<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,504,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Aug 17 2026 22:20:23 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260818T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="18082026-MDU-06" position.sequence="06" ex-ref="18082026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="80">மேக்கே தாட்டு அணை! ஒருமைப்பாட்டின் மீது வைக்கும் வேட்டு!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup851805_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">  </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15.5">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ந்­திய நிலப்­ப­ரப்பு ஒரு துணைக்­கண்­டம் என புவி­யி­யல் அறி­ஞர்­கள் வரை­ய­றுத்­துள்­ளார்­கள். எனவே, இங்கு புவி­யி­யல் அமைப்பு மலைத்­தொ­டர்­கள், பீட­பூ­மி­கள், சம­வெ­ளி­கள், பள்­ளத்­தாக்­கு­கள் 
உள்­ள­டக்­கிய பகு­தி­கள் இயற்­கை­யா­கவே அமைந்­தி­ருக்­கும். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்­கள் 15ஆம் நாள் இந்­தியா விடு­தலை பெற்ற பின்­னர், 1956 ஆம் ஆண்டு மொழி­வாரி மாநி­லங்­க­ளா­கப் பிரிக்­கப்­பட்ட­ பொழுது, கேர­ளா­விற்­கும், தமிழ்­நாட்­டிற்­கும் இடைப்­பட்ட எல்­லைப் பகு­தி­யான தேவி­கு­ளம் பீர்­மேடு  பகு­தி­
க­ளில் தமி­ழர்­கள் அதி­கம் வாழ்ந்து வரு­கின்­ற­மை­யால், அந்­தப் பகு­தி­கள் தமிழ்­நாட்­டிற்­கு­ரி­யது என வாதா­டப்­பட்­டது. அதற்­கா­கப் போரா­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதே­போன்று, கர்­நா­டக மாநி­லத்­தில் உள்ள குட­குப் பகு­தி­யில் தமி­ழர்­கள் அதி­கம் வாழ்­கி­றார்­கள். மேலும் காபி, தேயி­லைத் தோட்ட உரி­மை­யா­ளர்­க­ளா­க­வும் இருக்­கி­றார்­கள் என்ற வாதம் முன்­வைக்கப்­பட்டு, 
குட­குப்­ப­குதி தமிழ்­நாட்­டு­டன் இணைக்­கப்­பட வேண்­டும் என்ற கோரிக்கை வலி­யு­றுத்­தப்­பட்­டது. அதற்­காக போரா­டப்­பட்­டது. அது­போன்று திருத்­தணி, திருப்­பதி குறித்­தும் இத்­த­கைய வாதங்­கள் முன்­வைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அன்­றை­ய­தி­னம் தமிழ்­நாட்­டில் தேசி­யத் தலை­வர்­க­ளாக கரு­தப்­பட்­ட­வர்­க­ளில் ஒரு­வ­ரான பெருந்­த­லை­வர் காம­ரா­ஜ­ரும், காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சார்ந்த மற்­ற­வர்­க­ளும் தேவி­கு­ளம் பீர்­மேடு பகு­தி­யும், குட­குப் பகு­தி­யும் தமிழ்­நாட்­டு­டன் இணைக்­கா­விட்­டா­லும், விடு­த­லைப் பெற்ற இந்­திய பகு­தி­யில்­தானே இருக்­கிறது என்ற வாதம் முன்­வைக்­கப்­பட்டு மேல் குறிப்­பிட்ட பகு­தி­கள் முறையே கேர­ளா­வோ­டும், கர்­நா­ட­கத்­தோ­டும்  இணைக்­கப்­பட்­டது. அன்­றைய தினம் தேசிய உணர்­வு­மிக்க பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் போன்­ற­வர்­கள் நாட்­டி­னு­டைய ஒற்­றுமை உணர்­வுக்கு ஊறு விளை­வித்­து­வி­டக்­கூ­டாது என்­கின்ற தேசி­யக் 
கண்­ணோட்­டத்­து­ட­னும் இந்­தப் பகு­தி­க­ளெல்­லாம் 
விட்­டுக்­கொ­டுத்து, சம­ரச ஏற்­பாட்டை செய்­த­தன் மூலம் இந்­திய நாட்­டின் ஒற்­று­மையை வலி­மைப்­ப­டுத்­தி­னார்­கள் என்­பது வர­லாறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆந்­தி­ரா­விற்­கும், தமிழ்­நாட்­டிற்­கும் இடைப்­பட்ட 
எல்­லைப் பகு­தி­யான திருத்­தணி– திருப்­பதி பகு­தி­க­ளில், திருத்­தணி தமிழ்­நாட்­டிற்­கும், திருப்­பதி ஆந்­தி­ரா­விற்­கும் கிடைக்­கு­மாறு சம­ரச ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. இதில், இந்த மொழி­வாரி மாநில பிரி­வி­னை­யில் தமிழ்­நாட்­டிற்கு உரு­வான சங்­க­டம் என்­பது பெரி­யாறு அணை­யின் நீர்ப்­பி­டிப்­புக்­கான பகு­தி­யும், கேர­ளா­விற்கு ஒதுக்­கப்­பட்ட தேவி­கு­ளம் பீர்­மேடு  பகு­தி­யி­லுள்­ளது. இது­போன்று காவிரி நதி­யின்­மீது தமிழ்­நாட்­டில் கட்­டப்­பட்­டுள்ள மேட்­டூர் அணை­யின் நீர்ப்­பி­டிப்­புப் 
பகு­தி­கள் கர்­நா­ட­கப் பகு­தி­யான குட­குப் பகு­தி­யில் பெரும்­பா­லும் உள்­ளது. மேலே குறிப்­பிட்ட இந்­தப் 
பகு­தி­கள் கேர­ளா­விற்­கும், கர்­நா­ட­கத்­திற்­கும் ஒதுக்­கப்­பட்­ட­பொ­ழுது, அன்­றைய தேசி­யத் தலை­வர்­கள் இன்று எழுந்­துள்ள நீர்ப்­பங்­கீட்டு பிரச்­சி­னையைப் ­­போல எதிர்­கா­லத்­தில் உரு­வா­காது என்று கரு­தி­னர். அப்­ப­டியே வந்­தா­லும் நடு­வன் அரசு தேசிய உணர்­வோடு, பிராந்­திய உணர்­வு­க­ளுக்கு சிறி­தும் இடம்­கொடுக்­கா­மல் சுமூ­க­மாக தீர்த்­து­வைக்­கும் என்று நம்­பி­னர். ஆனால், காலச் சுழற்­சி­யில் அர­சி­யல் மாற்­றங் ­கள் கார­ண­மாக பெரி­யாறு அணை குறித்­தும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காவிரி நீர் பங்­கீடு குறித்­தும் தொடர்ந்து திட்­ட­மிட்­டுப் பிரச்­சி­னை­கள் உரு­வாக்­கப்­ப­டு­கி­றது. வழக்­கு­கள் 
உச்­ச­நீ­தி­மன்­றம் வரை­யி­லும் சென்­றது. காவி­ரி­நீர் பங்­கீட்­டுக்கு நடு­வர் மன்­ற­மும் அமைக்­கப்­பட்டு தீ ர்ப்­ப­ளித்­தது. ஆனா­லும் கர்­நா­டக அர­சும், கேரள அர­சும் மாறி­மாறி பிரச்­சி­னை­களை உரு­வாக்கி உரிய நீர்ப் பங்­கீட்­டினை வழங்க மறுக்­கி­றது. பெரி­யார் அணையை பொருத்­த­மட்­டில் இன்­றும் வலி­மை­யா­கத்­தான் உள்­ளது என்று அறி­வி­யல் வல்­லு­நர்­கள் சான்­ற­ளித்­தப்­பின்­ன­ரும் அணை­யின் நீர் கொள்­ள­ளவு 152–அடி­யி­லி­ருந்து 
நீர்­மட்­டம் குறைக்­கப் பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்கு கார­ணம் கேரள மாநி­லத்­தில் உள்ள இடுக்கி நீர் தேக்­கத்­திற்கு தண்­ணீர் திருப்பி­ விடப்­ப­ட­வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் பெரி­யாறு அணை­யின் நீர்­மட்­டத்தை குறைப்­ப­தற்கு பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்­டார்­கள். தொடர்ந்து பல்­வேறு கார­ணங்­களை­யும் ஒவ்­வொரு ஆண்­டும் முன்­வைக்­கி­றார்­கள். மேலும் இதே­போன்­று­தான் கர்­நா­ட­கா­வி­லும் காவி­ரி­யின் உப நதி­க­ளில் (Tributaries)  அணை­க­ளைக் கட்டி வைத்­தி­ருக்­கி­றார்­கள். நடு­வர் மன்ற தீர்ப்­பிற்­குப் பின்­ன­ரும், தீர்ப்­பின்­படி வழங்­கப்­பட்ட காவிரி நதி­நீர் 
பங்­கீட்டு அள­வும் திட்­ட­மிட்­டுக் குறைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கர்­நா­டக அர­சும், கேரள அர­சும் ஒரு கால­கட்­டத்­தோடு இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க மறுக்­கி­றது. தொடர்ந்து ஆண்­டு­தோ­றும் இந்­தப் பிரச்­சினை­களை ஏதா­வ­தொரு வடி­வத்­தில் உரு­வாக்கி காலத்தே பாச­னத்­திற்கு தண்­ணீர் திறப்­ப­தற்கு தடை­களை உரு­வாக்­கு­கி­றது. இந்­தப் பிரச்­சி­னை­க­ளில் குறிப்­பாக கர்­நா­ட­கா­விற்­கும், கேர­ளா­விற்­கும் உள்ள சாத­க­மான சூழ்­நிலை எது­வெ­னில் அவர்­க­ளது 
மாநி­லங்­கள் மேல்­ப­கு­தி­யில் இருக்­கி­றது. நம்­மு­டைய தமிழ்­நாடு வடி­கால் பகு­தி­யில் அமைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காவிரி நதி­நீர் பிரச்­சி­னை­யைப் பொருத்­த­மட்­டில் அவர்­க­ளுக்கு காவி­ரி­யின் மேல் ஆயக்­கட்டு உரிமை (Upper Riparian Rights) இருக்­கி­றது. அதே­போன்று காவி­ரி­யின் கீழ் ஆயக்­கட்டு உரிமை (Lower Riparian Rights) தமிழ்­நாட்­டிற்கு இருக்­கி­றது. இதில், காவி­ரி­யாற்­றுப் பாச­னப்­ப­கு­தி­க­ளில் மேல் ஆயக்­கட்டு பகு­தி­யும், கீழ் ஆய­கட்டு பகு­தி­யும் சரி­நி­கர் சம­மான பங்­கீட்டு 
உரி­மை­யைப் பெற்ற பகு­தி­க­ளா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், இந்த நதி­நீர் பங்­கீட்­டுக் கோட்­பாட்­டைத் தொடர்ந்து கர்­நா­டக அரசு மதிப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. கர்­நா­டக மாநில காவிரி நதி­நீர் பாச­னப்­ப­குதி மேல் பகு­தி­யில் இருப்­ப­தால் ஆங்­காங்கே உப­ந­தி
­க­ளி­லும், கிளை நதி­க­ளி­லும் தடுப்­ப­ணை­கள் கட்டி காவிரி ஆற்­றின் தமிழ்­நாட்­டுக்­கான நீர்­வ­ரத்தை கணி­ச­மாக குறைத்து விடு­கி­றார்­கள். கர்­நா­டக அரசு இந்த திட்­ட­ மிட்ட நட­வ­டிக்­கை­யால் மேட்­டூர் அணை நிரம்­பு­வ­தில் ஆண்­டு­தோ­றும் சிக்­கல் ஏற்­ப­டு­கி­றது. இத­னால் தமிழ்­நாட்­டி­னு­டைய நெற்­க­ளஞ்­சி­யம் என்று தொன்­று­தொட்டு பாராட்­டப்­பட்ட தஞ்சை தரணி காலத்தே நெற்­பயிர் செய்­திட இய­லாத சூழ்­நி­லையை ஒவ்­வொரு ஆண்­டும் கர்­நா­டக அர­சால் திட்­ட­மிட்டு உரு­வாக்­கப்­படு­கி­றது. கர்­நா­டக அர­சின் இந்த ஒரு­த­லைப்­பட்­ச­மான சிந்­த­னை­யின் உச்­ச­கட்­ட­மாக தமி­ழக எல்­லைப் பகு­தி­யி­லி­ருந்து 15 கிலோ­மீட்­டர் தொலை­வில் உள்ள மேக்­கே­தாட்டு பகு­தி­யில் அணை கட்­டு­வ­தற்­கான முயற்­சியை தீவி­ர­மாக மேற்­கொண்­டுள்­ளார்­கள். கர்­நா­டக அர­சின் இந்த முயற்சி நெற்­க­ளஞ்­சி­ய­மான தஞ்சை தர­ணியை பாலை­வ­ன­மாக்­கி­வி­டும் என்ற அச்­சம் ஒவ்­வொரு தமி­ழ­ரு­டைய நெஞ்­சத்­தி­லும் கொழுந்­து­விட்டு எழத்  தொடங்­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டுக் காவி­ரிப்­ப­டுகை விவ­சா­யி­க­ளின் நீரா­தா­ர­மான காவிரி ஆற்­றின் குறுக்கே மேக்கே தாட்­டு­வில் தடுப்பு அணை கட்ட கர்­நா­டக அரசு எடுக்­கும் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களை தடுக்­கும் பொருட்­டும் டெல்டா விவ­சா­யி­களை ஒர­ணி­யில் திரட்­டும் பொருட்­டும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில் கடந்த 03.08.2026 அன்று தஞ்­சை­யில் தமி­ழக சட்­ட­மன்ற எதிர்க்­கட்சி தலை­வ­ரும், இயக்­கத்­தின் இளை­ஞ­ரணி செய­லா­ள­ரும், தமி­ழக அர­சி­யல் வானில் வளர்­பி­றை­யாக வளர்ந்­து­வ­ரும் இளம்­த­லை­வ­ரு­மான  உத­ய­நிதி ஸ்டாலின் தலை­மை­யில் நடை­பெற்ற அறப்­போ­ராட்­ட­மும், அதில் அவர் பேசி­யதை, பழ­னி­வேல் கம்­பால் அடித்­தார் என்­பதை பழனி, வேல்­கம்­பால் அடித்­தார் என்று  பொருள் கொள்­வ­தைப்­போல் தவ­றா­கப் புரிந்­து­கொண்டு அவரை கைது செய்­யத்­து­டித்த காவல்­து­றை­யும் அதற்கு தூப­மிட்ட ஆளு­கிற அர­சின் ஆண­வ­மும் அதை முனை­ம­ழுங்­கச் செய்த மேதகு சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தின் இடைக்­கால பிணை­யும் அதனை தொடர்ந்து  நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் நம்­மு­டைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நடத்­திய ஆர்ப்­பாட்­ட­மும் என்று  தள­பதி முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் காவிரி படுகை விவ­சா­யி­க­ளுக்­காக எடுத்த முயற்­சி­க­ளும் தொடுத்த கணை­க­ளும் கார் உள்­ள­வரை காவிரி நீர் உள்ள வரை காலத்­தின் பக்­கத்­தில் கல்­வெட்­டு­க­ளாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காவி­ரி­ந­தி­நீரை பங்­கீ­டு­வது தொடர்­பாக தமிழ்­நாடு மற்­றும் கர்­நா­டக மாநி­லங்­கள் இடையே அரை நூற்­றாண்­டுக்­கும் மேலாக நதி­நீர் தாவா இருந்­து­வ­ரும் நிலை­யில் நடு­வர் மன்­றம் அமைக்­கப்­பட்­டது. அதன் இடைக்­கால தீர்ப்­பின்­படி தமிழ்­நாட்­டிற்கு 205 
டி.எம்.சி. தண்­ணீர் தர­வேண்­டும் என்ற உத்­த­ரவு கிடைக்­க­பெற்­றது. அதன்­பின்­னர் நடு­வர்­மன்­றம் வழங்­கிய இறு­தித் தீர்ப்­பின்­படி 192 டி.எம்.சி.யாக குறைந்த நிலை­யில் அதற்கு எதி­ராக அன்­றைய 
கர்­நா­டக அரசு உச்­ச­நீ­தி­மன்­றத்­தில்செய்த மேல்­மு­றை­யீட்­டில் தமிழ்­நாட்­டிற்கு வழங்க வேண்­டிய தண்­ணீ­ரின் அளவு 192 டி.எம்.சி. லிருந்து 177.25 டி.எம்.சி.யாக மீண்­டும் குறைக்­கப்­பட்டு தீர்ப்பு வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், காவி­ரிப்­ப­டுகை மாவட்­டங்­க­ளில் குறுவை, சம்பா மற்­றும் தாளடி பரு­வங்­க­ளில் 
முப்­போ­கம் விவ­சா­யம் செய்­வ­தற்கு குறைந்­தது 250 முதல் 300 டி.எம்.சி. தண்­ணீர் தேவை­ப­டும்­நி­லை­யில் மேற்­படி உச்­ச­நீ­தி­மன்­றம் வழங்­கிய தீர்ப்­பின்­படி 177.25 டி.எம்.சி. தண்­ணீரை வேறு­வ­ழி­யின்றி தமிழ்நாடு ஒப்­புக்­கொண்­ட­போ­தும் காலப்­போக்­கில் அதை­யும் தரு­வ­தற்கு மனம் இல்­லா­மல் கர்­நா­ட­கம் மறுத்து வரு­வ­தற்கு கடந்த கால நிகழ்­வு­களே சான்­று
­க­ளா­கும். ஏற்­க­னவே தமிழ்­நாடு அரசு சட்­டப்­படி காவிரி நீரில் பெற்ற உரி­மை­களை தக்­க­வைத்­துக் கொள்­வ­தற்கு மீண்­டும் சட்­டப்­படி போராட வேண்­டிய நிலைக்­குத் தள்­ளப்­பட்­ட­தால், யானை வரும் பின்னே மணி ஒசை­வ­ரும் முன்னே என்­ப­தற்கு எடுத்­துக்­காட்­டாக தமிழ்­நாடு அரசு உச்­ச­நீ­தி­மன்­றம் நாடு­வ­தற்கு முன்பே திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு தொடுத்­ததை நாட்­டு­மக்­க­ளும் டெல்டா விவ­
சா­யி­க­ளும் நன்கு அறி­வார்­கள். என்­ன­தான் சட்­ட­ரீ­தி­யாக போரா­டி­னா­லும் கர்­நா­டக மாநி­லத்­தில் உள்ள அணை­க­ளில் தண்­ணீர் நிரம்பி வழிந்­தால் அல்­லது வழி­யக்­கூ­டிய சூழ்­நிலை வரும் போது மட்­டுமே கடந்த காலங்­க­ளில் கர்­நா­டக அரசு தண்­ணீர் திறந்­து­விட்­ட­தாக தப்­புக்­க­ணக்கு காட்டி வரு­கி­றது. அப்­ப­டி­தான் இப்­போ­தும்  கர்­நா­ட­கத்­தின் கபி­னி­அணை நிரம்பி ததும்பி வழி­யும் உப­ரி­நீர் தமிழ்­நாட்­டிற்கு வந்து கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவ்­வாறு கடந்த கால் நூற்­றாண்டு காலத்­தில் 2005–2006,   2007–2008, 2018–2019, 2022–2023 
மற்­றும் 2025–2026 ஆகிய ஐந்து ஆண்­டு­க­ளில் 
மட்­டுமே வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்டு உப­ரி­நீர் கட­லில் கலக்­கும் நிலை ஏற்­பட்ட போது­மட்­டுமே தமி­ழ­கத்­திற்கு போது­மான தண்­ணீர் வந்­தது. மற்ற ஆண்­டு­க­ளில் 
தமி­ழ­கத்­திற்­கான தண்­ணீர் தேவை­யில் விவ­சா­ யத்­திற்­குப் பற்­றாக்­கு­றை­தான் நில­வி­யது. பெரும்­பா­லான ஆண்­டு­க­ளில் உப­ரி­நீ­ரும் காலம் கடந்து மழை பெய்­வதன் மூலம் வரு­வ­தால் வழக்­க­மாக ஜூன் 12ஆம் தேதி திறக்க வேண்­டிய மேட்­டூர் அணை திறப்­பும் தள்­ளிப் போகி­றது. அதன் விளை­வாக மூன்று போகங்­க­ளில் குறுவை, தாளடி ஆகிய இரு­போக சாகு­படி செய்­ய­மு­டி­ய­மால் ஒரு போக­மான சம்பா சாகு­படி மட்­டுமே சமீப காலங்­க­ளில் காவி­ரிப் படுகை பகு­தி­யில் விவ­சா­யம் நடந்து வரு­வதை அறி­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், குறு­வைப் பயிர்­கள் வாடி­னால் என்ன! டெல்டா விவ­சா­யி­கள் எக்­கேடு கெட்­டுப்­போ­னால் எங்­­களுக்கு என்ன! நாங்­கள் திட்­ட­மிட்­ட­படி “மேக்கே தாட்­டு­வில்” அணை­கட்­டியே தீரு­வோம் என்று எதிர்­வ­ரும் சட்­ட­மன்ற தேர்­தலை மன­தில் வைத்­துக் கொண்டு கர்­நா­டக முதல்­வர் சிவக்­கு­மார் வரிந்­து­கட்டி சூளு­ரைப்­ப­தும் அதற்­கான முயற்­சி­க­ளில் அனைத்­துக்­கட்சி கூட்­டத்தை கூட்டி முழு­வீச்­சில் ஈடு­பட்டு உள்­ளது. இது இந்­திய அர­சின் 
கூட்­டாட்­சிக்கு கேடு விளைப்­பது ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆம், மேக்கே தாட்டு இந்­திய ஒரு­மைப்­பாட்டை உடைக்­கும் வேட்டு ஆகி­வி­டக்­கூ­டாது என்­றால் 
ஒன்­றிய அரசு அனு­மதி வழங்­கக்­கூ­டாது. ஒரு­வேளை கர்­நா­ட­கத்­தின் புதிய அணை­கட்­டும் திட்­ட­மான மேக்கே தாட்­டு­வில் தடுப்­பணை கட்­டப்­பட்­டால் 
தமி­ழ்நாட்டிற்கு வரக்­கூ­டிய உப­ரி­நீர் வரத்­தும் இல்­லா­மல் போகும். அத­னால் நஞ்சை குலுங்­கும் தஞ்­சைத் தரணி பாலை­வ­ன­மா­கும் பரி­தா­ப­நிலை ஏற்­ப­டும். ஆகை­யால், சர்­வ­தேச நதி­நீர் சட்­ட­வி­தி­கள் காவிரி 
நடு­வர் மன்­றத்­தின் இறு­தித் தீர்ப்பு அதற்கு எதி­ரான 
உச்­ச­நீ­தி­மன்ற தீர்ப்பு, ஆகி­ய­வற்­றிற்கு எதி­ராக காவி­ரி­யின் குறுக்கே மேக்கே தாட்­டு­வில் அணை­கட்டி 
தண்­ணீ­ரின் போக்கை தடுத்து தமிழ் நாட்­டிற்­கு­மான நீர்­வ­ரத்தை தடை­செய்­வது நதி­நீர் தாவா சட்­டத்­திற்கு எதி­ரா­னது என்­ப­தோடு இயற்கை நீதிக்­கும் மாறா­னது ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என­வே­தான் முன்­னாள் முதல்­வ­ரும், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­வ­ரு­மான  மு.க.ஸ்டாலின் அவர்கள், பேச்­சு­வார்த்தை என்­கிற பெய­ரில் முதல்­வர் ஜோசப் விஜய் சருக்கி விழக்­கூ­டாது என்று எச்­ச­ரிக்கை உணர்­வோடு கால் நூற்­றாண்டு காலம் தமிழ்­நாட்­டின் முந்­தைய அர­சு­கள் நடு­வர்­மன்­றத்­தின் நெடிய படிக்­கட்­டு­க­ளில் நீண்­ட­கா­லம் ஏறி இறங்கி உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் கத­வு­களை தட்டி திட்­ட­மிட்டு நடத்­திய சட்­டப் போராட்­ட­களின் மூலம் தமி­ழ­கம் பெற்ற காவிரி நதி­நீர் உரி­மைக்­கான காவி­ரிப்­ப­டு­கை­யின் ஜீவா­தார உரி­மையை நிரந்­த­ர­மாக தக்­க­வைத்­துக் கொள்­வ­தற்கு தற்­போது மீண்­டும் உச்­ச­நீ­தி­மன்­றத்தை நாடி­யி­ருப்­பது காலப்­பொ­ருத்­தம் 
மட்­டும் அல்ல சால பொருத்­த­மும் ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காவிரி பிரச்­சி­னை­யில் காலத்தே செய்ய வேண்­டிய கட­மை­யை­யும், கைமாறு கரு­தாத கட­மை­யை­யும் ஒரு­சேர செய்­தி­ருக்­கும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் தலை­மை­யில் அணி­வ­குப்­போம்! ஆர்ப்­ப­ரிப்­போம்! செல்­வோம்! வெல்­வோம்! காவிரி நீரு­ரி­மைக்­குக் காப்­பு­ரிமை பெறு­வோம்.
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>