<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="15/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,65,957,750" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 15 2026 03:37:13 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260815T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="15082026-CHN-03" position.sequence="03" ex-ref="15082026-CHN-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="73">‘திராவிட மாடல் பாதையே சரியானது!’</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="88">– ஆளுங்கட்சிக்கு குட்டு வைத்த நீதிமன்றம்</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup847167_03_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ரா­விட நாய­கர் -– கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யில் நடந்த ஐந்­தாண்டு கால திரா­விட மாடல் ஆட்சி என்­பது பல்­வேறு துறை­க­ளி­லும் தமிழ்­நாட்­டில் ஒரு புதிய அள­வு­கோலை (பெஞ்ச்­மார்க்) வகுத்­த­ளித்­துள்­ளது. ஒருங்­கி­ணைந்­த-­ – ப­ர­வ­லாக்­கப்­பட்ட- – அனை­வ­ருக்­கும் அனைத்­தும் என்ற இலட்­சி­யத்­து­டன் திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு போட்­டுள்ள பாதையை எவ­ரும் மீற முடி­யாது என்­பதை, தட்­டுத் தடு­மா­றும் த.வெ.க. அர­சின் போலி விளம்­ப­ரங்­கள் மெய்ப்­பிக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">நடி­கர் விஜய் தலை­மை­யி­லான த.வெ.க. ஆட்­சிக்கு வந்து 100 நாட்­கள் நிறை­வ­டை 
­கின்­றன. இனி­யும் தேனி­ல­வுக் காலம் என்று சொல்லி மக்­களை ஏமாற்ற முடி­யாது. தேனி­லவு-­ – பால்­நி­லவு எல்­லாம் அக­மும் புற­மு­மாக முடிந்­து­விட்­டது. அதை விஜய் தரப்­பி­ன­ரும் உணர்ந்­தி­ருப்­ப­தால்­தான், ஆட்­சிக்கு வந்து என்­னச் செய்­தீர்­கள் என்ற மக்­க­ளின் கேள்­விக்கு நேர­டி­யா­கப் பதில் அளிக்க முடி­யா­மல் திரா­விட மாடல் ஆட்­சி­யின் திட்­டங்­கள் மீது ஸ்டிக்­கர் ஒட்­டும் வேலை­யைத் தொடர்ந்து செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">100 நாள்­க­ளில் 1 இலட்­சம் கோடி தொழில் முத­லீடு என்­ப­து­தான் அவர்­க­ளின் லேட்­டஸ்ட் ஸ்டிக்­கர். 2021- –26 திரா­விட மாடல் ஆட்­சி­யில் 12இலட்­சத்து 54ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­புள்ள 1190 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் போடப்­பட்டு, அதன் மூல­மாக 36இலட்­சத்து 6 ஆயி­ரம் வேலை­வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­பட்­டன. புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­க­ளில் 60%க்கு மேல் செயல்­பாட்­டுக்கு வந்­தன. 2024ஆம் ஆண்டு நடை­பெற்ற உலக முத­லீட்­டா­ளர் மாநாட்­டில் ஒப்­பந்­தம் போட்ட வியட்­நாம் நாட்­டின் புகழ்­பெற்ற வின்ஃ­பாஸ்ட் நிறு­வ­னம் ஒன்­றரை ஆண்­டுக்­குள்­ளா­கத் தூத்­துக்­குடி மாவட்­டத்­தில் தனது உற்­பத்­தி­யைத் தொடங்­கி­ய­து­டன், அதே மாவட்­டத்­தைச் சேர்ந்த 200 பேருக்கு வேலை­வாய்ப்­பை­யும் அளித்­தது. இத்­த­கைய சாதனை முயற்­சி­களை வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்­றி­ ய­து­தான் திரா­விட மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">உல­கின் முன்­னணி நிறு­வ­னங்­கள் பல­வும் திரா­விட மாடல் ஆட்­சி­யில் தமிழ்­நாட்­டில் 
முத­லீடு செய்­வ­தற்கு ஆர்­வம் காட்­டின. தி.மு.க.வின் 5 ஆண்­டு­கால ஆட்­சி­யில் முத­லீடு­களை ஈர்ப்­ப­தில் இந்­தி­யா­வில் 3வது இடத்­தில் இருந்த தமிழ்­நாடு, த.வெ.க ஆட்சி அமைந்­த­பி­றகு 16வது இடத்­திற்­குப் பின்­தங்­கி­விட்­டது. நிர்­வா­கத் திற­னற்ற முத­ல­மைச்­சர் மற்­றும் அமைச்­சர்­க­ளின் கேலிக்­கூத்­தான செயல்­பா­டு­கள், ரீல்ஸ்­கள், மோச­மான அணு­கு­மு­றை­கள் – இவை­தான் இந்த வீழ்ச்­சிக்­குக் கார­ண­மா­கும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">. இதனை மறைப்­ப­தற்­காக திடு­திப்­பென ஒரு முத­லீட்­டா­ளர் மாநாட்டை, ஆகஸ்ட் 13 அன்று ஏற்­பாடு செய்து, அதில் 1 இலட்­சம் கோடி முத­லீ­டு­களை ஈர்த்­த­தாக விஜய் அரசு விளம்­ப­ரத் தம்­பட்­டம் அடித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">உண்­மை­யில், த.வெ.க ஆட்­சி­யால் ஈர்க்­கப்­பட்ட முத­லீ­டு­கள் என்­பவை வெறும் 30% கூட இல்லை. போடப்­பட்ட புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் முத­லீ­டாக மாறு­மா என்­ப­தற்­கும் உத்­தர­வா­த­மில்லை.  70% முத­லீ­டு­கள் கடந்த திரா­விட மாடல் ஆட்­சி­யில் போடப்­பட்ட வலு­வான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் வழியே ஈர்க்­கப்­பட்­ட­வை­தான் என்­பதை ஆதா­ரத்­து­டன் அம்­ப­லப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார், கழக ஆட்­சி­யில் தொழில்­துறை அமைச்­ச­ராக இருந்த அன்­புச் சகோ­த­ரர் முனை­வர் டி.ஆர்.பி. ராஜா.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மிகத் தெளி­வான புள்­ளி­வி­வ­ரங்­கள் வெளிப்­பட்­டுள்­ளன. இதன் மூலம், திரா­விட மாடல் ஆட்­சி­யில் போடப்­பட்ட பாதை­யில்­தான் தொழில்­துறை முத­லீ­டு­களை த.வெ.க. அரசு ஈர்க்­கி­றது என்­பது வெட்ட வெளிச்­ச­மாகி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தி.மு.க. ஆட்சி மீது பழி­சு­மத்தி பெயர் வாங்­க­லாம் என்­று­தான் த.வெ.க அரசு திட்­ட­மிட்­டது. அதைச் செயல்­ப­டுத்த, அற­நி­லை­யத்­து­றை­யைப் பயன்­ப­டுத்த நினைத்­தது. கோயில் சொத்­து­கள் கோயி­லுக்கு மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்று த.வெ.க. வின் அற­நி­லை­யத்­துறை அமைச்­ச­ரான 100 கோடி பழனி கோயில் நில ஊழல் புகழ்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">‘முறுக்கு’ ரமேஷ்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தெரி­வித்­தார். அதா­வது,  திரா­விட மாடல் ஆட்­சி­யில் அற­நி­லை­யத்­துறை சார்­பில் அரசு கலை-­அ­றி­வி­யல் கல்­லூ­ரி­கள் தொடங்­கப்­பட்­ட­தற்கு எதிர்ப்­புத் தெரி­விக்­கும் வகை­யில் த.வெ.க அமைச்­ச­ரின் கருத்து வெளிப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அற­நி­லை­யத்­துறை சார்­பில் கல்­லூ­ரி­கள் தொடங்­கு­வது என்­பதுஇப்­போது த.வெ.க கூட்­டணி அமைச்­ச­ர­வை­யில் பங்­கேற்­றுள்ள காங்­கி­ரஸ், தமிழ்­நாட்­டில் ஆட்சி செய்த காலத்­தி­லி­ருந்தே நடை­மு­றை­யில் 
உள்­ளது. குற்­றா­லம் பரா­சக்தி மக­ளிர் கல்­லூரி, பழ­னி­யாண்­ட­வர் கலைக் கல்­லூரி ஆகி­யவை பக்­த­வத்­ச­லம் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது தொடங்­கப்­பட்­டவை. அ.தி.மு.க ஆட்­சிக்­கா­லத்­தி­லும் அற­நி­லை­யத்­துறை சார்­பில் கல்­லூ­ரி­கள் தொடங்­கப்­பட்­டன. ஏற்­க­னவே தொடங்­கப்­பட்ட கல்­லூ­ரி­கள் விரி­வாக்­கம் செய்­யப்­பட்­டன. எனி­னும், பா.ஜ.க. பாணி­யில், அதன் ‘பி டீமான’ த.வெ.க.  அரசு திரா­விட மாடல் ஆட்­சியை மட்­டுமே குறி­வைத்­துப் பழி சுமத்­தி­யது. அற­நி­லை­யத்­துறை சார்­பில் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த கல்­லூ­ரி­க­ளுக்கு எதி­ரா­கச் செயல்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­நி­லை­யில்,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">அற­நி­லை­யத்­துறை சார்­பில் கல்­லூ­ரி­கள் தொடங்­கப்­ப­டு­வதை எதிர்த்து சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் தொட­ரப்­பட்ட வழக்கை விசா­ரித்த, நீதி­ப­தி­கள் ஜெயச்­சந்­தி­ரன்-­ம­னோ­க­ரன் அடங்­கிய அமர்வு, “கோயில் நிதி­யைக் கல்­விக்­கா­கப் பயன்­ப­டுத்­த­லாம்” என உத்­த­ர­விட்­டது. திரா­விட இயக்­கத்­தின் முதல் அர­சி­யல் அமைப்­பான நீதிக்­கட்சி ஆட்­சி­யில்  கொண்டு வரப்­பட்ட திருக்­கோ­யி­ல்கள் தொடர்­பான அற­நி­லை­யச் சட்­டத்­தின் நோக்­கத்தைஉயர்­நீ­தி­மன்­றம் உறுதி செய்­துள்­ளது. இதன் மூலம், திரா­விட மாடல் பய­ணிக்­கும் பாதை சரி­யா­னது என்­பதை த.வெ.க அர­சுக்கு குட்டு வைத்து உணர்த்­தி­யுள்­ளது நீதி­மன்­றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மாண­வர்­க­ளின் மருத்­து­வக் கன­வைச் சிதைக்­கின்ற நீட் தேர்­வைத் தொடக்­கம் முதலே எதிர்த்து வரு­கின்ற இயக்­கம், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். நேர­டிக் களத்­தி­லும், சட்­டப் போராட்­டங்­கள் வழி­யா­க­வும் ‘நீட்’ எதிர்ப்பு நட­வ­டிக்­கை­க­ளைத் தி.மு.க தொடர்ந்து மேற்­கொண்டு வரு­கி­றது. ஆட்சி செய்­யும் வாய்ப்பை கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்­குத் தமிழ்­நாட்டு மக்­கள் வழங்­கி­ய­போது, சட்­ட­மன்­றத்­தில் அனைத்­துக் கட்­சி­க­ளின் ஆத­ர­வு­டன், நீட் தேர்­வி­லி­ருந்து தமிழ்­நாட்­டிற்கு விலக்­குக் கோரும் சட்ட முன்­வ­ரைவை நிறை­வேற்றி, ஆளு­ந­ருக்கு அனுப்பி வைத்­தார். ஆனா­லும், ஒன்­றிய வஞ்­சக பா.ஜ.க. அரசு தமிழ்­நாட்டு மக்­கள் பிர­தி­நி­தி­க­ளின் ஒட்­டு­மொத்த உணர்­வைப் புறக்­க­ணித்து, தமிழ் மாண­வர்­க­ளுக்­குப் பெரும் துரோ­கத்தை இழைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­தத் துரோ­கத்­தைக் கண்­டித்து தி.மு.க. பல போராட்­டங்­களை நடத்­தி­யது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">துணை முத­ல­மைச்­சர் பொறுப்பை வகித்த கழ­கத்­தின் இளம்­த­லை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள், தன் பத­விப் பற்­றித் துளி­யும் கவ­லைப்­ப­டா­மல் உண்­ணா­வி­ர­தப் போராட்­டத்­தில் பங்­கேற்று, ஆளு­ந­ரின் மக்­கள் விரோ­தச் செய­லைக் கண்­டித்து உரை­யாற்­றி­னார். இது­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தி.மு.க.வின் தாய்க்­க­ழ­க­மான திரா­வி­டர் கழ­கம், நீட் தேர்­வைத் தொடர்ந்து எதிர்த்­துப் பரப்­புரை செய்து வரு­கி­றது. திரா­வி­டர் கழ­கத் தலை­வர் ஆசி­ரி­யர் அய்யா கி.வீர­மணி அவர்­கள் ‘திரா­விட மாடல்’ ஆட்­சி­யில் தமிழ்­நாடு தழு­விய நீட் எதிர்ப்­புப் பரப்­பு­ரைப் பய­ணத்தை மேற்­கொண்டு, மக்­க­ளி­டம் விழிப்­பு­ணர் 
­வூட்­டி­னார். அந்­தப் பய­ணத்­தின் நிறைவு நிகழ்­வில் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ராக இருந்த முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் பங்­கேற்று,  தந்தை பெரி­யா­ரைப் போல வயது பற்­றிக் கவ­லைப்­ப­டா­மல் பொதுத் தொண்­டாற்றி வரும் ஆசி­ரி­யன் அரும்­பணியை வாழ்த்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தந்தை பெரி­யாரை தனது கொள்­கைத் தலை­வர் என்று லேபிள் ஒட்­டி­யி­ருக்­கும் 
த.வெ.க.வின் ஆட்­சி­யில், நீட் தேர்­வுக்கு 
எதி­ராக தமிழ்­நாடு தழு­விய அள­வில் திரா­வி­டர் கழ­கம் மேற்­கொள்­ள­வி­ருந்த வாக­னப் பரப்­பு­ரைக்கு, விஜய் அரசு கடைசி நேரத்­தில் தடை போட்­ட­து­டன், கொள்­கைத் தலை­வ­ராக பெரி­யார் பெய­ரி­லான திட­லில் போலீஸ் படை­யைக் குவித்து,  தன்­னைப் ‘பா.ஜ.க.வின் பி டீம்’ என்று நிரூ­பித்­தி­ருக்­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தடைக்கு எதி­ராக திரா­வி­டர் கழ­கத்­தின் சார்­பில் அதன் துணைத்­த­லை­வர் கவி­ஞர் கலி.பூங்­குன்­றன் அவர்­கள் சார்­பில் சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் தொட­ரப்­பட்ட வழக்கை விசா­ரித்த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">நீதி­பதி லட்­சு­மி­நா­ரா­ய­ணன் அவர்­கள், “கருத்­து­ரிமை, பேச்­சு­ரிமை போல போரா­டு­வ­தும் அடிப்­படை உரிமை. நீட் தேர்­வுக்கு எதி­ராக இரு­சக்­கர வாக­னப் பேர­ணியை முடக்­கு­வது ஏன்? ஹெலி­காப்­ட­ரில் சென்று போராட முடி­யுமா?” என்று கேட்­ட­து­டன், காவல்­துறை உரிய பதி­ல­ளிக்க உத்­த­ர­விட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நீட் தேர்வு எதிர்ப்பு என்­பது தமிழ்­நாட்­டின் ஒட்­டு­மொத்த உணர்வு. நீட் தேர்வை ஆத­ரிப்­பது பா.ஜ.க-.ஆர்.எஸ்.எஸ். மற்­றும் அதன் சங்­கிக் கூட்­டமே. அந்­தக் கூட்­டத்­தில் ஒரு­வர்­தான் என்று த.வெ.க தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆர்.எஸ்.எஸ். பின்­னணி கொண்ட நிர்­மல்­கு­மார், அருண்­ராஜ் போன்­ற­வர்­கள் த.வெ.க.வில் சேர்ந்­த­தும், அவர்­கள் அமைச்­சர்­க­ளா­கி­யி­ருப்­ப­தும் எதேச்­சை­யா­னது அல்ல. இது திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­ப­டும் செயல்­மு­றை­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">பெரி­யார், அண்ணா என்று த.வெ.க.வினர் உதட்­ட­ள­வில் பேசி­னா­லும் அவர்­கள் ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. செயல்­திட்­டங்­களை நிறை­வேற்று­ வ­தற்­கா­கப் போட்­டி­ருக்­கும் வேடம்­தான் அது என்­பது அற­நி­லை­யத்­துறை சார்­பில் கட்­டப்­ப­டும் கல்­லூ­ரி­க­ளுக்கு எதி­ரான நிலைப்­பா­டும், நீட் தேர்வை எதிர்க்­கும் திரா­வி­டர் கழ­கத்­தின் பரப்­புரை மற்­றும் இளம் தலை­மு­றை­யின் போராட்­டம் ஆகி­ய­வற்றை போலீஸ் படை­யைக் கொண்டு முடக்­கும் நட­வ­டிக்­கை­கள் மூல­மா­க­வும் வெட்ட வெளிச்­ச­மா­கி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆர்.எஸ்.,எஸ்-பா.ஜ.க. நோக்­கங்­களை நிறை­வேற்­றும் பசுத்­தோல் போர்த்­திய புலி­தான் விஜய் 
நடத்­தும் த.வெ.க. எனும் நாட­கக் கம்­பெனி. அந்­தப் புலிக்­குப் பல்­லும் பிடுங்­கப்­பட்டு விட்­டது. நக­மும் 
வெட்­டப்­பட்­டு­விட்­டது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>