<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,773,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 13 2026 03:37:14 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260813T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="13082026-CHN-02" position.sequence="02" ex-ref="13082026-CHN-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">எப்.சி.ஆர்.ஏ. சட்டத் திருத்த மசோதா சிறுபான்மையினர் நடத்தக்கூடிய</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="26"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">தொண்டு நிறுவனங்கள் மீது நடத்தப்படும் மிகப் பெரிய தாக்குதல்!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="65"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">சட்டப்பேரவையில் எப்.சி.ஆர்.ஏ. சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தும் தீர்மானத்தில் எஸ்.ஆஸ்டின் பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="AustinMLA_02_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஆக. 13 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எப்.சி.ஆர்.ஏ. சட்­டத் திருத்த மசோ­தாவை திரும்­பப் பெற வேண்­டும் என்ற தீர்­மா­னத்­தில் கழ­கம் சார்­பில் வர­வேற்று எஸ்.ஆஸ்­டின் பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பேர­வைத் தலை­வர் அவர்­களே, ஒன்­றிய அரசு கொண்டு வந்­துள்ள ‘வெளி­நாட்டு பங்­க­ளிப்பு (ஒழுங்­கு­முறை) திருத்த மசோதா, 2026-ஐ அதன் தற்­போ­தைய வடி­வில் திரும்­பப் பெறு­மாறு ஒன்­றிய அரசை தமிழ்­நாடு சட்­ட­மன்­றப் பேரவை ஒரு­ம­ன­தாக வலி­யு­றுத்­து­கி­றது’ என்ற அரசு கொண்டு வந்த தனித் தீர்­மா­னத்­தினை திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வர­வேற்­கி­றது, ஆத­ரிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த மசோதா மிக­வும் ஆபத்­தான, புதிய அதி­கா­ரங்­களை உரு­வாக்­கு­கி­றது. இந்­தத் திருத்த மசோ­தாவை திரும்­பப் பெறக்­கோரி, இந்த மசோ­தா­வில் உள்ள பாதிப்­பு­க­ளைக் குறித்து விளக்­க­மா­கத் தெரி­வித்து, சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்கு முன்பே 3-.4.-2026 அன்று எங்­க­ளு­டைய தலை­வர், திரா­விட மாடல் அர­சி­னு­டைய நாய­கர், முன்­னாள் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அண்­ணன்  ஸ்டாலின் அவர்­கள், பிர­த­மர் நரேந்­திர மோடி அவர்­க­ளுக்கு கடி­தம் மூலம் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்­கள். அது­மட்­டு­மல்­லா­மல், தேர்­தல் முடிந்­த­பி­ற­கும்­கூட தொடர்ந்து எங்­க­ளு­டைய தலை­வர் அவர்­கள், எங்­க­ளு­டைய  நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்  பி. வில்­சன் அவர்­க­ளு­டைய தலை­மை­யில் இந்­தியா முழு­வ­து­முள்ள 16 சிறு­பான்மை மதத் தலை­வர்­களை உள்­ள­டக்­கிய Joint Action Forum on Minorities என்ற ஓர் அமைப்பை உரு­வாக்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அந்த அமைப்பு,  பி. வில்­சன், M.P. அவர்­க­ளு­டைய தலை­மை­யில், 6-.8.-2026 அன்று  உள்­துறை அமைச்­சர்  அமித் ஷா அவர்­க­ளைச் சந்­தித்து, சுமார் ஒரு மணி நேரம் இந்­தச் சட்­டத் திருத்­தத்­தில் உள்ள பாதிப்­பு­க­ளை­யெல்­லாம் அவர்­க­ளி­டத்­தில் எடுத்­துச் சொல்லி, இந்த மசோ­தா­வைத் திரும்­பப் ­பெற வேண்­டு­மென்று வலி­யு­றுத்­தி­யுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சிறு­பான்மையின மக்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">மீது தாக்­கு­தல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பேர­வைத் தலை­வர் அவர்­களே, இந்­தத் திருத்த மசோதா சிறு­பான்­மை­யி­னர் நடத்­தக்­கூ­டிய தொண்டு நிறு­வ­னங்­கள்­மீது நடத்­தப்­ப­டும் மிகப்­பெ­ரிய ஒரு தாக்­கு­த­லா­கும். இந்­தச் சட்­டத்­தில் உள்ள பிரிவு 16A (5)-ன்படி, தானா­கவே முடி­வுக்கு வரு­தல் என்ற ஒரு புதிய வரை­யறை கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. அதா­வது, இந்த வரை­ய­றை­யின்­படி, தொண்டு நிறு­வ­னங்­கள் FCRA licence-ஐ புதுப்­பிக்­க­ வில்லை என்­றாலோ அல்­லது அரசு FCRA licence-ஐ புதுப்­பிக்க மறுத்­தாலோ அல்­லது நிர்­வாக ரீதி­யாக ஏதா­வது ஒரு தாம­தம் ஏற்­பட்­டாலோ, சிறு­பான்­மை­ 
யி­னர்­கள் நடத்­தக்­கூ­டிய தொண்டு நிறு­வ­னங்­க­ளின் உரிமை, தானா­கவே இரத்து செய்­யப்­பட்­டு­வி­டும். அதற்­கான கார­ணம் சொல்­ல­வேண்­டிய எந்த அவ­சி­ய­மும் இந்­தத் திருத்­தச் சட்­டத்­தில் இல்லை. அவர்­கள் என்ன தவறு செய்­தார்­கள் என்­ப­தைக்­கூட சொல்­லா­மல், அவர்­க­ளு­டைய உரிமை முழு­மை­யாக இந்­தச் சட்­டத் திருத்­தத்­தின் மூல­மாக பறிக்­கப்­பட்­டு­வி­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­னும் ஒன்­றி­ரண்டு பிரி­வு­கள் இந்­தச் சட்­டத்­தில் இருக்­கின்­றன. இந்­தச் சட்­டத்­தில் உள்ள பிரிவு 16A (3) மற்­றும் (6)-ன்படி, நிர்­ண­யிக்­கப்­பட்ட அதி­கார அமைப்பு என்ற புதிய அமைப்பு ஒன்று உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அதற்கு ஒன்­றிய அர­சால் தனி­யாக ஓர் அதி­காரி நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். சிறு­பான்மை அமைப்­பு­கள் நடத்­தக்­கூ­டிய தொண்டு நிறு­வ­னங்­களை மிரட்­டு­ வ­தற்­காக, அம­லாக்­கத் துறை போல செயல்­பட இந்­தப் புதிய அமைப்பு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது என்று நாங்­கள் கரு­து­கின்­றோம். இந்த அமைப்­பின்­மூ­ல­மாக தொண்டு நிறு­வ­னங்­கள் நடத்­தும் கிறித்­துவ வேதா­ல­யங்­கள் உட்­பட அனைத்து சொத்­து­க­ளை­யும் பறி­மு­தல் செய்ய முடி­யும். குறிப்­பாக, பள்­ளி­கள், மருத்­து­வ­ம­னை­கள், ஆத­ர­வற்­றோர் இல்­லங்­கள், நிலங்­கள் உட்­பட அனைத்­தை­யும் அந்­தக் குறிப்­பிட்ட அதி­காரி அவ­ரது கட்­டுப்­பாட்­டிற்­குள் கொண்­டு­வர முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தொண்டு நிறு­வ­னங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">பாதிக்­கப்­ப­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த மசோ­தா­வில் மிக­வும் கொடூ­ர­மான பகுதி என்­ன­வென்­றால், திருத்­தத்­திலே குறிப்­பி­டப்­பட்­டுள்ள பகுதி 16A (1) மற்­றும் (2)-ன்படி, உரி­மை­யா­தல் என்ற ஒரு குறிப்பு அங்கே சொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றது. அந்த உரி­மை­யா­தல் பிரி­வின்­படி தொண்டு நிறு­வ­னத்­தி­னு­ டைய சொத்­துக்­கள் வெளி­நாட்டு நிதி­கள் மூல­மா­கவோ அல்­லது வெளி­நாடு மற்­றும் உள்­நாட்டு நிதி­கள் கலந்­தி­ருந்­தா­லும் சரி, இந்த FCRA திருத்த மசோதா நிறை­வே­றிய உட­னேயே, உரி­மை­களை இழக்­கக்­கூ­டிய தொண்டு நிறு­வ­னங்­க­ளி­னு ­டைய முழு சொத்­துக்­க­ளும் ஒன்­றிய அர­சி­னு­டைய 
கட்­டுப்­பாட்­டிற்­குள் போய்­­விடும். ஒன்­றிய அர­சால் நிய­மிக்­கப்­பட்­டிருக்­கும் அந்த அதி­காரி, அந்­தச் சொத்­துக்­களை அர­சுத் துறைக்கு மாற்­ற­லாம் அல்­லது விற்­க­லாம், விற்ற பணத்தை அர­சின் தொகுப்பு நிதிக்கு, அதா­வது Consolidated Fund என்ற நிதிக்கு கொண்டு செல்­லப்­ப­ட­லாம். இதில் தொண்டு நிறு­வ­னங்­க­ளின் உரிமை, முழு­மை­யா­கப் பாதிக்­கப்­­படு­வதை அர­சி­னு­டைய கவ­னத்­திற்கு நான் கொண்­டு­ வ­ரு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேற்­சொன்ன திருத்த விதி­க­ளு­டைய தாக்­கத்­தைப் பார்க்­கின்­ற­பொ­ழுது, 50 ஆண்­டுக்­கா­ல­மாக நாம் கட்­டிக் காத்த பள்­ளி­கள், மருத்­து­வ­ம­னை­கள், முதி­யோர் மற்­றும் ஆத­ர­வற்­றோர் இல்­லங்­கள் உள்­ளிட்ட சமூ­க­நல அமைப்­பு­கள் அனைத்­தும், ஒரே கையெ­ழுத்­தில் ஒன்­றிய அர­சி­னு­டைய கைக­ளுக்­குச் சென்­று­வி­டும். ஏழை மற்­றும் கிரா­மப்­புற மக்­க­ளுக்கு அவர்­கள் பெற்­று­வந்த சேவை­கள் முற்­றி­லு­ மாக முடக்­கப்­பட்­டு­வி­டும். இந்­தச் சட்­டத் திருத்த மசோதா என்­பது சட்­டத்­தின் பெய­ரி­லேயே, துப்­பாக்கி முனை­யில் அடிக்­கப்­ப­டும் மிகப்­பெ­ரிய கொள்ளை மட்­டு­மல்ல, இது ஒரு சட்­டப்­பூர்­வ­மான திருட்­டு­மா­கும் என்­பதை இந்த அவைக்கு நான் தெரி­வித்­துக்­கொள்ள கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் இந்த மசோதா, இந்­திய அர­சி­யல் சாச­னத்­தின்அடிப்­படை உரி­மை­களை நேர­டி­யாக மீறு­கி­றது. அர­சி­ய­ல­மைப்பு உறுப்­புரை 25-மத சுதந்­தி­ரம், அர­சி­ய­ல­மைப்பு உறுப்­புரை 26-மத விவ­கா­ரங்­களை நிரு­வ­கிப்­ப­ தற்­கான சுதந்­தி­ரம், அர­சி­ய­ல­மைப்பு உறுப்­புரை 29 மற்­றும் 30-சிறு­பான்­மை­யி­ன­ரின் கல்வி உரி­மைகள், அர­சி­ய­ல­மைப்பு உறுப்­புரை 300A- சொத்­து­ரிமை என இவை அனைத்­தை­யும் இந்த மசோதா புறக்­க­ணித்­தி­ருக்­  கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தத் திருத்த மசோதா இயற்கை நீதிக்கு எதி­ராக உள்­ளது மட்­டு­மல்ல, தொண்டு நிறு­வ­னங்­க­ளைக் கேட்­கா­மல், கார­ணம் சொல்­லா­மல், விசா­ரணை இல்­லா­மல், அவற்­றின் சொத்­துக்­க­ளைப் பறித்­துக்­கொள்­வது என்­பது அடிப்­படை உரி­மை­யையே மீறு ­வ­தா­கும். திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் எங்­க­ளு­டைய தலை­வ­ரு­டைய தலை­மை­யில், தொடர்ந்து இந்த மசோ­தாவை திரும்­பப் பெறு­வ­தற்­கான அனைத்து முன்­னெ­டுப்­பு­ க­ளை­யும் நாங்­கள் எடுத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனவே, இன்­றைக்கு இந்த மசோ­தாவை திரும்­பப் பெறு­வ­தற்­கான தனித் தீர்­மா­னத்­தைக் இந்த அர­சும் கொண்­டு­வந்­தி­ருக்­கி­றது. அரசு கொண்டு வந்­துள்ள இந்­தத் தீர்­மா­னத்தை நாங்­கள் வர­வேற்­ப­தோடு, இந்­தத் தீர்­மா­னத்தை ஒன்­றிய அரசு திரும்­பப் பெறு­வ­தற்­கான அனைத்­துத் தொடர் நட­வ­டிக்­கை­க­ளை­யும் இந்த அரசு மேற்­கொள்ள வேண்­டு­மென்று கேட்டு, இந்­தத் தீர்­மா­னத்தை வர­வேற்று நிறைவு செய்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு எஸ்.ஆஸ்­டின் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>