<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="15/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,69,958,745" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Aug 14 2026 14:15:45 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260815T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="15082026-CBE-05" position.sequence="05" ex-ref="15082026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தில் </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">வீடு கட்டிய 1 லட்சம் பேருக்கு பணம் வழங்காமல் இழுத்தடிப்பு!    </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">கந்துவட்டி, நிதி நெருக்கடியால் இல்லங்களை விற்கும் பரிதாபம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame821635_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="DC1C_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தென்­காசி, ஆக. 15–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாடு ஊரக பகு­தி­க­ளில் கலை­ஞர் கனவு இல்­லம் திட்­டத்­தில் வீடு கட்­டும் பணி ஆணை பெற்று வீடு­கள் கட்­டிய சுமார் 1 லட்­சம் பய­னா­ளி­க­ளுக்கு இன்­னும் பணம் வழங்­கப்­ப­டாத அவ­லம் தொடர்­கி­றது. இத­னால் கந்து வட்­டிக்கு பணம் வாங்கி நிதி நெருக்­க­டி­யில் தவிக்­கும் பல­ரும் வீடு­களை விற்­கும் நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாடு கிரா­மப்­பு­றங்­க­ளில் வீடு­கள் இல்­லாத ஏழை மக்­க­ளுக்கு வீடு கட்­டிக் கொடுக்­கும் வகை­யில் கலை­ஞர் கனவு இல்­லம் திட்­டம் மூலம் ஆண்­டுக்கு ஒரு லட்­சம் கான்­கி­ரீட் வீடு­கள் கட்­டிக் கொடுக்­கும் திட்­டத்தை கடந்த திமுக ஆட்­சி­யில் அப்­போ­தைய முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஊரக வளர்ச்­சித் துறை மூலம் 2024 ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். இதன் மூலம் 2030ஆம் ஆண்­டிற்­குள் குடி­சை­கள் இல்­லாத தமிழ்­நா­டுத்தை உரு­வாக்­கு­வ­து­டன், ஆண்­டுக்கு ஒரு லட்­சம் வீடு­க­ளுக்கு குறை­யா­மல் 6 ஆண்­டு­க­ளில் மொத்­தம் 8 லட்­சம் வீடு­கள் கட்­டு­தற்­காக திட்­ட­மி­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இத்­திட்­டத்­தின் கீழ் பயன்­பெ­று­வ­தற்கு வறு­மைக் கோட்­டிற்கு கீழ் இருக்க வேண்­டும். ஆனால் சொந்­த­மாக இடம் வைத்­தி­ருக்க வேண்­டும். சொந்­த­மாக வேறு வீடு­கள் இருக்­கக் கூடாது. சொந்த வீடு இருந்து இடி­யும் நிலை­யில் இருந்­தால் அவர்­க­ளும் இத்­திட்­டத்­தில் பயன் பெற­லாம். இல­வச வீட்டு மனைப் பட்டா பெற்­ற­வர்­க­ளும் இத்­திட்­டத்­தின் கீழ் பயன் பெற தகு­தி­யா­ன­வர்­கள். கிரா­மப்­பு­றங்­க­ளில் ஊராட்சி மூலம் விண்­ணப்­பம் சமர்ப்­பிக்­கப்­பட்டு ஊராட்சி ஒன்­றிய அதி­கா­ரி­கள் அடங்­கிய குழு­வி­ன­ரால் ஆய்வு மேற்­கொள்­ளப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தகு­தி­யான பய­னா­ளி­கள் பட்­டி­யல் மாவட்ட ஊரக வளர்ச்சி முக­மை­யால் தயா­ரிக்­கப்­பட்டு கிராம சபை­க­ளில் ஒப்­பு­தல் பெறப்­ப­டும். பின்­னர் அந்­தந்த மாவட்ட கலெக்­டர்­கள் மூலம் இறுதி ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­டன. அவர்­க­ளுக்கு பணி ஆணை வழங்­கப்­பட்ட பிறகு வீடு கட்­டும் பணி­களை துவக்­க­லாம். சமை­ய­லறை உட்­பட குறைந்­தது 360 சதுர அடி­யில் வீடு கட்ட வேண்­டும். இதற்­காக அஸ்­தி­வா­ரம், மேற்­கூரை மற்­றும் பணி­கள் முடிவு ஆகிய 3 நிலை­க­ளில் பணம் பய­னா­ளி­க­ளுக்கு விடு­விக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அதி­க­பட்­ச­மாக ஒரு பய­னா­ளிக்கு மூன்று லட்­சத்து 55 ஆயி­ரத்து 600 ரூபாய் வழங்­கப்­ப­டும் இதில் 320 கிலோ கம்பி, 140 சிமென்ட் மூடை­கள் ஆகி­யவை சலுகை விலை­யில் அரசே வழங்கி விடும். அதி­க­பட்ச தொகை­யில் 100 நாள் வேலை உறு­தித்­திட்­டத்­தில் பயன் அடை­யும் பய­னா­ளி­கள் தங்­க­ளுக்­கான வீடு கட்­டும் பணி­யில் ஈடு­பட்ட போதும் 100 நாள் வேலை உறு­தித்­திட்ட சம்­ப­ளத்தை பெற்­றுக் கொள்ள முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்­தத் திட்­டம் 2024 – 25, 2025 – 26 என கடந்த 2 ஆண்­டு­கள் எந்த பிரச்­னை­யும் இன்றி செயல்­ப­டுத்­தப்­பட்­டது. இதன் மூலம் 2 லட்­சம் வீடு­கள் கட்டி வழங்­கப்­பட்­டன. கடந்த பிப்­ர­வரி மாதம் வரை இத்­திட்­டம் சிறப்­பாக செயல்­பட்டு வந்த நிலை­யில், இந்த நிதி­யாண்­டிற்­காக தேர்வு செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு கடந்த 6 மாதங்­க­ளாக அதா­வது சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லுக்கு பின்­னர் இன்று வரை பணம் வழங்­கப்­ப­டா­மல் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">பொது­வாக வறு­மைக் கோட்­டுக்கு கீழ் உள்­ள­வர்­க­ளுக்கு மட்­டுமே இத்­திட்­டத்­தின் கீழ் நிதி வழங்­கப்­ப­டு­கி­றது. பொரு­ளா­தார வசதி இல்­லாத நெருக்­கடி மிகுந்த குடும்­பங்­களே இதில் பயன் பெறு­கின்­ற­னர். தற்­போது பணம் வழங்­கப்­ப­டாத கார­ணத்­தால் பாதி­வரை கட்­டப்­பட்ட கட்­டி­டப் பணி­களை தொட­ர­வும் முடி­யா­மல் ஏற்­க­னவே கட்­டு­மா­னப் பணிக்கு வாங்­கிய பொருட்­கள், கூலி உள்­ளிட்­ட­வற்றை கொடுக்­க­வும் முடி­யா­மல் அவர்­கள் திண்­டாடி வரு­கின்­ற­னர். மாநி­லம் முழு­வ­தும் இதே நிலை தான் நீடிக்­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">2026–27ம் ஆண்­டுக்­கான பய­னா­ளி­கள் சட்­ட­மன்ற தேர்­தல் பணி­களை கருத்­தில் கொண்டு ஜன­வரி, பிப்­ர­வரி மாதங்­க­ளி­லேயே தேர்வு செய்­யப்­பட்டு பணி ஆணை வழங்­கப்­பட்­டது. இவ்­வா­றாக வீடு ஒதுக்­கீட்டு ஆணை பெற்ற சுமார் 1 லட்­சத்­திற்­கும் மேற்­பட்ட பய­னா­ளி­கள் இத­னால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். பணம் எப்­போது வரும் என்று கேட்டு நாள்­தோ­றும் ஊரக உள்­ளாட்சி அமைப்­பு­களை நோக்கி பய­னா­ளி­கள் படை­யெ­டுத்து வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">அவர்­க­ளுக்கு பதில் சொல்­வதே உள்­ளாட்சி அலு­வ­லர்­க­ளுக்கு மிகப்­பெ­ரும் பணி­யாக உள்­ளது. பணம் பட்­டு­வாடா ஆகாத 
கார­ணத்­தால் இத்­திட்­டத்­தின் மீதான நம்­பிக்கை குறித்த மிகப்­பெ­ரும் கேள்­விக்­கு­றியை பய­னா­ளி­கள் மத்­தி­யில் ஏற்­ப­டுத்தி உள்­ளது. வட்­டிக்கு வாங்­கிய பல­ரும் வட்டி கட்ட முடி­யாத நிலை­யில் பகு­தி­யா­கக் கட்­டப்­பட்ட வீடு­களை விலை பேசி வரு­கின்­ற­னர். பல இடங்­க­ளில் கந்து வட்­டிக்கு பணம் வாங்கி அவர்­க­ளி­டமே வீடு­களை இழக்­கும் நிலை­யும் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">பெயர் மட்­டுமே ‘மாற்­றம்’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டில் முன்­னாள் முதல்­வர் கலை­ஞ­ரால் தான் முதன் முத­லில் தமிழ்­நாட்­டில் வீடு கட்­டும் திட்­டம் 2010ம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அப்­போது இந்த திட்­டத்­திற்கு கலை­ஞர் வீடு வழங்­கும் திட்­டம் என்று பெயர் சூட்­டப்­பட்­டது சுருக்­க­மாக கேவி­விபி என்றுஅழைக்­கப்­பட்­டது. பின்­னர் அது ஜெய­ல­லிதா ஆட்சி காலத்­தில் முத­ல­மைச்­ச­ரின் பசுமை வீடு திட்­டம் என்று பெயர் மாற்­றம் செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">பின்­னர், மு.க.ஸ்டாலின் முதல்­வ­ராக பத­வி­யேற்ற பின்­னர் கலை­ஞ­ரின் கனவு இல்­லம் என்று பெயர் மாற்­றம் செய்து ஆண்­டுக்கு ஒரு லட்­சம் வீடு­கள் கட்­டிக் கொடுக்­கப்­ப­டும் என அறி­வித்து அரசு ஆணை வெளி­யிட்டு அதற்­கான நிதி­யை­யும் உரிய நேரத்­தில் ஒதுக்­கீடு செய்­தார். 2 ஆண்­டு­கள் வெற்­றி­க­ர­மாக செயல்­ப­டுத்­தப்­பட்ட இத்­திட்­டம் தற்­போது வெற்றி வீடு கட்­டும் திட்­டம் என்று அர­சால் பெயர் மாற்­றம் செய்­துள்­ளது. அதே நேரத்­தில் திட்­டத்­தின் பயன் மக்­க­ளுக்கு கிடைக்­காத நிலை உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">பய­னா­ளி­கள் எண்­ணிக்கை குறைப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">முந்­தைய திமுக ஆட்­சி­யில் ஒவ்­வொரு ஆண்­டும் குறைந்­தது ஒரு லட்­சம் பய­னா­ளி­களை தேர்வு செய்து அவர்­க­ளுக்கு வீடு கட்ட நிதி வழங்­கப்­பட்டு வந்­தது தற்­போ­தைய பட்­ஜெட்­டில் இத்­திட்­டத்­தின் பெயரை மாற்­றி­ய­வு­டன் ஒரு லட்­சம் பய­னா­ளி­கள் என்­பதை 70 ஆயி­ர­மாக குறைத்­துள்­ள­னர். அதா­வது 30 ஆயி­ரம் பய­னா­ளி­களை குறைத்­துள்­ள­னர். அதே சம­யம் வழங்­கப்­ப­டும் தொகையை அதி­க­பட்­சம் ரூ.5 லட்­ச­மாக உயர்த்தி உள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மேலும் இத்­திட்­டத்­தின் வழி­மு­றை­கள் குறித்து விரி­வான கையேடு வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இத­னால் அதி­கா­ரி­கள் இத்­திட்­டம் குறித்து பய­னா­ளி­க­ளுக்கு எந்­த­வித கருத்­தும் தெரி­விக்க முடி­யாத நிலை உள்­ளது. அத்­து­டன் ஏற்­க­னவே தெரிவு செய்­யப்­பட்ட பய­னா­ளி­க­ளுக்கு நிதி விடு­விப்பு குறித்த தெளி­வும் இன்­னும் வழங்­கப்­ப­ட­வில்லை. இத­னால் இத்­திட்­டம் கடந்த சில மாதங்­க­ளாக முடங்­கிய நிலை­யில் உள்­ளது என்று அதி­கா­ரி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>