<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,64,959,670" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 13 2026 23:13:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260814T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="14082026-VLR-07" position.sequence="07" ex-ref="14082026-VLR-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">‘கோவில் நிதியை கல்விக்குப் பயன்படுத்தலாம்’ என்ற நீதிமன்ற தீர்ப்பின்படி</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">நிலுவையில் உள்ள 6 கல்லூரிகளைக் கட்டிட அரசு முன்வர வேண்டும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Sekarbabu1_07_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">சென்னை, ஆக.14–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">‘கோவில் நிதியை கல்­விக்­குப் பயன்­ப­டுத்­த­லாம்’ என்ற உயர்­நீ­தி­மன்ற உத்­த­ர­வினை ஏற்று, ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்டு நிலு­வை­யில் உள்ள 6 கல்­லூ­ரி­களை ஏற்­ப­டுத்த இந்த அரசு முன்­வர வேண்­டும் என்று இந்து சமய அற­நி­லை­யத்­துறை முன்­னாள் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தி.மு.க.வுக்கு எதி¬­ரான மனுவை தள்¬­ளு¬­படி செய்து கோவில் நிதியை கல்¬­விக்­குப் பயன்­ப­டுத்­த¬­லாம் என உயர்­நீ­தி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­துள்­ள ­தைத் தொடர்ந்து இந்து சமய அற­நி­லை­யத்­துறை முன்­னாள் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு எம்.எல்.ஏ. அளித்­துள்ள பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">திரா­விட மாடல் ஆட்சி ஏற்­பட்ட பிறகு 2021 ஆம் ஆண்டு தாக்­கல் செய்­யப்­பட்ட இந்து சமய அற­நி­லை­யத்­துறை மானி­யக் கோரிக்­கை­யில் 10 கல்­லூ­ரி­கள் திருக்­கோ­யில்­கள் சார்­பில் கட்­டப்­ப­டும் என்று திரா­விட மாடல் ஆட்­சி­யி­னு­டைய நாய­கன் எங்­கள் உயி­ரி­னும் மேலான முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டா லின் அவர்­கள் வழி­காட்­டு­த­லோடு அறி­விக்­கப்­பட்ட அந்த அறி­விப்­பில் நான்கு கலைக் கல்­லூ­ரி­கள் அந்த ஆண்டு டிசம்­பர் மாதமே துவக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அந்த அர­சா­ணையை எதிர்த்து அன்­றைய தினம் உயர் நீதி ­மன்­றத்­தில் தலைமை நீதி­பதி அவர்­க­ளி­டம் இந்த அர­சா­ணைக்கு தடை கேட்டு உயர் நீதி­மன்­றம் சென்ற நிலை­யில் அவர்­கள் தடை­யா­ணைக்கு முன்­பா­கவே சென்னை கொள த்­தூ­ரி­லே ­யும், திருச்­செந்­தூர் திருக்­கோ­யில் சார்­பி­லே­யும், அர்த்­த­நா­ரீஸ்­வ­ரர் திருக்­கோ­யில் சார்­பி­லே­யும், பழனி தண்­டா­யு­த­பாணி திருக்­கோ­யில் சார்­பி­லே­யும் நான்கு கல்­லூ­ரி­ க­ளும் வாடகை கட்­டி­டத்­தில் துவங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">நீதி­மன்­றத்­தில் முறை­யாக அன்­றைய தினம் அர­சி­னு­டைய தலைமை வழக்­க­றி­ஞர் சண்­மு­க­சுந்­த­ரம் அவர்­க­ளின், அவர்­கள் வாதத்தை அடுத்து நான்கு கல்­லூ­ரி­க­ளுக்­கும் தடை இல்லை இனி மேற்­கொண்டு கல்­லூ­ரி­கள் கட்­ட­வேண்­டு­மென்­றால், அறி­வித்த அறி­விப்­பிலே இருக்­கின்ற ஆறு கல்­லூ­ரி­கள் கட்­டு­வ­தற்கு நீதி­மன்­றத்­தின் உத்­த­ரவை பெற்று கட்ட வேண்­டும் என்று நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அந்­தத் தீர்ப்­பின் அடிப்­ப­டை­யில் மேல்­மு­றை­யீடு மனு­வாக உச்ச நீதி­மன்­ற த்­திற்கு சென்­றார்­கள். உச்ச நீதி­மன்­றத்­தி­லே­யும் கல்­லூ­ரி­கள் கட்­டப்­ப­டு­வது அற­நி­லை­யத்­து­றை­யின் கொடை­க­ளின் சட்­டத்­தின்­படி ஏற்­பு­டை­யது என்று அங்­கே­யும் மனு தள்­ளு­படி செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஏற்­க­னவே உயர் நீதி­மன்­றத்­தில் தள்­ளு­படி செய்­யப்­பட்ட மனு­வின் அடிப்­ப­டை­யில் அவர்­கள் மீண்­டும் இந்த கல்­லூ­ரி­கள் கட்­டு­வ­தற்கு உண்­டான வழி­காட்டி நெறி­மு­றை­கள் ஒழு ங்­காக கடை­பி­டிக்­க­வில்லை என்று ஒரு வழக்கை பதிவு செய்­தி­ருந்­தார்­கள்.அது நேற்­றைக்கு உயர் நீதி­மன்­றத்­திலே அந்த வழக்கு வந்­தது .அந்த வழக்­கின் அடிப்­ப­டை­யில் உயர் நீதி­ மன்­றத்­தின் சிறப்பு அமர்வு மாண்­பமை பொருந்­திய நீதி­ய­ர­சர் ஜெயச்­சந்­தி­ரன் அவர்­கள் தலை­மை­யில் இருக்­கின்ற அந்த பெஞ்­சிலே கல்­லூ­ரி­கள் கட்­டப்­பட்­டது ஞாயம் தான், முறை­ யா­னது தான், அற­நி­லைத்­துறை என்­பது அறக்­கொ­டை­க­ளின் சட்­டப்­படி அந்த கல்­லூ­ரி­கள் கட்­டப்­பட்­டது ஞாயம் என்ற தீர்ப்பை வர­லாற்று சிறப்­பு­மிக்க தீர்ப்பை திரா­விட மாடல் ஆட்­சி­யி­னு­டைய நாய­கன் அவ­ரு­டைய திட்­டத்தை நேற்­றைக்கு உயர் நீதி­மன்­றம் ஏற்­றுக் கொண்ட மகிழ்ச்­சியை தான் இன்­றைக்கு உங்­க­ளோடு பகிர்ந்து கொண்­டுள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">50 ஆண்­டு­கள் செய்ய வேண்­டி­யதை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">5 ஆண்­டில் செய்த திரா­விட மாடல் அரசு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மேலும் அவ­ரு­டைய தீர்ப்­பிலே இந்த நான்கு கல்­லூ­ரி­க­ளில் இரண்டு கல்­லூ­ரி­கள் கட்­டப்­பட்டு விட்­டன. கபா­லீஸ்­வ­ரர் திருக் கோ­யில் கொளத்­தூர் கல்­லூ­ரி­யும் அதே­போல் பழனி ஆண்­ட­வர் திருக்­கோ­யி­ லு­டைய பழனி ஆண்­ட­வர் கல்­லூ­ரி­யும் கட்­டப்­பட்டு விட்­டது.மீதம் இருக்­கின்ற கல்­லூ­ரி­கள் கட்­டப்­பட வேண்­டும் அது திருக்­கோ­யி­ லின் நிதி இருந்­தால், திருக்­கோ­யில் நிதி  ­யி­லி­ருந்து கட்­ட­லாம் அப்­படி இல்லைஎன்­றால்அரசு அதற்கு உதவி செய்ய வேண்­டும் என்று தீர்ப்­ப­ளித்துஇருக்­கின்­றார்­கள் .அந்த தீர்ப்­பின் அடிப்­ப­டை­யில் செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்ற அந்த இரண்டு கல்­லூ­ரி­க­ளும் வாடகை கட்­டி­டத்­தில் செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றது. அதற்கு சொந்த கட்­டி­டத்தை கட்ட இந்த அரசு நீதி­மன்ற தீர்ப்­பின்­படி முன்­வர வேண்­டும். அதோடு ஏற்­க­னவே நிலு­வை­யிலே அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்ற ஆறு கல்­லூ­ரி­கள் கடை­யம், கல­சப்­பாக்­கம், அணைக்­கட்டு திருக் காட்­டுப்­பள்ளி, அதே­போல் லால்­குடி, சென்னை கீழ்­பாக்­கம் அந்த ஆறு கல்­லூ­ரி­க­ளை­யும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இந்த அரசு முனைப்பு காட்ட வேண்­டும் என்று இந்த நேரத்­திலே கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்து சமய அற­நி­லை­யத்­து­றையை பொறுத்­த­வ­ரை­யில் 50 ஆண்­டு­க­ளில் செய்ய வேண்­டிய பணி­களை 5 ஆண்­டு­க­ளில் நிறை­வேற்­றிய அரசு திரா­விட மாடல் அரசு. ஆன்­றோர்­கள், சான்­றோர்­கள், பாராட்­டு­கின்ற அரசு, ஆத்­தி­கர்­கள்- நாத்­தி­கர்­கள் என அனை­வ­ருக்­கும் உண்­டான அரசு என்­பதை கடந்த காலம் நிரூ­பித்­தது போல் இந்­தாண்­டும் கடந்த காலத்­தி­னு­டைய திட்­டங்­களை அவர்­க­ளு­டைய வழி­காட்­டு­த­லாக எடுத்­துக் கொண்டு நிறை­வேற்ற வேண்­டும் என்று முன்­னாள் இந்து சமய அற­நி­லை­யத்­துறைஅமைச்­சர் என்ற முறை­யில் எனது கோரிக்­கையை வைக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">செய்­தி­யா­ளர்: சார் இப்ப இருக்­கின்ற இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் பல்­வேறு குற்­றச்­சாட்­டு ­க­ளை­யும் விமர்­ச­னங்­க­ளை­ யும் முன்­வைத்­துக் கொண்­டி­ருக்­கின்­றார் அதைப்­பற்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">பி.கே.சேகர்­பாபு: நான் முன்­னரே ஏற்­க­னவே சொன்­னது போல் சட்­டி­யிலேஇருந்­தால் தான் அகப்­பை­யிலே வரும், இல்­லா­த­தை­யும் பொல்­லா­த­தை­யும் வாய்க்கு வந்­த­படி பேசு­வது நாக­ரி­கம் அல்ல தக்­கச் சான்­றோடு அவர் எடுத்­துக் கூறி­னால் பதில் சொல்ல தயா­ராக இருக்­கி­றோம் என்று பேட்டி அளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>