<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,67,958,1243" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Aug 19 2026 03:56:49 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260819T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="19082026-VLR-04" position.sequence="04" ex-ref="19082026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">தொகுதிகள் வாரியாக சிறப்பாகப் பணியாற்றும் வழக்கறிஞர்கள் பட்டியலை தலைமைக் கழகத்திற்கு அனுப்பிவைப்பீர்! </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="53">இளம் வழக்கறிஞர்களை அதிகளவில் சேர்த்து அணியினை வலுப்படுத்துவோம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">வடக்கு மண்டல வழக்கறிஞர் அணிக் கூட்டத்தில் கழக சட்டத் துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="N.R.Elango3_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஆக. 19 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தொகுதி வாரி­யாக சிறப்­பாக பணி­யாற்­றும் வழக்­க­றி­ஞர்­கள் பட்­டி­யலை தலை­மைக் கழ­கத்­திற்கு அனுப்பி வைத்­திட வேண்­டும். மேலும் இளம் வழக்­க­றி­ஞர்­களை அதி­க­ள­வில் வலுப்­ப­டுத்­திட வேண்­டும் என்று சென்னை – அண்ணா அறி­வா­ல­யத்­தில் நடை­பெற்ற வடக்கு மண்­டல வழக்­க­றி­ஞர் அணிக் கூட்­டத்­தில் உரை­யாற்­றிய கழக சட்­டத் துறைச் செய­லா­ளர் என்.ஆர்.இளங்கோ குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வடக்கு மண்­டல வழக்­க­றி­ஞர் அணி ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் கழக சட்­டத் துறை செய­லா­ளர் என்.ஆர்.இளங்கோ பேசி­ய­
தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எங்­க­ளு­டைய அழைப்பை ஏற்று இங்கே வந்­தி­ருக்­கக்­கூ­டிய பெரு­ம­திப்­பிற்­கு­ரிய மாவட்­டச் செய­லா­ளர்­களே, வழக்­க­றி­ஞர் அணி தோழர்­களே, உங்­கள் அனை­வ­ருக்­கும் என்­னு­டைய வணக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எதிர்க்­கட்­சித் தலை­வர் மற்ற நிகழ்ச்­சி­க­ளில் கலந்து கொள்­வ­தால், இந்த நிகழ்ச்சி நிர­லில் ஒரு சிறு மாற்­றம். முத­லில் மூத்த வழக்­க­றி­ஞர்­கள் எல்­லாம் பேசிய பிற­கு­தான் நான் பேச­வேண்­டி­ய­தாக இருந்­தது. ஆனால் அவர் மற்ற நிகழ்ச்­சி­க­ளில் கலந்து கொள்­வ­தால் இந்த நிகழ்ச்சி நிர­லில் சிறு மாற்­றம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">மிக மோச­மான அரசு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தோழர்­களே, நாம் இப்­போது எதிர்க்­கட்­சி­யிலே இருக்­கி­றோம். கைது நட­வ­டிக்­கை­கள் எப்­படி நம்­மு­டைய கழ­கத் தோழர்­க­ளைப் பாதிக்­கி­றது? பேசி­ய­தற்­கெல்­லாம் பொருந்­தாத சட்­டங்­க­ளில் கைது நட­வ­டிக்கை இருந்­தது. அதைப் பார்த்­துக் கொண்டே இருக்­கும்­போது, எதிர்க்­கட்சி தலை­வ­ரையே அநி­யா­ய­மான குற்­றச்­சாட்­டு­க­ளாக... முதல் நாள் தஞ்­சை­யில் பேசு­கி­றார்; மறு­நாள் காலை 6:00 மணிக்கு வந்து அவ­ரு­டைய வீட்­டிலே இருந்து அவ­ரைக் கைது செய்­யக்­கூ­டிய அள­விற்கு இந்­தக் காவல்­துறை மிக மோச­மான ஒரு சர்­வா­தி­கா­ரப் போக்­கைக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது­போன்ற ஒரு கால­கட்­டத்­தில்­தான் நாம் இங்கே கூடி­யி­ருக்­கி­றோம். இதற்கு முன்­பாக நாம் எதிர்க்­கட்­சி­யில் இருந்த போதெல்­லாம் கூட இவ்­வ­ளவு ஒரு சர்­வா­தி­கா­ரப் போக்கை நாம் பார்த்­த­தில்லை. ஒரு எதிர்க்­கட்­சித் தலை­வர் ஒரு பொதுக்­கூட்­டத்­தில் பேசி­ய­தற்­காக கைது செய்­யக்­கூ­டிய அள­விற்கு ஒரு அரசு துணி­யு­மே­யா­னால், அது இத்­தனை நாட்­கள் நடந்த எல்லா சர்­வா­தி­கார அர­சு­களை விட மிக மோச­மான அர­சா­கத்­தான் நாம் பார்க்க வேண்டி இருக்­கி­றது. இந்­தக் கால­கட்­டத்­தில் இந்த வழக்­க­றி­ஞர் அணி கூட்­டங்­கள் ஒவ்­வொரு மண்­ட­ல­மாக நடத்த வேண்­டி­ய­தி­னு­டைய அவ­சி­யம் நமக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">நாம் பணி­யாற்ற 
வேண்­டிய முறை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாம் இங்கே கூடி­யி­ ருப்­ப­த­னு­டைய கார­ணம், இளை­ஞ­ரணி செய­லா­ளர் அவர்­கள் வந்­த­வு­டனே என்­னி­டம் கேட்­டார், “கலந்­து­ரை­யா­டல்னு சொன்­னீங்­களே, நிறைய பேர் பேசு­வாங்­களா?” அப்­ப­டின்­னாங்க. “இல்­லைங்க, நாங்க மட்­டும்­தான் பேசு­வோம்.” “அது கலந்­து­ரை­யா­டல் இல்­லையே” அப்­ப­டின்­னாரு அவரு. அது அவ­ரு­டைய விட் (wit) அது எப்­ப­வுமே இருக்­கும். ஆனால், கலந்­து­ரை­யா­டல்னா நாம இதுக்­கப்­பு­றம் என்­னென்­ன­லாம் பண்ண வேண்டி இருக்கு, என்­னென்­ன­வெல்­லாம் பணி­யாற்ற வேண்டி இருக்­கி­றது என்­ப­தற்­காக இந்­தக் கூட்­ட­மாக இதை நீங்­கள் எடுத்­துக் கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கழ­கத்­தில் ஏறக்­கு­றைய 23 அணி­கள் இருந்­தா­லும் கூட, ஒவ்­வொரு அணி­யும் தன்­னு­டைய வகை­யிலே மிகச் சிறப்­பாக பணி­யாற்­றி­னா­லும் கூட, தேர்­தல் காலங்­க­ளில் வழக்­க­றி­ஞர் அணி, குறிப்­பாக கடந்த தேர்­த­லி­லும் கூட வழக்­க­றி­ஞர் அணி ஆற்­றிய பணியை தலை­வர் அவர்­கள் பாராட்­டி­யி­ருக்­கி­றார்­கள், இளந்­த­லை­வர் அவர்­கள் பாராட்­டி­யி­ருக்­கி­றார்­கள், கழ­கமே நம்­மைப் பாராட்­டி­யி­ருக்­கி­றது. அதை, அந்­தப் பணியை யாரா­லும் மறுக்க முடி­யாது. அது உண்­மை­யி­லேயே பாராட்­டுக்­கு­ரி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">எதேச்­ச­தி­கா­ரப் போக்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால், தேர்­தல் முடிந்­த­வு­டன் நம்­மு­டைய பணி­கள் முடிந்­து­விட்­டதா என்­றால், அப்­படி முடி­ய­ வில்லை என்­பதை நான் ஏற்­க­னவே சொன்­னது போல, கைது நட­வ­டிக்­கை­கள் அல்­லது எதேச்­ச­தி­கா­ரப் போக்­கில் நாம் களத்­திலே நின்று ஒவ்­வொரு தொண்­ட­னுக்­கும் பாது­காப்­பாக இருக்க வேண்­டிய சூழ்­நி­லை­யில் இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நம்­மீது, வழக்­க­றி­ஞர் அணி மீது நிறைய எதிர்­பார்ப்­பு­கள் இருக்­கி­றது. குறிப்­பாக சொல்ல வேண்­டு­மென்­றால், கைது நட­வ­டிக்­கை­க­ளில் உடனே நினைத்­தது நடக்க வேண்­டும் என்று எதிர்­பார்க்­கி­றார்­கள். அது அவர்­க­ளு­டைய உரிமை; அப்­ப ­டித்­தான் எதிர்­பார்ப்­பார்­கள். நாம் அதற்கு ஏற்­றார்­போல் நடந்து கொள்­ள­வும் வேண்­டும். முடிந்­த­வரை கைது செய்­யா­மல் பார்த்­துக் கொள்ள வேண்­டும். வழக்கு பதிந்­த­வு­டன் முன்­ஜா­மீன் எடுக்க முடி­யு­மான்னு பார்க்­க­ணும். அப்­படி இல்­லாட்டி முதல் நாள் பேசி­ய­தற்கு மறு­நாள் காலை­யிலே அரெஸ்ட் பண்ண வந்­தாங்­கன்னா, ரிமாண்ட் ரிஜ­க்ஷன் பண்­ற­துக்கு பார்க்­க­ணும். அப்­படி இல்­லாட்டி உடனே மேஜிஸ்ட்­ரேட் கோர்ட்­ல­யா­வது பெயில் எடுக்­கப் பார்க்­க­ணும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் கழ­கத் தொண்­டர்­க­ளுக்கு, அல்­லது பாதிக்­கப்­பட்ட கழ­கத் தொண்­டர்­க­ளுக்­கா­வது நீங்­கள் ஒரு விஷ­யத்­தைச் சொல்­லிக் கொடுக்க வேண்­டும். நீதித்­துறை என்­பது ஒரு முறை­யைப் பின்­பற்­றித் ­தான் நடக்­கி­றது. நாம இன்ஸ்­டண்ட்டா ஜஸ்­டிஸ் வாங்­கிக் கொடுக்க முடி­யு­மானா, இன்ஸ்­டண்ட்டா எல்லா கேஸ்­ல­யும் ஜஸ்­டிஸ் வாங்­கித் தர முடி­யாது. சில வழக்­கு­க­ளில்  அது நடக்­கும்; சில வழக்­கு­க­ளில் அது நடக்­காது. அத­னால மாவட்­டக் கழ­கத்­துல மாவட்­டச் செய­லா­ ளர்­கள்­கிட்ட இது போன்ற கைது நட­வ­டிக்கை வந்­தால் உடனே அவங்­க­கிட்ட சொல்லி, “இந்த வழக்கு இப்­படி இருக்­கி­றது; இது இப்­ப­டித்­தான் ஆகும்; இரண்டு நாள் ஆகும், மூன்று நாள் ஆகும்”ங்­க­றதை வெளிப்­ப­டை­யாக வழக்­க­றி­ஞர்­கள் மாவட்­டச் செய­லா­ளர்­க­ளி­டமும், தொடர்­பு­டைய மாவட்­டச் செய­லா­ளர்­க­ளி­டம் எடுத்­துச் சொல்ல வேண்­டி­யது நம்­மு­டைய கடமை. “நாங்க இதை பண்­ணி­டு­றோம், அதை பண்­ணி­டு­றோம்”னு சொல்லி அவங்­களை வந்து தவ­றாக நம்­ப­வைத்­து­வி­டா­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முதல்ல நாம செய்ய வேண்­டிய வேலை, உடனே அவங்­க­ளுக்­குத் தீர்வு கிடைப்­ப­தற்­கான ஏற்­பாடு செய்­ய­ணும். வழக்­கின் தன்­மை­யைப் பொறுத்து, “இந்த வழக்கு இப்­ப­டி­யா­ன­தாக இருக்­கி­றது, இந்த வழக்­கிலே இந்த மாதிரி நடக்­கும், இவ்­வ­ளவு நாள் ஆகும்” அப்­ப­டிங்­க­றதை முத­லி­லேயே கழ­கத்­துல மாவட்­டச் செய­லா­ள­ருக்­கும், பாதிக்­கப்­பட்ட அந்­தத் தொண்­டர் வீட்­டி­லே­யும் சொல்லி அதை அவங்­களை நீங்க சரி செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">சமூக வலை­த­ளங்­க­ளில் அவ­தூ­றுச் செய்­தி­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இரண்­டா­வது, சமூக வலை­த­ளங்­க­ளில் வரு­கிற பிரச்­சி­னை­கள். இதைப் பொறுத்­த­வ­ரைக்­கும் நம்ம மீது வந்து நிறைய எதிர்­பார்ப்பு இருக்­கி­றது; அதைச் செய்ய வேண்­டிய கடமை நமக்கு இருக்­கி­றது. ஏனென்­றால் பொதுக்­கூட்­டங்­க­ளில் பேசு­வது போல் அல்ல, சமூக வலை­த­ளங்­க­ளிலே பரப்­பப்­ப­டக்­கூ­டிய கருத்­துக்­கள் அல்­லது பொய்ச் செய்­தி­கள், வதந்­தி­கள், அவ­தூ­றுச் செய்­தி­கள்... இது எல்­லா­ரை­யும் மனதை நோக­டிக்­கி­றது. யாரை? பெரிய தலை­வர்  கலை­ஞர் முதற்­கொண்டு ஒவ்­வொ­ருத்­த­ரை­யும் எந்த ஆதா­ர­மும் இல்­லா­மல் மிக­வும் அரு­வ­ருக்­கத்­தக்க வகை­யில் அவர்­கள் வந்து சமூக வலை­த­ளங்­க­ளில்  பரப்­பு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அப்­போது நாம்  என்ன செய்­கி­றோம்? நாம் வந்து ரெஸ்­பான்ஸ் என்ன பண்­ண­னும் அப்­ப­டின்னா, நம்ம கம்ப்­ளைன்ட் கொடுத்­துட்டு அதோடு விட்­டு­வி­டு­கி­றோமா? அப்­ப­டின்னா, இது­வ­ரைக்­கும் சமூக வலை­த­ளங்­க­ளிலே ஆளும் கட்சி செய்­தி­ருக்­கக்­கூ­டிய அத்­தனை நிகழ்­வு­ க­ளை­யும் தனி­யாக ஒரு ரிட் பெட்­டி­ஷன் போட்டு, அதுல அந்­தச் செய்­தி­களை பரப்­பி­யோர் மீதும் சேர்த்து ஒரு ரிட் பெட்­டி­ஷன் போட்டு அத்­தனை வழக்­கு­க­ளை­யும், இதில் முக்­கி­ய­ மாக இரண்டு நபர்­கள் அர­சாங்­கத்­தில் மிக முக்­கிய பொறுப்­பில் இருக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளு­டைய நிறு­வ­ னங்­கள்­தான் இந்­தப் பொய்ச் செய்­தி­களை மிக அதி­க­மா­கப் பரப்­பு­வ­தற்­கான கார­ண­மாக இருக்­கி­றார்­கள் என்­ப­தற்­காக அவங்­க­ளை­யும் ரெஸ்­பான்­டன்ட்டா சேர்த்து ரிட் பெட்­டி­ஷன் போட்­டி­ருக்­கோம். அந்த ரிட் பெட்­டி­ஷன்ல சொல்­லப்­பட்ட அத்­தனை வழக்­கு­க­ளை­யும் சிபி­ஐக்கு அனுப்­ப­ணும்னு கேட்­டி­ருக்­கோம். ஏன்னா அது ஒரு சைபர் டெர­ரி­சம்; என்­னு­டைய பார்­வை­யில் அது ஒரு சைபர் டெர­ரி­சம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">சட்ட ரீதி­யாக 
தயா­ராக இருப்­பீர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் நாம் அல்­லது நமது இயக்­கத்­தைச் சார்ந்­த­வர்­கள் அல்­லது அர­சுக்கு எதி­ரான கருத்­துக்­க­ளைப் பரப்­பு­வர்­கள் மீது பொருந்­தாத விதி­க­ளின் கீழ், பொருந்­தாத சட்­டங்­கள் கீழ் கைது நட­வ­டிக்கை செய்­கி­றார்­கள். அப்­ப­டி­யென்­றால்  ரெண்டு விஷ­யம் நாம் செய்ய வேண்டி இருக்­கி­றது. அது என்ன செய்­ய­ணும் அப்­ப­டின்னா, ஒவ்­வொரு மாவட்­டக் கழ­கத்­தி­லும் இருக்­கக்­கூ­டிய வழக்­க­றி­ஞர் அணி, ஃபர்ஸ்ட் ரெஸ்­பான்ஸ் டீம் (First Response Team)னு ஒன்னு ரெடி பண்­ண­னும். அதை தய­வு­செய்து அமைப்­பா­ளர்­கள் அதை குறித்­துக் கொள்­ளுங்­கள்—First Response Team.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதா­வது கைது நட­வ­டிக்கை ஏற்­பட்­டால் உடனே அந்­தத் தொண்­டர் வீட்­டுக்கு ஒரு மூணு, நாலு வழக்­க­றி­ஞர் போக­ணும். அந்த மேஜிஸ்ட்­ரேட் கோர்ட்­டுக்கு ஒரு மூணு, நாலு அட்­வ­கேட் போய் வெயிட் பண்­ண­னும். ஒரு­வேளை ரிமாண்­டுக்கு கூட்­டிட்டு வந்தா, ரிமாண்ட் ரிஜ­க்ஷ­னுக்கு நீங்க ஆர்க்யூ பண்­ண­னும். ரிமாண்ட் ரிஜ­க்ஷன் ஒத்­துக்­க­லனா பெயில் உடனே விடு­வ­தற்­கான கார­ணங்­களை எடுத்­துச் சொல்­ல­ணும். அதற்கு வழக்­க­றி­ஞர்­கள் சட்­ட­ரீ­தி­யாக தங்­க ­ளைத் தகு­திப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உச்ச நீதி­மன்­றத்­துல இப்ப அதற்­கான நிறைய வழி­காட்­ட­லோடு நிறைய தீர்ப்­பு­கள் வந்­து­விட்­டன. உங்­க­ளுக்­குத் தெரி­யும், உங்க சீனி­யர்­ஸுக்­குத் தெரி­யும். இருந்­தா­லும் கூட தென்­மண்­ட­லத்­தில் நடந்த அந்­தக் கூட்­டத்­திலே , வாட்ஸ்­அப்­பில் ஒரு தொகுப்பை எல்லா வழக்­க­றி­ஞ­ருக்­கும் கொடுத்­தோம் . அதைப் பயன்­ப­டுத்தி தென்­மண்­ட­லத்­தில் போன வாரம் நடந்­தது; அதற்­கப்­பு­ற­மாக தூத்­துக்­கு­டி­யில் நடந்த இரண்டு கைது­க­ளில் நம்ம வழக்­க­றி­ஞர்­கள் அந்த தொகுப்பை கொண்டு போய் கொடுத்து வாதிட்டு , இரண்டு வழக்­கு­க­ளி­லும்  ரிமாண்ட் ரிஜெக்ட் பண்ண வச்­சாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">நமது அணிக்கு பெருமை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனவே சட்­ட­ரீ­தி­யாக உங்­களை நீங்­கள் தயார்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். கழக உணர்வு எவ்­வ­ள­வுக்கு எவ்­வ­ளவு இருக்­கி ­றதோ, அதற்கு இணை­யாக உங்­க­ளைச் சட்­டத்­தில் தகுதி படைத்­த­வர்­க­ளாக மாற்­றிக்­கொள்ள வேண்­டும். “ஒரு வக்­கீல் மட்­டும்­தான் ஆர்க்யூ பண்­ணு­வா­ரு”ன்னு இருக்­கவே இருக்­கா­தீங்க. ஒவ்­வொரு வக்­கீ­லும் தனித்­த­னி­யாக இந்த மாதிரி கேஸ் வந்­த­துன்னா அதை எடுத்து நடத்தி வெற்றி பெறு­வ­தற்கு தன்னை தகு­திப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். அது­தான் கழக வழக்­க­றி­ஞ­ருக்கு, நமது அணிக்கு அழகு; கழ­கத்­திற்கு பெருமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அந்த வழக்­கு­க­ளின் தொகுப்பு இப்ப தலை­மைக் கழ­கத்­தில் இருக்­கக்­கூ­டிய எல்லா நிர்­வா­கி­ கள்­கிட்­ட­யும் இருக்கு. உங்­க ­ளுக்கு யார் யாருக்கு வேண்­டுமோ அவங்­க­கிட்ட போன் பண்­ணிக் கேட்­டீங்­கன்னா, இல்ல வாட்ஸ்­அப்ல ஜட்ஜ்­மென்ட் அனுப்­புங்­கன்னு சொன்­னீங்­கன்னா உடனே அனுப்­பிச்சு வச்­சி­டு­வாங்க. அந்­தத் தொகுப்பை வச்­சுக்­கோங்க. இது­தான் சுப்­ரீம் கோர்ட்ல இப்ப வரைக்­கும் வந்­தி­ருக்­கக்­கூ­டிய எல்­லாத் தீர்ப்­பு­க­ளும், லேட்­டஸ்ட்டா வந்­தி­ருக்­கக்­கூ­டிய தீர்ப்­பு­கள்—­­­­ஏன் கைது­கள் செய்­யப்­ப­டக்­கூ­டாது, கைது­கள் செய்­யப்­ப­ட­ணும்னா எப்­பப்­பெல்­லாம் ரிமாண்ட் ரிஜெக்ட் பண்­ண­லாம், எப்­பெல்­லாம் பெயில் விட­லாம் என்ற தீர்ப்­பு­கள். இந்த மூன்று தொகுப்­பி­லே­யும் பார்த்­தீங்­கன்னா, இது போன்ற கைது நட­வ­டிக்­கை­க­ளில் நிச்­ச­ய­மாக என்­றைக்கு ரிமாண்­டுக்கு கொடுக்­கி­றாங்­களோ அன்­றைக்கே உங்­க­ளால் பெயில் பெற்­றுத் தர முடி­யும். அதற்­காக உங்­களை நீங்­கள் தகு­திப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன். இது First Response Team.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">சட்­டத்­திற்கு புறம்­பா­னதை பதிவு செய்­வீர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இரண்­டா­வது, குவிக் ரெஸ்­பான்ஸ் டீம் (Quick Response Team)னு ஒன்று ரெடி பண்­ணுங்க. அது யாருன்னா இளம் வழக்­க­றி­ஞர்­களை, ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் இருக்­கக்­கூ­டிய இளம் வழக்­க­றி­ஞர்­களை, பெண் வழக்­க­றி­ஞர்­களை இணைத்து Quick Response Teamனு ஒன்று தயார் பண்­ணுங்க. அவங்க யார்... என்ன. செய்ய வேண்­டு­மென்­றால், சமூக வலை­த­ளங்­க­ளிலே நம்­மு­டைய கழ­கத்­தைப் பற்றி பேசக்­கூ­டிய இடங்­க­ளிலே அல்­லது தவ­றான கருத்­துக்­க­ளைப் பரப்­பக்­கூ­டிய இடங்­க­ளிலே, தய­வு­செய்து இந்த Quick Response Team உண்­மை­யான செய்­தி­கள் என்ன, இது ஏன் பொய்ச் செய்தி, இது ஏன் மறுக்­கப்­ப­டு­கி­றது, இதை எப்­ப­டிச் சட்­டத்­திற்­குப் புறம்­பா­னது என்ற பதி­வு­களை Quick Response Team என்ற ஒரு டீம் பதிவு செய்ய வேண்­டும். இது இரண்­டத்­தை­யும் கழ­கம் நம்­மி­டம் இருந்து எதிர்­பார்க்­கி­றது. அதை நாம் தவ­றா­மல் செய்ய வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது­போன்ற நிகழ்­வு ­க­ளிலே நாம பொறுப்­பு­ட­னும் நடந்து கொள்ள வேண்­டும், புரொ­ப­ஷ­ன­ லா­வும் நடந்­துக்­க­ணும். ஏன் பொறுப்­பு­டன் நடந்து கொள்ள வேண்­டும் என்­றால், ஒரு நாள் கைது பண்ணி ஒரு தொண்­டரை உள்ள வச்­சிட்­டாங்­கன்னா அவங்க குடும்­பம் எவ்­வ­ளவு வேத­னைப்­ப­டும்? இது­போன்ற எதிர்க்­கட்­சி­யாக இருக்­கும்­போது தொண்­டர்­கள் வந்து எவ்­வ­ளவோ தியா­கங்­களை செஞ்­சிட்டு அவர்­கள் 
கழ­கத்­திற்­காக சிறைக்­குச் செல்­கி­றார்­கள். அந்த நேரங்­க­ளில் நாம எப்­படி நடந்து கொள்ள வேண்­டும் என்­றால், அத்­த­னை­யும் பொறுப்­பும் வழக்­க­றி­ஞர்­கிட்­ட­தான் இருக்­கு­ துங்­க­றதை உணர்ந்து கொள்ள வேண்­டும். ஒரு அநி­யா­ய­மான கைது நடந்­தால், அதற்­குப் பொறுப்­பேற்று அவரை வெளியே கொண்டு வர வரைக்­கும் அது வழக்­க­றி­ஞ­ரு­டைய அணி­யோட பொறுப்பு என்­ப­தைத் தெரிந்து நடந்து கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">நாம் செய்ய வேண்­டிய முதல் வேலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புரொ­ப­ஷ­ன­லா­வும் நடந்­துக்­க­ணும். அது நான் ஏற்­க­னவே சொன்ன மாதிரி, தயவு செய்து யார்­கிட்­ட­யும் ஃபால்ஸ் ப்ராமிஸ் (False Promise) கொடுத்­து­டா­தீர்­கள். “உடனே வந்­து­ரு­வாரு, நாளைக்கு வந்­து­ரு­வா­ரு”ன்னா ப்ராமிஸ் கொடுத்­து­டா­தீங்க. வழக்­கின் தன்­மை­யைப் பொறுத்து, சில நேரங்­க­ளில் நீதி­ப­தி­யைப் பொறுத்து நீங்க, “இத்­தனை நாள் கழிச்­சு­தான் அவர் பெயில் விடு­வாரு” அப்­ப­டிங்­கிற உண்­மையை எடுத்­துச் சொல்லி, அவர்­க­ளுக்கு நிவா­ர­ணம் பெற்­றுத் தர வேண்­டி­ய­து­தான் நம்­மு­டைய கட­மை­யாக இருக்க வேண்­டும். அது­தான் இப்­போ­தைக்கு நாம செய்ய வேண்­டிய முதல் வேலை­யாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதுக்­கப்­பு­றம் நாம செய்ய வேண்­டிய ஒரு வேலை என்ன என்­றால், ஒரு டேட்­டா­பேஸ் (Database) கிரி­யேட் பண்ண வேண்டி இருக்­கி­றது. என்ன டேட்­டா­பேஸ் அப்­ப­டின்னா, இந்த சட்­ட­மன்­றத் தேர்­தல் அப்­ப­தான் நாங்க பார்த்­த­போது, எந்­தெந்த மாவட்­டத்­தில், எந்­தெந்த வேட்­பா­ளர் மேல அல்­லது எந்­தெந்த கட்­சித் தொண்­டர் மேல, மாவட்­டச் செய­லா­ளர் உட்­பட அல்­லது அமைச்­ச­ராக இருந்­த­வர்­கள் உட்­பட யார் யார் மேல எந்­தெந்த வழக்கு இருக்­கு­துன்னு நம்­ம­கிட்ட ஒரு டேட்­டா­பேஸே கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">நிலுவை வழக்­கு­களை தொகுத்து வழங்­குக!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அது ஆட்­கள் மீது இருக்­கக்­கூ­டிய குற்ற வழக்­கு­கள் மட்­டு­மல்ல, கழ­கத்­தி­னு­டைய சொத்­துக்­கள் மீது நிறைய வழக்­கு­கள் பெண்­டிங்கா இருக்கு. சொல்­லப்­போனா கோயம்­புத்­தூர்ல வந்து ஒரு வழக்கு ரொம்ப நாளா பெண்­டிங்கா இருக்கு. அதற்­கான டேட்­டா­பேஸ் வந்து ஹெட் குவார்ட்­டர்ஸ்ல இல்ல. எனவே ஒரு வார காலத்­துக்­குள்­ளார வழக்­க­றி­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் உங்க மாவட்­டத்­தில், உங்க கழக மாவட்­டத்­தில் கழ­கத் தொண்­டன் முதல் கடைசி தொண்­டன் முதல் மாவட்­டச் செய­லா­ளர் வரை அவங்க மேல எத்­தனை வழக்கு இருக்கு, அந்த வழக்­கி­னு­டைய நிலைமை என்ன, அது எந்த இடத்­தில் நிலு­வை­யில் இருக்கு அப்­ப­டிங்­க­றத தொகுத்து உட­ன­டி­யாக இங்க அனுப்ப வேண்­டு­மென்று கேட்­டுக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தலை­மைக் கழ­கத்­தில் இருக்­கக்­கூ­டிய மூன்று வழக்­க­றி­ஞர்­களை இதற்­காக நான் நிய­மித்­தி­ ருக்­கி­றேன். அவர்­கள் உங்­க­ளோடு தொடர்பு கொள் ­வார்­கள்.   மாவட்­டத்­தில் இருக்­கக்­கூ­டிய அத்­தனை வழக்­கு­க­ளை­யும் தொகுத்து நீங்க கொடுக்­க­ணும். அது உயர் நீதி­மன்ற வழக்­கு­க­ளுக்­கும் பொருந்­தும். இங்க எத்­தனை எல­க்ஷன் பெட்­டி­ஷன் பெண்­டிங்கா இருக்கு, அதுல என்ன ஸ்டேஜ், அதோட ப்ளீடிங்ஸ் என்ன... இது நமக்கு பிறகு யார் வந்­தா­லும் கூட, எப்ப எங்­கி­ருந்து ஒரு வழக்­க­றி­ஞர் அணி தோழர் வந்து தலை­மைக் கழ­கத்­தில் வந்து பார்த்­தா­லும் கூட அந்த டேட்­டா­பேஸ்ல இந்­தக் கேஸ் எந்த நிலை­மை­யில் இருக்­கி­றது, எப்­படி ஈ-கோர்ட்ஸ் (e-Courts) செயல்­ப­டு­கி­றதோ அது­போன்று வழக்­க­றி­ஞ­ரு­டைய டேட்­டா­பேஸ்­ல­யும் ஒரு கிளி­யர் டேட்­டா­பேஸ் நம்ம தயார் பண்ண வேண்டி இருக்­கி­றது. அதை நீங்­கள் தொடர்ந்து செய்­ய­ணும்னு கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இப்ப இங்க வந்­தி­ருக்­கக்­கூ­டிய தோழர்­களை நான் பார்க்­கி­றேன். நீங்­கள் ஆளுங்­கட்­சி­யாக இருந்­த­போது கூட எல்­லாக் கூட்­டத்­தி­லும் வந்­தி­ருக்­கக் கூடி­ய­வர்­கள். எதிர்க்­கட்­சி­யாக இருக்­கும்­போது கூட வந்­தி­ருக்­கி­றீர்­கள். யார் யாருக்­கெல்­லாம் உணர்வு, கழக உணர்வு இருக்­கி­றதோ, இயக்­கத்­தின் பால் ஈடு­பாடு இருக்­கி­றதோ நீங்க எல்­லாம் தவ­றா­மல் வந்து விடு­கி­றீர்­கள்; உங்­க­ளு­டைய கட­மை­யைச் செய்து விடு­கி­றீர்­கள். ஆட்­சி­யில் இருந்­தப்ப பதவி வாங்­கி­யோர்  நிறைய பேர் வரல; வர­மாட்­டாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எத்­தனை பேர் வந்­தி­ருக்­கீங்­கன்­னும் தெரி­யுது, எத்­தனை பேர் வர விரும்பி வர முடி­ய­லன்­னும் தெரி­யுது, எத்­தனை பேர் வர விரும்­ப­வில்லை என்­றும் தெரி­கி­றது, எத்­தனை பேர் அர­சுப் பத­விக்கு அப்ளை பண்ணி இருக்­காங்­கன்ற வரைக்­கும் எங்­க­ளுக்­குத் தெரி­யுது. யார் யார் அப்ளை பண்ணி இருக்கா, ஏன் அதை ரிஜெக்ட் பண்­ணாங்க, அவங்க திருப்பி இங்க வர­லா­மான்னு பார்க்­கி­றாங்க... அதற்­கெல்­லாம் நாம் இடம் தரப்­போ­வ­தில்லை. சொல்­லப்­போ­னால்...   இந்த விஷ­யத்­துல மிக­வும் கண்­டிப்­பாக இருக்­கக்­கூ­டி­யது இளை­ஞ­ரணி செய­லா­ளர் அவர்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">பொறுப்­பு­டன் நடப்­போம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாம் நமக்­குள்­ளாக எப்­படி கண்­கா­ணித்­துக் கொண்­டி­ருக்­கி­றோமோ, அவ­ரும் வழக்­க­றி­ஞர் அணியை மிகச் சீரிய முறை­யிலே கண்­கா­ணித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். அடிக்­கடி என்­னைக் கூப்­பிட்டு, “நீங்க இதை செய்­ய­ணும், அதை செய்­ய­ணும்”னு சொல்­லிக்­கிட்டே இருக்­கி­றார். எனவே நான் ஏற்­க­னவே சொன்ன மாதிரி வருங்­கா­லங்­க­ளிலே இந்த இயக்­கத்தை ஏற்று நடத்த வேண்­டிய அவர், அந்­தப் பொறுப்பை வழக்­க­றி­ஞர் அணி­யைப் பொறுத்த வரைக்­கும் கூட சரி­யா­கச் செய்­கி­றார். அத­னால நாம மிகுந்த பொறுப்­போடு நடந்து கொள்ள வேண்­டும் என்­ப­தற்­காக அதைச் சொல்­லி­யி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அவர் முக்­கி­யமா என்­கிட்ட சொன்ன ஒரு செய்தி, வழக்­க­றி­ஞர் அணியை மறு­சீ­ர­மைப்பு செய்­யுங்க. அதிலே மறு­சீ­ர­மைப்பு செய்­யும்­போது இத்­தனை துணை அமைப்­பா­ளர்­கள்­தான் இருக்க வேண்­டும் என்ற அவ­சி­ய­மில்லை; தேவைக்கு ஏற்­றார்­போல் துணை அமைப்­பா­ள­ரு­டைய எண்­ணிக் ­கையை அதி­கம் செய்து கொள்­ளுங்­கள். ஆனால் அவர் எப்­ப­வுமே சொல்­லும்­போது ஒரு கண்­டி­ஷ­னோ­டு­தான் சொல்­லு­வாரு – அப்­ப­டிப் புதி­தாக நிய­மிக்­கக் கூடி­ய­வர்­க­ளிலே இளை­ஞர்­கள் அதி­க­மாக இருப்­ப­தற்­குப் பாருங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">இளம் வழக்­க­றி­ஞர்­களை அணி­யில் இணைப்­போம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இளை­ஞர்­க­ளை­யும், பெண் வழக்­க­றி­ஞர்­க­ளை­யும் அதி­க­மாக துணை அமைப்­பா­ளர்­க­ளாக நிய­மிக்க வேண்­டிய அவ­சி­யம் இந்­தக் காலத்­தில் இருக்­கி­றது. அதற்கு நீங்­கள் ஒவ்­வொரு தொகுதி வாரி­யாக கழ­கத்­திலே தேர்­தல் காலங்­க­ளில் மட்­டு­மல்ல, தேர்­தல் காலங்­க­ளி­லும் இப்­போ­தும் கூட சிறப்­பாக செயல்­ப­டக்­கூ­டிய வழக்­க­றி­ஞர்­க­ளு­டைய பட்­டி­யலை எனக்­குத் தரு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இரண்­டா­வது, நாங்­க­ளெல்­லாம் என்­ரோல் பண்­ணப்ப, 1989-–இல் நான் என்­ரோல் பண்­ணப்ப மாசத்­துக்கு ஒரு என்­ரோல்­மென்ட் நடக்­கும்; அது­கூட ஒரு புதன்­கி­ழமை நடக்­கும். அப்போ ஒரு 200 பேர் மேக்­ஸி­மம் பதிவு செய்து கொள்­வார்­கள். இப்ப ஹைகோர்ட்ல வந்து பார்த்­தீங்­கன்னா ஒவ்­வொரு வார­மும் 1000 பேர், 1000 பேர் என்­ரோல் பண்­றாங்க. அதி­க­மான வழக்­க­றி­ஞர்­கள் உள்ளே வரு­கி­றார்­கள். ஆனால் நாம் அவர்­க­ளைக் கழ­கத்­தின் பால் ஈர்த்து  நம்மோடு இணைத்துக் கொள்வதில் தவறு செய்கிறோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த கிரிராஜனைக் கேட்டீங்கன்னா உங்க ளுக்கு ஒரு பெரிய லிஸ்ட் கொடுப்பாரு, வாரம் வாரம் எவ்வளவு தூரம் என்ரோல்மென்ட் நடக்கு துன்ட்டு. அப்ப அந்த இளம் வழக்கறிஞர்களை, உங்க உங்க பார்ல வந்து சேரக்கூடிய இளம் வழக்க றிஞர்களை கழகத்தின் பாலே ஈர்த்து, இந்த வழக்கறிஞர் அணியிலே சேர்த்து, இந்த அணியி னுடைய அமைப்பை, பலத்தை அதிகரிக்க வேண்டுமாய் நான் உங்களுக்குக் கேட்டுக்  கொள்கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எப்படி அரசியலமைப் புச் சட்டம் சொல்கிறதோ, ஃப்ரெட்டர்னிட்டி என் பதை எப்படி வலியுறுத்து கிறதோ, கழக வழக்கறிஞர் அணியிலே ஃப்ரெட்டர் னிட்டியை அதிகமாக, குறிப்பாக நாம் எதிர்க் கட்சியாக இருக்கும்போது அந்தச் சகோதரத்துவத் தன்மையை அதிகமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை என்னுடைய விருப்பமாகவும் வேண்டு கோளாகவும் உங்களிடம் சொல்லி, இங்கே நான் கேட்டவுடனே இந்தக் கூட்டத்திற்கு வந்து நம்மையெல்லாம் சந்தித்து உரையாற்றுவதற்கு ஒப்புக் கொண்டிருக்கக்கூடிய இளைஞரணி செயலாள ருக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவ ருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாம் இங்கே பேசியவை இதோடு போய்விடக் கூடாது. ஒரு வார காலத்திற் குள்ளாக நான் குறிப்பிட்ட First Response Team, Quick Response Team, வழக்குகளு டைய விவரங்கள், தொகுதி வாரியாக சிறப் பாக பணியாற்றக்கூடிய வழக்க றிஞர்களுடைய பட்டியல் -– அவை அனைத் தையும் தலைமைக் கழ கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரைக் கும், இன்றும், பின்வரும் காலங் களிலும் என்னோடு கூட இருக்கும் தோழர்க ளுக்கு, வழக்கறிஞர் அணி தோழர்களுக்கு என்னு டைய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்து விடைபெறுகிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்வாறு கழக சட்டத் துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ பேசினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>