<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,953,958,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Aug 12 2026 14:22:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260813T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="13082026-TRY-05" position.sequence="05" ex-ref="13082026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup817032_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="chakirapaniMLA_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.3">சென்னை, ஆக. 13–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.3">“கழக ஆட்­சி­யில் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் நேரடி நெல் கொள்­மு­தல் நிலை­யங்­கள் திறக்­கப்­ப­டவே இல்­லையா?” என்று பேர­வை­யில் முன்­னாள் அமைச்­சர் அர.சக்­க­ர­பாணி அற­நி­லை­யத்­துறை அமைச்­ச­ருக்கு ஆதா­ரத்­து­டன் பதி­லடி கொடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.8">அர. சக்­க­ர­பாணி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">இந்து சம­யம் மற்­றும் அற­நி­லை­யங்­கள் துறை அமைச்­சர் அவர்­கள், சென்ற ஆட்­சி­யிலே நெல் சேமிப்­புக் கிடங்கு எங்­கும் கட்­ட­வில்­லை­யென்று ஒரு தவ­றான தக­வ­லைச் சபை­யிலே பதிவு செய்­தார். நான் அவ­ருக்­குச் சொல்­லிக்­கொள்­வது திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­வர், அன்­றைய   முத­ல­மைச்­சர் அண்­ணன் தள­பதி அவர்­கள் ஒரு நெல்­ம­ணி­கூட மழை­யில் நனை­யக்­கூ­டாது என்­பதை உணர்ந்து அவர் பல­முறை சொல்­லி­யி­ருக்­கி­றார். ஒரு­முறை தொலைக்­காட்­சி­யிலே நெல் மூட்­டை­க­ளெல்­லாம் நனை­வ­தைப் பார்த்­து­விட்டு, என்­னை­யும், அன்­றைக்கு வேளாண்மை- -- உழ­வர் நலத் துறை அமைச்­சர் அவர்­க­ளை­யும் உடனே  இல்­லத்­திற்கு வரச்­சொல்லி இனி­மேல் தமிழ்­நாட்­டிலே எங்­கும் நெல்­ம­ணி­கள் மழை­யில் நனை­யக்­கூ­டாது. நாளைக்கு தலை­மைச் செய­லா­ளர் அவர்­களை அழைத்து, தமிழ்­நாடு முழு­வ­தும் இருக்­கின்ற மாவட்ட 
ஆட்­சித் தலை­வர்­க­ளோடு ஆய்­வுக் கூட்­டத்தை நடத்­துங்­கள் என்று சொல்லி, அதன் அடிப்­ப­டை­யிலே திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்­சிக்கு வந்­த­பின்பு, 18 மாவட்­டங்­க­ளில் சுமார் 54 இடங்­க­ளில் 7.33 இலட்­சம் மெட்­ரிக்­டன் சுமார் 383 நவீன சேமிப்­புத்­த­ளங்­கள் சுமார் 825 கோடியே 79 இலட்­சம் ரூபா­யில் அமைக்­கப்­பட்டு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">அதில் ரூ.331 கோடி அள­வில் 4.03 இலட்­சம் மெட்­ரிக்­டன் கொள்­ள­ளவு   கொண்ட 253 சேமிப்­புத்­த­ளங்­கள் அன்­றைய   முத­ல­மைச்­சர்  அவர்­
க­ளால் திறந்து பயன்­பாட்­டிற்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டன. அதோடு மீத­முள்ள 3.30 இலட்­சம் மெட்­ரிக்­டன் கொள்­ள­ளவு கொண்ட 130 சேமிப்­புத் தளங்­கள் சுமார் 494 கோடியே 71 இலட்­சம் ரூபா­யில் இப்­போது பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. அது விரை­விலே  முத­ல­மைச்­சர் அவர்­கள் திறந்து வைக்­க­வி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">எனவே, திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யிலே நெல் சேமிப்­புத்­த­ளங்­கள் நிறைய கட்­டப்­பட்­டி­ருக்­கி­றது. குறிப்­பாக நீங்­கள் தஞ்­சா­வூ­ருக்கு செல்­லுங்­கள். நடு­வூர் என்ற இடத்­தில் ஒரு இலட்­சம் மெட்­ரிக்­டன் கொள்­ள­ளவு கொண்ட பெரிய சேமிப்­புக் கிடங்கு, ஒரு இலட்­சம் மெட்­ரிக்­டன் அள­வில் நெல்லை சேமித்து வைப்­ப­தற்­காக சேமிப்பு கிடங்கு கட்­டப்­பட்­டுள்­ளது. பல இடங்­க­ளில் டெல்டா மாவட்­ட­மாக இருந்­தா­லும் சரி, டெல்டா அல்­லாத மாவட்­டங்­க­ளி­லும் நெல் சேமிப்­புத்­த­ளங்­கள் கட்­டப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">கடந்த வேளாண்­மை-­ உ­ழ­வர் நலத் துறை மானி­யக் கோரிக்­கை­யில் எந்­தெந்த மாவட்­டங்­க­ளில், எந்­தெந்த இடங்­க­ளில் சுமார் ரூ.394 கோடி­யில் நெல் சேமிப்­புத்­த­ளங்­கள் கட்­டப்­ப­டும், அதற்­காக நிதி ஒதுக்­கப்­ப­டும் என்று 
அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அந்த வேளாண்­மை -­உ­ழ­வர் நலத் துறை மானி­யக் கோரிக்­கையை கடந்த ஆண்­டில் அதைப் பார்க்­க­வேண்­டு­மென்று  இந்து சம­யம் மற்­றும் அற­நி­லை­யங்­கள் துறை அமைச்­சர் அவர்­க­ளின் கவ­னத்­திற்­குக் கொண்­டு­ வ­ரு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.3">மாவட்ட ஆட்­சித் தலை­வர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.3">தலை­மை­யில் குழு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">  </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.8">அர. சக்­க­ர­பாணி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">உணவு மற்­றும் உண­வுப்­பொ­ருள் வழங்­கல் துறை அமைச்­சர் அவர்­கள், அதா­வது நேரடி கொள்­மு­தல் நிலை­யம் திறப்­ப­தற்கு அந்­தந்த கட்­சிக்­கா­ரர்­கள் திறக்­கி­றார்­கள் என்று தவ­றான தக­வலை சொல்­கி­றார்­கள். கடந்த ஆட்­சி­யில் ஒரு நெல் நேரடி கொள்­மு­தல் நிலை­யம் திறக்க வேண்­டு­மென்­றால், மாவட்ட ஆட்­சி­யர் தலை­மை­யில் ஒரு குழு, மாவட்ட ஆட்­சித் தலை­வர், (விவ­சா­யம்), (கூட்­டு­றவு) மாவட்ட ஆட்­சித் தலை­வ­ரு­டைய நேர்­முக உத­வி­யா­ளர் சங்­கத்­தி­னு­டைய இணைப் பதி­வா­ளர், வேளாண்மை இணை இயக்­கு­நர், 2 விவ­சாய சங்­கப் பிர­தி­நிதி, தமிழ்­நாடு நுகர்­வோர் வாணி­பக் கழ­கத்­தின் RM அல்­லது SRM என 7 பேர் கொண்ட குழு அமைக்­கப்­பட்டு, மக்­கள் பிர­தி­நி­தி­கள், விவ­சா­யி­கள், எங்­கெங்கு நேரடி கொள்­மு­தல் நிலை­யம் வேண்­டு­மென்று நேரடி கொள்­மு­தல் நிலை­யம் அமைக்க வேண்­டு­மென்று கோரிக்கை வைக்­கி­றார்­களோ, விவ­சா­யி­கள் குறை­தீர் கூட்­டத்­தில் கேட்­கி­றார்­களோ அங்­கெங்­கெல்­லாம் நேரடி கொள்­மு­தல் நிலை­யங்­கள் திறந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">அது 2024-–25-ல் 4 ஆயி­ரம் இடங்­க­ளில் நேரடி கொள்­மு­தல் நிலை­யங்­கள் திறந்­தது திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில்­தான். (மேசை­யைத் தட்­டும் ஒலி) 1972-லிருந்து தமிழ்­நாடு நுகர்­பொ­ருள் வாணி­பக் கழ­கம் ஆரம்­பிக்­கப்­பட்ட காலத்­தி­லி­ருந்து 4 ஆயி­ரம் இடத்­தில் நேரடி கொள்­மு­தல் நிலை­யங்­கள் திறக்­கப்­பட்­டது 2024- –25-ல்தான். அரிசி கருப்­பாக இருக்­கி­றது என்று   அமைச்­சர் அவர்­கள் சொன்­னார்­கள். திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு பொறுப்­பேற்ற பின்பு, இந்­திய உண­வுக் கழ­கம் என்ன சொல்லி இருந்­தார்­கள் என்­றால், ஒரு உத்­த­ரவை பிறப்­பித்­தி­ருந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.3">மக்­கள் மகி­ழும் வண்­ணம் அரிசி வழங்­கி­னோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">அனைத்து அரசு ஆலை­க­ளி­லும் கலர் சார்­டர் இயந்­தி­ரங்­கள் பொருத்­தப்­ப­டும் என்று ஆணை பிறப்­பித்­தி­ ருந்­தார்­கள். ஆனால், கடந்த காலத்­தில் அது செயல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை; தி.மு.க. அரசு ஆட்­சிக்கு வந்­த­வு­டன், முத­ல­மைச்­சர் அண்­ணன்  ஸ்டாலின் அவர்­கள், மக்­க­ளுக்கு. தர­மான 
அரிசி தர­வேண்­டு­மென்று உத்­த­ர­
விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">எனவே, கடந்­த­ கா­லத்­தில் 376 ஆலை­கள் மட்­டுமே இருந்­தன. ஆனால், நாங்­கள் ஆட்­சிக்கு வந்­த­பி­றகு, 623 அரிசி ஆலை­கள் எண்­ணிக்­கையை உயர்த்தி, அனைத்து ஆலை­க­ளி­லும் 30 இலட்­சம், 50 இலட்­சம் ரூபாய் மதிப்­பி­லான கலர் சார்­டர் இயந்­தி­ரங்­க­ளைப் பொருத்தி, மக்­க­ளுக்கு பழுப்பு, கருப்பு இல்­லாத அரிசி கடந்த மே மாதம் வரை வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">தமிழ்­நாட்­டி­லி­ருக்­கின்ற 38,000 நியாய விலைக் கடை­க­ளி­லும், அரிசி தர­மாக இல்­லை­யென்று எங்­கும் மக்­க­ளி­ட­மி­ருந்து புகார் வர­வில்லை, மக்­கள் மகி­ழும் வண்­ணம்­தான் நாங்­கள் அரிசி வழங்­கி­னோம் என்­பதை   பேர­வைத் தலை­வர் அவர்­கள் வாயி­லாக நான் தெரி­விக்க விரும்­பு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.3">கூலி உயர்வு வழங்கப்­பட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">அதே­போன்று, தவறு நடப்­ப­தாக தெரி­வித்­தார்­கள்; அதற்கு எங்­கள் முத­ல­மைச்­சர் அவர்­கள் ஆட்­சிக்கு வந்­த­வு­ட­னேயே, 2021 டிசம்­பர் 31 ஆம் தேதி­யன்று தஞ்­சை­யில் நடை­பெற்ற அரசு விழா­வில் என்ன சொன்­னார் என்­றால், விவ­சா­யி­கள் நெல் வாங்­கும் இடங்­க­ளில் எந்­தப் பிரச்­சி­னை­யும் வரக்­கூ­டாது என்­ப­தற்­காக, அங்கு பணி புரி­கின்ற ஏழை தொழி­லா­ளர் பெரு­மக்­க­ளுக்கு, மூட்­டைக்கு 3.25 ரூபாய்­தான் கூலி கொடுக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து, 10 ரூபா­யாக உயர்த்­திக் கொடுத்­தார்­கள். பட்­டி­யல் எழுத்­தர், உத­வு­ப­வர், காவ­லர்­க­ளுக்கு சம்­ப­ளத்­தினை உயர்த்­திக் கொடுத்­தார்­கள். பட்­டி­யல் எழுத்­தர்­க­ளுக்கு தினப்­படி ரூ.120/-ம், உத­வு­ப­வர்­க­ளுக்கு ரூ.100/-ம், காவ­லர்­க­ளுக்கு ரூ.80/- என்­ற­வ­கை­யில் உயர்த்­திக் கொடுத்து, ஆண்­டிற்கு 83 கோடி ரூபாய் அதி­கம் செல­வா­னா­லும் பர­வா­யில்லை, எந்­தத் தவ­றும் நிகழ்ந்­து­வி­டக் கூடாது என்று எண்ணி, இவை­ய­னைத்­தை­யும் உயர்த்­திக் கொடுத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.3">இவ்­வாறு அர.சக்­க­ர­பாணிஅவர்­கள் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>