<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,820,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 18 2026 03:51:51 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260818T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="18082026-VLR-03" position.sequence="03" ex-ref="18082026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="58">த.வெ.க. ஆட்சியில்தான் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரிப்பு!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="37">சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!...   முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="22">‘பவுடர் நுணுக்கி’ அமைச்சரிடம் விசாரணை நடத்தப்பட்டதா?</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆகஸ்ட் 13-ஆம் தேதி, வேலூர் மாவட்­டம், குடி­யாத்­தத்­தில், பெண் தலை­மைக் காவ­லர் தாம­ரைச்­செல்வி குத்­திக் கொலை செய்­யப்­பட்டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதே நாளில், திரு­வள்­ளுர் மாவட்­டம், கும்­மி­டிப்­பூண்டி சாணா­புத்­தூர் கிரா­மத்­தைச் சேர்ந்த ரஞ்­சன் என்­கிற இளை­ஞ­ரும் கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­ப­டிக் கொலை­கள் மட்­டு­மல்ல, பாலி­யல் வன்­கொ­டு­மைச் சம்­ப­வங்­க­ளும் எக்­கச்­சக்­க­மாக கடந்த ஒரு வாரத்­தில் நடந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கிருஷ்­ண­கிரி மாவட்­டத்­தில், 9 வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்­டுக்­குச் சென்று கொண்­டி­ருந்­த­போது, வழி­யில் கடத்­தப்­பட்டு பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளாக்­கப்­பட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தூத்­துக்­குடி மாவட்­டம், ஆறு­மு­க­நே­ரி­யில் ஆளுங்­கட்சி நிர்­வா­கி­கள் மீதே பாலி­யல் புகார்­கள் தொடர்ந்து வந்த வண்­ணம் இருக்­கின்­றன. அந்த மாவட்­டத்­தில் ஆளுங்­கட்சி நிர்­வா­கி­கள் மீது வரு­கின்ற இரண்­டா­வது பாலி­யல் குற்­றச்­சாட்டு இது.  ராணிப்­பேட்­டை­யில் ஆளுங்­கட்­சி­யின் மாவட்­டச் செய­லா­ளர் விஜய் மோகன்மேல் ஒரு பெண், பாலி­யல் குற்­றச்­சாட்டு சொல்­லி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">100 நாள் சாதனைஎன்று இந்த அரசு பெருமை பேசு­கிற இதே நேரத்­தில், தமிழ்­நாட்­டில் சட்­டம்-­­ஒ­ழுங்கு இந்த 100 நாட்­க­ளில் எந்த அள­வுக்கு மோச­மா­கி­யி­ருக்­கி­றது என்­ப­தற்கு, இந்த சம்­ப­வங்­களே சாட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­மா­தி­ரி­யான சம்­ப­வங்­கள் தொட­ரா­மல் இருக்க, இந்த அரசு என்­னென்ன நட­வ­டிக்­கை­கள் எடுக்கப் போகின்­றது?  மிக முக்­கி­ய­ மாக பள்ளி, கல்­லூ­ரி­க­ளில் வன்­மு­றைக்கு எதி­ரா­க­வும், ஒழுக்­கத்தை வளர்த்­தெ­டுக்­க­வும் கவுன்­சி­லிங் வகுப்­பு­களை நடத்த வேண்­டும்என்று, இந்த அர­சைக் கேட்­டுக் கொள்­கி­றோம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">போதைக்கு எதி­ரான தொடர் விழிப்­பு­ ணர்வை ஏற்­ப­டுத்த வேண்­டும்.  மிக முக்­கி­ய­மாக சட்­டம்-­­ஒ­ழுங்­குப் பிரச்­சி­னை­யைக் கட்­டுக்­குள் கொண்டு வர, இந்த அரசு உறு­தி­யான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று, எங்­கள் கட்­சி­யின் சார்­பாக கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">அமைச்­சர் கதை விட்­டார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாண்­பு­மிகு பேர­வைத் தலை­வர் அவர்­களே!   நம் அமைச்­சர் அவர்­கள் சம்­பந்­தப்­பட்ட ஒரு நப­ரின் பெயரை, இங்கு குறிப்­பிட்டு பேசி­யி­ருக்­கி­றார்.  அந்த சம்­பந்­தப்­பட்ட நப­ரின் மீது அப்­படி ஒரு குற்­றச்­சாட்டு எழுந்­த­வு­டன், எங்­கள் தலை­வர் அவர்­கள் அவ­ரைக் கைது செய்து, உட­ன­டி­யாக அவ­ரைக் கட்­சி­யில் இருந்து நீக்­கி­விட்­டோம். ஆனால், இவர்­கள் ஆட்சி என்ன லட்­ச­ணத்­தில் நடந்­து­கொண்டு இருக்­கி­றது என்­பதை மக்­கள் இன்று பார்த்­துக்­கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள்.  அவர்­க­ளின் அமைச்­சரேஐ.பி.எல். மேட்­சில் பவு­டர் நுணுக்­கிக்­கொண்டு, மாத்­திரை நுணுக்­கி­ னேன் என்று கதை விட்­டார்.  அவ­ரி­டம் உங்­கள் காவல்­துறை ஏதா­வது விசா­ரணை நடத்­தி­யதா? அவர் மீது ஏதா­வது நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது­மட்­டு­மல்ல, சமீப கால­மாக ஆளுங்­கட்­சி­யைச் சேர்ந்த பலர் போதைப்­பொ­ருள் வழக்­கில் தொடர்ந்து கைது செய்­யப்­பட்டு வரு­கி­றார்­கள்.  அமைச்­சர் அவர்­கள் பேசி­ய­தற்கு, ஏதா­ வது ஆதா­ரம் கேட்டு இருக்­கி­றீர்­களா? நாங்­கள் உட­ன­டி­யாக அவ­ரைக் கைது செய்­துள்­ளோம், அவ­ரைக் கட்­சி­யில் இருந்து நீக்கி இருக்­கி­றோம்.  உங்­கள் அமைச்­சர் ஐ.பி.எல் மேட்­சில் பவு­டர் நுணுக்­கிக்­கொண்டு இருந்­ததை, இந்த உல­கமே பார்த்­தது.  பல்­வேறு விமர்­ச­னங்­கள் வந்­தன.  குழந்­தைக்கு மாத்­திரை கொடுத்­தேன் என்று கதை விட்­டார்.  அதற்­காக ஏதா­வது விசா­ரணை நடத்தி இருக்­கி­றீர்­களா,  புகார் அல்­லது நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றீர்­களா என்­ப­தைக் கேட்க விரும்­பு­ 
கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாண்­பு­மிகு பேர­வைத் தலை­வர் அவர்­களே, கடந்த ஒரு வார கால­மாக தமிழ்­நாட்­டில் என்­னென்ன சட்­டம் - ஒழுங்­குப் பிரச்­சினை, போதைப்­பொ­ரு­ளால் என்­னென்ன பிரச்­சி­னை­கள் நடந்­தி­ருக்­கின்­றன என்று நான் மட்­டும் அல்ல, இங்கு இருக்­கின்ற அனைத்­துத் தலை­வர்­க­ளும் இந்த அர­சின் கவ­னத்­துக்கு எடுத்து வந்­தோமே தவிர, அதற்கு எந்த அமைச்­ச­ரும் சரி­யான பதி­லைத் தர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்கு மாறாக உங்­கள் ஆட்­சி­யில் இப்­படி நடந்­தது என்று குறை சொல்­லிக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.  அவர் போட்டோ எல்­லாம் காட்­டி­னார்.  எப்.ஐ.ஆர். பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது என்று சொன்­னார்.  இதி­லி­ருந்து என்ன தெரி­கி­றது, எங்­கள் ஆட்­சி­யில் நாங்­கள் நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றோம்.  எங்­கள் ஆட்­சி­யில் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.  நாங்­கள் கேட்­பது, ஏன் உங்­கள் ஆட்­சி­யில் நட­வ­டிக்கை எடுக்க மாட்­டேன் என்­கி­றீர்­கள் என்­ப­து­ தான்.  அமைச்­சர் அவர்­கள் ஒரு போட்டோ காட்­டி­னார்.  இன்­னொரு வீடியோ இருக்­கி­றது. அதை எல்­லா­ரும் பார்த்­தார்­கள், ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வும், உல­க­மும் பார்த்­தது.  இங்கு இருக்­கிற அமைச்­சர் ஒரு­வர் போதைப்­பொ­ருளை நுணுக்­கிப்போடு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த 5 ஆண்­டு­க­ளாக போதைப்­பொ­ருட்­களை ஒழிக்க, எங்­கள் தலை­வர், எங்­கள் முத­ல­மைச்­சர் சரி­யானநட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்ற கருத்து இங்கே வைக்­கப்­ப­டு­கி­றது.  அது தொடர்­பாக சில கருத்­து­களை இங்கே கூற விரும்­பு­கி­றேன். ஆட்­சிக்கு வந்த ஒரே ஆண்­டில் எங்­கள் தலை­வர் அவர்­கள், `போதைப் பொருள் இல்லாதமிழ்­நாடு’ என்ற இலக்­கோடு மது­வி­லக்கு அம­லாக்­கத் துறை­யை­யும், நார்­காட்­டிக்ஸ் இன்­ட­லி­ஜென்ட்ஸ் ஹீரோ, சி.ஐ.டி என்ற இரு பிரி­வு­களை ஒன்­றி­ணைத்து இ.பி.சி.ஐ.டி என்ற புதிய பிரிவை உரு­வாக்­கி­ய­வர் எங்­கள் தலை­வர்  
முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின், 
அன்­றைய முத­ல­மைச்­சர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர் அன்­றைக்கு அப்­ப­டிச் செயல்­பட்­ட­தால்­தான் கடந்த 5 ஆண்­டு­கால திரா­விடமாடல் ஆட்­சி­யில் இது­வரை இல்­லாத அள­வுக்குஒரு விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி, போதைப் பொருட்­க­ளைத் தொடர்ந்து எங்­க­ளின் அரசு பறி­மு­தல் செய்­தது.  இது தொடர்­பான புள்­ளி­வி­வ­ரங்­கள் தேவைப்­பட்­டால், அமைச்­ச­ரி­டமே இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கூடு­தல் தக­வல் தேவைப்­பட்­டால் அதை நாம் எங்­கே­யும் சென்று தேட வேண்­டிய அவ­சி­யம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு சென்னை மாந­கர கமி­ஷ­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள அமல்­ராஜ் ஐ.பி.எஸ் அவர்­க­ளி­டம் இந்த அரசு கேட்­டால், அவரே இந்த தக­வல்­க­ளைத் தெளி­வாக எடுத்து கொடுத்­தி­டு­வார்.  ஏனென்­றால், அவர்­தான் இன்­றைக்கு கமி­ஷ­ன­ராக இருக்­கி­றார்.  இந்த இ.பி.சி.ஐ.டி பிரி­வுக்­குத் தலை­மை­யேற்று நடத்­தி­ய­வ­ரும் அவர்­தான். அவ­ரி­டம் கேட்­டால் சரி­யாக சொல்­வார்.  எத்­தனை டன் கஞ்­சா­வைப் பறி­மு­தல் செய்­தோம்.  எத்­தனை பேரை நாங்­கள் கைது செய்­துள்­ளோம்.சிறப்பு புகார் எண்­கள் எத்­தனை அறி­வித்­தோம்.விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சி­கள் என இப்­படி எல்லா டேட்­டா­வும் அவ­ரி­டம் இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு­வேளை எங்­கள் திரா­விட மாடல் ஆட்­சி­யில் போதைப் பொரு­ளைத் தடுக்­கின்ற செயல்­பா­டு­கள் சரி­யாக நடக்­க­வில்லை என்று இந்த அரசு எங்­க­ளைக்குற்­றம் சாட்­டி­யது என்­றால், பிறகு எதற்கு அவ்­வ­ளவு பெரிய அதி­கா­ரிக்கு, இவ்­வ­ளவு முக்­கி­யத்­து­வம் வாய்ந்த சென்னை மாந­க­ராட்சி ஆணை­யர்பொறுப்­பைக் கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள் என்ற கேள்­வியை இந்த அர­சுக்கு வைக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேர­வைத் தலை­வர் அவர்­களே, போதைப் பொ­ருள் ஒழிப்பு மற்­றும் சட்ட விரோத கடத்­தல் தடுப்­புப் பணி­யைச் சிறப்­பாக மேற்­கொள்ளும் காவ­லர்­க­ளுக்கு இரண்டு நாட்­களுக்கு முன்பு, நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் விரு­து­கள் எல்­லாம் வழங்கி இருக்­கி­றார்.  அந்த விருது எதற்­காக என்று பார்த்­தீர்­கள் என்­றால், போதைப்­பொ­ருள் ஒழிப்பு மற்­றும் சட்ட விரோத கடத்­தல் நட­வ­டிக்­கை­யைச் சிறப்­பாக மேற்­கொண்­ட­தற்­காக, கடந்த ஒரு வரு­ட­மாக சிறப்­பா­கப் பணி­யாற்­றி­ய­தற்­காக 15 காவல்­துறை அதி­கா­ரி­கள் மற்­றும் காவ­லர்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் அவர்­களே விருது கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.  அந்த 15 காவல்­களுமே எங்­களின் ஆட்­சிக் காலத்­தில் பல்­வேறு வழக்­கு­களில் போதைப் பொருள் ஒழிப்பு நட­வ­டிக்­கை ­யைச் சிறப்­பாக மேற்­கொண்­ட­வர்­கள் என்று இன்­றைக்கு அரசு அறிக்கை கொடுத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விருது பெற்ற அந்த 15 காவ­லர்­க­ளும் எத்­தனை கிலோ போதைப் பொருட்­களை பறி­மு­தல் செய்­தார்­கள், எத்­தனை குற்­ற­வா­ளி­க­ளைக் கண்­டு­பி­டித்­துள்­ளார்­கள், எவ்­வ­ளவு நாட்­களுக்கு அவர்­க­ளுக்கு எல்­லாம் தண்­டனை வாங்­கிக் கொடுத்­துள்­ளார்­கள், இந்த விவ­ரங்­களை எல்­லாம், அரசு வெளி­யிட்ட செய்­திக் குறிப்­பில் தெளி­வா­கச் சொல்லி இருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">போதைப் பொருள் தடுப்­புக்கு எங்­கள் ஆட்­சி­யில் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்­றால், பிறகு எதற்கு இந்த காவ­லர்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் அவர்­கள் விருது கொடுத்­தார் என்­பதை இங்கு பதிய வைக்க விரும்­பு­கி­றேன். அமைச்­சர் அவர்­கள் சில கேள்­வி­க­ளைக் கேட்­கி­றார்.  அமைச்­சர் கேட்­கின்ற கேள்­வி­க­ளுக்கு எல்­லாம் நான்­தான் பதில் சொல்ல வேண்­டும் என்று அடம்பிடிக்­கி­றார். இன்று நான், அனைத்து எதிர்­கட்­சித் தலை­வர்­கள் எல்­லாம் சட்­டம்-­­ஒ­ழுங்கு சம்­பந்­த­மாக பேசிக்­கொண்டு இருக்­கி­றோம்.  அது சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர் எங்கே இருக்­கி­றார்.  அவர் ஏன் பதில் சொல்ல மறுக்­கி­றார் என்­ப­தை­யும் கேட்க விரும்­பு ­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு சட்­டப் பேர­வை­யில், எதிர்க்­கட்­சித் தலை­வர்உத­ய­நிதி ஸ்டாலின் அவர்கள் உரை ஆற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>