<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,70,958,1498" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 20 2026 03:41:40 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260820T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="20082026-CHN-09" position.sequence="09" ex-ref="20082026-CHN-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">மருத்துவக் காப்பீட்டிற்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு? –  வாக்குறுதியளித்தபடி ஆவின் பால்   கொள்முதல் விலை வழங்கவில்லை! ‘கஜானா காலி’ எனக் கூறிவிட்டு</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="123">எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்க மட்டும் எப்படி முடியும்?</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">முன்னாள் எம்.எல்.ஏ. எழிலன் நாகநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கேள்வி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Elilarasan198_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">சென்னை,ஆக.20–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">முதல்­வர் விஜ­யின் சட்­ட­மன்ற அறி­விப்பு தொடர்­பாக பல்­வேறு கேள்­வி­களை முன்­வைத்து கழக முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மருத்­து­வர் எழி­லன் நாக­நா­தன் 
சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் நேற்று 19–8–2026 செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அளித்த பேட்­டி­யில், ஆவின் பால் கொள்­மு­தல் விலை வாக்­கு­று­தி­ய­ளித்­தது ரூ.44 - ஆனால்  அறிவித்­தி­ருப்­பதோ ரூ.41 என்­றும்,  மருத்­துவ காப்­பீட்­டிற்கு ரூ.4000 கோடி தேவை ஆனால் ரூ.1400 கோடி தான் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. கஜானா காலி என கூறி­விட்டு MLA களுக்கு கார் வாங்க மட்­டும் எப்­படி முடி­யும்.? என்­றும் கேள்வி எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">கழக சட்­ட­மன்ற முன்­னாள் உறுப்­பி­னர் எழி­லன் நாக­நா­தன் அளித்த பேட்டி வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் கொண்டு வந்த மருத்­து­வக் காப்­பீட்­டுத் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­போது, மருத்­துவ சேவை என்­பது ஒரு­வ­ரு­டைய வரு­மா­னத்­தின் அடிப்­ப­டை­யிலோ, அவர் ஏழையா, பணக்­கா­ரரா என்ற வேறு­பாட்­டின் அடிப்­ப­டை­யிலோ இருக்­கக் கூடாது; மருத்­து­வம் என்­பது அனை­வ­ருக்­கும் சென்­ற­டைய வேண்­டும் என்ற அடிப்­ப­டை­யில்­தான் அந்­தத் திட்­டம் உரு­வாக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">இல­வச மருத்­துவ சேவை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">“ஹெல்த் ஃபார் ஆல்” என்­ப­து­தான் திரா­விட இயக்­கங்­க­ளும், திரா­விட ஆட்சி முறை­க­ளும் தொடர்ந்து வலி­யு­றுத்தி செயல்­ப­டுத்தி வரும் கொள்கை. தமிழ்­நாட்­டில் மட்­டு­மல்­லா­மல், உல­கின் எந்த மூலை­யில் இருந்­தா­லும், தமிழ்­நாட்­டின் அரசு பொது சுகா­தா­ரக் கட்­ட­மைப்­பைப் பற்றி பேசும்­போது, அரசு மருத்­து­வ­ம­னை­கள், மருத்­து­வக் கல்­லூ­ரி­கள், ஆரம்ப சுகா­தார நிலை­யங்­கள் என அனைத்து மட்­டங்­க­ளி­லும் மக்­க­ளுக்கு இல­வ­ச­மான மருத்­துவ சேவை கிடைக்­கக்­கூ­டிய ஒரு வலு­வான பொது சுகா­தா­ரக் கட்­ட­மைப்பை நாம் ஏற்­க­னவே உரு­வாக்­கி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">அப்­ப­டி­யென்­றால், அர­சாங்க மருத்­து­வ­ம­னை­கள் இருக்­கும்­போது எதற்­காக மருத்­து­வக் காப்­பீட்­டுத் திட்­டம் என்ற கேள்வி இயல்­பாக எழும். அர­சாங்க மருத்­து­வ­ம­னை­க­ளில் ஒரு குறிப்­பிட்ட சிகிச்­சைக்­காக நீண்ட காத்­தி­ருப்­புப் பட்­டி­யல் இருக்­கும்­போது, அதே சிகிச்­சையை அரசு செல­வில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளில் பெற்­றுக்­கொள்­ளும் வாய்ப்பை உரு­வாக்­கு­வ­தற்­கா­கத்­தான் மருத்­து­வக் காப்­பீட்­டுத் திட்­டம் கொண்டு வரப்­பட்­டது. அதன் முக்­கிய நோக்­கம், அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் இருக்­கும் காத்­தி­ருப்­புப் பட்­டி­ய­லைக் குறைப்­ப­தும், மக்­க­ளுக்கு உரிய நேரத்­தில் சிகிச்சை கிடைப்­பதை உறுதி செய்­வ­தும்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">கூடு­தல் குடும்­பங்­கள் பயன்­பெற</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">திட்­டம் விரி­வாக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">இன்­றைக்கு யுனை­டெட் இந்­தியா இன்­சூ­ரன்ஸ் என்ற பொதுத்­துறை காப்­பீட்டு நிறு­வ­னத்­தின் மூல­மாக இந்த மருத்­து­வக் காப்­பீட்­டுத் திட்­டம் செயல்­பட்டு வரு­கி­றது. 2021ஆம் ஆண்டு நாங்­கள் ஆட்­சி­யில் இருந்­த­போது, ஒரு குடும்ப அட்­டை­தா­ர­ருக்­கான மருத்­து­வக் காப்­பீட்­டுத் தொகை, ரூ.1 லட்­சத்­தி­லி­ருந்து ரூ.5 லட்­ச­மாக உயர்த்­தப்­பட்­டது. அது­மட்­டு­மல்­லா­மல், திட்­டத்­தில் யார் தகு­தி­யா­ன­வர்­கள் என்­ப­தற்­கான வரு­மான வரம்­பும் தளர்த்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">ஆண்டு வரு­மா­னம் ரூ.75,000-க்குக் கீழ் இருந்­த­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட தகு­தியை ரூ.1.25 லட்­சம் வரை ஆண்டு வரு­மா­னம் உள்­ள­வர்­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தி­னோம். இதன் கார­ண­மாக, திட்­டத்­தின் கீழ் வழங்­கப்­பட்ட குடும்ப அட்­டை­க­ளின் எண்­ணிக்­கை­யும் கணி­ச­மாக அதி­க­ரித்­தது. சுமார் 1 கோடியே 20 லட்­சம் அட்­டை­க­ளி­லி­ருந்து 1 கோடியே 48 லட்­சம் அட்­டை­க­ளாக உயர்த்­தப்­பட்டு, 25 லட்­சத்­துக்­கும் மேற்­பட்ட கூடு­தல் குடும்­பங்­கள் பயன்­பெ­றும் வகை­யில் திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">அதே­போல், 2001ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை­யி­லான கால­கட்­டத்­தைப் பார்க்­கும்­போது, திட்­டத்­தில் இணைக்­கப்­பட்ட மருத்­து­வ­ம­னை­க­ளின் எண்­ணிக்­கை­யும் கணி­ச­மாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. சுமார் 1,000 மருத்­து­வ­ம­னை­க­ளி­லி­ருந்து 2,000-க்கும் மேற்­பட்ட மருத்­து­வ­ம­னை­கள் வரை விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 2,000-க்கும் மேற்­பட்ட மருத்­து­வச் சிகிச்சை முறை­க­ளுக்­கும் காப்­பீட்­டுத் திட்­டத்­தின் சேவை விரி­வு­ப­டுத்­தப் 
பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">இந்­தப் பின்­ன­ணி­யில்­தான் இன்­றைய முத­ல­மைச்­ச­ரின் அறி­விப்­பைப் பார்க்க வேண்­டும். முத­லில், ரூ.5 லட்­ச­மாக இருந்த காப்­பீட்­டுத் தொகையை ரூ.25 லட்­ச­மாக உயர்த்­து­கி­றோம் என்று அறி­வித்­தி­ருப்­பதை வர­வேற்­கி­றோம். ஆனால், அதே நேரத்­தில் சில அடிப்­ப­டை­யான கேள்­வி­களை நாம் கேட்க வேண்­டி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பிரீ­மி­யம் தொகை எவ்­வ­ளவு?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">நாங்­கள் ஆட்­சி­யில் இருந்­த­போது, ரூ.1 லட்­சத்­தி­லி­ருந்து ரூ.5 லட்­ச­மாக காப்­பீட்­டுத் தொகையை உயர்த்­தி­ய­போது, ஒவ்­வொரு குடும்ப அட்­டைக்­கும் அர­சாங்­கம் செலுத்­திய பிரீ­மி­யம் தொகை சுமார் ரூ.849 ஆக இருந்­தது. அந்­தக் கால­கட்­டத்­தில் காப்­பீட்டு நிறு­வ­னத்­துக்கு ஆண்­டுக்கு சுமார் ரூ.1,200 கோடி அள­வில் தொகை செலுத்­தப்­பட்­டது. அது ஐந்து ஆண்­டு­க­ளுக்­கான டெண்­டர் அடிப்­ப­டை­யில் செயல்­ப­டுத்­தப்­பட்­டது. இப்­போது ரூ.5 லட்­சத்­தி­லி­ருந்து ரூ.25 லட்­ச­மாக, அதா­வது ஐந்து மடங்கு அள­வுக்கு காப்­பீட்டு தொகை உயர்த்­தப்­ப­டு­கி­றது என்­றால், ஒரு குடும்ப அட்­டைக்கு செலுத்த வேண்­டிய பிரீ­மி­யம் தொகை எவ்­வ­ளவு உயர்த்­தப்­ப­டு­கி­றது என்­பதை அர­சாங்­கம் தெளி­வா­கச் சொல்ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">110 விதி­யின் கீழ் முத­ல­மைச்­சர் அறி­வித்­தி­ருப்­ப­தால், அதற்­கான முழு­மை­யான விவ­ரங்­கள் இனி­மேல் வெளி­யி­டப்­ப­டும் என்று நாங்­கள் நம்­பு­கி­றோம். சுகா­தா­ரத்­துறை அமைச்­ச­ரும் இது­கு­றித்து விளக்­கம் அளிப்­பார் என்று எதிர்­பார்க்­கி­றோம். ஒரு கார்­டுக்கு ரூ.849 அள­வி­லி­ருந்த பிரீ­மி­யம் தொகையை நீங்­கள் இரட்­டிப்­பாக்­கப் போகி­றீர்­களா? ரூ.25 லட்­சம் வரை காப்­பீடு வழங்க வேண்­டு­மென்­றால், அதற்­கேற்ப அர­சாங்­கம் ஒவ்­வொரு கார்­டுக்­கும் செலுத்த வேண்­டிய பிரீ­மி­யம் தொகை­யை­யும் உயர்த்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நான்கு கேள்­வி­க­ளுக்­கும்பதில் கிடைக்­குமா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">எனவே, முதல் கேள்வி. ஒரு குடும்ப அட்­டைக்­கான பிரீ­மி­யம் தொகை எவ்­வ­ளவு உயர்த்­தப்­ப­டு­கி­றது?.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">அர­சாங்­கத்­தின் பட்­ஜெட் ஒதுக்­கீட்­டைப் பார்க்­கும்­போது, மருத்­து­வக் காப்­பீட்­டுத் திட்­டத்­திற்­காக சுமார் ரூ.1,300 கோடி முதல் ரூ.1,400 கோடி வரை ஒதுக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கத் தெரி­கி­றது. ஆனால் ரூ.5 லட்­சத்­தி­லி­ருந்து ரூ.25 லட்­ச­மாக காப்­பீட்­டுத் தொகையை உயர்த்­து­கி­றோம் என்­றால், காப்­பீட்டு நிறு­வ­னத்­துக்கு அர­சாங்­கம் செலுத்த வேண்­டிய தொகை­யும் கணி­ச­மாக அதி­க­ரிக்க வேண்­டி­யி­ருக்­கும். அந்த அள­வி­லான காப்­பீட்டு பொறுப்பை நிறை­வேற்ற வேண்­டு­மென்­றால், ஆண்­டுக்கு ரூ.4,000 கோடி அள­விற்கு நிதி ஒதுக்­கீடு செய்ய வேண்­டிய சூழல் ஏற்­ப­ட­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">எனவே இரண்­டா­வது கேள்வி, ரூ.1,200 கோடி அள­வி­லி­ருந்து ரூ.4,000 கோடி அள­விற்கு ஆண்­டு­தோ­றும் நிதி ஒதுக்­கீட்டை அதி­க­ரிக்­கப் போகி­றீர்­களா? அதை வெளிப்­ப­டை­யாக அர­சாங்­கம் சொல்ல வேண்­டும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">மூன்­றா­வது கேள்வி மிக­வும் முக்­கி­ய­மா­னது. ரூ.25 லட்­சம் என்று அறி­விப்­பது மட்­டும் போதாது. ஒவ்­வொரு மருத்­து­வச் சிகிச்­சைக்­கும் அர­சாங்­கம் நிர்­ண­யித்­துள்ள ‘பேக்­கேஜ் ரேட்’ என்ன என்­ப­து­தான் முக்­கி­யம். ஒரு பைபாஸ் அறுவை சிகிச்­சைக்கு எவ்­வ­ளவு தொகை வழங்­கப் போகி­றீர்­கள்? ஒரு உறுப்பு மாற்று அறுவை சிகிச்­சைக்கு எவ்­வ­ளவு வழங்­கப் போகி­றீர்­கள்? ஒரு புற்­று­நோய் சிகிச்­சைக்கு எவ்­வ­ளவு வழங்­கப் போகி­றீர்­கள்? ஒரு குறிப்­பிட்ட சிகிச்­சை­யின் உண்­மை­யான செலவு அதி­க­ரித்­துக்­கொண்டே இருக்­கும்­போது, பழைய பேக்­கேஜ் ரேட்­டையே வைத்­தி­ருந்­தால், ரூ.25 லட்­சம் காப்­பீடு என்று அறி­விப்­ப­தால் மட்­டும் நோயா­ளிக்கு நடை­மு­றை­யில் பெரிய பயன் கிடைக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">எனவே, மூன்­றா­வது கேள்வி: ஒவ்­வொரு சிகிச்­சைக்­கான பேக்­கேஜ் ரேட்­டை­யும் உயர்த்­தப் போகி­றீர்­களா?.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">நான்­கா­வது கேள்வி: இந்­தத் திட்­டத்­தில் இணைக்­கப்­ப­டும் தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­கப் போகி­றீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">இந்த நான்கு கேள்­வி­க­ளுக்­கும் ஆளுங்­கட்சி தெளி­வா­கப் பதில் சொல்ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">ஒன்று - ஒரு கார்­டுக்­கான பிரீ­மி­யம் எவ்­வ­ளவு?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">இரண்டு — நிதி ஒதுக்­கீடு எவ்­வ­ளவு அதி­க­ரிக்­கப்­ப­டு­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">மூன்று — ஒவ்­வொரு சிகிச்­சைக்­கான பேக்­கேஜ் ரேட் உயர்த்­தப்­ப­டு­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">நான்கு — இணைக்­க­ப­டும் தனி­யார் 
மருத்­து­வ­ம­னை­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­ப­டு­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">விளம்­பர அறி­விப்பா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">இந்த நான்கு அம்­சங்­க­ளை­யும் நிறை­வேற்­றா­மல், ரூ.25 லட்­சம் வரை காப்­பீடு வழங்­கு­கி­றோம் என்று அறி­விப்­பது நடை­மு­றைக்கு ஏற்ற செயல் திட்­ட­மாக இருக்­குமா அல்­லது வழக்­கம்­போல ஒரு அர­சி­யல் ‘நேரேட்­டிவ் பில்­டிங்’ மற்­றும் விளம்­பர அறி­விப்­பாக மட்­டும் இருக்­குமா என்ற அடிப்­ப­டை­யான கேள்­வியை நாங்­கள் கேட்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">அடுத்­த­தாக, 70 வய­துக்கு மேற்­பட்ட முதி­யோர்­க­ளுக்­கான மருத்­து­வக் காப்­பீடு தொடர்­பாக அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. 70 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு எந்­த­வி­த­மான வரு­மான உச்­ச­வ­ரம்­பும் இல்­லா­மல், பல்­வேறு சிகிச்­சை­க­ளுக்­கும் காப்­பீட்­டுத் திட்­டத்­தில் பாது­காப்பு வழங்­கப்­ப­டும் என்று கூறப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">இது­கு­றித்­தும் ஒரு அடிப்­ப­டை­யான கேள்வி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தமிழ்­நாடு அர­சின்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">புதிய திட்­டமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">இது தமிழ்­நாடு அரசு தனி­யாக உரு­வாக்­கும் ஒரு புதிய திட்­டமா? அல்­லது ஒன்­றிய அர­சின் பிர­தான் மந்­திரி ஜன் ஆரோக்­கிய யோஜனா, அதா­வது PM-JAY, ஆயுஷ்­மான் பாரத் திட்­டத்­தின் விரி­வாக்­கமா? ஏற்­க­னவே தமிழ்­நாட்­டில் பல்­வேறு திட்­டங்­க­ளுக்கு ஒன்­றிய மற்­றும் மாநில அர­சு­க­ளின் நிதி இணைந்து பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">உதா­ர­ண­மாக, சில நலத்­திட்­டங்­க­ளில் மாநில அரசு ஒரு குறிப்­பிட்ட தொகை­யை­யும், ஒன்­றிய அரசு ஒரு குறிப்­பிட்ட தொகை­யை­யும் வழங்கி, இரண்­டை­யும் இணைத்து மக்­க­ளுக்கு அதி­க­மான பயன் கிடைக்­கச் செய்­கி­றோம். அதே­போல், நம்­மு­டைய மருத்­து­வக் காப்­பீட்­டுத் திட்­டத்­தி­லும் சில குறிப்­பிட்ட சிகிச்­சை­க­ளுக்­கான செல­வில் ஒரு பகுதி PM-JAY அல்­லது ஆயுஷ்­மான் பாரத் திட்­டத்­தின் வழி­யாக ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">அப்­ப­டி­யா­னால், இப்­போது 70 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்­காக அறி­விக்­கப்­பட்­டுள்ள திட்­டம் தனித்­த­மிழ்­நாடு அரசு திட்­டமா? அல்­லது ஒன்­றிய அர­சின் திட்­டத்தை தமிழ்­நாடு உள்­வாங்கி விரி­வு­ப­டுத்­து­கி­றதா? உள்­வாங்­கு­கி­றீர்­கள் என்­றால், ஒன்­றிய அர­சின் நிதிப் பங்கு எவ்­வ­ளவு? தமிழ்­நாடு அர­சின் நிதிப் பங்கு எவ்­வ­ளவு? இதை­யெல்­லாம் தெளி­வா­கச் சொல்ல வேண்­டும். ஒன்­றிய அர­சின் திட்­டத்­தையே விரி­வு­ப­டுத்­தப் போகி­றீர்­கள் என்­றால், அதை ஏன் தனி மாநி­லத் திட்­ட­மாக பட்­ஜெட்­டில் அறி­வித்­தீர்­கள் என்ற கேள்­வி­யும் எழு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">எனவே, இந்த அடிப்­படை கேள்­வி­க­ளுக்கு அர­சாங்­கம் விளக்­கம் அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பால் கொள்­மு­தல் விலை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">அடுத்­த­தாக, ஆவின் பால் கொள்­மு­தல் விலையை உயர்த்­தி­ய­தாக முத­ல­மைச்­சர் அறி­வித்­தி­ருக்­கி­றார். திமுக ஆட்சி காலங்­க­ளில் மர­பாக பால் கொள்­மு­தல் விலை உயர்த்­தப்­பட்­ட­தை­யும் அவர் பதிவு செய்­தி­ருக்­கி­றார். அது வர­வேற்­கத்­தக்­கது. ஆனால், அவர்­க­ளு­டைய தேர்­தல் அறிக்­கை­யில் பால் உற்­பத்­தி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து ரூ.44 வரை கொள்­மு­தல் செய்­வோம் என்று வாக்­கு­றுதிஅளிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் நடை­மு­றை­யில் 
ரூ.41 அள­வில்­தான் கொள்­மு­தல் விலை வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">நாங்­கள் ஆட்­சி­யில் இருந்­த­போது, பால் உற்­பத்தி செய்­யும் விவ­சா­யி­க­ளின் நிலையை கருத்­தில் கொண்டு அவ்­வப்­போதுகொள்­மு­தல் விலையை உயர்த்­தி­னோம். அதே நேரத்­தில், பொது­மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் ஆவின் பால் விலை­யை­யும் ஒரு லிட்­ட­ருக்கு ரூ.3 வரை குறைத்­தோம். அந்த விலை குறைப்­பின் சுமையை அர­சாங்­கமே ஏற்­றுக்­கொண்­டது. ஒரு லிட்­ட­ருக்கு சுமார் ரூ.6 அள­வி­லான நிதிச்­சு­மையை அரசு ஏற்­றுக்­கொண்ட சூழ­லும் இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">இப்­போது நீங்­கள் பால் கொள்­மு­தல் விலையை உயர்த்­து­கி­றீர்­கள். இத­னால் அர­சாங்­கத்­திற்கு சுமார் ரூ.300 கோடி இழப்பு ஏற்­ப­டும் என்று கூறு­கி­றீர்­கள். அப்­ப­டி­யா­னால், நாங்­கள் பொது­மக்­க­ளுக்கு வழங்­கிய விலைச் சலு­கை­யின் பயனை, ஏன் முழு­மை­யாக பால் உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு திருப்­பிக் கொடுக்­கக்­கூ­டாது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">இன்­றைக்கு விவ­சா­யி­கள் பல்­வேறு நெருக்­க­டி­களை எதிர்­கொள்­கி­றார்­கள். தண்­ணீர் பற்­றாக்­குறை, தீவ­னச் செலவு அதி­க­ரிப்பு, உற்­பத்­திச் செலவு உயர்வு என பல்­வேறு சிர­மங்­கள் இருக்­கின்­றன. அந்த நிலை­யில் பால் உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு கூடு­தல்ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தால், அது நீங்­கள் தேர்­தல் அறிக்­கை­யில் கொடுத்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­றும் வித­மாக இருந்­தி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">மூன்­றா­வது முக்­கி­ய­மான அறி­விப்பு, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு கார் வழங்­கு­வது, உத­வி­யா­ளர் வழங்­கு­வது மற்­றும் பெட்­ரோல் உள்­ளிட்ட சலு­கை­கள் வழங்­கு­வது தொடர்­பா­னது. ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ருக்கு ஆண்­டு­தோ­றும் சுமார் ரூ.3 கோடி அள­வில் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் தொகுதி மேம்­பாட்டு நிதி வழங்­கப்­ப­டு­கி­றது. இந்த எம்.எல்.ஏ. நிதி என்ற நடை­மு­றையை முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர்­தான் கொண்டு வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நிதி நெடுக்­க­டி­யில்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">எம்.எல்.ஏ.க்களுக்கு சலுகை அவ­சி­யமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரின் அடிப்­ப­டைப் பொறுப்பு என்ன? சட்­ட­மன்­றத்­தில் தமிழ்­நாடுஅர­சின் சட்ட முன்­வ­டி­வு­களை விவா­திப்­பது, அவற்றை சட்­டங்­க­ளாக மாற்­று­வ­தற்­கான பணி­க­ளில் பங்­கேற்­பது, மக்­க­ளின் குறை­களை சட்­ட­மன்­றத்­தில் எடுத்­து­ரைப்­பது, அவர்­க­ளின் தேவை­க­ளுக்­கான திட்­டங்­களை உரு­வாக்­கு­வ­தில் பங்­க­ளிப்­பது, தொகுதி மக்­க­ளுக்­கான வளர்ச்­சிப் பணி­களை முன்­னெ­டுப்­பது என்­ப­து­தான். அதற்­கா­கத்­தான் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் தொகுதி மேம்­பாட்டு நிதி உரு­வாக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">ஒரு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ருக்கு ஆண்­டுக்கு ரூ.3 கோடி என்ற அள­வில் தொகுதி மேம்­பாட்டு நிதி கிடைக்­கி­றது என்­றால், ஐந்து ஆண்­டு­க­ளில் ஒரு எம்.எல்.ஏ. தனது தொகு­திக்கு கணி­ச­மான நிதியை நேர­டி­யா­கப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்பு இருக்­கி­றது. இப்­போது அர­சாங்­கமே பொரு­ளா­தார நெருக்­கடி இருப்­ப­தா­கச்சொல்­கி­றது. கடு­மை­யான நிதிக் கட்­டுப்­பாட்­டில் அரசு செயல்­ப­டு­கி­றது என்று கூறு­கி­றது. அப்­ப­டி­யி­ருக்­கும்­போது, அனைத்து சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் பொது­வாக கார், உத­வி­யா­ளர், சம்­ப­ளம், பெட்­ரோல் மானி­யம் போன்ற சலு­கை­களை வழங்­கு­வது அவ­சி­யமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தேவைப்­ப­டு­கி­ற­வர்­க­ளுக்கு
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மட்­டும் வழங்­க­லாம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">ADR உள்­ளிட்ட அமைப்­பு­கள் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­க­ளி­லும், தற்­போ­தைய சட்­ட­மன்­றத்­தில் உள்ள பெரும்­பா­லான சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் கோடீஸ்­வ­ரர்­க­ளாக இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அப்­ப­டி­யா­னால், ஏழை, எளிய, சாமா­னிய மக்­களை சட்­ட­மன்­றத்­திற்கு கொண்டு வரு­வோம் என்று முத­ல­மைச்­சர் கூறும்­போது, உண்­மை­யில் யாருக்கு வாக­னம் தேவைப்­ப­டு­கி­றது, யாருக்கு தேவை­யில்லை என்­பதை அவர்­க­ளு­டைய அஃபி­ட­விட்­டின் அடிப்­ப­டை­யில் மதிப்­பீடு செய்­ய­லாமே? பெரிய அள­வி­லான சொத்­து­க­ளை­யும், வாக­னங்­க­ளை­யும் வைத்­தி­ருக்­கும் ஒரு­வ­ருக்­கும், உண்­மை­யில் வாகன வசதி இல்­லாத ஒரு­வ­ருக்­கும் ஒரே மாதி­ரி­யான சலுகை வழங்­கு­வது சரி­யான அணு­கு­மு­றையா?. தேவைப்­ப­டு­கிற சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு மட்­டும் உதவி வழங்­கும் முறையை உரு­வாக்­க­லாம். இது மிக­வும் முக்­கி­ய­மா­னது. ஏனென்­றால், ஒரு­பு­றம் விவ­சா­யக் கடன் தள்­ளு­படி, பல்­வேறு நலத்­திட்­டங்­கள், நிதிப் பற்­றாக்­குறை என்று கூறு­கி­றீர்­கள். மறு­பு­றம், அனைத்து சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் கார், உத­வி­யா­ளர், பெட்­ரோல் உள்­ளிட்ட பல்­வேறு சலு­கை­களை வழங்­கு­கி­றீர்­கள். இது அர­சாங்­கத்­தின் முன்­னு­ரி­மை­கள் குறித்த கேள்­வியை எழுப்­பு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">மேலும், முந்­தைய ஆட்­சி­யி­னர் கஜா­னாவை காலி செய்­து­விட்­டுச் சென்­றார்­கள், கடு­மை­யான நிதிச்­சு­மையை விட்­டுச் சென்­றார்­கள் என்று கூறிக்­கொண்­டி­ருக்­கும் அர­சாங்­கமே, இப்­போது இப்­ப­டிப்­பட்ட புதிய செல­வி­னங்­களை அறி­விக்­கும்­போது, அது இரட்டை நிலைப்­பா­டாக உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">இன்று இந்த மூன்று அறி­விப்­பு­க­ளும் கவர்ச்­சி­க­ர­மாக இருக்­க­லாம். ஊட­கங்­க­ளில் பெரிய செய்­தி­யாக இருக்­க­லாம். அர­சி­யல் ரீதி­யாக ஒரு ‘நேரேட்­டிவ்’ உரு­வாக்­கு­வ­தற்­கும் பயன்­ப­ட­லாம். ஆனால் நடை­மு­றை­யில் செயல்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டம் என்ன என்­ப­து­தான் எங்­க­ளு­டைய கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நிதி ஒதுக்­கு­வதை
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தெளி­வு­படுத்­துக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">மருத்­துவ காப்­பீட்­டில் தமிழ்­நாட்­டில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்­சையை எடுத்­துக்­கொள்­ளுங்­கள். எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் ஒரு கல்­லீ­ரல் மாற்று அறுவை சிகிச்­சைக்கு சுமார் ரூ.22 லட்­சம் வரை செலவு ஏற்­பட்­டது. அந்­தச் செல­வில் காப்­பீட்டு நிறு­வ­னத்­தின் மூலம் ரூ.5 லட்­சம் மட்­டுமே வழங்­கப்­பட்­டது. மீத­முள்ள ரூ.17 லட்­சம் தமிழ்­நாடு ஹெல்த் சிஸ்­டம்ஸ் ப்ராஜெக்­டின் கீழ் இருந்த கார்ப்­பஸ் நிதி­யி­லி­ருந்து அந்­தத் தொகை வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">ஒரு மருத்­து­வ­மனை ஒரு உறுப்பு மாற்று அறுவை சிகிச்­சைக்­காக விண்­ணப்­பிக்­கு
ம்­போது, உரிய நடை­மு­றை­யின் அடிப்­ப­டை­யில் அந்த விண்­ணப்­பம் பரி­சீ­லிக்­கப்­பட்டு, மீத­முள்ள தொகை கார்ப்­பஸ் நிதி­யி­லி­ருந்து வழங்­கப்­பட்­டது. அப்­படி இந்த அரசு எவ்­வ­ளவு நிதி எப்­படி ஒதுக்க உள்­ளது என்­பதை தெளி­வு­ப­டுத்த வேண்­டும். ஒரு திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தும்­போது, அதற்­கான நிதி ஒதுக்­கீடு என்ன, அதை எந்த அமைப்பு செயல்­ப­டுத்­தும், எத்­தனை பணி­யா­ளர்­கள் தேவை, என்ன கொள்­மு­தல் நடை­முறை, எப்­படி பொது­மக்­க­ளி­டம் கொண்டு சேர்க்­கப்­ப­டும் என்­ப­தற்­கான முழு­மை­யான செயல்­திட்­டம் இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">அது­தான் ஒரு நல்ல ஆட்­சி­யின் அடிப்­படை. ஆனால் இந்த அர­சாங்­கத்­தின் அறி­விப்­பு­க­ளில் அந்­தத் தெளிவு குறை­வாக இருக்­கி­றது என்­ப­தைத்­தான் நாங்­கள் சுட்­டிக்­காட்­டு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">200 யூனிட் இல­வச மின்­சா­ரம் வழங்­கப்­பட்­டா­லும், குறிப்­பிட்ட அள­வைத் தாண்­டும்­போது அடுத்­த­டுத்த யூனிட்­டு­க­ளுக்­கான கட்­ட­ணம் உயர்த்­தப்­ப­டு­வ­தால், மக்­க­ளுக்­குக் கிடைக்­கும் நன்மை முழு­மை­யா­கச் சென்­ற­டை­வ­தில்லை. அதே­போல, மருத்­து­வக் காப்­பீட்­டுத் தொகையை ரூ.5 லட்­சத்­தி­லி­ருந்து ரூ.25 லட்­ச­மாக உயர்த்­தி­னா­லும், அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் நில­வும் மருத்­து­வர்­கள், செவி­லி­யர்­கள் மற்­றும் பணி­யா­ளர்­கள் பற்­றாக்­கு­றை­யைச் சரி­செய்­வ­து­டன், மருத்­து­வச் சிகிச்­சைக்­கான பேக்­கேஜ் கட்­ட­ணங்­க­ளைச் சீர­மைத்­தால் மட்­டுமே மக்­கள் இதன் உண்­மை­யான பயனை அடைய முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">தற்­போது புற்­று­நோய் சிகிச்­சைக்­காக அறி­விக்­கப்­பட்­டுள்ள ‘ஹப் அண்ட் ஸ்போக்’ மாடல் போன்ற பல திட்­டங்­கள், ஏற்­க­னவே திட்­டக் குழு­வின் ‘Sector 360’ தொலை­நோக்கு ஆவ­ணத்­தில் இடம்­பெற்­ற­வை­தான். முந்­தைய ஆட்­சி­யில் உரு­வாக்­கப்­பட்ட நல்ல திட்­டங்­களை இந்த அரசு செயல்­ப­டுத்­து­வதை வர­வேற்­ப­தில் மாற்­றுக் கருத்­தில்லை. ஆனால், 110 விதி­யின் கீழ் அறி­விப்­பு­க­ளைச் செய்­யும்­போது, அதற்­கான நிதி ஒதுக்­கீடு, தேவை­யான மனி­த­வ­ளம் மற்­றும் உள்­கட்­ட­மைப்பு விவ­ரங்­களை அரசு தெளி­வாக வெளி­யிட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">வெறும் கவர்ச்­சி­யான அறி­விப்­பு­க­ளும், வாக்­கு­று­தி­க­ளும் மட்­டுமே ஒரு அர­சின் வெற்­றிக்கு போது­மா­ன­தாகி விடாது. திட்­டங்­க­ளுக்­கான நிதி, மனி­த­வ­ளம் மற்­றும் நிர்­வா­கத் தெளி­வு­டன் அவை மக்­க­ளி­டம் எவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன என்­பதே முக்­கி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு எழி­லன் நாக­நா­தன் பேட்­டி­ ய­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>