<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,595,958,1160" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 18 2026 03:32:57 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260818T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="18082026-CBE-01" position.sequence="01" ex-ref="18082026-CBE-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="90">பாசிச த.வெ.க. அரசிடமிருந்து கழகத்தினரையும் – மக்களையும் பாதுகாப்போம்!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="38">வடக்கு மண்டல கழக வழக்கறிஞர் அணிக் கூட்டத்தில் – சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup1294470_01_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="51_01_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, ஆக. 18–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வடக்கு மண்­டல கழக வழக்­க­றி­ஞர் அணி கலந்­து­ரை­யா­டல் கூட்­டத்­தில் கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் – சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றும்­போது, “பாசிச த.வெ.க. அர­சிட மிருந்து கழ­கத்­தி­ன­ரை­யும் – மக்­க­ளை­யும் பாது­காப்­போம்!” என்று வேண்­டு­கோள் விடுத்­தார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை, அண்ணா அறி­வா­ல­யம், கலை­ஞர் அரங்­கில் தி.மு.கழக சட்­டத்­துறை சார்­பில், வடக்கு மண்­டல வழக்­க­றி­ஞர்­கள் கலந்­து­ரை­யா­டல் கூட்­டம் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதில் கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­டப்­பே­ரவை எதிர்க்­கட்சி தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் கலந்­து­கொண்டு ஆற்­றிய எழுச்­சி­மிக்க உரை­யின் விவ­ரம் வரு­மாறு :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இங்கே பல தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­ பட்­டி­ருக்­கின்­றன. அதற்கு முத­லில், வழக்­க­றி­ஞர் அணிக்­குப் பாராட்­டு­க­ளை­யும், வாழ்த்­து­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். நாம் பல­முறை சந்­தித்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தனி­யா­கவோ அல்­லது அணி­யின் சார்­பா­கவோ பல­முறை சந்­தித்­தி­ருக்­கி­றோம். குறிப்­பாக, சென்ற தேர்­த­லுக்கு முன்பு பல மாவட்­டங்­க­ளுக்கு நான் வரும்­பொ­ழுது அங்கு இருக்­கக்­கூ­டிய அனைத்து சார்பு அணி­க­ளை­யும் ஒரே இடத்­தில் சந்­தித்து, நாமெல்­லாம் உரை­யாடி இருக்­கி­றோம். ஆனால், 
இன்­றைக்கு ஒரு வித்­தி­யா­ச­மான சூழ­லில், வேறொரு மாறு­பட்ட சூழ்­நி­லை­யில் நாம் சந்­திக்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தனித்­து­வம் வாய்ந்­தது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கத்­தில் எத்­த­னையோ அணி­கள் இருந்­தா­லும், சட்­டத்­துறை என்று அழைக்­கப்­ப­டு­வது இந்த அணி மட்­டும்­தான். பொது­வாக ஒரு அர­சாங்­கத்­தில்­தான் ஒவ்­வொரு பிரி­வை­யும் கவ­னிக்க `துறை’ என்று தனித்­த­னி­யா­கப் பிரித்­துச் சொல்­வார்­கள். ஆனால், நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தில் மட்­டும்­தான் ஒரு அணிக்கே `சட்­டத்­துறை’ என்று பெயர் வைத்­தி­ருக்­கி­றோம் என்­றால், அது நம் வழக்­க­றி­ஞர் அணிக்­குத்­தான்; சட்­டத்­­துறைக்கு மட்­டும்­தான். இதி­லி­ருந்தே கழ­கத்­தி­னு­டைய சட்­டத்­துறை எவ்­வ­ளவு முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது, எத்­தனை தனித்­து­வம் வாய்ந்­தது என்­பதை நாம் 
அனை­வ­ரும் புரிந்து கொள்­ள­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு கழ­கத்­தில் இளை­ஞர் அணி உள்­ளிட்ட 25 அணி­கள் செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால், இன்­றைக்கு நம் கழ­கத்­தி­லேயே `மோஸ்ட் வான்­டட்’ அணி என்­றால், அது நம் சட்­டத்­து­றை­தான். தேர்­த­லுக்கு முன்பு அத்­தனை அணி­க­ளும் தேர்­தல் வேலை­யைப் பார்த்­தோம். ஆனால், இன்­றைக்கு தேர்­தல் முடிவு வந்­த­பி­றகு ஒரு அணி, ஒரு துறை மிக­வும் ஆக்­டி­வாக இருக்­கி­றது என்­றால், அது இந்­தச் சட்­டத்­து­றை­தான். தலை­வ­ருக்கு ஒன்று என்­றால் மட்­டு­மல்ல, தலை­மைக் கழ­கத்­தில் இருக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு ஒன்று என்­றால் மட்­டு­மல்ல; ஒரு கடைக்­கோடி தொண்­ட­னுக்கு ஒரு பிரச்­சினை என்­றா­லும், முத­லில் வந்து நிற்­பது சட்­டத்­து­றை­யைச் சேர்ந்த வழக்­க­றி­ஞர்­க­ளா­கிய நீங்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆட்­சி­யில் இருந்­தா­லும் சரி, இல்­லா­விட்­டா­லும் சரி, கழ­கத்­தின் மிகப்­பெ­ரிய பலம், மிக முக்­கி­ய­மான முது­கெ­லும்பு, மிகப்­பெ­ரிய ஒரு எனர்ஜி என்­றால், சட்­டத்­து­றை­யைச் சேர்ந்த நிர்­வா­கி­க­ளா­கிய நீங்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">இறந்த பிற­கும் ஒரு போராட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">குறிப்­பாக, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரு­டைய கடைசி ஆசை, 2018-ஆம் ஆண்டு கலை­ஞ­ரின் மறை­விற்­குப் பிறகு மெரி­னா­வில் அண்­ணா­வுக்கு பிறகு தன்­னு­டைய ஓய்வு இருக்க வேண்­டும் என்று அவர் ஆசைப்­பட்­டார். அப்­பொ­ழுது இருந்த 
எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் அரசு, அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய அரசு அதைத் தடுக்­கப் பார்த்­தது. அதற்­கான அனு­ம­தி­யைக் கொடுக்­க­வில்லை. கலை­ஞ­ரின் கன­வைச் சட்­டப்­போ­ராட்­டம் நடத்தி, அதை நிறை­வேற்­றி­யது இங்கே வந்­தி­ருக்­கக்­கூ­டிய சட்­டத்­து­றை­யைச் சேர்ந்த நீங்­கள்­தான். இன்­றைக்­கும் கலை­ஞ­ரைப் பற்றி நாம் பெரு­மை­யா­கப் பேசு­கி­றோம். தான் இறந்த பிற­கும் ஒரு போராட்­டம் நடத்தி, அதில் ஜெயித்த ஒரே தலை­வர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள் என்­றால், அந்­தப் போராட்­டத்­தின் வெற்­றிக்­குக் கார­ணம் இங்கே வந்­தி­ருக்­கக்­கூ­டிய வழக்­க­றி­ஞர்­க­ளா­கிய நீங்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கத்­தின் வர­லாற்­றில் நீங்­கள் போரா­டிப் பெற்­றுக் கொடுத்த தீர்ப்­பு­கள் ஒவ்­வொன்­றும், ஒவ்­வொரு சட்ட மாண­வ­னும் படிக்க வேண்­டிய ஒரு ஆய்­வுப் படிப்­பு­க­ளின் ஆய்­வ­றிக்­கைக்கு சம­மாக இன்­றைக்கு விளங்­கிக் கொண்­டி­ருக்­கி­றது. நீதி­மன்­றத்­தில் வாதாடி, போரா­டிப் பெற்­றுக் கொடுத்த தீர்ப்­பு­கள் ஒரு­பக்­கம் இருந்­தா­லும், தேர்­தல் காலங்­க­ளில் ‘வார் ரூம்’ அமைத்து நீங்­கள் செய்த தேர்­தல் பணி­கள், யாரா­லும் அள­விட முடி­யா­தவை. குறிப்­பாக, இந்­தத் தேர்­த­லுக்கு முன்­பும் நீங்­கள் அத்­தனை பேரும் வார் ரூமில் தேர்­தல் பணி­யாற்றி இருக்­கி­றீர்­கள். ஆனால், இன்­றைக்கு நாம் எதிர்­பா­ராத ஒரு தேர்­தல் முடிவு வந்­தி­ருக்­கி­றது. நாம் மட்­டு­மல்ல, தமிழ்­நாடே எதிர்­பா­ராத ஒரு தேர்­தல் முடிவு வந்­தது. தமிழ்­நாடு மட்­டு­மல்ல, இன்­றைக்கு ஆட்­சி­யில் அமர்ந்­தி­ருக்­கக்­கூ­டிய அந்த `சர்க்­கஸ்’ கூட்­டமே எதிர்­பா­ராத ஒரு தேர்­தல் முடிவை இன்­றைக்கு தமிழ்­நாட்டு மக்­கள் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்; அதை நாம் ஏற்­றுக்­கொண்­டு­தான் ஆக­வேண்­டும். இன்­றைக்கு இந்த `சர்க்­கஸ் கும்­பல்’ ஆட்­சிக்கு வந்த பிறகு, மற்ற அணி­க­ளின் பணி­களை விட, மற்ற அணி­க­ளின் தேவையை விட, இன்­றைக்கு வழக்­க­றி­ஞர்­க­ளின் பணி மிக மிக அவ­சி­ய­மாக, முக்­கி­ய­மா­ன­தா­கக் கரு­தப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பாது­காப்­பின்மை உணர்வு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த 100 நாட்­க­ளில் யார் மிக­வும் 
பிஸி­யாக இருக்­கி­றார்­கள் என்று பார்த்­தீர்­கள் என்­றால், வழக்­க­றி­ஞர்­க­ளா­கிய நீங்­கள்­தான் மிக­வும் பிஸி­யாக இருக்­கி­றீர்­கள். ஏன் பிஸி­யாக இருக்­கி­றீர்­கள் என்று உங்­கள் அத்­தனை பேருக்­கும் தெரி­யும். நின்­றால் கைது, நடந்­தால் கைது, பேசி­னால் கைது, சமூக வலை­த­ளத்­தில் ஒரு பதிவு போட்­டால் கைது என்று, ஒரு மோச­மான பாசிச அர­சாக இன்­றைக்கு இந்த அர­சாங்­கம் செயல்­பட்டு வரு­கி­றது. அந்த அள­வுக்கு இந்த அர­சுக்­குப் பாது­காப்­பின்மை உணர்வு (இன்­செக்­யூ­ரிட்டி) ரொம்­ப­வும் அதி­க­மாக இருக்­கி­றது..</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தூங்கி எழுந்­தால் இன்­றைக்கு யாரைக் கைது செய்­ய­லாம் என்று, கிட்­டத்­தட்ட ஒரு கால அட்­ட­வணை போட்டு, திட்­டம் போட்டு, இந்த அரசு கைது நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>