<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,67,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 20 2026 03:40:31 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260820T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="20082026-CHN-08" position.sequence="08" ex-ref="20082026-CHN-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">எண்பதாவது சுதந்திர தினம்:</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="72">பா.ஜ.க.-தான் நாட்டின் பிரச்சினை – ஆனால் காங்கிரஸ் அதற்கான தீர்வா?</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame856845_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup857016_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup856950_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="M5col_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="14">எ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ண்­ப­தா­வது சுதந்­திர தினம் ஒரு விதத்­தில் குறிப்­பி­டத் தகுந்­தது என்று பிர­த­மர் செங்­கோட்­டை­யில் கொடி­யேற்றி வைத்து பேசும்­போது கூறி­னார். அது என்­ன­வென்­றால் முதல் முறை­யாக வந்தே மாத­ரம் அதன் முழு­மை­யான வடி­வத்­தில் ஆறு பத்­தி­க­ளும் இசைக்­கப்­பட்­ட­து­தான். இந்த பாடல் எழு­தப்­பட்டு 150 ஆண்­டு­கள் நிறை­வ­டைந்­துள்­ளன எனப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">வந்தே மாத­ரம் பாட­லுக்கு தேசிய கீதத்­திற்கு இணை­யான மதிப்பை வழங்கி ஜூலை மாத 
இறு­தி­யில் தேசிய மரி­யா­தையை அவ­ம­திப்­ப­தைத் தடுத்­தல் (திருத்­தம்) சட்­டம், 2026 என்ற ஒன்று நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட து. இந்த பாடலை ஒன்­றிய அரசு விழாக்­க­ளில் முத­லில் பாட வேண்­டும் என்று சுற்­ற­றிக்­கை­யும் அனுப்­பப்­பட்­டுள்­ளது. இந்த சட்­டத்­தி­ருத்­தத்­திற்­கும், சுதந்­திர தின விழா­வில் இந்த பாடல் இசைக்­கப்­பட்­ட­திற்­கும் பின்­னால் ஒரு நெடிய வர­லாறு உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்தப் பாடல் வங்க எழுத்­தா­ளர் பங்­கிம் சந்­திர சாட்­டர்­ஜி­யால் அவ­ரது நாவ­லான ஆனந்த மடத்­தில் எழு­தப்­பட்­டது. வங்க மொழி­யும் சமஸ்­கி­ரு­த­மும் கலந்த பாடல். அந்த நாவல் 1882–ஆம் ஆண்டு வெளி­யா­னது. கவ­னிக்­கப்­பட வேண்­டிய அம்­சம் என்­ன­வென்­றால் அதில் வணங்­கப்­ப­டும் மாதா வங்­காள மாதா. ஏனெ­னில் அவர் எழு­திய காலத்­தில் இந்­திய மாதா அல்­லது பாரத மாதா என்ற கருத்­து­ரு­வாக்­கம் தோன்­றி
­யி­ருக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">வங்­காள மாதா­தான் குறிப்­பி­டப் படு­கி­றார் என்­ப­தற்­கான சான்று பாடல் வரி­க­ளி­லேயே உள்­ளது. அது என்­ன­வென்­றால் ஏழு கோடி குரல்­கள் பாடு­கின்­றன, பதி­னான்கு கோடி கரங்­கள் வாளேந்­து­கின்­றன ஆகிய வரி­கள்­தான். இந்த எண்­ணிக்கை ஏழு கோடி வங்­கா­ளி­க­ளைத்­தான் குறிக்­கின்­றது. அந்த நாவல் வெளி­வந்த ஆண்­டில் இந்­தி­யா­வின் மக்­கள் தொகை இரு­பத்­தைந்து கோடி (1881 சென்­சஸ் படி.) வங்­கா­ளி­கள் ஏழு கோடி பேரென்­பது பர­வ­லான நம்­பிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">பின்­னா­ளில் சுதேசி இயக்­கத்­தில் வந்தே மாத­ரம் என்ற முழக்­க­மும்,இந்த பாட­லும் பிர­ப­ல­ம­டைந்­தது. இந்­தியா முழு­வ­தும் இந்த முழக்­கம் பர­வி­யது. உதா­ர­ண­மாக பார­தி­யா­ரும் வந்தே மாத­ரம் எனத்­தொ­டங்­கும் ஒரு பாடலை தமி­ழில் எழு­தி­னார்.  அகில இந்­திய காங்­கி­ரஸ் மாநா­டு­க­ளில் பங்­கிம் சந்­தி­ரர் பாட­லைப் பாடு­வது வழக்­க­மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதில்­தான் ஒரு பிரச்­சினை தோன்­றி­யது. இந்த பாட­லில் இந்து பெண் தெய்­வங்­க­ளுக்­கும் அவர்­களை தேசத்­தின் உரு­வ­க­மான மாதா­வு­டன் இணைத்து வணக்­கம் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. காங்­கி­ர­ஸி­லி­ருந்த முஸ்­லீம் உறுப்­பி­னர்­கள் தங்­கள் மதம் உருவ வழி­பாட்டை ஏற்­ப­தில்லை; அத­னால் நாங்­கள் இந்தப் பாட­லைப்பாடு­வ­தில் இணைய முடி­யாது என்று கூறி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">இந்த பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண 1937–ஆம் ஆண்டு நேரு, சுபாஷ் சந்­திர போஸ், அபுல் கலாம் ஆசாத், நரேந்­திர தேவ் ஆகி­யோ­ரைக் கொண்ட கமிட்டி அமைக்­கப்­பட்­டது. அவர்­கள் ரவீந்­தி­ர­நாத் தாகூ­ரை­யும் ஆலோ­சனை கேட்­டார்­கள். அவர் பாட­லின் முதல் இரண்டு பத்­தி­க­ளில் இயற்­கை­தான் வழி­ப­டப்­ப­டு­கி­றது. அவற்றை மட்­டும் பாட­லாம் என்று பரிந்­து­ரைத்­தார். அதி­லி­ருந்து முத­லி­ரண்டு பத்­தி­கள் மட்­டும் பாடப்­பட்­டன. ஆனால் இந்த தீர்வு இந்து மத அமைப்­பு­க­ளுக்கு பிடிக்­க­ வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">இந்­தியா சுதந்­தி­ரம் பெற்­ற­போது தேசிய கீத­மாக இந்த பாடலை அறி­விக்க வேண்­டு­மென்று ஒரு சாரார் கூறி­னர். நேரு உள்­ளிட்ட தலை­வர்­கள் தாகூ­ரின் ஜன கன மன பாடலை தேர்வு செய்­த­னர். இறு­தி­யில் வந்தே மாத­ரம் பாட­லின் முத­லி­ரண்டு பத்­தி­களை கூடு­த­லாக தேசி­யப் பாட­லாக அறி­விக்க முடிவு செய்­யப்­பட்­டது. ஆனால் பாஜ­க–­வின் முன்­னோடி அமைப்­பு­கள், இந்­துத்­துவ சிந்­தனை கொண்­டவை, வந்தே மாத­ரம் முழுப்­பா­ட­லும் ஏன் இந்து ராஷ்­டி­ரத்­தின் தேசிய கீத­மாக இருக்­கக் கூடாது என்று கேள்வி எழுப்பி வந்­த­னர். நான் கல்­லூ­ரி­யில் படிக்­கும் போதும் என் ஆர்.எஸ்.எஸ்.நண்­பர்­கள் உணர்ச்­சி­க­ர­மாக இந்தப் பிரச்­சி­னை­யைப் பேசு­வார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிரச்­சினை இந்­தி­யா­வின் மதச்­சார்­பின்மை குறித்­தது. பல்­வேறு மதத்­தினை சேர்ந்­த­வர்­க­ளும், மத நம்­பிக்கை, இறை நம்­பிக்­கை­யற்­ற­வர்­க­ளும் சில இந்து பெண் தெய்­வங்­களை வணங்­கும் வரி­க­ளைப் பாட நிர்ப்­பந்­திப்­பது மதச்­சார்­பின்­மைக்கு உகந்­தது அல்ல என்­ப­து­தான் பிரச்­சினை. பா.ஜ.க. அது சந்­திக்­கும் பல்­வேறு நெருக்­க­டி­க­ளி­லி­ருந்து தப்­பிக்க இப்­போது இந்த பாடலை மீண்­டும் மத­வாத அர­சி­யலை வலுப்­ப­டுத்­தும் நோக்­கில் கட்­டா­ய­மாக்­கு­கி­றது. பல்­வேறு மாநி­லங்­க­ளி­லும் இது தொடர்­பான சர்ச்­சை­கள் உரு­வா­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">காங்­கி­ரஸ் கட்­சி­யின் நிலை­ப்பாடு என்ன?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காங்­கி­ரஸ் கட்சி அலு­வ­ல­கத்­தில் சுதந்­திர தினத்­திற்­குக் கொடி­யேற்­றும் போது வந்தே மாத­ரம் பாட­லின் ஆறு பத்­தி­க­ளும் திடீ­ரென பாடப்­பட்­டன. இதனை எதிர்­பார்க்­காத சோனியா காந்தி மூன்­றா­வது பத்தி தொடங்­கி­ய­துமே அதனை நிறுத்த விரும்­பு­வது போல செய்கை செய்­வதை காணொ­லி­யில் பார்க்க முடி­கி­றது. பக்­கத்­தில் நின்ற கார்­கே­வி­டம் கூறு­கி­றார். அவ­ரும் ஏதோ சொல்­கி­றார். ஒரு சல­ச­லப்பு தெரி­கி­றது. ஆனால் பாடல் முழு­வ­து­மாக பாடி முடிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நிகழ்ச்சி இப்­போது சர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்­ளது. சில காங்­கி­ரஸ்­கா­ரர்­கள் செக்­யூ­ல­ரி­சம் காத்த அன்னை சோனியா என்று பாராட்­டிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். ஆனால் காங்­கி­ரஸ் செய்­தித் தொடர்­பா­ளர் ஜெய்­ராம் ரமேஷ் அவர் மல்­லி­கார்­ஜுன கார்­கே­விற்கு நாற்­காலி தரச்­சொல்­லித்­தான் கேட்­டார். வந்தே மாத­ரம் குறித்து எது­வும் சொல்­ல­வில்லை என்­கி­றார். பா.ஜ.க.விற்கு ஒரே கொண்­டாட்­டம். காங்­கி­ரஸ் தேசி­யப் பாடலை அவ­ம­தித்­து­விட்­டது என்று கூக்­கு­ரல் எழுப்­பு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">பிரச்­சினை என்­ன­வென்­றால் நாடா­ளு­மன்­றத்­தில் இந்த சட்­டத் திருத்­தம் வந்­த­போது தி.மு.க. கடு­மை­யாக எதிர்த்­தது. கனி­மொ­ழி­யும், ராஜா­வும் காட்­ட­மாக விமர்­ச­னங்­க­ளை­யும், மறுப்­பை­யும் முன்­வைத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">காங்­கி­ரஸ் கட்சி இந்த பிரச்­சி­னை­யில் தீவி­ர­மான குரல் எழுப்­ப­வில்லை. இந்­தி­யா­வின் அதி­கா­ர­பூர்வ பெய­ரில் “மதச்­சார்­பற்ற” என்ற வரி­யைச் சேர்த்­த­வர் இந்­திரா. வந்தே மாத­ரம் முதல் இரண்டு பத்­தி­களை மட்­டும் பாட வேண்­டும் என்ற மரபை உரு­வாக்­கி­ய­வர் நேரு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த வர­லாற்­றுப் பின்­ன­ணி­யில் காங்­கி­ரஸ் அலு­வ­ல­கத்­தில் யார் ஆறு பத்­தி­யை­யும் பாடச் சொன்­னார்­கள் என்­பது தெளி­வாக இல்லை. கட்­சி­யின் கொள்கை தெளி­வாக இருந்­தி­ருந்­தால் இப்­படி நடந்­தி­ருக்க வாய்ப்­பில்லை. இப்­போது இந்த பிரச்­சினை பெரி­தா­னால் காங்­கி­ரஸ் என்ன கொள்கை முடிவை அறி­விக்­கும் என்று தெரி­ய­வில்லை. அடுத்த ஆண்டு உத்­தி­ரப் பிர­தேச தேர்­தல் வரும் நேரத்­தில் அத­னால் துணிந்து மதச்­சார்­பின்­மையை வலி­யு­றுத்­தும் முடிவை எடுக்க முடி­யுமா என்று தெரி­ய­வில்லை. காங்­கி­ர­ஸின் பிரச்­சி­னை­க­ளுக்கு இது ஒரு குறி­யீ­டா­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">காங்­கி­ர­ஸ் அர­சி­யல் கருத்­தி­ய­லுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கி­றதா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு சிலர் தி.மு.க–வும், ஆத­ர­வா­ளர்­க­ளும் தமிழ்­நாட்டு தேர்­தல் முடி­வு­கள் வரும்­வரை காங்­கி­ரஸ்­தான் பா.ஜ.க. எதிர்ப்­பில் முக்­கி­ய­மான சக்தி என்று கூறி­வந்­தார்­கள்; தேர்­தல் முடிந்து காங்­கி­ரஸ் த.வெ.க. கூட்­ட­ணிக்கு சென்­ற­வு­டன் காங்­கி­ரஸ் – பா.ஜ.க. எதிர்ப்­பில் உறு­தி­யாக இல்லை என்று கூறு­வ­தா­கக் குற்­றம் சாட்­டு­கி­றார்­கள். அது உண்­மை­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த மாற்­றம் மிக­வும் இயல்­பா­ன­தும், நியா­ய­ 
மா­ன­து­மா­கும். எந்தக் கார­ணங்­க­ளுக்­காக காங்­கி­ரஸ் தி.மு.க. முது­கில் குத்­தி­விட்டு த.வெ.க.வுடன் போனது என்­ப­து­தான் முக்­கி­ய­மான கேள்வி. இது ஏதோ சாதா­ர­ண­மான நிகழ்­வல்ல. அகில இந்­திய அள­வில் காங்­கி­ரஸ் கட்­சி­யின் நோக்­கங்­கள், இலட்­சி­யங்­கள் குறித்து கடும் ஐயத்தை எழுப்­பி­யுள்ள கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">ஏனெ­னில் காங்­கி­ரஸ் பா.ஜ.க.–வை கருத்­தி­யல் ரீதி­யாக எதிர்ப்­பதே முக்­கி­யம் என்று கரு­தி­யி­ருந்­தால், பத்­தாண்­டு­க­ளாக அந்த எதிர்ப்பை தீவி­ர­மாக முன்­னெ­டுத்­து­வ­ரும் தி.மு.க–வை அவ்­வ­ளவு சுல­ப­மாக உத­றி­விட்டு, பா.ஜ.க.வை கண்­டித்­துப் பேசவே அஞ்­சும் த.வெ.க. கூட்­ட­ணிக்கு சென்­றி­ருக்க முடி­யாது. வெறும் திரைக்­க­தா­நா­யக பிம்­பத்தை அர­சி­யல் முத­லீ­டாக வைத்து இன்ஸ்­டா­கி­ராம் பிரச்­சா­ரம் மூலம் வென்ற ஒரு கட்­சிக்­கும், ஆர்.எஸ்.எஸ். பிறந்த 1925–ஆம் ஆண்­டி­லேயே பிறந்த அதன் கருத்­தி­யல் எதிர்­மு­னை­யான சுய­ம­ரி­யாதை இயக்­கத்­தின் வாரி­சான தி.மு.க–விற்­கும் உள்ள வேறு­பாடு குறித்து காங்­கி­ர­ஸிற்கு தெரி­யா­ம­லி­ருக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அர­சி­ய­லுக்கு மூன்று பரி­மா­ணங்­கள் உண்டு. ஒன்று நடை­முறை அர­சி­யல். அது அர­சாட்சி, அதன் நிறை குறை­கள், நிர்­வா­கத் திறன், எடுக்­கப்­ப­டும் முடி­வு­கள் சார்ந்­தது. மற்­றொன்று முர­ண­ர­சி­யல். அது தேர்­தல் களத்­தில் கூட்­டணி, எதி­ரி–­நண்­பன் அணி சேர்க்­கை­கள் சார்ந்­தது. அதன் நோக்­கம் ஆட்­சிக்கு வரு­வது, அதி­கா­ரத்­தில் பங்­கு­பெ­று­வது ஆகி­ய­வை­தான். இது இரண்­டை­யும் கடந்து மற்­றொரு பரி­மா­ணம் இருக்­கி­றது. அது­தான் கருத்­தி­யல் சார்ந்த அர­சி­யல். அது­தான் நீண்ட கால நோக்­கில் ஒரு கட்­சியை உயிர்ப்­பு­டன் வைத்­தி­ருக்க வல்­லது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பா.ஜ.க.–வின் கருத்­தி­யல் எதிர்­முனை 
தி.மு.க. தான் என்­பது வர­லாற்று உண்மை. முர­ண­ர­சி­யல் குழப்­பத்­தில் அது காங்­கி­ரஸ் கட்­சி­யின் துரோ­கத்­தால் பா.ஜ.க.–வுடன் கூட்­டணி அமைக்க ஒரு­முறை நிர்­பந்­திக்­கப் பட்­டா­லும், கருத்­தி­ய­லில் என்­றும் சம­ர­சம் செய்­து­கொள்­ள­வில்லை என்­பது வெளிப்­ப­டை­யா­னது. இந்­தி­யா­வி­லேயே தி.மு.க. போல சம­ர­ச­மற்ற கருத்­தி­யல் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­திய கட்சி வேறெ­து­வும் கிடை­யாது என்­பதை EWS பொரு­ளா­தார நலி­வுற்­றோர் இட ஒதுக்­கீடு போன்ற தரு­ணங்­களை நினை­வில் கொண்­டால் புரிந்து கொள்­ள­லாம். அப்­படி என்ன கருத்­தி­யல் எதிர்­முனை என்­பதை ஒரு பட்­டி­யல் மூலம் 
மன­தில்கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த கருத்­தி­யல் அடிப்­ப­டை­களை தி.மு.க. ஒரு­போ­தும் கைவி­டாது. முர­ண­ர­சி­யல் தேர்­தல் களத்­தில் சில பல சம­ர­சங்­கள் நிகழ்ந்­தா­லும், இந்த கருத்­தி­யல் அச்­சினை கைவிட்­டால் தி.மு.க. தன் உயி­ராற்­ற­லையே இழந்­து­வி­டும் என்­பது அனை­வ­ரும் அறிந்­ததே. ஆனா­லும் இன்­றைக்கு அவ­ச­ரப்­பட்டு த.வெ.க.–விடம் சென்­று­விட்ட காங்­கி­ரஸ், தி.மு.க. பா.ஜ.­க.–­வு­டன் நெருங்­கு­கி­றது என்று பேசி தான் செய்து கொண்ட கருத்­தி­யல் சம­ர­சத்தை நியா­யப்­ப­டுத்­திக் கொள்ள முயல்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">காங்­கி­ரஸ் எதிர்­கொள்­ளும் பிரச்­சினை என்ன?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காங்­கி­ர­ஸின் பிரச்­சினை இரண்டு வகை­யா­னது. ஒன்று பா.ஜ.­க.–­வு­டன் கருத்­தி­யல் ரீதி­யாக தி.மு.க. போல தீவி­ர­மாக முரண்­பட்­டால் வட மாநி­லங்­க­ளில் வெற்றி பெற முடி­யுமா என்ற சிக்­கல். உதா­ர­ண­மாக மத்­திய பிர­தேச தேர்­த­லில் வெல்­வ­தற்­காக காங்­கி­ரஸ் தலை­வர் கமல்­நாத் “நாங்­கள்­தான் பாபர் மசூ­தியை திறந்து விட்­டோம்; அத­னால்­தான் ராமர் கோயில் சாத்­தி­ய­மா­னது” என்று பெருமை பேசும் அள­விற்­குப் போகி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதன் தொடர்ச்­சி­யாக பொரு­ளா­தா­ரம், சமூக நீதி கொள்­கை­க­ளில் காங்­கி­ர­ஸில் எப்­போ­துமே வல­து­சா­ரித் தன்மை கொண்­ட­வர்­க­ளும் முக்­கிய பங்­கேற்­பது. பிர­வீன் சக்­ர­வர்த்தி போன்­ற­வர்­கள் நகர்­புற மேல்­தட்டு வாக்­கா­ளர்­களை காங்­கி­ரஸ் கவர வேண்­டும் என்றூ கூறு­ப­வர்­கள். சசி தரூர் பா.ஜ.­க.–­வின் அப்­பட்­ட­மான சந்­தர்ப்­ப­வாத வெளி­நாட்டு கொள்­கையை வியந்து பாராட்­டு­வார். வெகு­கா­ல­மா­கவே இத்­த­கைய கலப்­ப­டக் கொள்­கைக் கலவை பெரிய கூடார அணு­கு­முறை (Big Tent approach) என்று வர்­ணிக்­கப்­ப­டு­கி­றது. ஒரு சிலர் அரை சங்கி, மென்­சங்கி என்று சொல்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரண்­டா­வது முக்­கிய பிரச்­சினை, மாநில முர­ண­ர­சி­ய­லுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்க வேண்­டுமா, ஒன்­றிய முர­ண­ர­சி­ய­லுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்க வேண்­டுமா என்ற கேள்வி. வேறு வார்த்­தை­க­ளில் சொன்­னால் பா.ஜ.­க.–­வை­யும், மாநில கட்­சி­க­ளை­யும் ஒரு நேரத்­தில் எதிர்க்க முடி­யாது. அப்­ப­டிச் செய்­வ­தால்காங்­கி­ரஸ் தொடர்ந்து படு­தோல்­வி­க­ளையே சந்­திக்­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாநில தேர்­தல்­கள் போது மாநில கட்­சி­களை எதிர்ப்­பது, கூட்­டணி வைத்­தா­லும் கசந்­து­கொள்­ளும்­படி நடந்­து­கொள்­வது, நாடா­ளு­மன்ற தேர்­தல் வந்­தால் அதே மாநில கட்­சி­களை வாரி அணைத்­துக்­கொள்­வது என்று இரட்டை வேடம் போடு­வது பரி­தா­ப­க­ர­மான விளை­வு­க­ளையே தரு­கி­றது. மேலும் காங்­கி­ர­ஸால் அதன் மாநில தலை­வர்­களை சுதந்­தி­ர­மாக செயல்­பட விட முடி­வ­தில்லை. மேலிட தலை­யீ­டு­க­ளால் ஒவ்­வொரு மாநி­லத்­தி­லும் பல கோஷ்­டி­கள் உரு­வாகி கட்­சியை வளர விடா­மல் செய்­து­வி­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">துவக்­கம் முதலே வேற்­று­மை­யில் ஒற்­றுமை, பன்­மைத்­து­வம் என்­றெல்­லாம் காங்­கி­ரஸ் பேசி­னா­லும், உண்­மை­யான கூட்­டாட்­சிக் குடி­ய­ரசை உரு­வாக்­கும் எந்த இலட்­சி­ய­மும், வேலைத்­திட்­ட­மும் காங்­கி­ர­ஸிற்­குக் கிடை­யாது. தி.மு.க. அர­சால் உரு­வாக்­கப்­பட்ட குரி­யன் கமிட்டி அறிக்­கை­யைக் குறித்து காங்­கி­ரஸ் விவா­திப்­பதே கிடை­யாது. ஒன்­றி­யத்­தில் அதி­கா­ரத்தை குவித்­ததே காங்­கி­ரஸ்­தான். அதனை சீர்­செய்­யும் எந்த தீவி­ர­மான கொள்­கை­யும் அத­னி­டத்­தில் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">இது போன்ற பல கார­ணங்­க­ளால் பா.ஜ.க.–வை கருத்­தி­யல் ரீதி­யாக எதிர்ப்­பது என்­ப­தில் காங்­கி­ரஸ் பல­வீ­னப்­பட்டு விடு­கி­றது. திடீ­ரென உரு­வான காக்­ரோச் ஜனதா பார்ட்­டி­யால் நடத்த முடிந்த எழுச்­சி­மிகு போராட்ட த்தை காங்­கி­ரஸ் மாண­வர் அமைப்­பு­க­ளால் நட த்த முடி­ய­வில்லை. இட துசாரி மாண­வர் அமைப்­பு­கள் மிகச் சிறப்­பான தலை­மைத்­து­வத்தை உரு­வாக்­கின. ஆனால் காங்­கி­ரஸ் பின்­ன­ணி­யி­லி­ருந்து தலை­மைத்­து­வத்­து­டன் யாரும் தோன்­ற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="14">காங்­கி­ரஸ் – மாநிலக் கட்­சி­கள் உறவு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒன்­றிய அர­ச­மைக்க தானில்­லா­மல் முடி­யாது என்று கரு­தும் காங்­கி­ரஸ், மாநில கட்­சி­கள் தன் கட்­டுப்­பாட்­டில் இயங்க வேண்­டும் என நினைக்­கி­றது. தி.மு.க. ஆட்­சி­யில் பங்­கு­தர முடி­யாது என்­ற­தில் ராகுல் காந்­திக்­குக் கோபம். விஜய் ஆட்­சி­யில் பங்கு தரு­கி­றேன் என்று சொல்­கி­றார், ஏன் தி.மு.க. தர மறுக்­கி­றது என்று நினைக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. காங்­கி­ரஸை எதிர்த்து போராடி வளர்ந்த இயக்­கம் என்­பதை சுல­ப­மாக மறந்து விடு­கின்­ற­னர். திரா­விட தமிழ் தன்­னு­ணர்வு, மாநில சுயாட்சி ஆகி­யற்றை அடி­நா­த­மாக க் கொண்ட தி.மு.க. எப்­படி காங்­கி­ர­ஸிற்கு அமைச்­ச­ர­வை­யில் இடம் கொடுக்க முன்­வ­ரும்? முர­ண­ர­சி­யல் கட்­டா­யத்­தில் ஒரு­முறை அப்­படி செய்ய ஒப்­புக்­கொண்டு தோல்­வி­யைத் தழு­விய அனு­ப­வம் வேறு இருக்­கும்­போது ஏன் அத­னைச் செய்­யப் போகி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காங்­கி­ர­ஸின் முக்­கிய நோக்­கம் ஒன்­றி­யத்­தில் பா.ஜ.க.–வை எதிர்ப்­ப­து­தான் என்­றால் எதற்­காக மாநி­லத்­தில் ஓரிரு அமைச்­சர்­கள் கிடைப்­பதை அது முக்­கி­ய­மாக க் கருத வேண்­டும்? அதை வைத்­துக்­கொ­ணடு கட்­சியை மாநி­லத்­தில் வளர்த்­து­விட முடி­யுமா? ஆனால் தி.மு.க–வு­டன் அதன் முரண்­பாட்­டை­விட பன்­ம­டங்கு பெரிய பிரச்­சினை உத்­தி­ரப் பிர­தே­சத்­தில் அதன் எதிர்­கா­லம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உ.பி. மாநில தேர்­த­லில் சமாஜ்­வாடி ஜனதா கட்­சி­யு­டன் 2017–ஆம் ஆண்டு காங்­கி­ரஸ் கூட்­டணி கண்­டது. சமாஜ்­வாடி 311 இடங்­க­ளில் போட்­டி­யிட்­டது. காங்­கி­ரஸ் 114 இடங்­க­ளில் போட்­டி­யிட்­டது. சமாஜ்­வாடி 47 இடங்­க­ளில் வென்­றது: 22% வாக்­கு­களை வாங்­கி­யது. 15% ஸ்டிரைக் ரேட். காங்­கி­ரஸ் 7 இடங்­க­ளில் வென்­றது. 6% வாக்­கு­களை வாங்­கி­யது. 6%ஸ்டிரைக் ரேட். கூட்­ட­ணிக்குகாங்­கி­ரஸ் சுமை என்­றா­கி­றது அல்­லவா? இவ்­வ­ளவு குறைந்த ஸ்டிரைக் ரேட் இருந்­தால் எப்­படி தொடர்ந்து அதிக எண்­ணிக்­கை­யில் தொகு­தி­கள் ஒதுக்க முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">அத­னால் அதற்­க­டுத்த 2022–ஆம் ஆண்டு தேர்­த­லில் சமாஜ்­வாடி, காங்­கி­ரஸ் கூட்­டணி அமை­ய­வில்லை. சமாஜ்­வாடி சில மாநில கட்­சி­க­ளு­டன் கூட்­டணி அமைத்­தது; அது 343 தொகு­தி­க­ளில் போட்­டி­யிட்டு 111 தொகு­தி­களை வென்­றது. 32% வாக்­கு­கள். 35% ஸ்டிரைக் ரேட். காங்­கி­ரஸ் 399 தொகு­தி­க­ளில் தனி­யா­கப் போட்­டி­யிட்டு இரண்டே இரண்டு தொகு­தி­க­ளில் வென்­றது. வெறும் 2.33% வாக்­கு­க­ளைப் பெற்­றது. ஸ்டிரைக் ரேட் ஒரு சத­வீ­தம் கூட கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">இந்த இரண்டு தேர்­தல்­க­ளை­யும் ஒப்­பிட்­டால் என்ன தெரி­கி­றது? அகி­லேஷ் யாதவ் தலை­மை
­யி­லான சமாஜ்­வாடி ஜனதா கட்சி மிக வலு­வாக இருக்­கி­றது. அதற்கு நிபந்­த­னை­யற்ற முழு ஆத­ரவை காங்­கி­ரஸ் வழங்­கி­னால், அத­னால் பா.ஜ.­க–வை வெல்ல முடி­ய­லாம் என்­ப­து­தான் தெரி­கி­றது. ஆனால் காங்­கி­ரஸ் அப்­ப­டிச் செய்­யுமா என்று தெரி­ய­வில்லை. அது மீண்­டும் தானே உத்­தி­ரப் பிர­தே­சத்­தில் வலுப்­பெற வேண்­டும் என்­று­தான் நினைக்­கும். காங்­கி­ர­ஸின் பெரி­யண்­ணன் மனப்­பான்­மைக்கு எல்­லையே இருப்­ப­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரு தினங்­க­ளுக்கு முன்பு ஆங்­கில ஹிண்டு நாளி­த­ழில் ஒரு நடுப்­பக்க கட்­டுரை வந்­துள்­ளது. அதில் வர்­கீஸ் ஜார்ஜ் என்ற இத­ழி­ய­லா­ளர் ஒரு கட்­டுரை எழு­தி­யுள்­ளார். அதை படித்­தால் பெரும் வியப்பு தோன்­று­வ­தைத் தவிர்க்க முடி­வ­தில்லை. அவர் என்ன சொல்­கி­றார் என்­றால் காங்­கி­ரஸ் பிற்­ப­டுத்­தப் பட்­ட­வர்­க­ளுக்­கான இட ஒதுக்­கீட்­டில் இப்­போது உறு­தி­யாக இருக்­கி­றது. சமாஜ்­வாடி, காங்­கி­ரஸ் இரண்­டுமே அனைத்து தரப்பு மக்­க­ளை­யும் ஒருங்­கி­ணைக்க விரும்­பு­கின்­றன. அத­னால் அகி­லேஷ் யாதவ் தன் கட்­சியை காங்­கி­ர­ஸு­டன் இணைத்து விட­லாம் என்று எழு­தி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">அதா­வது 32% வாக்­கு­க­ளைப் பெற்ற மாநில 
கட்­சியை, 2% வாக்­கு­க­ளைப் பெற்ற தேசிய கட்­சி­யு­டன் இணைந்­து­வி­ட­லாம் என்று கூறு­கி­றார். அந்த அளவு காங்­கி­ர­ஸின் டில்லி குடி­மைச் சமூக அர­சி­யல் முக்­கி­ய­மா­ன­தா­கத் தெரி­கி­றது என்­று­தான் இதற்­குப் பொருள். இது போன்ற மன­ம­யக்­கங்­க­ளி­லி­ருந்து விடு­ப­டா­மல் ஒரு போதும் கூட்­டாட்­சி­யும் மல­ராது; பா.ஜ.­க–­வை­யும் வீழ்த்த முடி­யாது என்­று­தான் கூற வேண்­டும். எங்கே செல்­லும்காங்­கி­ரஸ் பாதை? யாரோ யார்அறி­வார்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>