<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,32,958,925" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 20 2026 03:30:28 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260820T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="20082026-CBE-02" position.sequence="02" ex-ref="20082026-CBE-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">20.08.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="25"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">மருத்துவ இடங்கள் மீண்டும் கிடைக்குமா? </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">சட்டப்பேரவையில் </lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular"  size="25">–</lang>
	<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="25">எ.வ.வேலு கேள்வி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626431_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="velu_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சென்னை, ஆக. 20 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு  151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் மீண்டும் கிடைக்குமா? என கேள்வி எழுப்பினார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">17.08.2026 அன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில் எ.வ.வேலு பேசியதாவது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வர் அவர்­களே, ஏற்­கெ­னவே கோவை அமு­தன் கொலை, கர்­நா­ட­கத்­தில் மூன்று தமி­ழர்­கள் கொலை செய்­யப்­பட்­டி­ருப்­பது, திரு­வொற்­றி­யூ­ரில் தனுஷ்­கு­மார் கொல்­லப்­பட்­டி­ருப்­பது, தேனி மாவட்­டத்­தில் மேக­மலை சம்­பந்­தப்­பட்­டது, சென்­னை­யில் 400 சத­வி­கி­தம் சொத்து வரி ஏற்­றம் குறித்­தது, மின் கட்­ட­ணம் மற்­றும் மின் துண்­டிப்பு பற்­றி­யது இப்­படி ஐந்து அவ­ச­ரப் பொது முக்­கி­யத்­து­வம் வாய்ந்த கவன ஈரப்­புத் தீர்­மா­னத்தை தங்­க­ளி­டத்­தில் கொடுத்­தி­ருக்­கி­றேன். அவை­க­ளை­யெல்­லாம் இன்­றைக்கு எடுத்­துக்­கொள்­ள­லாம். ஏனென்­றால் இப்­போது கேள்வி நேரம் இல்­லாத கார­ணத்­தி­னால், இந்த ஐந்­தை­யும் அவ­ச­ர­நிலை கருதி இன்­றைக்கு எடுத்­துக்­கொண்­டால் சிறப்­பாக 
இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த மாமன்­றத்­தில் நீங்­கள் மூத்த உறுப்­பி­ன­ராக இருந்­து­தான் பேர­வைத் தலை­வ­ராக வந்­தி­ருக்­கி­றீர்­கள். விதி­கள் எல்­லாம் உங்­க­ளுக்­குத் தெரி­யும். கேள்வி நேரத்­தி­லும் சரி, கவன ஈர்ப்­புத் தீர்­மா­னத்­தில் குற்­றச்­சாட்டு சொல்­லக்­கூ­டாது என்று நீங்­கள் கொடுத்த விதி புத்­த­கத்­தில் இருக்­கி­றது. எங்­க­ளு­டைய  எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள் ஒரு அர­சி­னு­டைய கவ­னத்­திற்கு இந்­தந்த சம்­ப­வங்­கள் நடை­பெற்­றி­ருக்­கின்­றன என்று கவ­னத்­திற்­குத்­தான் கொண்டு வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், ஒன்­றே­யொன்று; குற்­றச்­சாட்டு சொல்­லக் கூடாது என்று விதி புத்­த­கத்­தி­லி­ருந்­து­தான் சொல்­கி­றேன். அவர் அர­சி­னு­டைய கவ­னத்­திற்­குக் கொண்டு வரு­கி­றார். காவல் துறை­யில் நாங்­கள் ஒரு கேள்வி கேட்­டால், அப்­போது அமைச்­சர் அவர்­கள் பதில்­கூட சொல்­ல­லாம். ஆனால், கவன ஈர்ப்­புத் தீர்­மா­னத்­   திலோ அல்­லது ஒத்­தி­வைப்பு தீர்­மா­னத்­திலோ நாங்­கள் கேட்­கிற கேள்­விக்கு அரசு விளக்­கம்­தான் தர வேண்­டும். நீங்­கள் சொல்­கி­றீர்­கள். அதற்கு எதிர் குற்­றச்­சாட்டு சொல்­கி­றோம் என்று சொல்­வது இது­வ­ரை­யில் விதி மர­பு­கள் அல்ல. அதை நீங்­கள் கடை­பி­டிக்க வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன். பொதுப் பணித் துறை அமைச்­சர் சொல்­லி­ய­தற்கு எங்­க­ளு­டைய  எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள் பதில் சொல்­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அவசரத் தீர்மானம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வர் அவர்­களே, கர்­நா­டக மாநி­லத்­தில் 3 தமி­ழர்­கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்­கள் என்ற ஓர் அவ­ச­ரத் தீர்­மா­னத்தை காலை­யில் கொடுத்­தேன். ஏனென்­றால், அது முக்­கி­ய­மா­னது ஆகை­யால் இன்­றைக்கு நீங்­கள் எடுத்­துக்­கொள்­வ­து­தான் நல்­லது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏற்­கெ­னவே ruling இருக்­கி­றது. இதே­போன்று பல­முறை அமைச்­சர்­கள் பெயரை, முத­ல­மைச்­சர் பெயரை சொல்­கின்ற அடிப்­ப­டை­யில் அம்­மை­யார் காலத்­தில் இருந்தே, இரண்டு பக்­கத்­தி­லும் பல பிரச்­சி­னை­கள் வந்­த­பி­றகு  பேர­வைத் தலை­வர் அவர்­கள் ஒரு முடிவு எடுத்­தார்­கள். அதா­வது, இன்­றைய முத­ல­மைச்­சர், மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர். ஏற்­கெ­னவே இருந்­த­வர்­களை முன்­னாள் முத­ல­மைச்­சர் என்­று­தான் சட்­ட­மன்­றத்­தில் குறிப்­பிட வேண்­டும். பெய­ரைச் சொல்­லக்­கூ­டாது என்று ஏற்­கெ­னவே இங்கு ruling இருக்­கி­றது.  அத­னால் அதைக் கடைப்­பி­டித்­தால் இந்த பிரச்­சி­னை­கள் பாதி அடங்­கி­வி­டும். அத­னால், மரி­யா­தைக் குறைவு இல்­லா­மல் இந்த சட்­ட­மன்­றம் நடக்க வேண்­டும். அத­னால் அமைச்­சர் பெய­ரைச் சொல்­லும்­போது கூட மாண்­பு­மிகு துறை அமைச்­சர் என்று சொல்­ல­லாம்.  அது­வும்      குறிப்­பாக,  முத­ல­மைச்­சரை  விளிக்­கி­ற­பொ­ழு­தும் சரி, முன்­னாள் முத­ல­மைச்­சரை விளிக்­கி­ற­பொ­ழுது முன்­னாள் முத­ல­மைச்­சர் என்­று­தான் விளிக்க வேண்­டு­மென்று ruling இருக்­கி­றது. அத­னால், அது­போன்று கடை­பி­டித்­தால்­தான் ஒன்று. இன்­னொன்று, ஏற்­கெ­னவே என்­ன­வென்று கேட்­டீர்­க­ளென்­றால், ஏதா­வது, அவ­ச­ரம் கருதி உட­னேயே அமைச்­சர்­கள் பதில் சொல்­ல­லாம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இல்­லை­யென்­றால் அமைச்­சர்­கள் கடை­சி­யில் பேசு­வ­தற்கு அவர்­க­ளைப்பொறுத்­த­வ­ரை­யில் நிறைய வாய்ப்பு உண்டு. நேரத்­தின் அருமை கருதி நான் சொல்­கி­றேன். எல்­லா­வற்­றிற்­கும் எழுந்து நின்று அப்­போ­தைக்­கப்­போது பதில் சொல்ல வேண்­டு­மென்று நினைத்­தால் உங்­க­ளால்நேரம் கொடுக்க முடி­யாது. அதை­யும் நீங்­கள் பார்த்­துக்­கொள்­ளுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">உச்சநீதிமன்றத் தீர்ப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாநில அர­சி­னு­டைய மருத்­துவ இடங்­க­ளில் ஒன்­றிய அர­சுக்கு 15       சத­வி­கி­தம் நாம் வழங்­கு­கி­றோம். 15 சத­வி­கி­தம் வழங்­கி­விட்டபின்பு,      ஒன்­றிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து               27 சத­வி­கி­தங்­களை மிகப் பிற்­ப­டுத்­தப்­பட்­டோ­ருக்கு வழங்க வேண்­டும் என்ற அந்த அடிப்­ப­டை­யி­லும், ஏற்­கெ­னவே doctors அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளில் 50 சத­வி­கி­தம் நமக்கு மீண்­டும்       தர வேண்­டு­மென்று உச்சநீதி­மன்­றத்­திலே எங்­க­ளு­டைய தலை­வர் அவர்­கள் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் வழக்­குத் தொடர்ந்து, அவை­க­ளை­யெல்­லாம் கொடுக்க வேண்­டு­மென்று உச்ச நீதி­மன்­றம் ஏற்­கெ­னவே ஒரு தீர்ப்பு வழங்­கி­யி­ருக்­கி­றது.  அந்­தத் தீர்ப்­பின் அடிப்­ப­டை­யிலே, தமிழ்­நாட்­டிற்கு மட்­டு­மல்ல, இந்­தி­யா­வில் இருக்­கின்ற அனைத்து மாநி­லங்­க­ளுக்­கும் பொருந்­தும் என்­று­தான் உச்ச நீதி­மன்­றம் தீர்ப்பு வழங்­கி­யது. அந்த அடிப்­ப­டை­யில், ஏறத்­தாழ 151 super speciality என்று சொல்­லப்­ப­டு­கிற அந்த இடம் நமக்கு கிடைத்­துக் கொண்­டி­ருந்­தது. இப்­போது, உச்ச நீதி­மன்­றம் என்ன சொல்­லி­யி­ருக்­கி­றது என்­றால், 151 super speciality என்­பது மாநில அர­சாங்­கத்­திற்கு இல்லை, ஒன்­றிய அர­சாங்­கம் எடுத்­துக்­கொள்­ளும் என்று Supreme Court ஒரு தீர்ப்பு வழங்­கி­யி­ருக்­கி­றது. எனவே, மருத்­து­வம், மருத்­து­வக் கல்வி மற்­றும் குடும்ப நலத் துறை அமைச்­சர் அவர்­க­ளி­டத்­தில் நான் கேட்­டுக்­கொள்ள விரும்­பு­வது, மீண்­டும் 151 super speciality என்­கிற அந்த மருத்­துவ இடம் நமக்கு வரு­வ­தற்­காக, நம்­மு­டைய தமிழ்­நாட்­டில் இருக்­கிற மருத்­து­வர்­கள் அதா­வது அரசு மருத்­து­வ­ம­னை­யிலே பணி­யாற்­று­கிற மருத்­து­வர்­கள் super speciality பயிற்சி பெறு­வ­தற்கு இந்த அரசு என்ன நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றது என்­பதை அறிய விரும்­பு­கி­றேன்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைச்­சர் அவர்­கள் பதி­லுரை நிகழ்த்­திக் கொண்­டி­ருக்­கி­றார். நாங்­கள் அனை­வ­ரும் பொறு­மை­யாக அவ­ரு­டைய பேச்­சைக் கேட்­டுக்­கொண்­டு­தான் இருக்­கி­றோம். போகி­ற­போக்­கில், ஏற்­கெ­னவே இருந்த அர­சாங்­கம் நிர்­வா­கத் திறமை அற்­றது, நாங்­கள் நிர்­வா­கம் நன்­றா­கச் செய்­கி­றோம் என்று சொல்­வ­தைப் பற்­றி­யெல்­லாம், அது­தான் பொது­வான கருத்­து­கள். சில அர­சாங்­கத்­தில் leakage இருக்­கும். நாங்­கள் leakage என்­று­கூட பேசுங்­கள் அல்­லது நாங்­கள் திற­மை­யா­ன­வர்­கள் என்று உங்­க­ளைப் பாராட்­டிக் கொள்­ளுங்­கள். அதில் எங்­க­ளுக்கு            மாற்­றுக் கருத்­தும் இல்லை. முத­ல­மைச்­சர் அவர்­க­ளைப் பாராட்­டு­கி­றார்­கள், அதெல்­லாம் உங்­க­ளு­டைய உரிமை. அதில் ஒன்­றும் மாற்­றம் இல்லை. நீங்­கள் ஏற்­கெ­னவே Ruling கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள்.  என்று எதைச் சொன்­னா­லும் சரி, அதற்கு ஆதா­ரம் இருக்க வேண்­டும். அப்­போ­து­தான் நீங்­கள் குறிப்­பிட வேண்­டு­மென்று, நீங்­கள் ஏற்­கெ­னவே சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள், உங்­க­ளு­டைய Ruling. இது ஒன்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வளர்ச்சிக்கு கார­ணம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">திரா­விட இயக்­கம்­!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது இல்­லா­மல்,  இந்த நாடு இன்­றைக்கு வளர்ச்சி பெற்­ற­தற்­குக் கார­ணம் திரா­விட இயக்­கம்­தான். இன்­றைக்கு நாம் அனை­வ­ரும் படித்­தி­ருக்­கி­றோம் என்று சொன்­னால், அதற்­குக் கார­ணம் திரா­விட இயக்­கம்­தான். (மேசை­யைத் தட்­டும் ஒலி) அமைச்­சர் அவர்­கள்­தான் கூறி­னார், நான் கிரா­மத்­தில் எங்கோ பிறந்து வளர்ந்­தேன், எங்கோ சென்று, கிருஷ்­ண­கி­ரி­யில் ஒரு கிரா­மத்­தில் சென்று மருத்­து­வ­ராக நான் வந்­தேன் என்று சொன்­னால், இந்த மருத்­து­வம் சாதா­ரண கிரா­மத்­தில் இருப்­ப­வர்­க­ளும் படிப்­ப­தற்கு வாய்ப்­புத் தந்­தது திரா­விட இயக்­கம்­தான். திரா­விட இயக்­கம் இல்­லை­யென்­றால் நான் பேசி­யி­ருக்க முடி­யாது. யாரும் படித்­தி­ருக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, திரா­விட இயக்­கத்­தை நீங்­கள் புதி­தாக வந்­தி­ருக்­கி­றீர்­கள், கொள்­கை­யைச் சொல்­லுங்­கள். மீண்­டும் நாங்­கள்­தான் ஆட்­சிக்கு வரு­வோம் என்று சொல்­லுங்­கள். 25 ஆண்­டு­கா­லம் கட்­ட­மைத்­தோம் என்று சொல்­லுங்­கள் அது உங்­க­ளு­டைய உரிமை. ஆனால், அடுத்­த­வர்­க­ளைப் பேசு­கி­ற­பொ­ழுது, அடுத்­த­வர்­களை கை நீட்­டு­கிற பொழுது, ஆதா­ரம் இல்­லா­மல் பேச வேண்­டாம்  என்று  நீங்­கள் தய­வு­செய்து Ruling கொடுங்­கள். இல்­லை­யென்­றால், இந்த 25 நாட்­க­ளும் இதே பிரச்­சி­னை­தான் வரும். சட்­ட­ச­பையை நாம் நடத்த முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்வாறு எ.வ.வேலு பேசினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>