<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,68,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 20 2026 17:20:43 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260821T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="21082026-VLR-08" position.sequence="08" ex-ref="21082026-VLR-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">த.வெ.க அர­சின் ‘நூறா­வது நாள்’ படம்:</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="25"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="32">கம்­யூ­னிஸ்­டு­கள்  மற்­றும்  கரப்­பான்  பூச்­சி­க­ளுக்­குத்  தடை! </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup858122_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="18">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.4">ரண்டு நாட்­க­ளுக்கு முன்பு த.வெ.க அரசு தனது இரண்டு சுற்­ற­றிக்­கை­க­ளைத் திரும்­பப் பெற்­றது. அவை தவ­று­த­லா­கவோ, தற்­செ­ய­லா­கவோ வெளி­யி­டப்­பட்ட சுற்­ற­றிக்­கை­கள் அல்ல. த.வெ.க அரசு பொறுப்­பேற்ற இந்த நூறு நாட்­க­ளில் நடத்­தி­வ­ரும் ஜன­நா­ய­கப் படு­கொ­லை­க­ளின் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­கான முன்­னோட்­டம்­தான் இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.4">முத­லா­வ­தாக, கல்­லூ­ரிக் கல்வி இயக்­கு­நர் அலு­வ­ல­கம் சார்­பில் கடந்த 17-ஆம் தேதி அனைத்­துக் கல்­லூ­ரி­க­ளுக்­கும் அனுப்­பப்­பட்ட கடி­தத்­தில், கல்­லூரி மாண­வர்­கள் மற்­றும் இளை­ஞர்­கள், இட­து­சா­ரிக் கட்­சி­கள் மற்­றும் தமிழ்­நாடு காக்­ரோச் ஜனதா கட்சி நடத்­தும் போராட்­டங்­க­ளில் பங்­கேற்­ப­தைத் தடுக்­கும் வகை­யில் பள்­ளிக் கல்வி, உயர்­கல்வி, காவல்­துறை மற்­றும் மாவட்ட நிர்­வா­கம் ஆகிய துறை­க­ளு­டன் ஒருங்­கி­ணைந்து நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு கோரப்­பட்­டி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.4">அடுத்­த­தாக திண்­டுக்­கல் மாவட்­டம், குஜி­லி­யம்
­பாறை வட்­டாட்­சி­யர் (தாசில்­தார்) அய்­யாச்­சாமி, கடந்த 18-ஆம் தேதி சுற்­ற­றிக்கை ஒன்றை வெளி­யிட்­டி­ருந்­தார். அதில், குஜி­லி­யம்­பாறை வட்­டத்­திற்கு உட்­பட்ட அனைத்து வரு­வாய் கிரா­மங்­க­ளி­லும் உள்ள இந்­திய கம்­யூ­னிஸ்ட் மற்­றும் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­க­ளில் உள்ள நபர்­க­ளின் பெயர், முக­வரி ஆகி­ய­வற்­றைச் சேக­ரித்து வரு­வாய் ஆய்­வா­ளர்­கள், வட்­டாட்­சி­ய­ரி­டம் அன்று மாலைக்­குள் நேர­டி­யா­கச் சமர்ப்­பிக்க வேண்­டும்; அனைத்­துக் கிராம உத­வி­யா­ளர்­க­ளும் வரு­வாய் ஆய்­வா­ளர்­க­ளுக்கு உத­விட இதன் மூலம் அறி­வு­றுத்­தப்­ப­டு­கி­றது; அறிக்கை அளிக்­கத் தவறா கிராம உத­வி­யா­ளர்­கள் மீது தகுந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டும் எனத் தெரி­வித்­தி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.4">இந்த இரண்டு உத்­த­ர­வு­க­ளும் கடும் எதிர்ப்பு கார­ண­மா­கத் திரும்­பப் பெறப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆனால் இவை ஒரு முடி­வல்ல, தமிழ்­நாட்­டில் நடக்­க­வி­ருக்­கும் ஜன­நா­ய­கப் படு­கொ­லை­யின் தொடக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.4">இது­வெல்­லாம் உங்­க­ளுக்கு எதை நினை­வூட்­டு­கி­றது? பா.ஜ.க ஆளும் மாநி­லங்­க­ளில் ஜன­நா­யக உரி­மை­கள் ஒடுக்­கப்­ப­டும் சம்­ப­வங்­களை நினை­வூட்­டி­னால் அதில் மிகை ஒன்­று­மில்லை. யோகி ஆதித்­ய­நாத் உத்­த­ரப் பிர­தே­சத்­தில் நடத்­திக்­கொண்­டி­ருக்­கும் காட்­டாட்­சி­யை­யும் மிஞ்­சி­விட்­டது விஜய்­யின் ஆட்சி. டெல்­லி­யில் நீட் முறை­கே­டு­க­ளுக்கு எதி­ரா­கப் போரா­டிய மாண­வர்­களை பா.ஜ.க அரசு எவ்­வாறு ஒடுக்­கி­யதோ, அதே­போல தமிழ்­நாட்­டில் நீட்­டிற்கு எதி­ரா­கப் போரா­டிய மாண­வர்­களை விஜய் அரசு ஒடுக்­கி­யது. திரா­வி­டர் கழ­கம் நடத்த முயன்ற வாக­னப் பேர­ணிக்­குத் தடை விதித்­தது. சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் உட்­பட அரசை விமர்­சிக்­கும் தி.மு.கவி­னர் கைது செய்­யப்­பட்டு, நீதி­மன்­றத்­தில் இந்த அரசு குட்டு வாங்கி அவர்­களை விடு­தலை செய்­தது. ஊட­க­வி­ய­லா­ளர் விஜ­யன், விசா­ரணை என்ற பெய­ரில் ஒரு பொய் வழக்­கில் மிரட்­டப்­பட்­டார். த.வெ.க அர­சையோ விஜய்­யையோ விமர்­சிக்­கும் சமூக ஊட­கப் பக்­கங்­கள் முடக்­கப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.4">ஆங்­கி­லத்­தில் knee-jerk reaction என்­றொரு பதம் உண்டு. தன்­னி­யல்­பான அச்­சத்­தைச் சமூ­கத்­தில் விதைத்­தல்; அதன் மூல­மா­கத் தன்னை எதிர்ப்­ப­வர்­க­ளின் மனங்­க­ளை­யும் செயல்­க­ளை­யும் ஒடுக்­கு­தல். இதை உல­கின் எல்லா பாசிச அர­சு­க­ளும் செய்­தி­ருக்­கின்­றன. “பாசி­சமா பாயா­சமா” என்று நக்­க­ல­டித்­த­வர், முழு பாசி­சப் பாயா­ச­மாக மாறி நிற்­கி­றார். பா.ஜ.கவைக் கொள்கை எதிரி என்று ஒப்­புக்கு கூறி­விட்டு, பா.ஜ.க அர­சு­களே செய்­யத் தயங்­கும் காரி­யங்­க­ளைச் செய்­யத் தயா­ரா­கி­விட்­டார். இது பா.ஜ.கவின் நிழல் அரசு என நான் திரும்­பத் திரும்­பக் குறிப்­பி­டு­வ­தன் கார­ணம் இது­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.4">தமிழ்­நாட்­டில் மட்­டு­மல்ல, இந்­தியா முழுக்க, ஏன் உல­கம் முழுக்க மாண­வர்­க­ளின் ஜன­நா­ய­கப் போராட்­டங்­க­ளின் வழி­யா­கத்­தான் மாபெ­ரும் மாற்­றங்­கள் நடந்­தி­ருக்­கின்­றன. தமிழ்­நாட்­டில் இந்தி எதிர்ப்­புப் போராட்­டம், ஜல்­லிக்­கட்­டுப் போராட்­டம், சமீ­பத்­தில் கரப்­பான் பூச்­சிக் கட்­சி­யி­னர் போராட்­டம் எனப் பல உதா­ர­ணங்­க­ளைக் கூற­லாம். ஆசி­யா­வில் ‘அரே­பிய வசந்­தம்’ உள்­ளிட்ட மாண­வர் இயக்­கங்­கள் ஏற்­ப­டுத்­திய மாற்­றங்­கள் மிகப்­பெ­ரி­யவை. ஆனால், இளை­ஞர்­க­ளின் ஆட்சி என்­றும் இளை­ஞர்­க­ளால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஆட்சி என்­றும் தம்­பட்­ட­ம­டித்­துக்­கொள்­ளும் த.வெ.க அரசு, மாண­வர்­க­ளின் அர­சி­யல் உரி­மை­களை நேர­டி­யாக ஒடுக்­கும் சுற்­ற­றிக்­கையை அனுப்­பு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.4">ஏற்­கெ­னவே தனி­யார் கல்­லூ­ரி­க­ளில் மாண­வர் அர­சி­யல் போராட்­டங்­கள் பல்­வேறு வழி­க­ளில் தடை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன. அர­சுக்­கல்­லூரி மாண­வர்­கள் மட்­டுமே இப்­போ­தைக்கு ஓர­ளவு சமூ­கப் பிரச்­சி­னை­க­ளுக்­கா­க­வும் கல்­விப் பிரச்­சி­னை­க­ளுக்­கா­க­வும் போராட்­டக் களங்­க­ளுக்கு வரு­கி­றார்­கள். அதை­யும் ஒடுக்க இந்த அரசு முயல்­கி­றதா? தொடர்ந்து மாண­வர்­களை அர­சி­ய­லற்­ற­வர்­க­ளாக மாற்­று­வ­து­தான் தனது தனி­ந­பர் வழி­பாட்டு அர­சி­ய­லுக்கு நல்­லது என விஜய் நினைக்­கி­றாரா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.4">கரப்­பான் பூச்­சிக் கட்சி பா.ஜ.கவுக்கு எதி­ரா­கத் தொடங்­கப்­பட்ட கட்சி. அந்­தக் கட்­சி­யின் போராட்­டங்­களை அனு­ம­திக்க வேண்­டாம் எனக் குறிப்­பா­கத் தெரி­வித்­துச் சுற்­ற­றிக்கை அனுப்­பு­கி­றார்­கள். டெல்­லி­யில் நீட் எதிர்ப்­புப் போராட்­டத்­தில் ஒன்­றிய அர­சுக்கு எதி­ரா­கக் கரப்­பான் பூச்­சிக் கட்சி மாண­வர்­க­ளு­டன் இணைந்து நின்று போரா­டி­ய­வர்­கள் இட­து­சாரி மாண­வர் அமைப்­பு­கள். அந்த அமைப்­பு­க­ளின் போராட்­டங்­க­ளை­யும் அனு­ம­திக்க வேண்­டாம் என்று அந்­தச் சுற்­ற­றிக்கை கூறு­கி­றது. அதா­வது யாரெல்­லாம் பா.ஜ.கவுக்கு எதி­ரி­களோ, அவர்­கள் எல்­லாம் த.வெ.க அர­சின் எதி­ரி­கள். இது யாரு­டைய அரசு? யாருக்­காக வேலை செய்­யும் அரசு? காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த உயர்­கல்­வித் துறை அமைச்­சர் சட்­ட­மன்­றத்­தில் இது தொடர்­பான கேள்­விக்கு, “அந்­தக் கட்­சி­யின் பெயர் தவ­று­த­லாக இடம்­பெற்­று­விட்­டது” என்று கடந்து செல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.4">சொல்ல வேண்­டிய ஒன்று விடப்­பட்­டால்­தான் அது தவறு. மாறாக இரண்டு அமைப்­பு­க­ளின் பெயர்­கள் அழுத்­திச் சொல்­லப்­பட்­டால் அது தவ­றல்ல, நோக்­கம். காங்­கி­ர­ஸும் பா.ஜ.கவும் த.வெ.கவும் ஒரே நேர்­கோட்­டில் ஒரே நோக்­கத்­திற்­காக வேலை செய்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.4">அடுத்­த­தாக, குஜி­லி­யம்­பாறை வட்­டா­ரத்­தில் இட­து­சா­ரி­கள் கணக்­கெ­டுப்பு விவ­கா­ரம். பொது­வாக ஒரு பகு­தி­யில் சமூக விரோ­தி­க­ளைத்­தான் கணக்­கெ­டுப்­பார்­கள். ஆனால் ஒரு அர­சி­யல் இயக்­கத்­தைச் சேர்ந்­த­வர்­களை ஏன் கணக்­கெ­டுக்க வேண்­டும்? அவர்­க­ளைக் கண்­கா­ணிப்பு வளை­யத்­திற்­குள் கொண்­டு­வ­ரு­வ­து­தான் ஒரே நோக்­க­மாக இருக்க முடி­யும். வருங்­கா­லத்­தில் அவர்­கள் ஏதே­னும் போராட்­டங்­க­ளில் ஈடு­ப­டு­கி­றார்­களா எனக் கண்­கா­ணிக்க மட்­டுமே அர­சிற்கு இந்­தத் தக­வல் பயன்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.4">திண்­டுக்­கல் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சச்­சி­தா­னந்­தம், ‘’கைரே­கைச் சட்­டம் அம­லில் இருந்த காலத்­தி­லும், அர­சி­யல் இயக்­கங்­கள் தடை செய்­யப்­பட்ட காலத்­தி­லும்­கூட இது­போன்ற சுற்­ற­றிக்­கையை வட்­டாட்­சி­யர்­கள் பிறப்­பித்­த­ தில்லை’’ என்­கி­றார். இந்­தச் சுற்­ற­றிக்­கைக்­கும் எதிர்ப்­புக் கிளம்­பி­ய­தும், ‘’சுற்­ற­றிக்கை வெளி­யிட்ட குஜி­லி­யம்­பாறை வட்­டாட்­சி­யர் அய்­யாச்­சா­மி­யைப் பணி­யிட மாற்­றம் செய்­து­விட்­டோம்’’ என்­ப­தோடு சட்­ட­மன்­றத்­தில் அமைச்­சர் இந்­தப் பிரச்­சி­னையை மூடி மறைக்­கி­றார். ஒரு வட்­டாட்­சி­யர் இப்­படி ஒரு சுற்­ற­றிக்­கை­யைத் தன்­னிச்­சை­யாக அனுப்ப முடி­யுமா? அதற்கு அவ­ருக்கு அதி­கா­ரம் இருக்­கி­றதா? அதன் நோக்­கம் என்ன? அர­சி­யல் கட்­சி­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளைக் கண்­கா­ணிக்­கும் முயற்­சி­யின் ஒரு பரி­சோ­தனை முயற்­சி­யாக இது செய்­யப்­பட்­டதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.4">அரசு இயந்­தி­ரத்­தில் இருக்­கும் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் ஆத­ர­வா­ளர்­கள் எடப்­பாடி பழ­னி­சாமி ஆட்­சிக் காலத்­தில் செயல்­பட்­ட­து­போல இப்­போது தன்­னிச்­சை­யா­கச் செயல்­பட ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்­களா, அல்­லது த.வெ.க அர­சின் கொள்­கை­களே ஒன்­றிய அர­சின் கொள்­கை­களா என்­ப­து­தான் இப்­போ­துள்ள கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.4">ஹிட்­ல­ரின் நாஜி ஜெர்­ம­னி­யில்­தான் இட­து­சா­ரி­கள் கணக்­கெ­டுப்பு நடை­பெற்­றது. இப்­போது அதன் ஒரு வடி­வத்­தைத் தமிழ்­நாட்­டில் காண்­கி­றோம். இந்த அர­சைத் தாங்­கிப் பிடிக்­கும் இட­து­சா­ரி­கள் இதை எவ்­வ­ளவு மென்­மை­யா­கக் கடந்து செல்­கி­றார்­கள் என்­ப­து­தான் அவர்­க­ளது அர­சி­யல் வீழ்ச்­சி­யின் அவ­லம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.4">விஜய்­யின் நூறு நாள் ஆட்­சியை ‘நூறா­வது நாள்’ திரைப்­ப­டத்­து­டன்­கூட ஒப்­பிட இய­லும். தோண்­டத் தோண்ட ஜன­நா­ய­கத்­தின் எலும்­புக்­கூ­டு­கள்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>