<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 20 2026 14:34:23 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260821T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="21082026-CBE-05" position.sequence="05" ex-ref="21082026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">21.08.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">‘நாமக்கல் கவிஞர் மாளிகை’ 10 மாடிக் கட்டடம் கட்டிக் கொடுத்தவர் எங்கள் தலைவர், கலைஞர்!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="29"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="71">இந்திய வரலாற்றையே புரட்டிப் போடும் போர்க்குணம் படைத்தவர்  தலைவர்  மு.க.ஸ்டாலின்! </lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="71"> </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="29">சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை மானிய விவாதத்தில் – முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="45">டெல்லி:  ஜவகர்லால்  நேரு   பல்கலைக்   கழகத்தில் அய்யன்  திருவள்ளுவருக்குச்  சிலை! </lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup220803_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup220111_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup220804_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup220011_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="evavelu_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சென்னை, ஆக.21–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சட்டமன்றத்தில் பொதுப் பணித்துறை மானியக் கோரிக்கையில்  உரையாற்றிய முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு  அவர்கள், நாமக்கல் கவிஞர் மாளிகை 10 மாடிக் கட்டடம் கட்டிக் கொடுத்தவர் ‘எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள்’ என்றும், ‘இந்திய வரலாற்றையே புரட்டிப் போடும் போர்க்குணம் படைத்தவர் எங்கள் கழகத் தலைவர்  அவர்கள்’ என்றும் குறிப்பிட்டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேரவையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ் வெல்­லும் என்ற தாரக மந்­தி­ரத்­திற்கு சொந்­தக்­கா­ரர்; தமி­ழர் என்ற ஒரு சொல்­லின் மூல­மாக அனைத்து சாதி­யி­ன­ரை­யும் ஒன்­றி­ணைத்­த­வர்; தமிழ் ஞானத்­தந்தை என்று சான்­றோர் பெரு­மக்­க­ளும், ஆன்­றோர் பெரு­மக்­க­ளும் பாராட்­டிய தலை­வர்; அவ­ருக்கு நிகர் அவர்­தான்; அவர்­தான் எங்­கள் தலை­வர்; அவ­ருக்கு என் முதல் வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்ள நான் விரும்­பு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அரசு என்­பது மக்­க­ளுக்கு மக்­க­ளா­லேயே ஆளப்­ப­டு­வது என்­றார் ஆபி­ர­காம் லிங்­கன். பிற சமூ­கக் கொள்­கை­களை வெறுக்­கா­மல் மதிக்­க­வேண்­டும் என்று சொன்­ன­வர் விவே­கா­னந்­தர். உல­கத் தொழி­லா­ளர்­களே ஒன்­று­ப­டுங்­கள், உல­கம் உங்­கள் கையில் என்­றார் Karl Marx. வாதங்­கள் என்­பது மக்­க­ளின் மகிழ்ச்­சிக்­கும், சுதந்­தி­ரத்­திற்­கும், புரட்சி என்­பது அவர்­க­ளின் உரி­மையை புனி­த­மாக்­கு­வது என்­றார் Fidel Castro . அந்த வரி­சை­யில்­தான் இந்­திய வர­லாற்­றையே புரட்­டிப்­போ­டும் போர்க்­கு­ணம் படைத்த தலை­வர், வாடிய பயி­ரைக் கண்­ட­போ­தெல்­லாம் வாடி­னேன் என்று சொன்ன வள்­ள­லார் எண்­ணம் கொண்ட தலை­வர்; எல்­லோ­ருக்­கும் எல்­லாம் கிடைக்­க­ வேண்­டும். எல்­லோ­ருக்­கும் எல்­லாம் கிடைக்க வேண்­டு­மென்ற மனித மேம்­பாட்டு தத்­து­வத்தை நாட்­டுக்­குத் தந்த நற்­ற­மிழ் நாய­கர் எங்­கள் தலை­வர் அருமை அண்­ணன்   மு.க. ஸ்டாலின் அவர்­க­ளுக்கு என்­னு­டைய முதல் வணக்­கத்தை நான் தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இளை­ஞர்­க­ளு­டைய எழு­ஞா­யிறு, நாளைய தமி­ழ­கத்­தின் நம்­பிக்கை நட்­சத்­தி­ரம், எங்­க­ளு­டைய திரா­விட இயக்­கத்­தின் தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, பெருந்­த­லை­வர் கலை­ஞர், இன்­றைய தலை­வர் அண்­ணன்   மு.க. ஸ்டாலின், திரா­விட இயக்­கத்­தி­னு­டைய ஐந்­தாம் தலை­முறை தலை­வ­ராக இருக்­கக்­கூ­டிய எங்­க­ளு­டைய படைத்­த­ள­பதி  எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­க­ளுக்கு எனது நெஞ்­சார்ந்த நன்­றியை இந்­த­நே­ரத்­திலே நான் தெரி­வித்­துக்­கொள்­ள ­வி­ரும்­பு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சில ஆண்­டு­க­ளுக்கு முன் புகழ்­பெற்ற இந்து தமிழ் தின­சரி நாளி­த­ழில், அத­னு­டைய ஆசி­ரி­ய­ராக இருந்த  சமஸ்  ‘தெற்­கி­லி­ருந்து ஒரு சூரி­யன்’ என்ற புத்­த­கத்தை தயா­ரித்து வெளி­யிட்­டி­ருந்­தார்­கள். அந்­தப் புத்­த­கம் பல்­வேறு நபர்­கள் படிப்­ப­வர்­கள் பார்த்­தி­ருக்­கக்­கூ­டும்.  பேர­வைத் தலை­வர் அவர்­க­ளுக்கு இந்­தப் புத்­த­கத்தை நான் காட்­ட­வி­ரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">(எ.வ. வேலு  ‘தெற்­கி­லி­ருந்து ஒரு சூரி­யன்’ என்ற புத்­த­கத்தை  பேர­வைத் தலை­வர் அவர்­க­ளுக்கு காண்­பித்­தார்.)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கலாச்சாரக் கட்டமைப்புகளை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">உருவாக்கிய கலைஞர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டிப்­பட்ட இந்­தப் புத்­த­கம் லட்­சக்­க­ணக்­கான அள­வில் இன்­றைக்கு தமிழ்­நாட்­டில் விற்­ப­னை­ யா­கி­றது. அதற்­குக் கார­ணம், அந்­தப் புத்­த­கம் தமிழ்­நாட்­டி­னு­டைய வர­லாற்­றை­யும், பண்­பாட்­டை­யும், கலாச்­சார கட்­ட­மைப்­பு­க­ளை­யும் உரு­வாக்­கு­வ­தில் முன்­ன­ணி ­யில் இருந்த ஒரு தலை­வர் கலை­ஞர் ஆவார். மாநி­லத்­தின் வளர்ச்­சிக்­குப் பெரி­தும் பாடு­பட்ட தலை­வர் கலை­ஞர்; பாரம்­ப­ரி­யத்தை போற்­று­வ­தும், பழ­மை­யான கட்­ட­டங்­க­ளைப் பாது­காப்­ப­தும், பரா­ம­ரிப்­ப­தும், பொதுப் பணித் துறைக்கு முக்­கி­யப் பங்கு என்­பதை செயல்­மூ­லம் விளக்கி அதைச் சிறப்­பாக செய்து முடித்­த­வர் அண்­ணன் கலை­ஞர் ;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அத­னால்­தான் இந்­தப் புத்­த­கத்­தைப் படிக்க வேண்­டு­மென்று சொல்­வ­தற்கு கார­ணம் பல்­வேறு ஆன்­றோர் பெரு­மக்­கள், சான்­றோர் பெரு­மக்­கள், பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் அவர்­க­ளு­டைய பரி­ணாம வளர்ச்­சி­யைப் பற்றி இதில் கட்­டுரை எழுதி இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சுருக்­க­மாக சொல்ல வேண்­டு­மென்று சொன்­னால், இன்­றைக்­குத் தமிழ்­நாட்­டி­னு­டைய தலை­ந­க­ராக இருக்­கக்­கூ­டிய சென்­னை­யில் இருக்­கிற வள்­ளு­வர் கோட்­டத்­தி­லி­ருந்து குமரி முனை­யில் இருக்­கிற 133 அடி சிலை இருக்­கி­றது பாருங்­கள், அதற்கு இடைப்­பட்டு இருக்­கிற மாந­க­ராட்­சி­க­ளாக இருக்­க­லாம்; நக­ராட்­சி­க­ளாக இருக்­க­லாம்; ஊராட்­சி­க­ளாக இருக்­க­லாம்; இந்த இடங்­க­ளி­லெல்­லாம் அண்­ணன் கலை­ஞர் அவர்­க­ளின் அடை­யா­ளம் இல்­லாத ஊரே கிடை­யாது என்ற அடிப்­ப­டை­யில் (மேசை­யைத் தட்­டும் ஒலி) இந்­தப் புத்­த­கத்­தில் அப்­ப­டித்­தான் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது. எனவே, அவர் வழி­யில் வந்த எங்­கள் தலை­வர், தமிழ்­நாட்­டில் அற்­பு­த­மான ஆட்சிநடத்­திய திரா­விட மாடல் நாய­கர், தமிழ்­நாட்­டி­னு­டைய கட்­ட­மைப்­பின்­மூ­ல­மாக மூல­த­னச் செலவை உரு­வாக்க முடி­யும். ஏனென்­றால், மூல­த­னச் செலவு என்­பது–– பல துறை­கள் இருக்­கி­றது. ஒரு, ஒரு துறை­யும்   செல­வோடு மட்­டும் சென்­று­வி­டும். ஆனால், நெடுஞ்­சா­லைத் துறை, பொதுப்­ப­ணித் துறை என்­பது மூல­த­னச் செலவை ஈர்ப்­பது. அர­சாங்­கத்­திற்­குச் சொத்து சேர்த்து வைப்­பது. ஆனால், எங்­க­ளு­டைய முத­ல­மைச்­ச­ராக இருந்த  மு.க.ஸ்டாலின்  மூல­த­னச் செலவை உரு­வாக்க வேண்­டு­மென்ற அடிப்­ப­டை­யில் பல அடை­யா­ளங்­களை, அண்­ணன் கலை­ஞர் அவர்­க­ளின் வழி­யிலே தமிழ்­நாட்­டில் உரு­வாக்­கித் தந்­தார்­கள். காலத்­தை­யும் நேரத்­தை­யும் கருதி, அவற்­றில் சில­வற்றை மட்­டும் நான் குறிப்­பிட விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஏறுதழுவுதல் அரங்கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமி­ழ­ரு­டைய பாரம்­ப­ரிய விளை­யாட்டு ஜல்­லிக்­கட்டு; அதற்கு கீழக்­க­ரை­யில் கலை­ஞர் ஏறு­த­ழு­வு­தல் அரங்­கம்; சைதாப்­பேட்­டை­யில் 5 Star Hotel–ஐ போன்று எம்.சி.ராஜா அவர்­க­ளின் பெய­ரில் 10 தளங்­கள் கொண்ட மாண­வர் விடுதி; கொளத்­தூ­ரில் 6 மாடி­கள் கொண்ட பெரி­யார் மருத்­து­வ­மனை; மது­ரை­யில் கலை­ஞர் நூல­கம், தமிழ் இனத்­திற்கு பெருமை சேர்த்த அண்­ணன் கலை­ஞர் அவர்­க­ளுக்கு சென்­னை­யில் உள்ள மெரினா கடற்­க­ரை­யில் நினை­வி­டம், கள்­ளக்­கு­றிச்சி, விரு­து­ந­கர், திருப்­பத்­தூர், மயி­லா­டு­துறை ஆகிய புதிய மாவட்­டங்­க­ளுக்கு, மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமி­ழர்­க­ளின் வர­லாறு என்­பது 4,500 ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டது. சில நேரங்­க­ளில் 2,000 ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டது, 3,000 ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டது என்று நாம் சொல்­வோம்; அது அல்ல. தமி­ழ­ரு­டைய வர­லாறு என்­பது இந்­தி­யா­வி­லேயே அவன்­தான் முத­லிலே பிறந்து, வளர்ந்­த­வன். அத­னால், அது 4,000 ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட வர­லாறு; அந்த வர­லாற்றை வெளிப்­ப­டுத்­து­வற்­காக சிவ­கங்­கை­யில் கீழ­டி­யி­லும், நெல்­லை­யில், பொரு­நை­யில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்ட அருங்­காட்­சி­ய­கங்­க­ளும் ஏரா­ளம்! ஏரா­ளம்! அப்­ப­டிப்­பட்ட நம்­மு­டைய தலை­வர்  தான்––</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நமக்­கும், நம்­மு­டைய சந்­த­தி­க­ளுக்­கும் உழைத்த முத்­த­மி­ழர்­க­ளுக்கு, தியா­கப் பெரு­மக்­க­ளுக்கு எங்­கள் தலை­வர், அண்­ணன்  மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் ஆட்­சி­யில்­தான் பல்­வேறு சிலை­களை அமைத்­தார்­கள். அதில் சில­வற்றை மட்­டும் நான் உங்­க­ளி­டத்­தில் சொல்ல விரும்­பு­கி­றேன். கிண்­டி­யில் அயோத்­தி­தா­சப் பண்­டி­த­ருக்­குச் சிலை­யு­டன்­கூ­டிய மணி­மண்­ட­பம். பசும்­பொன் தேவர் திரு­ம­க­னு­டைய நினை­வி­டத்­தில் புதிய இரண்டு மண்­ட­பங்­கள். பர­மக்­கு­டி­யில் தியாகி இமா­னு­வேல் சேக­ரன் அவர்­க­ளுக்­குச் சிலை­யு­டன் கூடிய மண்­ட­பம். கிண்­டி­யில், வீர­மங்கை வேலு­நாச்­சி­யார் அவர்­க­ளுக்­குச் சிலை, மரு­து­பாண்­டி­யர்­க­ளுக்­குச் சிலை, கட்­டப்­பொம்­மன் அவர்­க­ளுக்­குச் சிலை, வ.உ.சி. அவர்­க­ளுக்­குச் சிலை, ஈரோட்­டில் சுதந்­திர போராட்ட வீர­ராக இருந்த பொல்­லான் அவர்­க­ளுக்கு அரங்­கத்­து­டன்­கூ­டிய சிலை, விழுப்­பு­ரத்­தில் சமூக போராளி என்று சொல்­லப்­பட்ட, 21 பேர் சுட்டு வீழ்த்­தப்ட்ட, அவ­ருக்கு நினைவு மண்­ட­பம் கட்­டி­ய­தோடு மட்­டு­மல்ல அவ­ருக்­குச் சிலை, கோவில்­பட்­டி­யில் கே.ராஜ­நா­ரா­யண் அவர்­க­ளுக்­குச் சிலை, சமூ­க­நீதி காவ­லர் என்று சொல்­லப்­ப­டு­கின்ற வி.பி. சிங் அவர்­க­ளுக்­குச் சிலை, அப்­துல் கலாம் அவர்­க­ளுக்­குச் சிலை, டாக்­டர் சுப்­ப­ரா­யன் அவர்­க­ளுக்­குச் சிலை, கொடி காத்த திருப்­பூர் கும­ர­னுக்­குச் சிலை, AG என்று அன்­போடு அழைக்­கப்­பட்டு, இதே மாமன்­றத்­தில் சிறப்­பாக பணி­யாற்­றிய தென் ஆற்­காட்­டின் திரா­விட இயக்­கத்­தி­னு­டைய தலை­வ­ராக இருந்த  ஏ.கோவிந்­த­சாமி அவர்­க­ளுக்­குச் சிலை, சிந்­து­வெளி நாக­ரி­கத்தை திரா­விட நாக­ரி­கம் என முதன்­மு­த­லாக கண்­டு­பி­டித்து கூறிய சர் ஜான் மார்­ஷல் அவர்­க­ளுக்­குச் சிலை. இன்­னும் சொல்­லப்­போ­னால், எழும்­பூ­ரில் மாமேதை காரல் மார்க்ஸ் அவர்­க­ளுக்கு சிலை. இப்­படி நம்­மு­டைய சமு­தா­யம் பிற்­கா­லத்­தில் தெரிந்­த­கொள்ள வேண்­டு­மென்­ப­தற்­காக, அந்­தப் பெரு­ம­க­னார்­க­ளுக்­கெல்­லாம் சிலை அமைத்த வர­லாறு திரா­விட மாடல் ஆட்­சிக்கு உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தரக் கட்டுப்பாட்டு அலகு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கோவை­யைத் தலை­மை­யி­ட­மா­கக் கொண்டு இந்­தத் துறை­யில் சில சீர்­தி­ருத்­தங்­கள் செய்­யப்­பட்­டன. அதில் கோவை­யைத் தலை­மை­யி­டா­மா­கக் கொண்டு தலை­மைப் பொறி­யா­ளர் மேற்­பார்­வை­யில் ஒரு புதிய மண்­ட­லம் நம்­மு­டைய ஆட்­சி­யில் தொடங்­கப்­பட்­டது. புரா­தான கட்­ட­டங்­க­ளைப் பாது­காப்­ப­தற்­காக புதிய அலகு ஒன்று தொடங்­கப்­பட்­டது. மாவட்­டத்­திற்கு ஒரு செயற்­பொ­றி­யா­ளர் பொறுப்பு வழங்­கப்­பட்­டது. தரக்­கட்­டுப்­பாட்டு அலகு என்று புதி­தாக தொடங்­கப்­பட்­டது. உயர்­கல்­வித் துறைக்கு கட்­ட­டம் கட்­டு­வ­தற்­காக திட்ட அலகு என்று தொடங்­கப்­பட்­டது. டெல்­லி­யில் நம்­மு­டைய சிறப்பு விருந்­தி­னர்­கள் செல்­வ­தற்கு, அலு­வ­லர்­கள் செல்­வ­தற்கு, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் தங்­கு­வ­தற்கு,  அமைச்­சர் பெரு­மக்­கள் அரசு அலு­வல் கார­ண­மாக டெல்லி செல்­கி­ற­போது, அங்கு தங்­கு­வ­தற்­காக கட்­டப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">டெல்­லி­யில் உள்ள ஜவ­ஹர்­லால் நேரு பல்­க­லைக்­க­ழ­கத்­தில் ஐயன் திரு­வள்­ளு­வ­ருக்­குச் சிலை; 2021–2026 இடைப்­பட்ட காலங்­க­ளில் 406 உத­விப் பொறி­யா­ளர்­கள் Civil Engineer, 104 உத­விப் பொறி­யா­ளர்­கள் மின்­னி­யல் Engineer, கொதி­க­லன் இயக்­கத்­திலே 4 முது­க­லைப் பொறி­யா­ளர்­கள், 6 இள­நிலை Architects ஆகிய பணி நிய­ம­னங்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பழ­மை­யைப் பாது­காக்­கின்ற வகை­யில் 100 ஆண்­டு­க­ளைத் தாண்­டிய Heritage Buildings என்ற அடிப்­ப­டை­யில் 22–9–2022 முதல் 
30–3–2026 வரை வீர­மங்கை வேலு­நாச்­சி­யார் அவர்­க­ளுக்­கும், மருது பாண்­டிய சகோ­த­ரர்­க­ளுக்­கும் போர் பயிற்சி எடுத்த இடம் எது­வென்­றால் சங்­க­ர­ப­தி­கோட்டை. அந்த சங்­க­ர­ப­தி­கோட்­டை­யோடு சேர்ந்து 64 கட்­ட­டங்­கள் 100 ஆண்­டு­க­ளைக் கடந்த கட்­ட­டங்­கள். Heritage Buildings என்ற அந்­தக் கட்­ட­டங்­கள் ரூ.470.58 கோடி திட்ட மதிப்­பீட்­டில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்டு,  பல பணி­கள் எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் முடிந்­து­விட்­டன. சில பணி­கள் இன்­றைக்கு நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றன. அதோடு மட்­டு­மல்ல, நான் ஆரம்­பத்­திலே குறிப்­பிட்­ட­தைப்­போல இந்­தி­யா­வி­னு­டைய தலை­ந­க­ரிலே இன்­றைக்கு நாம் எல்­லோ­ரும் தங்­கு­வ­தற்கு, நான் நாம் என்று சொல்­வது அமைச்­சர் பெரு­மக்­கள், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், அரசு அதி­கா­ரி­கள், ஐ.ஏ.எஸ். 
அதி­கா­ரி­கள், டெல்­லிக்­குச் சென்­றால் அங்கே இருக்­கின்ற இடம் போது­மா­ன­தாக இல்லை. எனவே, கூடு­த­லா­கக் கட்ட வேண்­டு­மென்று வைகை இல்­லம் என்­று–­அந்த வைகை என்ற பெயரை வைத்­த­வர் எங்­கள் அண்­ணன் கலை­ஞர் தான். (மேசை­யைத் தட்­டும் ஒலி) ஆனால், அந்த வைகை இல்­லம் கட்ட வேண்­டு­மென்று இன்­றைக்கு பழை­யக் கட்­ட­டங்­கள், நீண்ட நெடிய கட்­ட­டங்­கள் என்ற கார­ணத்­தி­னால், அவற்றை அப்­பு­றப்­ப­டுத்­தி­விட்டு, இன்­றைக்கு புதி­ய­தாக 257 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில், 3 இலட்­சம் சதுர அடி பரப்­ப­ள­வில் முக்­கி­ய­மான கட்­ட­டங்­க­ளாக 39 suite rooms, 60 deluxe rooms, 72 படுக்­கை­கள் கொண்ட 9 தங்­கும் வீடு­கள் இன்­றைக்கு நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில் கட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆக, இப்­ப­டிப்­பட்ட நிலை­யில் நாங்­கள் கடை­சி­யாக 5–வது ஆண்டு நம்­பிக்­கை­யோ­டு­தான் நிதி­நிலை அறிக்­கையை தாக்­கல் செய்­தோம். அதிலே, சென்ற 2025–2026 ஆண்­டில்—­நல்­ல­வர்­க­ளை­யும், மாண­வர்­க­ளை­யும், பட்­ட­தா­ரி­க­ளை­யும் வள­மாக்­கு­வது கல்­வி­தான். கல்­விக்கு நிக­ரா­னது ஒன்­றும் இல்லை. அந்­தக் கல்வி உலக வர­லாற்றை தெரிந்­து­கொள்­வ­தற்­கும், பொரு­ளா­தார வளர்ச்­சி­யைப் பெற­வும், கல்­வி­யி­னு­டைய விரி­வாக்­கம் அவ­சி­யம் என்ற தேவையை அறிந்த கார­ணத்­தி­னால், எங்­க­ளு­டைய முத­ல­மைச்­ச­ராக இருந்த அண்­ணன்  மு.க. ஸ்டாலின்  நூல­கம் அவ­சி­யம் தேவை என்று  கரு­தி­னார்­கள். நூல­கத்­தோடு இன்­றைக்கு digital நூல­க­மும் தேவை என்­பதை உணர்ந்த எங்­கள் தலை­வர் திருச்­சி­யில் பெருந்­த­லை­வர் காம­ரா­சர்  பெய­ரில் நூல­கம், கட­லூ­ரில் நம்­மு­டைய சமூ­கக் காவ­லர் அஞ்­சலை அம்­மாள் பெய­ரில் நூல­கம், சேலத்­தில் பாவேந்­தர் பார­தி­தா­சன் பெய­ரில் நூல­கம், நெல்­லை­யில் காகிதே மில்­லத் பெய­ரில் நூல­கம், கோயம்­புத்­தூரை பொறுத்­த­வரை தந்தை பெரி­யார் பெய­ரிலே நூல­கம் கட்டி முடிக்­கப்­பட்டு திறக்­கப்­ப­டும் தரு­வா­யில் அது இருந்­தது. நான்­கூட திறந்­து­விட வேண்­டு­மென்று முத­ல­மைச்­சர் அவர்­க­ளி­டம் கேட்­டேன். அப்­பொ­ழுது தலை­மைச் செய­லா­ள­ராக இருந்­த­வர், ஆட்­சிக்கு நாம்­தான் வரப்­போ­கி­றோமே நாம் திறந்­து­வி­ட­லாம் என்ற ஒரு நம்­பிக்­கை­யூட்­டி­னார். மக்­கள் நம் மீது வைத்­தி­ருந்த பாசம்; அப்­ப­டி­தான் நாங்­க­ளும் கரு­தி­னோம். ஆனால், அந்­தக் கட்­ட­டம் கட்டி முடிக்­கப்­பட்டு 5 சத­வி­கித கட்­ட­டப் பணி­கள் நிலு­வை­யில் இருந்­தது. கோயம்­புத்­தூ­ரிலே நம்­மு­டைய  பொதுப் பணித் துறை அமைச்­சர்  சென்று, அந்த நூல­கத்தை கண்டு களித்து, ஆய்வு செய்து 
அதற்­குப் பிறகு பேட்டி கொடுத்­தி­ருந்­தார். அதை பத்­தி­ரி­கை­யிலே நான் பார்த்­தேன். நான் கேட்க விரும்­பு­வது என்­ன­வென்­றால், நீங்­கள் ஆட்­சிக்கு வந்து மூன்று மாத காலம் ஆகி­றது. கொள்கை தலை­வர் என்று நீங்­கள் பெரி­யாரை ஏற்­றுக் கொண்ட இந்த நிலை­யிலே, மூன்று மாத காலம் ஆகி­றது இன்­னும் இந்த நூல­கத்­தைத் திறக்­கா­மல் இருப்­பதை இந்த அர­சி­னு­டைய கவ­னத்­திற்­குக் கொண்­டு­வர நான் விரும்­பு­கி­றேன். ஆக, இந்த நூல­கம் இன்­றைக்கு மக்­கள் பயன்­பாட்­டிற்கு இல்­லா­மல் கிடப்­பி­லேயே கிடக்­கி­றது என்­ப­தை­யும் நினை­வூட்­டு ­கி­றேன். அதோடு மட்­டு­மல்ல, எங்­கள் தலை­வர்  கேர­ளா­விலே ஆறு­குட்டி என்ற இடம் உண்டு. அது வைக்­கம் போராட்­டத்­தில் பங்­கேற்ற, நம்­மு­டைய தந்தை பெரி­யார்  சிறை சென்ற இடம் ஆறு­குட்டி. அந்த ஆறு­குட்­டி­யிலே அன்­றைய கேரள முத­ல­மைச்­ச­ரி­டம் கேட்டு, ஆறு­குட்­டி­யிலே ஒரு நினை­வுச் சிறைச்­சாலை அமைக்க வேண்­டு­மென்று  முத­ல­மைச்­சர்  கடி­தம் எழு­தி­னார்­கள். நானே நேர­டி­யா­கச் சென்று கேரள முத­ல­மைச்­சர், தோழர் பின­ராயி விஜ­யன் அவர்­களை சந்­தித்­தேன். அந்த 70 சென்ட் இடத்தை  தான­மாக நம்­மு­டைய அர­சாங்­கத்­திற்கு கொடுத்­தார்­கள். அதிலே ஒரு சிறை அமைக்க வேண்­டும் என்­ப­தற்­காக ரூ.3.90 கோடி நிதியை எங்­கள் அண்­ணன் ஒதுக்­கித் தந்­தார்­கள். நானே கேர­ளா­வின் சுற்­று­லாத் துறை அமைச்­சர் அவர்­களை அழைத்­துக்­கொண்டு, அடிக்­கல் விழா நடத்­தி­னோம். அது என்­னவோ தெரி­ய­வில்லை, பெரி­யாரை பற்றி பெரு­மை­யா­கப் பேசு­கின்ற நீங்­கள் இந்த மூன்று மாத காலம் என்­னென்ன கிடப்­பிலே போட்­டு­விட்­டீர்­கள்.  அமைச்­சர்  பதி­லு­ரை­யிலே அதற்­கான விளக்­கத்தை தர வேண்­டு­மென்று இந்த நேரத்­திலே கேட்­டுக்­கொள்­கி­றேன். ஏன்­னென்று சொன்­னால், தந்தை பெரி­யார் அவர்­களை கொள்கை தலை­வர் என்று அடிக்­கடி நீங்­கள் தம்­பட்­டம் அடித்­துக்­கொள்­கிற கார­ணத்­தி­னால் அதை உங்­க­ளுக்கு நினை­வூட்ட நான் விரும்­பு­கி­றேன். நாங்­கள் எங்­கள் ஆட்­சி­யிலே, உண்­மை­யாக சொல்­கி­றேன் பெருந்­த­லை­வர் காம­ரா­சர் மீது எங்­க­ளுக்கு நிரம்­பப் பற்று உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நிரம்ப பற்று இருக்­கின்ற கார­ணத்­தி­னால்­தான் திருச்­சி­யில் கூட பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் அவர்­க­ளின் பெய­ரிலே ஒரு நூல­கத்தை இன்­றைக்கு நாங்­கள் கட்­டிக் கொண்­டி­ருக்­கி­றோம். ஏன் இதை நான் குறிப்­பி­டு­கி­றேன் என்று சொன்­னால், காம­ரா­ஜ­ருக்கு என்று திடீ­ரென்று ஒன்­றும் எங்­க­ளுக்கு பாசம் வந்­து­வி­ட­வில்லை.   இன்­னும் சொல்­லப்­போ­னால், 1961 ஆம் ஆண்­டில் தமிழ்­நாட்­டில் காங்­கி­ரஸ்­தான் ஆண்டு கொண்­டி­ருந்­தது. அப்­போது, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தோழர்­தான் சென்னை மாந­க­ராட்­சி­யின் மேய­ராக இருந்­தார்­கள். அன்­றைக்கு இருந்த மேயர் பேர­றி­ஞர் அண்­ணா­வைப் பார்த்து உங்­க­ளுக்கு சிலை வைக்க வேண்­டும் என்­றார். சென்னை மாந­க­ராட்­சி­யில் சிலை வைப்­ப­தற்கு மேய­ரா­கிய எனக்கு அதி­கா­ரம் உண்டு என்று சொன்­ன­போது, அண்ணா சொன்­னா­ராம், இல்லை, இல்லை எனக்கு சிலை முக்­கி­ய­மல்ல, சுதந்­தி­ரப் போராட்­டத்­தில் போரா­டி­யர் நம்­ம­வர் பெருந்­த­லை­வர் காம­ரா­ஜ­ருக்கு நீங்­கள் சிலை வையுங்­கள் என்று அண்ணா  அப்­ப­டித்­தான் குறிப்­பிட்­டா­ராம். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், அன்­றைக்கு 1961 ஆம் ஆண்­டில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தோழர் சென்னை மாந­க­ராட்­சி­யின் மேயர்  Madras Gymkhana Club என்று சொல்­லப்­ப­டு­கிற அன்­றைய மௌண்ட் ரோடு, இன்­றைய அண்ணா சாலை­யில் பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் சிலையை நிறுவி, அன்­றைக்கு இருந்த பிர­தம அமைச்­சர்   நேரு அவர்­களை அழைத்­துக் கொண்டு வந்து அந்த சிலையை திறந்த வர­லாறு யாருக்கு என்று சொன்­னால், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு உண்டு என்­ப­தற்­கா­கத்­தான் இதை நான் குறிப்­பிட விரும்­பு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதோடு மட்­டு­மல்ல, 13–4–1955–ல்தான் பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர்  முதன்­மு­த­லாக முத­ல­மைச்­ச­ராக வரு­கி­றார்.  அதற்கு முன்­பு­வரை  இரா­ஜாஜி தான் இருந்­தார். இரு­வ­ருக்­கும் ஏற்­பட்ட கருத்து வேறு­பாட்­டின் கார­ண­மாக,  இரா­ஜாஜி  இரா­ஜி­னாமா செய்­தார். பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர்  முத­ல­மைச்­ச­ரா­னார். ஆனால், சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இல்லை. சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக 6 மாத காலத்­திலே ஆக வேண்­டும். அப்­ப­டிப்­பட்ட நிலை­யில்­தான் நம்­மு­டைய  பொதுப் பணித் துறை அமைச்­சர் சகோ­தா­ரர் பிறந்த மாவட்­டம் எது என்­றால் வட ஆற்­காடு மாவட்­டம். இன்­றைக்கு அது வேலூர் மாவட்­டம். வட ஆற்­காடு மாவட்­டத்­தில்­தான் என்­னு­டைய சொந்த ஊர், என்­னு­டைய ஊரும் இருந்­தது. அதற்­குப் பிறகு, திரு­வண்­ணா­மலை மாவட்­டம், வேலூர் மாவட்­டம், ராணிப்­பேட்டை மாவட்­டம், திருப்­பத்­தூர் மாவட்­டம் என்று நான்கு மாவட்­டங்­க­ளா­கப் பிரிக்­கப்­பட்டு விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால்,. . .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தம்­பட்­டம் என்­பது unparliamentary word இல்லை. நம் சுய­பு­ரா­ணம் என்று சில நேரங்­க­ளில் சொல்­வோம், தம்­பட்­டம் என்று சொல்­வோம், விளம்­ப­ரப்­ப­டுத்­திக் கொள்­ளு­தல் என்று சொல்­வோம். இப்­ப­டித்­தான் அதற்­குப் பொருள் உண்டு. வேறொன்­று­மல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனக்­குக் கிடைத்­தத் தக­வலை நான் சொன்­னேன், எனக்­குக் கிடைத்­தத் தக­வலை நான் சொன்­னேன், அவரை பெரு­மைப்­ப­டுத்த வேண்­டு­மென்­ப­தற்­காக. வட ஆற்­காடு மாவட்­டம் என்­பது ஒரு பெரிய மாவட்­டம். அந்த மாவட்­டத்­தில் கே.வி. குப்­பம் தொகு­தி­யிலே தொண்­டங்­கு­றிச்சி என்­கிற இடத்­தில் அவ­ரு­டைய தந்­தை­யார்  ராஜேந்­திர ரெட்­டி­யார் அவர்­க­ளி­ட­மி­ருந்து கிடைத்த தக­வலை வைத்து சொன்­னேன். அது இல்­லை­யென்ற மறுத்­தால் அதைப் பற்றி எனக்
­கொன்­றும் இல்லை. நான் அதை ஏற்­றுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதற்­குப் பக்­கத்­தில்­தான் குடி­யாத்­தம் என்­கிற தொகுதி இருக்­கி­றது.  குடி­யாத்­தம் தொகு­தி­யில்­தான் பெருந்­த­லை­வரை நிறுத்த வேண்­டு­மென்று முடிவு செய்­கி­றார்­கள். 6 மாதங்­க­ளில் MLA ஆனால்­தான், முத­ல­மைச்­ச­ராக இருக்க முடி­யும். அப்­ப­டிப்­பட்ட நிலை­யிலே குடி­யாத்­தத்­தில் அவர் நிற்க வேண்­டு­மென்று முடிவு செய்­த­பொ­ழுது, அண்­ணா­வி­னு­டைய பெருந்­தன்­மை­யைப் பாருங்­கள், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் நிறு­வ­னத் தலை­வ­ரின் பெருந்­தன்­மை­யைப் பாருங்­கள், அண்ணா சொல்­கி­றார், பச்­சைத் தமி­ழன் பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் தேர்­த­லிலே நிற்­கி­றார், அவரை எதிர்த்து திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் நிற்­காது என்று சொல்­லி­விட்­ட­தோடு மட்­டு­மல்ல, ஒரு கட்­டு­ரை­யைத் தீட்­டு­கி­றார். ‘குணாளா, குலக்­கொ­ழுந்தே வருக, வருக’ என்று தீட்டி எழு­தி­ய­தோடு மட்­டு­மல்ல, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் உழைத்து பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் அந்த இடைத் தேர்­த­லிலே வெற்­றிப் பெற்­றார் என்­பது வர­லாறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதோடு மட்­டு­மல்ல, 1967–ல் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்­சிக்கு வரு­கி­றது. 1968–ல் அண்­ணா­வின் தலை­மை­யில் உல­கத் தமிழ் மாநாட்டை நடத்­து­கி­றார்­கள்.  நம்­மு­டைய அண்ணா  நேர­டி­யாக பெருந்­த­லை­வர் காம­ரா­ஜ­ரு­டைய இடத்­திற்­குச் செல்­கி­றார். அங்கு சென்று, நீங்­கள்­தான் அந்த மாநாட்­டிலே வர­வேற்­புரை நிகழ்த்த வேண்­டும் என்று கேட்­கி­றார். பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர்  அன்­றைக்கு அந்த உல­கத் தமிழ் மாநாட்­டில் வர­வேற்­புரை நிகழ்த்தி, அந்த மாநாட்­டிற்கு பெருமை சேர்த்த வர­லாறு உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1975 ஆம் ஆண்டு பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர்  மறைந்­த­பொ­ழுது, அன்­றைக்கு தமிழ்­நாட்­டி­னு­டைய முத­ல­மைச்­ச­ராக எங்­கள் அண்­ணன் கலை­ஞர் அவர் இருந்­தார்­கள். செய்தி கேள்­விப்­பட்­ட­வு­ட­னேயே திரு­ம­லை­நா­யக்­கர் தெரு­விற்கு சென்று, அவரே கிட்­டே­யே­யி­ருந்­தார். அன்­றைக்கு இரவு மழை. அந்த மழை­யைக்­கூட பாரா­மல், அன்­றைக்கு தமிழ்­நாடு காங்­கி­ரஸ் தலை­வர்  ராஜா­ராம் நாயுடு அவர்­க­ளை­யும் அழைத்­துக்­கொண்டு அவரே நேர­டி­யா­கச் சென்று, இடத்­தைத் தேர்வு செய்து, பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் அவர்­க­ளு­டைய மறைவை, பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர் அவர்­க­ளுக்கு அரசு மரி­யா­தை­யு­டன் வைத்­த­தோடு மட்­டு­மல்ல, அவ­ருக்கு சிலை அமைத்து, மணி­மண்­ட­பம் கட்­டி­யத் தலை­வ­ரும் எங்­க­ளு­டைய தலை­வர் அண்­ணன் கலை­ஞர் என்று சொன்­னால் அது மிகை­யா­காது. (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">காமராசருக்கு குமரி முனையில் மணிமண்டபம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தி­லி­ருந்து வந்­தி­ருக்­கிற நண்­பர்­க­ளுக்­கெல்­லாம் தெரி­யும். கடற்­க­ரை­யில் அனு­ம­தியே கிடை­யாது என்று சொல்­லி­விட்ட நேரத்­தில், அண்­ணன் கலை­ஞர்  அன்­றைக்கு ஒன்­றிய அர­சாங்­கத்தை அணுகி, இடத்­தைப் பெற்று 1999 ஆம் ஆண்டு பெருந்­த­லை­வர் காம­ரா­ஜ­ருக்கு குமரி முனை­யில் மணி­மண்­ட­பம் கட்­டித் தந்­த­தும் அண்­ணன் கலை­ஞர்­தான். பெருந்­த­லை­வர் காம­ரா­ஜ­ரு­டைய பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என்று தனிச் சட்­டத்தை உரு­வாக்கி, அன்­றை­ய­தி­னம் பள்­ளிக் கூடங்­க­ளிலே பேச்­சுப் போட்டி, கட்­டு­ரைப் போட்டி அவை­கள் எல்­லாம் வைக்க வேண்­டு­மென்று பெருமை சேர்த்­த­வர் கலை­ஞர் தான். ஆக, அவர்­மீது எங்­க­ளுக்கு அவ்­வ­ளவு பற்று உண்டு; பாசம் உண்டு; அவர்­மீது மரி­யாதை உண்டு; அதில் ஒன்­றும் மாற்­றம் அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் இந்த அர­சைக் கேட்க விரும்­பு­வது, இந்­தி­யா­விலே பல்­வேறு மாநி­லங்­கள் பின்­பற்ற வேண்­டும் என்ற ஒரு திட்­டம், இன்­னும் சொல்­லப்­போ­னால், இலண்­டன், கனடா போன்ற நாடு­க­ளிலே அத­னைத் தொடர்ந்து நாங்­கள் நிறை­வேற்­றப்­போ­கி­றோம் என்று சொன்ன திட்­டம், அந்­தத் திட்­டத்­தி­னு­டைய பெயர் முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம். நான் கேட்க விரும்­பு­வது, அந்­தக் காலை உண­வுத் திட்­டத்தை மாற்றி பெருந்­த­லை­வர் காம­ரா­ஜர்  பெயரை வைக்க வேண்­டிய அவ­சி­யம் என்ன? நான் கேட்க விரும்­பு­வ­தெல்­லாம், (குறுக்­கீடு) இருங்­கள். நான் பேசி முடித்­த­வு­ட­னேயே பேச­லாம்,  உயர் கல்­வித் துறை அமைச்­சர்  உட்­கா­ருங்­கள். நீங்­கள் அமைச்­ச­ராக இருக்­கி­றீர்­கள்.  முத­ல­மைச்­சர் அவர்­க­ளி­டத்­தில் சொல்லி, ஒரு புதி­யத் திட்­டத்தை உரு­வாக்கி காம­ரா­ஜர் பெயரை வையுங்­கள், நாங்­கள் வர­வேற்றே பேசு­வோம். நான் கேட்க விரும்­பு­வது, அதில் வேறு என்ன பெயர்––, இன்­னும் அதில் ஒரு ரக­சி­யம் சொல்­லட்­டுமா? அந்­தத் திட்­டம் வரு­கி­ற­போது, ஒரு discussion வரு­கி­றது. நான்­கூ­டச் சொன்­னேன், இந்­தப் பிள்­ளை­க­ளுக்கு ஒரு காலத்­தில் மதிய உண­வுத் திட்­டத்­திற்கு காம­ரா­ஜர் திட்­டம் என்று ஒரு பெயர் இருக்­கி­றது; மக்­கள் தில­கம் எம்.ஜி.ஆர். பெயர் இருக்­கி­றது; என்று சொல்­லி­விட்டு, அன்­றைக்கு இருந்த Chief Secretary–யோடு அந்த அமைச்­ச­ர­வை­யில் இருந்த நான் சொன்­னேன். ஏன் இந்­தத் திட்­டத்­திற்கு மு.க. ஸ்டாலின் காலை உண­வுத் திட்­டம் என்று பெயர் வைக்­க­லாமே என்று நான் கேட்­ட­பொ­ழுது, முத­ல­மைச்­சர்  சொன்­னார், அப்­ப­டி­யெல்­லாம் இல்லை, யார் பெய­ரை­யும் வைக்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை. முத­ல­மைச்­சர் என்­பது பொது­வான பெயர். பொது­வான சொற்­றொ­டர் அது. அது யாரை­யும் குறிப்­பி­டு­வது அல்ல. எனவே முத­ல­மைச்­சர் என்று சொன்­னால், யார் வந்­தா­லும் அதை மாற்­றம் செய்ய மாட்­டார்­கள். யார் வந்­தா­லும் முத­ல­மைச்­சர் தானே! அந்த நிலை­யிலே அதை மாற்ற வேண்­டாம் என்று சொல்­லி­தான் பெயர் வைத்­தார். (மேசை­யைத் தட்­டும் ஒலி) ஆனால், என்­னவோ தெரி­ய­வில்லை. நீங்­கள் அந்த முத­ல­மைச்­சர். . .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காம­ரா­ஜர் பெய­ரில் நாங்­கள் நூல­கமே கட்­டிக் கொண்­டி­ருக்­கிற, அந்­த­ள­வுக்கு அவர்­மீது மரி­யாதை உண்டு. காம­ரா­ஜர் பெயரை ஒரு புதிய திட்­டத்­திற்கு வைத்­தி­ருந்­தால் நாங்­க­ளும் பாராட்டி இருப்­போம். ‘அண்டை வீட்டு நெய்யே, பொண்­டாட்டி கையே’ என்று  எங்­கள் ஊரில் ஒரு பழ­மொழி உண்டு. பக்­கத்து வீட்டு நெய் ஆனால் என் சம்­சா­ரத்­தின் மூல­மாக போட்­டால்­தான் அது இனிக்­கும், சுவைக்­கும் என்று சொல்­கிற ஒரு பழ­மொழி உண்டு. அப்­படி நாங்­கள் வைத்த திட்­டத்­திற்கு நீங்­கள் பெயர் வைப்­பது என்­பது அப்­ப­டித்­தான் பொருத்­தம் என்று நான் கரு­து­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) எனவே, இந்­தத் திட்­டம் வந்­த­தைப் பற்றி உங்­க­ளுக்­கும், எனக்­கும் கவலை இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமெ­ரிக்­கா­வின் அதி­ப­ராக இருந்த ஜான் கென்­னடி , என் நாடு பொரு­ளா­தார வளர்ச்சி பெற்­றி­ருப்­ப­தற்கு கார­ணம் எது­வென்­றால், நெடுஞ்­சா­லை­க­ளின் பங்கு அதி­கம் என்று சொன்­னார். சாலை­கள்­தான் மக்­க­ளு­டைய வாழ்க்­கைத் தரத்­தை­யும், நாட்­டி­னு­டைய பொரு­ளா­தா­ரத்­தை­யும் உயர்த்த ஆதா­ர­மாக திகழ்­கி­றது. இன்று இந்­தி­யா­விலே தமிழ்­நாடு இரண்­டா­வது பெரிய பொரு­ளா­தார வளர்ச்சி பெற்­றி­ருக்­கி­றது என்று சொன்­னால், அதில் நெடுஞ்­சா­லைத் துறை­யி­னு­டைய பங்கு என்­பது அதி­கம். எங்­கள் தலை­வர் முத­ல­மைச்­சர் பொறுப்­பில் இருந்­த­போ­து­தான் திரா­விட மாடல் ஆட்­சி­யில் நெடுஞ்­சா­லைத் துறைக்கு முக்­கி­யத்­து­வம் தந்து 67,211 கிலோ மீட்­டர் நீளம் சாலை பரா­ம­ரிக்­கப்­பட்­டது. 36 இர­யில்வே மேம்­பா­லங்­கள் கட்டி முடிக்­கப்­பட்­டன. 37 இர­யில்வே மேம்­பா­லங்­கள் கட்­டப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றன. விபத்­தைக் குறைப்­ப­தற்­காக 2,638 இடங்­க­ளும், black spot 415 இடங்­க­ளும் கண்­ட­றி­யப்­பட்டு மேம்­ப­டுத்­தப்­பட்­டன. 18–11–2021 முதல் சாலைவிபத்­து­க­ளில் ஏற்­ப­டும் உயிர்ச் சேதத்­தைக் குறைப்­ப­தற்கு இன்­னு­யிர் காப்­போம், நம்­மைக் காக்­கும்–48 திட்­டத்­தைக் கொண்டு வந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கிரா­மப் பகு­தி­க­ளில் அதிக அள­வி­லான தரைப் பாலங்­களை, குறிப்­பாக 1,166 தரைப் பாலங்­களை, உயர் மட்­டப் பாலங்­க­ளாக அமைத்­தோம். கோவை­யில் 1,791 கோடி ரூபாய் மதிப்­பீட்­டி­லான 10.5 கி.மீ. நீளத்­திற்கு உயர் மட்­டப் பாலம் அமைத்து, விஞ்­ஞானி ஜி.டி. நாயுடு அவர்­க­ளது பெயரை சூட்­டி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மதுரை, சிவ­கங்கை மாவட்­டங்­களை இணைக்­கும் 1.33 கி.மீ. மேம்­பா­லம் கட்­டு­வ­தற்கு வீர­மங்கை வேலு­நாச்­சி­யார்  பெயர் சூட்­டப்­பட்­டது. அதோடு மட்­டு­மல்ல; கும­ரி­யில் ஐயன் விவே­கா­னந்­தர் நினை­வுப் பாறைக்­கும் திரு­வள்­ளு­வர் சிலைக்­கும் கடல் நடுவே கண்­ணாடி அறைப் பாலம் கட்­டப்­பட்டு, 30–12–2024 அன்று அன்­றைய முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் திறந்­து­ 
வைக்­கப்­பட்­டது என்­ப­தை­யும் நான் இந்த நேரத்­தில் பெரு­மை­யோடு தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>