<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="17/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,607,1492" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Aug 17 2026 03:33:31 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260817T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="17082026-CBE-06" position.sequence="06" ex-ref="17082026-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="78">தலைவர் கலைஞரின், “வீர அபிமன்யு’’ மாமேதை முரசொலி மாறன்  பெரும்புகழ் ஓங்குக!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup848319_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="MurasoliMaran_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நமது திரா­விட இயக்­க­மா­னது, தென்­னிந்­திய நல உரி­மைச் சங்­கம், நீதிக்­கட்சி, திரா­வி­டர் கழ­கம், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், என பல்­வேறு அமைப்­பு­க­ளைக் கொண்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனி­னும் இவற்­றின் இலட்­சி­ய­மும், 
நோக்­க­மும் ஒன்றே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொன்று தொட்ட அதன் வளர்ச்­சி­யில் தமிழ் மொழி காக்­கப் போராடி, தமி­ழர் வாழ்வு மேம்­புற பணி­யாற்­றி­வ­ரும்  இந்­நாள் வரை, எண்­ணற்ற அறி­ஞர்­கள், மேதை­கள், பகுத்­த­றி­வா­ளர்­கள், சுய­ம­ரி­யாதை தீரர்­கள், தியா­கி­கள், படைப்­பா­ளர்­கள், பத்­தி­ரிக்­கை­யா­ளர்­கள், பேச்­சா­ளர்­கள், மற்­றும் கலை - இலக்­கி­யம் என ஒவ்­வொன்­றி­லும் தனித்­த­னியே முத்­திரை பதித்த பல வித்­த­கர்­களை நாம் 
அறி­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர்­க­ளுள் “ ஏன் வேண்­டும் இன்ப திரா­வி­டம்? “ என விளக்கி, திரா­விட இயக்க வர­லாறு படைத்து, “ மாறன் என்­றால் சாமான்­யமா?” எனத் தென்­னாட்டு காந்தி பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளால் வியந்து பாராட்­டப்­பட்டு, படைப்­பா­ளி­யா­க­வும், பெரும் படிப்­பா­ளி­யா­க­வும் திகழ்ந்த அறி­வு­ல­க­மேதை முர­சொலி மாறன் அவர்­க­ளின் 93 வது பிறந்­த­நாள் இன்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தி­யா­வின் தென்­கோ­டி­யில் திருக்­கு­வளை கிரா­மத்­தில் பிறந்து, திக்­கெட்­டும் புகழ் பெற்று தோகா மாநாட்­டில் இந்­தி­யா­வின் குர­லாய், கொள்­கை­யாய் நீங்­கள் பேசப்­போ­வது தான் விளங்­கப் போகி­றது என்று அந்­நா­ளைய பிர­த­மர் ஐ. கே. குஜ்­ரால் ( இந்­தர் குமார் குஜ்­ரால் ) அவர்­க­ளால் உற்­சா­கப்­ப­டுத்­தப்­பட்டு, “ நான் பேச எழும் முன் மன­தில் ஆத்­தா­வை­யும், தாத்­தா­வை­யும் வேண்­டிக் கொண்­டேன். மாநாட்­டில் மற்ற உரை­க­ளை­விட எனது உரையே மிகச் சிறப்­பாக அமைந்­த­தென அனை­வ­ரும் பாராட்­டி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்­ன­வி­ருந்­தா­லும் நான் உங்­க­ளது வளர்ப்பு, வார்ப்பு தானே!” எனத் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளுக்கு கடி­த­மெ­ழு­திய கண்­ணி­ய­மிக்க கலை­ஞ­ரின் மாண­வர் மாமேதை மாறன் அவர்­கள் பிறந்­த­நாள் இந்த ஜூலை 17.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1958 லேயே தனது 24 வது வய­தில் “ஏன் வேண்­டும் இன்ப திரா­வி­டம்?” எனும் ஆராய்ச்சி நூல் இயற்றி, பல வர­லாற்று விளக்­கங்­க­ளைச் சொல்லி, உல­கில் எத்­தனை நாடு­கள், மொழி­வா­ரி­யாக,  இன­வா­ரி­யாக, காலனி ஆதிக்­கத்­தி­னின்று விடு­த­லை­ய­டைந்து, சுதந்­திர கீதம் இசைத்­தன என்­ப­தனை பட்­டி­ய­லிட்டு  அந்­நூ­லில் விளக்கி, ஆத­ராங்­க­ளோடு, ஆணித்­த­ர­மா­கச் சொல்லி, உலக வர­லாற்று ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஒப்­பான மதி­நுட்­பம் வாய்ந்­த­வா­ராக ஐயா மாறன் அவர்­கள் திகழ்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மர­க­தம், அன்­னை­யின் ஆணை, குல­தெய்­வம், எம். ஜி ஆர்  - ஜெய­ல­லிதா நடித்த எங்­கள் தங்­கம் போன்ற திரைப்­ப­டங்­க­ளுக்கு கதை, வச­ன­மெ­ழுதி, தயா­ரித்து, திரைத்­து­றை­யில் இளம் வய­தி­லேயே முத்­திரை பதித்­த­வர் முர­சொலி மாறன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1965 மொழிப்­போ­ரில் இந்­திய பாது­காப்பு சட்­டத்­தின் படி கைது செய்­யப்­பட்டு பாளைத் தனி­மைச் சிறை­யில் அடைக்­கப்­பட்­டி­ருந்த ஒரே தலை­வர், நமது உயிர்த்­த­லை­வர் கலை­ஞர் அவர்­கள் சிறை­யில் அடை­பட்­டி­ருந்த ஒவ்­வொரு நாளை­யும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“ கலை­ஞர் சிறை­யில் இன்று 50 ஆவது நாள்!” என ஒவ்­வொரு நாளும் பெட்டி செய்­தி­யாக முர­சொ­லி­யில் வெளி­யிட்டு, உல­கிற்கு தெரி­வித்த  உத்­தி­ய­றிந்த  பத்­தி­ரிக்­கை­யா­ளர் நமது ஐயா மாறன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1967இல் பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் வில­கிக்­கொண்ட தென் சென்னை நாடா­ளு­மன்­றத் தொகுதி வேட்­பா­ள­ராக அண்ணா அவர்­க­ளால் அறி­விக்­கப்­பட்டு, மூத­றி­ஞர் ராஜாஜி, காயி­தே­மில்­லத் போன்ற பெரும் தலை­வர்­க­ளால் முன்­மொ­ழிந்து, வழி­மொ­ழி­யப்­பட்டு, வெற்றி பெற்று, தனது வாழ்­நா­ளின் இறு­தி­வரை நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக, மிகச் சிறந்த நாடா­ளு­மன்­ற­வா­தி­யாக திகழ்ந்­த­வர் அறி­வு­ல­க­மேதை ஐயா மாறன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1971 இல் சட்­ட­மன்ற - நாடா­ளு­மன்ற தேர்­த­லின் போது, முர­சொலி மாறன் அவர்­கள் தென் சென்­னை­யின் வேட்­பா­ள­ராக தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளால் அறி­விக்­கப்­பட்­டார். பின்­னர் அத்­தொ­குதி காங்­கி­ரஸ் கட்­சிக்கு கேரள ஆளு­ந­ராக பின்­னா­ளில் இருந்த பா. ராமச்­சந்­தி­ர­னுக்­கென வற்­பு­றுத்­தப்­பட்­ட­போது, சிறி­தும் வருந்­தா­மல், கூட்­ட­ணிக்கு விட்­டுக் கொடுத்து, தோழ­மை­யின் மாண்பைசிறக்­கச் செய்­த­வர்  முர­சொலி மாறன் அவர்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1976 இல் நெருக்­கடி நிலை­யின் போது, சிறைக் கொட்­ட­டி­யில் பெரும் தாக்­கு­த­லுக்­குள்­ளாகி, அதன் பாதிப்பு கடைசி காலம்­வரை அவரை வருத்­தி­யது என சொல்­லு­ம­ள­விற்கு சோத­னை­களை ஏற்று, வேத­னை­களை தாங்­கிய தலை­வர் கலை­ஞ­ரின் “ வீர அபி­மன்யு!”  மாமேதை மாறன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1989இல் ஜன­நா­ய­கத்­தின் பாது­கா­வ­லர் வி. பி. சிங் கின் தலை­மை­யில் அமைந்த தேசிய முன்­னணி அமைச்­ச­ர­வை­யில் திமு­க­வின் முதல் மத்­திய  அமைச்­ச­ராய் - நகர்ப்­புற வளர்ச்­சித் துறை­யின் கேபி­னட் அமைச்­ச­ராக பொறுப்­பேற்­றுக் கொண்ட கூட்­டாட்சி தத்­து­வத்­தின் வெற்­றி­யா­ளர் முர­சொலி மாறன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1996 ஒன்றிய அமைச்­சர். அதற்­கும் முன்னே 17 நாட்­களே பத­வி­யி­லி­ருந்த முன்­னாள் பிர­த­மர் வாஜ்­பாய் அவர்­கள் நாடா­ளு­மன்­றத்­தில் நம்­பிக்கை கோரிய தீர்­மா­னத்­தின் மீது உரை­யாற்­றிய போது, “ A Good Man in Bad Party” என வாஜ்­பாய் பற்றி நாக­ரி­கத்­தோடு விளித்த நாவண்­மைக்கு உரி­ய­வர் முர­சொலி மாறன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2001 இல் ஜூன் மாதம் 30 ந்தேதி தலை­வர் கலை­ஞர் கைதின் போது நிகழ்த்­ததை நினைத்­தாலே, நமது நெஞ்­சம் உரு­கும். அக்­கொ­டூர நாளில் தனது உடல், பொருள், ஆவி அனைத்­தும் “கலை­ஞர்! கலை­ஞர்!” என்று துடித்த இத­யம் ஏற்­க­னவே நலி­வுற்­றி­ருந்த நிலை­யில் ஜெய­ல­லி­தா­வின் கொடிய கல்­நெஞ்­சக் காவ­லர்­கள் மாறன் அவர்­களை  அலை­க­ழித்து, அடித்து, வதைத்து, துவைத்து, ஆடை­களை அலங்­கோ­லப்­ப­டுத்­தி­யும் அவற்றை பொருட்­ப­டுத்­தா­மல், தன்­னு­யிர் ஈந்­தும், தனது தலை­வ­ரைக்­காக்க பட்ட ரணங்­க­ளா­லன்றோ, அவர் பட்ட மர­மாய் நோயில் வீழ்ந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உல­கில் எத்­தனை, எத்­தனை உற­வு­களை நாம் காண்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் தாய்­மா­மன் -- மரு­ம­கன் உற­வின் மகத்­து­வத்தை வேறெங்­கும் காணாத வகை­யில் அமைந்­தது கலை­ஞர் - மாறன் உறவு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புரா­ணத்­தில் கூட ஒரு மாமன் - மரு­ம­கன் உறவு இருந்­த­தாக சொல்­கி­றார்­கள். கம்­சன் - கண்­ணன் உயிரை வாங்­கிய உன்­னத ( ? ) உறவு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நமது இயக்­கத்­தில் நம் கண்­ணெ­தி­ரி­லேயே பிறந்­தது முதல், மறை­யும் நாள் வரை, நம் தலை­வ­ருக்கு, அவ­ரது பாச­மா­மா­வின் கண்­க­ளுக்கு இமை­யாய், இத­யத்­திற்கு துடிப்­பாய்,  தோல்­வி­யில், துய­ரத்­தில் சாய்ந்து கொள்­ளும் தோளாய், இறு­தி­வரை தனது தலை­வர் மீது துரும்­பு­கூட படா­மல் தடுக்க தடி­ய­டிப்­பட்டு, கொடும் இத­ய­நோய்க்கு ஆளாகி இறு­தி­யில் மறைந்தே போனார் கலை­ஞ­ரின் மாசறு பொன்­னான, வலம்­புரி முத்­தான பாச மரு­ம­கன் மாமேதை மாறன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1961 இல் தி. மு. க. வில் ஈ. வி. கே. சம்­பத் அவர்­கள் ஏற்­ப­டுத்­திய பிள­வின் போது, கழ­கப் பொரு­ளா­ளர் பொறுப்­பி­லி­ருந்து தான் வில­கு­வ­தாக பொதுச்­செ­ய­லா­ளர் பேர­றி­ஞர் அண்­ணா­வுக்கு தலை­வர் கலை­ஞர் எழு­திய கடி­தத்­தில்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என் உயி­ரி­னு­மி­னிய தம்பி முர­சொலி மாறனை சென்ற கிழமை ஜென­ரல் ஆஸ்­பத்­தி­ரி­யில் கவ­லைக்­கி­ட­மான நிலை­யில் - நம்­பிக்­கை­யற்ற அள­வில் விட்டு விட்டு தஞ்சை மாவட்­டத்­தில் கழக தேர்­தல் நிதி சேர்க்க மூன்று நாள் அலைந்­தேன் என்­ப­தும் தங்­க­ளுக்கு தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்று எழு­து­ம­ள­விற்கு தலை­வர் கலை­ஞ­ரின் உயி­ரோடு ஒன்­றி­விட்ட அன்­பிற்கு பாத்­தி­ர­மா­ன­வர் முர­சொலி மாறன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கால் முளைத்த நாள் முத­லாய் தலை­வ­ரின் கரம்­பற்றி, தடம் மாறா­மல் அறிவை வளர்த்து, புவி­யி­யல், வாழ்க்கை வர­லாறு, பொது வர­லாறு, தமி­ழக வர­லாறு,  திரா­விட இயக்க வர­லாறு, இந்­திய வர­லாறு, பொரு­ளா­தா­ரம், தமிழ் இலக்­கி­யம், ஆங்­கில இலக்­கி­யம், கவிதை, அர­சி­யல், இந்­திய அர­சி­யல், சமூ­க­வி­யல், கம்­பெனி சட்­டங்­கள், சினிமா, விளை­யாட்டு, தமிழ் பண்­பாடு, போன்ற 
20 க்கும் மேற்­பட்ட தலைப்­பு­க­ளில் அமைந்த 10000 க்கும் மேற்­பட்ட புத்­த­கங்­களை 
படித்­த­றிந்த பெரும் படிப்­பாளி முர­சொலி மாறன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத்­தகு சிறப்­பு­கள் ஒருங்கே பெற்­ற­வர்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரும் படிப்­பாளி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தர­மான படைப்­பாளி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சிறந்த நாடா­ளு­மன்­ற­வாதி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்ந்த எழுத்­தா­ளர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தீர்க்­க­மான சிந்­த­னை­யா­ளர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தியா­கத் திரு­வி­ளக்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தியா­க­ராஜ சுந்­த­ரம் எனும் பெயர் கொண்ட எழில் நிறை மாறன் அவர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எல்­லா­வற்­றுக்­கும் மேலாய் நமது அன்­புத் தலை­வர் கலை­ஞ­ரின் மன­சாட்­சி­யாய், தலை­வ­ரின் விழி­ய­சை­வில் விணை முடித்த வெற்­றி­வீ­ர­னாய் திகழ்ந்த மாமேதை மாறன் அவர்­க­ளின் பிறந்­த­நாள் இன்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கல்­லூரி பயி­லும் காலத்­தி­லேயே கலை­ஞர் பால் கொண்ட பற்று, பாசம், பக்தி இவற்­றால் எழுத்­து­ல­கி­லும், இலக்­கிய அரங்­கு­க­ளி­லும் தனது படைப்­பு­களை பதித்­திட்ட ஐயா மாறன் அவர்­க­ளின் முதல் சிறு­கதை காட்­டுப்­பூனை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பின்­னர் முர­சொலி வார இதழ்­க­ளில்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கிரேக்க புரா­ணம், கலைத்­தோட்­டம், என்ற தொடர் கட்­டு­ரை­களை எழுதி, கிரேக்­க­பு­ரா­ணம் நம் நாட்­டில் இருக்­கும் இதி­காச புரட்­டு­க­ளை­யும், கலைத்­தோட்­டம் தொட­ரின் மூலம் உலக சிந்­த­னை­யா­ளர்­களை, இலக்­கிய சிற்­பி­களை வாரந்­தோ­றும்
 அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொடர்ந்து அவ­ரால் வெளி­யி­டப்­பட்ட பொங்­கல் மல­ரி­லும், அண்ணா சிறப்பு மல­ரி­லும் அர­சி­யல் கட்­டு­ரை­கள், ஓரங்க நாட­கங்­கள் இடம்­பெற்று இளை­ஞர்­கள் மனதை பெரும் கொள்ளை கொண்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி  அக­ரம் பயின்ற நாள்­மு­தல் பின்­னா­ளில் இந்­திய நாடா­ளு­மன்­றத்­தின் மிகச் சிறந்த நாடா­ளு­மன்­ற­வாதி எனப்­போற்­றப்­பட்ட, சிக­ரம் தொட்ட நாள் வரை தான் உயி­ராய் நேசித்த தலை­வர் கலை­ஞ­ரின் உள்­ம­னம் அறிந்து, உணர்­வு­களை உணர்ந்து, கழ­கத்­தின் முக்­கிய மூளை­யாய் வஞ்­சக சகு­னி­கள் மிகுந்த டெல்­லி­யில் வாய்­மை­யுரு தலை­வர் கலை­ஞ­ரின் வாளாய், வார்த்­தை­யாய், வார்ப்­ப­ட­மாய் திகழ்ந்த தியா­கத் தொண்­டர் முர­சொலி மாறன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வட­நாட்டு தலை­வர்­கள், விஜ­ய­லட்­சுமி பண்­டிட், ஜெக­ஜீ­வன்­ராம், ஷேக் அப்­துல்லா, அவ­ரது மகன் பரூக் அப்­துல்லா, பகு­குணா, இந்­தி­ரா­காந்தி, பாஜக பட்­நா­யக், மொரார்ஜி தேசாய், வாஜ்­பாய், ஜார்ஜ் பெர்­ணான்­டஷ், சரண்­சிங், வி. பி. சிங், போன்ற தலை­வர்­க­ளோடு கழ­கத்­திற்­கும், கலை­ஞ­ருக்­கும் நெருக்­க­மான இனக்­கம் ஏற்­பட பெரி­தும் உழைத்த அர­சி­யல் ராஜ­தந்­திரி மாமேதை மாறன் அவர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர் இறந்த 2003  நவம்­பர் 23 அன்று அவ­ரது திரு­வு­டல் அருகே அமர்ந்து தலை­வர் கலை­ஞர் கண்­ணீர் வடித்த காட்சி முர­சொ­லியை, தனது முதற்­பிள்­ளையை, மன­சாட்­சியை, கண்­ணின் கரு­ம­ணியை, உறு­தி­மிக்க தொண்­டனை, துணை­வனை மொத்­த­மாய் இழந்த சோகம் மிகுந்­தன்றோ காணப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவ­ரது திரு­வு­ரு­வப் படத்­தி­றப்பு விழா­வில் பேசிய தலை­வர் கலை­ஞர், “ எல்­லோ­ரும் இங்கு இருக்­கி­றீர்­கள். ஆனால் உள்­ளேன் ஐயா என்று சொல்ல கண்­மணி மாறன் 
இல்­லையே! “ என்று கலங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்று தலை­வர் கலை­ஞ­ரும் இல்லை. ஆனால் அவ­ரின் ஆற்­றல், இரா­ஜ­தந்­தி­ரம்,  ஆளுமை திறன் கொண்டு தமிழ்­நாட்­டில் மாற்­றார் மலைக்­கும், :ஏழை­யர்,  பெற்­றோர், மாண­வர், இளை­ஞர்­கள் போற்­றும் சீர் மிகு திரா­விட மாடல் ஆட்­சியை வழங்­கிய நமது திரா­விட பேர­ர­சர் தள­ப­தி­ய­வர்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">டெல்­லிக்கு டி. ஆர். பாலு, ஆ. ராசா, கனி­மொழி, தயா­நி­தி­மா­றன், திருச்சி சிவா, தமி­ழச்சி தங்க பாண்­டி­யன், எனத் தரம் பிரித்து கழ­கத்­தின் கொள்கை, குர­லாக ஒலிக்­கச் செய்து, தமிழ்­நாட்­டில்   இளை­ஞர்­கள் ஏற்­றிப் போற்­றும் சின்­ன­வர் உத­ய­நிதி அவர்­க­ளை­யும் சட்­டப்­பே­ர­வை­யில் ஆளுங்­கட்­சி­யின் ஆணவ,  அதி­கா­ரத் திமி­ரான போக்­கிற்கு 
கடி­வா­ள­மாய் திகழ்ந்து கட­மை­யாற்ற வழி
­ந­டத்­து­கி­றார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அன்று ஐயா மாறன் போன்­றோ­ரின் கடின உழைப்பு! தியா­கம்! அர்­ப­ணிப்பு! இவற்­றால் வளர்ந்த இயக்­கம், இன்­றும் மாநி­லக்­கட்­சி­யாக இருந்­தா­லும், டெல்­லித் தர்­பா­ரின் கண்­களை உருத்­தும் தீர­மிகு எதிர்க்­கட்­சி­யாக களத்­தில் நிற்­கி­றது பேர­றி­ஞர் அண்ணா, தலை­வர் கலை­ஞர் ஆகி­யோ­ரின் கொள்­கை­வா­ளினை ஏந்­தி­ய­படி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்­தத் தலை­வரை தனது உயி­ராய் நேசித்து, தியா­க­மா­ற­னாய் வாழ்ந்த  தலை­வர் கலை­ஞ­ரின் மன­சாட்சி! கழ­கத்­தின் முக்­கிய மூளை, இயக்­கத்­தின் சுவா­சம்! கலை­ஞர் வளர்த்த கொள்­கை­தங்­கம் அறி­வு­நிறை, அழ­கு­நிறை அறி­வு­ல­க­மேதை ஐயா மாறன் அவர்­க­ளின் 93வது பிறந்த நாளான ஆகஸ்ட் 17 அன்று அவ­ரது உளை­க­ள­மாம் முர­சொலி வளா­கத்­தில் அமைந்­துள்ள ஐயா­வின் திரு­வு­ரு­வச் சிலைக்கு தலை­வர் கலை­ஞ­ரின் வழி­யில் மாலை­ய­ணி­வித்து, புகழ் சேர்க்­கி­றார் தமது தலை­வர் தள­ப­தி­ய­வர்­கள்!!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் உரை­வா­ளாய், பாசறை முழக்­க­மாய், தந்­தி­ரங்­கள் பல­வ­றிந்த இந்­தி­ர­ஜித்­தாய்த் திகழ்ந்த அறி­வி­யக்­கச் சுட­ரொளி மாமேதை மாறன் அவர்­க­ளுக்கு மல­ரஞ்­சலி செலுத்த நாமும் புறப்­ப­டு­வோம்! வரும் ஆகஸ்ட் 17 முர­சொலி வளா­கத்­திற்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஓங்­குக அறி­வு­ல­க­மேதை ஐயா முர­சொலி மாறன் அவர்­க­ளின் பெரும்­பு­கழ்!!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>