<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1018" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Aug 19 2026 03:51:09 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260819T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="19082026-TRY-05" position.sequence="05" ex-ref="19082026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி</lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">19.08.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">கஞ்சா வாங்கினால் மாத்திரை இலவசம் என்ற தரங்கெட்ட ஆட்சி</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="30"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="67">த.வெ.க. ஆட்சியில் 100 நாட்களில் 546 குற்றச் சம்பவங்கள்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் பேட்டி!</lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="31"> </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup821211_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="paranthamanc_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சென்னை, ஆக.19–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கஞ்சா வாங்­கி­னால் மாத்­திரை இல­வ­சம் என்று சொல்­லக் கூடிய தரங்­கெட்ட ஆட்சி இங்கே நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது; இந்த ‘சர்க்­கஸ்‘ ஆட்­சி­யில் 100 நாட்­க­ளில் 546 குற்­றச் சம்­ப­வங்­கள் நடந்­துள்­ளன என்று குற்­றம் சாட்டி தி.மு.க. சட்­டத்­துறை இணைச் அமைச்­சர் இ.பரந்­தா­மன் அண்ணா அறி­வா­ல­யத்­தில் பேட்டி அளித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் இ.பரந்­தா­மன் அளித்த பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">த.வெ.க. அரசு பொறுப்­பேற்ற போது ‘இட்ஸ் எ பிகி­னிங் ஆஃப் ஏ நியூ எரா’ என்று சொன்­னார். உண்­மை­தான், இது ஒரு நியூ எரா–100 நாளில் 546 குற்­றச் சம்­ப­வங்­க­ளைச் செய்த ஒரு நியூ எரா!. இன்­னைக்கு மாண்­பு­மிகு விஜய்­யி­னு­டைய சர்க்­கஸ் சர்க்­கார் ஆட்­சி­யின் சாதனை இது. ‘பெண்­கள் பாது­காப்பு ரொம்ப நான் ஸ்ட்ரிக்ட்டா வச்­சி­ருப்­பேன்’னு சொன்­னார். ஆனால், இன்­னைக்கு பெண்­க­ளுக்­கான பாது­காப்பு எந்த அள­வில் தமிழ்­நாட்­டில் இருக்­கின்­றது என நாட்டு மக்­க­ளுக்கே நன்­றா­கத் தெரி­யும். தவெக கட்­சி­யில் இருக்­கக்­கூ­டிய பெண்­க­ளுக்கே பாது­காப்பு கொடுக்க முடி­யாத ஒரு பல­வீ­ன­மான சர்க்­கார்­தான் இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘சர்க்கஸ் சர்கார்’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘போதை கலாச்­சா­ரத்­தி­லி­ருந்து நம்ம பசங்­களை மீட்­க­ணும், அவங்­க­ளைக் காப்­பாற்ற வேண்­டிய பொறுப்பு நமக்கு இருக்­கு’னு சொன்­னார். ஆனால் போதை பழக்­க­மும் கடத்­த­லும் இங்க தீவி­ர­மாக இருக்­கி­றது. ‘இந்­தக் கல்­லூரி வளா­கத்­தில் போதைப்­பொ­ருள் கடத்­தப்­ப­டு­கி­றது, விற்­கப்­ப­டு­கி­றது’ என்று காவல்­து­றைக்­குத் தக­வல் கொடுத்த கோவை கல்­லூரி மாண­வன் அமு­த­னுக்கு பாது­காப்பு கொடுக்க முடி­யாத வெட்­கக்­கே­டான சர்க்­கஸ் சர்க்­கார் அர­சு­தான் இந்த விஜய்­யின் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காவல்­து­றை­யைக் கையில் வச்­சி­ருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர். ‘ஜென்-சி’ பிள்­ளை­கள் எல்­லாம் உங்­க­ளுக்கு ஆர்­வ­மாக வாக்­க­ளித்­தார்­களே, இந்த முத­ல­மைச்­ச­ருக்கு, இன்­னைக்கு ‘ஜென்-­­சி’­­கள் மட்­டும் ஏறத்­தாழ 10-க்கும் மேற்­பட்ட இளை­ஞர்­கள் இன்­றைக்­குக் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்­கள், இந்த கொலைப் பழியை முத­ல­மைச்­சர் அவர்­கள் ஏற்­றுக்­கொண்­டு­தான் ஆக வேண்­டும். இந்த 100 நாளில் பல குற்­றச் சம்­ப­வங்­கள் தமிழ்­நாட்­டில் நடந்­தி­ருக்கு. நான் ஏற்­க­னவே சொன்­னது மாதிரி 546 குற்­றச் சம்­ப­வங்­கள் இருக்கு. இந்த ஒரு வாரத்­தில் மட்­டும் நடந்த குற்­றங்­க­ளின் எண்­ணிக்­கையை எடுத்­துக்­கிட்­டீங்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கோவை­யில் போதைப்­பொ­ரு­ளைப் பற்­றித் தக­வல் கொடுத்­த­தா­கச் சொல்லி, அமு­தன் என்­கிற மாண­வனை அடித்­துக் கொன்­றுள்­ள­னர். அந்த மாண­வன் போதை பொருள் பற்றி கொடுத்த தக­வலை காவல்­து­றையே போதை கும்­ப­லி­டம் கொடுத்­துள்­ளது. ஆனால் சட்­ட­மன்­றத்­தில் அமைச்­சர் என்ன சொல்­றாரு? ‘இரு கோஷ்­டி­க­ளுக்கு இடை­யே­யான மோதல்’னு சொல்­லிட்டு வழக்­கின் தன்­மையை திசை­தி­ருப்­பு­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் கேட்­கி­றேன் முத­ல­மைச்­சர் அவர்­களே, ‘இளை­ஞர்­க­ளுக்­கான அரசு’ என்று நீங்­கள் மார்­தட்­டிக் கொள்­கி­றீர்­கள். ‘இளை­ஞர்­கள் மூல­மா­கவே ஆட்­சிக்கு வந்­தேன்’ என்று சொல்­லு­கிற நீங்­கள், ஒரு இளை­ஞன் குற்­றம் நடை­பெ­று­கி­றது என்று காவல்­து­றைக்­குச் சொன்ன ரக­சி­யத்­தைக் காப்­பாற்­றாத காவல்­து­றை–­­அப்­ப­டிப்­பட்ட காவல்­துறை வைத்­தி­ருக்­கும் உங்­க­ளுக்கு முத­ல­மைச்­ச­ராக இருப்­ப­தற்கு கொஞ்­ச­மா­வது தகுதி இருக்­கி­றதா என்ற கேள்­வி­யைத்­தான் உங்­களை நோக்கி நான் கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அமு­த­னு­டைய தாயார் சொல்­லு­கி­றார்­கள், ‘அர­சின் மீது எங்­க­ளுக்கு நம்­பிக்கை இல்லை; எதிர்க்­கட்­சித் தலை­வர் அண்­ணன் உத­ய­நிதி அவர்­கள்­தான் எங்­க­ளுக்கு நீதி பெற்­றுத் தர வேண்­டும்’ என்று சொல்­லு­கி­றார்­கள் என்­றால், ஆளு­கிற அர­சின் மீது இந்த நாட்டு மக்­க­ளுக்கு நம்­பிக்கை இல்லை! எதிர்க்­கட்­சி­யாக இருக்­கக்­கூ­டிய திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மீது­தான் நம்­பிக்கை இருக்­கி­றது என்­ப­தைத்­தான் இது காட்­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நேற்­றைக்கு திரு­வொற்­றி­யூ­ரில் இரண்டு அமைச்­சர்­களை (ஆதவ் அர்­ஜுனா மற்­றும் ராஜ்­மோ­கன்) ஓட­விட்­டி­ருக்­கி­றார்­கள். இந்த 100 நாள் சாதனை என்­ன­வென்று சொன்­னால், அமைச்­சர்­க­ளைத் தலை­தெறிக்க ஓட வைத்­த­து­தான் இந்த 100 நாள் சாதனை! இதே மாதிரி தண்­டை­யார்­பேட்­டை­யில் கஞ்சா விற்­ற­தைத் தட்­டிக் கேட்ட பையனை அம்­மிக்­கல்­லைத் தூக்­கிப் போட்­டுக் கொலை செஞ்­சி­ருக்­காங்க. திரு­வெ­றும்­பூ­ரில் இரண்டு தவெக காரங்க ஒருத்­தரை வெட்­டிக் கொலை பண்­ணி­யி­ருக்­காங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">விரு­து­ந­க­ரில் ஒரு பள்­ளிப் பொண்­ணைத் துன்­பு­றுத்­தி­ய­தைத் தட்­டிக் கேட்ட அப்­பாவை வெட்­டிக் கொன்­றி­ருக்­காங்க. காஞ்­சி­பு­ரத்­தில் கோயில் திரு­வி­ழா­வில் இரண்டு இளை­ஞர்­களை வெட்­டிக் கொன்­றி­ருக்­காங்க. திரு­வ­னந்­த­பு­ரத்­தில் 25 வயசு இளை­ஞரை வெட்­டிக்கண்­மா­யில் வீசி­யி­ருக்­காங்க. திருப்­பூர்ல காதலை மறுத்த பெண்­ணைக் கொலை செய்­த­தோடு மட்­டு­மல்­லா­மல், அந்த அம்­மா­வை­யும் இளை­ஞர்­க­ளை­யும் கொன்­றி­ருக்­காங்க. ஈரோட்­டில் ஃபேன்சி ஸ்டோருக்­குள் புகுந்து ஒரு பெண்­ணைக் கத்­தி­யால் குத்­தி­யி­ருக்­காங்க. இதெல்­லாம் கடந்த ஒரு வாரத்­தில் நடந்த குற்­றச் சம்­ப­வங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தவறான முன்னுதாரணம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அம்­பத்­தூர் புதூ­ரில் ஆட்­டோ­வில் ஒரு பெண்ணை உட்­கார வச்சு கழுத்தை அறுத்து ரோட்­டில் வீசி­யி­ருக்­காங்க. இந்த மாதி­ரி­யான குற்­றச் சம்­ப­வங்­கள் எல்­லாம் இதற்கு முன்­னாடி நடந்­ததே இல்லை. சினிமா படத்­தில் வரு­கிற மாதி­ரி­யான கொலைக் காட்­சி­களை அரங்­கேற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். கும்­மி­டிப் பூண்­டி­யில் 17 வயசு இளை­ஞ­னைக் கொன்று கல்­லறை மேல போட்டு, சில கொலைச் சம்­ப­வங்­க­ளைச் செய்து ரீல்ஸ் எடுத்து வெளி­யி­டு­கி­றார்­கள்! இதெல்­லாம் எந்­தக் கலாச்­சா­ரத்­தைக் காட்­டு­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு திரைத்­து­றை­யி­லி­ருந்து வந்­த­வர் தமிழ்­நாட்­டுக்கு முத­ல­மைச்­சர். அத­னு­டைய விளைவு என்­ன­வென்­றால், நீங்­கள் திரைப்­ப­டத்­தில் ஹீரோ­வாக இருக்­க­லாம், நடித்த ஹீரோ­யி­சத்­தைப் பார்த்து இன்­னைக்­குத் தமிழ்­நாட்டு இளை­ஞர்­கள் இதைச் செய்­கி­றார்­கள். தமிழ்­நாட்டு இளை­ஞர்­க­ளுக்கு நீங்­கள் ஒரு தவ­றான முன்­னு­தா­ர­ண­மாக இருக்­கி­றீர்­கள் என்­ப­தைத்­தான் இது காட்­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வேலூ­ரில் தலை­மைப் பெண் காவ­ல­ரையே குத்­திக் கொன்­றி­ருக்­கி­றார்­கள்! இதை­விட என்ன கேவ­லம் இருக்கு? வெட்­க­மாக இல்லை முத­ல­மைச்­ச­ருக்கு? காவல்­து­றை­யைத் தன் கையில் வச்­சி­ருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர், காவல்­து­றை­யி­டம் தக­வ­லைக் கொடுக்­கும் பைய­னைக் காப்­பாற்­று­வ­தற்கு வக்­கில்லை இந்த காவல்­து­றைக்கு! ஆனால் எதிர்க்­கட்­சித் தலை­வர் கைதின் போது, சாலை­க­ளில் இருக்­கக்­கூ­டிய திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய இளை­ ஞ­ரைப் பார்த்து இரண்டு கையை வைத்து அடிப்­பார் சென்னை மாந­க­ரக் காவல் ஆணை­யர் அமல்­ராஜ்! எந்­தக் காவல் ஆணை­யர் ஒரு கைது நட­வ­டிக்­கைக்கு ஸ்பாட்­டிற்கு வந்­தி­ருக்­கி­றார்­கள்? இருக்­கிற வேலையை விட்­டு­விட்டு வேறு வேலையை நீங்­கள் செய்­வ­த­னால்­தான் இந்த குற்­றச் சம்­ப­வங்­கள் நடக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கோயம்­புத்­தூ­ரில் இதே மாதிரி நகைக்­காக ஒரு வய­தான பெண்­ணைக் கொன்­றி­ருக்­கி­றார்­கள். இந்த ஆட்­சி­யில் பச்­சி­ளம் குழந்­தை ­யி­லி­ருந்து பாட்டி வரை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளாக்­கப்­பட்டு கொலை செய்­யப்­ப­டு­கி­றார்­கள். ‘நான் ஆட்­சிக்கு வந்தா சட்­டம்-­­ஒ­ழுங்­கைக் காப்­பாற்­று­வேன்’னு சொன்­னாரே, இது­தான் சட்­டம்-­­ஒ­ழுங்­கைக் காப்­பாற்­றும் லட்­ச­ணமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘நான் ஆட்­சிக்கு வந்த பிறகு மக்­க­ளுக்­கான ஆட்­சி­யைத் தரு­வேன்’னு சொன்­னீங்­களே, மக்­க­ளுக்­கான பிரச்­ச­னை­யைப் பற்றி இது­வ­ரைக்­கும் ஏதா­வது பேசி­யி­ருக்­கீங்­களா? காவிரி நதிப் பிரச்­ச­னைக்­காக நீங்­கள் வாய் திறந்­தி­ருக்­கீங்­களா? கர்­நா­ட­கா­வில் தமி­ழர்­க­ளைச் சுட்­டுக் கொன்­றார்­களே, அதற்­காக வாய் திறந்து பேசி­யி­ருக்­கீங்­களா? ஜூன் 12-ஆம் தேதி 
மேட்­டூர் தண்­ணீர் திறந்து விட வேண்­டுமே, அதைப்­பற்றி வாய் திறந்து பேசி­யி­ருக்­கீங்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேக­தாது அண கட்­டப்­ப­டு­வ­தைத் தடுக்­கத் தனி­யாக டிரிப்­யூ­னல் அமைக்­கப்­பட வேண்­டும் என்று ஒன்­றிய அமைச்­ச­ரி­டத்­தில் போய்க் கேட்­டி­ருக்­கீங்­களா? ஒன்­றிய அர­சி­டத்­தில் பம்­பு­கிற முத­ல­மைச்­ச­ரா­கத்­தான் இருக்­கி­றீர்­களே தவிர, தமிழ்­நாட்­டில் சட்­ட­மன்­றத்­தி­லும் வெளி­யி­லே­யும் மட்­டும்­தான் பாயும் முத­ல­மைச்­ச­ரா­கக் காட்­டிக்­கொள்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆடி மாதம் வந்­தால் தள்­ளு­படி கொடுப்­பார்­கள்–­­ஒரு சட்டை வாங்­கி­னால் ஒரு சட்டை ஃப்ரீ, ஒரு பேண்ட் வாங்­கி­னால் ஒரு பேண்ட் ஃப்ரீ, ஒரு ஜாக்­கெட் பிட் வாங்­கி­னால் இன்­னொன்று ஃப்ரீ என்று தள்­ளு­படி கொடுப்­பார்­கள். அது­மா­திரி, இந்­தக் கொக்­கைன் பவு­டர் பயன்­ப­டுத்­திய சரத் மந்­தி­ரி­யு­டைய தொகு­தி­யில் ‘கஞ்சா வாங்­கி­னால் மாத்­திரை ஃப்ரீ’! இப்­ப­டிப்­பட்ட ஒரு கேவ­ல­மான, கேடு­கெட்ட ஆட்சி தமிழ்­நாட்­டில் இது­வ­ரைக்­கும் நடந்­தி­ருக்கா? கஞ்சா வாங்­கி­னால் மாத்­திரை ஃப்ரீ என்று சொன்ன ஒரு தரங்­கெட்ட அர­சாங்­கம் தான் விஜய்­யின் அர­சாங்­க­மாக நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்­றம் நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது. கவன ஈர்ப்பு தீர்­மா­னத்­தைக் கொடுத்­தி­ருக்­கி­றார் எதிர்க்­கட்­சித் தலை­வர். கோவை­யில் நடை­பெற்ற கொலைச் சம்­ப­வத்­திற்­கும், தமிழ்­நாட்­டில் நடை­பெற்று வரு­கிற பல்­வேறு கொலைக் குற்­றங்­க­ளுக்­கும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்­மா­னத்­தைக் கொடுத்து, பதில் கொடுக்க வேண்­டிய இடத்­தில் இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் இன்­னைக்­குச் சட்­ட­மன்­றத்­திற்­குள் வந்து உட்­கா­ர­வில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காவல்­து­றை­யைக் கையில் வைத்­தி­ருக்­கும் முத­ல­மைச்­சர் பேசா­மல் ஓடி ஒளிந்­து­கொண்­டி­ருக்க, சம்­பந்­தமே இல்­லாத அமைச்­சர்­கள் எல்­லாம் எழுந்து எழுந்து பேசிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். இது என்ன மாண்பு? என்ன சட்­ட­மன்ற மரபை நீங்­கள் கடைப்­பி­டிக்­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதுல லட்­ச­ணம் என்­ன­வென்­றால், ஒரு அமைச்­சர் சொல்­கி­றார்–’­­முத­ல­மைச்­சர் வரும்­போது எழுந்து நிற்க வேண்­டும்’ என்று. எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்­தான், முத­ல­மைச்­ச­ரும் மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்­தான். அப்ப எதிர்க்­கட்­சித் தலை­வர் வரும்­போது சிஎம் விஜய் சார் எழுந்து நிற்­பாரா? என்ன பேச்சு இது? சட்­ட­மன்­றத்­தில் பேர­வைத் தலை­வர் வரும்­போது மட்­டும்­தான் அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் எழுந்து நிற்க வேண்­டும். பேர­வைத் தலை­வ­ரைத் தவிர வேறு யாருக்­கும் அந்த இடத்­தில் எழுந்து நிற்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த 100 நாட்­க­ளில் சட்­டம்-­­ஒழுங்கு சந்தி சிரித்­தி­ருக்­கி­றது. விலை­வாசி கட்­டுக்­க­டங்­கா­மல் ஏறி­யி­ருக்­கிறது–­­அ­ரிசி விலை கிலோ­வுக்கு ₹30 ஏறி­யி­ருக்­கி­றது, ஆவின் பால் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டி­ருக்­கி­றது, மின்­சா­ரக் கட்­ட­ணம் ஷாக் அடிக்­கி­றது! மக்­க­ளு­டைய அன்­றா­டப் பிரச்சினை­யைப் பற்றி அர­சாங்­கத்­தில் யாரா­வது வாய் திறந்து பேசு­கி­றார்­களா? சட்­ட­மன்­றத்­தில் கேட்­கும் கேள்­விக்கு அந்­தந்­தத் துறை மந்­தி­ரி­கள் யாரா­வது பதில் சொல்­கி­றார்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல இன்­னைக்கு ஒரு பெரிய ‘அட்­ஜஸ்ட்­மென்ட் கலாச்­சா­ரம்’. தவெக கட்­சி­யின் நிர்­வா­கி­யான ஒரு பெண்­மணிதூத்­துக்­குடி எஸ்பி அலு­வ­ல­கத்­திற்­குப் போய் ‘அட்­ஜஸ்ட்­மென்ட் பண்­ணச் சொல்­கி­றார்­கள்’ என்றுபுகார் கொடுக்­கி­றார். இது மக்­க­ளுக்­கான ஆட்­சியா அல்­லது அட்­ஜஸ்ட்­மென்ட்க்­கான ஆட்­சியா? எந்­தப் பெண்­க­ளின் பாது­காப்­பைச் சொல்லி ஆட்­சிக்கு வந்­தீர்­களோ, இன்­னைக்கு தின­மும் பெண்­க­ளின் அல­றல் குரல் கேட்­டுக்­கொண்டே இருக்­கி­றதே, விஜய் சார் உங்­கள் காதில் கேட்­க­வில்­லையா? புடிச்சு வச்ச பிள்­ளை­யார் மாதிரி உட்­கார்ந்­தி­ருக்­கி­றீர்­களே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னொரு விஷ­யம்–­­சட்­ட­மன்­றம் நடந்­து­கொண்­டி­ருக்­கும்­போது தேவை­யில்­லா­மல் முத­ல­மைச்­சரோ அமைச்­சர்­களோ வெளி­யில் நிகழ்ச்­சி­க­ளில் போய் கலந்­து­கொள்­ளக் கூடாது. கவன ஈர்ப்பு தீர்­மா­னத்­தின் போது எங்கே போயி­ருந்­தீர்­கள் சார்? போன இடத்­தில் உங்­கள் சாத­னை­யைப் பேசி­னீர்­களா? இல்­லையே. முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில் பத்­தி­ரி­கை­யா­ளர்­களை அனு­ம­தித்­தீர்­களா? ஏனென்­றால் குட்டு வெளிப்­பட்­டு­வி­டும்! உள்ளே போனால் வந்­தி­ருப்­ப­வர்­கள் உண்­மை­யான முத­லீட்­டா­ளர் களா அல்­லது கோட்-­­சூட் மாட்டி வந்­த­வர்­களா என்­பது தெரிந்­து­வி­டும் என்­ப­தால் பத்­தி­ரி­கை­யா­ளர்­களை அனு­ம­திக்­க­வில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சினிமா படத்­தில் நடிப்­பது போலவே இன்­னைக்கு ஆட்­சி­யி­லும் நடித்­துக்­கொண்­டி­ருக்­கி­றீர்­கள். 100 நாளில் சாதித்­தது என்ன என்று ஒரு வீடியோ வெளி­யி­டு­கி­றீர்­கள்; அதில் பதவி ஏற்பு விழா­வில் பேசிய பேச்­சை­யும் விட்ட டய­லாக்­கு­க­ளை­யும்­தான் காட்­டி­யி­ருக்­கி­றீர்­களே தவிர, சாத­னையை அல்ல! பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளைச் சந்­தித்­துச் சாதனை எதை­யா­வது சொல்­லி­யி­ருக்­கி­றாரா? 100 நாள் ஆச்சே! இது அறி­விக்­கப்­ப­டாத அவ­ச­ர­நிலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">₹15,000 கோடி வரு­வாய் வந்­து­விட்­ட­தா­கப் பொய் சொல்­கி­றார்­கள். லீக்­கேஜை அடைத்­து­விட்­டோம் என்று வாயில் வடை சுடு­கி­றார்­களே தவிர, நிஜ­மாக எந்த ஆதா­ர­மும் நிதி­நிலை அறிக்­கை­யில் இல்லை. பார­திய ஜனதா கட்­சி­யைக் கண்டு அஞ்­சிப் பம்­பும் ‘டம்மி முத­ல­மைச்­ச­ராக’ விஜய் இருக்­கி­றார். இந்த 100 நாள் ஆட்­சி­யில் சட்­டம்-­­ஒ­ழுங்கு சீர்­கு­லைந்து, போதைப்­பொ­ருள் புழக்­கம் அதி­க­ரித்து, தமிழ்­நாட்டை நாச­மாக்­கிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்! சட்­ட­மன்­றத்­தில் அந்­தந்த கேள்­வி­க­ளுக்கு அந்­தந்த அமைச்­சர் பதில் சொல்ல வேண்­டும் ஆனால் அது எல்­லாம் தெரி­யா­மல் அர­வேக்­காட்டு அமைச்­ச­ராக உள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நீட் மசோதா பற்­றிப் பேசும் தவெக அமைச்­சர் ஆதவ் அர்­ஜு­னா­வுக்கு அடிப்­படை அர­சி­யல் அறிவோ பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­களோ தெரி­ய­வில்லை. ‘மெடிக்­கல் கவுன்­சில் ஆஃப் இந்­தியா’ அறி­விப்பை நாடா­ளு­மன்ற மசோதா என்று அரை­கு­றை­யா­கப் பேசு­கி­றார்­கள். மாநில உரி­மை­களை விட்­டுக் கொடுக்க மாட்­டோம் என்று சொல்­லும் முத­ல­மைச்­சர் விஜய், பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் நிய­ம­னத்­தில் UGC பிர­தி­நி­தியை நிய­மிக்க ஒப்­புக்­கொண்­டது ஏன்? பொம்மை முத­ல­மைச்­ச­ராக, டம்மி முத­ல­மைச்­ச­ரா­கத்­தான் இவர் இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த 100 நாள் ஆட்சி மக்­க­ளுக்­கான ‘சர்க்­கார்’ அல்ல, வெறும் ‘சர்க்­கஸ் சர்க்­கார்’! நாளுக்கு நாள் நாச­மா­கும் தமிழ்­நாடு இது. இந்த 100 நாட்­க­ளில் செய்­த­தெல்­லாம் சட்­டம் ஒழுங்கு சந்தி சிரிக்­குது. போதை பொருள் நட­மாட்­டம் அதி­க­ரித்­துள்­ளது. விலை­வாசி பிரச்­சனை, விவ­சா­யி­கள் பிரச்­சனை என எதை­யும் சரி­செய்ய முடி­யா­மல் பல்­லி­ளிக்­குது இந்த 100 நாள்ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு அவர் பேட்­டி­ய­ளித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>