<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="269,344,958,1152" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 13 2026 23:11:41 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260814T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="14082026-MDU-01" position.sequence="01" ex-ref="14082026-MDU-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="86">சென்னையில் சொத்துவரி பன்மடங்கு அதிகரிப்பு!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="36">பொதுமக்கள் அதிர்ச்சி – கடும் கண்டனம்   !</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Ribbonbuilding_01_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சென்னை, ஆக.14–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தமிழ்­நாடு அரசுசென்னை மாந­க­ராட்­சிக்கு உட்­பட்ட வீடு, வணிக நிறு­வ­னங்­கள், கடை­கள் உள்­ளிட்­ட­வற்­றுக்­கான சொத்து வரியை அதி­ர­டி­யாக பல மடங்கு உயர்த்­தி­யுள்­ளது மக்­க­ளி­டையே கடும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இது­கு­றித்து சென்னை மாந­கர 
மேய­ரி­டம் கூட கருத்து கேட்­கப்­ப­ட­வில்லை என்று தெரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முதல்­வர் விஜய்­யின் நேரடி கண்­காணிப்­பில் இயங்­கும் நக­ராட்சி நிர்­வா­கத் துறை­யில் எடுக்­கப்­பட்­டுள்ள இந்த முடிவு மக்­க­ளி­டையே கடும் விமர்­ச­னத் தை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சென்னை மாந­க­ராட்­சிக்கு உட்­பட்ட பகு­தி­யில் உதா­ர­ண­மாக, அரை­யாண்­டுக்கு ரூ.310 செலுத்தி வந்த ஒரு வீட்­டுக்கு தற்­போது ரூ.10,010 சொத்­து­வரி நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் பழைய வரி­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் ரூ.9,700 கூடு­த­லா­க­வும், சுமார் 32 மடங்கு அதி­க­மா­க­வும் வரி செலுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">440 சது­ர­அடி நிலப்­ப­ரப்­பில் உள்ள அந்த சொத்­தில் தரைத்­த­ளத்­தில் 1,000 சது­ர­அ­டி­யும், முதல் தளத்­தில் 1,000 சது­ர­ அ­டி­யும் என மொத்­தம் 2,000 சது­ர­அடி கட்­டி­டப் பரப்பு கணக்­கில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­க­வும், கட்­டி­டம் குடி­யி ­ருப்பு பயன்­பாட்­டில்இருப்­ப­தா­க­வும் மாந­க­ராட்சி சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன் அடிப்­ப­டை­யில், ஆண்டு சொத்து மதிப்பு ரூ.76,222 என கணக்­கி­டப்­பட்டு, வயது தள்­ளு­படி உள்­ளிட்ட கணக்­கீ­டு­களுக்­குப் பிறகு அரை­யாண்டு சொத்­து­வரி ரூ.10,010 என நிர்­ண­யிக்­கப் 
பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இது­போல், சென்னை அண்ணா நக­ரில் 2025-–26ஆம் ஆண்­டில் ரூ.5,000 சொத்­து­வரி செலுத்­திய வீட்­டுக்கு தற்­போது ரூ.28,000 வரி நிர்­ண­யிக்­கப் பட்­டுள்­ள­ தக­வ­லும் கவ­னம் பெற்­றுள்­ளது. இந்த மறு­ம­திப்­பீடு எவ்­வாறு மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என்­பது மாந­க­ராட்சி அனுப்­பி­யுள்ள குறுஞ்­செய்­தி­யில் இடம் பெற்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதில், புவி­யி­யல் தக­வல் அமைப்பு (ஜி.ஐ­.எஸ்.), பிற அரசு தர­வுத்­த­ளங்­கள், செயற்­கைக்­கோள் படங்­கள், சுய அறி­விப்பு உள்­ளிட்­ட­வற்­றில் இருந்து பெறப்­பட்ட சொத்­தின் பயன்­பாடு மற்­றும் பரப்­பளவு விவ­ரங்­க­ளின் அடிப்­ப­டை­யில் சொத்­து­வரி மறு­சீ­ர­மைக்­கப்­பட்­டுள்­ள­தாக அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">வரி உயர்த்­தப்­ப­ட­வில்லை என்று மாந­க­ராட்சி கூறி­னா­லும், ரூ.310 செலுத்தி வந்த ஒரு வீட்­டுக்கு ரூ.10,010 செலுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சொத்து வரி உயர்வு குறித்து சென்னை மாந­க­ராட்சி ஆணை­யர் ஜி.எஸ்.சமீ­ரன் கூறு­கை­யில்,   ‘‘சொத்து வரி உயர்த்­தப்­பட்­டது எனக் கூறப்­ப­டு­வது உண்­மை­யல்ல,’’ என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">எனி­னும், புதிய சொத்து வரி அறி­விப்­பில் முன்பைவிட பல மடங்கு உயர்த்­தப்­பட்­டுள்ள நிலை­யில், இதனை வரி உயர்வு என்று கூறா­மல் வேறென்ன சொல்­வது? எனமக்­கள் கேள்வி எழுப்­பு­கின்­ற­னர். முதல்­வர் விஜ­யின் நேரடி கண்­கா­ணிப்­பில் இயங்­கும் நக­ராட்சி நிர்­வா­கத் துறை­யில் எடுக்­கப்­பட்­டுள்ள சொத்து வரி உயர்வு நட­வ­டிக்கை மக்­க­ளி­டையே கடும் அதிர்ச்­சி­யை­யும், அதி­ருப்­தி­யை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. த.வெ.க.அரசுக்கு கண்­டத்­தை­யும் அவர்­கள் பதி­விட்­டுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சென்­னை­யில் உள்ள வீடு, வணிக நிறு­வ­னங்­கள் உள்­ளிட்ட அனைத்து சொத்து குறித்த விவ­ரங்­கள் அனைத்­தும் சென்னை மாந­க­ராட்சி ஆவ­ணங்­க­ளில் இடம் பெற்­றுள்­ளன. மாந­க­ராட்சி ஊழி­யர்­களே நேரில் வந்து வீட்டை டேப் பிடித்து அளந்து உறுதி செய்­த­தன் அடிப்­ப­டை­யில் தான்சொத்­தின் பரப்­ப­ளவு குறிப்­பி­டப் பட்­டுள்­ளது. இது­போல், லிப்ட், கார் பார்க்­கிங் ஆகி­ய­வை­யும் மாந­க­ராட்­சி­யி­ன­ரால் உறுதி செய்­யப்­பட்­டவை தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆனால், தற்­போது ஜி.ஐ­.எஸ்.அடிப்­ப­டை­யில் ஆய்வு செய்து கட்­டி­டப் பரப்­ப­ளவு அல்­லது பயன்­பாட்­டில் வேறு­பாடுஇருப்­ப­தா­கக் கரு­தப்­ப­டும் சொத்­து­களுக்குபுதிய வரி மதிப்­பீடு செய்­துள்­ள­தாக மாந­க­ராட்சி விளக்­கம் அளித்­துள்­ளது. அப்­ப­டி­யா­னால், நேரில் வந்த மாந­க­ராட்சி ஊழி­யர்­கள் தான் குறைத்து மதிப்­பீடு செய்­தார்­களா? நேரில் வந்து டேப் பிடித்து அளந்து குறிப்­பிட்­ட­தற்கு மாற்­றாகஜி.ஐ­.எஸ்.தரவு காண்­பிக்­கின்­றது என்­றால் புதிய மதிப்­பீட்டு முறை­யில் குள­று­படி தவறு நிகழ்ந்துள்­ளதா? என, அடுக்­க­டுக்­கான கேள்­வி­களை மக்­கள் முன்­வைக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மாந­க­ராட்­சி­யின் அதி­கா­ரப்­பூர்வ நோட்­டீ­சில்,மறு­ம­திப்­பீட்­டில் தவறு இருப்­ப­தாக கரு­தும் பொது­மக்­க­ளுக்கு 15 நாட்­கள் மட்­டுமே அவ­கா­சம் வழங்­கப்­பட்­டுள்­ளது. நோட்­டீஸ் கிடைத்த நாளி­லி­ருந்து 15 நாட்­க­ளுக்­குள் சம்­பந்­தப்­பட்ட வட்­டார துணை ஆணை­ய­ரி­டம் ஆட்­சே­பம் தெரி­விக்க வேண்­டும் என்று குறிப்­பி­டப் 
பட்­டுள்­ளது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">பொது­வாக, ஒருசொத்­தின் மதிப்­பீடு மாற்றி அமைக்­கப்­பட்ட பிறகு அது குறித்த தக­வலை உரி­மை­யா­ள­ருக்குமுன்­கூட்­டியே வழங்­கும் போது, அதனைஆட்­சே­பிக்­கும் கால அளவு வழங்­கப்­படும். தற்­போது, மதிப்­பீடு செய்து வரி­யை­யும் உயர்த்தி விட்டு,செப்­டம்­பர் 30ஆம் தேதிக்­குள் அதனை செலுத்த வேண்­டும் என வாட்ஸ் அப் மூலம் மக்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. அதி­லும் ஒரு வாரத்­துக்கு முந்­தைய தேதி குறிப்­பி­டப்பட்­டுள்­ளது. இது மக்­கள் மத்­தி­யில் குழப்­பத்­தை­யும் கோபத்­தை­யும் ஏற்
ப­டுத்­தி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">மேயர் – துணை மேய­ரி­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">கருத்து கேட்­கப்­ப­ட­வில்லை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சொத்து வரி உயர்வு குறித்து சென்னை மேயர். துணை மேயர் என்ற முறை­யில் எங்­க­ளி­டம் இருந்து   எந்­தக் கருத்­தும் கேட்­க­வில்லை. எங்­கள் கவ­னத்­திற்கு கொண்டுவரா­மலே, ஒப்­பு­தல்பெறா­மலே மாந­க­ராட்சி ஆணை­யர் மறு­ம­திப்­பீடு செய்­வதை அறி­வித்­துள்­ளார் என்று சென்னைமாந­க­ராட்சி துணை மேயர் மு.மகேஷ்­குமார் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">குடி­யி­ருப்பு பகு­தி­க­ளுக்கு வரி­கள் வேறு, வியா­பார நிறு­வ­னங்­க­ளுக்கு வரி­கள் வேறு என்­ப­தால் குடி­யி­ருப்பு பகு­தி­களாக அறி­வித்து விட்டு வியா­பார நிறு­வ­னங்­க­ளாக மாற்­றி­யி­ருந்­தால் ஆய்வு செய்து வரி வரு­வாயை பெருக்க வேண்­டும் என்று இந்த நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­தாக ஆணை­யர் விளக்­கம் அளித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சென்னை மாந­க­ராட்­சிக்கு ரூ.2000 ஆயி­ரம் கோடி முதல்­வர் ஒதுக்­கி­யி­ருந்­தால் இந்த மறு­ம­திப்­பீடு என்­பது தேவை­யில்­லா­மல் பொதுமக்­க­ளுக்கு மேலும் பளுவை ஏற்ற  வேண்­டி­யி­ருக்­காது. ஏற்­க­னவே 25 ஆண்­டு­க­ளாக வரி மறு­ம­திப்­பீடு செய்­யா­மல் இருந்த நிலை­யில் ஒன்­றிய அரசு கொடுத்த அழுத்­த­தின் கார­ண­ மாக கெய்ட்­லைன்ஸ் படி வரி ஏற்­றி­யுள்ளனர்.ஆனால் கடந்த 2 ஆண்­டு­கள் தி.மு.க. ஆட்­சி­யில் பொது­மக்­கள் மீது மேலும் சுமையை ஏற்­றா­மல் வரி ஏற்­று­வதை தவிர்த்தே வந்­தோம். ஒன்றிய அரசு வரு­டத்­திற்கு 6 சத­வீ­தம் என்று அறி­வித்த நிலை­யில் தி.மு.க. அரசு வரி ஏற்­றா­மல் தவிர்த்து வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஆனால் இப்­போது புதி­தாக ஆட்­சிப் பொறுப்­பேற்­றுள்­ள­வர்­கள் சென்னை மாந­க­ராட்­சி­யில் நிதி­பற்­றாக்­குறை எந்த அள­வுக்கு உள்­ளது, இந்த துறை எப்­படி செயல்­பட்டு வரு­கி­றது என்று ஆய்வு செய்­தார்­களா என்று தெரி­ய­வில்லை. என்று துணை மேயர் மகேஷ்­கு­மார் கூறி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>