­றை­யா­கும். அது மாநில உரி­மை­க­ளைப் பாது­காக்­கின்ற வகை­யில் இருக்க வேண்­டும் என்­ப­து­தான் சரி­யான அணு­கு­முறை. தொகுதி மறு­வ­ரை­ய­றையே கூடாது என்­பது பிறமாநி­லங்­க­ளின் ஆத­ர­வைப் பெற்­றுத் தராது. பா.ஜ.க அர­சின் நோக்­கத்­திற்கு மறை­மு­க­மா­கத் துணை போகிற வேலை­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">காங்­கி­ரஸ் ஆள்­கின்ற கர்­நா­ட­கம், தெலங்­கானா, கேரள மாநி­லங்­கள் எது­வும் No Delimitation என்று பேச­வில்லை. நாடா­ளு­மன்­றத்­தில் காங்­கி­ரஸ் எம்.பி.க்களும் Fair Delimitation என்­று­தான் வலி­யு­றுத்­தி­னார்­கள். பிறகு எதற்­காக தமிழ்­நாட்­டில் மட்­டும் No Delimitation என்று காங்­கி­ரஸ் குறுக்­கும் நெடுக்­கு­மாக ஓடு­கி­றது? த.வெ.க அரசு எதற்கு துணை போகி­றது?  கர்­நா­டக காங்­கி­ரஸ் அர­சைக் காப்­பாற்­று­வது தவிர வேறு என்ன கார­ணம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">காங்­கி­ரஸ் தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான ப.சிதம்­ப­ரம், தொகுதி மறு­வ­ரை­யறை குறித்து ஏப்­ரல் மாதத்­தில் தமிழ்­நாட்­டில் இருந்த ஒற்­றுமை, ஆகஸ்ட் மாதத்­தில் ஏன் இல்லை என்று அப்­பாவி போல கேட்­கி­றார். ஏப்­ரல் மாதத்­தில் இருந்த காங்­கி­ரஸ், மே மாதம் 4ந் தேதிக்­குப் பிறகு எங்கே தாவி­யது? ஏன் தாவி­யது? ஒற்­று­மை­யைக் குலைத்து, ஓடிப் போனது யார்? காங்­கி­ரஸ்­தானே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தொகுதி மறு­வ­ரை­யறை விவ­கா­ரத்­தில் ஒரு­மித்த நிலையை சிதைத்து, காவி­ரி­யில் தமிழ்­நாட்­டிற்­கான உரி­மையை மறுத்து, தமிழ்­நாட்டு மக்­க­ளி­டம் அம்­ப­லப்­பட்டு நிற்­கும் காங்­கி­ரஸ், தி.மு.க.வைப் பார்த்து சிரிக்­க­லாமா? அந்த சிரிப்பு கண்­ணாடி முன் நிற்­ப­வர், அதில் தெரி­யும் முகத்­தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்­பது  போன்ற கேலிக்­கூத்­து­தானே!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>