<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,39,492,1091" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 13 2026 15:40:20 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260814T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="14082026-TRY-09" position.sequence="09" ex-ref="14082026-TRY-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">14.08.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு! எங்கள் தலைவர் முதல்வராக இருந்தபோது    </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="45">சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நீட் விலக்குத் -– தீர்மானத்தை நிறைவேற்றினார்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">சட்டப்பேரவையில் நீட்தேர்வை ரத்து செய்யக்கோரும் தீர்மானத்தில் டாக்டர் வை. முத்துராஜா பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Muthurajavai_09_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">சென்னை, ஆக. 14–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">சட்­ட­மன்­றத்­தில் நீட் தேர்வு ரத்து செய்யக் கோரும் தீர்­மா­னத்தை தி.மு.க. சார்­பில் வர­வேற்று டாக்­டர் வை. முத்­து­ராஜா பேசு­கை­யில் நீட் தேர்வு குறித்து ஆராய ஒய்வு பெற்ற நீதி­ய­ர­சர் ஏ.கே.ராஜன் தலை­மை­யில் குழு அமைத்­த­வர் எங்­கள் தலை­வர் என்­றும் சட்­ட­மன்ற  சிறப்­புக் கூட்­டத்­தைக் கூட்டி நீட் விலக்கு தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­ய­வர். முன்பு முதல்­வ­ராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்­கள் என்­றும் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">தீர்­மா­னத்தை வர­வேற்று 
டாக்­டர் வை. முத்­து­ராஜா  பேசி­ய­
தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நீட் தேர்வு எழு­தா­மல் என்னை இந்த சமூ­கத்­தில் ஒரு மருத்­து­வ­ராக்கி அழ­கு­பார்த்த முன்­னாள் முத­ல­மைச்­சர், முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள் இருக்­கும் திசை­நோக்கி வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) 15 ஆண்­டு­கா­லம் இரா­ய­வ­ரம், கடி­யாப்­பட்டி என்ற குக்­கி­ரா­மத்­தில் அரசு மருத்­து­வ­ராக, வட்­டார மருத்­துவ அலு­வ­ல­ராக பணி­யாற்றி, விருப்ப ஓய்வு கொடுத்து மீண்­டும் எனக்கு இரண்டு முறை வாய்ப்பு கொடுத்து, இரண்­டாம் முறை­யாக சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக்­கிய முன்­னாள் முத­ல­மைச்­சர் கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­களை வணங்­கு­கி­றேன். எனக்கு இந்­த­நே­ரத்­தில் இந்த தனித்­தீர்­மா­னத்­தில் வாய்ப்­ப­ளித்து பேசு­வ­தற்கு உறு­து­ணை­யாக இருந்த  எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­க­ளை­யும், எங்­க­ளது வழி­காட்­டி­க­ளை­யும் வணங்கி எனது உரையை துவக்­கு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இந்த சட்­ட­மன்­றத்­திற்கு இரண்­டா­வது முறை­யாக அனுப்­பிய புதுக்­கோட்டை சட்­ட­மன்­றத் தொகுதி வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்­கும், கழக நிர்­வா­கி­க­ளுக்­கும், இந்த அவை­யில் வீற்­றி­ருக்­கும் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் அனை­வ­ருக்­கும் எனது வணக்­கத்தை தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.  பேர­வைத் தலை­வர் அவர்­களே, நீட் தேர்­வினை, நீட் விலக்­கினை வலி­யு­றுத்தி இந்த அரசு கொண்­டு­வ­ரு­கின்ற தீர்­மா­னத்தை எங்­க­ளு­டைய கழ­கத் தலை­வர் அவர்­கள் மற்­றும் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் அண்­ணன் திரு. உத­ய­நிதி ஸ்டாலின் ஆகி­யோ­ரின் வழி­காட்­டு­த­லின்­படி நாங்­கள் இதனை ஆத­ரிக்­கி­றோம். இந்­தச்­ச­ம­யத்­தில் நீட் விலக்­கிற்­காக முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளும், திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும், திரா­விட மாடல் நாய­கர் எங்­கள் தலை­வர் அவர்­க­ளும், எங்­க­ளு­டைய இளந்­த­லை­வர் அவர்­க­ளும் எடுத்த பல்­வேறு முயற்­சி­களை இந்த அவை­யில் நான் சுருக்­க­மாக பதிவு செய்ய விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">நீட் தேர்வை கடு­மை­யாக எதிர்த்­த­வர் கலை­ஞர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை பொறுத்­த­வரை, உயர்­கல்­விக்கு நீட் உட்­பட எந்த நுழை­வுத் தேர்­வுமே இருக்­கக்­கூ­டாது என்­ப­து­தான் எங்­கள் நிலை­பாடு. 2006 ஆம் ஆண்டு நீட் தேர்வு வேண்­டு­மென்ற நிலை வந்­த­போது அதை கடு­மை­யாக எதிர்த்­த­வர் முத்­த­மி­ழ­ றி­ஞர் கலை­ஞர் அவர்­கள். இன்­னும் பெரு­மை­யோடு சொல்ல வேண்­டு­மா­னால் நீட் தேர்வை இந்­தி­யா­வில் முதன்­மு­த­லாக எதிர்த்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள். நீட் தேர்வு நடை­பெற்­றால் ஏழை­யெ­ளிய, ஒடுக்­கப்­பட்ட, பிற்­ப­டுத்­தப்­பட்ட மாண­வர்­க­ளுக்கு மருத்­து­வக் கனவு சிதைந்து போய்­வி­டும். அத­னால் நீட் தேர்வு கூட­வே­கூ­டாது என்று கலை­ஞர் அவர்­கள் உறு­தி­யாக இருந்­தார்­கள். அத­னால்­தான் 2006 முதல் 2011 வரை­யி­லான ஆட்­சிக்­கா­லத்­தில் நீட் வர­வில்லை. இன்­னும் சொல்­லப்­போ­னால் முன்­னாள் முத­ல­மைச்­சர் அம்­மை­யார் ஜெய­ல­லிதா அவர்­கள் உயி­ரோடு இருந்­த­வ­ரை­யி­லும் நீட் தேர்வை தமிழ்­ நாட்­டிற்­குள் கொண்­டு­வர முடி­ய ­வில்லை. 2017 ஆம் ஆண்­டு­தான் நீட் தேர்வு தமிழ்­நாட்­டிற்­குள் 
வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அப்­பொ­ழுதே அந்­தத் தேர்வை கடு­மை­யாக எதிர்த்­த­வர் எங்­க­ளு­டைய கழ­கத் தலை­வர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நீட் தேர்வு வந்த கார­ணத்­தால் 12 ஆம் வகுப்­புத் தேர்­வில் 1200-க்கு 1176 மதிப்­பெண்­கள் எடுத்­தும் அரி­ய­லூரை சேர்ந்த தங்கை அனிதா அவர்­க­ளால் நீட் தேர்­வில் வெற்றி பெற­மு­டி­யா­மல் போயிற்று. அத­னால் அவ­ரால் M.B.B.S. படிக்க முடி­யா­மல் போயிற்று. அரி­ய­லூர் மாவட்­டத்­தில் குழு­மூர் என்ற சிறிய கிரா­மத்­தில் பிறந்த அனிதா உச்ச நீதி­மன்­றம் வரை சென்று நீட் தேர்­விற்­காக போரா­டி­னார்­கள். ஆனால் வெற்றி பெற முடி­ய­ வில்லை. அந்த சோகத்­தில் அனிதா தன்­னு­டைய உயி­ரையே மாய்த்­துக் கொண்­டார்­கள். தங்கை அனிதா அவர்­க­ளி­னு­டைய தற்­கொ­லை­தான் இந்­தி­யா­வி­லேயே நீட் தேர்­விற்­கான முதல் பலி. அதைத்­தொ­டர்ந்து தமிழ்­நாட்­டில் இன்­றைக்கு 26-க்கும் அதி­க­மான மாணவ, மாண­வி­கள் நீட் தேர்­வால் மர­ணம் அடைந்­துள்­ள­னர். அத­னால்­தான் நீட் தேர்வை ஒழித்தே ஆக வேண்­டும் என்று திமுக மிக உறு­தி­யாக இருக்­கி­றது. இன்­றைக்கு இந்­தியா முழு­வ­தும் நீட் தேர்­வில் குள­று­ப­டி­கள் நடக்­கின்­றன என்று போராட்­டம் நடத்­திக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். ஆனால் பத்து வரு­டத்­திற்கு முன்­கூட்­டியே நீட் தேர்வே ஒரு குள­று­படி, நீட் தேர்வு என்­பதே ஒரு scam என்று எங்­கள் தலை­வர் சொன்­னார்­கள். அத்­து­டன் நாங்­கள் நிற்­க­வில்லை. திமுக ஒரு­பு­ற­மும், எங்­க­ளு­டைய அரசு மறு­பு­ற­மும் நீட் தேர்­விற்கு எதி­ராக மக்­கள் மன்­றம், சட்­ட­மன்­றம், நீதி­மன்­றத்­தில் பல்­வேறு போராட்­டங்­கள் நடத்­தி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">நீதி­ய­ர­சர் ஏ.கே. ராஜன் தலை­மை­யில் குழு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">2021 ஆம் ஆண்டு எங்­கள் தலை­வர் தலை­மை­யி­லான ஆட்சி அமைந்­த­தும் 5.-6.-2021 அன்று நீட் தேர்வு பாதிப்­பு­கள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதி­ய­ர­சர்  ஏ.கே. ராஜன் தலை­மை­யில் ஒரு குழு அமைக்­கப்­பட்­டது. அந்­தக் குழு நீட் தேர்வு தொடர்­பாக தமிழ்­நாடு முழு­வ­தும் அனைத்­துத் தரப்பு மக்­கள், பெற்­றோர்­கள், மாண­வர்­க­ளி­டம் கருத்­து­களை பெற்­றது. அத­ன­டிப்­ப­டை­யில் 14-.7-.2021 அன்று கழக அர­சுக்கு ஒரு அறிக்­கையை சமர்ப்­பித்­தார்­கள். அந்த அறிக்­கையை வைத்து அன்­றைய முத­ல­ மைச்­ச­ரான எங்­க­ளு­டைய தலை­வர் அவர்­கள், தமிழ்­நாட்­டில் 12 ஆம் வகுப்பு மதிப்­பெண்­க­ளின் அடிப்­ப­டை­யிலே மருத்­து­வம், பல் மருத்­து­வம், இந்­திய மருத்­து­வம், ஹோமி­யோ­பதி உள்­ளிட்ட படிப்­பு­க­ளில் சேர­லாம் என்று உறுதி செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">நீட் விலக்கு மசோ­தா­வுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">சிறப்பு கூட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அந்­த­வ­கை­யில் The Tamil Nadu Admission to Undergraduate Medical Degree Courses Bill, 2021-ஐ இதே பேர­வை­யில் 13.-9-.2021 அன்று கொண்­டு­வந்­தார்­கள். இதற்­கி­டை­யில் நீட் ஒரு தேசிய ஆபத்­தாக வரும் என்­பதை உணர்ந்து, 1.-10.-2021 அன்று எங்­க­ளு­டைய தலை­வர் அவர்­கள்  முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது, 12 மாநில  முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு நீட் விலக்கை வலி­யு­றுத்தி கடி­தம் எழு­தி­னார்­கள். அந்­தக் கடி­தத்­தில் கல்வி என்­பது நம் மாநி­லத்­தி­னு­டைய உரிமை. ஆகவே, அதை நாம் பாது­காக்க வேண்­டும். அந்த அடிப்­ப­டை­யில் தமிழ்­நாடு அரசு ஒரு சட்­டத்­தைக் கொண்­டு­வர முயற்சி எடுத்­தி­ருக்­கி­றது. இதற்கு அந்­தந்த மாநி­லங்­கள் ஆத­ரவு தர­வேண்­டும் என்று சொல்­லி­யி­ருந்­தார்­கள். இப்­போது அந்த மசோ­தா­விற்கு வரு­கி­றேன். அந்த மசோ­தாவை அப்­போ­தைய ஆளு­ந­ராக இருந்த திரு. ஆர். என். ரவி அவர்­கள் 2-.2-.2022 அன்று அர­சிற்கே திருப்­பி­ய­ னுப்­பி­னார். ஆனால், எங்­க­ளது தலை­வர் அடுத்த 6 நாட்­க­ளில் அதா­வது, 8-.2-.2022 அன்று உட­ன­டி­யாக சட்­ட­மன்ற சிறப்­புக் கூட்­டத்­தைக் கூட்டி, மீண்­டும் நீட் விலக்கு மசோ­தாவை நிறை­வேற்றி மேதகு ஆளு­நர் அவர்­க­ளுக்கு அனுப்பி வைத்­தார்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்கு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இந்த மசோ­தாவை இந்­த­முறை கிடப்­பில் போட­மு­டி­யாது. இரண்­டா­வ­து­முறை அனுப்­பிய மசோ­தாவை கிடப்­பில் போட­மு­டி­யாது. ஆகவே, 15.-3.-2022 அன்று மேதகு ஆளு­நர் அவர்­களை நேர­டி­யா­கச் சந்­தித்து, அந்த மசோ­தாவை உட­ன­டி­யாக  குடி­ய­ர­சுத் தலை­வர் அவர்­க­ளுக்கு அனுப்­புங்­கள் என்று எங்­க­ளது தலை­வர் அவர்­கள் வலி­யு­றுத்­தி­னார்­கள். அதைத்­தொ­டர்ந்து மேதகு ஆளு­நர்அவர்­கள் அந்த மசோ­தாவை 4.-5-.2022 அன்று உள் துறை அமைச்­ச­கத்­துக்கு அனுப்பி வைத்­தார்­கள். இதைத்­தொ­டர்ந்து, 4-.9-.2023 அன்று உள் துறை அமைச்­ச­கம் அந்த மசோதா தொடர்­பாக சில விளக்­கங்­க­ளைக் கேட்­டார்­கள். அதற்­கான பதி­லை­யும் அன்று இருந்த எங்­க­ளு­டைய அரசு சார்­பா­கத் தெரி­வித்­தோம். ஆனால், 27.-2-.2025 அன்று மேதகு குடி­ய­ர­சுத் தலை­வர் அவர்­கள் அந்த மசோ­தா­விற்கு ஒப்­பு­தல் தர­வில்லை. அதா­வது ‘President withheld the assent’ என்று என்று தமிழ்­நாட்­டிற்கு பதில் வந்­தது. ஆனால்,  அமைச்­சர் அவர்­கள் சொல்­லும்­போது பார்த்­தீர்­களென்­றால், நாங்­கள் அனுப்­பிய மசோ­தாவை கிடப்­பில் போட்­டி­ருக்­கி­றார்­கள் என்று சொன்­னார்­கள். உடனே அன்­றைய  முத­ல­மைச்­ச ­ராக இருந்த எங்­க­ளு­டைய தலை­வர் அவர்­கள் 9-.4.-2025 அன்று அரசு சார்­பில் ஒரு அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தைக் கூட்­டி­னார்­கள். அந்த அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட முடி­வு­ க­ளின் அடிப்­ப­டை­யில், அதைத் தொடர்ந்து தமிழ்­நாடு சட்­ட­மன்­றம் ஒரு­ம­ன­தாக நிறை­வேற்றி அனுப்­பிய நீட் விலக்கு மசோ­தா­விற்கு ஒப்­பு­தல் அளிக்­க­வேண்­டு­மென்று தமிழ்­நாடு அர­சின் சார்­பில் உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்கு தொட­ரப்­பட்­டது. இப்­போ­தும் அந்த வழக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">ஆனால், கழக அரசு நீட் விலக்­கிற்­காக செய்த இந்த விஷ­ யங்­க­ளைப் பற்­றி­யெல்­லாம் இந்த அரசு கொண்டு வரு­கிற தீர்­மா­னத்­தில் எந்த விவ­ர­முமே இல்­லா­தது எங்­க­ளுக்கு மிகுந்த ஏமாற்­றத்தை அளிக்­கின்­றது. கழக அரசு தொடர்ந்த அந்த வழக்கை இந்த அரசு நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றதா? அதற்கு சரி­யான வழக்­க­றி­ஞர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்­களா? இதை­யெல்­லாம் விளக்­க­வேண்­டிய பொறுப்பு இந்த அர­சிற்கு இருக்­கி­றது. நீட் ஒழிப்­புக்­காக கழக அரசு மட்­டு­மல்ல தி.மு.க-வும் பல்­வேறு பணி­க­ளைச் செய்­தி­ருக்­கி­றது. தி.மு.க.- வினு­டைய இளை­ஞ­ரணி, மாண­வர் அணி, மருத்­துவ அணி சேர்ந்து ஆகஸ்ட் 2023-ல் ஒரு மாபெ­ரும் உண்­ணா­வி­ர­தப் போராட்­டத்தை தமிழ்­நாடு எங்­கும் நடத்­தி­னோம். அன்­றைக்கு எங்­க­ளு­டைய இளம் தலை­வர் இன்­றைக்கு எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருப்­ப­வர் அமைச்­ச­ராக இருந்­தார்­கள். அமைச்­ச­ராக இருந்­தால் போராட்­டத்­தில் கலந்­து­கொள்­ளக்­கூ­டாது என்ற விதி உண்டு. ஆனா­லும், என் அமைச்­சர் பத­வி­யை­விட நம் மாண­வர்­க­ளின் கல்­வி­தான் முக்­கி­யம் என்று அன்­றைக்கு உண்­ணா­வி­ரத அறப்­போரை நடத்­திக் காட்­டி­ய­வர்­தான் எங்­க­ளது இளம் தலை­வர் அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">நீட் விலக்கு கோரி 
கையெ­ழுத்துஇயக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அது­மட்­டு­மல்ல, நீட் விலக்கு கேட்டு bike பேரணி, நீட் விலக்கு கோரி கையெ­ழுத்து இயக்­கம், நீட் ஒழிப்பு கருத்­த­ரங்­கம் எல்­லாம் எங்­கள் எதிர்க்­கட்­சித்தலை­வர் அவர்­க­ளின் முன்­னெ­டுப்­பில் கழக இளை­ஞ­ரணி சார்­பில் நடத்­தப்­பட்­டது. இப்­படி நீட்­டிற்­காக தொடர்ச்­சி­யாக நாங்­கள் போரா­டிக்­கொண்­டி­ருக்­கி­றோம். ஆனால், ** அது­கூட பர­வா­யில்லை, (குறுக்­கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நான் வர­லா­று­தான் பேசி­னேன். முடி­வாக இந்­தத் தீர்­மா­ னத்தை திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில் ஆத­ரித்து, வாய்ப்­புக்கு நன்றி கூறி விடை­பெ­று ­கின்­றேன். நன்றி. (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இவ்­வாறு டாக்­டர் முத்­து­ராஜா பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>