<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="20/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,32,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 20 2026 03:55:36 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260820T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="20082026-TRY-08" position.sequence="08" ex-ref="20082026-TRY-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">20.08.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">வேடசந்தூர் – வடமதுரை சாலையை நான்கு வழிச்சாலை ஆக்குவீர்! திருமுக்கூடலூரிலிருந்து நீரேற்றுத் திட்டம் மூலம்</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="46">திண்டுக்கல் மாவட்டக் குளங்களில் நீர் நிரப்பி நீர்மட்டம் உயர்த்துக! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">சட்டப்பேரவையில் – வேடசந்தூர் த.சாமிநாதன் கோரிக்கை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup637302_08_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626431_08_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626360_08_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="D.SamynathanC_08_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சென்னை, ஆக.20–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சட்­டப்­பே­ர­வை­யில் வேட­சந்­தூர் தொகுதிகழக உறுப்­பி­னர் த.சாமி­நா­தன், வேட­சந்­தூ­ரி­லி­ருந்து வட மதுரை வரை இரு­வ­ழிச்­­சாலை­களை நான்கு வழிச் சாலை­யாக மாற்­று­வீர் என்­றும் திரு­முக்­கூ­ட­லூ­ரி­லி­ருந்து நீரேற்­றுத் திட்­டம் மூலம் திண்­டுக்­கல் மாவட்­டத்­தி­லுள்ள ஆயி­ரக்­க­ணக்­கான குளங்­களை நிரப்பி நீர்­மட்­டத்தை உயர்த்த வேண்­டும் என்­றும் பல்­வேறு கோரிக்­கை­களை வைத்து ஆற்­றிய உரை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பேர­வைத் தலை­வர் அவர்­களே, சமூக நீதி, சமத்­து­வம், பெண் கல்வி, பெண் உரிமை என்று இந்­தத் தமி­ழர்­கள் தலை­நி­மிர்ந்து வாழ்­வ­தற்கு தன் வாழ்­நாள் முழு­வ­தும் போரா­டிய தந்தை பெரி­யார், தந்தை பெரி­யா­ரின் எண்­ணங்­க­ளை­யெல்­லாம் சட்­ட­மாக்கி, தமி­ழர்­கள் தலை­நி­மிர்ந்து வாழ தன் ஆட்­சி­யைப் பயன்­ப­டுத்­திய பேர­றி­ஞர் அண்ணா அவர்­களை வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தன்­னு­டைய 80 ஆண்­டு­கால பொது­வாழ்­வில் 20 ஆண்­டு­கா­லம் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ராக இருந்து, எண்­ணற்ற திட்­டங்­க­ளைத் தமிழ்­நாட்­டிற்கு வழங்கி, தமி­ழி­லி­ருந்து கணினி வரை அனைத்­துத் திட்­டங்­க­ளை­யும் தமிழ்­நாட்­டிற்­குக் கொண்­டு­வந்து, தமிழ்­நாட்டை ஒரு முன்­னணி மாநி­ல­மாக மாற்­றி­ய­மைத்த எங்­கள் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் இருக்­கும் திசை­நோக்கி வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">முதல்­வ­ருக்­கெல்­லாம் முதல்­வர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">எங்­கள் தலை­வர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­தச் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் எனக்கு போட்­டி­யிட வாய்ப்­ப­ளித்து, என்  வெற்­றிக்­காக வந்து பிரச்­சா­ரம் செய்த எங்­கள் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­வர் முன்­னாள் முத­ல­மைச்­சர், தன்­னு­டைய திட்­டங்­க­ளால் தமி­ழக மக்­க­ளின் இதய சிம்­மா­ச­னத்­தில் நீங்கா இடம் பிடித்­தி­ருக்­கின்ற எங்­கள் தலை­வர் முதல்­வர்­க­ளுக்­கெல்­லாம் முதல்­வ­ராக தன்­னு­டைய ஆட்­சிக்­கா­லத்தை மாற்­றிக் காட்­டி­ய­வர் (மேசை­யைத் தட்­டும் ஒலி) உதா­ரண புரு­ஷ­ராக இருந்த எங்­கள் தலை­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்­கும், எங்­க­ளு­டைய இளந்­த­லை­வர் ஒற்­றைச் செங்­கல்­லால் ஓர் ஆட்­சியை மாற்­றிய மகான் வெற்றி வீரர், எங்­க­ளு­டைய எதிர்க்­கட்­சித் தலை­வர் சகோ­த­ரர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்­கும், (மேசை­யைத் தட்­டும் ஒலி) இந்த மாமன்­றத்­திற்கு வரு­வ­தற்கு உறு­து­ணை­யாக எனக்கு இருந்த முன்­னாள் அமைச்­ச­ரும், கழ­கத்­தின் துணைப் பொதுச் செய­லா­ள­ரு­மான அண்­ணன் இ.பெரி­ய­சாமி அவர்­க­ளுக்­கும், எதிர்க்­கட்­சித் துணைத் தலை­வர் முன்­னாள் அமைச்­சர் அண்­ணன் கே.என்.நேரு அவர்­க­ளுக்­கும், எதிர்க்­கட்சி கொறடா அண்­ணன் எ.வ.வேலு அவர்­க­ளுக்­கும், முன்­னாள் அமைச்­சர் அண்­ணன் எம்.ஆர்.கே.பன்­னீர்­செல்­வம் அவர்­க­ளுக்­கும், என்­னு­டைய வெற்­றிக்கு உறு­து­ணை­யாக இருந்த மாவட்­டக் கழ­கத்­தின் செய­லா­ள­ரும், முன்­னாள் அமைச்­ச­ரு­மான அர.சக்­க­ர­பாணி அவர்­க­ளுக்­கும், எங்­க­ளு­டைய மாவட்­டக் கழ­கத்­தின் செய­லா­ளர் திண்­டுக்­கல் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஐ.பி. செந்­தில் குமார் அவர்­க­ளுக்­கும், என்னை பெரு­வா­ரி­யான வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­ய­டை­யச் செய்த பெரு­மை­மிகு வேட­சந்­தூர் வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்­கும், எனது வெற்­றிக்­குப் பாடு­பட்ட திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மாவட்ட, ஒன்­றிய, கிளைக் கழக நிர்­வா­கி­க­ளுக்­கும், பாக­நிலை முக­வர்­க­ளுக்­கும், பாக­நிலை உறுப்­பி­னர்­க­ளுக்­கும், எனது தொகு­தி­யில் இருக்­கின்ற இளை­ஞர்­க­ளுக்­கும் குறிப்­பாக Kabaddi, Cricket, Volleyball போன்ற விளை­யாட்டு வீரர்­க­ளுக்­கும், சமூக அமைப்­பு­க­ளுக்­கும், எங்­க­ளது சொந்­தங்­க­ளுக்­கும், நான் இந்த மாமன்­றத்­தில் நின்று கொண்­டி­ருப்­ப­தற்கு கார­ண­மாக இருக்­கின்ற எனது தந்தை பி. தங்­க­ராஜ் அவர்­க­ளுக்­கும், என்­னு­டைய தாயார் சரஸ்­வ­தி­யம்­மாள் அவர்­க­ளுக்­கும், எனக்கு கல்வி கொடுத்த என்­னு­டைய மாமா எஸ்.ஆர். பொன்­னு­சாமி, கே.எஸ். சகா­தே­வன் உள்­ளிட்ட அனை­வ­ருக்­கும், நண்­பர்­க­ளுக்­கும், பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்­கும், ஊட­வி­ய­லா­ளர்­க­ளுக்­கும் எனது மன­மார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பேர­வைத் தலை­வர் அவர்­களே, வரு­வாய் மற்­றும் பேரி­டர் மேலாண்­மைத் துறை மற்­றும் மருத்­து­வம், மருத்­து­வக் கல்வி மற்­றும் குடும்ப நலத் துறை ஆகி­ய­வற்­றின் மீதான மானி­யக் கோரிக்­கை­க­ளில் பேசு­வ­தற்கு முன்­பாக என்­னு­டைய தொகுதி சம்­பந்­தப்­பட்ட ஓர் இத­யப் பிரச்­சி­னை­யைப் பேசி மானி­யக் கோரிக்­கை­க­ளின்­மீது பேசு­வ­தற்கு உங்­க­ளி­டம் அனு­மதி கேட்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வறட்­சி­யான வேட­சந்­தூர் தொகு­தியை வள­மான வேட­சந்­தூர் தொகு­தி­யாக மாற்­று­வ­தற்கு, காவி­ரி––­அ­ம­ரா­வதி ஆறு­கள் இணை­கின்ற திரு­முக்­கூ­ட­லூ­ரி­லி­ருந்து நீரேற்று திட்­டத்­தின் மூல­மாக நீரைக் கொண்­டு­வந்து, கரூர் மாவட்­டத்­தில் இருக்­கின்ற கரூர், –அர­வக்­கு­றிச்சி, –கிருஷ்­ண­ரா­ய­பு­ரம், திண்­டுக்­கல் மாவட்­டத்­தில் இருக்­கின்ற வேட­சந்­தூர், ஒட்­டன்­சத்­தி­ரம், ஆத்­தூர், திண்­டுக்­கல், –நத்­தம் ஆகிய 8 சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் இருக்­கின்ற ஆயி­ரக்­க­ணக்­கான குளங்­க­ளில் நீரை நிரப்­பு­வ­தற்கு ஊராட்­சித் துறைக்­கும், நீர்­வ­ளத் துறைக்­கும் சொந்­த­மான குளங்­க­ளில் நீரை நிரப்பி, நிலத்­தடி நீர்­மட்­டத்தை உயர்த்தி, விவ­சா­யி­க­ளின் வாழ்­வா­தா­ரம் பெரு­கு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் பற்­றிய அறிக்­கையை தயா­ரிப்­ப­தற்­காக ரூ.97 இலட்­சம் கடந்த திரா­விட மாடல் ஆட்­சி­யில் ஒதுக்கி, அந்­தத் திட்­டம் சாத்­தி­யம் என 20–.8–.2025 அன்று அர­சுக்கு அறிக்கை அனுப்­பப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">5,500 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில், அத்­திக்­க­டவு– – அவி­னாசி திட்­டத்­தைப் போன்று இந்­தத் திட்­டத்தை நிறை­வேற்ற, இரண்டு கட்­டங்­க­ளாக இந்­தத் திட்­டம் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 1,750 கோடி ரூபா­யில் முதற்­கட்­ட­மா­க­வும், 3,750 கோடி ரூபா­யில் இரண்­டா­வது கட்­ட­மா­க­வும் நிறை­வேற்ற இந்­தத் திட்­டம் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இந்­தத் திட்­டத்தை நிறை­வேற்­றி­னால், அத்­திக்­க­ட­வு–­அ­வி­னாசி திட்­டத்­தில் எப்­படி விவ­சா­யி­கள் பல­ன­டைந்து அந்­தப் பகு­தி­க­ளெல்­லாம் வள­மான பகு­தி­க­ளாக மாறி­யதோ, அதே­போல், இந்த உபரி நீரைக் கொண்டு வந்து எங்­கள் ஊரி­லி­ருக்­கின்ற குளங்­க­ளை­யெல்­லாம் நிரப்­பும்­போது, இரண்டு மாவட்­டங்­க­ளில் இருக்­கிற 30 இலட்­சத்­திற்­கும் மேற்­பட்ட மக்­கள் பய­ன­டை­வார்­கள்; விவ­சா­யம் பெரு­கும்; இளை­ஞர்­கள் வேலை­வாய்ப்பு பெறு­வார்­கள். தற்­போது எங்­கள் ஊரி­லி­ருந்து வேலை­வாய்ப்பு தேடி, வெளி மாவட்­டங்­க­ளைத் தாண்டி, வெளி மாநி­லங்­க­ளுக்கு சென்று கொண்­டி­ருக்­கி­றார்­கள். அந்த நிலை­மை­யெல்­லாம் மாறி, உள்­ளூ­ரில் வேலை­வாய்ப்பு பெறு­வ­தற்­கும், எங்­கள் ஊரை வள­மான பகு­தி­யாக மாற்­று­வ­தற்­கும், இந்­தத் திட்­டத்தை நிறை­வேற்­றித் தர வேண்­டு­மென்று  பேர­வைத் தலை­வர் அவர்­க­ளின் வாயி­லாக அன்­போடு கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தனி­யார் பெய­ரில் பட்டா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி மட்­டு­மல்ல, தமிழ்­நாடு முழு­வ­தும் இருக்­கின்ற ஒரு பிரச்­சினை. ஒரு ஊர் இருக்­கி­றது; அந்த ஊருக்கு செல்­கின்ற வழி என்­பது காலங்­கா­ல­மாக மக்­க­ளால் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. ஆனால், அந்த வழிக்கு தனி­யார் பெய­ரில் பட்டா இருக்­கி­றது. மக்­கள்­தான் பயன்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்; ஆனால் தனி­யார் பெய­ரில் பட்டா இருக்­கின்ற கார­ணத்­தி­னால் அந்த இடத்­திற்கு அரசு வளர்ச்­சித் திட்­டங்­களை, அதா­வது சாலை போன்ற வளர்ச்­சித் திட்­டங்­களை செய்ய முடி­ய­வில்லை. எங்­க­ளு­டைய வேட­சந்­தூர் தொகு­தி­யில், கோவி­லூர் பஞ்­சா­யத்­தில், குறிக்­கோ­டாங்­கி­பட்டி பிரிவு முதல் நவக்­கு­ளம் வரை செல்­லு­கின்ற சாலை; உதா­ர­ண­மாக சொல்­கி­றேன், எங்­கள் தொகு­தி­யிலே புத்­தூர் பஞ்­சா­யத்­தில் இன்­னும் பல ஊர்­கள் இருக்­கின்­றன. எல்லா இடங்­க­ளி­லும் இது­போன்ற பிரச்­சினை இருக்­கும். இதை நிலம் கைய­கப்­ப­டுத்­தும் திட்­டத்­தின் மூல­மா­கவோ அல்­லது பேச்­சு­வார்த்­தை­யின் மூல­மா­கவோ நிலத்­தைக் கைய­கப்­ப­டுத்தி, அரசு வளர்ச்­சித் திட்­டங்­க­ளைச் செய்ய ஆவனசெய்ய வேண்­டு­மென்று பேர­வைத் தலை­வர்அவர்­க­ளின் வாயி­லாக கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மருத்­து­வத் துறை­யைப் பொறுத்­த­வ­ரை­யில், எங்­க­ளு­டைய தலை­வர், கலை­ஞர் அவர்­கள் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போ­து­தான், ‘மாவட்­டத்­திற்கு ஒரு மருத்­து­வ­மனை’ என்­கிற கொள்கை முடிவை எடுத்­தார்­கள் என்­பதை இந்­தப் பேர­வைக்­குத் தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) அதே­போல், அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யின்­போது 11 மருத்­து­வக் கல்­லூ­ரி­கள் கொண்­டு­வந்­தி­ருந்­தா­லும், எங்­க­ளு­டைய 2021–2026 ஆம் ஆண்­டு­க­ளில் திரா­விட நாய­க­ரின் ஆட்­சி­யில்­தான் அனைத்து மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளுக்­கும் கட்­ட­டங்­கள் கட்­டப்­பட்டு, அனைத்து உப­க­ர­ணங்­க­ளும் வழங்­கப்­பட்­டது என்­பதை இந்த மாமன்­றத்­திற்­குத் தெரி­வித்­துக்­கொள்ள கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பேர­வைத் தலை­வர் அவர்­களே, திண்­டுக்­கல் மாவட்ட மருத்­து­வ­மனை, அரசு மருத்­து­வ­ம­னை­யாக மாறிய கார­ணத்­தி­னால், பழனி மருத்­து­வ­ம­னையை மாவட்ட மருத்­து­வ­ம­னை­யாக மாற்றி, 100 கோடி ரூபாய் அதற்­காக செலவு செய்து, அந்த மருத்­து­வ­ம­னை­யில் அனைத்து வசதி, வாய்ப்­பு­க­ளை­யும் ஏற்­ப­டுத்­திக் கொடுத்த அரசு, எங்­கள் திரா­விட நாய­க­ரின் அரசு, எங்­கள் முன்­னாள் முத­ல­மைச்­சர், முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் என்­பதை இந்த அவை­யில் நான் பதிவு செய்ய விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">என்­னு­டைய வேட­சந்­தூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் ரூபாய் 5¾ கோடிக்கு கட்­ட­டங்­கள் கட்டி, அதனை முன்­னாள் துணை முத­ல­மைச்­சர் அவர்­கள் வந்து திறந்து வைத்­தார்­கள். தற்­போது 56 படுக்­கை­கள் கொண்ட இந்த மருத்­து­வ­ம­னைக்கு உள்­நோ­யா­ளி­கள் பிரி­விற்கு கட்­ட­டங்­கள் கட்டி, நாற்­பது ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. எனவே, கட்­ட­டங்­கள் கட்­டிக் கொடுத்து, CT scan machine உள்­ளிட்ட மருத்­துவ உப­க­ர­ணங்­கள் வழங்க வேண்­டு­மென்று அன்­போடு கேட்­டுக்­கொள்­கி­றேன்.என்­னு­டைய தொகு­தி­யி­லி­ருக்­கின்ற அனைத்துஆரம்ப சுகா­தார நிலை­யங்­க­ளை­யும், மேம்­ப­டுத்­தப்­பட்ட ஆரம்ப சுகா­தார நிலை­யங்­க­ளாக மாற்றி, மருத்­துவ உப­க­ர­ணங்­கள் அமைத்து கொடுக்க வேண்­டு­மென்று தங்­கள் வாயி­லாக  மருத்­து­வம், மருத்­து­வக் கல்வி மற்­றும் குடும்ப நலத் துறை அமைச்­சர் அவர்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">பட்டா வழங்­கி­ய­தில் மாபெ­ரும் சாதனை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வரு­வாய்த் துறை மானி­யக் கோரிக்­கை­யின் மீது எனக்கு பேச வாய்ப்­ப­ளித்த உங்­க­ளுக்கு என் மன­மார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். இந்த உல­கத்­தில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்­ப­து­தான் மனி­தக் குலத்­தின் அடிப்­படை தேவை. அந்­த­வ­கை­யில், கடந்த காலங்­க­ளில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் எப்­பொ­ழு­தெல்­லாம் ஆட்­சி­யில் இருந்­ததோ, அப்­போ­தெல்­லாம் இல­வச வீட்­டு­ம­னைப் பட்­டாக்­களை முடிந்­த­ள­விற்கு வழங்­கி­யி­ருக்­கி­றோம். 2021–2026–ஆம் ஆண்­டு­க­ளில் திரா­விட நாய­க­ரின் ஆட்­சி­யில் 23 இலட்­சத்து 56 ஆயி­ரத்து 653 பட்­டாக்­களை வழங்கி, மாபெ­ரும் சாத­னை­யைச் செய்த அரசு, முன்­னாள் முத­ல­மைச்­சர்,  அண்­ணன் தள­பதி அவர்­க­ளு­டைய அரசு என்­பதை யாரும் மறந்­து­வி­டக்­கூ­டாது. (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல், சென்­னை­யில் பல்­வேறு இடர்­பா­டு­க­ளைத் தாண்டி 1 இலட்­சத்து 42 ஆயி­ரத்து 588 பட்­டாக்­களை வழங்­கி­யி­ருக்­கி­றார்­கள். மாந­க­ராட்சி என்­றால் 16 கி.மீ. தாண்­டி­யும், நக­ராட்சி என்­றால் 8 கி.மீ. தாண்­டி­யும் பட்டா வழங்­கு­கின்ற பணியை இந்த அரசு தொடர்ந்து மேற்­கொள்­ளுமா? 38 மாவட்­டங்­கள், 317 வட்­டங்­க­ளில் எவ்­வ­ளவு மனுக்­கள் பெறப்­பட்­டி­ருக்­கின்­றன? அனை­வ­ருக்­கும் பட்டா வழங்­கு­கிற திட்­டம், road map இந்த அர­சி­டம் உள்­ளதா என்­பதை  பேர­வைத் தலை­வர் அவர்­க­ளின் வாயி­லாக தெரிந்­து­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல, கிரா­மங்­க­ளில் குறிப்­பா­கப் பட்­டி­ய­லின மக்­கள் வசிக்­கின்ற பகு­தி­க­ளில் ஒரு குடும்­பம் இருக்­கி­றது. ஒரு குடும்­பத் தலை­வர், அவ­ருக்கு திரு­ம­ண­மாகி இரண்டு குழந்­தை­கள் பிறக்­கின்­றன. அந்த இரண்டு குழந்­தை­க­ளுக்­கும் வயது வந்­த­வு­டன், அவர்­க­ளும் திரு­ம­ணம் செய்து கொண்டு, மொத்­தம் மூன்று குடும்­பங்­க­ளும் ஒரே அறை­யில் வசிக்­கின்ற நிலைமை கிரா­மங்­க­ளில் இருக்­கி­றது. நாங்­கள் கிரா­மங்­க­ளுக்­குச் செல்­லும்­போ­தெல்­லாம், பட்டா கோரி மனுக்­கள் கொடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். தமிழ்­நாடு முழு­வ­தும் இருக்­கின்ற இந்­தப் பிரச்­சி­னைக்கு பட்­டி­ய­லின மக்­கள் வாழ்­கின்ற பகு­தி­க­ளில் பட்டா கொடுப்­ப­தற்கு அரசு முன்­வ­ருமா என்­ப­தைத் தெரிந்­து­கொள்ள விரும்­பு­கி­றேன். எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் அர­சாணை எண் 97 மற்­றும் 205–இன்­படி முடிந்­த­ள­ விற்கு பட்­டாக்­களை வழங்­கி­யி­ருக்­கி­றோம். மந்தை புறம்­போக்கு, மேய்க்­கால் புறம்­போக்கு ஆகி­ய­வற்றை கொடுக்­கக்­கூ­டாது என்று உயர் நீதி­மன்ற ஆணை இருக்­கி­றது. ஆனால், அர­சுக்கு மற்ற பயன்­பா­டு­க­ளுக்­காக தொழிற்­சா­லை­க­ளுக்­கா­கவோ தொழிற்­பேட்­டை­க­ளுக்­கா­கவோ நிலம் தேவைப்­ப­டும்­போது அதை எடுப்­ப­தற்கு வேறு­வொரு இடத்­தில் அதற்கு ஈடான நிலத்­தைக் கொடுத்­து­ விட்டு, எடுக்­கின்ற வழி­முறை என்­பது இருக்­கின்­றது. ஏழை­யெ­ளிய மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைப் பெருக்­க­வும், அவர்­க­ளுக்கு வீடு கட்டி கொடுக்­க­வும் இதே­போன்ற வழியை பயன்­ப­டுத்தி உயர் நீதி­மன்ற ஆணையை பெற்று, எங்­கெல்­லாம் வாய்ப்­பு­கள் இருக்­கி­றதோ அங்­கெல்­லாம் மந்தை புறம்­போக்கு,மேய்க்­கால் புறம்­போக்கு இடங்­க­ளி­லெல்­லாம் பட்­டாக்­கள் வழங்க இந்த அரசு முன்­வ­ருமா என்­ப­தைத் தெரிந்­து­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சமூக பாது­காப்பு ஓய்­வூ­தி­யத் திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சமூக பாது­காப்பு ஓய்­வூ­தி­யத் திட்­டம் என்­பது மற்ற திட்­டங்­க­ளைப் போன்­றது அல்ல. முதி­யோர்­க­ளா­க­வும், மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளா­க­வும், கைம்­பெண்­க­ளா­க­வும் இருப்­ப­வர்­க­ளி­னு­டைய மரி­யா­தை­யா­கத்­தான் பார்க்க வேண்­டுமே தவிர, கருணை என்ற அடிப்­ப­டை­யில் இதை பார்க்­கக் கூடாது. அவர்­கள் கண்­ணி­யத்­து­டன் வாழ­வும், மரி­யா­தை­யு­டன் வாழ­வும் இந்த சமூக பாது­காப்பு ஓய்­வூ­தி­யத் திட்­டம் என்­பது மிக முக்­கி­ய­மா­னத் திட்­டம் என்று நம்­மு­டைய புகழ்­பெற்ற பொரு­ளா ­தார அறி­ஞர் அமர்த்­தியா சென் அவர்­கள் கூறி­யி­ருக்­கி­றார்­கள். சமூக பாது­காப்­புத் திட்­டத்தை விரி­வாக்­கு­வது என்­பது சமூக நீதி­யின் அங்­கம் என்­பதை அறி­ஞர் Jean Dreze அவர்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். காலத்­திற்­கேற்ப இந்த நிதியை உயர்த்த வேண்­டுமே தவிர, ஒரு கால­மும் இந்த நிதியை குறைக்­கக் கூடாது. 2021ஆம் ஆண்டு திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்­சிக்கு வந்­த­போது, 4,306.76 கோடி­யாக இருந்த சமூக பாது­காப்­புத் திட்ட நிதி என்­பது 2026 ஆம் ஆண்டு நாங்­கள் ஆட்­சி­யி­லி­ருந்து வெளியே செல்­லும்­போது 5,463 கோடி­யாக, ஆண்­டொன்­றிற்கு கிட்­டத்­தட்ட 240 கோடி அள­விற்கு உயர்த்தி வழங்­கி­யி­ருக்­கி­றோம். இப்­பொ­ழுது நீங்­கள் உங்­கள் ஆட்­சி­யில் 5,462 கோடி என்று ஒரு கோடி குறைத்து குறிப்­பிட்­டி­ருக்­கி­றீர்­கள். முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் பாணி­யில் சொல்­வ­தென்­றால், தாய்­மார்­க­ளுக்­கும், சகோ­தர சகோ­த­ரி­க­ளுக்­கும் 3,000 ரூபாய் நிதி கொடுக்­கி­றோம் என்று தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தின் தேர்­தல் அறிக்­கை­யில் இருக்­கி­றது. 3,000 ரூபாய் மாற்­றுத்­தி­ற­னாளி உத­வித்­தொகை, முதி­யோர் உத­வித்­தொகை, கைம்­பெண் உத­வித்­தொகை ஆகி­ய­வற்­றை­யெல்­லாம் கொடுக்­கப்­போ­கி­றீர்­களா? அல்­லது இது தேர்­தல் வாக்­கு­று­தி­யோடு நின்­று­வி­டுமா? அல்­லது ஏற்­கெ­னவே இருக்­கின்ற பய­னா­ளி­க­ளின் எண்­ணிக்­கையை குறைக்­கப் போகி­றீர்­களா? என்­பதை  பேர­வைத் தலை­வர் அவர்­கள் வாயி­லா­கத் தெரிந்­து­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">கழக ஆட்சி வழங்­கிய பேரி­டர் நிவா­ர­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பேரி­டர் மேலாண்மை நிதி­யும் ரூ.11,532 கோடி மட்­டுமே ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் பல்­வேறு புயல்­கள் வந்­தன. மிக்­ஜாம் புயல், பெஞ்­சால் புயல், டிட்வா புயல் எனப் பல்­வேறு புயல்­கள் வந்­த­போ­தும் எங்­க­ளு­டைய தலை­வர் முன்­னாள் முத­ல­மைச்­சர்  முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் 30 இலட்­சம் குடும்­பங்­ களுக்கு 6,000 ரூபா­யும், குறை­வா­கப் பாதிக்­கப்­பட்ட 15 இலட்­சம் குடும்­பங்­க­ளுக்கு ஆயி­ரம் ரூபா­யும் வழங்­கி­னார்­கள். பயிர் சேதத்­திற்கு 1,557.59 கோடி­யும், தோட்­டக்­க­லை­ யில் பாதிக்­கப்­பட்ட விவ­சா­யி­க­ளுக்கு ரூ.290.929 கோடி­யும், தடுப்­புச் சுவர்­கள் அமைப்­ப­தற்கு ரூ.1,375.59 கோடி­யும் வழங்­கி­னார்­கள். இந்த அரசு ஏற்­கெ­னவே வறட்­சிக்கு நிவா­ர­ணம் வழங்­க­வில்லை. இனி­மே­லா­வது வறட்­சிக்கு நிவா­ர­ணம் வழங்­குமா என்­பதை  பேர­வைத் தலை­வர் அவர்­கள் வாயி­லாக அறிந்­து­கொள்ள விரும்­பு­கி­றேன். (குறுக்­கீடு) ஒரே­யொரு point.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல திரா­விட மாடல் ஆட்­சி­யில் பத்­தி­ரப் பதி­வில் STAR 3.0 என்ற திட்­டத்தை எங்­க­ளு­டைய தலை­வர் அவர்­கள் ஜன­வரி மாதம் 23 ஆம் தேதி 2025–ஆம் ஆண்­டி­லேயே கொண்டு வந்­து­விட்­டார்­கள். அதில் காகி­த­மில்­லா­மல், நேரில் வரா­ம­லேயே பத்­தி­ரப் பதிவு செய்ய முடி­யும். அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­க­ளில் மறு பத்­தி­ரப் பதிவு செய்­தால், கள ஆய்வு இல்­லா­ம­லேயே ஆவ­ணங்­க­ளைத் திருப்­பித் தர முடி­யும். இது­மட்­டு­மின்றி, வில்­லங்­கச் சான்று உள்­ளிட்ட 18 சேவை­களை வழங்க முடி­யும் என்று ஜன­வரி மாதம் 23 ஆம் தேதி கொண்­டு­வந்த திட்­டத்­திற்கு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">10–5–2026–இல் ஆட்­சிக்கு வந்த இந்த அரசு தாங்­கள் கொண்­டு­வந்­த­தாக விளம்­ப­ரப்­ப­டுத்­து­வது தவறு. இது தவிர்க்­கப்­பட வேண்­டு­மென்று  பேர­வைத் தலை­வர் அவர்­கள் வாயி­லா­கத் தெரி­வித்­துக்­கொண்டு, இந்த நல்ல வாய்ப்­பினை வழங்­கிய உங்­க­ளுக்கு நன்றி தெரி­வித்து விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தொகு­திக் கோரிக்­கை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி அரசு மருத்­து­வ­ம­னை­யில் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, குஜி­லி­யம்­பாறை ஒன்­றி­யம், ஆர்.புதுக்­கோட்டை ஊராட்சி, காள­க­வுண்­டன்­பட்­டி­யில் உள்ள துணை  சுகா­தார நிலை­யத்தை மேம்­ப­டுத்­தித் தர வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வட­ம­துரை ஒன்­றி­யம், குளத்­தூர் ஊராட்­சி­யில், அரசு துணை சுகா­தார நிலை­யத்தை ஆரம்ப சுகா­தார நிலை­ய­மாக தர­மு­யர்த்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, அய்­ய­லூர் ஆரம்ப சுகா­தார மருத்­து­வ­ம­னையை மேம்­ப­டுத்­தப்­பட்ட மருத்­து­வ­ம­னை­யாக தர­மு­யர்த்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வேட­சந்­தூர்–­வ­ட­ம­துரை வரை உள்ள இரு­வ­ழிச் சாலை­களை நான்கு வழிச்­சா­லை­யாக மாற்­றித் தர வேண்­டும். வட­ம­துரை நான்கு வழிச்­சா­லை­யில் கால்­வாய் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, எரி­யோடு பேரூ­ராட்சி, 3–வது வார்டு, குண்­டாம்­பட்டி மேல்­நி­லைத்­தொட்­டி–­ப­ழைய மோட்­டார் ரூம் வரை தார்ச் சாலை­களை மேம்­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, எரி­யோடு பேரூ­ராட்சி, 11–வது வார்டு, திண்­டுக்­கல்–­க­ரூர் சாலை எரி­யோடு பேருந்து நிறுத்­தம்–­ கொ­டிக்­கால்­பட்டி பிரிவு, 2–வது வார்டு, மற­வ­பட்டி அட­மந்தை அங்­கன்­வா­டி–­இ­ர­யில்வே கிரா­சிங், 15–வது வார்டு, குருக்­க­ளை­யன்­பட்டி திண்­டுக்­கல் கரூர் சாலை–­மோட்­டார் ரூம், 8–வது வார்டு, மணி­ய­கா­ரன்­பட்­டி–­மத்­த­னம்­பட்டி, அய்­ய­லூர் பேரூ­ராட்சி, மொடக்­கு­பட்­டி–­தங்­க­மா­பட்டி அரசு மேல்­நி­லைப் பள்ளி, வட­ம­துரை பேரூ­ராட்சி, 7–வது வார்டு, தும்­ம­லக்­குண்­டு–­சக்­க­ர­வர்த்தி நகர் ஆகிய தார்ச் சாலை­களை மேம்­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, எரி­யோடு பேரூ­ராட்சி, 15–வது வார்டு, இரா­ம­சாமி நகர், வட­ம­துரை பேரூ­ராட்சி, 3–வது வார்டு, மேட்­டுப்­பட்டி, 12–வது வார்டு, செங்­கு­ளத்­துப்­பட்டி ஆகிய இடங்­க­ளில் 30,000 லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட மேல்­நி­லைத் தொட்டி அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வட­ம­துரை பேரூ­ராட்சி, 1–வது வார்டு, ஆதம்ஸ் நக­ரில் தார் சாலை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வட­ம­துரை பேரூ­ராட்சி, 11–வது வார்டு, ஊராட்சி ஒன்­றிய அலு­வ­ல­கம்–இ.பி.காலணி மெயின்­ரோடு, 2–வது வார்டு, குப்­பை­கி­டங்­கு–­வ­ட­ம­துரை மெயின்­ரோடு வரை உள்ள தார் சாலை­களை மேம்­ப­டுத்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">புதிய பேருந்து நிலை­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வட­ம­துரை பேரூ­ராட்­சி­யில், புதிய பேருந்து நிலை­யம் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, அய்­ய­லூர் பேரூ­ராட்சி, அய்­ய­லூர் இர­யில்வே கேட்–­க­ளர்­பட்டி, பாலத்­தோட்­டம்–­கி­ணத்­துப்­பட்டி, சந்­தை­பேட்டை நேதாஜி நகர், கோம்­பை–­தெற்கு முடக்கு வரை உள்ள தார்ச் சாலை­களை மேம்­ப­டுத்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, அய்­ய­லூர் பேரூ­ராட்சி, 7–வது வார்டு, சந்­தைப்­பேட்­டை­யில் 60,000 லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட மேல்­நி­லைத் தொட்டி அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் சட்­ட­மன்­றத் தொகுதி, அய்­ய­லூர் பேரூ­ராட்சி, 11–வது வார்டு, கஸ்பா அய்­ய­லூர், 1–வது வார்டு, S.K. நகர் ஆகிய இடங்­க­ளில் 30,000 லிட்­டர் கொள்­ள­ளவு கொண்டமேல்­நி­லைத்­தொட்டி அமைத்­துத் தர வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வேட­சந்­தூர் ஒன்­றி­யம், இரா­ம­நா­த­பு­ரம் அரசு மேல்­நி­லைப் பள்­ளி–­பெ­ரு­மாள்­கோ­யில்­பட்டி வரை உள்ள தார் சாலை­களை மேம்­ப­டுத்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வேட­சந்­தூர் ஒன்­றி­யம், நத்­தப்­பட்டி ஊராட்­சி­யில், சமு­தா­யக் கூடம் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வேட­சந்­தூர் ஒன்­றி­யம், கோவி­லூர் ஊராட்சி தங்­கச்­சி­யம்­மா­பட்­டி–­க­ரு­த­னம்­பட்டி, மாரம்­பாடி ஊராட்சி, கோட்­டை­மந்­தை–­பெ­ரு­மாள்­கோ­யில்­பட்டி, வட­ம­துரை ஒன்­றி­யம், பிலாத்து ஊராட்சி, கம்­பி­ளி­யம்­பட்டி– பெத்­தப்­பட்டி, நாகம்­பட்டிஊராட்சி, சேனன்­கோட்­டை–­பெ­ரு­மாள்­க­வுண்­டன்­பட்டி வரை தார்ச் சாலை­களை மேம்­ப­டுத்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் சட்­ட­மன்ற தொகுதி, மாரம்­பாடி ஊராட்சி, கோட்­டை­மத்தை– சின்­ன­ழ­கன்­பட்டி, பாலப்­பட்டி ஊராட்சி, நர­சிங்­க­பு­ரம் தார்ச் சாலை­களை மேம்­ப­டுத்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, குஜி­லி­யம்­பாறை ஒன்­றி­யம், எஸ்.ஏ. சாலை–­வ­டு­கம்­பாடி, இரா­ம­நா­த­பு­ரம் காசி­பா­ளை­யம் சாலை–­கா­ள­க­வுண்­டன்­பட்டி, திருக்­கூர்­ணம் சாலை– பன்­னைப்­பட்டி, கணக்­க­பிள்­ளை­யூர்–­சுக்­கா­நத்­தம் வரை  தார் சாலை­களை மேம்­ப­டுத்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, குஜி­லி­யம்­பாறை ஒன்­றி­யம், உல்­லி­ய­கோட்டை சாலை– சி.அம்­மா­பட்டி, சேர்­வை­கா­ரன்­பட்­டி–­வ­ட­கம்­பாடி, சேர்­வை­கா­ரன்­பட்டி தலும்­பா­க­வுண்­ட­னூர்– மாங்­க­ள­க­வுண்­ட­னூர் வரை தார் சாலை­களை மேம்­ப­டுத்­தித் தர வேண்­டும். பாளை­யம் பேரூ­ராட்சி, எல்­லை–­கோ­முட்­டி­பட்டி, ஆர்.கோம்பை ஊராட்சி, புதூர் பிரிவு– அர­சன்­பூ­சா­ரி­க­ளம், வாணிக்­கரை ஊராட்சி, செங்­கு­ளத்­துப்­பட்டி இரா­ம­நா­யக்­க­னூர், வடு­கம்­பாடி, சாலை–­மால்­நா­யக்­க­னூர் வரை தார்ச் சாலை­களை மேம்­ப­டுத்­தித் தர வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, குஜி­லி­யம்­பாறை ஒன்­றி­யம், கோட்­டா­நத்­தம் ஊராட்சி, சேர்­வை­கா­ரன்­பட்­டி–­மங்­கா­க­வுண்­டன்­பட்டி இணைப்பு, கோட்­டா­நத்­தம்–­முத்­த­ழ­கு­பட்டி, வடு­கம்­பா­டி–­கா­ளப்­பட்டி, டி.கே. சாலை–­நே­ருஜி காலணி வரை தார் சாலை­களை மேம்­ப­டுத்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வட­ம­துரை ஊராட்சி, பாடி­யூர் ஒன்­றி­யம் கூட்­டாத்­து­பட்டி– மோளப்­பா­டி­யூர், சுக்­காம்­பட்டி ஊராட்சி, புதுப்­பட்­டி–­பூ­சா­ரிப்­பட்டி, கொம்­பே­றி­பட்டி ஊராட்சி, ஜங்­கால்­பட்­டி–­ம­லைப்­பட்டி, மோர்­பட்டி ஊராட்சி கோப்­பம்­பட்டி, கொம்­பே­றி­பட்­டி–­மம்­மா­ம­னி­யூர் வரை தார் சாலை­களை மேம்­ப­டுத்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வட­ம­துரை ஒன்­றி­யம், பாடி­யூர் ஊராட்சி மேற்கு தெரு­வில் 30,000 லிட்­டர் கொள்­ள­ளவு மேல் நிலைத்­தொட்டி அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">இணைப்­புச் சாலை மேம்­ப­டுத்­தல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் சட்­ட­மன்ற தொகுதி, அய்­ய­லூர் புத்­தூர் சாலை–­காக்­கா­ய­னூர் இணைப்புசாலை­களை மேம்­ப­டுத்த நில கைய­கப்­ப­டுத்­து­தல் சட்­டத்­தின்­கீழ் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வட­ம­துரை ஒன்­றி­யம், கொச­வ­பட்­டி–­எட்­டு­கு­ளத்­துப்­பட்டி, வேட­சந்­தூர் ஒன்­றி­யம், பெரு­மாள்­கோ­யில்­பட்­டி–­பி­டாரி அம்­மன் கோயில், இரா­ம­நா­த­பு­ரம் அரசு மேல்­நி­லைப்­பள்­ளி–­பெ­ரு­மாள்­கோ­யில்­பட்டி, குளத்­தூர் ஊராட்சி சுந்­த­ர­பு­ரி–­அ­ர­சம்­பட்டி வரை தார் சாலை­களை மேம்­ப­டுத்­தித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, குட­க­னாற்­றில் வேட­சந்­தூர் பேரூ­ராட்சி, பகு­தி­யில் ஆற்­றில் இரு­பு­ற­மும் 1 ½ கிலோ மீட்­டர் தூரம் வரை தடுப்­புச் சுவர், காக்­கா­தோப்­பு–­க­ருக்­காம்­பட்டி வரை உள்ள இரு வழிச்­சா­லையை நான்கு வழிச்­சா­லை­யாக மாற்­றித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வேட­சந்­தூர் பேரூ­ராட்சி, ஒட்­டன்­சத்­தி­ரம்–­வ­ட­ம­துரை சாலை300 மீட்­டர் மட்­டும் நில கைய­கப்­ப­டுத்­தும் சட்­டத்­தின்­கீழ் கைய­கப்­ப­டுத்தி நான்கு வழிச்­சா­லை­யாக மாற்றி அமைத்­துத் தர வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வட­ம­துரை ஊராட்சி ஒன்­றி­யம் தனி தாலு­கா­வாக அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வேட­சந்­தூர் பேரூ­ராட்சி, வெங்­க­டா­ச­லம் செட்­டி­யார் தெரு (வார்டு 4), இந்­திரா நகர் மெயின் தெரு (வார்டு 5), நாடார் தெரு 1 (வார்டு 6), சித்­த­நாத தேவர் தெரு (வார்டு 6), அப்­பாவு செட்­டி­யார் தெரு (வார்டு 6), கொண்டி சீனி­ரா­வுத்­தர் தெரு (வார்டு 7), சாலைத்­தெ­ரு­கி­ழக்கு தெரு 4,5 (வார்டு 9), இரா­ஜ­கோ­பா­ல­பு­ரம் மேற்கு 3, 12 (வார்டு 11), முக­மது உசேன் ராவுத்­தர் தெரு (வார்டு 15)–ல் சிமென்ட் சாலை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வேட­சந்­தூர் பேரூ­ராட்சி, மேற்கு தெரு 2, 3 (வார்டு 9), நேரு­ஜி­ந­கர் வடக்கு தெரு 5,7,9 (வார்டு 10)–ல் தார்ச் சாலை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வேட­சந்­தூர் பேரூ­ராட்சி, நேரு­ஜி­ந­கர் மெயின் தெரு (வார்டு எண்–10) நாகம்­மாள் கோவில் முதல் சாலைத்­தெரு (வார்டு எண்–9) மற்­றும் சாலைத்­தெரு முதல் நெடுஞ்­சா­லைத் துறை அலு­வ­ல­கம் (வார்டு எண்–6) சிறு­பா­லத்­து­டன்­ கூ­டிய வடி­கால் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வேட­சந்­தூர் பேரூ­ராட்சி, 1–வது வார்டு இந்­திரா நகர், மைனர்­கா­லனி, 2–வது வார்டு சந்­தைப்­பேட்டை தெரு ஆகிய இடங்­க­ளில் மேல்­நி­லைத் தொட்டி கட்டி தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வேட­சந்­தூர் பேரூ­ராட்சி, வட­ம­துரை ரோட்­டில் அமைந்­துள்ள பேருந்­து­நி­லை­யத்­தில் வணிக வளாக கடை­கள் கட்­டித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வேட­சந்­தூர் பேரூ­ராட்சி, 9–வது வார்டு நேரு­ஜிந கரில் அமைந்­துள்ள சமு­தா­யக்­கூ­டத்­தில் பழுது பணி­கள் மேற்­கொள்­ள­வும் முதல் தளத்­தில் உணவு அருந்­தும் கூடம் கட்­டித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வேட­சந்­தூர் பேரூ­ராட்சி, சர்வே எண்–1973/3–ல் புதிய நவீன ஆடு அடிக்­கும் கூடம், அரசு ஆண்­கள் மற்­றும் பெண்­கள் மேல்­நி­லைப் பள்­ளி­யில் 12 வகுப்­ப­றை­கள் புதி­தாக கட்­டித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வேட­சந்­தூர் பேரூ­ராட்சி, 9–வது வார்டு சாலைத் தெரு, 11–வது வார்டு இரா­ஜ­கோ­பா­ல­பு­ரம், 5–வது வார்டு இந்­திரா நக­ரில், 7–வது வார்­டில், 13–வது வார்டு அண்ணா நகர், 14–வது வார்டு மைனர் காலனி, 2–வது வார்டு, சந்­தைப்­பேட்டை, 3–வது வார்டு, பார­தி­ந­கர் ஆகிய இடங்­க­ளில் புதி­தாக அங்­கன்­வாடி கட்­ட­டங்­க­ளைக் கட்­டித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, பொதுப் பணித் துறைக்கு சொந்­த­மான நங்­காஞ்­சி­யாறு வடி­கால் கோட்­டம், குட­க­னாறு உப கோட்­டம், விருந்­தி­னர் விடுதி கட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">பேவர் பிளாக் சாலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 1–வது வார்டு காக்­கா­ரன்­பட்டி மதுக்­கரை, 2–வது வார்டு கோவில்­பட்டி, நடுத்­தெரு காளி­யம்­மன் கோவில்– அழ­கர் வீடு     வரை பேவர் பிளாக் சாலை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 2–வது வார்டு முத்­தம்­பட்­டி­யில் 30,000 லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட மேல்­நி­லைத் தொட்டி, 3–வது வார்டு பாளை­யம் சந்தை திட­லில் வணிக வளா­கம் கட்­ட­டம் கட்­டு­வ­தற்கு (34 கடை­கள்) மற்­றும் சுற்­றுச்­சு­வர் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 3–வது வார்டு பாளை­யம், சந்­தை­பேட்டை எதி­ரில் விநா­ய­கர் கோவில் பின்­பு­றம் பேவர்­பி­ளாக் சாலை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 3–வது வார்டு பாளை­யம், திருச்சி ரோட்­டில் அங்­கன்­வாடி கட்­ட­டம் கட்­டித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் சட்­ட­மன்ற தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 3–வது வார்டு பாளை­யம், கால்­நடை மருத்­து­வ­மனை, 4–வது வார்டு பாளை­யத்­திற்கு தெற்கே பாலத்­திற்கு கீழ­பு­றம் சலவை தொழி­லா­ளர்­க­ளுக்கு சலவை கூடம் கட்­டித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 5–வது வார்டு பாளை­யம், சானிப்­பட்டி மயா­னம்–­அ­யி­னா­க­வுண்­ட­னூர் லட்­சு­ம­ணன் வீடு வரை தார் சாலை, ஊராட்சி ஒன்­றிய துவக்­கப் பள்­ளிக்கு சுற்­றுச் சுவர் (200மீ) அமைத்­துத் தர வேண்­டும். 6–வது வார்டு, பாளை­யம், சிலும்­பா­க­வுண்­ட­னூர் பள்­ளிக்­­கூடம்– கருப்­ப­சாமி வீடு வரை பேவர் பிளாக் சாலை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 6–வது வார்டு, பாளை­யம், சிலும்­பா­க­வுண்­ட­னூர் ஊராட்சி ஒன்­றிய தொடக்­கப் பள்­ளி­யில் மாணவ மாண­வி­ய­ருக்கு கழிப்­பறை கட்­டித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் சட்­ட­மன்ற தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 7–வது வார்டு எண், திண்­டுக்­கல் கரூர் மெயின்­ரோடு பழைய பேரூ­ராட்சி அலு­வ­ல­கம்–­ரெட்­டி­யார் களம் மூன்று ரோடு வரை சிறு பாலத்­து­டன்­கூ­டிய தார்­சாலை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 7–வது வார்டு, சேவ­க­வுண்­டன்­பு­தூர் அங்­கன்­வாடி மையம் கட்­டித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் சட்­ட­மன்ற தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 8–வது வார்டு, பஸ் நிலை­யம் எதிர்­பு­றம் கம்­பன் பள்ளி சந்து கால்­வாய் வசதி அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">நாடக மேடை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் சட்­ட­மன்ற தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 8–வது வார்டு, அனி­யாப்­பூ­ரில் அங்­கன்­வாடி மையம், நாடக மேடை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் சட்­ட­மன்ற தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 9–வது வார்டு, வீரக்­கவுண்­ டன்­பட்­டி­யி­லுள்ள மயா­னத்­திற்கு சுற்­றுச்­சு­வர் எரி­மேடை சுமார் 200 மீ அள­விற்கு கூட்­டக்­கா­ரன்­பட்­டி­யில், 30,000 லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட மேல்­நி­லைத் தொட்டி கட்­டித் தர வேண்­டும். கூட்­டக்­கா­ரன்­பட்­டி­யில் முற்­றி­லும் சேத­ம­டைந்த சாலை­களை பேவர் பிளாக் சாலை­க­ளாக மாற்­றித் தர வேண்­டும். சல­வைத் தொழி­லா­ளர்­க­ளுக்கு தனி­யாக ஆழ்­கு­ழாய் மற்­றும் சலவை தொட்டி அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் சட்­ட­மன்ற தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 10–வது வார்டு, விரா­லி­பட்டி தார்­சாலை–9–வது வார்டு கூட்­ட­டக்­கா­ரன்­பட்டி காலணி சித்­தி­ரப்­பள்ளி தார்­சாலை வரை சுமார் 1கி.மீ. தார்­சாலை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 11–வது வார்டு, மணவை ரோடு தென்­பு­றம் PVS வீடு பின்­பு­றம் சந்­தில் பேவர் பிளாக் சாலை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">நியா­ய­வி­லைக் கடைக்கு கட்­டி­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 11–வது வார்டு மற்­றும் 12–வது வார்­டுக்கு வாடகை கட்­ட­டத்­தில் இயங்கி வரும் நியாய விலை கடைக்கு புதிய கட்­ட­டம் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 12–வது வார்டு, நாட்­டாமை வீடு– அம்­ப­லக்­கல் வழி­யாக கறி­கடை பழ­னிச்­சாமி வீடு வரை பேவர் பிளாக் சாலை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 13–வது வார்டு, பேருந்து நிலை­யத்­தின் வட­பு­றம் 20 வணி­க­வ­ளாக, குஜி­லி­யம்­பா­றை­ யில் அங்­கன்­வாடி மையம் கடை­கள் கட்­டித்­தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 13–வது வார்டு, கரூர் திண்­டுக்­கல் மெயின் ரோடு–­க­தி­ர­வன் வீடு வழி­யாக மேற்கே ஆற்­றோடை வரை பெரிய கால்­வா­யு­டன் தார் சாலை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 13–வது வார்டு, சூலப்­பு­ரம் சாலை­யில் ராஜா வீடு–­கி­ழக்கு மயில்­சாமி வீடு வரை வடி­கால் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 14–வது வார்டு, கொல்­லப்­பட்டி புதுப்­பா­லம்–­உ­ரும்­பிக்­கார தெரு வரை தார்ச் சாலை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 14–வது வார்டு, கொல்­லப்­பட்டி, பர­வ­சி­வம் வீடு–­தார்­சாலை வரை, பழ­னிச்­சாமி வீடு–­ர­மேஷ் வீடு வரை மற்­றும் பழ­னிச்­சாமி வீடு–­சின்­டெக்ஸ் டேங்க் வரை பேவர் பிளாக் வரை சாலை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 14–வது வார்டு, பொம்­மா­நா­யக்­கன்­பட்­டி­யில் தார் சாலை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் சட்­ட­மன்ற தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 15–வது வார்டு, கிருஷ்­ண­சாமி ஆசாரி வீடு–­தெற்கு ஆறு­மு­கம் வீடு வரை பேவர்­பி­ளாக்கு சாலை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் சட்­ட­மன்ற தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 15–வது வார்டு, சேது­ரா­மன் வீட்­டிற்கு எதிர்­பு­றம் தெற்கே சென்று மேற்கே செல்­வம் வீடு வரை கால்­வா­யு­டன் பேவர்­பி­ளாக் சாலை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">மேல்­நி­லை நீர் தேக்கத் தொட்டி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 15–வது வார்டு, இரா­ம­கிரி ஆர்.சி 
கால­ணி­யில் 30,000 லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட மேல்­நி­லைத் தொட்டி அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, திண்­டுக்­கல் கரூர் சாலை–­சா­ணி­பட்டி வரை தார்­சாலை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, பாளை­யம் பேரூ­ராட்சி, 9–வார்டு சேகர் களம் தார் சாலை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வேட­சந்­தூர் தொகுதி, வேட­சந்­தூர் தாலுகா மருத்­து­வ­ம­னை­யில் 60 படுக்­கை­கள் வசதி கொண்ட கட்­ட­டம் கட்டி அதற்­குண்­டான கழிப்­பிட வசதி, படுக்கை வசதி மற்­றும் CT ஸ்கேன் வச­தி­க­ளு­டன் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பேர­வைத் தலை­வர் அவர்­களே,  வரு­வாய்த் துறை அமைச்­சர் அவர்­க­ளி­டம் ஒரு கோரிக்கை வைக்க விரும்­பு­கி­றேன். திண்­டுக்­கல், தேனி, மதுரை மாவட்­டங்­க­ளில் காட்­டு­நா­யக்­கர் என்ற ஒரு சமூ­கத்­தி­னர் வாழ்­கி­றார்­கள். அந்த காட்­டு­நா­யக்­கர் சாதி­யில் பிறந்த அப்­பா­விற்கு சாதிச் சான்­றி­தழ் இருக்­கி­றது. ஆனால் மக­னுக்கு அந்­தச் சான்­றி­தழ் இல்லை. அவ்­வாறு சான்­றி­தழ் இல்­லா­த­தால் பள்­ளிக்­குச் செல்ல இய­லாத சூழ்­நி­லை­யில் இருக்­கி­றார்­கள்.  கோயில்­பட்­டி­யில் இருக்­கி­றது என்­கி­றார்­கள்; காட்­டு­நா­யக்­கர் என்­கிற சாதி­யி­ன­ருக்கு சான்­றி­தழ் வழங்­கு­வ­தற்கு அரசு ஆவன செய்ய வேண்­டு­மென்ற  பேர­வைத் தலை­வர் அவர்­கள் வாயி­லா­கக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு த.சாமி­நா­தன் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>