<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,64,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Aug 21 2026 14:49:31 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260822T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="22082026-CBE-04" position.sequence="04" ex-ref="22082026-CBE-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="73">கழகத்தின்  கொள்கை –-- குறிக்கோளும்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="69">சனநாயகம் மிளிரும் -– சட்ட திட்டங்களும்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup825991_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15.7">ஒ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">ரு நாட்டை வழி­ந­டத்­தத் தேவை அர­சி­யல் சட்­டம். சட்­டம் ஒரு கட்­சியை வழி­ந­டத்­தத் தேவை கட்சி சட்­ட­திட்­டங்­கள். நாட்­டிற்கு எப்­படி ஒரு அர­சி­யல் சட்­டம் (Constitution) தேவையோ அதே போல கட்­சிக்­கும் சட்­ட­திட்­டங்­கள்-Party Constitution, அவ­சி­ய­மா­கும். பல அர­சி­யல் கட்­சி­க­ளின் வர­லாற்­றில் கட்­சிக்­கான சட்­ட­திட்­டம் சரி­வர இல்­லா­த­தால் தான் அவை­க­ளால் நிலைத்து நிற்க முடி­யா­மல் போனது என்­பது வர­லாறு ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">திரா­வி­டர்­க­ளின் விடி­வெள்­ளி­யாக, வாராது வந்த மாம­ணி­யாய் திகழ்ந்த நீதிக்­கட்­சி­யின் “கட்சி சட்ட திட்­டங்­கள் நடை­மு­றைக்­குப் பொருந்தி வரா­த­தால் தான் அக்­கட்சி ஒரு தேக்­க­நி­லையை அடைய நேரிட்­டது” என்று சொல்­லப்­ப­டு­கி­றது. அந்த நேரத்­தில் நீதிக்­கட்­சிக்கு தோள் கொடுத்து காப்­பாற்­றிய பெருமை தந்தை பெரி­யார் அவர்­க­ளையே சாரும். அந்த நீதிக்­கட்­சி­யின் நீட்­சி­தான் திரா­வி­டர் கழ­க­மாக உருப்­பெற்று அதன் வழி- திரா­வி­டத்­தின் திசை­காட்­டி­யாம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் உத­ய­மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">தமிழ்­மக்­க­ளின் உரி­மை­க­ளைப் பாது­காக்­கும் நோக்­கத்­து­ட­னும், நீதிக்­கட்­சி­யின் சமூ­க­நீ­தியை, சுய­ம­ரி­யாதை இயக்­கத்­தின் தன்­மான உணர்வை, பெரி­யா­ரின் சமூக மாற்­றத்­திற்­கான சித்­தாந்­தத்தை அர­சி­யல் ரீதி­யாக சாதித்­துக் காட்­ட­வும், அறி­ஞர் அண்ணா அவர்­க­ளால் ஒரு சன­நா­யக இயக்­க­மாக தோற்­று­விக்­கப்­பட்­டது தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">கழ­கத்­தின் சட்ட திட்­டங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">வடி­வம் பெற்ற வர­லாறு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">கழ­கம் துவங்­கிய போது அதை வழி நடத்த சட்ட திட்­டம் தேவை என்­பதை நன்கு உணர்ந்த பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள், உல­கின் பல்­வேறு நாடு­க­ளில் இயங்­கிய, இயங்கி வந்த கட்­சி­க­ளின், அமைப்­பு­க­ளின், வர­லாற்­றை­யும் அக்­கட்­சி­க­ளின் சட்­ட ­திட்­டங்­க­ளை­யும் அறிந்து, பல­வாறு ஆய்ந்து, கழக சட்­ட­திட்ட அமைப்­புக்­கு­ழுவை அமைத்து, அதன் மூலம் கழ­கத்­திற்­கான சட்­ட­திட்­டங்­களை உரு­வாக்கி பொதுக்­கு­ழு­வின் ஒப்­பு­தலை பெற்று நடை­மு­றைப்­ப­டுத்­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">கழ­கத்­தின் உச்­ச­பட்ச அமைப்பு பொதுக்­குழு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">கட்­சி­யின் அனைத்து நிலை­க­ளி­லி­ருந்­தும் பிர­தி­நி­தி­கள் இடம்­பெ­றும் வாய்ப்­புள்ள அமைப்பு கழ­கப் பொதுக்­கு­ழு­வா­கும். கொள்­கை-­ -– கு­றிக்­கோள் விளக்­கங்­க­ளை­யும், சட்­ட­திட்ட விதி­களை இயற்­ற­வும், திருத்­த­வும், நீக்­க­வும், பொதுக்­கு­ழுவே உரிமை படைத்­த­தா­கும். கழ­கத்­தின் முழு அதி­கா­ரம் கொண்ட அமைப்பு பொதுக்­கு­ழு­வா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">கழ­கத்­தின் Highest Policy making body - கொள்கை வகுக்­கும் உயர்­அ­மைப்பு Highest decision making body-உரி­ய­மு­டி­வு­கள் எடுக்­கும் உயர் அமைப்பு The Apex decision making body -உய­ரிய முடி­வு­கள் எடுக்­கும் உச்ச அமைப்பு பொதுக்­குழு ஆகும். இதைத்­தான் நெஞ்­சம் நிறைந்த தலை­வர் கலை­ஞர் அவர்­கள் முர­சொலி கடி­தத்­தில்-­ இ­யக்­கத்­தின் நலன்,வளர்ச்சி இவற்றை மட்­டுமே இலக்­கா­கக் கொண்டு திறந்­த­ம­ன­து­டன் கலந்­தா­லோ­சிக்­கக் கூடு­வ­து­தான் கழ­கப் பொதுக்­குழு எனக் குறிப்­பிட்­ட­டுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">CRITICISM IS NOT WELCOME IF IT IS NOT ACCOMPAINED BY ADVICE என்­ப­தற்கு ஏற்ப அக்­க­றை­யோடு கூடிய விமர்­ச­னத்தை “தனித்­தும்- இணைந்­தும், முரண்­பட்­டும் எழும் அனைத்து நோக்­கங் ­க­ளும் கருத்­து­க­ளும், எண்­ணங்­க­ளும் (views and opinions) விவா­திக்­கப்­பட்டு பொதுக்­கு­ழு­வின் ஒரு­மித்த முடி­வுக்கு வந்து, அதன் பின்பு செய­லாக்­கத்­திற்கு நக­ரும் சன­நா­யக அமைப்பு தி.மு.க.இயக்­கத்­தின் KEYPOST­எ­ன­ வர்­ணிக்­கப்­ப­டும்.கழ­கத்­த­லை­வர் / பொதுச்­செ­ய­லா­ளர் / பொரு­ளா­ளர் உள்­ளிட்­ட­வை­க­ளைத் தேர்வு செய்­யும் கழ­கத்­தின் Supreme Body பொதுக்­குழு ஆகும். எனவே தான் பொதுக்­குழு “கழ­கத்­தின் இத­யம்”  என வர்­ணிக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">அறி­ஞர் அண்ணா அவர்­கள் வகுத்த குறிக்­கோ­ளுக்­கேற்ப தமி­ழ­கம், ஆந்­தி­ரம், கர்­நா­ட­கம் ஆகிய நான்கு மொழி வழி மாநி­லங்­க­ளி­லும் இந்­திய அர­சு­ரிமை, ஒரு­மு­கத்­தன்மை, ஒரு­மு­கத்­தன்மை, அர­சி­யல் அமைப்­புச் சட்­டம் ஆகி­ய­வற்­றுக்கு உட்­பட்டு நெருங்­கிய திரா­விட கலாச்­சார கூட்­டு­றவு நிலவ பாடு­ப­டு­வது. அர­சி­யல் நிர்­ண­யச் சட்­டத்­தில் முழு நம்­பிக்­கை­யும், பற்­று­று­தி­யும் கொண்டு சம­தர்­மம், சம­யச்­சார்­பின்மை, சன­நா­ய­கம், ஆகிய லட்­சி­யங்­க­ளில் முழு ஈடு­பா­டும்,பற்­றும் கொண்டு இந்­திய நாட்­டின் இறை­யாண்மை, ஒற்­றுமை,ஒரு­மைப்­பாடு ஆகி­ய­வற்றை கட்­டிக்­காப்­பது தான் தி.மு.கழ­கத்­தின் குறிக்­கோள் என்­றும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">அறி­ஞர் அண்ணா வலி­யு­றுத்­திய கடமை, கண்­ணி­யம், கட்­டுப்­பாடு, தலை­வர் கலை­ஞர் வலி­யு­றுத்­திய கழ­கத்­தின் இத­ய­கீ­த­மாம் ஐம்­பெ­ரும் முழக்­கங்­க­ளின் அடிப்­ப­டை­யில் அர­சி­ய­லில் சன­நா­யக உரி­மை­க­ளைப் பாது­காத்து ஆதிக்­க­மற்ற சமு­தா­யத்தை அமைத்­தி­ட­வும், பகுத்­த­றி­வு­அ­டிப்­ப­டை­யில் மறு­ம­லர்ச்­சிக்­கான சீர்­தி­ருத்­தப் ­பணி ஆற்­றி­ட­வும், பொரு­ளா­தா­ரத்­து­றை­யில் வறு­மையை வென்று, சம­தர்ம அடிப்­ப­டை­யில் எல்­லோ­ரும் நல்­வாழ்வு பெற வழி வகை கண்­டி­ட­வும் பிற­மொழி ஆதிக்­கத்­திற்கு இடங்­கொ­டா­மல் அந்­தந்த மாநில மொழி­களை வளர்த்­தி­ட­வும், அவை­க­ளுக்­கான உரிய இடத்தை பெற்­றுத்­த­ர­வும் மத்­திய அர­சில் குவிந்து கிடக்­கும் அதி­கா­ரங்­கள் பர­வ­லாக்­கப்­பட்டு மாநி­லங்­க­ளில் சுயாட்­சி­யும்- மத்­தி­யில் கூட்­டாட்­சி­யும் (Autonomy for states and Federation at Centre) உரு­வா­கி­ட­வும் தொண்­டாற்­று­வது என்ற கோட்­பாட்­டோடு இயங்­கும் அர­சி­யல் இயக்­கம் தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">பட்­டொளி வீசும் கழ­கத்­தின் 
இரு­வண்­ணக்­கொ­டி­யின் நோக்­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">கருப்பு :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">திரா­வி­டர்­க­ளின் அர­சி­யல், பொரு­ளா­தார, சமு­தாய வாழ்­வில் உள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்­கும் அறி­கு­றி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">சிகப்பு :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">அம்­மூன்று நிலை­க­ளி­லும் உள்ள இருண்ட நிலையை படிப்­ப­டி­யா­கப் போக்கி ஒளி ­நி­லையை உண்­டாக்­க­வேண்­டும் என்­பதை காட்­டும் அறி­கு­றி­யா­கும். (டி.எம். பார்த்­த­சா­ரதிஎழு­திய திரா­விட இயக்க வர­லாறு பக்­கம் 94).இதைத்­தான் பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் “காலப்­போக்­கில் இயக்­கத்­தின் கொடி­யில் கருப்புவண்­ணத்தை விட சிகப்பு வண்­ணம் அதி­க­மா­கும் காலம் வரும்” என்ற நம்­பிக்­கையை தெரி­வித்­தார்­கள்.கட்­சி­யின் விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு கட்­சி­யில் சேரு­வோ­ருக்கு கட்சி அங்­கீ­கார உறுப்­பி­னர் அட்டை வழங்­கும் நடை­முறை கொண்டு வரப்­பட்­டது. கையால் எழுதி பூர்த்தி செய்து பொதுச்­செ­ய­லா­ளர் கையொப்­ப­மிட்ட உறுப்­பி­னர் உரி­மைச்­சீட்டு வழங்­கப்­பட்­டது. இதைத் தான் இன்­றும் சில முத்த முன்­னோ­டி­கள் என்­னி­டம் இத்­தனை உறுப்­பி­னர் அட்டை உள்­ளது. அதில் பொதுச்­செ­ய­லா­ளர் அண்ணா கையொப்­ப­மிட்­டுள்­ளார், நாவ­லர் கையொப்­ப­மிட்­டுள்­ளார் என்று தங்­க­ளின் முதா­தை­யார் சொத்­தின் மூலப்­பத்­தி ­ரத்­தைக் காட்டி பெரு­மைப்­ப­டு­வ­தைப் போன்று மகிழ்­வதை இன்­றும் காண­லாம். ஒரு கிளை அமைய தேவைப்­ப­டும் உறுப்­பி­னர்­களை ஒரே ஊரில் சேர்க்­க­மு­டி­யா­மல், அடுத்­த­டுத்த ஊர்­க­ளில் ஒவ்­வொ­ரு­வ­ராக சேர்த்து கிளைக்­க­ழ­கம் அமைக்­கப்­பட்ட வர­லாறு கழ­கத்­தின் ஆரம்­ப­கால வர­லாறு ஆகும். ஒரு காலக்­கட்­டத்­திற்கு பிறகு கழ­கத்­தின் வளர்ச்சி வேகம் பெற்று ஊர்­கிளை தொடங்கி தலை­மைக் கழக அமைப்­புத் தேர்­தல் வரை சன­நா­யக ரீதி­யில் நிர்­வா­கி­க­ளைத் தேர்ந்­தெ­டுக்­கும் அமைப்­பாக உரு­வெ­டுத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">1974ம்ஆண்டு வரை வட்­டக் கழ­கம் என்­றி­ருந்த அமைப்பு ஒன்­றி­யக் கழ­கம் என்ற நிலைக்கு விரி­வ­டைந்­தது. ஒன்­றிய / நகர / பேரூர் / பகு­திக்­கழக அமைப்­பு­கள் மூலம் மாவட்­டக்­க­ழக நிர்­வா­கி­ கள் தேர்வு முடிந்து, பொதுக்­கு­ழு­ உ­றுப்­பி­னர்­கள் பங்­கு­பெ­றும் பொதுக்­கு­ழு­வில்தான் கழ­கத் ­த­லை­வர், பொதுச்­செ­ய­லா­ளர், பொரு­ளா­ளர்­ஆகிய பொறுப்­பு­க­ளுக்­கான தலை­மைக் கழ­கத் தேர்­தல் நடை­பெ­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">தலை­வர். பொதுச்­செ­ய­லா­ளர், பொரு­ளா­ளர் பொறுப்­பு­க­ளுக்கு வேட்­பு­மனு அளித்­து­விட்டு பொதுக்­கு­ழு­விற்கு வரும் தலை­வர், பொதுச் செய­லா­ளர், பொரு­ளா­ளர் உள்­ளிட்­டோர் பொதுக்­குழு உறுப்­பி­னர்­க­ளில் ஒரு உறுப்­பி­ன­ராக கீழே அமர்ந்­தும், பொதுக்­குழு உறுப்­பி­னர்­க­ளில் கட்­சி­யின் முத்­த­வர் ஒரு­வர் தேர்­தல் ஆணை­ய­ராக மேடை­யில் அமர்ந்­தும் கழ­கத்­த­லை­வர், பொதுச்­செ­ய­லா­ளர், பொரு­ளா­ளர் பொறுப்­புக்கு இன்­னின்­னார் ஒரு­ம­ன­தாக தேர்வு பெறு­கி­றார்­கள் என அறி­வித்த பிறகுதான் தலை­வர், பொதுச்­செ­ய­லா­ளர், பொரு­ளா­ளர் ஆகி­யோர் மேடைக்­குச் சென்று அம­ரும் உன்­ன­த­மான சன­நா­யக் நடை­மு­றையை பின்­பற்­றும் இயக்­கம் தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">கழ­கம் துவங்­கி­ய­போது நிறு­வப்­பட்­ட­து­தான் “சட்ட திட்ட- உரு­வாக்­கக்­குழு” ஆகும். அதன் பிறகு கழ­கம் பெற்­றுள்ள வளர்ச்­சிக்கு ஏற்­ப­வும், கழ­கத்தை வழி­ந­டத்­திச் செல்­வ­தில் ஏற்­பட்­டுள்ள அனு­ப­வங்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டும் கழக அமைப்­பு­க­ளின் நிர்­வாக நடை­மு­றை­கள் மேலும் செம்­மை­யாக அமை­யும் வகை­யி­லும் அவ்­வப்­போது அமை­வ­து­தான் கழ­கத்­தின் சட்ட திட்ட திருத்­தக்­கு­ழு­வா­கும்.கட்­சி­யின் வளர்ச்­சிக்­கு­ஏற்ப தேவைப்­ப­டும் மறு­கட்­ட­மைப்பு சட்­ட­திட்­டத் திருத்­தங்­க­ளின் மூலம்­தான் பெறப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">―திரா­விட இயக்­கத்­தில் வேர் நிலை தொடர்பு கொண்ட கட்சி தி.மு.க. திரா­விட இயக்­கத்­தின் அர­சி­யல் வெளிச்­சம் தி.மு.க. கொள்­கை­யில் வைரம் பாய்ந்த இயக்­கம் தி.மு.க. அர­சி­யல் முதிர்ச்­சி ­யோடு தீவிர அர­சி­யல் கட்­சி­யாக (SERIOUS POLITICAL PARTY) செயல்­ப­டும் கட்சி தி.மு.க. கடல் கடந்து வாழும் ஒட்­டு­மொத்­தத் தமிழ் இனத்­தின் தார்­மீக ஆத­ரவு பெற்ற ஒரே நம்­பிக்கை நட்­சத்­தி­ரம் தி.மு.க. கொள்கை குறிக்­கோளை அடைய அழுத்­த­மான நம்­பிக்­கை­யு­டன் பின்­பற்­றும் கட்சி உறுப்­பி­னர்­களை(HARDCORE PARTY MEMBERS) கொண்ட கட்சி.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">DMK HAS A STRONG TRADITIONAL VOTE BANK</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">DMK HAS A STRONG TRADITIONAL SUPPORT</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">BASE</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">என்ற மக்­க­ளின் நிரந்­த­ர­மான ஆத­ரவை பெற்­றுத்­தி­க­ழும் இயக்­கம் தி.மு.க. எனவே தான் தி.மு.க “ஆழ­மாக வேரூன்றி, பல­மான கட்­ட­மைப்­பு­டன் இயங்­கும் அர­சி­யல் கட்சி”.-DEEPROOTED AND WELLORGANISED POLITICAL PARTY”  என்ற பெரு­மை­யும் கொண்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">1993ம் ஆண்டு வாக்­கில் கொடிச்­சின்­னம் பற்­றிய வழக்­கில் கழ­கத்­தின் சார்­பில் வாதிட்டு வென்ற மூத்த வழக்­க­றி­ஞர்  கபில் ­சி­பல் சொன்­ன­தாக வியப்­பு­டன் அண்­ணன் முர­சொலி மாறன் பொதுக்­கு­ழு­வில் சொன்­னது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">கலை­ஞர் தலை­மை­யில் இயங்­கும் தி.மு.க தான் உண்­மை­யான தி.மு.க. என்­று­ வா­தா­டி”­ 
கட்­சி­யை­யும் கொடி­யை­யும்” காப்­பாற்­றிக்­கொடுக்க எனக்கு (கபில்­ சி­ப­லுக்கு) பெரி­தும் உத­வி­யது, “கலை­ஞ­ரின் வியூ­க­மும் கழ­கத்­தின் சட்­ட­ திட்­டங்­களும்­தான் என்­ப­தா­கும்” அப்­ப­டிப்­பட்ட 
சட்­ட­திட்­டத்­தின் வலிமை தான் கழ­கத்தை ஆற்­றல் மிக்க இயக்­க­மா­கக் கட்­டிக் காத்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">பிரி­வினை தடைச்­சட்­டம் கொண்டு வந்­த­போது கழக சட்­ட­திட்­டத்­தில் இடம் பெற்­றி­ருந்ததிரா­விட நாடு கோரிக்­கையை தவிர்த்து அதற்கு ஈடாக இந்­திய அர­சி­யல் சட்­டத்­திற்கு உட்­பட்டு இயங்­கும் என்ற திருத்­தத்தை கொண்டு வந்து கழ­கத்தை காப்­பாற்­றிய அறி­ஞர் அண்ணா அவர்­கள் சொன்­னது. -</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">“கழ­கத்தை அழிக்க சட்­டம் கொணர்ந்­த­னர்: சட்­டத்தை திருத்தி கழ­கத்­தைக் காப்­போம்” “சூட்­சு­மம் புரி­கி­றதா?”தம்பி! என்­ப­தா­கும்.கல்­ல­ணை­யைப்­போல் கழ­கத்­தின் வேரி­லேயே சன­நா­யக நீர்­தான் பாய்ச்­சப்­ப­டு­கி­றது என்­றும். கரி­கால் பெரு­வ­ளத்­தான் கட்­டி­யுள்ள வலி­மை­யான பலம் கொண்­டது தி.மு.க என்­றும் இன­மா­னப் பேரா­சி­ரி­யர் அவர்­கள் குறிப்­பிட் ­டுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">திரா­விட இயக்­கத்­தின் இன்­றைய நிலைத்த அர­சி­யல் அடை­யா­ளம் தி.மு.க. உட்­கட்சி சன­நா­ய­கத்­திற்கு இட­ம­ளிக்­கும் இயக்­கம் தி.மு.க. உட்­கட்சி தேர்­தலை தொடர்ந்து முறை­யாக நடத்தி வரும் இயக்­கம் தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">அனைத்து சமு­தா­யத்­திற்­கும் கட்சி பொறுப்­பு­க­ளில் உரிய பிர­தி­நித்­து­வம் அளிக்­கும் கட்சி தி.மு.க. அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய சன­நா­ய­கத்தை (INCLUSIVEDEMOCRACY) யைப் பின்­பற்­றும் இயக்­கம் தி.மு.க அனைத்து சமு­தா­யத்­தி­ட­மும் “நட்பு நல்­லு­ணர்­வு­டன்’ BONHOMIE - A FEELING OF FRIENDLYNESS- ஆக அணு­கும் இயக்­கம் தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">MAJORITY SHOULD BE RESPECTED: MINORITY SHOULD BE PROTECTED பெரும்­பான்மை சமு­தா­யத்­திற்­கு­ரிய மரி­ய­ாதையை அளித்து சிறு­பான்மை சமு­தா­யத்­திற்­குப் பாது­கா­வ­ல­னாக திக­ழும் இயக்­கம் தி.மு.க/ FEDERATION OF ALL எனவே தான் இது அனைத்து சமு­தா­யங்­க­ளை­யும் உள்­ள­டக்­கிய ஒரு கூட்­ட­மைப்­பாக -– DMK IS A FEDERATION COMMUNITIES -–ஆக விளங்­கு­கி­றது. இதைத் தான் அறி­ஞர் அண்ணா அவர்­கள் “தி.மு.க. கழ­கம் ஒரு சாதா­ரண இயக்­கம் அல்ல. ஒட்­டு­மொத்த தமிழ் சமு­தா­யத்­தின் உரி­மையை வென்­றெ­டுக்க புறப்­பட்ட இயக்­கம்” என்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">சரி­யான கொள்கை மட்­டும் போதாது கொள்­கையை வென்­றெ­டுக்க ஸ்தாபன உத்­தி­ர­வா­தம் வேண்­டும் என்ற மாமேதை லெனின் வரி­க­ளுக்­கேற்ப திரா­விட இயக்­கக் கொள்­கை­களை நிறை­வேற்­றும் அமைப்­பாக இயங்கி வரு­வது தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">சோம்­நாத் சட்­டர்­ஜி­யும் - கட்­சிக் கட்­டுப்­பா­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">நாடா­ளு­மன்ற மக்­க­ள­வை­யின் தலை­வ­ராக இருந்­த­வர், மார்க்­சிய பொது­உ­டைமை இயக்­கத்தை சார்ந்த சோம்­நாத் சட்­டர்ஜி மேற்கு வங்­கா­ளத்தை சார்ந்த மார்க்­சிய பொது உடைமை வாதி. நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக பல ஆண்­டு­கா­லம் இருந்­த­வர் சோம்­நாத் சட்­டர்ஜி ஆவார். அர­சுக்கு எதி­ராக வாக்­க­ளிக்க சட்­டர்­ஜிக்கு கட்­சிக்­கட்­டளை(WHIP)பிறப்­பிக்­கப்­பட்­டது. சபா­நா­ய­கர் கட்சி அர­சி­ய­லுக்கு அப்­பாற்­பட்­ட­வர் என்ற நிலையை சட்­டர்ஜி எடுத்­தார். கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டார். அப்­போது CPM கட்சி சொன்­னது “திரு சட்­டர்ஜி நாட்­டின் சட்­டத்தை மதித்து நடந்­தி­ருக்­க­லாம். ஆனால் கட்­சி­யின் சட்­டம் அதை­விட மேலா­னது என்­ப­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">அப்­போது சாட்­டர்ஜி “தன் வாழ்­வின் மிகக் கடு­மை­யான தரு­ணம் இது” என தனக்­குத் தானேசொல்­லிக்­கொண்­டார் என்­பது ஒரு கட்­சி­யின் சட்­ட­திட்­டத்­தின் வலி­மையை உணர்த்­தும் நிலை­ 
யா­கும். FLAT ORGANISATION ஒரே தலைமை : அதன் கீழ் கலர் கல­ராக பத­வி­கள் இருந்­தா­லும் அவை அனைத்­தும் ஒரே மட்­டத்­தில் என்ற நிலை­யில் சன­நா­ய­கத்­திற்கு உகந்­த­தாக செயல்­ப­டாத கட்­சி­கள் FLAT ORGANISATION தரை­மட்ட நிலை­யி­லேயே உள்ள கட்­சி­கள் என பார்க்­கப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">சில கட்­சி­க­ளுக்கு அதன் சட்­ட­திட்­டங்­களே திருப்­பித் தாக்­கும் BOOMERANG ஆக அமைந்­து­வி­டு­வது குறித்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">1. ஒரு கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளரை “கட்­சி­யில் லட்­சக்­க­ணக்­கில்?- – கோடிக்­க­ணக்­கில் ? உள்ள அடிப்­படை உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் ஒன்று கூடி தேர்ந்­தெ­டுக்க வேண்­டும்”. என்ற நடை­முறை சாத்­தி­ய­மில்­லாத கட்சி சட்­டத்­தால் ஒரு அர­சி­யல் கட்சி திண­று­வ­தை­யும், தேர்­தல் ஆணை­யம் முன்பு முன்பு விழி  பிதுங்கி நிற்­ப­தை­யும் அர­சி­ய­லில் பார்க்­க­மு­டி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">கழ­க­மும் சன­நா­ய­க­மும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">1956ல் திருச்சி மாநாட்­டில் “பொதுச்­செ­ய­லா­ள­ராக தேர்வு பெற்­றி­ருந்த நாவ­லர் அவர்­களை விளித்து வாழ்த்­தும் போது “தம்பி வா! தலைமை ஏற்க வா! உன் ஆணைக்கு கட்­டுப்­பட்டு நடக்­கி­றோம் வா! என்று கழ­கத்­தின் நிறு­வ­னர் அறி­ஞர் அண்ணா அவர்­கள் அழைத்து கட்­சிக் கட்­டுப்­பாட்டை உணர்த்­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">1967ல் கழ­கம் மாபெ­ரும் வெற்றி பெற்­றது. அறி­ஞர் அண்ணா அவர்­கள் நாடா­ளு­மன்­றத்­திற்கு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் அறி­ஞர் அண்ணா அவர்­கள் தான் தமி­ழ­கத்­தின் முதல்­வர் என்று முடி­வி­ருந்­தா­லும் கழ­க­சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் கூட்­டத்­தில் முறைப்­படி தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு CM DESIGNATE என்று ஆகாத நிலை­யில் பத்­தி­ரிக்கை நிரு­பர்­கள் கூட்­டத்­தில் பங்­கேற்று, கழ­கம் ஆட்­சிக்கு வந்­தால் என்­னென்ன திட்­டங்­களை நிறை­வேற்­றும் என்று விளக்­கிக் கொண்­டி­ருந்த போது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">கழக பாரம்­ப­ரி­யம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">மரபு வழி பாரம்­ப­ரி­யம் உள்ள கட்சி, உறு­தி­மிக்க அமைப்­பு­கள் உள்ள கட்சி, கொள்கை, கோட்­பாடு, குறிக்­கோள், நோக்­கம், லட்­சி­யம் உள்ள கட்சி அவற்றை இது­வரை சாத­னை­க­ளின் வழி தொடர்ந்து நிறை­வேற்­றி­யுள்ள கட்சி, தமிழ்ப்­பண்­பாடு, கலாச்­சா­ரம் மற்­றும் அர­சி­யல் உரி­மை­க­ளுக்­காக போரா­டிய கட்சி, தடைச் சட்­டங்­களை கடந்த கட்சி, மிரட்­ட­லுக்கு பயந்து பெய­ரைத் திருத்­தம் செய்­யாத கட்சி, நெருக்­கடி காலத்தை சந்­தித்த கட்சி, நீண்­ட­கா­லத் தொடர்­போ­ராட்­டங்­களை நடத்தி அதன் மூலம் தண்­டனை பெற்று சிறை நிரப்­பிய கட்சி.இது வரை சுமார் 1000 பேருக்கு மேலாக தம் இன்­னு­யிரை இயக்­கத்­திற்­காக அளித்த தொண்­டர்­க­ளின் கட்சி, அறி­ஞர் அண்­ணா­வால் உரு­வாக்­கப்­பட்ட கட்சி, தலை­வர் கலை­ஞ­ரால் வளர்த் ­தெ­டுக்­கப்­பட்ட கட்சி, கழ­கத்­த­லை­வர் தள­பதி அவர்­க­ளால் வழி­ந­டத்­தப்­ப­டும் கட்சி. வர­லாற்றை தெரிந்­துக்­கொள்­ளாத ஒரு சமூ­கம் வர­லாறு படைக்­க­மு­டி­யாது என்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">நேற்­றைய வர­லாற்றை அறிய,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">இன்­றைய வர­லாற்றை உணர்ந்து வாழ,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.2">நாளைய வர­லாற்றை உரு­வாக்க உத­வும் வர­லாறு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.2">திரா­விட இயக்க வர­லாறு – தி.மு.க. வர­லாறு ஆகும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">நாட்டு நிலை,கழ­கப் பணி­கள், ஆகி­ய­வை­களை அவ்­வப்­போது கழக செயற்­குழு ஆராய்ந்து தேவை­யான முடி­வு­களை எடுக்க தலை­வ­ருக்­கும், பொதுச்­செ­ய­லா­ள­ருக்­கும் ஆலோ­ச­னைக்­கூ­றும் என்­ப­தற்கு ஏற்ப, பேர­றி­ஞர் அண்ணா, நெஞ்­சம் நிறைந்த தலை­வர் கலை­ஞர், இன­மா­னப் பேரா­சி­ரி­யர் வழி­யில், இயக்­கத்­தின் பணித்­தொ­டர “மாறு­தல் ஒன்றே மாறா­தது”, என்ற கருத்­தின் அடிப்­ப­டை­யில் “கள­ஆய்வு மறு­சீ­ர­மைப்­புக்­குழு” பரிந்­துரை அடிப்­ப­டை­யில் செயற்­குழு கருத்­த­றிந்து, கழ­கத்­த­லை­வர் காட்­டும் திசை­யில் பய­ணித்து கழ­கத்­திற்கு வலு­சேர்ப்­போம். வெல்­வோம்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>