<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,66,608,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Aug 14 2026 03:49:17 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260814T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="14082026-MDU-06" position.sequence="06" ex-ref="14082026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">திராவிட முன்னேற்றக் கழக அரசின் பங்களிப்பு! </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup819162_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">வேலை­வாய்ப்பு: இளை­ஞர்­க­ளின் எதிர் ­கா­லத்­தோடு இணைந்த சமூ­க­நீ­திக் கொள்கை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஒரு நாட்­டின் வளர்ச்­சியை அதன் பொரு­ளா­தார வளர்ச்சி விகி­தத்­தால் மட்­டும் அள­விட முடி­யாது. அந்த நாட்­டின் இளை­ஞர்­க­ளுக்கு எத்­த­கைய கல்வி கிடைக்­கி­றது, அவர்­க­ளுக்கு எத்­த­கைய திறன்­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன, அவர்­கள் படித்த கல்­விக்­கேற்ற வேலை­வாய்ப்பு கிடைக்­கி­றதா என்­ப­தி­லும் வளர்ச்­சி­யின் தரம் வெளிப்­ப­டு­கி­றது.தமிழ்­நாட்­டில் வேலை­வாய்ப்பு என்­பது வெறும் அரசு வேலைக்­கான கேள்­வி­யாக அல்­லா­மல், கல்வி, திறன், தொழில் வளர்ச்சி, முத­லீடு மற்­றும் சமூ­க­நீ­தி­யு­டன் இணைந்த கொள்­கைப் பிரச்­சி­னை­யா­கப் பார்க்­கப்­ப­டு­கி­றது. முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் தலை­மை­யி­லான அரசு இந்த அணு­கு­மு­றையை பல்­வேறு திட்­டங்­கள் மற்­றும் தொழில் முத­லீட்டு நட­வ­டிக்­கை­க­ளு­டன் இணைத்­துள்­ளது. 2022ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட “நான் முதல்­வன்” திட்­டம் கல்வி மற்­றும் தொழில்­து­றைத் தேவை­க­ளுக்கு இடை­யி­லான இடை­வெ­ளியை குறைப்­பதை தனது முக்­கிய நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளது (Government of Tamil Nadu, 2022).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இத­னால் வேலை­வாய்ப்­பைப் பற்­றிய விவா­தத்­தில் “எத்­தனை அரசு வேலை­கள்?” என்ற ஒரே கேள்­வி­யைத் தாண்டி, “எத்­தனை புதிய வேலை­வாய்ப்­பு­க­ளுக்­கான சூழல் உரு­வாக்­கப்­பட்­டது?”, “இளை­ஞர்­கள் வேலைக்­குத் தேவை­யான திறன்­க­ளைப் பெற்­றார்­களா?”, “தொழில் முத­லீ­டு­கள் எவ்­வாறு வேலை­வாய்ப்­பாக மாறு­கின்­றன?” என்ற கேள்­வி­க­ளை­யும் எழுப்ப வேண்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்த விரி­வான அணு­கு­மு­றை­யில்­தான் கழ­கத்­த­லை­வர் மு.க.ஸ்டாலின் தலை­மை­யி­லான தி.மு.க. 
அர­சின் வேலை­வாய்ப்­புப் பங்­க­ளிப்பை மதிப்­பிட 
வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">அரசு வேலை­வாய்ப்­பில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தி.மு.க. அர­சின் பங்­க­ளிப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் அரசு வேலை என்­பது பல குடும்­பங்­ க­ளுக்கு நிலை­யான வரு­மா­னத்­தை­யும் சமூ­கப் பாது­காப்­பை­யும் வழங்­கும் முக்­கிய வாய்ப்­பாக உள்­ளது. எனவே காலிப்­ப­ணி­யி­டங்­களை கண்­ட­றிந்து, தேர்வு 
மற்­றும் நிய­ம­னச் செயல்­மு­றை­களை நிறைவு செய்­வது அர­சின் அடிப்­ப­டைப் பொறுப்­பு­க­ளில் ஒன்­றா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஒரு அர­சின் சாத­னையை வெறும் உரு­வாக்­கப்­பட்ட வேலை­வாய்ப்­பு­க­ளின் எண்­ணிக்­கை­யால் மட்­டுமே அள­விட முடி­யாது. ஒரு குடும்­பத்­தின் பொரு­ளா­தா­ரச் சுமையை குறைப்­ப­தும், பெண்­க­ளின் கைக­ளில் நேர­டி­யாக வரு­மா­னத்­தைச் சேர்ப்­ப­தும், மாண­வர்­க­ளின் 
கல்­வித் தொடர்ச்­சியை உறுதி செய்­வ­தும், மக்­க­ளின் அன்­றா­டச் செல­வு­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தும் கூட சமூ­கத்­தின் பொரு­ளா­தார முன்­னேற்­றத்­திற்­கான முக்­கி­ய­மான அடை­யா­ளங்­க­ளா­கும். அந்த வகை­யில், மு.க.ஸ்டாலின் தலை­மை­யி­லான தமிழ்­நாடு அரசு செயல்­ப­டுத்­திய பல்­வேறு மக்­கள் நலத் திட்­டங்­கள், நேர­டி­யாக வேலை­வாய்ப்பை உரு­வாக்­க­வில்லை என்­றா­லும், வேலை செய்­வ­தற்­கான வாய்ப்­பை­யும், வரு­மா­னத்­தைப் பாது­காப்­ப­தற்­கான சூழ­லை­யும், குடும்­பங்­க­ளின் பொரு­ளா­தா­ரத் தன்­னி­றை­வை­யும் வலுப்­ப­டுத்­து­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">குறிப்­பாக, கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டம் பெண்­க­ளின் கைக­ளில் நேர­டி­யா­கத் தொகை­யைச் சேர்ப்­ப­தன் மூலம் குடும்­பப் பொரு­ளா­தா­ரத்­தில் அவர்­க­ளின் முடி­வெ­டுக்­கும் பங்­க­ளிப்பை வலுப்­ப­டுத்­து­கி­றது. மக­ளிர் இல­வ­சப் பேருந்­துப் பய­ணத் திட்­டம், வேலைக்­குச் செல்­லும் பெண்­கள், மாண­வி­கள் மற்­றும் அன்­றா­டப் பய­ணத்­தைச் சார்ந்­துள்ள பெண்­க­ளின் போக்­கு
­வ­ரத்­துச் செல­வைக் குறைப்­ப­து­டன், அவர்­க­ளின் கல்வி, வேலை மற்­றும் பொரு­ளா­தா­ரச் செயல்­பா­டு­க­ளுக்­கான இயக்­க­வாய்ப்­பை­யும் விரி­வு­ப­டுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அதே­போல், புது­மைப் பெண் திட்­டம் மற்­றும் தமிழ்ப் புதல்­வன் திட்­டம் உயர்­கல்­வி­யைத் தொட­ரும் மாண­வர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தன் மூலம், இன்­றைய நலத்­திட்­டத்தை நாளைய மனி­த­வள முத­லீ­டாக மாற்­று­கின்­றன. கல்­வி­யைத் தொட­ரும் வாய்ப்பு அதி­க­ரிப்­பது, எதிர்­கா­லத்­தில் திறன் பெற்ற இளை­ஞர்­க­ளா­க­வும், சிறந்த வேலை­வாய்ப்­பு­க­ளைப் பெறக்­கூ­டி­ய­வர்­க­ளா­க­வும் அவர்­கள் உரு­வா­கும் அடித்­த­ளத்தை அமைக்­கி­றது. மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் போன்ற திட்­டங்­கள், சுகா­தா­ரச் சேவையை மக்­க­ளின் இல்­லங்­க­ளுக்கே கொண்டு செல்­வ­தன் மூலம், மருத்­து­வச் செலவு மற்­றும் சிகிச்­சைக்­காக செல­விட வேண்­டிய நேரம் போன்ற மறை­மு­கப் பொரு­ளா­தா­ரச் சுமை­க­ளை­யும் குறைக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">எனவே, இந்­தத் திட்­டங்­களை வெறும் “இல­வ­சத் திட்­டங்­கள்” என்ற குறு­கிய பார்­வை­யில் அணு­கா­மல், பெண்­க­ளின் பொரு­ளா­தா­ரச் சுதந்­தி­ரம், குடும்­பங்­க­ளின் செல­வுச் சுமை குறைப்பு, மாண­வர்­க­ளின் கல்­வித் தொடர்ச்சி, மனி­த­வள மேம்­பாடு மற்­றும் சமூ­கப் பாது­காப்பு ஆகி­ய­வற்றை ஒருங்­கி­ணைக்­கும் விரி­வான சமூ­க­நீதி நட­வ­டிக்­கை­க­ளா­கப் பார்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அர­சுப் பணி­யி­டங்­க­ளில் வழங்­கப்­பட்ட வேலை­வாய்ப்பு என்­பது ஒரு பக்­கம் என்­றால், அந்த வேலை­வாய்ப்­பைத் தேடும் இளை­ஞர்­க­ளை­யும், வேலைக்­குச் செல்­லும் பெண்­க­ளை­யும், கல்­வி­யைத் தொட­ரும் மாண­வர்­க­ளை­யும், அன்­றாட வாழ்­வா­தா­ரத்­தைச் சுமக்­கும் குடும்­பங்­க­ளை­யும் வலுப்­ப­டுத்­தும் இந்­தத் திட்­டங்­கள் அதன் மறு­பக்­க­மா­கின்­றன. ஒரு ஆட்­சி­யின் பொரு­ளா­தா­ரப் பங்­க­ளிப்பை மதிப்­பி­டும்­போது, “எத்­தனை வேலை­வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­பட்­டன?” என்­ப­து­டன், “எத்­தனை பேரின் பொரு­ளா­தார வாய்ப்­பு­கள் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டன?” என்ற கேள்­வி­யை­யும் இணைத்­துப் பார்க்க வேண்­டி­யி­ருக்­கி­றது. ஆகவே, திட்­டங்­க­ளால் பய­ன­டைந்த பய­னா­ளி­கள் என்­பதை விட திட்­டங்­க­ளால் வேலை­வாய்ப்­பைப் பெற்­ற­வர்­கள் என்று சொல்­வது பொருத்­த­மாக அமை­யும். அந்த வகை­யில் பல லட்­சக்­க­ணக்­கா­னோர் வேலை வாய்ப்­பைப் பெற்­றி­ருக்­கின்­ற­னர் என்­பதை ஆணித்­த­ர­மாக சொல்ல முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">முன்­னாள் முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தலை­மை­யில் முத­லீடு – வேலை­வாய்ப்பு இணைப்பு!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">வேலை­வாய்ப்பை உரு­வாக்­கு­வ­தில் அரசு வேலை­க­ளுக்கு அப்­பாற்­பட்ட மிகப்­பெ­ரிய தளம் தொழில் முத­லீ­டு­க­ளா­கும். புதிய தொழிற்­சாலை உரு­வா­கும்­போது நேரடி வேலை­வாய்ப்­பு­டன், அத­னைச் சுற்­றி­யுள்ள துணைத் தொழில்­கள் மற்­றும் சேவைத் துறை­க­ளி­லும் மறை­முக வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">முன்­னாள் முத­ல­மை­ச­சர்  மு.க. ஸ்டாலின் ஆட்­சி­யில் முத­லீ­டு­களை ஈர்ப்­பது வேலை­வாய்ப்பு உரு­வாக்­கத்­து­டன் நேர­டி­யாக இணைக்­கப்­பட்­டுள்­ளது. 2023–2024 நிதி­நிலை அறிக்­கை­யில், மே 2021 முதல் 221 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் மூலம் ரூ.2,70,020 கோடி முத­லீட்டு உறு­தி­மொ­ழி­க­ளும் 3,89,651 பேருக்­கான வேலை­வாய்ப்பு வாய்ப்­பு­க­ளும் குறிப்­பி­டப்­பட்­டன (Government of Tamil Nadu, 2023).இதன் தொடர்ச்­சி­யாக 2024 ஜன­வரி மாதம் நடை­பெற்ற தமிழ்­நாடு உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில் 631 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தாகி, ரூ.6,64,180 கோடி முத­லீட்டு உறு­தி­மொ­ழி­க­ளு­டன் 14,54,712 நேரடி வேலை­வாய்ப்­பு­க­ளும், மொத்­தம் 26,90,657 வேலை­வாய்ப்­பு­க­ளும் உரு­வா­கும் என அரசு தெரி­வித்­தது (Government of Tamil Nadu, 2024a).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்த மாநாட்­டில் மேம்­பட்ட மின்­னணு உற்­பத்தி, பசுமை ஆற்­றல், காலணி உற்­பத்தி, மோட்­டார் வாக­னங்­கள், மின்­சார வாக­னங்­கள், விண்­வெளி மற்­றும் பாது­காப்பு, தரவு மையங்­கள், உல­க­ளா­விய திறன் மையங்­கள் மற்­றும் தக­வல் தொழில்­நுட்­பம் போன்ற பல துறை­கள் இடம்­பெற்­றன (Government of Tamil Nadu, 2024a). இத­னால் மு.க. ஸ்டாலி­னின் முத­லீட்டு அணு­கு­முறை தற்­போ­தைய வேலை­வாய்ப்பை மட்­டு­மல்­லா­மல், எதிர்­கால வேலை­வாய்ப்­பு­க­ளுக்­கான தொழில் அடித்­த­ளத்­தை­யும் நோக்­கு­கி­றது என்று கூற முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">“நான் முதல்­வன்”: மு.க. ஸ்டாலின் முன்­வைத்த திறன்–­­வே­லை­வாய்ப்பு பாலம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">2022 மார்ச் 1 அன்று மு.க. ஸ்டாலி­னால் தொடங்­கப்­பட்ட “நான் முதல்­வன்” திட்­டம், கல்­விக்­கும் தொழில்­து­றை­யின் தேவைக்­கும் இடை­யி­லான இடை­வெ­ளியை குறைப்­பதை நோக்­க­மா­கக் கொண்­டது. தொழில்­துறை சார்ந்த பாடங்­கள், தொழில் வழி­காட்­டு­தல், mentorship, internship மற்­றும் placement support ஆகி­யவை இதன் முக்­கிய கூறு­க­ளாக உள்­ளன (Government of Tamil Nadu, 2022).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இத்­திட்­டத்­தின் தற்­போ­தைய அதி­கா­ரப்­பூர்வ தளம் Arts and Science, Engineering, Polytechnic, ITI, Pharmacy and Medical Sciences உள்­ளிட்ட பல பிரி­வு­ க­ளுக்­கான திறன் பயிற்­சி­களை வழங்­கு­வ­தா­க­வும், internship, apprenticeship, hackathon மற்­றும் placement வாய்ப்­பு­க­ளு­டன் தொழில்­து­றை­யு­டன் இணைப்பை ஏற்­ப­டுத்­து­வ­தா­க­வும் குறிப்­பி­டு­கி­றது (Tamil Nadu Skill Development Corporation, 2026a).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மேலும், TNSkill Registry மூலம் 17.56 லட்­சத்­திற்­கும் மேற்­பட்ட திறன் பெற்ற நபர்­க­ளின் தர­வுத்­த­ளம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரப்­பூர்­வத் தளம் தெரி­விக்­கி­றது. தொழில் நிறு­வ­னங்­கள் மற்­றும் வேலை­வாய்ப்பு தளங்­கள் திறன் பெற்­ற­வர்­களை அணு­கும் வகை­யில் அமைக்­கப்­பட்­டுள்­ளது (Tamil Nadu Skill Development Corporation, 2026b).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இதன் மூலம் “படித்து முடித்த பிறகு வேலை தேடு” என்ற பழைய அணு­கு­மு­றை­யி­லி­ருந்து “படிக்­கும் போதே வேலைக்­குத் தேவை­யான திற­னைப் பெறு” என்ற புதிய அணு­கு­மு­றைக்கு அரசு நகர்ந்­தது . இளை­ஞர்­க­ளின் employability-யை உயர்த்­தும் இந்த முயற்­சி­யில் முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலி­னின் தலை­மை­யி­லான திறன் மேம்­பாட்டு கொள்­கைக்கு முக்­கிய இடம் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">பெண்­க­ளின் பொரு­ளா­தார</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">முன்­னேற்­ற­மும் வேலை­வாய்ப்­பும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">வேலை­வாய்ப்பை சமூ­க­நீ­தி­யு­டன் இணைத்­துப் பார்க்­கும்­போது பெண்­க­ளின் பொரு­ளா­தா­ரப் பங்­கேற்பு முக்­கி­ய­மான அள­வு­கோ­லா­கி­றது. பெண்­க­ளுக்கு கல்வி, திறன், தொழில் மற்­றும் வரு­மா­னம் உரு­வாக்­கும் வாய்ப்­பு­கள் கிடைப்­பது ஒரு குடும்­பத்­தின் பொரு­ளா­தார நிலையை மட்­டு­மல்ல, மாநி­லத்­தின் மொத்த உற்­பத்­தித் திற­னை­யும் உயர்த்­து­கி­றது. மு.க. ஸ்டாலின் தலை­மை­யி­லான அர­சின் பல்­வேறு சமூக மற்­றும் பொரு­ளா­தா­ரத் திட்­டங்­களை வேலை­வாய்ப்பு நோக்­கில் பார்க்­கும்­போது, பெண்­கள் கல்வி மற்­றும் தொழில்­சார் வாய்ப்­பு­க­ளில் தொடர்ந்து இணைக்­கப்­பட வேண்­டிய தேவை தெளி­வா­கி­றது. திறன் மேம்­பாடு, தொழில்­மு­னைவு, சுய­உ­த­விக் குழுக்­கள் மற்­றும் வேலை­வாய்ப்பு சார்ந்த பயிற்­சி­கள் ஆகி­யவை பெண்­க­ளின் பொரு­ளா­தார சுய­நி­றைவை வலுப்­ப­டுத்­தும் கரு­வி­க­ளாக அமை­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">எனவே வேலை­வாய்ப்­பின் வெற்­றியை ஆண்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட வேலை­க­ளின் எண்­ணிக்­கை­யால் மட்­டும் அள­வி­டா­மல், பெண்­க­ளின் வேலை மற்­றும் தொழில்­மு­னைவு பங்­கேற்பு எவ்­வாறு விரி­வ­டை­கி­றது என்­ப­தை­யும் மதிப்­பிட வேண்­டும். இது திமு­க­வின் சமூ­க­நீ­திப் பார்­வையை வேலை­வாய்ப்பு கொள்­கை­யு­டன் இணைக்­கும் முக்­கி­ய­மான பரி­மா­ண­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்­னை­யைத் தாண்டி பிற 
மாவட்­டங்­க ­ளுக்­கும் வேலை­வாய்ப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஒரு மாநி­லத்­தின் தொழில் வளர்ச்சி தலை­ந­க­ரைச் சுற்றி மட்­டும் குவிந்­தால், பிராந்­திய சம­நிலை பாதிக்­கப்­ப­டும். எனவே மாவட்­டங்­க­ளுக்கு இடையே தொழில் முத­லீ­டும் வேலை­வாய்ப்­பும் பர­வு­வது முக்­கி­ய­மான அர­சுக் கொள்­கை­யா­கி­றது. தமிழ்­நாடு அரசு 2023–2024 நிதி­நிலை அறிக்­கை­யில் மாநி­லத்­தின் அனைத்­துப் பகு­தி­க­ளி­லும் சம­நி­லை­யான தொழில்­ம­ய­மாக்­கலை உறுதி செய்­வ­தற்­கான தனது நோக்­கத்­தைத் தெளி­வு­ப­டுத்­தி­யது (Government of Tamil Nadu, 2023). இதன் பொருள், முத­லீ­டு­களை சென்­னை­யில் மட்­டு­மல்­லா­மல், மாவட்­டங்­க­ளி­லும் தொழில் சூழலை உரு­வாக்­கும் வகை­யில் பரப்ப வேண்­டும் என்­ப­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மு.க. ஸ்டாலின் தலை­மை­யி­லான அர­சின் தொழில் அணு­கு­மு­றையை மதிப்­பி­டும்­போது புதுக்­கோட்டை உள்­ளிட்ட வளர்ந்து வரும் மாவட்­டங்­க­ளின் தொழில் வாய்ப்­பு­க­ளை­யும் தனி­யா­கப் பார்க்க வேண்­டும். உள்­ளூர் தொழில், MSME, சேவைத் துறை மற்­றும் திறன் மேம்­பாட்டு வாய்ப்­பு­கள் அதி­க­ரித்­தால், இளை­ஞர்­கள் வேலை தேடி பெரு­ந­க­ரங்­க­ளுக்கு இடம்­பெ­யர வேண்­டிய கட்­டா­யம் குறை­யும். எனவே மாவட்ட வாரி­யான முத­லீடு, தொழில் தொடக்­கம் மற்­றும் உண்­மை­யில் உரு­வான வேலை­வாய்ப்பு ஆகிய தர­வு­கள் திமுக அர­சின் வேலை­வாய்ப்பு செயல்­பாட்டை மதிப்­பி­டு­வ­தில் அடுத்த முக்­கிய அள­வு­கோல்­க­ளாக இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">விமர்­ச­னங்­க­ளுக்கு தர­வு­களே பதில்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஒரு அர­சின் வேலை­வாய்ப்பு சாத­னை­யைப் பற்றி பேசும்­போது பாராட்­டு­க­ளு­டன் விமர்­ச­னங்­க­ளை­யும் ஏற்­றுக்­கொள்­வதே அறி­வி­யல் சார்ந்த அர­சி­யல் எழுத்­தின் அடிப்­படை. “வேலை­வாய்ப்பு இல்லை”, “அர­சுப் பணி­யி­டங்­கள் நிரப்­பப்­ப­ட­வில்லை”, “முத­லீட்டு ஒப்­பந்­தங்­கள் வேலை­வாய்ப்­பாக மாற­வில்லை” போன்ற குற்­றச்­சாட்­டு ­க­ளுக்கு உணர்ச்­சி­வ­சப்­பட்ட பதிலை விட அதி­கா­ரப்­பூர்­வத் தர­வு­களே வலு­வான பதி­லாக இருக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">2024 உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில் அறி­விக்­கப்­பட்ட ரூ.6,64,180 கோடிமுத­லீடு மற்­றும் 26,90,657 வேலை­வாய்ப்­பு­கள் உறு­தி­மொழி அடிப்­ப­டை­யி­லா­னவை. எனவே அவற்றை உட­ன­டி­யாக “உரு­வாக்­கப்­பட்ட வேலை­வாய்ப்­பு­கள்” என்று கூறா­மல், திட்­டங்­கள் செயல்­பாட்­டுக்கு வந்த பின்­னர் கிடைக்­கும் உண்­மை­யான முத­லீடு மற்­றும் வேலை­வாய்ப்பு தர­வு­க­ளு­டன் ஒப்­பிட வேண்­டும் (Government of Tamil Nadu, 2024a).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்த அள­வு­கோ­லில் மு.க. ஸ்டாலின் தலை­மை­யி­லான ஆட்­சி­யைப் பார்க்­கும்­போது, அவ­ரது நிர்­வா­கத்­தின் தனித்­து­வம் வெறும் அறி­விப்­பு­க­ளின் எண்­ணிக்­கை­யில் அல்ல; அறி­விப்­பு­க­ளைத் திட்­டங்­க­ளா­க­வும், திட்­டங்­களை நடை­மு­றை­யா­க­வும்,நடை­மு­றையை மக்­க­ளின் வாழ்க்­கை­யில் உண­ரக்­கூ­டிய மாற்­ற­மா­க­வும் கொண்டு செல்­லும் நிர்­வா­கத் தொடர்ச்­சி­யில் வெளிப்­ப­டு­கி­றது.மு.க. ஸ்டாலி­னின் தலை­மை­யைப் பற்­றிய அர­சி­யல் வாத­மும் இதே அள­வு­கோலை ஏற்க வேண்­டும்: அறி­விப்பு அல்ல, செயல்­ப­டுத்­தல்; உறு­தி­மொழி அல்ல, நிறை­வேற்­றம்; திட்­டம் அல்ல, அதன் பயன் – இவையே இறுதி அள­வு­கோல்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">எதிர்­கால வேலை­வாய்ப்பை நோக்­கிய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">வேலை­வாய்ப்பு அர­சி­ய­லின் அடுத்த கட்­டம் எதிர்­கா­லத் தொழில்­நுட்­பங்­களை மைய­மா­கக் கொண்­டி­ருக்க வேண்­டும். செயற்கை நுண்­ண­றிவு, மின்­னணு உற்­பத்தி, மின்­சார வாக­னங்­கள், செமி­கண்­டக்­டர், பசுமை ஆற்­றல், தரவு மையங்­கள் மற்­றும் உல­க­ளா­விய திறன் மையங்­கள் போன்ற துறை­கள் எதிர்­கால வேலை­வாய்ப்­பு­க­ளின் முக்­கிய ஆதா­ரங்­க­ளாக மாறு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு அரசு 2024ஆம் ஆண்டு செமி­கண்­டக்­டர் மற்­றும் மேம்­பட்ட மின்­ன­ணுக் கொள்­கையை வெளி­யிட்டு, இத்­து­றை­யில் முத­லீட்டை ஈர்ப்­ப­து­டன் திறன் வாய்ந்த மனி­த­வ­ளத்தை உரு­வாக்­கும் நோக்­கத்­தை­யும் முன்­வைத்­தது (Government of Tamil Nadu, 2024b). இந்­தத் துறை­யில் 2030க்குள் 2 லட்­சம் திறன் வாய்ந்த மனி­த­வ­ளத்தை உரு­வாக்­கும் இலக்கு கொள்கை விவா­தங்­க­ளில் குறிப்­பி­ டப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அர­சின் வேலை­வாய்ப்பு அணு­கு­மு­றை­யின்  என்­பது,   வேலை தரு­வது மட்­டு­மல்­லா­மல், தொழில்­க­ளில் தமிழ்­நாட்டு இளை­ஞர்­க­ளுக்கு வேலை கிடைக்­கத் தேவை­யான திற­னை­யும் தொழில் சூழ­லை­யும் தற்­போ­தைய அரசு உரு­வாக்க வேண்­டி­ய­தில்லை  திமுக அர­சின் திட்­டத்­தைத் தொடர்ந்து செயல்­ப­டுத்­தி­னாலே போது­மா­னது  இதற்­காக “நான் முதல்­வன்” போன்ற திறன் மேம்­பாட்டு அமைப்­பு­க­ளும், புதிய தொழில்­க­ளுக்­கான முத­லீட்டு கொள்­கை­க­ளும் ஒன்­று­டன் ஒன்று இணைக்­கப்­பட வேண்­டும். கல்­வி–­­தி­றன்–­­தொ­ழில்–­­வே­லை­வாய்ப்பு என்ற முழுச் சங்­கிலி வலுப்­பெ­றும் போது­தான் எதிர்­கால வேலை­ வாய்ப்பு பாது­காப்­பா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மு.க. ஸ்டாலின்  அவர்­கள் ஆட்­சி­யில் வேலை கொடுப்­ப­தைத் தாண்டி, வேலை உரு­வா­கும் சூழலை உரு­வாக்­கு­வது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஒரு அர­சின் சாத­னையை கடந்த கால எண்­ணிக்­கை­க­ளால் மட்­டும் அள­விட முடி­யாது. அந்­தச் சாத­னை­கள் தொடர்ந்து செயல்­ப­டுத்­தப்­பட்டு, காலத்­திற்­கேற்ப மேம்­ப­டுத்­தப்­பட்டு, அடுத்த தலை­மு­றை­யின் தேவை­க­ளுக்கு ஏற்ப விரி­வு­ப­டுத்­தப்­ப­டு­கி­றதா என்­பதே அதன் உண்­மை­யான வெற்­றி­யைத் தீர்­மா­னிக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">முன்­னாள் முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் தலை­மை­யி­லான தமிழ்­நாடு அரசு வேலை­வாய்ப்பை வெறும் அரசு பணி­யி­டங்­க­ளின் எண்­ணிக்­கை­யாக மட்­டும் அணு­கா­மல், கல்வி, திறன் மேம்­பாடு, தொழில் முத­லீடு, தொழில்­மு­னைவு மற்­றும் எதிர்­கா­லத் தொழில்­நுட்­பங்­கள் ஆகி­ய­வற்றை ஒருங்­கி­ணைக்­கும் அணு­கு­மு­றையை முன்­னெ­டுத்து  வந்­தது. “நான் முதல்­வன்” போன்ற திட்­டங்­கள் கல்­விக்­கும் தொழில்­து­றைக்­கும் இடை­யி­லான இடை­வெ­ளி­யைக் குறைக்­கும் நோக்­கத்­து­டன் செயல்­பட்­டன (Government of Tamil Nadu, 2022).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்­தத் திட்­டங்­க­ளின் வீச்சு தற்­போ­தும் தொடர்ந்து விரி­வ­டைந்து, அவற்­றின் தரம் மேலும் மேம்­ப­டுத்­தப்­பட்­டால், தமிழ்­நாட்­டின் இளை­ஞர்­க­ளுக்கு கல்­வி­யி­லி­ருந்து திறன், திற­னி­லி­ருந்து வேலை­வாய்ப்பு, வேலை­வாய்ப்­பி­லி­ருந்து தொழில்­மு­னைவு என முன்­னே­றும் ஒரு தொடர்ச்­சி­யான பாதை உரு­வா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">குறிப்­பாக செயற்கை நுண்­ண­றிவு, மின்­ன­ணு­வி­யல், செமி­கண்­டக்­டர், மின்­சார வாக­னங்­கள், பசுமை ஆற்­றல், உல­க­ளா­விய திறன் மையங்­கள் போன்ற புதிய துறை­க­ளில் முத­லீ­டு­கள் தொடர்ந்து வரு­வ­து­டன், அந்­தத் துறை­க­ளுக்­குத் தேவை­யான திறன்­க­ளும் இளை­ஞர்­க­ளி­டம் உரு­வாக்­கப்­பட வேண்­டும். தொழில் முத­லீ­டும் திறன் மேம்­பா­டும் ஒன்­றோ­டொன்று இணைந்­தால்­தான் முத­லீட்டு அறி­விப்­பு­கள் உண்­மை­யான வேலை­வாய்ப்­பு­க­ளாக மாறும். இத­னால் எதிர்­கால தமிழ்­நாட்­டின் வேலை­வாய்ப்பு கொள்­கை­யில் மூன்று அம்­சங்­கள் தொடர்ந்து வலுப்­ப­டுத்­தப்­பட வேண்­டும்: திறன் – தொழில் – வேலை­வாய்ப்பு. கல்வி நிறு­வ­னங்­க­ளில் பெறப்­ப­டும் அறிவு தொழில்­து­றை­யின் தேவை­யு­டன் இணைக்­கப்­பட வேண்­டும்; தொழில் முத­லீ­டு­கள் உள்­ளூர் இளை­ஞர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­பு­க­ளு­டன் இணைக்­கப்­பட வேண்­டும்; உரு­வா­கும் வேலை­கள் எதிர்­கா­லத் தொழில்­நுட்ப மாற்­றங்­க­ளை­யும் எதிர்­கொள்­ளும் வகை­யில் இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்­தத் தொடர்ச்­சி­யான செயல்­பாடு உறு­தி­யாக இருந்­தால், தமிழ்­நாட்­டின் இளை­ஞர்­கள் வேலை தேடும் தலை­மு­றை­யாக மட்­டும் இல்­லா­மல், வேலை உரு­வாக்­கும் தலை­மு­றை­யா­க­வும் உரு­வெ­டுக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அதுவே மு.க. ஸ்டாலின் தலை­மை­யி­லான அர­சின் வேலை­வாய்ப்பு அணு­கு­மு­றை­யின் நீண்­ட­கா­லப் பய­னாக அமைந்­தது. திட்­டங்­கள் அறி­விக்­கப்­ப­டு­வ­தைக் காட்­டி­லும் அவை தொடர்ந்து செயல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தும், பய­னா­ளி­க­ளின் திறன் மற்­றும் வேலை­வாய்ப்பு நிலை­மை­யில் ஏற்­ப­டுத்­தும் மாற்­றம் கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தும் முக்­கி­யம். இறு­தி­யில், “என் கல்­விக்கு ஏற்ற வேலை எங்கே?” என்று கேட்­கும் இளை­ஞ­னி­டம், “உன் திற­மைக்கு ஏற்ற வாய்ப்பு தமிழ்­நாட்­டி­லேயே இருக்­கி­றது” என்று நம்­பிக்­கை­யு­டன்கூறக்­கூ­டிய நிலையை உரு­வாக்­கு­வதே அர­சின் மிகப்­பெ­ரிய வெற்­றி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">திட்­டங்­கள் தொட­ரட்­டும்; திறன்­கள் வள­ரட்­டும்; தொழில்­கள் பெரு­கட்­டும்; வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கட்­டும்; தமிழ்­நாட்­டின் இளை­ஞர் தலை­முறை முன்­னே­றட்­டும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>