<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 13 2026 03:38:41 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260813T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="13082026-CHN-05" position.sequence="05" ex-ref="13082026-CHN-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">13.08.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">நல்லதும் மாற்றம்தான்! கெட்டதும் மாற்றம்தான்! எதிர்பார்த்து வாக்களித்த</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="29"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="88">தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்ததோ பெருத்த ஏமாற்றம்தான்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="45">பேரவையில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="38">மக்கள் நலனில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை    விஞ்சி யாரும் நிற்க முடியாது!</lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தொடர்ச்சி 6ஆம் பக்கம்</lang>
	</hl7>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup806021_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup819861_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup805919_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="OPaneerselvam_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்னை, ஆக.13–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ‘‘நல்லதும்  மாற்றம்தான்”, கெட்டதும் மாற்றம்தான். எதிர்பார்த்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்ததோ பெருத்த ஏமாற்றம்தான்’’ என்று கூறினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­டப் பேர­வை­யில் முன்­னாள் முதல்­வர் ஓ.பன்­னீர்­செல்­வம் பேசி­ய­
தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கே அமர்ந்­தி­ருக்­கின்ற சக சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் - எங்­க­ளின் பேச்­சுக்­களை கேட்டு ரசிக்க மாடத்­தில் வந்து அமர்ந்­தி­ருக்­கும் பார்­வை­யா­ளர்­க­ளுக்­கும் முதற்­கண் வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொண்டு எனது உரை­யைத் தொடங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த சட்­ட­மன்­றம் எத்­த­னையோ வித்­தி­ய­ச­மான சூழல்­க­ளைக் கண்­டி­ருக்­கி­றது. ஆனால், இந்த அரசு ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கும் சூழல் என்­பது வித்­தி­யா­ சத்­தி­லேயே வித்­தி­யா­ச­மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“செய்­வதை மட்­டும்­தான் சொல்­வோம்” என்று ஆணித்­த­ர­மாக அள்­ளித்­தெ­ளித்த வாக்­கு­று­தி­க­ளைத் தாங்­க­ளும் மறந்து – மக்­க­ளும் மறந்­தி­ருப்­பார்­கள் என்­றெண்ணி, தனது முதல் நிதி­நிலை அறிக்­கை­யை­யும் – வேளாண் நிதி­நிலை அறிக்­கை­யும் தாக்­கல் செய்­துள்­ளது இந்த அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதி­லும், பெயர் மாற்­றப் பட்­டி­யல் போல் வெளி­யான இந்த நிதி­நிலை அறிக்கை, தேர்­த­லின்­போது சொன்ன “கஜானா காலி” என்ற பிரச்­சா­ரத்­தைக் கேள்­விக்­கு­றி­யாக்­கி­விட்­டது. இதைப் பார்த்து ஆச்­ச­ரி­யக்­கு­றி­கள்­கூட விக்­கித்து நிற்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">ஏமாற்­றத்­தின் வடி­வ­மான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நிதி­நிலை அறிக்கை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த அரசு ஆட்­சிப் பொறுப்­பேற்­றப் பின் அரங்­கே­றிய காட்­சி­க­ளைத் திரும்­பிப் பார்க்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­சர் அவர்­கள் துறை ­ரீ­தி­யான ஆய்­வு­களை மேற்­கொண்­டார். பட்­ஜெட்­டுக்கு முன்­ன­தாக மீண்­டும் ஆய்வு செய்­தார். அமைச்­ச­ர­வைக் கூட்­டம் நடந்­தது. அதில், தேர்­தல் அறிக்­கை­யில் சொல்­லப்­பட்ட வாக்­கு­று­தி­க­ளுக்­கான செயல்­திட்­டம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது என்று செய்தி வெளி­யா­னது. அதற்கு “வெற்­றித் தமி­ழ­கத் திட்­டங்­கள்” என்­றெல்­லாம் அலங்­கா­ர­மாய் பெயர் சூட்­டப்­பட்டு அறிக்­கை­க­ளாக வெளி­
வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், இப்­போது தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள நிதி­நிலை அறிக்­கையோ, ஏமாற்­றத்­தின் வடி­வ­மாக இருக்­கி­றது. திருப்­பு­கின்ற பக்­க­மெல்­லாம் திரா­விட மாடல் அர­சின் சாத­னைத் திட்டங்கள் தான் ஜொலிக்­கி­றது. மக்­கள் மன­தில் நிலை­கொண்­டுள்ள எங்­கள் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் உரு­வாக்­கி­யத் திட்­டங்­களே புது உரு கொண்டு நிற்­கின்­றன. இதில் புதிய அர­சின் திட்­டங்­க­ளைத் தேடு­கி­றேன்.. தேடு­கி­றேன்… தேடிக்­கொண்டே இருக்­கி­றேன். தேடு­வது எனக்­காக அல்ல; மக்­க­ளுக்­காக! புதிய அரசு அமைந்­தி­ருக்­கி­றது… புதிய திட்­டங்­கள் வரும் என்று நம்­பிய மக்­க­ளுக்­காக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டம். பெண்­க­ளின் வாழ்­வா­த­ரத்­துக்­கும் சுய­ம­ரி­யா­தைக்­கும் துணை­நின்ற திட்­டம். ஆயி­ரம் கைகள் நீட்டி ஆத­வனை மறைக்­க­லாம் என்று கனவு காண்­பது போல், அத்­திட்­டம் பெயர் மாற்­றம் கண்­டி­ருக்­கி­றது. ஆனால், ஆளும் அரசு தேர்­தல் அறிக்­கை­யில் சொன்­ன­படி, உரி­மைத்­தொகை உய­ர­வில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மக­ளிர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">ஏமாந்து நிற்­கின்­ற­னர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இனிப்­பூட்­டும் இன்­பச் செய்­தி­கள் வரும்; ஆண்­டுக்கு ஆறு கேஸ் சிலிண்­டர்­கள் வரும் என்று நம்­பிய மக­ளிர், அது­கு­றித்த அறி­விப்­பு­கூட வர­வில்லை என்று ஏமாந்து நிற்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“கல்வி ஒன்றே யாரா­லும் திருட முடி­யாத சொத்து” என்­பதை எல்லா தரு­ணங்­க­ளி­லும் எடுத்­துச் சொல்லி, கல்­விக்­கும் மாண­வர்­க­ளுக்­கும் பொற்­கா­ல­ மாக விளங்­கிய திரா­விட மாடல் வழங்­கிய ஒளி­யில், இந்த அரசு நடை­போ­டும் என எதிர்­பார்த்­தோம். ஆனால், மாண­வர்­க­ளின் இடை­நிற்­ற­லைத் தடுக்க 15 ஆயி­ரம் ரூபாய் நிதி­யு­தவி என்ற அறி­விப்­புக்­கான திட்­டத்­தைக்­கூட காண­வில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாடே திரும்­பிப் பார்த்து, பல்­வேறு மாநி­லங்­க­ளும் கைக்­கொண்ட திட்­டம்,விடி­யல் பய­ணம்! இதனை விரி­வு­ ப­டுத்தி, அனைத்து அர­சுப் பேருந்­து­க­ளி­லும் மாநி­லம் முழு­வ­தும் எங்கு வேண்­டு­மா­னா­லும் பய­ணிக்­க­லாம் என்ற நிலையை ஏற்­ப­டுத்தி, சொன்ன சொல்­லைக் காப்­பாற்­று­வீர்­கள் என மக­ளிர் நம்­பி­னர். ஆனால் அதி­லும் ஏமாற்­றம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி, இன்­றைய ஆளும் அரசு அள்­ளி­வீ­சிய தேர்­தல் அறி­விப்­பு­கள் ஒவ்­வொன்­றை­யும் தேடித் தேடிக் களைத்­து­விட்­ட­னர் மக்­கள். அவர்­க­ளது வேத­னை­யை­யும் ஏமாற்­றத்­தை­யும்­தான் இந்­தப் பேர­வை­யில் நான் ஒலித்­துக் கொண்­டி­ருக்­கி­றேன். செய்­யா­மல் விட்­டு­விட்­ட­தைச் சுட்­டிக்­காட்­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நல்­ல­தும் மாற்­றம்­தான். கெட்­ட­தும் மாற்­றம்­தான். எதிர்­பார்த்து வாக்­க­ளித்த தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­குக் கிடைத் 
துள்­ளதோ பெருத்த ஏமாற்­றம்­தான்! மொத்­தத்­தில், முதல் நிதி­நிலை அறிக்கை என்­பது முதல் ஏமாற்­றம்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த முதல் ஏமாற்­றத்தை எங்­க­ளுக்கு ஏன் தந்­தீர்­கள் என்று இந்த அர­சைப் பார்த்து மக­ளி­ரும் இளை­ஞர்­க­ளும் புலம்­பு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பயிர்க் கடன் தள்­ளு­ப­டி­யி­லும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">ஏமாற்­றம் தான் மிஞ்­சி­யி­ருக்­கி­றது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர்­க­ளைப் பார்த்து கண்­ணீ­ரோடு நிற்­கும் விவ­சா­யி­கள் தனது ஏமாற்­றத்தை வாய்­விட்­டுச் சொல்ல முடி­யா­மல் தவிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எப்­ப­டிச் சொல்­வார்­கள் பாவம்…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காவிரி காய்ந்து கிடக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேக­தாது அணை கட்­டியே தீரு­வோம் என கர்­நா­ட­கம் ஒற்­றைக் காலில் நிற்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதற்­கெல்­லாம் தீர்வு காண வேண்­டிய அரசோ, பயிர்க்­க­டன் தள்­ளு­ப­டி­யி­லும் சொன்­ன­தைச் செய்­யா­மல் ஏமாற்­றத்தை வழங்­கி­யி­ருக்­கி­றது. போதாக் 
கு­றைக்கு, நெல் டன்­னுக்கு 3,500 ரூபா­யும் கரும்­புக்கு 4,500 ரூபா­யும் குறைந்­த­பட்ச ஆதார விலை கிடைக்­கும் என்று நம்பி ஏமாந்­துள்ள நிலை­யில், தங்­க­ளது ஏமாற்­றங்­க­ளைச் சொல்ல வார்த்­தை­க­ளின்றி விவ­சா­யி­கள் அழு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">காக்­கிச்­சட்டை அணிந்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">காவ­லர்­க­ளுக்­கும் ஏமாற்­றம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காக்­கிச்­சட்டை அணிந்த காவ­லர்­களோ, தங்­க­ளது அடிப்­படை சம்­ப­ளம் மாதம் 18,200 ரூபா­யி­லி­ருந்து 25 ஆயி­ரம் ரூபா­யாக உய­ரும் என்று நம்பி ஏமாந்து நிற்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பட்­ஜெட் பக்­கங்­களை எல்­லாம் புரட்டி புரட்டி தேடி­னா­லும் பழைய ஓய்­வூ­தி­யத் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளைக் காண­வில்லை என அரசு ஊழி­யர்­கள் ஏமாந்து நிற்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">5 ஆண்­டு­கள் பணி முடித்த செவி­லி­யர்­கள், தற்­கா­லிக ஆசி­ரி­யர்­கள் பணி நிரந்­த­ரம் செய்­யப்­ப­டு­வோம் என நம்­பி­னர். ஆனால், அதற்­கான எந்த அறி­விப்­பும் வரா­த­தால் அவர்­க­ளும் ஏமாந்து நிற்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மின் கட்­ட­ணம் மற்­றும் நூல் கட்­டண உயர்வு சுமை­யைத் தாங்க ஒவ்­வொரு நெச­வா­ளர் குடும்­பத்­திற்­கும் ஆண்­டுக்கு 30 ஆயி­ரம் ரூபாய் வங்­கிக் கணக்­கில் செலுத்­தப்­ப­டும் என்ற கவர்ச்­சி­க­ர­மான வாக்­கு­றுதி தேர்­தல் அறிக்­கை­யில் இருக்­கி­றது. தேர்­தல் முடிந்து ஆட்­சிப் பொறுப்­பிற்கு வந்த பிற­கும், இன்­னும் அது தேர்­தல் அறிக்­கை­யி­லேயே இருக்­கி­றதே என நெச­வா­ளர்­க­ளுக்­கும் தங்­கள் ஏமாற்­றத்­தைச் சொல்ல வழி­யின்றி விழி­பி­துங்­கு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இத்­தனை ஏமாற்­றங்­களை இந்த நிதி­நிலை அறிக்கை தந்­து­விட்­டதே என்­றெண்ணி வேத­னை­ப­டும்­ப­டி­தான் நிதி­நிலை அறிக்­கை­யும் - வேளாண் நிதி­நிலை அறிக்­கை­யும் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாநி­லத்தை திரா­விட மாடல் அரசு கட­னில் ஆழ்த்தி விட்­டுப் போய்­விட்­ட­தாக மேடை தோறும் குற்­றம் சாட்டி பிரச்­சா­ரம் மேற்­கொள்­ளப்­பட்­டது. இன்­றைக்கு புதிய அர­சின் நிதித்­துறை செய­லா­ளர் என்ன சொல்­கி­றார். “கடன் வாங்­கா­மல் அடுத்த 50 ஆண்­டு­க­ளுக்கு யாரும் ஆட்சி முடி­யாது” என்­கி­றார். நான் ஏன் இதைக் குறிப்­பி­டு­கி­றேன் என்­றால், தேர்­தல் பிரச்­சார மேடை­க­ளில் சாட்­டிய குற்­றச்­சாட்டு, முதல் நிதி நிலைஅறிக்­கை­யி­லேயே தவ­றா­னது என்­பது முத­ல­மைச்­ச­ருக்கு இந்­நே­ரம் தெரிய வந்­தி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது புதிய அர­சின் முதல் திருத்­தப்­பட்ட நிதி நிலை அறிக்கை 2026-27ல் உள்ள கடன் 10,71,770.34 கோடி ரூபாய். அதா­வது மாநில மொத்த உள்­நாட்டு உற்­பத்தி மதிப்­பில் நிலு­வை­யில் உள்ள மொத்த கடன் விகி­தம் 26.12 சத­வீ­தம். புதிய அரசு பொறுப்­பேற்று 93 நாட்­கள் ஆகி­றது. இந்த திருத்­தப்­பட்ட நிதி­நிலை அறிக்­கை­யில் சொல்­லப்­பட்­டுள்ள கடன் 10,98,768 கோடி ரூபாய். அதா­வது 27.01 சத­வீ­தம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் ஏன் இதைச் சொல்­கி­றேன் என்­றால், ஒரு அரசு கடன் வாங்­கா­மல் இருக்க முடி­யாது. ஆனால் கடன்­க­ளால் எத்­தனை திட்­டங்­கள் நம் மாநி­லத்­திற்கு கிடைத்­தது. எப்­படி பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு அந்­தக் கடன் துணை நின்­றது என்­ப­தைத்­தான் பார்க்க வேண்­டுமே தவிர, வீணாக கடன் வாங்கி விட்­டார்­கள், கடன் வாங்கி விட்­டார்­கள் எனக் கூறி ஒரு பொறுப்­பான நிதி மேலாண்­மை­யைச் செய்த எங்­கள் முன்­னாள் முத­ல­மைச்­சர் தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­களை குறை சொல்­லக் கூடாது என்­ப­தற்­கா­கச் சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மின்றி, கடன் வாங்­கு­வது அர­சின் இஷ்­டத்­திற்கு செய்ய முடி­யாது. அதற்­கும் அர­சுக்கு பொறுப்பை நிர்­ண­யிக்­கும் ஒரு சட்­டம் இருக்­கி­றது. அது­தான் 2003-ஆம் ஆண்டு தமிழ்­நாடு நிதி­நிலை நிரு­வா­கப் பொறுப்­பு­ட­மைச் சட்­டம். அந்­தச் சட்­டத்தை மீறி, அந்­தச் சட்­டம் வகுத்து கொடுத்­துள்ள எல்­லைக் கோட்­டைத் தாண்டி யாரும் கடன் வாங்க முடி­யாது. இந்த அர­சும் வாங்க முடி­யாது என்­பதை மேடைப் பிரச்­சா­ரத்தை முடித்து விட்டு, ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்­துள்ள முத­ல­மைச்­ச­ரும் இந்­நே­ரம் உணர்ந்­தி­ருப்­பார் என நம்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் ஆட்­சி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நீடித்த வளர்ச்­சியை நோக்­கிய நிதி­நிலை அறிக்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வளர்ச்சி விகி­தத்­தில் தமிழ்­நாட்டை நாட்­டின் முன்­னணி மாநி­ல­மாக உயர்த்­திய கடந்த திரா­விட மாடல் அர­சின் இடைக்­கால நிதி­நிலை அறிக்கை, மாநி­லத்­தின் சொந்த வரு­வாயை உயர்த்தி, உற்­பத்தி முத­லீ­டு­களை அதி­க­ரித்து, நீடித்த வளர்ச்­சியை நோக்­கிய தெளி­வான நிதி அணு­கு­மு­றையை முன்­வைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், தற்­போ­தைய அர­சின் திருத்­தப்­பட்ட நிதி­நிலை அறிக்கை அந்­தப் பாதை­யைத் தொட­ரத் தவ­றி­யுள்­ளது. உயர வேண்­டிய சொந்த வரு­வாய் குறைந்­துள்­ளது. மாநி­லத்­தின் சொந்த வரி வரு­வாய் கணிப்பு 2,839 கோடி ரூபாய் குறைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதா­வது, “தமிழ்­நாட்டை தற்­சார்­பாக்­கு­வோம்” என்று கூறிய இந்த அரசு, நடை­மு­றை­யில் மாநி­லத்­தின் வரு­வாய் ஈட்­டும் திற­னையே பல­வீ­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை­விட கவ­லை­ய­ளிப்­பது என்­ன­வென்­றால், மாநி­லத்­தின் வரி மற்­றும் வரி­யல்லா வரு­வாயை உயர்த்­து­வ­தற்­கான புதிய சிந்­த­னையோ, புதிய திட்­டமோ, புதிய அணு­கு­மு­றையோ இந்த நிதி­நிலை அறிக்­கை­யில் எங்­கும் காணப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெள்ளை அறிக்­கை­யில், முந்­தைய அர­சின் வரு­வாய் திரட்­டும் திறனை கடு­மை­யாக விமர்­சித்­த­வர்­கள், இன்று அதை­விட மேம்­பட்ட வரு­வாய் ஈட்­டும் செயல்­திட்­டம் என்ன என்­பதை இந்த அவை­யில் விளக்­கவே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, ஒன்­றிய அர­சி­ட­மி­ருந்து தமிழ்­நாட்­டுக்­குக் கிடைக்க வேண்­டிய நிதிப் பகிர்வு என்­பது, நமது தமிழ்­நாட்­டின் உரிமை. நமது மக்­கள் கட்­டும் வரிப்­ப­ணத்­திற்­கான உரிய பங்­கைத்­தான் நாம் தொடர்ந்து கேட்­கி­றோம். நிதிப் பகிர்­வும் அதி­கா­ரப் பகிர்­வும் தி.மு.க. தொடர்ந்து முன்­வைத்து வரும் உயிர்க்­கொள்­கை­கள். அத­னைத்­தான் “மாநி­லத்­தில் சுயாட்சி; மத்­தி­யில் கூட்­டாட்சி” என்று ஐம்­பெ­ரும் முழக்­கங்­க­ளில் ஒன்­றாக வடித்­துத் தந்­தார் தலை­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தக் கொள்­கை­யைப் பேர­றி­ஞர் அண்ணா நம்­முன் விதைத்­தார்; முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஆழ­மாக வளர்த்­தார்; திரா­விட நாய­கர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அதற்­காக சம­ர­ச­ மின்­றித் தொடர்ந்து போரா­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">வரு­வாய் மதிப்­பீட்­டின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நம்­ப­கத்­தன்மை குறித்து கேள்வி எழு­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாநி­லத்­திற்­கு­ரிய நிதிப் பகிர்வு கிடைக்க வேண்­டும் என்று எங்­க­ளது தலை­வர் தொடர்ந்து குரல் கொடுத்து வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், இந்த நிதிப் பகிர்வு போது­மா­ன­தாக இல்லை என்ற உண்­மை­யைக்­கூட இந்த அர­சின் நிதி­நிலை அறிக்கை சுட்­டிக்­காட்­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மொத்த வரு­வாய் உயர்வு மாநி­லத்­தின் முயற்­சி­யால் அல்ல; ஒன்­றிய அர­சி­ட­மி­ருந்து எதிர்­பார்க்­கப்­ப­டும் கூடு­தல் மானி­யங்­க­ளால் ஏற்­பட்­டுள்­ளது. அந்த மானி­யங்­க­ளும், முந்­தைய தி.மு.க. அரசு தொடர்ந்து வலி­யு­றுத்தி, போரா­டிப் பெற்ற தமிழ்­நாட்­டின் உரி­மைத் தொகை­களே என்­பதை அழுத்­த­மா­கப் பதிவு செய்ய விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த நிதி­நிலை அறிக்­கை­யின் வரு­வாய் மதிப்­பீ­டு­க­ளில்­கூட நம்­ப­கத்­தன்மை குறித்த கேள்­வி­கள் எழு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாநி­லத்­தின் சொந்த வரு­வாய் சுமார் 10.5 சத­வீ­தம் உய­ரும் என்று அரசு கணித்­துள்­ளது. ஆனால், மாநி­லப் பொரு­ளா­தா­ரம் பெய­ர­ள­வில் 14 சத­வீ­தம் வள­ரும் என்று அதே அரசு கூறு­கி­றது. பொரு­ளா­தார வளர்ச்­சி­யை­வி­டக் குறை­வா­கவே சொந்த வரு­வாய் வள­ரும் என்று அரசு கணிப்­பது, வரு­வாய்ஈட்­டும் திற­னில் ஏற்­பட்­டுள்ள மந்­த­நி­லை­யையே காட்­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும், கடந்த ஆண்­டில் இருந்த 17.4 சத­வீத வரு­வாய் வளர்ச்­சி­யை­விட இந்த ஆண்­டின் கணிப்பு குறை­வாக உள்­ளது. எனவே, இந்த வரு­வாய் மதிப்­பீ­டு­க­ளின் நம்­ப­கத்­தன்மை பற்­றியே சந்­தே­கம் எழு­கி­றது. வரு­வா­யின் அடிப்­ப­டைக் கணிப்­பி­லேயே தெளி­வின்மை இருக்­கும்­போது, இந்த நிதி­நிலை அறிக்­கை­யின் பிற மதிப்­பீ­டு­க­ளின் மீதும் இயல்­பா­கவே ஐயம் எழு­கி­றது. எதிர்­கால வளர்ச்­சிக்­கான மூல­தன முத­லீ­டு­கள் குறைக்­கப்­பட்­டி­ருப்­ப­தும் கவ­லை­ய­ளிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">செய­லாக்­கத்­திற்­கான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">முத­லீடு குறைவு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆறு­கள் இணைப்பு, மெட்ரோ விரி­வாக்­கம், ஏ.ஐ. நக­ரம், தொழிற்­பூங்­காக்­கள் எனப் பல அறி­விப்­பு­கள் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தா­லும், மூல­த­னச் செல­வி­னம் ரூ.2,577 கோடி குறைக்­கப்­பட்­டுள்­ளது. அறி­விப்­பு­கள் அதி­கம்; ஆனால் செய­லாக்­கத்­திற்­கான முத­லீடு குறைவு என்­பதே இந்த நிதி­நிலை அறிக்­கை­யின் உண்மை முகம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மூல­தன முத­லீட்­டுச் செல­வு­கள் குறைக்­கப்­பட்­டி­ருக்­கும்­போது, அரசு ஏன் அதி­க­மா­கக் கடன் வாங்­கு­கி­றது என்ற கேள்­வி­யும் தவிர்க்க முடி­யா­த­தாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க. உரு­வாக்­கிய நிதி ஒழுங்­கின் பலனை மட்­டுமே தற்­போ­தைய அரசு பயன்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நிதிப் பற்­றாக்­குறை 3 சத­வீ­தம் என்ற இலக்­கைத் தக்­க­வைத்­தி­ருப்­ப­தற்­குக் கார­ணம் புதிய வரு­வாய் ஈட்­டும் முயற்­சி­கள் அல்ல; ஒன்­றிய அர­சின் மானி­யங்­க­ளும், மூல­த­னச் செல­வி­னக் குறைப்­பும்­தான். வரு­வாய்ப் பற்­றாக்­கு­றை­யும் அதி­க­ரித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இடைக்­கால நிதி­நிலை அறிக்­கை­யில் இருந்­த­தை­விட வரு­வாய்ப் பற்­றாக்­குறை சுமார் 6,778 கோடி ரூபாய்உயர்ந்­துள்­ளது. இதை நிதி முன்­னேற்­றம்என்று கூற முடி­யாது. கடன் சுமை­யும் அதி­க­ரித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாநி­லத்­தின் சொந்த வரு­வாய் ஈட்­டும் முயற்சி குறைந்த நிலை­யி­லும், பொதுக் கடன் பெறும் அளவு உயர்த்­தப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தி.மு.க. அர­சின் நிதிநிலை அறிக்கை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">வரு­வாய் வளர்ச்­சியை மைய­மா­கக் கொண்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மொத்­தத்­தில், கடந்த தி.மு.க. அர­சின் இடைக்­கால நிதி­நிலை அறிக்கை உற்­பத்தி, முத­லீடு, வரு­வாய் வளர்ச்சி ஆகி­ய­வற்றை மைய­மா­கக் கொண்ட தொலை­நோக்­குப்பார்­வை­யுள்ள நிதித் திட்­ட­மாக இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், தற்­போ­தைய அர­சின் திருத்­திய நிதி­நிலை அறிக்கை, சொந்த வரு­வாயை உயர்த்­தும் வாய்ப்­பைக் கோட்­டை­விட்டு, மூல­தன முத­லீட்­டைக் குறைத்து, ஒன்­றிய அர­சின் மானி­யங்­களை அதி­கம் சார்ந்­தி­ருக்­கும் நிலைக்­குத் தமிழ்­நாட்­டைத் தள்­ளி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒற்றை வரி­யில் சொல்ல வேண்­டு­மென்­றால், தி.மு.க. உரு­வாக்­கிய வலு­வான நிதி அடித்­த­ளத்­தின் மீது நிற்­கும் இந்த அரசு, தமிழ்­நாட்­டின் எதிர்­கா­லத்­திற்­கான புதிய நிதி அடித்­த­ளத்தை அமைக்­கத் தவ­றி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உள்­ளதை உள்­ள­படி சொல்­லும் என்­னு­டைய கருத்­து­களை ஆளும் தரப்­பில் உள்­ள­வர்­க­ளில் சில­ரது மனம் ஏற்­றுக்­கொள்­ளா­மல் போக­லாம். பல­ரது மனம் ஏற்­றுக்­கொண்­டா­லும் அதை வெளிப்­ப­டுத்த தயங்­க­லாம். இருக்­கவே இருக்­கி­றது, எங்­க­ளைத் தற்­காத்­துக் கொள்­ளும் வாதம் என, ஆட்­சிப் பொறுப்­பில் உள்ள ஆளும்­கட்­சி­யி­னர் இங்கே ஒரு வாதத்தை வைக்­கக்­கூ­டும்…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாங்­கள் வந்து நூறு நாட்­கள்­கூட ஆக­வில்­லையே என்று அவர்­கள் சொல்­லக்­கூ­டும். எங்­க­ளுக்­குக் கால அவ­கா­சம் கொடுங்­கள் என்று கேட்­கக்­கூ­டும். அவர்­க­ளின் கோரிக்­கையை நான் எதிர்க்­க­வில்லை. ஆனால், உள்­ளதை உள்­ள­படி சொல்ல வேண்­டு­மல்­லவா? ஒரு செயலை ஒரு­வர் செய்ய வேண்­டு­மா­னால், முத­லில் அவ­ரி­டம் அதற்­கான முனைப்பு இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">ஆளும் அர­சின் தேர்­தல் 
அறிக்­கையை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நிறை­வேற்­றும் அறி­குறி இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த ஆட்சி ஏற்­பட்ட பிறகு, ஆளு­நர் உரை நிகழ்ந்­து­விட்­டது. நிதி­நிலை அறிக்கை தாக்­க­லா­கி­விட்­டது. வேளாண் நிதி­நிலை அறிக்கைவாசித்­தா­கி­விட்­டது. ஆனால், இவற்­றில் எங்­கா­வது ஆளும் அர­சின் தேர்­தல் அறிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தற்­கான அறி­கு­றி­கள் தென்­ப­டு­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட மாடல் திட்­டங்­க­ளின் விரி­வாக்­கம்­தானே எங்­கும் இருக்­கி­றது! இதனை யார் ஏற்­க­ம­றுத்­தா­லும், இது­தான் மக்­கள் காணும் உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட மாட­லின் திட்­டங்­க­ளைக் கடக்க முடி­யாது; மக்­கள் நல­னில் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலினை விஞ்சி யாரும் சிந்­திக்க முடி­யாது என்­ப­து­தான், இந்த நிதி­நிலை அறிக்­கை­கள் புலப் 
படுத்­தும் உண்மை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திக்­கெட்­டும் ஒளி­வீ­சும் திரா­விட மாடல் திட்­டங்­க­ளின் மறு­ப­திப்­பு­தான், இந்த அர­சின் முதல் பட்­ஜெட்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">காவி­ரிப் பிரச்­சி­னைக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நீண்ட நெடிய வர­லாறு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு எத்­த­னையோ பிரச்­சி­னை ­க­ளைச் சந்­தித்­தி­ருக்­கி­றது. அவற்­றில் காவிரி பிரச்­சி­னைக்கு, அந்த நதி போலவே நீண்ட நெடிய வர­லாறு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பல முத­ல­மைச்­சர்­கள் இப்­பி­ரச்­சி­னை­யில் பேசி­யி­ருக்­கி­றார்­கள். பல பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர்­கள் பேசி­யி­ருக்­கி­றார்­கள். ஆனால் பேச்­சு­வார்த்தை எல்­லாமே கானல் நீரான நிலை­யில் தான் - கர்­நா­ட­கம் எதற்­குமே அசைந்து கொடுக்­காத நிலை­யில்­தான் நாம் நீதி­மன்­றங்­க­ளின் உத­வியை நாடி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­லில் அண்டை மாநி­லம், 
அன்­போடு பேச வேண்­டும். இரு மாநில மக்­க­ளும் சுமு­க­மான சூழ்­நி­லை­யில் இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்­டும் என முழு முயற்சி மேற்­கொண்­டது திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கே கூட முத­ல­மைச்­சர் அவர்­கள் பேசும் போது 1969 என்று ஒரு ஆண்டை நினை­வு­ப­டுத்­தி­னார். அந்த ஆண்­டில் இருந்த கலை­ஞர் பிறந்த அதே 1924-ஆம் ஆண்­டில்­தான் இந்த காவிரி ஒப்­பந்­த­மும் போடப்­பட்­டது. இப்­பி­ரச்­சி­னை­யில், முத­லில் பொதுப்­ப­ணித்­துறை அமைச்­ச­ராக இருந்த அவர்­தான் காவி­ரிப் பிரச்­சினை குறித்து அப்­போ­தைய கர்­நா­டக முத­ல­மைச்­சர் வீரேந்­திர பாட்­டீ­லு­டன் பேச்­சு­வார்த்­தை­யைத் துவங்­கி­ய­வர் என்­பதை இந்த அவை­யிலே ஆழ­மா­கப் பதிவு செய்ய விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி எம்.ஜி.ஆர், ஜெய­ல­லிதா ஆகி­யோ­ரும் நேர­டி­யாக கர்­நா­ட­கா­வு­டன் பேசி­னார்­கள். பிறகு உச்­ச­நீ­தி­மன்­றமே உத்­த­ர­விட்­டும் பேசி­னார்­கள். ஆனால் தமிழ்­நாட்­டின் நீர் உரி­மையை, நம் விவ­சா­யி­க­ளின் உரி­மை­யைப் பற்றி கர்­நா­டக அரசு ஒரு சுமு­க­மான மன நிலை­யில் பேச முன்­வ­ராத கார­ணத்­தால்­தான், நாம் “பேச்­சு­வார்த்தை” என்­பதை விட்டு, நடு­வர் மன்­றம், உச்­ச­நீ­தி­மன்­றம் என்று நாடத் தொடங்­கி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இடைக்­கா­லத் தீர்ப்­பை­யும் பெற்­றோம். அதைச் செயல்­ப­டுத்த பிர­த­மர் தலை­மை­யி­லான ஆணை­யத்­தை­யும் பெற்­றோம். பிறகு நடு­நர் மன்­றத்­தின் இறு­தித் தீர்ப்­பை­யும் பெற்­றோம். அதை உச்­ச­நீ­தி­மன்­றமே உறு­தி­செய்து, தீர்ப்­பைச் செயல்­ப­டுத்த ஒரு திட்­டத்­தை­யும் பெற்­றோம். அத்­திட்­டப்­படி தண்­ணீர் சிறந்து விட ஒரு அமைப்­பை­யும் பெற்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சட்­டப்­படி கிடைத்த உரி­மையை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பேச்­சு­வார்த்தை என்று கோட்டை ­வி­டக்­கூ­டாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­படி பெறப்­பட்ட அமைப்­பு­தான் தற்­போது இருக்­கின்ற காவிரி மேலாண்மை ஆணை­யம் மற்­றும் காவிரி நீர் ஒழுங்­காற்­றுக் குழு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­போது நம்­மி­டம் இருக்­கும் காவிரி உரிமை சட்­டப்­ப­டி­யான -  உச்­ச­நீ­தி­மன்­றத்­தால் உறு­தி­யும் இறு­தி­யும் செய்­யப்­பட்ட உரிமை. நானும் பொதுப்­ப­ணித்­துறை அமைச்­ச­ராக, முத­ல­மைச்­ச­ராக இருந்து காவி­ரிப் பிரச்­சி­னை­யில் தொடர் நட­வ­டிக்­கை­களை எடுத்­த­வன் என்ற முறை­யில் இதனை உறு­தி­யா­கச் சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­டப்­படி கிடைத்த உரி­மையை நாம் இனி­யும் பேச்­சு­வார்த்தை என்ற ரீதி­யில் கோட்டை விட்­டு­வி­டக் கூடாது. முத­ல­மைச்­சர் அவர்­கள் கூட “பகை நாடு­களே பேசு­கின்­றன. நாம் பேசி­னால் என்ன” என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு எப்­போ­துமே கர்­நா­டகா மாநி­லத்தை “பகை மாநி­ல­மாக” கரு­தி­ய­தில்லை. அவர்­க­ளும் நம்­மைப் போல்­தான் இருப்­பார்­கள் என்றே நம்­பி­
யி­ருந்­தோம்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>