<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,67,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Aug 19 2026 03:39:44 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260819T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="19082026-CHN-09" position.sequence="09" ex-ref="19082026-CHN-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="29">அப்பாவை காணோம் என்றீர்கள்; அவர் வருகிறபோது நீங்களெல்லாம் இங்கே இருக்கமாட்டீர்கள்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">எங்கள் ஆட்சியில் வந்த 5 பேரிடர்களில் இருந்து</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="30"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="67">எந்தச் சேதாரமும் இல்லாமல் தமிழ்நாட்டை காப்பாற்றியவர் எங்கள் தலைவர்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் பேச்சு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup821360_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="KKSSRRamachand_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சென்னை, ஆக. 19–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சட்­டப்­பே­ர­வை­யில் மானி­யக் கோரிக்­கை­கள் மீதான விவா­தத்­தில் பேசிய முன்­னாள் அமைச்­சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இரா­மச்­சந்­தி­ரன், “அப்­பாவை காணோம் என்­றீர்­கள்’ அவர்வரு­கி­ற­போது, நீங்­க­ளெல்­லாம் இங்கேஇருக்க மாட்­டீர்­கள்” என்­றும் “எங்­கள் ஆட்­சிக் காலங்­க­ளில் வந்த 5 பேரி­டர்­க­ளில் இருந்து எந்த சேதா­ர­மும்இல்­லா­மல் தமிழ்­நாட்டை காப்­பாற்­றி­ய­வர் எங்­கள் தலை­வர்” என்­றும் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­ட­ப்பே­ர­வை­யில் மானி­யக் கோரிக்­கை­கள் மீதான விவா­தத்­தைத் தொடங்கி வைத்து கழக உறுப்­பி­னர் – முன்­னாள் அமைச்­சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இரா­மச்­சந்­தி­ரன் பேசி­ய­தா­வது:-–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேர­வைத் தலை­வர் அவர்­களே, எங்­க­ளு­டைய தலை­வர் கலை­ஞர் அவர்­கள் தன் நீண்­ட­நாள் பொது­வாழ்­வில் தமிழ்­நாட்டை அங்­கு­லம், அங்­கு­ல­மாக கட்­டி­யெ­ழுப்­பிய தலை­வர் கலை­ஞர்; ஒரு மகத்­தான சமூக நீதி தலை­வர் கலை­ஞர்; (மேசை­யைத் தட்­டும் ஒலி) விளிம்பு நிலை­யில் வாழ்ந்த கோடிக்­க­ணக்­கான மக்­க­ளின் கல்வி, பொரு­ளா­தா­ரம் வாழ்க்கைநிலையை அடி­யோடு மாற்­றிய மாபெ­ரும் தலை­வர் கலை­ஞர்; (மேசை­யைத் தட்­டும் ஒலி) அர­சி­யல் சமூ­கத்­தில் மட்­டு­மல்­லா­மல், நில உரி­மை­ யி­லும், சமூக நீதியை நிலை­நாட்­டிய தலை­வர் மற்­றும் நில உச்­ச­வ­ரம்பு தொடங்கி இல­வச வீட்­டு­ம­னைப் பட்டா வரை ஏழை, எளிய மக்­க­ளின் நிலம் சார்ந்த கன­வு­களை நிறை­வேற்­றி­யத் தலை­வர் கலை­ஞர் அவர்­கள்; (மேசை­யைத் தட்­டும் ஒலி) அந்­தக் கலை­ஞரை நான் வணங்கி எனது உரையை ஆரம்­பிக்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மரி­யா­தைக்­கு­ரிய பேர­வைத் தலை­வர் அவர்­களே, தலை­வர் கலை­ஞர், பேர­றி­ஞர் அண்ணா இல்லை என்று நினைத்­தோம், கவலை அடைந்­தோம்; ஆனால், தலை­வர் கலை­ஞர் அவர்­கள் இல்­லை­யென்று நினைத்­தோம், கவலை அடைந்­தோம்; இந்­தத் தலை­வர்­கள் எல்­லாம் இல்­லா­விட்­டா­லும் இவர்­க­ளின் மொத்த உரு­வ­மாக எங்­க­ளுக்­குக் கிடைத்த வழி­காட்­டும் தலை­வ­ரா­க­வும், (மேசை­யைத் தட்­டும் ஒலி) ஆளுமை மிக்­கத் தலை­வ­ரா­க­வும், தந்­தை­யைப்­போல் தமிழ்­நாட்டை செதுக்கி, செதுக்கி 11.19 சத­வி­கிதவளர்ச்­சி­யு­டன் இந்­தி­யா­வின் முதன்மைமாநி­ல­மாக உயர்த்­தி­யத் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­களை நான் வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் கொள்­கைப்­பி­டிப்­பும், தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் செயல்­தி­ற­னும், ஒருங்கே பெற்று, எந்த ஆதிக்­கத்­திற்­கும் அஞ்­சா­மல், எதை­யும் துணி­வோடு எதிர்­கொண்டு, எங்­க­ளுக்கு நம்­பிக்­கை­யூட்­டும் இளந்­த­லை­வர் எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­களை நான் வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேர­வைத் தலை­வர் அவர்­களே, நான் என்­னு­டைய 28 வது வய­தில் இந்­தச் சட்­ட­மன்­றத்­திற்­குள் நுழைந்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு பத்­தா­வது முறை­யாக சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக நான் தேர்வு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றேன். அதற்­காக என்­னு­டைய அருப்­புக்­கோட்டை தொகுதி மக்­க­ளுக்கு என்­னு­டைய நன்­றியை நான் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். பத்­தா­வது முறை­யாக வெற்றி பெறு­வ­தற்கு எனக்கு இடம் ஒதுக்கி கொடுத்த, தலை­வர் அண்­ணன், தள­பதி அவர்­க­ளுக்­கும் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். எதிர்க்­கட்­சித் துணைத் தலை­வர், கொறடா, துணைக் கொறடா அவர்­க­ளுக்­கும் என்­னு­டைய வணக்­கத்தை நான் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சொன்­னதை எதை­யும் நிறை­வேற்­ற­வில்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேர­வைத் தலை­வர் அவர்­களே, இந்த மானி­யக் கோரிக்­கை­யில் பேச வாய்ப்­ப­ளித்த உங்­க­ளுக்கு என்­னு­டைய சிரம் தாழ்ந்த வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். இந்த வரு­வாய்த் துறை­யி­னு­டைய கொள்கை விளக்­கக் குறிப்­பினை நான் படித்­துப் பார்த்­தேன். ஒரு மாறு­தல் வேண்­டும், மாறு­தல் வேண்­டும் என்று சொல்லி, நீங்­கள் நம் நாட்டு மக்­கள் மத்­தி­யில் வாக்கு கேட்­டீர்­கள். நான் அந்­தப் புத்­த­கம் முழு­வ­தும் படித்து பார்த்­தேன். சென்ற முறை கிட்­டத்­தட்ட 400 பக்­கங்­கள் கொண்ட கொள்கை விளக்­கக் குறிப்பை நாங்­கள் பதிவு செய்­தி­ருந்­தோம். இதிலே 100 பக்­கங்­கள் இன்­றைக்கு குறைந்­தி­ருக்­கின்­றன. குறைந்­த­தற்கு கார­ணம், கொள்கை குறைந்து விட்­டதா அல்­லது கொள்­கை­யிலே உங்­க­ளுக்கு குறை­பாடு இருக்­கி­றதா என்­ப­தை­யெல்­லாம் அமைச்­சர் அவர்­கள் பேசும்­போது சொல்ல வேண்­டும். நீங்­கள் மாறு­தல் வேண்­டும் என்று சொன்­னீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இலட்­சி­யங்­கள் குறைந்­ததா, இல்­லையா என்­பதை இந்த மூன்று மாத காலத்­திலே மக்­கள் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) நீங்­கள் சொல்­லி­ய­தில் எதை­யும் இன்­றைக்கு நிறை­வேற்­றிக் காட்­ட­வில்லை. நீங்­கள் எதை­யெல்­லாம் சொன்­னீர்­களோ, உதா­ர­ணத்­திற்கு பட்டா வழங்­கு­வ­தில் ஆட்­சே­பணை இல்­லாத நிலங்­க­ளுக்கு எல்­லாம் பட்டா வழங்­கு­வோம் என்று நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றார் என்று சொல்லி, நம்­மு­டைய அமைச்­சர் அவர்­கள் சொன்­னார்­கள். எங்­க­ளு­டைய தலை­வர், கலை­ஞர் அவர்­கள் 2000 ஆம் ஆண்­டி­லேயே ஆட்­சே­பணை இல்­லாத நிலங்­க­ளுக்­கெல்­லாம் பட்டா வழங்­க­லாம் என்று சொல்லி, சட்­டம் கொண்டு வந்­த­வர் எங்­க­ளு­டைய தலை­வர் கலை­ஞர் அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கொள்கை ரீதி­யாக 
சிறந்த கட்சி தி.மு.க.!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைப் பொறுத்­த­ள­விற்கு, இந்­தக் கட்­சிக்கு வயது 75. ஒவ்­வொ­ரு­வ­ரும் அனு­ப­வம் பெற்­ற­வர்­கள், ஒவ்­வொ­ரு­வ­ரும் போராட்­டக் களத்­தில் போராட்­டங்­க­ளைச் சந்­தித்­த­வர்­கள்; ஒவ்­வொ­ரு­வ­ரும் சிறைச்­சா­லைக்கு சென்­ற­வர்­கள்; ஒவ்­வொ­ரு­வ­ரும் பொது­மக்­களை அன்­றா­டம் சந்­தித்­த­வர்­கள்; அப்­படி வளர்ந்த கட்சி, இந்­தக் கட்சி. ஆகவே, இந்­தக் கொள்கை ரீதி­யாக இந்­தக் கட்சி எல்­லா­வ­கை­யி­லும், எல்­லோ­ரை­யும்­விட சிறந்த கட்சி என்­பதை மட்­டும் நான் இந்த நேரத்­தில் பணி­வன்­பு­டன் சொல்ல கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேர­வைத் தலை­வர் அவர்­களே, சென்ற எங்­க­ளு­டைய ஆட்­சி­யில், ஐந்­தாண்டு காலத்­தில் 27 இலட்­சம் நபர்­க­ளுக்கு நாங்­கள் அரசு மனைப் பட்டா வழங்­கி­யி­ருக்­கி­றோம். (மேசை­யைத் தட்­டும் ஒலி) 27 இலட்­சம்; இது சரித்­தி­ரத்­திலே இல்­லாத எண்­ணிக்கை. அதற்கு கார­ணம், எங்­க­ளு­டைய முத­ல­மைச்­ச­ராக இருந்த அண்­ணன் தள­பதி அவர்­கள், எங்­களை அழைத்து எந்த ஏழைக்­கும் பட்டா இல்­லா­மல் இருக்­கக்­கூ­டாது. வீடு இல்­லாத மனி­த­ராக இருக்­கக்­கூ­டாது என்று சொல்­லி­ய­தன் விளை­வாக, 27 இலட்­சம் நபர்­க­ளுக்கு நாங்­கள் பட்டா வழங்­கி­னோம். அதை­விட சென்னை போன்ற மாந­க­ராட்­சி­க­ளில், 30 ஆண்­டு­கா­லம், 40 ஆண்­டு­கா­ல­மாக குடி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு பட்டா வழங்க முடி­யா­மல், எதை­யுமே செய்ய முடி­யா­மல் இருந்­ததை மாற்றி, அதை belt area என்று சொல்­வார்­கள், அமைச்­சர்­கள் மத்­தி­யில் சொல்­லு­கிற நேரத்­தில் அதை belt area என்று சொல்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">Corporation–ஐ சுற்­றி­யி­ருக்­கிற 16 கி.மீ. தூரத்­திற்கு பட்டா வழங்­கக்­கூ­டாது என்று இருந்­ததை மாற்றி, இன்­றைக்கு சென்னை போன்ற மாந­க­ராட்­சி­க­ளில் இருக்­கிற பகு­தி­க­ளுக்கு, 77 ஆயி­ரம் நபர்­க­ளுக்கு, 30 ஆண்டு காலம், 40 ஆண்­டு­கா­லம் குடி­யி­ருந்­த­ வர்­க­ளுக்கு பட்டா வழங்­கி­ய­வர் எங்­க­ளு­டைய தலை­வர் அண்­ணன் தள­பதி அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) ஏழைக்கு உத­வு­கி­ற­வ­ராக, ஏழை வீடு இல்­லா­மல் இருக்­கக்­கூ­டாது; இட­மி­ருந்­தால்­தானே வீடு கட்ட முடி­யும் என்ற உணர்­வோடு இடங்­களை வாரி வழங்­கி­ய­வர் எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஏழை­க­ளின் கண்­ணீரை துடைத்­த­வர் எங்­கள் தலை­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல, அமைச்­சர் அவர்­கள் ஒன்­றிய அரசு ஏற்­கெ­னவே ஆயி­ரம் கோடி ரூபாய் நிதியை வழங்­கி­யி­ருப்­ப­தாக பெரு­மை­யோடு இங்கே தெரி­வித்­தார்­கள். அது வரு­டா­வ­ரு­டம் கொடுக்­கும் பணம்­தான். வரு­டா­வ­ரு­டம் நமக்­குக் கொடுக்­கும் பணம்­தான் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். நீங்­கள் ஒன்­றும் அதி­கப்­ப­டி­யாக வாங்­கி­வி­ட­வில்லை. ஏற்­கெ­னவே நம்­மு­டைய தமிழ்­நாட்­டிற்கு பேரி­டர் மேலாண்மை நிதி­யாக அதி­கப்­ப­டி­யான நிதி ஒன்­றிய அர­சி­ட­மி­ருந்து வர­வேண்டி இருக்­கி­றது. அமைச்­சர் அவர்­கள் முடிந்­தால் அதை­யெல்­லாம் வாங்­கிக் கொடுப்­பீர்­கள் என்று சொன்­னால், மிகுந்த சந்­தோ­ஷம். உதா­ர­ணத்­திற்­குச் சொல்ல வேண்­டு­மென்று சொன்­னால், எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் 2021–2022 ஆம் ஆண்­டு­க­ளில் கன­மழை வந்­தது. 2023 ஆம் ஆண்­டில் மிக்­ஜாம் புயல் வந்­தது. 2023 ஆம் ஆண்டு தென் மாவட்­டங்­க­ளிலே வெள்­ளப்­பெ­ருக்கு வந்­தது. 2024 ஆம் ஆண்டு பெஞ்­சால் புயல் வந்­தது. இதற்­கெல்­லாம் அப்­போ­தி­ருந்த எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் ஒன்­றிய அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து 50,000 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­விற்கு நாங்­கள் பணம் கேட்­டோம்.  ஆனால், அவர்­கள் கொடுத்­தது 1,151 கோடி ரூபாய்­தான் கொடுத்­தார்­கள். ஆனால், நாம் செல­வ­ழித்­தது 13,235 கோடி ரூபாய் நாம் செல­வ­ழித்­தோம். இந்­தப் பணம் நம்­மு­டைய கஜா­னா­வி­லி­ருந்து நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் வாரி வழங்­கி­னார்­கள். புய­லால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கும், பெரு­வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் ஆரா­யி­ரம், ஆரா­யி­ரம் வழங்­கி­ய­வர். அதே­போல, விழுப்­பு­ரம் பகு­தி­யிலே பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இரண்­டா­யி­ரம் ரூபாய் வழங்­கி­ய­வர்­கள். எங்­க­ளு­டைய மாவட்­டம் போன்ற சிறிய பாதிப்பு இருக்­கின்ற பகு­தி­க­ளுக்­கெல்­லாம் ஆயி­ரம் ரூபாய் வழங்­கி­ய­வர். இப்­படி எல்லா வகை­யி­லும் ஏழை­க­ளின் கண்­ணீ­ரைத் துடைத்த தலை­வ­ராக எங்­க­ளு­டைய தலை­வர் இருந்­தார்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல, நிலத்தை மீட்­பது. சகோ­த­ரர் செங்­கோட்­டை­யன் அவர்­க­ளுக்­குத் தெரி­யும். தோட்­டக்­கலை சங்­கம் உங்­க­ளுக்­கும் எனக்­கும் பரிச்­ச­ய­மான இடம். தோட்­டக்­கலை சங்­கம் எத்­தனை ஆண்டு காலம் மீட்க முடி­யா­மல் இருந்­தது. அதை மீட்டு எடுத்­த­வர் எங்­க­ளு­டைய தலை­வர் தள­பதி அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) அதே­போல, Race Course. சென்னை Race Course 160 ஏக்­கர். மிகப் பெரிய இடம். அது பொது மக்­க­ளி­னு­டைய பயன்­பாட்­டிற்கு வர­வேண்­டு­மென்று சொல்லி, அதை­யும் மீட்டு எடுத்­த­வர் எங்­க­ளு­டைய தலை­வர் தள­பதி அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) அதே­போல, ஊட்­டி­யில் இருக்­கிற Race Course.  அதை­யும் மீட்டு எடுத்­த­வர் எங்­க­ளு­டைய தலை­வர் தள­பதி அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) இதை­யெல்­லாம் மீட்­டெ­டுத்து பொது மக்­க­ளி­னு­டைய பயன்­பாட்­டிற்கு கொண்­டு­வந்­த­வர் எங்­க­ளு­டைய தலை­வர் என்­பதை நான் இந்த நேரத்­திலே பெரு­மை­யோடு சொல்ல கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தேடிப் பார்த்­தா­லும் ஒன்­றும் இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஓய்­வூ­தி­யம் நாங்­கள் ரூ.1,200 கொடுத்­தி­ருக்­கி­றோம். நீங்­கள் ரூ.3,000 கொடுக்­கி­றோம் என்று சொன்­னீர்­கள். இந்த வர­வு–­செ­லவு பட்­ஜெட்­டில் நீங்­கள் ஏதா­வது சொல்­வீர்­கள் என்று எதிர்­பார்த்­தேன். 20 ரூபா­யில் ஆரம்­பித்­தது இந்­தத் திட்­டம். பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் அவர்­க­ளு­டைய காலத்­தில் ஆரம்­பிக்­கப்­பட்ட திட்­டம். இன்­றைக்கு ரூ.1,200 வரை உயர்த்­தி­ய­வர் எங்­க­ளு­டைய தலை­வர் அண்­ணன் தள­பதி அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) ஆனால், நீங்­கள் 3,000 ரூபாய் தரு­கி­றோம். முதி­யோ­ருக்கு 3,000 ரூபாய் தரு­கி­றோம். மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு 3,000 ரூபாய் தரு­கி­றோம். படித்­து­விட்டு வேலை­யில்­லா­மல் வீட்­டிலே இருப்­ப­வர்­க­ளுக்கு 4,000 ரூபாய் தரு­கி­றோம். இதை­யெல்­லாம் சொல்­லி­ய­வர்­கள் நீங்­கள். இந்த பட்­ஜெட்­டில் இதெல்­லாம் இருக்­கு­மா­யென்று சொல்லி, பொது பட்­ஜெட்­டி­லும் பார்த்­தோம். இந்த பட்­ஜெட்­டி­லும் தேடித் தேடிப் பார்த்­தோம். ஒன்­றும் தெரி­ய­வில்லை. ஆனால் எங்­க­ளைப் பொறுத்­த­ள­விற்கு எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் எதைச் சொன்­னாரோ அதை­யெல்­லாம் சாதித்­துக் கொண்­டி­ருந்­தார்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) இன்­றைக்­கும் நான் சொல்­கி­றேன். எங்­க­ளு­டைய ஆட்சி வந்­தி­ருக்­கு­மென்று சொன்­னால், நாங்­கள் இரண்­டா­யி­ரம் ரூபாய் தரு­வோம் என்று சொன்­னோம். வந்­தி­ருந்­தால் கொடுத்­தி­ருப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாங்­கள் சொன்­ன­தும் உண்மை; நாங்­கள் கொடுக்க கால­தா­ம­தம் ஆன­தும் உண்மை. ஆனால், எதற்­காக? நாங்­கள் ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­வு­ட­னேயே கொரோனா இருந்­தது. கொரோனா இருந்­தா­லும், 4 ஆயி­ரம் ரூபாய் ஒவ்­வொரு ration card–க்கும் கொடுத்­த­வர் எங்­க­ளு­டைய தலை­வர். (மேசை­யைத் தட்­டும் ஒலி) கொரோனா இருக்­கி­றது என்று சாக்கு சொல்லி தப்­பிக்­க­வில்லை. அதை­யும் கொடுத்­தார், இன்­னும் கொடுத்­தி­ருப்­பார்.  மக்­க­ளுக்கு செய்­வ­தில்­தான் எங்­க­ளுக்கு ஒரு சந்­தோ­ஷம். (குறுக்­கீ­டு­கள்)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஏதா­வது ஒன்று வருமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கொரோனா காலத்­திலே அர­சி­னு­டைய நிதி நிலைமை எப்­ப­டி­யி­ருந்­தது என்­ப­தெல்­லாம் நீங்­கள் அறி­யாத இர­க­சி­யம் ஒன்­று­மல்ல. அந்­தக் கஷ்­டத்­தி­லே­கூட, 4 ஆயி­ரம் ரூபாய் வழங்­கி­னார்­கள். எங்­க­ளுக்கு என்ன பிரச்­சினை என்று சொன்­னால், எங்­கள் பக்­கத்­தில் இருப்­ப­வர்­க­ளி­டம்­போய், ஏன் அய்யா எங்­க­ளுக்கு ஓட்­டுப் போட­வில்லை, நாங்­கள் உங்­க­ளுக்கு நிறைய செய்­தி­ருக்­கி­றோமே, எங்­கள் தலை­வர் இதை­யெல்­லாம் செய்­தி­ருக்­கி­றாரே என்று கேட்­கும்­போது, அவர்­கள் என்ன சொல்­லி­விட்­டார்­கள் என்­றால், நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் வந்­தால், எங்­க­ளுக்கு 10 ஆயி­ரம் ரூபாய் கிடைக்­கும். நான் வீட்­டில் இருந்­தால் 4 ஆயி­ரம்ரூபாய் கிடைக்­கும், எங்­கள் அம்­மா­விற்கு 3 ஆயி­ரம் ரூபாய் கிடைக்­கும். இதை­யெல்­லாம் கணக்­குப் போட்டு, மாதம் 10 ஆயி­ரம் ரூபாய் கிடைக்­கும், 6 சிலிண்­டர்­க­ளும் கிடைக்­கும். நீங்­கள் வந்­தால் கொடுப்­பீர்­களா? அதற்­கா­கத்­தான் ஓட்டு போட்­டோம் என்­றார்­கள். அதில் ஏதா­வது ஒன்று வருமா என்று நாங்­கள் தேடி, தேடிப் பார்த்­தோம். பொது பட்­ஜெட்­டி­லும் பார்த்­தோம். நாங்­கள் மக்­கள் மத்­தி­யில் கொள்­கை­யைச் சொல்லி, (குறுக்­கீடு) கொஞ்­சம் இருங்­கள், நான் சொல்­லிக் கொள்­கி­றேன். நான் ஒன்­றும் சொல்­ல­வில்­லையே, சண்டை போட­வில்­லையே. (குறுக்­கீ­டு­கள்)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேர­வைத் தலை­வர் அவர்­களே, அமைச்­சர், சகோ­த­ரர் செங்­கோட்­டை­யன் அவர்­கள் சொன்­ன­து­போன்று, ஒரு­சில இடங்­க­ளில் தவ­று­கள் ஏற்­பட்­டி­ருக்­க­லாம். நாங்­கள் வழங்­கி­யது 27 இலட்­சம் பட்­டாக்­கள். அப்­போது தவ­று­கள், . . . (குறுக்­கீ­டு­கள்)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நீங்­க­ளும் பட்டா வழங்­கப்­போ­கி­றீர்­கள். பட்­டாக்­கள் வழங்­கப்­போ­வ­தாக தெரி­வித்­தி­ருக்­கி­றீர்­கள். அமைச்­சர் அவர்­கள் இத்­தனை ஆண்­டு­கா­லம் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­தி­ருக்­கி­றீர்­கள். என்ன நடக்­கும் என்­பது உங்­க­ளுக்­கும் தெரி­யும்.  நிகழ்ச்­சி­க­ளுக்­குச் செல்­லும் இடங்­க­ளில் பட்­டாக்­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. அந்­தப் பட்­டாக்­க­ளுக்­கான இடங்­களை survey–க்கு சென்று அளந்து, ஒதுக்­கீடு செய்து வழங்­கப்­பட வேண்­டும்.  அந்­தப் பணி­களை எங்­கள் அர­சாங்­கம் ஒழுங்­காக, செய்­தி­ருக்­கி­றது; மன­நி­றை­வு­டன் செய்­தி­ருக்­கி­றது. அவற்­றில் ஏதே­னும் இருந்­தால் நீங்­கள் பாருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னொன்று, வனத் துறை அமைச்­சர் தம்பி அவர்­கள் எங்­கள் தலை­வர் அவர்­க­ளைப் பேர்­சொல்லி அழைத்­தார்­கள். (குறுக்­கீ­டு­கள்) சரி, இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கலை­ஞ­ருக்கு நன்றி 
சொல்ல வேண்­டாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நேற்­றை­ய­தி­னம், நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் சென்­னைக் கோட்­டை­யில் கொடி ஏற்­றி­னார்­கள். அந்­தக் கொடி ஏற்­றும் வாய்ப்­பினை வாங்­கிக்­கொ­டுத்த புண்­ணி­ய­வானே, கலை­ஞர் அவர்­கள்­தான் (மேசை­யைத் தட்­டும் ஒலி) அதற்­கோர் நன்றி வேண்­டாமா? (மேசை­யைத் தட்­டும் ஒலி) நேற்று, கோட்­டை­யில் கொடி ஏற்­றிய நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் இங்கு அமர்ந்­தி­ருக்­கின்­றார்­கள். நீங்­கள் அனை­வ­ரும் அந்­நி­கழ்ச்­சி­யில் முன்­னால் அமர்ந்­தி­ருந்­ததை நாங்­கள் அனை­வ­ரும் தொலைக்­காட்­சி­யில் பார்த்­தோம். நீங்­கள் அந்த ஒரு சந்­தோ­ஷத்­திற்­கா­க­வா­வது கலை­ஞ­ரைப் பாராட்ட வேண்­டும். கலை­ஞர் இருந்­தி­ரா­விட்­டால், இந்­தி­யா­வில் எந்த முத­ல­மைச்­ச­ரும் சுதந்­திர தினத்­தன்று கொடி ஏற்­றி­யி­ருக்க முடி­யாது. (மேசை­யைத் தட்­டும் ஒலி) மேலும் சொல்­ல­வேண்­டு­மா­னால், . . . (குறுக்­கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போன்று, புயல் மற்­றும் வெள்­ளம் ஏற்­பட்ட நேரத்­தில், எங்­க­ளது முத­ல­மைச்­ச­ருக்கு இணை­யாக யாரா­வது பணி­யாற்­றி­யி­ருக்க முடி­யுமா என்று கேட்­டால், நிச்­ச­ய­மாக முடி­யாது. எனக்கு 50 ஆண்­டு­கால அனு­ப­வம் இருக்­கி­றது. (குறுக்­கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேர­வைத் தலை­வர் அவர்­களே, இரவு 12 மணி­யா­னா­லும், 1 மணி­யா­னா­லும், மழை மற்­றும் வெள்­ளம் வரும் காலங்­க­ளில், அமைச்­சர்­க­ளை­யும், அதி­கா­ரி­க­ளை­யும் அவ்­வி­டங்­க­ளுக்கே அழைத்­துச் சென்று நிவா­ர­ணங்­களை வழங்­கி­ய­வர், எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் (மேசை­யைத் தட்­டும் ஒலி) எங்­க­ளு­டைய முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­கள் அண்­ணன் தள­பதி அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) சென்­னை­யில் மட்­டு­மல்ல, தென்­மா­வட்­டங்­க­ளான திரு­நெல்­வேலி, தூத்­துக்­குடி போன்ற மாவட்­டங்­க­ளி­லும், வெள்­ளம் ஏற்­பட்ட காலங்­க­ளில், அவ்­வி­டங்­க­ளுக்­கும் சென்­றார்­கள். எங்­கெல்­லாம் பாதிப்பு மற்­றும் வறட்சி ஏற்­பட்­ட­னவோ அங்­கெல்­லாம் சென்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பேரி­டர் காலத்­தில் 
மக்­களை காப்­பாற்­றி­ய­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னும் சொல்ல வேண்­டு­மென்­றால், முதன்­மு­த­லில் அர­சாங்­கத்­தில் நம்­மு­டைய தமிழ்­நாடு அர­சாங்­கத்­தில் எங்­க­ளு­டைய தலை­வர் அண்­ணன் தள­பதி அவர்­கள்­தான், இந்த வெப்ப அலைக்கு என்று ஒரு சட்­டமே போட்­டார். அதைத்­தான் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­களை வைத்து நீங்­கள் release செய்­தி­ருக்­கி­றீர்­கள். வெப்ப அலைக்கு என்று ஒரு சட்­டம் நாங்­கள்­தான் போட்­டோம். Minutes எடுத்­துப் பாருங்­கள். இதை­யெல்­லாம் எது வரும் என்று சிந்­தித்த முத­ல­மைச்­சர். வெள்­ளம் வரு­கி­றதா உடனே கூட்­டம் கூட்டி அந்­தந்த அதி­கா­ரி­களை ஒவ்­வொரு மாவட்­டத்­திற்­கும் சென்று அங்கே மேற்­பார்­வை­யிட இருக்க வேண்­டும் என்று உத்­த­ர­விட்­ட­வர் எங்­க­ளு­டைய தலை­வர் அண்­ணன் தள­பதி அவர்­கள். ஒவ்­வொரு காரி­ய­மாக இருந்­தா­லும், எதை­யும் சிந்­தித்து முன்­கூட்­டியே பாதிப்பு வராத அள­விற்கு, கார­ணம் ஏன் சொல்­கி­றேன் என்­றால், எங்­க­ளு­டைய காலத்­தில் ஐந்து தடவை பேரி­டர் வந்­தி­ருக்­கி­றது. ஐந்து தட­வை­யும் எந்த சேதா­ர­மும் இல்­லா­மல் இந்­தத் தமிழ்­நாட்டை காப்­பாற்­றி­ய­வர் எங்­க­ளு­டைய தலை­வர் தள­பதி அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) ஆக, எதை­யும் சீர்­நோக்­கிப் பார்க்­கக்­கூ­டி­ய­வர்­கள். அனு­ப­வம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர், அதற்கு பின்­னால் மேயர், அதற்­கு­பின் துணை முத­ல­மைச்­சர், முத­ல­மைச்­சர் என்று எல்லா வகை­யி­லும், அனு­ப­வம் இருக்­கிற கார­ணத்­தி­னால் அதை­யெல்­லாம் செய்து கொடுத்த, மிகப் பெரிய, மிகப் பெரிய ஒரு தலை­வ­ராக எங்­க­ளு­டைய தலை­வர் விளங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னொன்று சென்­னை­யில் belt area நீங்­கள் officers–டம் கேட்­க­லாம். சென்னை, திருச்சி Corporation area எல்­லாம், அந்த காலத்­தில் 1962–ல் காங்­கி­ரஸ் காலத்­தில் ஒரு G.O. போட்­டி­ருக்­கி­றார்­கள். அது நல்ல எண்­ணத்­து­டன்­தான் அப்­போது போடப்­பட்­டது. சென்­னைக்கு விரி­வாக்­கம் வரு­கிற நேரத்­தில் இடம் இல்­லா­மல் போய்­வி­டும் என்று, அன்­றைக்கு 1962–ல் ஒரு G.O. இருந்­தது. ஆனால், 1962–லிருந்து மக்­கள் அந்த இடங்­க­ளில் குடி­யி­ருந்து வீடு­கட்டி வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளெல்­லாம் முத­ல­மைச்­சர் அவர்­க­ளைப் பார்த்து, நாங்­கள் எங்கே போவது என்று கேட்ட நேரத்­தில் அவர்­க­ளு­டைய கண்­ணீரை துடைத்து, 1997 G.O. என்று ஒரு புதிய சட்­டத்தை போட்டு Cabinet–ல் approval வாங்கி 77 ஆயி­ரம் பேருக்கு தமிழ்­நாடு முழு­வ­தும் Corporation பணி­யில் இருக்­கிற அனை­வ­ருக்­கும் பட்டா வழங்­கி­ய­வர் எங்­க­ளு­டைய தலை­வர் தள­பதி அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) இதை ஏன் சொல்­கி­றேன் என்­றால், சிர­மங்­கள் வரு­கிற நேரத்­தில் அந்­தக் கண்­ணீ­ரைத் துடைக்­கிற கையாக எங்­க­ளு­டைய தலை­வர் கை இருந்­தி­ருக்­கி­றது. அது பட்டா வழங்­கு­வ­தாக இருந்­தா­லும் சரி, புயல் வெள்­ள­மாக இருந்­தா­லும் சரி, மானி­யம் கொடுப்­ப­தாக இருந்­தா­லும் சரி, விவ­சா­யி­ க­ளுக்கு புதிய மானி­யம் கொடுப்­ப­தாக இருந்­தா­லும் சரி, சமூக நலத் திட்­டங்­க­ளாக இருந்­தா­லும் சரி, நாம் சொல்லி கேட்­பதை விட அவ­ராக கொடுக்­கக்­கூ­டிய வள்­ள­லா­கத்­தான் எங்­க­ளுக்கு இருந்­தி­ருக்­கி­றார்­கள். அவ­ரு­டைய ஆட்­சி­யில் மக்­கள் சிறப்­பாக இருந்­தி­ருக்­கி­றார்­கள். அந்த ஆட்சி மீண்­டும் வரும். (மேசை­யைத் தட்­டும் ஒலி) மீண்­டும் வரும். அப்­படி வரு­கிற நேரத்­தில் நீங்­கள் கோபித்­துக் கொள்­ளக் கூடாது. அப்­பாவை காணோம் என்று சொல்­கி­றீர்­கள். அவர் வரு­கிற நேரத்­தில் பல பேர் நீங்­கள் இங்கு இருக்க மாட்­டீர்­கள். நாங்­கள் இருப்­போம் என்று சொல்லி, (மேசை­யைத் தட்­டும் ஒலி) நன்­றி­யோடு அமர்­கி­றேன்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரோடு தி.மு.க இந்­தச் சட்­ட­மன்­றத்­தில் இருந்த வர­லாறு உண்டு. (மேசை­யைத் தட்­டும் ஒலி) ஒரே­யொரு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரோடு, எப்­படி விழுமோ விழுந்த வேகத்­திலே அப்­ப­டியே எழுந்­தி­ருக்­கக்­கூ­டிய கட்­சி­தான் தி.மு.க. (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இரா­மச்­சந்­தி­ரன் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>