<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="503,68,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 20 2026 03:40:07 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260820T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="20082026-CHN-07" position.sequence="07" ex-ref="20082026-CHN-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="32">தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாட­லும்–கலை­ஞர்எழுப்­பிய மாநி­லச் சுயாட்சி முழக்­க­மும்! </lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup857070_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="18">‘‘நா</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">்ன்சாகும் போதும் தமிழ் படித்­துச் சாக வேண்­டும்! என் சாம்­ப­லும் தமிழ் மணந்து வேக வேண்­டும்! என்று பாடி­னார் ஈழத்­துக் கவி பண்­டி­தர் சச்­சி­தா­னந்­தன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">‘வீழ்­வது நாமாக இருப்­பி­னும், வாழ்­வது தமி­ழாக இருக்­கட்­டும்!’ என்று கூறித் தமிழ் வளர்ச்­சிக்­கா­கத் தம்மை அர்ப்­ப­ணித்­துக் கொண்­டி­ருந்­த­வர் தண்­ட­மி­ழா­சான் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">ஆளு­நர் மாளி­கை­யில் நடை­பெற்ற ஜோசப் விஜய் உள்­ளிட்ட அமைச்­சர்­கள் பதவி ஏற்பு விழா­வில் ‘வந்தே மாத­ரம்’, ‘தேசி­யக் கீதம்’, ‘தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாடல்’ எனக் கடை­சி­யில் மூன்­றாம் இடத்­துக்­குத் தள்­ளப்­பட்டு மொழி வாழ்த்­துப் பாடல் அவ­ம­திக்­கப்­பட்ட அவல நிலைக்­குள்­ளா­னது. ஆளு­நர் உரை நிகழ்ச்­சி­யின்­போ­தும் முன்­னர் தொடர்ந்து வந்த நடை­மு­றையை மாற்றி அவ­ம­திக்­கும் வகை­யில்; இறு­தி­யில்­தான் தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாடல் இசைக்­கப்­பட்­டது. மனோன்­ம­ணி­யம் சுந்­த­ர­னார் பல்­க­லைக்­க­ழக நிகழ்ச்­சி­யி­லும் தமிழ்த்­தாய் தொடர்ந்து அவ­ம­திக்­கப்­பட்­டாள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">ஜோசப் விஜய் தலை­மை­யில் நடந்து வரும் த.வெ.க. ஆட்­சி­யில்­தான் மொழி வாழ்த்­துக்கு எதி­ராக இத்­து­ணைக் கொடு­மை­கள் அரங்­கே­றித் தொடர்­கின்­றன. இப்­போது தீர்­மா­னம் கொண்டு வந்து அர­சி­யல் கபட நாட­கம் ஆடி­யுள்­ளார்?. யாரை ஏமாற்ற இந்த அரிச்­சந்­திர நாடக வேடம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">தமிழ்த் தாய் வாழ்த்­துப் பாட­லுக்கு எதி­ராக  ஆளு­நர் மாளிகை நடந்து கொண்­ட­தற்கு வாய் திறந்து ஒரு கேள்­வி­யும் எழுப்­பாத ஜோசப் விஜய்; இப்­போது யாரை ஏமாற்­றத் தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாடத் தீர்­மா­னம் கொண்டு வந்­தார்? தமிழ்த் துரோ­கி­க­ளால் ஒட்டு மொத்த தமி­ழர்­கள் நெஞ்­சில் இரத்­தம் வழி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">மாறாக, கழக ஆட்­சி­யின் தமிழ்ப் பணி­க­ளை­யும், தலை­வர்­க­ளான பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர், தள­பதி மு.க. ஸ்டாலின் ஆகி­யோர் பங்­காற்­றிய தமிழ்த் தொண்­டு­க­ளை­யும் கொச்­சைப்­ப­டுத்­தும் விதத்­தில்; தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் உள்­ளே­யும், வெளி­யே­யும் தற்­கு­றிக் கூட்­டத்­தார் இலா­வ­ணிக் கச்­சேரி நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.2">“தேம­து­ரத் தமி­ழோசை தெரு­வெ­லாம் கேட்க வேண்­டும்” என்று வேட்கை கொண்டு பாடி­னான் விடு­த­லைக்­கவி பாரதி! ஆனால் இன்று, தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் த.வெ.க.கட்­சித் தலை­வ­ரான தமிழ்­நாடு  முதல்­வர் ஜோசப் விஜய் தொடங்கி அமைச்­சர்­கள், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் உட்­பட அவர்­கள்  பேசும் “கொத்­துப் புரோட்டா மொழி” கேட்­டுத் தமிழ்த்­தாயே வெட்கி, நாணித் தலை குனி­கி­றாள்! எந்­தச் சட்­ட­மன்­றத்­தில் பேர­றி­ஞர் அண்ணா வாலும், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரா­லும் பல சான்­றோர், ஆன்­றோர் பெரு­மக்­க­ளா­லும் கொஞ்சி விளை­யா­டிக் குதூ­க­லித்­துக் கோட்­டை­யைக் கட்­டி­யாண்ட குவ­ல­யத் தமிழ்; தென்­ன­வர், மன்­ன­வர் என மூவேந்­தர்­கள் முழங்­கிய முது­மொ­ழிப் பொதி­கை­ம­லைத் தமிழ்.....? இன்று தற்­கு­றி­க­ளால் தவ­ளை­வாய் சத்­தம் போல், சிதைத்­துச் சின்­னாப் பின்­ன­மாக்­கப்­ப­டு­கி­றது. இது அறிந்த குவ­ல­யத் தமிழ் மக்­கள் யாவ­ரும்; குலை நடுங்­கி­ய­வர்­க­ளாய்த் தாய் மொழி தமி­ழைக் காப்­பாற்ற இத­யம் ஏங்கி நிற்­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">‘சிறந்த தமிழ் படம் சிறந்த தமிழ்ப் பட இயக்­கு­நர், சிறந்த நடி­கர், சிறந்த எழுத்­தா­ளர், பாடல் ஆசி­ரி­யர்: என்று பன்­மு­கத் திற­மை­க­ளில் திரைப்­ப­டத் துறை­யில் சிறந்து விளங்­கு ­கின்ற அவர்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து தமி­ழக அர­சின் சார்­பில் பரி­சு­கள் வழங்­கும் விழா நிகழ்ச்­சி­யைப் பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள்­தாம் உரு­வாக்­கி­னார்­கள். அண்­ணா­வின் மறை­வுக்­குப் பின்  கலை­ஞர் முத­ல­மைச்­ச­ரா­னார். 1970 ஆம் ஆண்டு மார்ச் திங்­கள் திரைப்­ப­டக் கலை­ஞர்­க­ளுக்­கான விழா­வில், ஓர் அறி­விப்பை வெளி­யிட்­டார். ‘’இனித் தமி­ழக அரசு நிகழ்ச்­சி­க­ளில் தொடக்­கத்­தில் இறை­வ­ணக்­கம் என்­பது தமிழ்த்­தாய் வாழ்த்­தாக இருக்­கும்’ என்­றும், “நீரா­ரும் கட­லு­டுத்த” எனும் மனோன்­ம­ணி­யம் சுந்­த­ர­னார் இயற்­றிய அந்­தப் பாடலே அந்த வாழ்த்­தாக அமை­யும்’ என்­றும் கலை­ஞர் அவர்­கள்  அறி­வித்­தார். அந்த வாழ்த்­துப் பாட­லுக்கு ஏற்­ற­வாறு பாட்டை ஓர­ளவு குறைத்­தார். மனோன்­ம­ணி­யம் சுந்­த­ரம் பிள்ளை எழு­திய அந்­தப் பாட­லில் அமைந்­தி­ருந்த சமஸ்­கி­ருத மொழி  உலக வழக்கு ஒழிந்த மொழி என்­பதை; “ஆரி­யம் போல் உலக வழக்கு அழிந்து, ஒழிந்து சிதையா உன் சீரி­ள­மைத்  திறன் வியந்து” என்று குறித்­துத் தமிழ் மொழி­யைப் புகழ்ந்து இருந்­த­தைச் சற்று மாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">அரசு நிகழ்ச்­சி­யில் தமிழ்த்­தாய் வாழ்த்­தில் மற்­றொரு மொழியை குறைத்­தும் பழித்­தும் கூறு­தல் வேண்டா என்­பதை அழிந்து, ஒழிந்து என்று சொற்­களை ஒரு பகு­தி­யி­னர் அமங்­க­லச் சொற்­கள் எனக் கருதி முகம் சுழிப்­பர் என்­ப­தற்­கா­க­வும்; அந்த வரியை அகற்றி விட்டு இசை­ய­மைக்­கு­மாறு கேட்­டுக் கொண்­டார். அவ்­வாறே இசைக்கு ஏற்ப பாடல் ஒழுங்­குப்­ப­டுத்­தப் பட்­டது. மெல்­லிசை மன்­னர் எம்.எஸ். விஸ்­வ­நா­தன் இசை­ய­மைக்­கப் பின்­னணி இசைப் புகழ் மணி­கள் டி.எம். சௌந்­த­ர­ரா­ஜன், பி. சுசீலா ஆகி­யோர் பாடி அந்த வாழ்த்­துப்­பா­டல் இசைத்­தட்­டு­க­ளா­க­வும் வெளி­யி­டப்­பட்­டன. அது தமி­ழக அரசு விழாக்­க­ளில் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">அவ்­வாறு “தமிழ்த்­தாய் வாழ்த்து” என அறி­வித்­த­வு­டன் எதிர்ப்­பு­கள் சில­ரி­ட­மி­ருந்து கிளம்­பின. ‘ஆனந்த விக­டன்’ இத­ழில், “தமிழ்த்­தாய் ஒரு குட்­டித் தேவதை” என்­றும், ‘மொழி வாழ்த்­துப் பாட­லைக் கட­வுள் வாழ்த்­துப் பாட­லாக மாற்­றி­யது பொருத்­த­மற்­றது’ என்­றும், அந்த இத­ழில் பிர­பல எழுத்­தா­ளர் கி.வா.ஜெக­நா­தன் எழு­தி­யி­ருந்­தார். அதற்­குப் பதி­லாக அங்­கிங்­கெ­னா­த­படி” எனத் தொடங்­கும் தாயு­மா­ன­வர் பாடலை வைக்­க­லாம் என்று குறிப்­பிட்டு இருந்­தார். அது போன்ற செய்­தியை ஆங்­கில ‘மெயில்’ (Mail) போன்ற வேறு சில ஏடு­க­ளி­லும் மறுப்பு தெரி­வித்­துக் கருத்­துக்­கள் வெளி வந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">அப்­போது பன்­மொ­ழிப் புல­வர் கா. அப்­பாத்­து­ரை­யார் தமிழ்­நாடு அரசு எடுத்த முடிவை வர­வேற்­றும், எதிர்க் கருத்­தா­ளர்­க­ளுக்­குத் தக்­கப் பதி­லா­க­வும் அறிக்கை ஒன்­றைக் கொடுத்­தார். “தமி­ழி­னத்­தின் கட­வுள் வணக்­கப் பாடல்­கள் பேரா­சி­ரி­யர் சுந்­த­ர­னா­ரின் மனோன்­ம­ணி­யம் வணக்­கப் பாட­லைப் பாட வேண்­டும் என்று தமி­ழ­கப் புல­வர்  குழு தீர்­மா­ன­மா­கப் பல ஆண்­டு­க­ளுக்கு முன்பே கொண்டு வந்­தது. அந்­தப் பாடல் சமஸ்­கி­ரு­தத்தை விட தமி­ழுக்கு உயர்வு அளித்­துள்­ளது. ஆயி­னும், சமஸ்­கி­ரு­தப் பற்­றா­ளர்­கள் சிலர் எதிர்ப்பு தெரி­வித்­த­னர். இத­னால், புரட்­சிக் கவி­ஞர் பார­தி­தா­ச­னார் போன்­றோர் அந்­தப் புல­வர் குழு­வில் இருந்து வெளி­யேறி விட்­டார். தாயு­மா­ன­வர் பாட­லைப் பாட­லாம் என்­றும் அல்­லது திருக்­கு­றள் முதல் அதி­கா­ரத்­தில் உள்ள, ‘அகர முதல’ தொடங்­கிப் பத்­துக் குறட்­பாக்­க­ளை­யும்  பாட­லாம் என்­றும் அதன் பின் தீர்­மா­னம் கொண்டு வரப்­பட்­டது.  அது இந்து மதத்­தைப் பெரி­தும் சார்ந்­தது  தாயு­மா­ன­வர் பாடல்’ என்று  பிற மதப் புல­வர்­கள் சிலர் எதிர்ப்பு தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.2">திருக்­கு­றள் முதல் அதி­கா­ரத்­தில் “தாள்”, “அடி” என்று கூறு­வ­தால் உருவ வணக்­கத்­தின் சாயல் உடை­யது போல் அது­வும் இருக்­கி­றது என்று இஸ்­லா­மிய, கிறிஸ்­து­வப் புல­வர்­கள் சிலர் குறை­பட்­ட­னர். மனோன்­ம­ணி­யம் ஆசி­ரி­யர் சுந்­த­ரம் பிள்ளை இந்து மதத்­தைக் கரைத்­துக் குடித்­த­வர்; வேதாந்த ஆராய்ச்­சி­யில், கட­வுள் ஆராய்ச்­சி­யில் கரை கண்­ட­வர் என மிகச் சிலரே இருக்க முடி­யும். அத்­த­கை­ய­வர் இந்து மதத்­தையோ, வேறு எந்த மதத்­தையோ புண்­ப­டுத்­தா­மல், எல்லா மதத்­தி­ன­ரும் ஒப்­புக்­கொள்­ளும் விதத்­தில் தமிழ் மொழி உரு­வா­கவே பாடிய தேசி­யக் கட­வுள் பாடல் தான் “நீரா­ரும் கட­லு­டுத்த” எனும் தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாட­லா­கும். அந்த வாழ்த்­துப் பாட­லைத் தமி­ழக முதல்­வர் கலை­ஞர் தேர்ந்­தெ­டுத்­தார் என்­றால்; அது அவ­ரது கலைப் பண்­புக்­கும், தமி­ழன்­புக்­கும் சீரிய  சான்­றா­கும்” என்று பன்­மொ­ழிப் புல­வர் அப்­பா­துரை விளக்­கம் தந்­தார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">அவ­ரின் கருத்­தினை ஒட்­டியே சிலம்­புச் செல்­வர் ம.பொ.சி. அவர்­க­ளும் அறிக்கை ஒன்றை விடுத்து எதிர்ப்­பு­க­ளுக்­குத் தகுந்­த­வாறு பதில் அளித்­தார். ஆகவே, “நீரா­ரும் கட­லு­டுத்த” என்று தொடங்­கும் பாடல் அரசு விழாக்­க­ளி­லும் அமைச்­சர்­கள் கலந்து கொள்­ளும் நிகழ்ச்­சி­க­ளும் பாடப்­பட வேண்­டும் என்று கலை­ஞர் கொடுத்த அறி­விப்பு தமிழ்­மொழி பற்­று­டைய அனை­வ­ருக்­கும் கரும்­பாக இனித்­தது. ஏனோ, ‘ஆனந்த விக­ட’­னுக்கு மட்­டும் வேம்­பாக கசக்­கி­றது; அரசு விழாக்­க­ளில் தமி­ழைத் தெய்­வ­மாக வழி­ப­டு­வோம்!” எனக் கலை­ஞர் கூறி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">மொழியை தெய்­வ­மாக வழி­ப­டு­வது பிழை­யெ­னில், அந்­தப் பிழையை முத­லில் செய்த பெருமை வட­மொ­ழி­யா­ள­ருக்கே உரிமை!. மொழி  வாழ்த்­தையே கட­வுள் வாழ்த்­தா­கப் பாடு­வது பொருத்­த­மற்­றது என்­கி­றார் கி.வா.ஜ.! “ஓம்” என்ற எழுத்து வடி­வம்­தான் ஒலி வடி­வ­மாக- இறை­வ­டி­வ­மாக- பிர­ணவ மந்­தி­ர­மாக வழி­ப­டப் பாடப்­ப­டு­கி­றது என்­பதை மறந்­து­விட்­டார் போலும்” என்று கடு­மை­யாக கருத்­து­களை எடுத்து வைத்­தார் சிலம்­புச் செல்­வர் ம.பொ.சி. அவ­ரைத் தொடர்ந்து தமி­ழ­றி­ஞர் டாக்­டர் மு.வர­த­ரா­ச­னார் ‘‘நாடும், மொழி­யும் ஒருங்கே போற்­றப்­ப­டும் சிறப்­புக்­கு­ரிய அந்­தப் பாடல் தமி­ழக மக்­கள் ஏற்­கத் தக்­க­தான வாழ்த்­துப் பாடல்” என விளக்­க­மாக அறி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.2">இப்­ப­டி­யெல்­லாம் எதிர்ப்­பு­கள் பலத் தாங்­கித் தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாடல்  தமி­ழக அரசு நிகழ்ச்­சி­யில் பாடப்­ப­டும் போது, அந்­தப் பாடல் எத்­துணை எதிர்ப்­பு­க­ளைச் சமா­ளித்து வெளி­வந்­துள்­ளது என்று கடந்த காலச் சரித்­தி­ரம் பல­ருக்­குத் தெரி­யா­மல் கூட இருக்­க­லாம்;” என்று பல­முறை நினை­வூட்டி  கலை­ஞர் தாம் எழு­திய நூல்­க­ளி­லும் மட்­டு­மல்ல; அவர் பங்­கேற்ற பல்­வேறு  விழாக்­க­ளி­லும்; அரசு, தனி­யார் நிகழ்ச்­சி­க­ளி­லும் இது பற்­றிப் பேசி­யும் வந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.2">*தமிழ்­நாடு அர­சின் அதி­கா­ரப்­பூர்வ மொழி வாழ்த்­துப் பாட­லாக ஆக்கி அரசு நிகழ்ச்­சி­க­ளில் கட்­டா­ய­மா­கப் பாட முதல்­வ­ராக இருந்த கலை­ஞர் அவர்­கள் ஆணை பிறப்­பித்­தார். அரசு ஆணை எண்: 1393. தமிழ் வளர்ச்­சிப் பண்­பாட்­டுத்­துறை. (நாள் 17-.06.-1970)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">பா.ஜ. கட்­சி­யைச் சேர்ந்த ஹெச். இராஜா ஏற்­பாடு செய்­தி­ருந்த ஒரு நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­றி­ருந்த சங்­க­ராச்­சாரி விஜ­யேந்­தி­ரர், தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாட­லுக்கு எழுந்து நின்று மரி­யாதை தரா­மல், உட்­கார்ந்­த­ப­டியே கண்ணை மூடிக்­கொண்டு அவ­ம­தித்த கார­ணத்­தால்; அதற்­குத் தனி­யாக ஓர் அர­சாணை ஒன்­றைப் பிறப்­பித்­தார் திரா­விட மாடல் ஆட்­சி­யின் முதல்­வ­ராக இருந்த மு.க. ஸ்டாலின். அர­சாணை எண்: 272 .தமிழ்ப் பண்­பாட்­டுத்­துறை. (நாள்: 17-.12.-2021)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">தமிழ்­நாட்­டில் உள்ள அனைத்து அரசு அலு­வ­ல­கங்­கள், கல்வி நிறு­வ­னங்­கள், பல்­க­லைக்­க­ழ­கங்­கள் மற்­றும் பொது அமைப்­பு­க­ளின் நிகழ்ச்­சி­க­ளில் ‘தமிழ்த்­தாய் வாழ்த்து’ கட்­டா­யம் முத­லில் பாடப்­பட வேண்­டும் என கடந்த தி.மு.கழக ஆட்­சி­யில் 17.12.2021-ஆம் ஆண்டு அர­சாணை (நிலை எண். 1037) வெளி­யி­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">இப்­போது இந்­தத் தீர்­மா­னம் யாரை ஏமாற்ற?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">“சட்­ட­மன்­றத்­தில் கொண்டு வரப்­ப­டு­கிற தீர்­மா­னத்­தால் எந்­தப் பய­னும் இல்லை; அதற்­குச் சட்­ட­பூர்­வ­மான மசோதா கொண்டு வரப்­பட வேண்­டும்” என்று தி.மு.க.வின் சார்­பில் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும், முன்­னாள் அமைச்­ச­ரு­மான இர­கு­பதி கோரிக்கை வைத்­தார். திரா­வி­டர் கழ­கத் தலை­வர் 
கி. வீர­மணி அவர்­க­ளும், தீர்­மா­னத்­திற்­குப் பதி­லா­கச் சட்­டம் இயற்றி, அதை மீறு­ப­வர்­க­ளுக்­
குத் தண்­டனை வழங்­கும் விதி­யும் சேர்த்­தால்,  அது வலு­வாக அமை­யும்” என்று தான் விடுத்த அறிக்­கை­யின் மூலம் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.2">தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாட­லைக் கட்­டா­ய­மாக்க தனிச் சட்­டம் இயற்ற வேண்­டும். வெறும் தீர்­மா­னம் கட்­டுப்­ப­டுத்­தாது. சட்­ட­மன்­றத்­தில் ஏற்­ப­டுத்­தப்­ப­டும் தீர்­மா­னம் (Resolution) அல்­லது (G.O) அர­சாணை என்­பது ஒரு கொள்கை முடிவு. ஒன்­றிய அர­சுப் பத­வி­யி­லுள்ள அதி­கா­ரி­களை அது கட்­டுப்­ப­டுத்­தாது. மத்­திய அரசை ஒன்­றிய அரசு என்று உச்­ச­ரிக்­கவே தற்­போ­துள்ள ஜோசப் விஜய் அரசு அஞ்­சு­கி­றது.  தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாடல் ஏன் சட்­டப் பூர்­வ­மா­கக் கொண்டு வர வேண்­டு­மென்­றால்; மூன்­றாம் இடத்­திற்­குத் தள்­ளப்­ப­டும் அபா­யம் ஏற்­ப­டும். ஒன்­றிய அரசு உள்­துறை ஜூலை 9 ஆம் தேதி 2026 விழாக்­க­ளில் தொடக்­கத்­தில் வந்தே மாத­ரம் பாட­லைப் பாட அவ­தா­னிப்­பு­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">அண்­மை­யில் ஆளு­நர் பங்­கேற்ற பல்­க­லைக்­க­ழக விழாக்­க­ளில் தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாடல் பின்­னுக்­குத் தள்­ளப்­பட்­டது. அதைப் பற்றி  இந்­தத் தற்­குறி அர­சாங்­கம் எதிர்த்து எந்­தக் கேள்­வி­யும் கேட்­க­வில்லை. ஆகவே, நிலைத்த தன்­மை­யு­டை­ய­தாக (Statutory Status) சட்ட அங்­கீ­கா­ரம் பெற்­று­விட்­டால் யாரா­லும் அதை எளி­தில் மீற முடி­யாது. ஆசி­ரி­யர் கி.வீர­மணி சொல்­வது போல் சட்ட விதி­கள் மீறு­ப­வர்­க­ளுக்­குத் தண்­டனை வழங்க முடி­யும். யாரை­யும் கெஞ்ச வேண்­டிய அவ­சி­ய­மும்  இருக்­காது. ஏன் இந்­தப் பொம்மை அரசு அது­போன்ற சட்ட முன்­வ­டி­வைத் தாக்­கல் செய்ய முன்­வ­ர­வில்லை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">கலை­ஞர் போட்ட ஆணை­யின் அடிப்­ப­டை­யில், அதி­கா­ரப்­பூர்வ மங்­க­லப் பாட­லாக (State Song)  சட்­ட­பூர்­வ­மாக உன்­னத அங்­கீ­கா­ரத்தை - வரை­மு­றையை மு.க. ஸ்டாலின் அர­சாணை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">அத்­து­டன் மாநி­லச் சுயாட்­சிக் கொள்­கையை வலி­யு­றுத்தி நீதி­பதி ராஜ­மன்­னார் குழு பரிந்­து­ரை­களை பெற்று சட்­ட­மன்­றத்­தில் தீர்­மா­னம் போட்­ட­வர்­தான் கலை­ஞர். அதனை பிர­த­மர் இந்­தி­ரா­காந்­திக்கு அனுப்பி வைத்து வலி­யு­றுத்தி வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">1970ஆம் ஆண்டு தமி­ழ­கத்­திற்­கென்று தனிக் கொடி வேண்­டும் என்று பிர­த­மர் இந்­தி­ரா­வி­டம் முதல்­வ­ராக இருந்த கலை­ஞர்  அதி­கா­ரப்­பூர்­வ­மா­கக் கோரிக்கை வைத்­தார். மாநி­லப் பாட­லா­கத் தமிழ்த்­தாய் வாழ்த்­துப்­பா­டல் மட்­டுமே இருந்­த­தால்; தனிக்­கொடி கேட்­டுக் கொடி­யின் வடி­வம் என அவர் தந்த வரை­ப­டத்­தில் இடப்­புற மூலை­யில் மூவண்ண நிறத்­தி­லான  இந்­தி­யத் தேசி­யக் கொடி­யும், மீத­முள்ள பகு­தி­யில் தமி­ழக அர­சின் முத்­தி­ரை­யான சிறீ­வில்­லி­புத்­தூர் கோபு­ரச் சின்­ன­மும் இடம்­பெற்று இருந்­தது. உலக மாகா­ணங்­க­ளில் மாநி­லங்­க­ளுக்­கென்று தனிக்­கொடி இருப்­பது போல, இந்­தி­யா­வி­லும் மாநி­லங்­க­ளுக்கு உரிமை வேண்­டும் என்று மாநில சுயாட்­சிக் கொள்­கையை நிலை­நாட்­டி­னார். “இப்­படி நாங்­கள் கேட்­பது பிரி­வி­னை­யா­காது; ஒரு­மைப்­பாட்­டுக்­குள் மாநி­லச் சுயாட்­சியை நிலை­நாட்­டு­வது இதன் நோக்­க­மா­கும்” எனச் சட்­ட­மன்­றத்­தில் விளக்­கம் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">இந்­திரா காந்தி மற்ற மாநில  முதல்­வர்­க­ளு­டன் கலந்­தா­லோ­சனை செய்து முடிவு எடுப்­ப­தா­கக் கூறி­னார். ஆனால், அப்­படி ஒரு முடி­வுக்கு ஒரு­மித்த கருத்து ஏதும் ஏற்­ப­டா­மல் போயிற்று. இந்­நி­லை­யில் குடி­ய­ர­சுத் தினம், சுதந்­திர தினம் ஆகிய இரு நாட்­க­ளில் ஆளு­நர் கொடி­யேற்­று­வதை மாற்றி மாநில முதல்­வ ர்­க­ளுக்கு வாய்ப்­புத் தரும் விதத்­தில்; சுதந்­திர தினத்­தன்று டெல்­லி­யைப் போலவே, கொடி­யேற்­றும் உரிமை  கேட்டு 1974 பிப்­ர­வரி மாதத்­தில் பிர­த­மர் இந்­தி­ரா­வுக்கு முதல்­வர் கலை­ஞர் கடி­தம் எழு­தி­னார். அவர் வலி­யு­றுத்­திய கோரிக்கை ஏற்­கப்­பட்டு 1974 ஆகஸ்ட் 15 சுதந்­திர தினத்­தன்று இந்­திய மாநில முதல்­வர்­கள் கொடி ஏற்­ற­லாம் என்­கின்ற மாநில உரி­மை­யைப் பெற்­றுத் தந்த பொன்­னே­டு­க­ளில் பொறிக்­கப்­பட்ட இந்­திய வர­லாற்­றுக்கு உரி­ய­வர் கலை­ஞர் ஆவார். அந்­நாள் முதல் ஆண்­டு­தோ­றும் ஆகஸ்ட் 15 அன்று மாநில முதல்­வர்­கள் கொடி­யேற்­று­வது என்­கிற நிகழ்ச்சி இந்­திய மாநி­லங்­க­ளில் தொடர்ந்து நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.2">தமி­ழன் தனது அரிய கரு­வூ­லங்­கள், அடை­யா­ளங்­கள் பல­வற்றை இழந்­தும் ஓர் இன­மாக அவ்­வு­ல­கில் வாழ்­வ­த­னின்­றும், இழிந்து போகும் அவல நிலையை நம் தலை­வர் கலை­ஞர் மீட்­டுக் கொண்­டு­தான் இருந்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>