<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,376,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 20 2026 00:42:09 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260820T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="20082026-MDU-02" position.sequence="02" ex-ref="20082026-MDU-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="34">கர்நாடகாவில் 3 தமிழர்கள் படுகொலை!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup802504_02_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">க</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ர்­நா­டக மாநி­லம் சாம்­ராஜ்­ந­கர் மாவட்­டத்­தில் ஹன்­னூர் வனப்­ப­கு­தி­யில் 3 தமி­ழர்­கள் கர்­நா­டக வனத்­து­றை­யி­ன­ரால் சிறி­தும் ஈவு இரக்­க­மின்றி 
துப்­பாக்­கி­யால் சுட்­டுக் கொல்­லப்­பட்டு உள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">வழி­த­வ­றிய தங்­க­ளின் மாடு­க­ளைத் தேடி வந்­த­வர்­களை, மான் வேட்­டைக்கு   வந்­த­வர்­கள் என்­று­கூறி கர்­நா­டக வனத்­துறை சுட்­டுக்­கொன்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">‘இந்த விவ­கா­ரத்­தில் எனக்கு முரண்­பட்ட தக­வல்­கள் வந்து கொண்டு இருக்­கி­றது’ என்­கி­றார் கர்­நா­டக மாநில முத­ல­மைச்­சர் டி.கே.சிவக்­கு­மார். முத­ல­மைச்­சர் பத­வி­யில் இருந்­து­கொண்டு இப்­ப­டிச் சொல்­வ­தற்கு அவ­ருக்கு வெட்­க­மாக இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘கர்­நா­டக நிர்­வா­கத்­தில் தமிழ்­நாடு தலை­யி­டக் கூடாது’ என்று ஆண­வ­மா­கச் சொல்லி இருக்­கி­றார். அவர் அந்த மாநில மக்­க­ளுக்கு நல்­லது செய்­தால் நாம் ஏதா­வது கேட்­கி­றோமா? தமி­ழர்­க­ளைச் சுட்­டுக் கொண்டே இருந்­தால் அதைப் பார்த்து வேடிக்கை பார்க்க முடி­யுமா? தமிழ்­நாட்­டுக்கு தர வேண்­டிய காவிரி நீரைத் தர­ம­றுத்­தால் தட்­டிக் கேட்­கக் கூடாதா? காவிரி தண்­ணீ­ரைத் தடுக்க அணைக் கட்­டி­னால் எதிர்ப்பு தெரி­விக்­கக் கூடாதா? கர்­நா­டகா ஏதோ தனி நாடு போல பேசு­கி­றார் டி.கே.சிவக்­கு­மார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘மாடு­க­ளைத் தேடி வந்­த­வர்­கள்­தான் இம்­மூ­வ­ரும்’ என்று இறு­தி­யில் முடி­வா­னால் கொல்­லப்­பட்­ட­வர்­க­ளைப் பிழைக்க வைக்க முடி­யுமா மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் டி.கே.சிவக்­கு­மா­ரால்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">வழி­த­வ­றிய மாடு­க­ளைத் தேடி வந்த தமி­ழர்­களை, மான் வேட்­டை­யாட வந்­த­வர்­கள் என்று கர்­நா­டக வனத்­துறை எந்த ஆதா­ரத்­தின் அடிப்­ப­டை­யில் முடி­வெ­டுத்­தது? அதற்­காக உடனே சுட்­டு­வி­டு­வீர்­களா? அது­தான் கர்­நா­ட­கா­வில் சட்­டமா? மான்­வேட்­டை­யாட கர்­நா­ட­கா­வைச் சேர்ந்த கன்­ன­டர்­கள் வந்­தி­ருந்­தால், அவர்­களை கர்­நா­டக காங்­கி­ரஸ் அர­சாங்­கம் சுட்­டு­வி­டுமா? சுட்­டு­விட்­டுத் தான் ஆட்­சி­யில் இருக்­க­மு­டி­யுமா? தமிழ்­நாட்­டில் கையா­லா­காத, முது­கெ­லும்­பற்ற அர­சாங்­கம் இருக்­கி­றது, அந்த அர­சாங்­கம் இது­பற்றி எல்­லாம் கேட்­காது என்று நினைத்­துத்­தான் கர்­நா­டக காங்­கி­ரஸ் அர­சாங்­கம் 3 தமி­ழர்­களை இரக்­கம் இல்­லா­மல் சுட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">வனப் பகு­தி­யில் அத்­து­மீறி நுழைந்­தி­ருந்­தால் வழக்கு போடுங்­கள். கைது செய்­யுங்­கள். நீதி­மன்­றத்­தின் முன் நிறுத்­துங்­கள். குற்­ற­வா­ளி­கள் என்று நீதி­மன்­றம் தீர்ப்­புத் தரட்­டும். இவை அனைத்­தை­யும் விட்­டு­விட்டு, ‘பார்த்­த­தும் சுடு­வது’ என்­றால் அது அரச பயங்­க­ர­வா­தம் அல்­லவா? அப்­படி கட்­டற்ற அதி­கா­ரத்­தைக் காவல்­து­றைக்கு கொடுத்­துள்­ளதா கர்­நா­டக காங்­கி­ரஸ் அரசு?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இது­தொ­டர்­பாக கர்­நா­டகா வனத்­து­றை­யி­னர் கூறு­கை­யில், “வனப்­ப­கு­திக்­குள் மான் வேட்­டை­யாடி இறைச்­சி­யைப் பிரித்­துக் கொண்­டி­ருந்த கும்­பலை வனத்­து­றை­யி­னர் சுற்றி வளைத்­துள்­ள­னர். அப்­போது அவர்­கள் நாட்­டுத் துப்­பாக்­கி­யால் வனத்­து­றை­யி­னர் மீது தாக்­கு­தல் நடத்­தி­ய­தால், தற்­காப்­புக்­காக வனத்­து­றை­யினர் நடத்­திய பதி­ல­டித் துப்­பாக்­கிச் சூட்­டில் 3 பேர் சம்­பவ இடத்­தி­லேயே 
உயி­ரி­ழந்­த­னர்” என்று வழக்­கம்­போல கதை கட்டி இருக்­கி­றார்­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கர்­நா­டகா வனத்­து­றை­யால் சுட்­டுக் கொல்­லப்­பட்ட அந்­தோ­னி­சாமி, பீட்­டர், குமார் ஆகிய மூவ­ரும் தமிழ்­நாட்டை ஒட்­டி­யுள்ள சாம்­ராஜ்­ந­கர் மாவட்­டம் தோமை­யார்­பா­ளை­யம், மாரி­ய­மங்­க­லம் பகு­தி­யைச் சேர்ந்த தமி­ழர்­கள். 
கர்­நா­டகா வனத்­து­றை­யால் தமி­ழர்­கள் சுட்­டுக் கொல்­லப்­பட்ட சம்­ப­வம் எல்லை மாவட்­டங்­க­ளில் பதற்­றத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. மரி­ய­மங்­க­லத்­தைச் சேர்ந்த பெஞ்­ச­மின் என்­ப­வ­ரின் மகன் மகி­மை­தாஸ்   காய­ம­டைந்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">“வனத்­துறை அதி­கா­ரி­கள் சொல்­வது அனைத்­தும் முரண்­பா­டாக உள்­ளது. அவர்­க­ளது தரப்­பில் குள­று­ப­டி­கள் உள்­ளன. துப்­பாக்­கிச் சூடு நடத்­து­வ­தற்கு 
எந்­தக் கார­ண­மும் இருக்­க­வில்லை. இதற்கு உயர் அதி­கா­ரி­கள் அனு­மதி அளிக்­க­வில்லை,” என்று ஹன்­னூர் எம்.எல்.ஏ. மஞ்­சு­நாத் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் 
கூறி­னார். இதற்கு கர்­நா­டக அர­சின் பதில் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘‘இது ஒரு என்­க­வுன்­டர் சம்­ப­வம்” என கர்­நா­டக வனத்­துறை அமைச்­சர் 
ராம­லிங்கா ரெட்டி சொல்லி இருக்­கி­றார். அப்­ப­டி­யா­னால் அவர்­கள் குற்­ற­வா­ளி­கள் என்று முடி­வெ­டுத்து சுடச் சொன்ன அதி­காரி யார்? கர்­நா­டக ஆட்சி மேலி­டத்­தின் அனு­ம­தி­யு­டன் தான் இக்­கொலை நடந்­ததா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஹன்­னூர் எம்.எல்.ஏ மஞ்­சு­நாத், மாவட்­டப் பொறுப்பு அமைச்­சர் புட்­ட­ரங்கா ஷெட்டி ஆகி­யோர், ‘’அதி­காலை நேரத்­தில் என்­க­வுன்­ட­ருக்­கான தேவை ஏன் வந்­தது?’’ என்று கேள்வி எழுப்பி இருப்­ப­தாக கர்­நா­டக மாநில செய்தி நிறு­வ­னங்­கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. வனத்­துறை அமைச்­சர் சொல்­வ­தும், மாவட்­டப் பொறுப்பு அமைச்­சர் சொல்­வ­தும் முரண்­பா­டாக உள்­ளதே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இவ்­வ­ள­வுக்­குப் பிற­கும் தமிழ்­நாட்டை ஆளும் அரசு கண்ணை 
மூடி, கையைக் கட்டி மவு­ன­மாக ஏன் இருக்­கி­றது? கர்­நா­டக மாநில காங்­கி­ரஸ் அர­சைப் பார்த்து பயமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘‘கர்­நா­ட­கா­வில் 3 தமி­ழர்­கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட சம்­ப­வத்­தில் தமிழ்­நாடு அரசு அதி­கா­ரப்­பூர்­வ­மாக எந்­தக் கண்­ட­னத்­தை­யும் வெளி யிடா­மல் இருப்­பது அதிர்ச்சி அளிக்­கி­றது” என்று எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி சொல்லி இருக்­கி­றார். ‘‘சட்­டப்­பே­ர­வை­யில் இந்த விவ­கா­ரம் தொடர்­பாக  பதி­ல­ளித்த அமைச்­ச­ரும், கர்­நா­ட­கத்­தின் Version–ஐயே எதி­ரொ­லித்­தார். தமிழ்­நாடு அரசு சார்­பிலோ, 
முத­ல­மைச்­சர் சார்­பிலோ கர்­நா­டக முத­ல­மைச்­ச­ரி­டம் விளக்­கம் கேட்டு எந்­த­வொரு கடி­த­மும் இது­வரை எழு­தப்­ப­ட­வில்லை. த.வெ.க. தலை­வர் என்­கிற நிலை­யில் பட்­டும் படா­மல் ஒரு அறிக்­கையை மட்­டும் வெளி­யிட்டு இருக்­கி­றார்­கள்.” என்று விஜய் அர­சாங்­கத்­தின் கோழைத்­த­னத்தை அம்­ப­லப்­ப­டுத்தி இருக்­கி­றார் எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சட்­ட­ச­பை­யில் இது­தொ­டர்­பாக எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி கேட்­ட­போது, அமைச்­சர் நிர்­மல்­கு­மா­ரால் ஒழுங்­கான பதி­லைச் சொல்ல முடி­ய­ வில்லை. ‘‘கர்­நா­டக அரசு உரிய விசா­ரணை நடத்தி வரு­கி­றது. கர்­நா­டக அரசு உரிய விசா­ரணை நடத்தி வரு­வ­தால் அதில் குறுக்­கி­டத் தேவை­யில்லை”  என்று சொல்­வ­தற்கு தமிழ்­நாட்­டில் அமைச்­சர் பதவி எதற்கு? கர்­நா­ட­கா­வில் வேறு வேலைக்கு போய் விட­லாமே?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">மூவர் கொலை குறித்து தேசிய மனித உரி­மை­கள் ஆணை­யத்­தில் புகார் அளிக்க வேண்­டும் என்ற கோரிக்­கையை நிரா­க­ரித்­தது த.வெ.க. அரசு. சி.பி.ஐ. விசா­ரணை வேண்­டும் என்ற எதிர்க்­கட்­சி­க­ளின் கோரிக்­கை­யை­யும் நிரா­க­ரித்­தது த.வெ.க. அரசு. தமிழ்­நாட்­டில் எத்­த­கைய கேவ­ல­மான அரசு அமைந்­துள்­ளது என்­ப­தற்கு இது ஒரு எடுத்­துக்­காட்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">3 தமி­ழர்­கள் கொலை செய்­யப்­பட்­டதை கொலை வழக்­காக பதிவு செய்து சி.பி.ஐ. விசா­ரிக்க வேண்­டும். தொடர்­பு­டைய அனைத்து அதி­கா­ரி­க­ளும் பணி நீக்­கம் செய்­யப்­பட வேண்­டும். மூவர் குடும்­பத்­துக்கு உட­ன­டி­யாக கர்­நா­டக அரசு இழப்­பீடு வழங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கர்­நா­டக காங்­கி­ரஸ் அர­சுக்கு த.வெ.க. அரசு எச்­ச­ரிக்கை விடுக்க 
வேண்­டும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>