<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="15/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="34,359,493,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 15 2026 03:49:43 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260815T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="15082026-TRY-05" position.sequence="05" ex-ref="15082026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">உணவுப் பாதுகாப்பு – ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">கூட்டு முயற்சி அவசியம் குறித்து ஒன்றிய அரசு கருத்தில் கொண்டுள்ளதா?  </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">மாநிலங்களவையில் - – இரா.கிரிராஜன் கேள்வி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup822242_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Girirajan_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="GovaiPhoto1_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">புது­டெல்லி, ஆக.15–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">மழைக்­கால கூட்­டத் தொட­ரில் கலந்­து­கொண்­டுள்ள திமுக எம்.பி. இரா.கிரி­ரா­ஜன், ஒன்­றிய அர­சின் வேளாண்மை மற்­றும் விவ­சா­யி­கள் நலத்­துறை அமைச்­ச­ரி­டம், பயிர் ஊட்­டச்­சத்­தில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றங்­க­ளை­யும், நிலை­யான வேளாண்­மை­யில் அதன் முக்­கி­யத்­து­வத்­தை­யும் ஒன்­றிய அரசு அறிந்­துள்­ளதா? பயிர் உற்­பத்­தித்­தி­றனை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான புது­மை­யான நடை­மு­றை­கள் மற்­றும் தொழில்­நுட்ப முன்­னேற்­றங்­கள் குறித்­தும், உண­வுப் பாது­காப்பு மற்­றும் ஊட்­டச்­சத்­துத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­வ­தற்­கான கூட்டு முயற்­சி­க­ளின் அவ­சி­யம் குறித்­தும் துறை­சார் வல்­லு­நர்­கள், மாநில அர­சு­கள், விவ­சா­யி ­கள் கூட்­ட­மைப்­பு­க­ளு­டன் ஒன்­றிய அரசு கலந்­து­ரை­யா­டி­யுள்­ளதா என்ற கேள்­வி­களை எழுப்­பி­யி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இவற்­றுக்கு பதி­ல­ளித்­துள்ள ஒன்­றிய அர­சின் துறை வேளாண்மை மற்­றும் விவ­சா­யி­ கள் நலத்­துறை அமைச்­சர் சிவ்­ராஜ் சிங் சௌஹான், மத்­திய அரசு பயிர் ஊட்­டச்­சத்­தில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றத்­தை­யும், நிலை­யான வேளாண்­மை­யில் அதன் முக்­கி­யத்­து­வத்­தை­யும் ஆராய்ந்­துள்­ள­தாக தெரி­வித்­துள்­ளார். அமில மண்­ணில் சுண்­ணாம்பு இடு­தல், சோடி­யம் நிறைந்த மண்­ணில் ஜிப்­சம் இடு­தல், குறைந்த மண் கரிம கார்­பன் உள்ள மண்­ணில் கரி­மப் பொருட்­களை இடு­தல் போன்ற, பயிர் ஊட்­டச்­சத்தை மேம்­ப­டுத்­தும் பல மண் ஆரோக்­கிய மேம்­பாட்டு நடை­மு­றை­களை இந்­திய வேளாண் ஆரா­யச்சி கவுன்­சில் (ICAR) பரிந்­து­ரைத்­துள்­ளது என்­றும் அவ­ரது பதி­லில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இயற்கை வேளாண்மை மற்­றும் கரிம வேளாண்மை போன்ற இயற்கை சார்ந்த தீர்­வு­கள் உரு­வாக்­கப்­பட்டுசெயல்­வி­ளக்­கம் அளிக்­கப்­பட்­டுள்­ளன; களத்­தி­லேயே துல்­லி­ய­மான உரப் பரிந்­து­ரைக்­கான e-FARMS போன்ற, உரப் பரிந்­து­ரைக்­கான அலை­பேசி அடிப்­ப­டை­யி­லான செயலி உரு­வாக்­கப்­பட்டு, அதற்­கும் செயல்­வி­ளக்­கம் அளிக்­கப்­பட்­டுள்­ளது; ICAR, வேளாண் மண்­ணின் நுண்­ணூட்­டச்­சத்து மதிப்­பீடு மற்­றும் வரை­ப­ட­மாக்­கலை மேற்­கொண்டு, மறை­மு­கப் பசி­யைப் போக்­க­வும், பயிர் உற்­பத்­தித்­தி­றன் மற்­றும் ஊட்­டச்­சத்­துத் தரத்தை மேம்­ப­டுத்­த­வும், நிலை­யான மற்­றும் கால­நிலை மாற்­றத்­தைத் தாங்­கக்­கூ­டிய வேளாண் உற்­பத்­தியை ஆத­ரிக்­க­வும், பயிர் மற்­றும் பிராந்­தி­யத்­தி ற்­கேற்ற நுண்­ணூட்­டச்­சத்து பரிந்­து­ரை­களை உரு­வாக்­கி­யுள்­ளது என திமுக எம்.பி. கிரி­ரா­ஜ­னின் கேள்­விக்கு ஒன்­றிய அரசு பதி­ல­ளித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">மண் பரி­சோ­தனை பயிர் விளைவு (STCR) அடிப்­ப­டை­யி­லான பொது உரப் பரிந்­து­ரை­க­ளின் (GFR) ஆத­ர­வு­டன், இர­சா­யன உரங்­களை அங்­கக உரங்­கள், பயிர்க் கழி­வு­கள், பசுந்­தாள் உரங்­கள் மற்­றும் உயிர் உரங்­க­ளு­டன் இணைக்­கும் ஒருங்­கி­ணைந்த ஊட்­டச்­சத்து மேலாண்மை பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது என்­றும், உரப் பயன்­பாட்டை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக, குறிப்­பிட்ட இடத்­திற்­கான ஊட்­டச்­சத்து மேலாண்மை, உணரி மற்­றும் முடி­வெ­டுக்­கும் ஆத­ரவு அடிப்­ப­டை­யி­லான உரப் பரிந்­து­ரை­கள், 14 வேளாண்-­சூ­ழ­லி­யல் மண்­ட­லங்­க­ளில் உள்ள 50 பயிர்­க­ளுக்­கான சொட்­டு­நீர் பாசனஉர அட்­ட­வ­ணை­கள், மற்­றும் நீர் வளர்ப்பு மற்­றும் பாது­காக்­கப்­பட்ட சாகு­ப­டிக்­கான ஊட்­டச்­சத்து மேலாண்மை நெறி­மு­றை­கள் உள்­ளிட்ட துல்­லி­ய­மான ஊட்­டச்­சத்து மேலாண்மை தொழில்­நுட்­பங்­க­ளை­யும் ICAR உரு­வாக்­கி­யுள்­ளது என்­றும், கூடு­த­லாக, மண் ஆரோக்­கி­யம், தாவர ஊட்­டச்­சத்து மற்­றும் நிலை­யான வேளாண்­மையை மேம்­ப­டுத்த உத­வு­கின்­றன என்­றும் பதி­ல­ளிக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">பயிர் உற்­பத்­தித்­தி­றனை மேம்­ப­டுத்­து­வ­தற்­கும், உண­வுப் பாது­காப்பு மற்­றும் ஊட்­டச்­சத்­துத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­வ­தற்­கும் உள்ள புது­மை­யான நடை­மு­றை­கள் மற்­றும் தொழில்­நுட்ப முன்­னேற்­றங்­கள் குறித்து, விஞ்­ஞா­னி­கள், துறை­சார் வல்­லு­நர்­கள், மாநில வேளாண்­மைத் துறை அதி­கா­ரி­கள், விவ­சா­யி­கள் மற்­றும் பிற பங்­கு­தா­ரர்­களை உள்­ள­டக்­கிய பல அடுக்­குக் கலந்­து­ரை­யா­டல்­களை  ஒன்­றிய அர­சாங்­கம் நடத்­து­வ­தா­க­வும் அமைச்­சர் பதி­ல­ளித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இந்­திய வேளாண் ஆராய்ச்­சிக் கழ­கத்­தின் (ICAR) கீழ் இயங்­கும் தேசிய வேளாண் ஆராய்ச்சி அமைப்பு (NARS), நாடு முழு­வ­தும் உள்ள தனது 73 ICAR நிறு­வ­னங்­கள் மற்­றும் 52 மத்­திய/மாநில வேளாண் பல்­க­லைக்­க­ழ­கங்­கள் மூலம் 300 பயிர்­க­ளில் மேம்­ப­டுத்­தப்­பட்ட இர­கங்­கள், புது­மை­யான வேளாண் நடை­மு­றை­கள் மற்­றும் மேம்­பட்ட தொழில்­நுட்­பங்­களை உரு­வாக்­கு­வ­தில் ஈடு­பட்­டுள்­ளது. இவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட தொழில்­நுட்­பங்­கள், ஒவ்­வொரு மாநி­லத்­தி­லும் மண்­டல வாரி­யாக ICAR நிறு­வ­னங்­கள், மாநில வேளாண் பல்­க­லைக்­க­ழ­கங்­கள் மற்­றும் மாநில வேளாண் துறை ஆகி­ய­வற்­றுக்கு இடை­யே­யான கலந்­து­ரை­யா­டல்­க­ளில் விவா­திக்­கப்­பட்டு, வேளாண் துறை­யால் நடத்­தப்­ப­டும் மாநில அள­வி­லான தக­வ­மைப்­புச் சோத­னை­க­ளில் கிடைக்­கும் செயல்­தி­ற­னின் அடிப்­ப­டை­யில் அந்­தந்த மண்­ட­லத்­தின் நடை­மு­றைத் தொகுப்­பில் சேர்க்­கப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">ஒவ்­வொரு ஆண்­டும் ராபி மற்­றும் காரிஃப் பரு­வங்­க­ளுக்கு முன்பு, தொழில்­நுட்ப இடை­வெ­ளி­கள் குறித்த பின்­னூட்­டங்­க­ளின் அடிப்­ப­டை­யில் ICAR மற்­றும் வேளாண்மை மற்­றும் உழ­வர் நலத்­துறை ஆகி­யவை கலந்­து­ரை­யா­டல் கூட்­டங்­களை விரி­வாக நடத்­து­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">ஒவ்­வொரு பயிர் பரு­வத்­திற்­கும் முன்பு, வேளாண்மை மற்­றும் உழ­வர் நல அமைச்­ச­கத்­தால் தேசிய அள­வி­லான வேளாண் மாநாடு மற்­றும் ராபி/காரிஃப் பிரச்­சா­ரங்­கள் ஏற்­பாடு செய்­யப்­ப­டு­கின்­றன என்­றும், அதற்கு துறை­யின் அமைச்­சர் தலைமை தாங்­கு­கி­றார் என்­றும், அதில், மாநி­லங்­க­ளின் வேளாண்மை அமைச்­சர்­கள் மற்­றும் மாநில வேளாண்­மைத் துறை­யின் செய­லா­ளர் நிலை அதி­கா­ரி­கள் கலந்­து­கொள்­கின்­ற­னர் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது. 11 வேளாண் தொழில்­நுட்­பப் பயன்­பாட்டு ஆராய்ச்சி நிறு­வ­னங்­கள் (ATARI), மாநில அர­சு­டன் இணைந்து தனது 731 வேளாண் அறி­வி­யல் மையங்­கள் (KVKs) மூலம் விவ­சா­யி­க­ளுக்­குப் பல்­வேறு தொழில்­நுட்­பங்­க­ளைப் பரப்­பு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தொழில்­நுட்­பங்­கள் மற்­றும் குறிப்­பிட்ட பிரச்­சி­னை­கள் குறித்து விவ­சா­யி­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக, விக்­சித் கிருஷி சங்­கல்ப் அபி­யான் மற்­றும் கேத் பச்­சாவ் அபி­யான் போன்ற தேவை அடிப்­ப­டை­யி­லான திட்­டங்­க­ளும் நடத்­தப்­ப­டு­கின்­றன என பதி­லில் கூறப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கடந்த 2014–2025–ஆம் ஆண்­டு­க­ளில், 1,574 தானி­யங்­கள், 444 எண்­ணெய் வித்­துக்­கள், 473 பயறு வகை­கள், 207 தீவ­னப் பயிர்­கள், 408 நார் பயிர்­கள், 96 கரும்பு மற்­றும் 34 இதர பயிர்­கள் ஆகி­யவை என மொத்­தம் 3,236 வயல் பயிர் இர­கங்­கள் வெளி­யி­டப்­பட்டு அறி­விக்­கப்­பட்­டுள்­ளன என்­றும், இவற்­றில் 2,995 இர­கங்­கள் ஒன்று அல்­லது அதற்கு மேற்­பட்ட உயி­ரி­யல்/ உயி­ரற்ற கார­ணி­க­ளால் ஏற்­ப­டும் பாதிப்­பு­க­ளைத் தாங்­கும் திறன் கொண்­டவை என்­றும், 587 இர­கங்­கள் வறட்சி, வெப்­பம், வெள்­ளம்/ நீரில் மூழ்­கு­தல், உப்­புத்­தன்மை/ காரத்­தன்மைமற்­றும் குளிர்/ பனி போன்ற கடு­மை­யான வானிலை நிலை­க­ளைத் தாங்­கும் திறன் கொண்­டவை என்­றும் அமைச்­சர் விளக்­கம் அளித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கடந்த 11 ஆண்­டு­க­ளாக, அர­சாங்­கம் ICAR மூல­மாக ஊட்­டச்­சத்து நிறைந்த பயிர்­க­ளை­யும் இர­கங்­க­ளை­யும் உரு­வாக்­கு­வ­தில் மிகுந்த கவ­னம் செலுத்தி வரு­வ­தா­க­வும், ஊட்­டச்­சத்­துக் குறை­பாடு எனும் சவாலை எதிர்­கொள்­ளும் வகை­யில், உணவு தானி­யங்­க­ளின் ஊட்­டச்­சத்­துத் தரத்தை மேம்­ப­டுத்­திய 204 உயிர்ச்­சத்து செறி­வூட்­டப்­பட்ட வயல் மற்­றும் தோட்­டக்­க­லைப் பயிர் இர­கங்­களை ICAR உரு­வாக்­கி­யுள்­ள­தா­க­வும் திமுக எம்.பி. கிரி­ரா­ஜ­னின் கேள்­விக்கு ஒன்­றிய அரசு பதி­ல­ளித்­துள்­ளது.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="0" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கோவை - சத்­தி­ய­மங்­க­லம் சாலை­யில் உள்ள சர­வ­ணம்­பட்டி போக்­கு­வ­ரத்து சந்­திப்­பில் அடிக்­கடி ஏற்­ப­டும் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைத் தீர்க்க மேம்­பா­லம் அமைக்க வேண்­டும் என்ற பொது மக்­க­ளின் கோரிக்­கையை ஏற்று சாலைப் போக்­கு­வ­ரத்து மற்­றும் நெடுஞ்­சா­லை­கள் அமைச்­சர் நிதின் கட்­காயி­டம் கோவை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முனை­வர் கண­பதி ப.ராஜ்­கு­மார் கோரிக்கை மனு­வினை வழங்­கி­னார்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>