<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,67,956,1199" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 18 2026 03:43:07 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260818T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="18082026-MDU-05" position.sequence="05" ex-ref="18082026-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="36">மின் தடை, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு!</lang>
	<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="36"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="97">100 நாட்கள் த.வெ.க. ஆட்சியில் ‘டாப் சொதப்பல்ஸ்!’</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame818472_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Untitledbw_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">தமிழ்­நாடு அர­சி­யல் வர­லாற்­றில்  விஜய் தலை­மை­யி­லான த.வெ.­க. ­அ­ரசு, நேற்று தனது 100-வது நாளை நிறைவு செய்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">விஜய் தலை­மை­யில் அமைந்த  த.வெ.க. அரசு, கடந்த100 நாட்­க­ளில் மாநி­லத்­தின் நிதி­நிலை, நிர்­வாக கட்­ட­மைப்பு, விலை­வாசி உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்­சினை ஆகி­ய­வற்­றில் கடு­மை­யான சவால்­க­ளை­யும் பின்­ன­டை­வு­க­ளை­யும் சந்­தித்து உள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தேர்­தல் நேரத்­தில், அதை செய்­வேன், இதை செய்­வேன்.. உங்க விஜய் வரு­கி­றேன் என்­றெல்­லாம் வாக்­கு­று­தி­களை கொடுத்த விஜய்.. கடந்த 100 நாட்­க­ளில் பல முக்­கிய விஷ­யங்­க­ளில் மோச­மாக சொதப்பி இருக்­கி­றார். அவர் சொதப்­பிய டாப் விஷ­யங்­கள் இங்கே பட்­டி­ய­லிடப்­பட்டு உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">மின் கட்­ட­ணம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வீட்டு உப­யோக நுகர்­வோ­ருக்கு இரு மாதங்­க­ளுக்கு 200 யூனிட் இல­வச மின்­சா­ரம் என்ற திட்­டத்தை உட­ன­டி­யாக அமல்­ப­டுத்­தி­ய­தன் மூலம், சுமார்1.42 கோடி குடும்­பங்­கள் பயன்­பெ­றத் தொடங்­கி­யுள்­ளன. எனி­னும், ஏற்­க­னவே ரூ.1.5 லட்­சம் கோடிக்கு மேல் கடன் சுமை­யில் இருக்­கும் டான்­ஜெட்கோ நிறு­வ­னத்­திற்கு, இத்­திட்­டத்­தால் ஆண்­டு­தோ­றும் ரூ.4,850 கோடி கூடு­தல் மானி­யச் சுமை ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் இத­னால் மின்­சார கட்­ட­ணம் பெரி­தாக குறை­ய­வில்லை. மாறாக கடு­மை­யாக மின்­சா­ரக் கட்­ட­ணம் உயர்ந்­துள்­ளது. தமிழ்­நாட்­டின் பல்­வேறு மாவட்­டங்­க­ளி­லும் வசிக்­கும் ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்­கள் தங்­கள் ஜூலை மாத மின்­கட்­ட­ணத்­தைப் பார்த்து பெரும் அதிர்ச்­சி­ய­டைந்­த­னர். மே மாதத்­தில் செலுத்­திய கட்­ட­ணத்­தைக் காட்­டி­லும், ஜூலை­யில் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை மின்­கட்­ட­ணம் உயர்த்­தப்­பட்டு வந்­த­தாக நுகர்­வோர் குற்­றஞ்­சாட்­டி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சமீ­பத்­தில் அமைந்த தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தின் ஆட்­சிக்­குப் பின்பே இந்த கட்­டண உயர்வு ஏற்­பட்டு உள்­ளது. இதை­ய­டுத்து விஜய் ஆட்­சியை நோக்கி எதிர்க்­கட்­சி­க­ளும், பொது­மக்­க­ளும் கேள்­வி­களை எழுப்பி வரு­கின்­ற­னர். மின்­வா­ரி­யத்­தின் முதற்­கட்ட சோத­னை­யில் 3,70,000 மின் இணைப்­பு­க­ளில் வழக்­கத்­திற்கு மாறான கட்­டண உயர்வு இருந்­தது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இதில் சுமார் 15,000 வீடு­கள் ஜூலை மாதத்­தில் 1,000 யூனிட்­டு­ க­ளுக்­கும் அதி­க­மான பயன்­பாட்­டுப் பட்­டி­ய­லி­லும், சுமார் 1 லட்­சம் வீடு­கள் 500 முதல் 1,000 யூனிட்­டு­கள் வரை­யி­லான பயன்­பாட்­டுப் பிரி­வி­லும் திடீ­ரெ­னச் சேர்ந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கோடை­கால வெப்­பம் கார­ண­மாக ஏசி மற்­றும் குளிர்­சா­த­னப் பெட்­டி­க­ளின் பயன்­பாடு அதி­க­ரித்­தி­ருக்­க­லாம் என்ற போதி­லும், இந்த அள­விற்­குக் கட்­ட­ணம் உயர்ந்­த­தற்­குத் தொழில் நுட்­பக் கோளா­று­க­ளும், பணி­யா­ளர்­க­ளின் அலட்­சி­ய­முமே கார­ணம் எனக் கூறப்­ப­டு­கி­றது. மின் மீட்­டர்­களை ஆய்வு செய்­வ­தி­லும், கணக்­கீடு எடுப்­ப­தி­லும் ஏற்­பட்ட தாம­தமே நுகர்­வோரை அதி­கக் கட்­ட­ணப் பிரி­வுக்கு தள்­ளி­யுள்­ளது. மேலும், பழு­து­பட்ட மீட்­டர்­க­ளைச் சரி­யா­கப் பரா­ம­ரிக்­கா­த­தால் மின் வாரி­யத்­திற்­கும் பெரும் நிதி இழப்பு ஏற்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">717 டாஸ்­மாக் கடை­கள் மூடல்: ₹1,680 கோடி வரு­வாய் இழப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பள்­ளி­கள் மற்­றும் வழி­பாட்­டுத் தலங்­க­ளுக்கு அரு­கில் உள்ள 150 மீட்­டர் சுற்­ற­ள­வி­லான 717 டாஸ்­மாக் மது­பா­னக் கடை­களை உட­ன­டி­யாக மூடி­ய­தா­கச் சொல்­லப்­பட்ட முடி­வால் மாநில ஆயத்­தீர்வை மற்­றும் வாட் (VAT) வரி மூலம் அர­சுக்­குக் கிடைக்க வேண்­டிய காலாண்டு வரு­வா­யில் சுமார் ₹1,680கோடி இழப்பு ஏற்­பட்­டுள்­ளது. இந்த திடீர் வரு­வாய் பற்­றாக்­கு­றையை ஈடு­கட்ட மாற்று வரிக் கொள்கை இல்­லா­த­தால் பிற துறை­க­ளுக்­கான நிதி ஒதுக்­கீட்­டில் தாம­தம் நில­வு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சரி , டாஸ்­மாக் மூடி­ய­தால் எல்­லாம் சரி­யா­கி­விட்­டதா என்­றால் இன்­ன­மும் இல்லை..   மோச­மான பிராண்­டு­கள்,   கரூ­ரில் பாட்­டி­லுக்கு 10 ரூபாய்என்று கூறிய விஜய் ஆட்­சி­யில் அது 20 ரூபா­யாக உயர்ந்­ததே மிச்­சம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">7 தொகுதி இடைத்­தேர்­தல் வெற்­றி­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நேர்­மை­யான ஆட்சி என்று கூறி ஆட்­சிக்கு வந்த அதே விஜய் இப்­போது குதி­ரைப்­பேர புகா­ரில் சிக்கி உள்­ளார். சட்­ட­மன்­றத்­தில் த.வெ.க. 108 உறுப்­பி­னர்­க­ளு­டன் சிறு­பான்மை ஆட்­சி­யாக நடத்தி வரு­கி­றது. 6 அ.தி.மு.க. எம்.எல்.ஏ-.க்களின் பதவி வில­கல் மற்­றும் முதல்­வர் திருச்சி கிழக்­குத் தொகு­தியை ராஜி­னாமா செய்­த­தன் கார­ண­மாக தற்­போது 7 சட்­ட­மன்­றத் தொகு­தி­கள் எம்.எல்.ஏ. இன்றி காலி­யாக உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதில் 6 அதி­முக எம்­எல்­ஏக்­கள் தவெ­க­விற்கு சென்­றது குதிரை பேரம் என்ற புகார் உள்­ளது. உச்ச நீதி­மன்­றத்­தி­ லும் வழக்­காக தாக்­கல் செய்­யப்­பட்டு உள்­ளது. இன்­னொரு பக்­கம் பல்­வேறு வழக்­கு­க­ளால் இந்த இடைத்­தேர்­தல்­கள் தள்­ளிப்­போ­வ­தால் தொகுதி மேம்­பாட்­டுப் பணி­கள் முடங்­கி­யுள்­ள­தோடு, ஆட்சி தொட­ருமா என்ற கேள்­வி­யும் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">  </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சொத்து வரி உயர்வு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை பெரு­ந­கர மாந­க­ராட்சி எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த சொத்து வரி உயர்வு மற்­றும் திருத்த நட­வ­டிக்­கை­களை மக்­கள் மத்­தி­யில் எழுந்த கடும் எதிர்ப்பு கார­ண­மாக  த.வெ.க. அரசு உட­ன­டி­யாக நிறுத்தி வைத்து உத்­த­ர­விட்­டுள்­ளது. மேலும், உயர்த்­தப்­பட்ட வரி­க­ளைத் திரும்­பப்­பெற்று, பழைய நிலை­யி­லான சொத்து வரி விகி­தமே தொட­ரும் என்­றும் அதி­கா­ரப்­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. சென்னை மாந­க­ராட்­சி­யில் உள்ள குடி­யி­ருப்பு வீடு­கள், வணிக வளா­கங்­கள் மற்­றும் காலி­யி­டங்­க­ளுக்கு வசூ­லிக்­கப்­ப­டும் சொத்து வரியே, நக­ரத்­தின் சாலைப் பரா­ம­ரிப்பு, தெரு­வி­ளக்­கு­கள், கழி­வு­நீர் அகற்­றம் மற்­றும் தூய்­மைப் பணி­கள் உள்­ளிட்ட அடிப்­படை உள்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்கு முக்­கிய நிதி ஆதா­ர­மாக விளங்­கு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­நி­லை­யில், மாந­க­ராட்­சி­யின் பல்­வேறு மண்­ட­லங்­க­ளில் உள்ள சில குறிப்­பிட்ட சொத்­து­க­ளுக்­கான வரித் தொகை, திடீ­ரென 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்­தப்­பட்­ட­தா­கக் கூறி வரை­கா­லைக் கட்­ட­ணப் ரசீ­து­கள் சொத்து உரி­மை­யா­ளர்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டன. இத­னால் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்த சென்­னை­வா­சி­கள் மற்­றும் வர்த்­த­கர்­கள், மாந­க­ராட்­சி­யின் இந்த நட­வ­டிக்­கைக்கு எதி­ரா­கக் கடு­மை­யான எதிர்ப்­பைப் பதிவு செய்­த­னர். முகப்­பே­ரில் வசிக்­கும் ஒரு­வ­ருக்கு அரை ஆண்­டிற்­கான சொத்து வரி ₹13,000-லிருந்து திடீ­ரென ₹63,000 ஆக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. காரப்­பாக்­கத்­தில் 1,600 சதுர அடி வீட்­டின் வரி ₹895-லிருந்து ₹1,835 ஆக அதி­க­ரித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கட்­டிட அள­வில், நிலத்­தின் பரப்­ப­ள­வில் முறை­யான மாற்­றங்­கள் எது­வு­மில்­லாத நிலை­யி­லும் வரி உயர்த்­தப்­பட்­டுள்­ள­தாக பொது­மக்­கள் குற்­றம்­சாட்­டு­கின்­ற­னர். மேற்கு மாம்­ப­லத்தை சேர்ந்த நபர் ஒரு­வர் கூறு­கை­யில், 20 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு 2022-ல் 90% வரி உயர்த்­தப்­பட்­டது. இப்­போது 1,400 சதுர அடி வீட்­டிற்கு ₹3,500 வரை செலுத்­தச் சொல்­கி­றார்­கள். எந்த மாற்­ற­மும் இல்­லா­த­போது எப்­படி மறு­ம­திப்­பீடு செய்­தார்­கள்? எனக் கேள்வி எழுப்­பு­கி­றார். கிண்­டி­யைச் சேர்ந்த ஒரு­வர் கூறு­கை­யில், 2021-ல் கூடு­தல் கட்­டி­டம் கட்­டி­ய­போது வரி ₹1,000-லிருந்து ₹2,125 ஆக உயர்ந்­தது. ஆனால் இப்­போது எந்த மாற்­ற­மும் செய்­யாத நிலை­யி­லும் ₹4,100 ஆக மாற்­றப்­பட்­டுள்­ளது, என்­கி­றார். இத­னால் பல இடங்­க­ளில் வரி வசூ­லிப்­பா­ளர்­களே அதி­கா­ரப்­பூர்வ விளக்­கம் வரும் வரை வரி­யைச் செலுத்த வேண்­டாம் என அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">பயிர்க்­க­டன் தள்­ளு­படி வரம்பு: டெல்டா விவ­சா­யி­கள் அதி­ருப்தி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில், மாவட்ட மத்­திய கூட்­டு­றவு வங்­கி­கள், கூட்­டு­ற­வுச் சங்­கங்­க­ளில், பயிர்க்­க­டன் வழங்­கப்­ப­டு­கி­றது. 5 ஏக்­க­ருக்கு குறை­வாக நிலம் வைத்­துள்ள விவ­சா­யி­கள் கூட்­டு­றவு வங்­கி­க­ளில் பெற்ற பயிர்க்­க­டன்­கள் முற்­றி­லு­மாக தள்­ளு­படி செய்­யப்­ப­டும் என தேர்­த­லுக்கு முன்­பாக வாக­கு­றுதி அளித்­தி­ருந்­தது த.வெ.க.. தேர்­த­லில் வெற்றி பெற்று  புதி­தாக ஆட்­சிப் பொறுப்­பேற்ற த.வெ.க. அரசு, 2025 மே முதல், இந்த ஆண்டு பிப்­ர­வரி வரை, கூட்­டு­றவு நிறு­வ­னங்­க­ளில், பயிர்க்­க­டன் பெற்ற, 14.43 லட்­சம் விவ­சா­யி­க­ளின், 5,932 கோடி ரூபாய் பயிர்க் கடன்­களை தள்­ளு­படி செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ரூபாய் 50,000 வரை பயிர்க்­க­டன் பெற்­றி­ருந்த குறு, சிறுவிவ­சா­யி­க­ளுக்கு முழு­மை­யாக பயிர்க்­க­டனை தள்­ளு­படி செய்து தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் ஜோசப் விஜய் உத்­த­ர­விட்­டி­ருந்­தார். அனை­வ­ருக்­கும் பயிர்க்­க­டன்­களை ரத்து செய்ய வேண்­டும் என கோரிக்­கை­கள் எழுந்­தன. இதை­ய­டுத்து, கூட்­டு­றவு வங்­கி­க­ளில் பயிர்க்­க­டன் பெற்ற 14.43 லட்­சம் விவ­சா­யி­க­ ளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை, அதா­வது ரூ. 75,000க்குள் கடன் பெற்­ற­வர்­க­ளுக்கு முழு தொகை­யும், அதற்கு மேல் கடன் பெற்­ற­வர்­க­ளுக்கு ரூ. 35,000-  தள்­ளு­படி செய்­வ­தாக முத­ல­மைச்­சர் விஜய் அறி­விப்பு வெளி­யிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதன்­படி, 8,33,773 குறு விவ­சா­யி­க­ளுக்கு தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்ள மொத்த தொகை ரூ.3,599.67 கோடி. 5,16,183 சிறு விவ­சா­யி­க­ளுக்கு தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்ள மொத்த தொகை ரூ.1,995.42 கோடி. 93,548 இதர பெரு விவ­சா­யி­க­ளுக்கு தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்ள மொத்த தொகை ரூ.337.15 கோடி. மொத்­தம் 14,43,504 விவ­சா­யி­க­ளுக்கு உத்­தேச பயிர் கடன் தள்­ளு­ப­டித் தொகை ரூ.5,932.23 கோடி. சரா­ச­ரி­யாக ₹1.35 லட்­சம் வரை கடன் வைத்­துள்ள காவிரி டெல்டா மாவட்ட விவ­சா­யி­க­ளில் 62%-க்கும் அதி­க­மா­னோர் முழு நிவா­ர­ணம் பெற முடி­யா­மல் தவித்­த­னர். இத­னால் தஞ்­சா­வூர், திரு­வா­ரூர் மற்­றும் நாகப்­பட்­டி­னம் மாவட்­டங்­க­ளில் விவ­சா­யி­கள் அமைப்­பு­கள் தொடர் போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தேங்­கும் கோப்­பு­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புதிய அமைச்­சர்­க­ளின் நிர்­வா­கச் சுமை கார­ண­மாக, அனைத்து முக்­கிய முடி­வு­க­ளும் முத­ல­மைச்­ச­ரின் தனிச் செய­ல­கம் வழி­யா­கவே எடுக்­கப்­ப­டு­கின்­றன. இந்த அதீத அதி­கா­ரக் குவிப்­பால் சுமார் 1,400-க்கும் மேற்­பட்ட அரசு உத்­த­ர­வு­கள் (G.O.) மற்­றும் டெண்­டர் ஒப்­பு­தல்­கள் தேக்­க­ம­டைந்­துள்­ளன. குறிப்­பாக நெடுஞ்­சா­லைத்­துறை மற்­றும் ஊரக வளர்ச்­சித் துறை­க­ளில் களப்­ப­ணி­கள் வேகம் இழந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">வாக்­கு­று­தி­கள் என்­னாச்சு?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது போக மக­ளிர் உரிமை தொகை 2000, இல­வச சிலிண்­டர், மாநி­லம் முழுக்க அனைத்து பேருந்­து­க­ளி­லும் பெண்­க­ளுக்கு இல­வச பய­ணம் என்று தவெ­க­வின் டாப் வாக்­கு­று­தி­கள் பல இன்­னும் நிறை­வேற்­றப்­ப­டா­மல் உள்­ளது. பல திமுக திட்­டங்­க­ளுக்கு வெற்றி என்று ஸ்டிக்­கர் ஒட்­டி­ய­தோடு இந்த அரசு தனது வாக்­கு­று­தி­களை கைக­ழு­விட்­டதோ என்ற விமர்­ச­னங்­கள் எழுந்­துள்­ளன .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தெலுங்கு மாநி­லங்­க­ளுக்­குச் செல்­லும் 
முத­லீ­டு­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெற்­றித் தமிழ்­நாடு முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில் 104 நிறு­வ­னங்­க­ளு­டன் ₹1.02 லட்­சம் கோடி மதிப்­பி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் (MoU) கையெ­ழுத்­தா­கின. எனி­னும், முதல் 100 நாட்­க­ளில் வெறும் 8% திட்­டங்­க­ளுக்கு மட்­டுமே சிப்­காட் (SIPCOT) மூலம் நில ஒதுக்­கீ­டும், சுற்­றுச்­சூ­ழல் அனு­ம­தி­யும் வழங்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்ட 1.2 லட்­சம் வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­வ­தில் கால­தா­ம­தம் ஏற்­ப­டும் சூழல் உரு­வா­கி­யுள்­ளது. தமி­ழக வெற்­றிக் கழ­கம் ஆட்சி அமைந்து, கீர்த்­தனா தொழிற்­துறை அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்ற பிறகு, மாநி­லத்­தின் தொழில் முத­லீ­டு­கள் குறித்து பல்­வேறு கேள்­வி­கள் எழுந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குறிப்­பாக, தமிழ்­நாட்­டிற்கு வர­வி­ருந்த அல்­லது   தொடங்க இருந்த பெரும் முத­லீ­டு­கள் அண்டை மாநி­ல­மான ஆந்­தி­ராவை நோக்கி நகர்­வது பெரும் ஆச்­ச­ரி­யத்­தை­யும், திகைப்­பை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. “ஆந்­தி­ரா­வுக்கு எப்­படி இது சாத்­தி­ய­மா­கி­றது?” என்ற கேள்வி தற்­போது தென்­னிந்­திய தொழில்­துறை வட்­டா­ரங்­க­ளில் பேச்­சாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சமீப காலத்­தில் தமிழ்­நாட்டை விட்டு நழு­விய அல்­லது ஆந்­தி­ரா­வுக்கு இடம்­பெ­யர்ந்த முக்­கிய திட்­டங்­க­ளைப் பார்க்­கும்­போது இந்­தக் கவலை அதி­க­ரிக்­கி­றது. முத­லில், ஹவா­சுங் (Hwaseung) நிறு­வ­னத்­தின் திட்­டத்தை எடுத்­துக்­கொள்­ள­லாம். தூத்­துக்­கு­டி­யில் ₹1,720 கோடி மதிப்­பில் புதிய ஆலை அமைக்க முன்­னாள் தி.மு.க. அர­சு­டன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் (MoU) கையெ­ழுத்­தா­னது பெரும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஆனால், அந்­தத் திட்­டம் தற்­போது ஆந்­தி­ரா­வின் குப்­பம் பகு­திக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது. தமிழ்­நாட்டு மண்­ணில் தொடங்க இருந்த ஒரு மிகப்­பெ­ரிய திட்­டம் எல்லை தாண்­டிச் சென்­றது எப்­படி? இது தமிழ்­நாட்­டின் தொழில்­து­றைக்கு பெரும் இழப்­பா­கப் பார்க்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்­த­தாக, ராயல் என்­பீல்டு (Royal Enfield) நிறு­வ­னத்­தின் முடிவு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. சென்னை மற்­றும் அதன் சுற்­று­ வட்­டா­ரங்­க­ளில் ஏற்­கெ­னவே பிரம்­மாண்ட உற்­பத்­தித் தளங்­க­ளைக் கொண்­டுள்ள இந்த நிறு­வ­னம், தமிழ்­நாட்­டின் அடை­யா­ள­மா­கவே கரு­தப்­ப­டு­கி­றது. ஆனால், தனது வர­லாற்­றில் முதன்­மு­றை­ யாக தமிழ்­நாட்­டிற்கு வெளியே ஆந்­தி­ரா­வின் தடா (திருப்­பதி) பகு­தி­யில் புதிய கிரீன்ஃ­பீல்டு 
உற்­பத்தி ஆலை­யை­யும், அதற்­கான வெண்­டார் பூங்­கா­வை­யும் அமைக்க முடிவு செய்­துள்­ளது. இத்­தனை காலம் தமிழ்­நாட்­டில் வேரூன்­றிய ஒரு நிறு­வ­னம் விரி­வாக்­கத்­துக்கு ஆந்­தி­ரா­வைத் தேர்வு செய்­தது ஏன் என்­பது பல­ருக்­கும் புரி­யாத புதி­ராக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">பரந்­தூர் மற்­றும் துறை­மு­கம் -மது­ர­வா­யல் திட்­டங்­க­ளில் ஆய்­வுத் தேக்­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ரூ.20,000 கோடி மதிப்­பி­லான பரந்­தூர் புதிய பசுமை விமான நிலைய நில எடுப்பு மற்­றும் 20.6 கி.மீ தூர சென்னை துறை­மு­கம்-­ம­து­ர­ வா­யல் பறக்­கும் சாலை திட்­டத்­தின் பல்­வேறு தொகுப்­பு­களை மறு­ஆய்வு செய்­வ­தற்­காக அரசு இடைக்­கா­லத் தடை விதித்­தது. இந்த ஆய்­வுக் கால­நீட்­டிப்­பால் கட்­டு­மான நிறு­வ­னங்­க­ளுக்கு தின­சரி இழப்­பீடு அதி­க­ரித்து, திட்ட மதிப்­பீ­டும் உயர்ந்து வரு­கி­றது. சென்­னை­யின் பல முக்­கிய பாலங்­கள், திட்­டங்­கள் இதே­போல் கிடப்­பில் போடப்­பட்டு உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சட்­டம் –  ஒழுங்கு சீர்கேடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் சட்­டம் - ஒழுங்கு முற்­றி­லும் சீர்­கு­லைந்­துள்­ள­தாக எதிர்க்­கட்­சி­கள் புகார் வைக்க தொடங்கி உள்­ளன. புதிய அரசு பொறுப்­பேற்ற 140 மணி நேரத்­திற்­குள் மாநி­லம் முழு­வ­தும் 24 கொலை­கள் அரங்­கே­றி­யது. தற்­போது வரை 200க்கும் மேற்­பட்ட கொலை­கள் அரங்­கேறி உள்­ளன. சென்னை திரு­வொற்­றி­யூ­ரில் உள்ள ஜெய­கோ­பால் கரோ­டியா அரசு மேல்­நி­லைப் பள்­ளி­யில் பயின்று வந்த 18 வயது பிளஸ் 2 மாண­வர் தனுஷ், அஜாக்ஸ் பேருந்து நிலை­யம் அருகே உள்ள காலி மைதா­னத்­தில் சக மாண­வர் கும்­ப­லால் கொடூ­ர­மா­கத் தாக்­கப்­பட்­டுக் கொல்­லப்­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வளா­கத்­தில் மாண­வர்­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட தக­ராறே இந்த மோத­லுக்­குக் கார­ண­மாக அமைந்­தது. பள்­ளித் தலைமை ஆசி­ரி­யர் முன்­ன­தாக எச்­ச­ரித்து அனுப்­பிய போதி­லும், வகுப்­ப­றைக்கு வெளியே திரண்ட 12 சிறார்­கள் தனுஷை வழி­ம­றித்­துத் தாக்­கி­யுள்­ள­னர். இச்­சம்­ப­வம் தொடர்­பாக 12 சிறார்­க­ளைப் பிடித்­துள்ள போலீ­சார் விசா­ரணை நடத்தி வரும் நிலை­யில், மாண­வர் வன்­மு­றை­யைக் கட்­டுப்­ப­டுத்­தக் கோரி பொது­மக்­கள் சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கோவை ஒத்­தக்­கால்­மண்­ட­பம் பகு­தி­யில் உள்ள தனி­யார் பொறி­யி­யல் கல்­லூரி வளா­கத்­தின் பின்­பு­றம், மூன்­றாம் ஆண்டு பயின்று வந்த 19 வயது மாண­வர் கே. அமு­தன் சக மாண­வர்­க­ளால் அடித்­துக் கொல்­லப்­பட்­டார். கல்­லூரி விடுதி மற்­றும் முன்­வி­ரோ­தம் கார­ண­மாக இரு மாண­வர் குழுக்­க­ளுக்கு இடையே தொடர்ச்­சி­யாக ஏற்­பட்ட மோத­லின் உச்­சக்­கட்­ட­மாக இத்­தாக்­கு­தல் அரங்­கே­றி­யுள்­ளது. இக்­கொலை வழக்­கில் மூத்த மாண­வர்­கள் உள்­பட 14 பேரை செட்­டி­பா­ளை­யம் போலீ­சார் கைது செய்து, எஸ்சி/எஸ்டி வன்­கொ­டுமை தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் வழக்­குப் பதிவு செய்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கோவை பீள­மேடு உடை­யாம்­பா­ளை­யம் பகு­தி­யில் 25 வய­தான நவீன் என்ற இளை­ஞர் பட்­டப்­ப­க­லில் ஒரு கும்­ப­லால் விரட்­டிச் சென்று சர­மா­ரி­யா­கக் கத்­தி­யால் குத்­திக் கொல்­லப்­பட்­டார். அப்­ப­கு­தி­யில் உள்ள சமூக விரோ­தக் கும்­ப­லு­டன் ஏற்­பட்ட திடீர் வாக்­கு­வா­தம் பொது­வெ­ளி­யில் பெரும் வன்­மு­றை­யாக மாறி­யது. மக்­கள் நட­மாட்­டம் மிகுந்த பகு­தி­யில் பட்­டப்­ப­க­லில் அரங்­கே­றிய இக்­கொலை, குடி­யி­ருப்­புப் பகு­தி­க­ளில் ஆயு­தக் கலாச்­சா­ரம் அதி­க­ரித்­துள்­ளதை வெளிச்­சம் போட்­டுக் காட்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தென் மாவட்­ட­மான திரு­நெல்­வேலி மாவட்­டம் வீர­வ­நல்­லூர் அருகே வள்­ளத்து நத்­தம் பகு­தி­யில் நடந்த சம்­ப­வம் பெரும் பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது. 40 வய­தான காளி­முத்து என்­ப­வர் தனது இரு குழந்­தை­க­ளு­டன் இரு­சக்­கர வாக­னத்­தில் சென்­ற­போது, காரில் வந்த மர்ம கும்­பல் வாக­னத்­தின் மீது மோதி­யது. இதில் அவ­ரது 5 வயது மகன் சம்­பவ இடத்­தி­லேயே உடல் நசுங்கி உயி­ரி­ழந்த நிலை­யில், காளி­முத்­துவை அக்­கும்­பல் அரி­வா­ளால் வெட்­டிக் கொலை செய்­தது. முன்­வி­ரோ­தம் கார­ண­மாக அரங்­கே­றிய இக்­கொ­டூ­ரச் சம்­ப­வம் தொடர்­பாக தனிப்­படை போலீ­சார் 3 முக்­கி­யக் குற்­ற­வா­ளி­க­ளைக் கைது செய்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை புது வண்­ணா­ரப்­பேட்டை இந்­திரா காந்தி நகர் அருகே, விளை­யாட்டு மைதா­னத்­தில் ஏற்­பட்ட வாய் தக­ராறு பின்­னர் கோஷ்டி மோத­லாக வெடித்­தது. இதன் தொடர்ச்­சி­யாக 25 வய­தான விஷ்ணு என்ற கடை உரி­மை­யா­ளரை ஒரு கும்­பல் வழி­ம­றித்­துத் தாக்­கி­ய­தில், தலை­யில் பலத்த காய­ம­டைந்து மருத்­து­வ­ம­னை­யில் உயி­ரி­ழந்­தார். இச்­சம்­ப­வத்­தில் தொடர்­பு­டைய 6 பேரை புது வண்­ணா­ரப்­பேட்டை போலீ­சார் கைது செய்து நீதி­மன்­றக் காவ­லுக்கு அனுப்­பி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க., அ.தி.­மு.க. உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­கள் இந்த அடுத்­த­டுத்த சொதப்­பல்­கள், தவ­று­கள், வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளைக் கையில் எடுத்து விஜய் அரசை நோக்கி கடு­மை­யான கேள்­வி­களை எழுப்பி வரு­கின்­றன. புதிய அர­சின் நிர்­வாக அனு­ப­வ­மின்மை, உள­வுத்­து­றை­யின் தோல்வி மற்­றும் போலீ­சா­ரின் கண்­கா­ணிப்­புக் குறை­பாடே அர­சின் தோல்­விக்கு கார­ணம் என்று குற்­றம் சாட்­டப்­ப­டு­கி­றது.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15.5">பு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">திய அமைச்­சர்­க­ளின் நிர்­வா­கச் சுமை கார­ண­மாக, அனைத்து முக்­கிய முடி­வு­க­ளும் முத­ல­மைச்­ச­ரின் தனிச் செய­ல­கம் வழி­யா­கவே எடுக்­கப்­ப­டு­கின்­றன. இந்த அதீத அதி­கா­ரக் குவிப்­பால் சுமார் 1,400-க்கும் மேற்­பட்ட அரசு உத்­த­ர­வு­கள் (G.O.) மற்­றும் டெண்­டர் ஒப்­பு­தல்­கள் தேக்­க­ம­டைந்­துள்­ளன. குறிப்­பாக நெடுஞ்­சா­லைத்­துறை மற்­றும் ஊரக வளர்ச்­சித் துறை­க­ளில் களப்­ப­ணி­கள் வேகம் இழந்­துள்­ளன.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
<block id="subarticle2" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">தி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">.மு.க., அ.தி.­மு.க. உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­கள் இந்த அடுத்­த­டுத்த சொதப்­பல்­கள், தவ­று­கள், வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளைக் கையில் எடுத்து விஜய் அரசை நோக்கி கடு­மை­யான கேள்­வி­களை எழுப்பி வரு­கின்­றன. புதிய அர­சின் 
நிர்­வாக அனு­ப­வ­மின்மை, உள­வுத்­து­றை­யின் தோல்வி மற்­றும் போலீ­சா­ரின் கண்­கா­ணிப்­புக் குறை­பாடே அர­சின் தோல்­விக்கு கார­ணம் என்று குற்­றம் சாட்­டப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>