<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,393,958,1492" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Aug 17 2026 22:26:51 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260818T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="18082026-VLR-02" position.sequence="02" ex-ref="18082026-VLR-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">ஆய்வு என்ற பெய­ரில் ‘ரீல்ஸ்’ விட்டு</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="26"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="48">பட்­டா­சுத் தொழிலை முடக்­குவதா? </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">சிவகாசியில் – பல்லாயிரவர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்­னாள் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு கேள்வி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ThangamTennara_02_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சிவகாசி, ஆக. 18 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">“ஆய்வு என்ற பெய­ரில் ‘ரில்ஸ்’ விட்டு பட்­டா­சுத் தொழிலை முடக்­கி லட்சக்கணக்கான தொழிலாளர்களை வஞ்சிப்பதா?” என்று சிவகாசியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்­னாள் அமைச்­சரும், மாவட்டக் கழகச் செயலாளருமான தங்­கம் தென்­ன­ரசு பேசும்போது கூறினார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விரு­து­ந­கர் மாவட்­டம் சிவ­கா­சி ­யில், பட்­டா­சுத் தொழிலை முடக்­கும் வகை­யில் ஆய்வு என்ற பெய­ரில் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­ப­டும் நட­ வ­டிக்­கை­க­ளைக் கண்­டித்து, விரு­து­ந­கர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்­பில் கண்­ட­னப் போராட்­டம் நடை­பெற்­றது. இந்த போராட்­டத்­தில் கலந்து கொண்டு விரு­து­ந­கர் வடக்கு மாவட்டக் கழகச் செய­லா­ள­ரும்,திருச்­சுழி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மானதங்­கம் தென்­ன­ரசு பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எழுச்சி மிகுந்த வகை­யில் போராட்­டக் குரலை உரக்க எழுப்பி, செய­லற்று கிடக்­கக்­கூ­டிய த.வெ.க. அர­சி­னு­டைய செவிப்­ப­றை­க­ளிலே நமது முழக்­கம் மோதி முழங்­கட்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தப் போராட்­டம் நம்­மு­டைய உரி­மை­க­ளைப் பாது­காக்­க­வும், பட்­டா­சுத் தொழி­லின் வாழ்­வா­தா­ரத்­தைக் காப்­பாற்­ற­வும், இந்த மண்­ணின் மர­பை­யும், நம் மண்­ணின் உயிர்த்­தொ­ழி­லான பட்­டா­சுத் தொழி­லின் ஜீவ­நா­டி­யை­யும் பாது­காக்­க­வும் நடை­பெ­று­கி­றது. இதில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் அட­லே­று­ க­ளும், பல்­வேறு வணி­கச் சங்­கங்­க­ளின் நிர்­வா­கி­க­ளும், பொது­மக்­க­ளும் ஆயி­ரக்­க­ணக்­கில் திரண்­டுள்ள       இந்­தப் போராட்­டம், நமது ஒற்­று­மை­யை­யும், போராட்ட உணர்­வை­யும் வெளிப்­ப­டுத்­தும் எழுச்­சி­மிகு நிகழ்­வாக அமைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">பட்­டா­சுத் தொழிலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நசுக்­கும் த.வெ.க. அரசு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சிவ­கா­சி­யில் நடை­பெ­றும் இந்த எழுச்­சி­மிகு ஆர்ப்­பாட்­டத்­தில் நமது உரி­மைக்­கு­ரலை ஓங்கி   முழங்­கி­         யி­ருக்­கி­றோம். ஒரு அரசு தனது மக்­க­ளைக் காப்­ப­தில் எந்த அள­விற்கு முன்­மு­யற்­சி­யு­டன் செயல்­பட வேண்­டுமோ, அதே­போல் மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­திற்கு அடிப்­ப­டை­யாக இருக்­கும் தொழி­லை­யும் பாது­காக்க முன்­னு­ரிமை அளிக்க வேண்­டும். ஆனால், த.வெ.க. அரசு ஆட்­சிப் பொறுப்­பேற்ற இந்த மூன்று மாதங்­க­ளில் பட்­டா­சுத் தொழிலை நசுக்­கும் வகை­யி­லான நட­வ­டிக்­கை­க­ளையே மேற்­கொண்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பட்­டாசு மற்­றும் தீப்­பெட்­டித் தொழி­லில் உல­க­ள­வில் சிறப்­பான 
இடத்­தைப் பெற்­றுள்ள சிவ­கா­சி­யில், ஏறத்­தாழ நூற்­றாண்டு கால­மாக      இந்­தத் தொழில் செழித்து வளர்ந்து வந்­துள்­ளது. இந்­தத் தொழிலை நம்பி     ஆயி­ரக்­க­ணக்­கான,   லட்­சக்­க­ணக்­கான குடும்­பங்­கள் வாழ்ந்து வரு­கின்­றன. இந்த பட்­டா­சுத் தொழில் நமது மாவட்­டத்­தின் ஜீவா­தா­ரத் தொழில். எனவே, இந்த அரசு ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­வு­டன் இந்­தத் தொழி­லைக் காப்­பாற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருக்க வேண்­டும். ஆனால், கடந்த மூன்று மாதங்­க­ளில் தொழிலை நசுக்­கும் நட­வ­டிக்­கை­களே மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">முழு­மை­யாக முடக்கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பட்­டா­சுத் தொழி­லைப் பாது­காக்க வேண்­டும் என்று நாம் கூறு­வது ஏதோ சில நிறு­வ­னங்­க­ளைப் பாது­காக்க வேண்­டும் என்­ப­தற்­காக அல்ல. இந்­தத் தொழிலை நம்­பி­யுள்ள தொழி­லா­ளர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைப் பாது­காப்­ப­தற்­கா­கத்­தான். இந்த வட்­டா­ரத்­தில் 6,000க்கும் மேற்­பட்ட பட்­டா­சுத் தொழிற்­சா­லை­கள் உள்ள நிலை­யில், இதன்­மூ­லம் 10 லட்­சத்­திற்­கும் மேற்­பட்­டோர் நேர­டி­யா­க­வும் மறை­மு­க­மா­க­வும் வேலை­வாய்ப்­பைப் பெற்று வரு­கின்­ற­னர். இத்­தொ­ழில் முழு­மை­யாக முடங்­கும் நிலையை கண்­டித்­துத்­தான்       இந்­தப் போராட்­டம் நடை­பெ­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது குறித்த நமது உரி­மைக்­கு­ர­லைப் பிர­தி­ப­லிக்­கும் வகை­யில் சட்­டப்­பே­ர­வைக் கூட்­டத்­தொ­ட­ரி­லும், எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அனு­ம­தி­யு­டன், பட்­டா­சுத் தொழி­லைப் பாது­காக்க வேண்­டிய கட்­டா­யத்தை வலி­யு­றுத்தி திமுக சார்­பில் கவன ஈர்ப்­புத் தீர்­மா­னம்கொண்­டு­வர பரிந்­துரை வழங்­கி­யுள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும், இந்த அர­சின் தவ­று ­க­ளைச் சுட்­டிக்­காட்­டும் ஆற்­றல்­மிக்க எதிர்க்­கட்­சி­யாக திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் செயல்­பட்டு வரு­கி­றது. மக்­க­ளின் குரலை மக்­கள் மன்­றத்­தி­லும், சட்­ட­மன்­றத்­தி­லும் ஓங்கி எழுப்­பும் ஜன­நா­யக சக்­தி­யா­க­வும், ஆளும் கட்­சி­யின் தவ­று­க­ளைச் சுட்­டிக்­காட்­டும் வலி­மை­யான எதிர்க்­கட்­சி­யா­க­வும் கலை­ஞ­ரால் போற்றி வளர்க்­கப்­பட்ட தி.மு.க. மட்­டுமே செயல்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கவலைப்படாத அரசு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சமீ­பத்­தில் நமஸ்­கான்­பட்­டி­யில் ஏற்­பட்ட பட்­டாசுத் தொழிற்­சாலை விபத்­தில் மூன்று பேர் உயி­ரி­ழந்த சம்­ப­வத்­திற்கு ஆழ்ந்த இரங்­க­லைத் தெரி­வித்து கொள்­கி­றேன். இது­போன்ற துய­ரச் சம்­ப­வங்­கள் நடந்­தி­ருக்­கக் கூடாது. ஆனால், அங்­கொன்­றும் இங்­கொன்­று­மாக நடை­பெ­றும் விபத்­து­க­ளைக் கார­ணம் காட்டி ஒட்­டு­மொத்த பட்­டா­சுத் தொழி­லை­யும் ஒரே­டி­யாக முடக்கி நசுக்­கு­வது எந்த வகை­யில் நியா­ய­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏனெ­னில், ஒரு தொழிற்­சாலை மூடப்­பட்­டால் அது அந்த நிர்­வா­கத் ­தோடு முடிந்­து­வி­டாது. அந்­தத் தொழிற்­சா­லையை நம்­பி­யுள்ள தொழி­லா­ளர்­க­ளின் குடும்­பங்­க­ளின் நிலை என்­ன­வா­கும் என்­பதை        அதி­கா­ரி­கள் எண்­ணிப் பார்க்க வேண்­டும். முறை­யாக விதி­க­ளைப் பின்­பற்­றா­மல், அர­சின் அனு­ம­தி­யின்றி சட்­ட­வி­ரோ­த­மாக இயங்­கும் தொழிற்­சா­லை­கள் மீது அரசு நட­ வ­டிக்கை எடுப்­பதை யாரும் தடுக்­கப்   ­போ­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">யாரா­வது சட்­ட­வி­ரோ­த­மாக          இந்­தத் தொழி­லில் ஈடு­பட்­டி­ருந்­தால், அதை முழு­மை­யா­கத் தடுத்து நிறுத்தி, சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் மீது  கடு­மை­யான நட­வ­டிக்கை எடுப்­பதை நாம் வர­வேற்­கி­றோம். ஆனால், முறை­யாக உரி­மம் பெற்­றுள்ள தொழிற்­சா­லை­க­ளி­லும் திடீர் ஆய்­வு­கள் என்ற பெய­ரில் சென்று தொழிலை மொத்­த­மாக முடக்­கு­வது எந்த வகை­யில் நியா­யம் என்­ப­து­தான் எங்­க­ளு­டைய கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதி­லும் தீபா­வளி நெருங்கி வரும் நிலை­யில், அடுத்த இரண்டு, மூன்று மாதங்­கள்­தான் பட்­டாசு உற்­பத்­திக்கு மிக­வும் முக்­கி­ய­மான கால­கட்­டம். வெயில் காலத்­தில்­தான் பட்­டாசு      உற்­பத்­தியை மேற்­கொள்ள முடி­யும். மழைக்­கா­லம் தொடங்­கி­விட்­டால்உற்­பத்­தியை மேற்­கொள்ள முடி­யாது. உற்­பத்தி     செய்­யப்­பட்ட        பொருட்­க­ளுக்கு உரிய விலை கிடைக்­காத சூழ­லும் ஏற்­ப­டும். அதே­போல் உற்­பத்தி, பேக்­கிங், போக்­கு­வ­ரத்து என அனைத்­திற்­கும் போது­மான கால அவ­கா­சம் தேவைப்­ப­டு­வ­தால்          இப்­போதே உற்­பத்­தியை முடிக்க வேண்­டிய கட்­டா­யம் உள்­ளது. ஆனால், இந்த அரசு இது­கு­றித்து ஏதே­னும் கவ­லைப்­பட்­டி­ருக்­கி­றதா என்­பது தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">லட்­சக்­க­ணக்­கான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தொழி­லா­ளர்­க­ள் பாதிப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உற்­பத்­தி­யா­ளர்­கள் ஒரு­பு­றம் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், மறு ­பு­றம் சில்­லறை விற்­ப­னையா­ளர்­­   களும் கடை­க­ளில் பொருட்­களை வைத்து வியா­பா­ரம் செய்ய முடி­யாத நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ள­னர். சாதா­ரண    சிறு    வணி­கர்­க­ளும்,    லட்­சக்­க­ணக்­கான தொழி­லா­ளர்­க­ளும் பாதிக்­கப்­ப­டும் வகை­யில் ஆய்­வு­கள் என்ற பெய­ரில் அதி­கா­ரி­கள் மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­கள் கண்­டிக்­கத்­தக்­கவை. இதை உட­ன­டி­யாக நிறுத்த வேண்­டும். த.வெ.க. ஆட்சி வந்த உடனே சிவ­காசி மாறி­வி­டும் என்று கூறி­னீர்­கள். இந்த மூன்று மாதங்­க­ளில் என்ன மாற்­றம் வந்­துள்­ளது என கேள்வி எழுப்­பி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">கழக ஆட்சியில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">சிவகாசிக்கு பல்வேறு திட்டங்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும், தி.மு.க. தலை­மை­ யி­லான திரா­விட மாடல் ஆட்­சி­யில் ஐந்து ஆண்­டு­க­ளில் சாட்­சி­ய­பு­ரம் பாலம், திருத்­தங்­கல் பாலம், சிவ­காசி ரிங் ரோடு, சிவ­கா­சி –­ வி­ரு­து­ந­கர் நான்கு வழிச்­சாலை, மருத்­து­வ­மனை என பல்­வேறு உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் தலை­மை­யி­லான அரசு செய்து கொடுத்­தது. ஆனால், மாற்­றம் என்ற பெய­ரில் ஆட்­சிக்கு வந்த நீங்­கள், இருக்­கின்ற தொழி­லை­யும் கெடுத்­து­கொண்டு இருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும்,  பட்­டா­சுத்   தொழி­லா­ளர்­க­ளுக்கு இன்­சூ­ரன்ஸ் வழங்­கு­வோம் என்று கூறி­னீர்­களே, வழங்­கி­னீர்­களா?சிவ­கா­சி­யில் இருக்­கிற தொழில்­துறை அமைச்­சர், தேர்­தல்நேரங்­க­ளில் பட்­டா­சுத் தொழிற்­சா­லைக­ளுக்கு வந்து ரீல்ஸ் எடுத்­துப் பதி­விட்­டார். அதில் 10 கி.மீ. சுற்­ற­ள­வுக்கு ஒரு தீய­ணைப்பு நிலை­ய­மும், ஆம்­பு­லன்ஸ் வச­தி­யும் அமைக்­கப்­ப­டும் என்றுகூறி­னார். ஆனால், இந்த ஆண்­டுக்­கானபட்­ஜெட்­டில் அது­கு­றித்து எங்­கா­வது குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மொத்­தத்­தில், எதை கேட்­டா­லும் எல்­லாமே இல்லை, இல்லை என்று சொல்­வ­து­தான்   உங்­க­ளு­டைய மாற்­றம். ஆனால், இருக்­கி­றது,  இருக்­கி­றது என்று மக்­க­ளுக்கு தேவை­யான அத்­தனை திட்­டங்­க­ளுக்­கும் அள்­ளித் தந்­த­வர் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தொழில் முத­லீடு எங்கே? 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முன்­ன­தாக,  தொழில்  முதலீட்­டா­   ளர் மாநாடு நடத்தி ரூ.1 லட்­சம் கோடி முத­லீடு  கொண்டு  வந்­த­தாக  விளம்­ப­ரம் செய்­கி­றீர்­கள். ஆனால், உங்­கள்கால­டி­யில் இருக்­கக்­கூ­டிய பட்­டா­சுத் தொழிலை ஏன் நசுங்க செய்­கி­றீர்­கள்?. இதை காணும்­போது தன்­னைப்பெற்ற ஆத்தா கிண்ணி பிச்சை எடுக்­கி­றா­ளாம்; பிள்ளை கும்­பகோ­ணத்­   தில் கோதா­னம் பண்­ணு­தாம் என்ற பழ­மொ­ழி­தான் நினை­வுக்கு வரு­கி­றது. இந்த பழ­மொழி பெத்த ஆத்தா சாப்­பாட்­டுக் இல்­லா­மல் பிச்சை எடுத்­துக்­கிட்டு இருக்கா, அவ பெத்த புள்ள கும்­ப­கோ­ணத்­துக்கு போய் பசு­மாடு தானம் பண்­ணிக்­கிட்டு இருக்­கான் என்­ப­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­களை நம்பி வாக்­க­ளித்த சிவ­காசி தொழி­லா­ளர்­கள் வாழ்­வா­தா­ரத்தை இழந்து, லட்­சக்­க­ணக்­கானகுடும்­பங்­கள் கண்­ணீ­ரும் கம்­ப­லை­யு­ மா­கத் தவித்­துக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால், நீங்­கள் சென்னை மாந­கர அறை­க­ளில் உட்­கார்ந்து கொண்டு தொழில் முத­லீடு கொண்டு வந்­து­விட்­டோம், தமிழ்­நாடு தொழில் வளர்ச்­சி­யில் முன்­னே­றிக் கொண்­டி­ருக்­கி­றது, 1.5 டிரில்­லி­யன் அமெ­ரிக்­கன் டாலர் பொரு­ளா­தா­ரத்தை      நோக்­கிப் பய­ணிக்­கி­றோம் என்று கூறு­கி­றீர்­கள். இதைக் கேட்­கும்­போது அந்­தப் பழ­மொ­ழி­தான் நினை­வுக்கு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஸ்டிக்­கர் ஒட்­டும்அரசு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொடர்ந்து, இந்த ஆட்­சி­யில் ஒவ்­வொரு துறைக்­கும் வழங்க வேண்­டிய நிதி­யைக் குறைத்­தி­ருக்­கி­றீர்­கள். பட்­டா­சுத் தொழி­லா­ளர்­கள் மட்­டு­மல்ல, விவ­சா­யி­க­ளின் பயிர்க்­க­டன் தள்­ளு­படி, கல்­வித்­துறை நிதி என       பல்­வேறு துறை­க­ளி­லும் நிதி குறைக்­கப்­பட்­டுள்­ளது. திரா­விட மாடல் ஆட்­சி­யின் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த நல்ல திட்­டங்­க­ளுக்கு பெயர் மாற்­றம் செய்து, அதற்கு       த.வெ.க. அரசு ஸ்டிக்­கர் ஒட்­டிக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள். எல்­லா­வற்­றி­லும் வெற்றி, வெற்றி என்ற வார்த்­தை­யைச் சேர்த்­துக் கொள்­கி­றீர்­கள். ஆனால் அந்த வெற்றி உண்­மை­  யி­லேயே மக்­க­ளின் வெற்­றி­யாக இருக்­கி­றதா என்­றால் இல்லை. அவை வெற்­றித் திட்­டங்­க­ளாக இல்லை; வெற்­றுத் திட்­டங்­க­ளா­கத் ­தான் இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">த.வெ.க. அரசு இந்த மூன்று மாத காலத்­தில் முற்­றி­லு­மா­கத் தோல்­வி­ய­டைந்­துள்­ளது. அந்­தத் தோல்­வி­யின் வெளிப்­பா­டு­தான் அவர்­க­ளின் நிதி­நிலை அறிக்கை மக்­க­ளின் எதிர்­பார்ப்பை பூர்த்தி செய்­யாத நிலைக்கு சென்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விரு­து­ந­கர் மாவட்­டத்­தின் வாழ்­வா­தா­ர­மும், ஜீவா­தா­ர­மும் ஆன பட்­டா­சுத் தொழிலை முழு­மை­யா­கக் காப்­பாற்ற வேண்­டிய கடமை அர­சுக்கு உள்­ளது. எனவே, சட்­டப்­ப­டி­யும், மன­சாட்­சிப்­ப­டி­யும் நூறாண்டு கால­மாக இயங்கி வரும் இத்­தொ­ழி­லைப் பாது­காக்­கக்­கூ­டிய நட­வ­டிக்­கை­களை அரசு உட­ன­டி­யாக மேற்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்வாறு முன்­னாள் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு பேசினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>