<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,32,958,1500" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 20 2026 03:42:57 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260820T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="20082026-CHN-06" position.sequence="06" ex-ref="20082026-CHN-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">20.08.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">கழக அரசு சார்பாக கீழடி, நெல்லை, பொருநை போன்ற இடங்களில் அருங்காட்சியகங்கள்!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="29"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="71">‘திராவிட மாடல்’ ஆட்சியில் கிராமப்புறங்களில் 1,166 தரைப்பாலங்கள் – உயர்மட்டப் பாலங்கள்! </lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="71"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை மானிய விவாதத்தில்  முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேச்சு...</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="45">நெடுஞ்சாலைத்  துறைக்கு   முக்கியத்துவம்  தந்து 67,211  கிலோ மீட்டர்  நீள சாலை  பராமரிக்கப்பட்டது!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup857481_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup637302_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626431_06_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அடுத்­த­தாக, நிர்­வாக சீர்­தி­ருத்­தம் என்ற பெய­ரில் ஒன்­றிய அர­சுக்கு இணை­யாக மாநில நெடுஞ்­சாலை ஆணை­யம் ஒன்று, 7–3–2024 அன்று ஆளு­நர் ஒப்­பு­த­லு­டன் சட்­டப்­படி இதே மாமன்­றத்­தில் சட்­டம் நிறை­வேற்­றப்­பட்டு, துவக்­கப்­பட்­டது.  சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 புதிய மண்­ட­லங்­கள் உரு­வாக்­கப்­பட்­டன. தர­மான சாலை­களை அமைக்­கும்­பொ­ருட்டு தரக் கட்­டுப்­பாட்­டுக் 10 கோட்­டப் பொறி­யா­ளர் குழு அமைக்­கப்­பட்­டது;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">நிர்வாகச் சீர்திருத்தம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதோடு மட்­டு­மல்ல; இந்த விபத்து இல்லா மாநி­லம் என்ற இலக்கை அடை­வ­தற்­காக, ‘நம்ம சாலை’ என்ற புதிய செய­லியை உரு­வாக்கி, 1–11–2023 அன்று  அன்­றைய துணை முத­ல­மைச்­சர், இன்­றைய எங்­க­ளு­டைய எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­க­ளு­டைய திருக்­க­ரத்­தால் அந்த செயலி துவக்­கப்­பட்­டது. அதன்­மூ­லம், 13,300 புகார்­கள் பெறப்­பட்டு, பள்­ளம் இல்­லாத சாலை­கள் சீர்­செய்­யப்­பட்டு, பொது­மக்­க­ளி­டம் நற்­பெ­யர் பெற்­றுக்­கொண்­டி­ருப்­ப­தை­யும் இந்த அவைக்கு தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன். நெடுஞ்­சா­லை­யைப் பொறுத்­த­ள­வில், முதன்­மு­த­லாக, 2002 ஆம் ஆண்­டில் முதன்­மு­த­லாக Internal Audit என்ற ஒரு முறை­யைக் கொண்­டு­வந்­தோம். ஏனென்­றால், ஒரு­கா­லத்­தில், மாநி­லத்­தில் ஆண்டு முழு­வ­தும் மாநி­லத்­தில் என்ன நட­வ­டிக்­கைள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன, ஒப்­பந்­தப்­புள்­ளி­கள் கோரு­வது குறித்­தும் தெரி­யா­ம­லேயே இருந்­தது. அந்­தக் காலத்­தில்     M–Book–களைக் கட்­டிப் போட்­டு­வி­டு­வார்­கள். நாம் தேடிப்­பார்த்­தா­லும் கிடைக்­காது. அப்­ப­டிப்­பட்ட நிலை­யில் எங்­கள் ஆட்சி பொறுப்­பேற்­ற­வு­ட­னேயே, internal audit என்ற முறை­யைக் கொண்­டு­வந்து, ஆண்­டிற்­கொ­ரு­முறை Divisional Level–ல் audit செய்து அர­சாங்­கத்­திற்கே கொண்­டு­வந்து கொடுக்க வேண்­டும் என்ற அடிப்­ப­டை­யில், அந்த பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. 2021 ஆம் ஆண்டு வரை­யில், இத்­து­றை­யில் 1,074 ஒப்­பந்­த­தா­ரர்­கள்­தான் இருந்­தார்­கள். எனவே, போட்டி அதி­க­மாக உரு­வாக்க வேண்­டும் என்­கிற அடிப்­ப­டை­யில், எங்­கள் ஆட்சி புதி­தாக பொறுப்­பேற்­ற­வு­டன் 2024 ஆம் ஆண்­டு­வ­ரை­யில் 1,255 புதிய ஒப்­பந்­த­தா­ரர்­கள் பதிவு செய்­யப்­பட்டு, ஒப்­பந்­தப் பணி­க­ளின் விதி­க­ளுக்­குட்­பட்டு சாலை­கள் அமைக்­கும் பணி­க­ளில் ஈடு­பட்­டது என்­பது வர­லாறு. பாலங்­க­ளின் உறு­தித் தன்­மை­யைக் கண்­ட­றி­வ­தற்­காக அவற்றை ஆய்வு செய்­வ­தற்­காக, ‘பாலங்­கள் சிறப்பு ஆய்வு அலகு’ என்ற ஒரு அலகு தொடங்­கப்­பட்­டது.  22 மாவட்­டங்­க­ளில் என் தலை­மை­யில் கல்­வித் துறை, மக்­கள்  நல்­வாழ்­வுத்துறை, நெடுஞ்­சா­லைத் துறை, காவல் துறை ஆகிய துறை­க­ளின்­மூ­லம் விழிப்­பு­ணர்வை உரு­வாக்­கு­வ­தற்கு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டன. கும்­ப­கோ­ணம், அறந்­தாங்கி, கோவில்­பட்­டி­யில் 3 புதிய கோட்­டங்­கள் துவங்­கப்­பட்­டன. அதோடு மட்­டு­மல்ல; இன்று அண்ணா சாலை என்று சொல்­லப்­ப­டு­கிற தேனாம்­பேட்டை முதல் சைதாப்­பேட்டை வரை, 3.2 கி.மீ. தூரத்­திற்கு 621 கோடி மதிப்­பீட்­டில் நான்­கு­வழி உயர்­மட்­டப் பாலம் கட்­டப்­ப­டு­கி­றது. Metro rail–சுரங்­கப்­பா­தைக்கு மேல் உயர்­மட்­டப்­பா­லம் உல­கத்­தி­லேயே முதன்­மு­றை­யாக அமைக்­கப்­ப­டு­கி­றது. மெட்ரோ சுரங்­கப்­பா­தை­யில் கீழே போகும்­போது, மேல்­வ­ழி­யா­கப் போவது. இது­போன்று உல­கத்­தி­லேயே வேறு எங்­கும் பாலம் இல்லை. இந்த design–ஐ யார் செய்­தார்­கள் என்­றால், தமிழ்­நாட்­டில் நெடுஞ்­சா­லைத் துறை­யின் பொறி­யா­ளர்­கள். நம் மாநி­லத்­தின் பொறி­யா­ளர்­க­ளின் திறமை நாட்­டிற்­குத் தெரிய வேண்­டும். தமிழ்­நாட்­டில் நெடுஞ்­சா­லைத் துறை­யைச் சார்ந்த பொறி­யா­ளர்­கள், சென்­னை­யில்  IIT. அதோடு மட்­டு­மல்ல,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நமது பெரு­மையை நாம் பேசி­யாக வேண்­டுமே! நமது பொறி­யா­ளர்­க­ளைப் பற்­றி­தான் சொல்­கி­றேன். நமது பொறி­யா­ளர்­கள்­தான் அங்­கும், அந்த பொறி­யா­ளர்­கள்­தான் இங்­கும் பணி­பு­ரி­கின்­றார்­கள். சென்னை IIT, தமிழ்­நாட்­டில் நெடுஞ்­சா­லைத் துறை­யைச் சார்ந்த பொறி­யா­ளர்­கள், Nippon Koei, ஆகிய 3 நிறு­வ­னங்­க­ளும் ஒன்­றாக இணைந்­து­தான் அந்த design–ஐ செய்­தார்­கள். அதில் நமக்கு என்ன பெருமை என்­றால், ஜப்­பான், Tokio Marine என்­கிற நிறு­வ­னம் சர்­வ­தேச விருதை நமக்கு அளித்­தி­ருக்­கி­றது. அது­தான் இப்­ப­ணி­யின் சிறப்பு. (மேசை­யைத் தட்­டும் ஒலி) அந்த அள­விற்கு சிறப்­பாக அதனை செய்­தி­ருக்­கி­றோம்.  (குறுக்­கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">அரசு ஒப்பந்தங்களில் மதிப்பீடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அரசு ஒப்­பந்­தங்­க­ளில் மதிப்­பீடு என்­பது மிக முக்­கி­ய­மா­னது. மதிப்­பீ­டு­க­ளின் அடிப்­ப­டை­யில்­தான் ஒப்­பந்­தங்­கள் கோரப்­ப­டு­கின்­றன. மதிப்­பீ­டு­கள் தயார் செய்­வ­தற்கு அடிப்­ப­டை­யாக Schedule of Rates (SOR) தான் பயன்­ப­டுத்த வேண்­டும். இதற்­கான அர­சாணை, 25–4–1947 அப்­போ­து­தான் முதன்­மு­த­லில் Schedule of Rates (SOR)–ஐ ஆரம்­பித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">17–11–1992–ல் இரண்­டா­வது ஆணை, 14–3–2004–ல் மூன்­றா­வது ஆணை. ஆக, தமிழ்­நாட்­டில் 3 Schedule of Rates என்­கிற ஆணை போடப்­பட்­டி­ருக்­கி­றது. இது­தான் shedule of rate என்­கிற ஆணை­கள் சம்­பந்­தப்­பட்­ட­து­தான் இந்த 3 values. 1, 2, 3 இந்த valueதான் Schedule of Rates என்­கிற value. இந்த values வைத்­துக் கொண்­டு­தான் யாராக இருந்­தா­லும், ஒவ்­வொரு துறை­யி­லும் இதன்­மூ­ல­மாக நாம் செய்ய முடி­யும். இந்த ஆணை­யைத் தயா­ரிக்­கும் குழு­வில் நிதித் துறை­யின் செய­லா­ளர் அல்­லது அவ­ரால் நிய­மிக்­கப்­ப­டு­கிற I.A.S. அதி­காரி. அதோ­டு­மட்­டு­மல்ல, பொதுப் பணித் துறை, நெடுஞ்­சா­லைத் துறை, நீர்­வ­ளத் துறை, தமிழ்­நாடு நகர்ப்­பு­றத் துறை, தமிழ்­நாடு குடி­நீர் வடி­கால் வாரி­யம், வீட்டு வச­தித் துறை, வனத் துறை, காவ­லர் வீட்டு வச­திக் கழ­கம், தோட்­டக்­க­லைத் துறை, தமிழ்­நாடு நுகர்­பொ­ருள் வாணி­பக் கழ­கம் ஆகிய துறை­க­ளி­னு­டைய தலை­மைப் பொறி­யா­ளர்­கள் அல்­லது அவர்­க­ளால் நிய­மிக்­கப்­ப­டு­கிற பிர­தி­நி­தி­கள்­தான், SOR என்­ப­தைத் தயா­ரிக்­கும் குழு­வாக இருந்து அதைத் தயா­ரிக்­கி­றார்­கள். அதை தயா­ரித்த பிற­கு­தான் அனைத்­துத் துறை­க­ளுக்­கும் அது அனுப்­பப்­ப­டும். அனுப்­பி­ய­தன் அடிப்­ப­டை­யில்­தான் திட்­டங்­களை மதிப்­பீடு செய்­வார்­கள். இதற்கு எப்­படி Schedule of Rates–ஐ calculate செய்­கி­றார்­கள் என்­றால்  மத்­திய அர­சாங்­கத்­தி­னு­டைய எஃகு உற்­பத்தி நிறு­வ­னத்­தின் ஸ்டீல் விலை, தமிழ்­நாடு சிமென்ட் கழ­கத்­தி­னு­டைய சிமென்ட் விலை, தொழி­லா­ளர் நலத் துறை சார்­பாக நிர்­ண­யிக்­கப்­ப­டும் ஊதிய விகி­தங்­கள், ஆள் கூலி, அது­மட்­டு­மல்ல, Schedule of Rate என்­பது மணல் இவை எல்­லாம் எங்­கெங்­கெல்­லாம் இருக்­கி­றதோ, M–sand இருக்­கி­றதோ அதன் bill எல்­லாம் வாங்கி summary செய்து, இந்­தக் கூட்­டம்­தான் முதன்­மு­த­லாக SOR என்­கிற Schedule of Rate என்­ப­தைத் தயார் செய்து, அதைப் பொதுப் பணித் துறை­யின் சார்­பாக, அந்­தத் துறை­யின் செய­லா­ளரை வைத்து வெளி­யி­டு­கி­றார்­கள். அது அனைத்­துத் துறை­க­ளுக்­கும் அனுப்­பப்­பட்டு, அத­ன­டிப்­ப­டை­யில் மதிப்­பீ­டு­கள் எல்­லாம் தயார் செய்­யப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் இதைச் சொல்­வ­தற்கு என்ன கார­ணம் என்­றால், அன்­றைக்கு  முத­ல­மைச்­சர்  தன்­னு­டைய பதி­லு­ரை­யில் பேசு­கி­ற­போது, நாங்­க­ளெல்­லாம் கேட்­டுக்­கொண்­டு­தான் இருந்­தோம். முதன்­மு­த­லாக  முத­ல­மைச்­சர் வந்­தி­ருக்­கி­றார். அவ­ரு­டைய உரையை முழு­மை­யா­கக் கேட்க வேண்­டும் என்ற அடிப்­ப­டை­யில்­தான் நாங்­கள் உரை­யைக் கேட்­டுக் கொண்­டி­ருந்­தோம். பேசிக் கொண்­டி­ருந்த  முத­ல­மைச்­சர்  திடீ­ரென்று என்ன சொன்­னார் என்­றால், அவர் பேசிய முழு உரை­யை­யும் நான் வைத்­தி­ருக்­கி­றேன். ஆனால், அதை நான் சுருக்­க­மா­கச் சொல்­கி­றேன். அன்­றைக்கு  முத­ல­மைச்­சர்  அளித்த பதி­லு­ரை­யில் tender–களை முறைப்­ப­டுத்த தெரிந்த அள­விற்கு tender rate–ஐ உயர்த்தி ஊழல் செய்­யத் தெரி­யாது என்ற ஒரு வார்த்­தை­யைச் சொன்­னார். ஊழல் என்ற வார்த்­தையை தய­வு­செய்து நீங்­கள் இப்­போதே எடுத்­து­வி­டுங்­கள். அவர் சொன்ன வார்த்­தை­யைத்­தான் quote செய்­கி­றேன். நீங்­களே எடுத்­து­வி­ட­லாம். எங்­க­ளுக்கு rate–ஐ ஏற்­றத் தெரி­யாது. ஏனென்­றால், rate ஏற்­று­வது எல்­லாம்,  முத­ல­மைச்­சர் அவர்­களை  என்ற அடிப்­ப­டை­யில்­தான் (குறுக்­கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சட்­ட­மன்­றத்­தில் இது ஒரு பதி­வாக இருக்­கிற கார­ணத்­தி­னால் நான் இதைச் சொல்­கி­றேன். நான் என்ன சொல்­கி­றேன் என்­றால்  முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு அதி­க­மான திறமை இருக்­கி­றது என்­ப­தில் எனக்கு மாற்­றுக் கருத்து இல்லை. ஆனால், நான் சொல்ல விரும்­பு­வது என்­னு­டைய வய­திற்கு நான் இந்­தச் சட்­ட­மன்­றத்­திற்கு 1984–ல் வந்­தேன் என்­பது உங்­க­ளுக்கு எல்­லாம் தெரி­யும். நான் எந்­த­வி­த­மான தவ­றான வார்த்­தை­களோ அல்­லது unparliamentary words பயன்­ப­டுத்­த­மாட்­டேன். அது­போன்று பயன்­ப­டுத்­த­வும் எனக்­குத் தெரி­யாது. ஏனென்­றால், அப்­ப­டித்­தான் எங்­க­ளை­யெல்­லாம் வளர்த்­தி­ருக்­கி­றார்­கள். மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர். காலத்­தி­லும் சரி, அண்­ணன் கலை­ஞர் காலத்­தி­லும் சரி, என்­னு­டைய தலை­வர் திரா­விட மாடல் நாய­கன் எங்­களை அப்­ப­டித்­தான் வளர்த்­தி­ருக்­கி­றார். (மேசை­யைத் தட்­டும் ஒலி) அதில் ஒன்­றும் மாற்­றுக் கருத்­தில்லை. ஆனால், இந்த Schedule of Rates என்­பது எப்­படி தயார் செய்­யப்­ப­டு­கி­றது. நாளைக்கு,  அமைச்­ச­ராக இருப்­ப­வர்­கள் பிற்­கா­லத்­தில்  ஒரு கேள்வி கேட்­கும்­போது நீங்­க­ளும் இப்­ப­டித்­தான் பதில் சொல்ல வேண்­டிய சூழ்­நிலை இருக்­கி­றது. இந்­தப் புத்­த­கத்தை நான் ஒன்­றும் தயார் செய்ய முடி­யாது. Schedule of Rates நான் செய்ய முடி­யாது. இது காலம் கால­மாக 1947–ல் சுதந்­தி­ரம் அடைந்த காலத்­தி­லி­ருந்து Schedule of Rates என்­பது அர­சி­னு­டைய guide மாதிரி. அர­சி­னு­டைய அனைத்­துத் துறை­ க­ளுக்­கும் guide மாதிரி. நான் எல்­லாத் துறை­க­ளை­யும் சொல்­லி­விட்­டேன். இதில் தவ­றாக நான் ஒன்­றை­யும் சொல்­ல­வில்லை என்று இந்த நேரத்­தில் நான் தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதோ­டு­மட்­டு­மல்ல, இந்­தத் துறை­யைப் பற்றி நீங்­கள் சொல்ல வேண்­டும் என்று நினைத்­தீர்­கள். நான் சுருக்­க­மா­கச் சொல்­கி­றேன். முத­ல­மைச்­சர் சாலை மேம்­பாட்­டுத் திட்­டத்­தின்­கீழ், இப்­போது இருக்­கிற கொள்கை விளக்­கக் குறிப்­புப் புத்­த­கத்­தில் சொல்­கி­றேன். முத­ல­மைச்­சர் சாலை மேம்­பாட்­டுத் திட்­டம் என்­கிற பெய­ரில் 497 கி.மீ. நான்கு வழித்­த­ட­மாக, 77 கி.மீ. இரு வழித்­த­ட­மாக மேம்­ப­டுத்­தும் நிலை, பணி­யாக உள்­ளது என்று பக்க எண் 37–ல் நீங்­கள் குறிப்­பிட்­டி­ருக்­கி­றீர்­கள். ஆனால், இந்­தத் திட்­டத்­தின்­கீழ் இந்த நிதி­யாண்­டில் எத்­தனை கிலோ மீட்­டர் நான்கு வழித்­த­டம், எத்­தனை கிலோ மீட்­டர் இரண்டு வழித்­த­டம் என்று எதை­யும் குறிப்­பி­ட­வில்லை. ஒரு திட்­டத்­தைப் பற்­றிக் குறிப்­பி­டும்­போது இந்த வரு­டம் இவ்­வ­ளவு நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது, இவ்­வ­ளவு பணி­கள் செய்­யப்­ப­டும் என்ற குறிப்­பி­டப்­பட வேண்­டும். ஆனால், அப்­ப­டிச் சொல்­லப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதோடு மட்­டு­மல்­லா­மல், முத­ல­மைச்­ச­ரின் சாலை மேம்­பாட்­டுத் திட்­டம். அனைத்­துப் பரு­வக் காலங்­க­ளி­லும் தங்­கு­த­டை­யின்றி சாலை­களை இணைக்­கும் திட்­டம், உயர்­மட்­டப் பாலங்­கள் அமைத்­தல் ஆகிய தலைப்­பு­க­ளில் நிலு­வை­யி­லுள்ள பணி­கள் மட்­டுமே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. இந்த நிதி­யாண்­டில் எத்­தனை பணி­களை மேற்­கொள்­ள­வுள்­ளோம் என்ற விவ­ரம் அதில் இடம்­பெ­ற­வில்லை.  சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள்,  முத­ல­மைச்­ச­ரின் சாலை மேம்­பாட்­டுத் திட்­டத்­தின்­கீழ், “எங்­கள் தொகு­தி­யில் இந்­தச் சாலைப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டும்; இந்­தப் பள்­ளம் சீர் செய்­யப்­பட வேண்­டும்; மழைக் காலம் என்­ப­தால் இந்­தப் பணி­க­ளெல்­லாம் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென்று” எழுத்­துப்­பூர்­வ­மாக கோரிக்கை வைப்­பார்­கள். அனைத்து சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டைய கோரிக்­கை­க­ளை­யும் நிறை­வேற்­று­வ­தற்கு ஏது­வாக அந்­தத் தலைப்­பு­க­ளின்­கீழ் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டும். ஆனால், என்­னென்ன பணி­களை செய்­யப் போகி­றோம்,  எத்­தனை பணி­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருக்­கின்­றன என்­பது குறித்த விவ­ரங்­கள் அதில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதே­போல, புற­வ­ழிச் சாலை­கள், நகர்ப்­பு­றப் பகுதி சாலை­கள் மற்­றும் உள்­கட்­ட­மைப்பு மேம்­பாட்­டுத் திட்­டங்­கள் தொடர்­பான நிலு­வை­யில் உள்ள பணி­கள் குறித்து மட்­டுமே பக்­கங்­கள் 40 மற்­றும் 41–ல் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. இந்­தத் திட்­டங்­கள் இந்த நிதி­யாண்­டில் நிறை­வேற்­றப்­ப­டும் என எந்­தத் திட்­டங்­க­ளும் குறிப்­பி­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதே­போன்று பேரி­டர் மேலாண்­மைச் செயல்­பா­டு­கள் குறித்தோ, வெள்­ளத் தடுப்­புப் பணி­கள் குறித்தோ இந்த அரசு என்ன நட­வ­டிக்கை எடுக்­கப் போகி­றது என்­பது குறித்து கொள்கை விளக்­கக் குறிப்­பில் எங்­கும் குறிப்­பி­ட­வில்லை. எனவே, இவை­யெல்­லாம் குறிப்­பிட்­டி­ருந்­தால், வருங்­கா­லத்­தில் 
சக  சட்­ட­மன்ற உறுப்­பி­னர் சட்­ட­மன்­றத்­தில் 
கேள்­வி­க­ளைக் கேட்­ப­தற்கு வாய்ப்­பாக அது அமைந்­தி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் நிறை­வா­கச் சொல்ல விரும்­பு­வது என்­ன­வென்­றால், மனி­த­வள மேலாண்மை என்­பது மிக முக்­கி­ய­மான ஒன்­றா­கும். உதா­ர­ண­மாக, இந்­தச் சட்­ட­மன்­றத்­தில் நாம் நின்று பேசிக் கொண்­டி­ருக்­கி­றோம். முதன்­மு­த­லாக நான் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக வந்த காலத்­தி­லும் சரி, அவை முன்­ன­வ­ராக இருக்­கக்­கூ­டிய என்­னு­டைய நண்­பர் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக வந்­த­போ­தும் சரி, முத­ல­மைச்­ச­ராக இருந்து சிறப்­பா­கப் பணி­யாற்­றிய எங்­க­ளு­டைய அண்­ணன்  ஓ.பி.எஸ்.  சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக வந்­த­போ­தும் சரி, இந்த இடத்­தில் 5 அடிக்கு ஒரு பெரிய table போடப்­பட்­டி­ருக்­கும். இரண்டு பக்­கங்­க­ளி­லும்  சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் அமர்ந்­தி­ருப்­பார்­கள். பிரச்­சி­னை­கள் பெரி­தாக உரு­வா­கும்­போது, ஒரு­வ­ரை­யொ­ரு­வர் கையைப் பிடித்­துக் ­கொண்டு இழுத்­துக்­கொள்­கிற அள­வுக்கு நடை­பெற்ற வர­லா­று­கள் எல்­லாம் உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆனால், இன்­றைக்கு இப்­படி  அமைச்­சர் பெரு­மக்­கள் அமர்ந்­தி­ருக்­கின்ற கலை­ந­யத்­தோடு உரு­வாக்­கப்­பட்ட table,  முத­ல­மைச்­சர்  அமர்ந்­தி­ருக்­கின்ற கலை­ந­யத்­தோடு உரு­வாக்­கப்­பட்ட table,  எதிர்க்­கட்­சித் தலை­வர்  அமர்ந்­தி­ருக்­கின்ற கலை­ந­யத்­தோடு உரு­வாக்­கப்­பட்ட table, எதிர்க்­கட்­சி­யில் இருக்­கின்ற நம்­மு­டைய தோழ­மைக் கட்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் அமர்ந்­தி­ருக்­கின்ற கலை­ந­யத்­தோடு உரு­வாக்­கப்­பட்ட table, இந்த table, நாம் பேசு­கின்ற ஒலி­வாங்கி என்­கிற mike, செய­லா­ளர் அமர்ந்­தி­ருக்­கின்ற table இவை அனைத்­தை­யும் செய்­தது திரா­விட மாடல் ஆட்­சி­யில் தமிழ்­நாடு அர­சின் பொதுப் பணித் துறை அமைச்­ச­ராக நான் பொறுப்பு வகித்­த­போது பார்த்து, பார்த்து இரவு நேரத்­தில்­கூட இப்­படி செய்ய வேண்­டு­மென்று நான் சொல்லி செய்­த­வை­தான். (குறுக்­கீடு) நான் பேசி­ய­பி­றகு நீங்­கள் பேசுங்­கள். உங்­க­ளைப் பார்த்தோ அல்­லது உங்­கள் துறை சம்­பந்­த­மா­கவோ நான் பேசவே இல்­லையே! நீங்­கள் இறு­தி­யா­கப் பேசுங்­கள். என்­னு­டைய நேரத்தை நீங்­கள் எடுத்­துக் ­கொள்­ளா ­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த மாதி­ரி­யான பணி­களை நாம் மேற்­கொள்ள வேண்­டு­மென்­றால், அரசு அதி­கா­ரி­கள் நமக்கு ஒத்­து­ழைக்க வேண்­டும். அரசு ஒரு திட்­டத்­தைத் தீட்­டு­கி­றது என்று சொன்­னால், அந்­தத் திட்­டம் மக்­க­ளைச் சென்­ற­டைய வேண்­டு­மென்று சொன்­னால் அது அரசு அலு­வ­லர்­க­ளின் கையில்­தான் இருக்­கி­றது. அத­னால்­தான் நான் சொல்­கி­றேன். உங்­கள் அலு­வ­லர்­கள், எங்­கள் அலு­வ­லர்­கள் என்­றெல்­லாம் கிடை­யாது. நேற்று எங்­க­ளுக்கு  இன்று உங்­க­ளுக்­குச்  அரசு அதி­கா­ரி­கள் பொது­வா­ன­வர்­கள்­தான். ஜன­நா­ய­கத்­தில் மக்­கள் யாருக்கு வாக்­க­ளிக்­கி­றார்­களோ  மாறி மாறி ஆட்­சி­ய­மைத்­துக் கொண்டு வரு­கி­றார்­கள். ஆனால், அரசு அதி­கா­ரி­கள் பொது­வா­னர்­கள்­தான். அந்த அரசு அதி­கா­ரி­க­ளுக்கு நல்­ல­தைச் செய்ய வேண்­டு­மென்று முத­லில் எண்­ணி­யது யார் தெரி­யுமா? என் அண்­ணன் கலை­ஞர் தான் அரசு அலு­வ­லர்­க­ளுக்கு உதவி செய்ய வேண்­டு­மென்று நினைத்­த­வர். (மேசை­யைத் தட்­டும் ஒலி) இதைச் சொல்­வது எதற்­காக என்­றால், வருங்­கா­லத்­தில் இந்த ஆட்­சி­யில் இருப்­ப­வர்­க­ளும் செய்­வீர்­கள் என்ற நம்­பிக்­கை­யில்­தான் இதை நான் குறிப்­பி­டு­கி­றேன். அரசு ஊழி­யர்­க­ளின் ஊதி­யம் என்­பது திட்­டத்­தோடு இணைந்த ஒன்­று­தான். ஆசி­ரி­யர்­கள் இந்த நாட்­டி­னு­டைய கண்­கள்.  இல்­லை­யென்­றால் சொன்­னால், பண்­பட்ட சமூ­கம் உரு­வா­காது. அத­னால்­தான், கழக ஆட்சி அமைந்­த­போது என் தலை­வர் கலை­ஞர் , அரசு அலு­வ­லர்­க­ளுக்கு எண்­ணற்ற திட்­டங்­களை நிறை­வேற்­றி­னார். 1972 ஆம் ஆண்­டு––­ப­ழி­வாங்­கும் இர­க­சி­யக் குறிப்­பேடு என்று அரசு அலு­வ­லர்­க­ளுக்கு ஒரு காலத்­தில் இருந்­தது. அதை இரத்து செய்­த­வர் அண்­ணன் கலை­ஞர் . அரசு அலு­வ­லர்­கள் பணிக் காலத்­தில் இறந்­தால், வாரிசு அடிப்­ப­டை­யி­லான பணி உரிமை 15–1–1972 அன்று முதல்­தான் நடை­
மு­றைக்கு வந்­தது. அரசு அலு­வ­லர்­கள் இறந்­தால், 10,000 ரூபாய் இறந்­த­வர்­க­ளின் குடும்­பத்­தார்­க­ளுக்கு வழங்க வேண்­டு­மென்று முதன்­மு­த­லில் சொன்­ன­வர் தலை­வர் கலை­ஞர் . இப்­போது இலட்­சக்­க­ணக்­கில் வழங்­கப்­பட்டு வரு­கி­றது. பொங்­கல் போனஸ் வழங்­கி­ய­வர் கலை­ஞர். அதோடு மட்­டு­மல்­லா­மல், ஒன்­றிய அர­சாங்­கத்­திற்கு இணை­யாக மாநில அரசு ஊழி­யர்­க­ளுக்கு ஊதிய விகி­தங்­களை வகுத்­துக் கொடுத்­த­வர் அண்­ணன் கலை­ஞர். அரசு அலு­வ­லர்­கள் 30 ஆண்­டு­கள் பணி­பு­ரிந்­தால், அவர்­க­ளுக்கு முழு ஓய்­வூ­தி­யத் தொகை வழங்க வேண்­டு­மென்று சொன்­ன­வர் கலை­ஞர். 15 நாட்­கள் ஈட்­டிய விடுப்பை ஒப்­பு­விப்பு செய்­தால், அதற்­குப் பணப்­ப­லன்­கள் கொடுக்க வேண்­டு­மென்று சொன்­ன­வர் கலை­ஞர். 2008 ஆம் ஆண்டு அர­சுப் பணி­யா­ளர்­க­ளுக்கு புதிய மருத்­து­வக் காப்­பீட்­டுத் திட்­டத்தை கொண்­டு­வந்­த­வர் கலை­ஞர். அரசு ஊழி­யர்­கள் ஓய்­வு­பெ­றும்­போது வழங்­கப்­ப­டும் பணிக்­கொடை தொகையை ரூபாய் 20 இலட்­சத்­தி­லி­ருந்து ரூபாய் 25 இலட்­ச­மாக உயர்த்­தி­யது திரா­விட மாடல் ஆட்­சி­யில் எங்­க­ளு­டைய அண்­ணன்­தான். நான் ஒன்றே ஒன்று கேட்க விரும்­பு­வது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">ஒன்றிய அரசாங்கத்தின் அழுத்தம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">முக்­கி­ய­மா­னது இது.  எங்­க­ளைப்­பற்றி பேசும்­போது, மணி­ய­டித்­து­விட்­டீர்­களே என்று உங்­கள் அலு­வ­ல­கத்­தில் வேலை செய்­ப­வர்­கள் நாளைக்கு உங்­க­ளையே கேட்­டு­வி­டு­வார்­கள். அதற்­கா­கத்­தான் சொல்­கி­றேன்.  வேறு ஒன்­றும் இல்லை.  உங்­க­ளுக்கு நல்ல பெயர் வர­வேண்­டும் என்­ப­தற்­காக சொல்­கி­றேன்.  1–4–2003 ஆம் ஆண்­டில் ஏற்­கெ­னவே பழைய ஓய்­வூ­தி­யத் திட்­டம் என்றுஇருந்­தது.  அதை ரத்து செய்­து­விட்­டார்­கள். அப்­போ­தி­ருந்த ஒன்­றிய அர­சாங்­கம் கொடுத்த அழுத்­தத்­தின்­கா­ர­ண­மாக, அன்­றைக்கு இருந்த ஆட்­சி­யா­ளர்­கள் அதனை இரத்து செய்­து­விட்­டார்­கள்.  அதற்­குப்­பி­றகு பல போராட்­டங்­கள்.  2003–லிருந்து 2026 வரை, நீங்­கள் பத்­தி­ரி­கை­க­ளில், தொலைக்­காட்­சி­க­ளில் பார்த்­தி­ருப்­பீர்­கள்.  சென்­னை­யிலே பார்த்­தால் பல போராட்­டங்­கள் . . .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதா­வது, 2003–லிருந்து பெரிய போராட்­டம் நடந்­தது.  அப்­போது, அரசு அதி­கா­ரி­க­ளெல்­லாம்,  முத­ல­மைச்­சர் அவர்­க­ளைச் சந்­தித்து கேட்­டார்­கள். உடனே  முத­ல­மைச்­சர் என்ன செய்­தார் என்று கேட்­டீர்­க­ளென்­றால், மூத்த ஐ.ஏ.எஸ். அதி­கா­ரி­யான  ககன்­தீப் சிங் பேடி அவர்­க­ளின் தலை­மை­யில் ஒரு குழு அமைத்­தார்­கள். இந்­தப் பிரச்­சி­னையை எப்­ப­டி­யா­வது தீர்க்க வேண்­டு­மென இக்­கு­ழு­வினை அமைத்­தார்­கள். அவர் மூன்று மாத காலத்­திற்­குப் பிறகு,   இது­கு­றித்து அறிக்­கை­யினை அர­சுக்கு அளித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">முத­ல­மைச்­சர்  என்ன செய்­தார்­கள் என்­றால், அரசு அதி­கா­ரி­கள் குழு அமைத்து இந்த அறிக்­கை­யினை study செய்­யுங்­கள் என்­றார்.  அதற்­காக என்­னு­டைய தலை­மை­யில், நிதித் துறை அமைச்­ச­ராக இருந்த  சகோ­த­ரர்  தங்­கம் தென்­ன­ரசு மற்­றும் கல்­வித் துறை அமைச்­ச­ராக இருந்த  அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி ஆகி­யோர் அடங்­கிய மூவர் கொண்ட ஒரு குழு அமைக்­கப்­பட்­டது.  அந்த குழு­வில் அந்த அதி­கா­ரி­க­ளைப் பல­முறை நான் சந்­தித்து பேசி­னேன்.  அத­னு­டைய விளை­வாக, கடை­சி­யாக என்ன ஒப்­புக் கொண்­டார்­க­ளென்­றால், உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட ஓய்­வூ­தி­யத் திட்­டத்தை நாங்­கள் ஏற்­றுக்­கொள்­கி­றோம் என்ற ஒரு நிலை வந்­தது.  அப்­போது,  பேசி­யது என்­ன­வென்­றால், கடை­சி­யாக நாங்­கள் ஓய்­வு­பெ­று­கி­ற­போது என்ன சம்­ப­ளமோ, அதில் 50 சத­வி­கி­தத்தை ஓய்­வூ­தி­ய­மா­கத் தரவேண்­டும். ஓய்­வூ­திய காலத்­தில் எங்­கள் குடும்­பத்­திலே. . .
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அரசு அலு­வ­லர் சம்­பந்­தப்­பட்­ட­து­தான்.  தற்­போது நீங்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். (குறுக்­கீ­டு­கள்) ஒன்றே ஒன்று.   உறுப்­பி­னர்­கள், நீங்­கள் உட்­கா­ருங்­கள்.  அவர் நல்­ல­வர்.  நீங்­கள் என்ன support செய்­கி­றீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அந்த ஓய்­வூ­தி­யம் குறித்த 2000 ஆம் ஆண்டு அமைக்­கப்­பட்ட குழு­வைப் பற்­றிச் சொன்­னால்­தான் ..</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பதிலை  அமைச்­சர் சொல்­லா­மல் விட்­டு­விட்­டால், அப்­போது நீங்­கள் சொல்­வ­து­தான் (குறுக்­கீடு) இல்லை, குற்­றச்­சாட்டு அல்ல. இந்த வினா­வைக்­கூட எழுப்­பு­கின்ற நேரம் இது­வல்ல என்று நான் கரு­து­கி­றேன். இந்த மானி­யக் கோரிக்­கை­யின் மீதான கருத்­து­களை மட்­டும் நீங்­கள் சொல்­வது பொருத்­த­மாக இருக்­கும்.  அதைப்­பற்றி மட்­டும் பேசுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் அந்த point–க்கு செல்­ல­வில்லை. ஏனென்­றால், நேரம் எடுத்­துக்­கொள்­கி­றீர்­கள் என்று சொல்­வீர்­கள். அத­னால் அதற்கு செல்­ல­வில்லை. ஏற்­கெ­னவே, இந்த உறுதி அளிக்­கப்­பட்ட ஓய்­வூ­தி­யத் திட்­டத்தை ஏற்­றுக்­கொண்டு எங்­க­ளு­டைய  முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு YMCA ground–ல் பாராட்­டுக் கூட்­டமே நடத்­தி­னார்­கள். நான் எதற்­காக சொல்ல வரு­கி­றேன் என்­றால், அதை­யும் ஏற்­றுக்­கொண்­டார்­கள்; கடை­சி­யாக என்ன கேட்­டார்­கள் என்­றால், எங்­களை 10 சத­வி­கி­தம் பங்­க­ளிப்­புச் செய்­யச் சொல்­கி­றீர்­களே, அதை எடுத்­து­விட வேண்­டுமே என்று சொன்­னார்­கள். 2026–2027 தேர்­த­லுக்­குப் பின்­னால், முடிந்­தால்  முத­ல­மைச்­சர் அவர்­க­ளி­டம் சொல்லி consider செய்­கி­றோம் என்று நான் சொன்­னேன்; எடுத்­து­வி­டு­கி­றோம் என்றுசொல்­ல­வில்லை. அவ­ரு­டைய கவ­னத்­திற்கு கொண்டு செல்­கி­றோம் என்று சொன்­னேன். அதற்­குப்­பி­றகு அதி­கா­ரி­கள் மற்­றும் அரசு அலு­வ­லர்­கள் அனை­வ­ரும் நிம்­ம­தி­யாக சென்­ற­னர். இந்த நேரத்­தில்­தான் தேர்­தல் வந்­தது. இந்த தேர்­தல் அறிக்­கைப் புத்­த­கம் மிக­வும் அழ­காக இருக்­கி­றது. எனக்கு இந்­தப் புத்­த­கத்தை மிக­வும் பிடித்­தி­ருக்­கி­றது. ஏனென்­றால், எனக்கு பொது­வா­கவே திருக்­கு­றள் என்­றால் மிக­வும் பிடிக்­கும். நான் திருக்­கு­றளை வைத்து ஒரு புத்­த­கத்தை வெளி­யிட்­டேன்; அது உங்­கள் அனை­வ­ருக்­கும் தெரி­யும். இதி­லுள்ள தலைப்­பு­கள்­கூட அறம், இன்­பம், பொருள் என்ற அடிப்­ப­டை­யில் போடப்­பட்­டி­ருக்­கி­றது. இவை அரு­மை­யான தலைப்­பு­கள். ஏனென்­றால், இவை வள்­ளு­வ­ரு­டைய தலைப்­பு­கள். இதில், அறம் என்­கிற தலைப்­பில் 25–வது பக்­கத்­தில் என்ன சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது என்­றால், பழைய ஓய்­வூ­தி­யத் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தல் என்ற தலைப்­பில் ஒரு செய்­தியை நீங்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். தி.மு.க. அரசு கொண்­டு­வந்­துள்ள தமிழ்­நாடு உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட ஓய்­வூ­தி­யத் திட்­டம் ஒழிக்­கப்­பட்டு அரசு ஊழி­யர்­க­ளின் கோரிக்­கைக்­கேற்ப முழு­மை­யான பழைய ஓய்­வூ­தி­யத் திட்­டம் கனி­வு­டன் பரி­சீ­லிக்­கப்­ப­டும் என்று சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். அரசு அதி­கா­ரி­க­ளு­டன் நேற்­றை­ய­தி­னம் நீங்­கள் பேசப் போகி­றீர்­கள் என்­ற­வு­டன்,  கேட்­பது என்­ன­வென்­றால் பழைய தமிழ்­நாடு உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட ஓய்­வூ­தி­யத் திட்­டம் தொடர்ந்து செயல்­ப­டப் போகி­றதா அல்­லது பழைய ஓய்­வூ­தி­யத் திட்­டத்தை இந்த அர­சாங்­கம் அளிக்­கப்­போ­கி­றதா என்ற ஒரு தெளிவு இல்­லா­மல் இருக்­கி­றது. அத­னால், இதைப்­பற்றி நீங்­கள் பேசுங்­கள், அரசு பதில் சொல்­லும் என்ற சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். அத­னால், தன்­னு­டைய பதி­லு­ரை­யில் சம்­பந்­தப்­பட்ட  மனித வள மேம்­பாட்­டுத் துறை அமைச்­சர்  தமிழ்­நாடு உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட ஓய்­வூ­தி­யத் திட்­டம் (Tamil Nadu Assured Pension Scheme (TAPS)) தொட­ரு­கி­றதா அல்­லது பழைய ஓய்­வூ­தி­யத் திட்­டத்தை கொண்டு வரு­வீர்­களா என்­கிற தெளிவு அரசு அதி­கா­ரி­க­ளுக்கு வேண்­டும் என்­பதை இந்த நேரத்­தில் நான் உங்­க­ளுக்­குத் தெளி­வா­கத் தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன். (மணி­ய­டிக்­கப்­பெற்­றது) நான் உரையை நிறைவு செய்­து­வி­டு­கி­றேன். இரண்டு நிமி­டங்­கள் மட்­டும் கொடுங்­கள், நிறைவு செய்­து­வி­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நீங்­கள் எதை நீக்­கி­னா­லும், நியா­ய­மா­கத்­தான் செய்­வீர்­கள். நீக்­கி­வி­டுங்­கள்.  நாடு சுதந்­தி­ரம் அடைந்­த­தற்­குப் பிறகு இந்த தமிழ்­நாட்­டில் மிக மிக எளி­மை­யாக இருந்­த­வர்­க­ளெல்­லாம் முத­ல­மைச்­ச­ராக இருந்­தார்­கள். ஓமந்­தூர் ராம­சாமி ரெட்­டி­யார்  காலில் கால­ணிக்­கூட அணிய மாட்­டார். அப்­படி ஒரு முத­ல­மைச்­சர் அவர். மேலும், முத­ல­மைச்­ச­ராக இருந்த அறி­ஞர் அண்ணா, தலை­வர் கலை­ஞர் என அனை­வ­ரும் எளி­மை­யா­ன­வர்­கள்­தான். ஆகவே,  ஓமந்­தூர் ராம­சாமி ரெட்­டி­யார், மூத­றி­ஞர் இரா­ஜாஜி, பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர், பெரி­ய­வர் பக்­த­வத்­ச­லம், பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர், மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர்., அம்­மை­யார் ஜெய­ ல­லிதா,  ஓ. பன்­னீர்­செல்­வம், எனக்­குப் பக்­கத்­தில் இருக்­கிற முன்­னால் முத­ல­மைச்­சர் சகோ­த­ரர்  எடப்­பாடி பழ­னிச்­சாமி , எங்­கள் தலை­வர் திரா­விட மாடல் ஆட்­சி­யி­னு­டைய தலை­வர்  மு.க. ஸ்டாலின்  இத்­தனை முத­ல­மைச்­சர்­க­ளும், முத­ல­மைச்­சர்­க­ளாக இருந்து தமிழ்­நாட்­டில் பல்­வேறு திட்­டங்­களை நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றார்­கள். ஏழ்­மை­யைப் போக்­கி­யி­ருக்­கி­றார்­கள். இன்­னும் சொல்­லப்­போ­னால், தமிழ்­நாடு வளர்ச்­சி­யில் இன்­றைக்கு இந்­தி­யா­வில் இருக்­கின்ற மாநி­லங்­க­ளி­லேயே முதல் மாநி­ல­மா­கத் திகழ்­கி­றது என்று சொல்­வ­தற்­குக் கார­ண­மாக இருந்த அத்­தனை முத­ல­மைச்­சர்­க­ளும் அந்த அறை­யி­லி­ருந்­து­தான் ஆணை­க­ளைப் போட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இன்­றைக்கு காலை­யில் ‘Times of India’ என்ற பத்­தி­ரி­கை­யில் வந்த ஒரு செய்­தியை அர­சின் கவ­னத்­திற்­குக் கொண்டு வரு­கி­றேன். வேறொன்­று­மல்ல. ஆனால், இப்­போது அந்த இடத்தை மாற்­றி­விட்டு, ஏறத்­தாழ ஒரு கோடியே 30 இலட்­சம் செல­வில், எங்­க­ளு­டைய அண்­ணன் கலை­ஞர் தான் நாமக்­கல் கவி­ஞர் மாளிகை அந்த 10 மாடி கட்­ட­டத்­தைக் கட்­டிக் கொடுத்­த­வர் எங்­க­ளு­டைய அண்­ணன் கலை­ஞர் தான். இப்­போது அந்த இடத்­திற்கு முத­ல­மைச்­சர்  போகி­றார். என்­னு­டைய கேள்வி என்­ன­வென்­றால்,––அது அவ­ரு­டைய விருப்­பம். யார், எந்த அறை­யில் இருப்­பது என்­பது அவ­ரு­டைய விருப்­பம். யார், எந்த driver வைத்­துக்­கொள்­வது என்­பது அவ­ரு­டைய சொந்த விருப்­பம். அதில் நான் தலை­யிட முடி­யாது. ஆனால், இவ்­வ­ளவு திட்­டங்­க­ ளெல்­லாம் இந்த நாட்­டிற்­குக் கொடுத்த இந்த அறை இப்­படி இருக்­கி­ற­போது, எங்­க­ளு­டைய அண்­ணன் கலை­ஞர் கட்­டி­யி­ருக்­கிற அந்த அறைக்கு அவர் போகி­றார் என்­ப­தில் எனக்­குத் தனி­பட்ட ஒரு விதத்­தில் மகிழ்ச்­சி­தான். இது பிரிட்­டிஷ்­கா­ரன் கட்­டி­யது, அது தமி­ழன் கட்­டி­யது; அதில் ஒன்­றும் மாற்­றம் இல்லை. ஆனால், இன்­றை­ய­தி­னம் ‘Times of India’ பத்­தி­ரி­கை­யில் என்ன செய்தி வந்­தி­ருக்­கி­றது என்று சொன்­னால், ரூ. 5.54 கோடி ரூபாய் மதிப்­பி­லான இந்த tender, online–ல் விடப்­ப­ட­வில்லை. இந்த tender–ல் ஏதோ ஒரு கோளாறு இருக்­கி­றது என்று ‘Times of India’ பத்­தி­ரி­கை­யில் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். அதற்கு அமைச்­சர் , பதி­லு­ரை­யில் சொல்­லட்­டும், நான் வேண்­டா­மென்று சொல்­ல­வில்லை. ஏனென்­றால், இப்­போது என்­னு­டைய time–ஐ எடுத்­துக்­கொள்ள வேண்­டாம் என்­ப­தற்­கா­கத்­தான் நான் சொல்­கி­றேன். கடை­சி­யாக, உங்­க­ளு­டைய பதி­லில் சொல்­லுங்­கள். அமைச்­ச­ருக்கு அந்த வாய்ப்பு இருக்­கி­றது. மணி கணக்­கில்­கூட நீங்­கள் பேச­லாம். ஆனால், நான் கேட்க விரும்­பு­வது, ஏன் அந்த அறை­யி­லேயே இருந்து பணி­யைப் பார்க்க வேண்­டி­ய­து­தானே? ஏனென்­றால், அங்கு தலை­மைச் செய­லக சங்­கத்­தி­னு­டைய தலை­வர்­கள், அதன் பொறுப்­பா­ளர்­கள் பேசு­கி­றார்­கள்; இங்கே எங்­க­ளுக்கு உணவு அருந்­து­வ­தற்கு இடம் கிடை­யாது, எங்­க­ளுக்­குப் புழங்­கு­ வ­தற்கு இடம் கிடை­யாது, ஓய்­வுக்கு இடம் கிடை­யாது; இந்த இடத்தை முழு­மை­யாக எடுத்­துக்­கொண்­டோம் என்று சொன்­னால், நாங்­கள் எங்கே போவது என்ற அந்த ஒரு murmuring, அதா­வது அங்கே பேசப்­ப­டு­கி­றது. அந்த அதி­கா­ரி­க­ளும், அலு­வ­லர்­க­ளும் பேசு­கி­றார்­கள். அதை­யும்  முத­ல­மைச்­சர் அவர்­க­ளு­டைய கவ­னத்­திற்­கும், இந்த ஆட்­சி­யின் கவ­னத்­திற்­கும் நான் கொண்­டு­வர விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நீங்­கள் எப்­போ­தும் tender விஷ­யத்­தில் நாங்­கள் ரொம்ப purity என்று சொன்­னீர்­கள். ஆனால், இந்த tender சம்­பந்­த­மாக, ‘Times of India’ பத்­தி­ரி­கை­யில் இன்­றைக்கு பக்­கம் பக்­க­மாக, பணி­கள் எல்­லாம் நடந்த பின்பு இப்­போது online–ல் tender என்று போடப்­பட்­டி­ருக்­கி­றது என்­றெல்­லாம் பத்­தி­ரி­கை­யில் வந்த செய்­தியை மட்­டும் உங்­க­ளு­டைய கவ­னத்­திற்­குக் கொண்டு வரு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நிறை­வாக ஒரு குற­ளைச் சொல்லி முடிக்­க­லாம் என்று நான் கரு­து­கி­றேன். “சூழ்ச்சி முடிவு துணி­வெய்­தல் அத்­து­ணிவு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தாழ்ச்­சி­யுள் தங்­கு­தல் தீது” என்று வள்­ளு­வர் சொல்­கி­றார். இதை நான் சொல்­ல­வில்லை, ஐயன் வள்­ளு­வர் எழு­தி­யது. ஒரு செய­லில் ஈடு­பட்டு முடிவு எடுப்­ப­தற்கு முன்­பாக அச்­செ­ய­லால் விளை­யும் சாதக பாத­கங்­க­ளைப் பற்றி ஆராய்ந்து முடி­வெ­டுத்­தி­ருக்க வேண்­டும். அப்­படி முடி­வெ­டுத்த பிறகு காலம் தாழ்த்­து­வது. இப்­போது முடி­யாது, மூன்று மாதம் கழித்­து­தான் முடி­யும், ஆறு மாதம் கழித்­து­தான் முடி­யும், இரண்டு வரு­டங்­கள் கழித்­து­தான் முடி­யும் என்று காலம் தாழ்த்­து­வது எங்கு முடி­யு மென்­றால், தீதில் முடி­யு­மென்று வள்­ளு­வர் சொல்­கி­றார். நான் இதை­யெல்­லாம் சொல்­ல­வில்லை. இந்த ஆட்­சிக்கு அவர் advice செய்­கி­றார், ரொம்ப கால­தா­ம­தம் செய்­யா­தீர்­கள், அப்­ப­டிச் செய்­தால் அது தீதாக அமை­யு­மென்று வள்­ளு­வர் சொல்­கி­றார். எனவே, அந்த வள்­ளு­வர்­தான் இந்த ஆட்­சிக்­குப் பொருத்­தம் என்று சொல்லி, ‘அச்­சம் என்­பது மட­மை­யடா, அஞ்­சாமை திரா­வி­டர் உட­மை­யடா, ஆறி­லும் சாவு நூறி­லும் சாவு, தாய­கம் காப்­ப­து­தான் இந்த கழக உறுப்­பி­ன­ரு­டைய கடமை’ என்று சொல்லி (மேசை­யைத் தட்­டும் ஒலி) என் உரையை நான் நிறைவு செய்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்வாறு எ.வ.வேலு உரையாற்றினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>