<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,32,958,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 22 2026 03:40:31 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260822T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="22082026-CHN-10" position.sequence="10" ex-ref="22082026-CHN-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">22.08.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="45">கழக அரசில் மருத்துவத் துறையின் கட்டமைப்புகள், ஏழைகளின் மொழியில் எழுதப்பட்டவை! ஆனால் இது வெற்றுக் கூச்சல் பட்ஜெட்!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="45"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="99">‘நீட்’ ஒழிப்புக்கென உறுதியான நடவடிக்கை எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">சட்டப் பேரவையில் – மருத்துவத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் – விழுப்புரம் – டாக்டர் இலட்சுமணன் பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup861684_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626431_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="lakshmananMLA_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, ஆக. 22–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சட்டப் பேரவையில் மருத்துவத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கழகத்தின் சார்பில் பங்கேற்றுப் பேசிய விழுப்புரம் தொகுதி கழக உறுப்பினர் டாக்டர் இலட்சுமணன், “நீட் ஒழிப்பு குறித்து முழங்குகிற இந்த ஆட்சியினர் சமர்ப்பித்துள்ள பட்ஜெட்டில் – ‘நீட்’ ஒழிப்புக்கென உறுதியான நடவடிக்கையோ, திட்டமோ எதுவும் இல்லாத, வெற்றுக் கூச்சல் பட்ஜெட்டாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்டப் பேரவையில் – கழக உறுப்பினர் – விழுப்புரம் டாக்டர் லட்சுமணன் பேசியதாவது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­து­றைக்­கான மானி­யக் கோரிக்கை மீதான விவா­தத்­தில் பேசிட விழை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நடை­பெற்ற தேர்­த­லில் எனக்கு விழுப்­பு­ரம் தொகு­தி­யில் இரண்­டா­வது முறை­யாக போட்­டி­யிட வாய்ப்­ப­ளித்த எங்­கள் கழ­கத் தலை­வர் பெரும் மதிப்­பிற்­கும் மரி­யா­தைக்­கும் போற்­று­த­லுக்­கு­மு­ரிய தலை­வர் தள­ப­தி­யார் அவர்­க­ளுக்கு, எனது நெஞ்­சார்ந்த நன்றி. என் வெற்­றிக்கு உறு­து­னை­யாக இருந்த எதிர்க் கட்­சித் தலை­வர் எங்­கள் இயக்­கத்­தி­னு­டைய இளை­ஞர் அணி செய­லா­ளர். இளந்­த­லை­வர் அண்­ணன் உத­ய­நிதி அவர்­க­ளுக்­கும் நன்றி கூற நான் கட­மைப்­பட்­டுள்­ளேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரண்­டா­வது முறை­யாக எனக்கு வாக்­க­ளித்து, என்னை வெற்றி பெறச் செய்த, விழுப்­பு­ரம் சட்ட மன்­றத் தொகுதி வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்­கும், கழ­கத்­தி­ன­ருக்­கும், ஏனைய விழுப்­பு­ரம் வாழ் அன்­பர்­க­ளுக்­கும் எனது மன­மார்ந்த நன்­றி­களை இந்த அவை­யில் நின்று மிகுந்த மன நெகிழ்ச்­சி­யு­டன் தலை­வ­ணங்கி தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த அவை­யில் எங்­களை வழி நடத்­தும் தி.மு.க. மூத்த முன்­னோ­டிக­ளுக்­கும் சக சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் எனது மன­மார்ந்த நன்­றியை தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­லில் இந்த பட்­ஜெட்­டில் சுகா­தா­ரத் 
து­றைக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள நிதி­யைப் பற்றி ஒரு உண்­மையை இந்த சட்­ட­மன்­றத்­தின் கவ­னத்­திற்­குக் கொண்டு வர விரும்­பு ­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த வரவு  – செலவு அறிக்­கை­யில் சுகா­தா­ரத் துறைக்கு 23,357 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. மேலோட்­ட­மா­கக் கணக்­குப் பார்த்­தால் இது 5.74% கூடு­தல் நிதி. ஆனால், “தங்க மோதி­ரம் என்ற விளம்­ப­ரத் திட்­டத்­தின் 560 கோடி ரூபா­யைக் கழித்­து­விட்­டால், மருத்­து­வக் கட்­ட­மைப்­புக்­கான உண்­மை­யான நிதி உயர்வு வெறும் 3.2% மட்­டுமே. தமிழ்­நாட்­டின் இன்­றைய சுகா­தா­ரத் தேவை­க­ளுக்கு இந்த நிதி போது­மா­னதா?” என்­ப­து­தான் முக்­கி­ய­மான கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முந்­தைய கழக (DMK) ஆட்­சி­யில் கடைசி இரண்டு முழு பட்­ஜெட்­டு­க­ளி­லும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறைக்­கான நிதி, ஆண்­டுக்கு சரா­ச­ரி­யாக 8.35% உயர்த்­தப்­பட்­டது (2024–25ல் 8.24% 2025–26 8.46%).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எங்­கள் தலை­வர் முன்­னாள் முத­ல­மைச்­சர் தள­ப­தி­யார் அவர்­கள் தலை­மை­யில் திரா­விட மாடல் அரசு பல புதிய திட்­டங்­களை செயல்­ப­டுத்­தி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">திரா­விட மாடல் ஆட்­சிக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">தேசிய சர்­வ­தேச அள­வில் அங்­கீ­கா­ரம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் சுகா­தா­ரத்­துறை கடந்த திரா­விட மாடல் ஆட்­சி­யில் பெற்­றுள்ள முன்­னேற்­றங்­கள், வெறும் மாநில அள­வி­லான சாத­னை­கள் மட்­டு­மல்ல. அவை தேசிய மற்­றும் சர்­வ­தேச அள­வி­லும் அங்­கீ­கா­ரம் 
பெற்­றவை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேசிய சுகா­தார இயக்­கத்­தின் (National Health Mission)கீழ், தாய்–­சேய் நலன், தடுப்­பூசி இயக்­கம், மற்­றும் தொற்­று­நோய் கட்­டுப்­பாடு ஆகி­ய­வற்­றில், சிறந்த செயல்­தி­ற­னுக்­கான விரு­து­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காச­நோய் (TB) கட்­டுப்­பாட்­டில் முன்­னணி மாநி­ல­மா­கத் திகழ்ந்­த­தற்­கான தேசிய அங்­கீ­கா­ரம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கொரோனா காலத்­தில் சிறந்த மேலாண்மைமற்­றும் தடுப்­பூசி  விநி­யோ­கத்­தில்இந்­திய  அர­சின் பாராட்டு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பொது சுகா­தா­ரக் கட்­ட­மைப்பு, மற்­றும் டிஜிட்­டல் சுகா­தார சேவை­க­ளில் முன்­னேற்­றத்திற்­கான பல்­வேறு ஒன்­றிய அர­சின் விரு­து­கள் என்று. ஏரா­ள­மான தேசிய விரு­து­க­ளைப் பெற்ற அரசு திரா­விட மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல், சர்­வ­தேச அள­வி­லும் தமிழ்­நாட்­டின் செயல்­பா­டு­கள் கவ­னம் 
பெற்­றுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உலக சுகா­தார அமைப்பு (WHO) மற்­றும் யுனி­செஃப் (UNICEF) ஆகி­யவை தடுப்­பூசி இயக்­கம், தாய் – சேய் நலன் மற்­றும் பொது சுகா­தார சேவை­கள் குறித்து தமிழ்­நாட்­டின் முன்­னேற்­றத்தை பாராட்­டி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொற்­று­நோய் கட்­டுப்­பாடு மற்­றும் சமூக அடிப்­ப­டை­யி­லான சுகா­தார சேவை­கள் குறித்து பல்­வேறு சர்­வ­தேச ஆய்வு அமைப்­பு­கள் தமிழ்­நாட்டை ஒரு முன்­னு­தா­ரன மாநி­ல­மா­கக் குறிப் பிட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ் நாட்­டில் 99.9 விழுக்­காடு பிர­ச­வங்­கள் மருத்­துவ மனை­க­ளில் நடை­பெ­று­வது நாட்­டுக்கே முன்­னோடி அதற்­குக் கார­ணம் இது நாள் வரை நடை­பெற்ற திரா­விட மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக காப்­பாற்­றப்­பட்ட உயிர்­க­ளி­லும், நிரப்­பப்­பட்ட காலி­யி­டங்­க­ளி­லும், வென்ற சர்­வ­தேச விரு­து­க­ளி­லும் தன் வெற்­றியை அளந்த ஓர் அரசை தமிழ்­நாடு பார்த்­தது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்று தன் லட்­சி­யத்தை ஒரு கிராம் அள­வில் அளக்­கும் ஒரு அரசை பார்க்க வேண்­டிய நிலை ஏற்­பட்டு உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">வெறும் அறி­விப்­பு­கள் மட்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">வெளி­யி­டா­மல் சொன்­ன­தைச் செய்­தோம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாங்­கள் வெறும் அறி­விப்­பு­களை வெளி­யி­ட­வில்லை சொன்­ன­தைச் செய்­தோம். சுமார் 40,000 பணி­யி­டங்­கள் நிரப்­பப்­பட்­டன. இது ஒரு முழக்­கம் அல்ல இது கிரா­முக்­குக் கிராம் அல்ல. செங்­கல்­லுக்­குச் செங்­கல் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட ஒரு செயல்­ப­டும் சுகா­தார அமைப்­பின் சாதனை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நீங்­களோ தேர்­தல் நேரத்­தில் செவி­லி­யர்­களை பணி நிரந்­த­ரம் செய்­வ­தாக நேரில் 
சந்­தித்து வாக்­கு­றுதி கொடுத்­தீர்­கள். ஆனால் வரவு செலவு திட்­டத்­தில் அதற்­கான உறு­தி­மொழி எது­வு­மில்லை. செவி­லி­யர் பணி நிரந்­த­ரம் எப்­போது என்­பதை நீங்­கள் இங்கே அறி­விக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கொரோனா பெரும்­தொற்று நேரத்­தில் யாரும் நினைத்­து­கூட பார்த்­தி­ராத அள­விற்கு கொரோனா வார்­டு­க­ளுக்கே நேரில் சென்று ஆய்வு செய்த பெருந்­தகை எங்­கள் தலை­வர் முன்­னால் முத­ல­மைச்­சர் தள­ப­தி­யார் 
அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த தி.மு.க. அர­சின் மிக முக்­கி­ய­மான மக்­கள் நலத் திட்­டங்­க­ளில் ஒன்று மக்­க­ளைத் தேடி மருத்­து­வம்  திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தத் திட்­டத்­தின் அடிப்­படை நோக்­கம் என்ன? நோயாளி மருத்­து­வ­ம­னை­யைத் தேடி வரு­வ­தற்­காக காத்­தி­ருக்­கா­மல், மருத்­து­வச் சேவையே மக்­க­ளைத் தேடிச் செல்ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">குறிப்­பாக சர்க்­கரை நோய், உயர் ரத்த அழுத்­தம் போன்ற தொற்றா நோய்­களை ஆரம்ப நிலை­யி­லேயே கண்­ட­றிந்து சிகிச்சை அளிப்­ப­தற்கு இந்­தத் திட்­டம் முக்­கி­யத்­து­வம் அளித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மருத்­து­வப் பணி­யா­ளர்­கள் மக்­க­ளின் வீடு­க­ளுக்­குச் சென்­ற­னர். பரி­சோ­தனை செய்­த­னர். மருந்­து­கள் வழங்­கி­னர். தொடர்ந்து கண்­கா­ணித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">27 நோய்­க­ளுக்­காக 2.5 கோடிக்­கும் அதி­க­மான மக்­கள் வீட்டு வாச­லி­லேயே பரி­சோ­திக்­கப்­பட்டு சிகிச்சை அளிக்­கப்­பட்­ட­னர். 1.13 கோடிக்­கும் அதி­க­மான உயர் இரத்த அழுத்த நோயா­ளி­கள் முதன்­மு­றை­யா­கச் சிகிச்சை பெற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">இன்­னு­யிர் காப்­போம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">நம்­மைக் காக்­கும் 48 திட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. அர­சின் முக்­கி­ய­மான திட்­டங்­க­ளில் மற்­றொன்று ‘இன்­னு­யிர் 
காப்­போம் – நம்­மைக் காக்­கும் 48 திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சாலை விபத்து ஏற்­பட்­ட­வு­டன், முதல் சில மணி நேரங்­கள் உயி­ரைக் காப்­பாற்­று­ வ­தற்கு மிக­வும் முக்­கி­ய­மா­னவை (Golden Hour என்­பார்­கள்).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த நேரத்­தில் பணம் இல்­லா­த­தால் ஒரு உயிர் இழக்­கப்­ப­டக் கூடாது. அவ­சர சிகிச்சை உட­ன­டி­யா­கக் கிடைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நோக்­கத்­தில்­தான் அந்­தத் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த திட்­டத்தை, வெறும் ₹493 கோடி ஒதுக்­கீட்­டில், 5,11,916 உயிர்­க­ளைக் காப்­பாற்றி நடத்­தி­னோம் இது அர­சின் புள்­ளி­வி­வ­ரம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­ச­ரின் விரி­வான சுகா­தார 
காப்­பீட்­டுத் திட்­டத்தை விரி­வு­ப­டுத்­தி­னோம், எச்­பிவி (HPV) தடுப்­பூசி, புற்­று­நோய் கண்­ட­றி­யும் முகாம்­கள் நலம் காக்­கும் ஸ்டாலின்”­ 
மு­காம்­க­ளைத் நடத்­தி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">உறுப்­பு­தா­னத் திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மூளைச்­சாவு அடைந்து உடல் உறுப்­பு­களை தான­மாக வழங்­கும் கொடை­யா­ளர்­­களின் இறு­திச்­ச­டங்கு அரசு மரி­யா­தை­யு­டன் நடத்­தப்­ப­டும் என்ற வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க அறி­விப்பை அப்­போ­தைய முத­ல­மைச்­சர் மதிப்­புக்­கு­ரிய முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் 2023 ஆம் ஆண்டு வெளி­யிட்­டார். இந்த அறி­விப்­புக்கு பிறகு தமிழ்­நாட்­டில் உறுப்பு தானம் செய்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை கனி­ச­மாக உயர்ந்­துள்­ளது. ஆகஸ்டு 3, 2026 ல் நடை­பெற்ற 16 ஆவது இந்­திய உறுப்­பு­தான தின விழா­வில் உறுப்பு தானத்­தில் இந்­தி­யா­வின் சிறந்த மாநி­லம் என்ற விருதை தமிழ்­நாடு பெற்­றி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">‘பாதம் பாது­காப்­போம்’ திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">TamilNadu integrated diabetic foot care programme என்ற பாதம் பாது­காக்­கும் திட்­டத்தை 2024ல் நாங்­கள் ஆரம்­பித்­தோம். இந்த திட்­டம் உல­கி­லேயே முதல் முறை­யாக நீரி­ழிவு நோயா­ளி­க­ளுக்கு பாதம் பாது­காக்­கும் முன்­னோடி திட்­ட­மாக கரு­தப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">Health Walk நடப்­போம் நலம் பெறு­வோம் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞ­ரின் வரும்­முன் காப்­போம் 
திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத­யம் காப்­போம் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஊட்­டச்­சத்து உறுதி செய் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞர் நூற்­றாண்டு உயர் சிறப்பு மருத்­து­வ­மனை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரி­யார் அரசு மருத்­து­வ­மனை பெரி­யார் நகர் சென்னை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காஞ்­சி­பு­ரம் மையம். காரப்­பேட்டை அறி­ஞர் அண்ணா புற்­று­நோய் சிறப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அரசு ஓமந்­தூ­ரார் பன்­னோக்கு உயர்­சி­றப்பு மருத்­து­வ­மனை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞர் கரு­ணா­நிதி நகர், அரசு புனர்­வாழ்வு மருத்­து­வ­மனை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேசிய முதி­யோர் நல மையம் என்ற எங்­கள் சாத­னை­கள் வான் உயர நிற்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">14 அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளில், 13 சிறப்­புப் பிரி­வு­க­ளில் 58 மருத்­துவ பட்ட மேற்­ப­டிப்பு இடங்­களை (M.D/M.S), கூடு­த­லா­கத் தொடங்­கிய பெரு­மை­யும் எங்­க­ளுக்கு உண்டு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2024–ஆம் ஆண்டு செப்­டம்­பர் 25–ஆம் தேதி, நியூ­யார்க்­கில் நடை­பெற்ற 79–வது ஐக்­கிய நாடு­கள் பொதுச் சபை­யில், WHO ஆல் நடத்­தப்­பட்ட ஐக்­கிய நாடு­க­ளின் தொற்றாநோய்­கள் தடுப்­புப் பணிக்­குழு (UNIATF), 
மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் திட்­டத்­திற்­காக, “சுகா­தார அமைச்­ச­கங்­கள்” பிரி­வில் 2024 பணிக்­குழு விருதை தமிழ்­நாட்­டுக்கு வழங்­கி­யது. அந்த ஆண்டு உல­கம் முழு­வ­தி­லும் பதி­னான்கு நிறு­வ­னங்­கள் மட்­டுமே தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டன. தமிழ்­நாடு அவற்­றுள் ஒன்­றாக நின்­றது பொரித்து அடுத்­த­வர் சாத­னை­யில் எங்­கள் பெய­ரைப் புகைப்­ப­டத்­திற்­குப் போட்­டி­யி­ட­வில்லை. மாறாக இறை­யாண்மை கொண்ட நாடு­க­ளின் சுகா­தார அமைச்­ச­கங்­க­ளுக்கு இணை­யாக உலக அரங்­கில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டோம். எங்­கள் தலை­வர் மாண்­பு­மிகு தள­ப­தி­யார் அவர்­க­ளு­டைய அரசு ஐக்­கிய நாடு­கள் சபை­யின் அங்கீகாரத்தை பெற்ற நிகழ்வு அது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சுகா­தா­ரத்தை ஒரு உரி­மை­யா­கக் கரு­தும்­போது, ஆட்சி இப்­ப­டித்­தான் இருக்­கும் – ஐக்­கிய நாடு­களே கவ­னிக்­கும் அள­விற்­குச் சிறந்த திட்­டம். இந்­தப் புதிய அர­சின் நகைத் திட்­டம் உள்­ளூர் நகைக்­க­டைக்­கா­ர­ரின் பட்­டி­ய­லைத் தாண்டி எங்­கா­வது இடம்­பெ­றுமா என்று பார்ப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது, இந்த அர­சின் உண்­மை­யான ஆர்­வம் எங்கே சென்­றது என்று பார்ப்­போம்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தாய்­மா­மன் தங்க மோதி­ரம் திட்­டத்­திற்­காக 560 கோடி ரூபாய்கு ஒதுக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை கடந்த ஜூன் 23, 2026 அன்று வெளி­யிட்ட அர­சாணை எண். 166–ல் அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் பிறக்­கும் 4.42 லட்­சம் குழந்­தை­க­ளுக்கு இந்த மோதி­ரம் வழங்­கப்­ப­டும் எனத் தெளி­வா­கக் கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. மேலும், செய்­கூலி, சேதா­ரம் உள்­ளிட்ட அனைத்­துச் செல­வு­க­ளை­யும் உள்­ள­டக்கி ஒரு கிராம் மோதி­ரத்­தின் விலை 17,000 ரூபாய் என அரசு நிர்­ண­யம் செய்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">நிதி ஒப்­ப­ளிப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதன் அடிப்­ப­டை­யில், மோதி­ரம் கொள்­மு­தல் செய்ய 750.83 கோடி ரூபா­யும், நிர்­வா­கச் செல­வாக 5 கோடி ரூபா­யும் ஒட்­டு­மொத்­த­மாக ரூபாய் 755.83 கோடி தேவை சேர்த்து, அதே அர­சா­ணை­யில் நிதி ஒப்­ப­ளிப்பு (Financial Sanction) செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பட்­ஜெட்­டில் ஒதுக்­கி­யது 560 கோடி ரூபாய். சுமார் 195 கோடி ரூபாய் பற்­றாக்­குறை நில­வு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தத் திட்­டத்­தின் நோக்­கமே அரசு மருத்­து­வ­ம­னைப் பிர­ச­வங்­களை அதி­க­ரிக்க வேண்­டும் என்­பது OT GOT அர­சா­ணை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தற்­போது 
திட்­ட­மி­டப்பட்­டுள்ள 4.42 லட்­சம் பய­னா­ளி­க­ளுக்கே 195 கோடி ரூபாய் பற்­றாக்­குறை உள்ள நிலை­யில் அரசு மருத்­து­வ­ம­னை­யில் பிர­ச­வங்­கள் அதி­க­ரித்­தால் இந்த நிதிப் பற்­றாக்­குறை பல நூறு கோடி­க­ளாக அதி­க­ரிக்­கும். இதற்கு இந்த அர­சின் பதில் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1,000 நட­மா­டும் மூத்த குடி­மக்­கள் சிகிச்சை மையங்­கள் ஆர­வா­ரத்­து­டன் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. ஒதுக்­கீடு எவ்­வ­ளவு தெரி­யுமா? வெறும் ₹33 கோடி வகுத்­துப் பாருங்­கள். மதிப்­பிற்­கு­ரிய உறுப்­பி­னர்­களே அது ஒரு மையத்­திற்கு ₹3.3 லட்­சம். ஒரு சிறிய கார் விலைக்கு வாங்­கு­வ­தற்கு அகும் செலவே ₹3.00 லட்­சம், அப்­படி என்­றால், எந்த வகை­யான நட­மா­டும் சிகிச்சை மையத்தைஇந்த அரசு நடத்­தத் திட்­ட­ 
மிட்­டுள்­ளது என்று எனக்­குத் தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் திட்­டம் உள்­ளிட்ட அனைத்து திட்­டங்­க­ளும் தொட­ரப்­ப­டும் என்­பது குறித்த, தெளி­வான உறு­தி­மொ­ழியை, முழு நிதி விவ­ரங்­க­ளு­டன் வெளி­யிட வேண்­டும். வேறு பெய­ரில் மறைத்து, தங்­கள் சொந்­தக் கண்­டு­பி­டிப்­பா­கச் சித்­த­ரிக்­கக் கூடாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒவ்­வொரு மாவட்ட மருத்­து­வ­மனை மற்­றும் ஆரம்ப சுகா­தார நிலை­யத்­தி­லும் உள்ள காலி­யி­டம் பற்­றிய புள்­ளி­வி­ப­ரங்­களை சபை­யில் சமர்ப்­பிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">சமூக நீதிப் பார்வை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">சிதைந்து வரும் அவ­லம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பூஜ்­யத்­தி­லி­ருந்து நாங்­கள் கட்­டி­யெ­ழுப்­பியபணி­யா­ளர் படை (Medical work force) பரா­ம­ரிக்­கப்­ப­டு­கி­றதா? அல்­லது அது 
மருத்­துவ சேவை­கள் பற்­றிய சமூக நீதி 
பார்­வை­கள் இல்­லாத, இந்த நிர்­வா­கத்­தில் சிதைந்து வரு­கி­றதா என்­பதை அறிய விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்டு மக்­கள் ஒரு நகைப் பட்­டி­ய­லுக்­காக வாக்­க­ளிக்­க­வில்லை. அவர்­க­ளி­டம் மாற்­றம் தரு­கி­றோம் என்று சொல்­லித்­தான் வாக்கு கேட்­டார்­கள், அந்த மாற்­றம் இந்த மாநி­லம் கடி­ன­மாக உழைத்­துக் கட்­டி­யெ­ழுப்­பிய சுகா­தார உள்­கட்­ட­மைப்பை வலுப்­ப­டுத்­து­கி­றதா. அல்­லது சிதைக்­கி­றதா என்­ப­தைப் பார்க்­கும் உரிமை மக்­க­ளுக்கு உண்டு ஐந்து ஆண்­டு­கால தி.மு.க. ஆட்­சி­யின் சாதனை, ஏழை­க­ளின் மொழி­யில் எழு­தப்­பட்­டது – விழுப்­பு­ரத்­தில் உள்ள ஒரு தாய், சேலத்­தில் உள்ள ஒரு தினக்­கூ­லித் தொழி­லாளி– தூத்­துக்­கு­டி­யில் உள்ள ஒரு முதிய விதவை இப்­படி பெரும்­பா­லும் ஏழை எளிய மக்­கள் முதன்­மு­றை­யாக தங்­கள் வீட்டு வாச­லி­லேயே ஒரு மருத்­து­வ­ரைக் கண்­ட­னர், அதை ஒரு சர்­வ­தேச அமைப்பே 
கவ­னித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாங்­கள் இந்த அரசை உன்­னிப்­பா­கக் கவ­னிப்­போம். ஏனெ­னில் தமிழ்­நாட்டு மக்­கள் ஒன்­றைத்­தான் கேட்­பார்­கள் இந்த அரசு எனக்­காக இருக்­கி­றதா, அல்­லது ஒரு வெற்று விளம்­ப­ரத்­திற்­காக உள்­ளதா என்ற கேள்வி மக்­கள் மன­தில் எழும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">ஒரு கிராம் வாக்­கு­றுதி!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு கிராம் வாக்­கு­று­தியை விட அதிக அர்த்­தம் கொண்ட ஒரு பதிலை இந்த அரசு மக்­க­ளுக்கு தர கட­மைப்பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் அரசு ரூ.5.00 லட்­சத்­திற்­கான மருத்­து­வக்­காப்­பீட்­டுத் திட்­டத்தை வழங்­கி­யது. ஆனால் நீங்­கள் ரூ.25 லட்­சம் தரு­வ­தாக உங்­கள் தேர்­தல் வாக்­கு­று­தி­யில் குறிப்­பிட்­டி­ருந்­தீர்­கள், அதைப்­பற்றி பட்­ஜெட்­டில் குறிப்­பி­டா­தது ஏமாற்­றம் அளிக்­கின்­றது. அதை எப்­போது செயல்ப­டுத்­து­வீர்­கள் என்­பதை தெளி­வுப்­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த விவா­தம் சுகா­தார கல்­வி­யை­யும் உள்­ள­டக்­கி­யி­ருப்­ப­தால், NEET குறித்த எனது கருத்தை பதிவு செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2021ல் சட்­டப் போராட்­டங்­கள் மூலம், பிற்­ப­டுத்­தப்­பட்ட, மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்ட, மருத்­துவ மாண­வர்­க­ளுக்கு அகில இந்­திய ஒதுக்­கீட்­டில் 27% விழுக்­காட்டை பெற்­றுத்­தந்த தலை­வர் முன்­னாள் முத­ல­மைச்­சர் தள­ப­தி­யார் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எதிர்க் கட்சி தலை­வர் எங்­கள் இளந்­த­லை­வர் அண்­ணன் உத­ய­நிதி அவர்­கள் கடந்த ஆட்­சி­யில் துணை முத­ல­மைச்­ச ­ராக இருந்­த­போது NEET ஒழிப்பு தீர்­மா­னத்தை, ஆளு­நர் குடி­ய­ரசு தலை­வ­ருக்கு அனுப்பி வைக்க கார­ண­மான போராட்­டத்தை தலைமை ஏற்று நடத்­திய வர­லாற்று சிறப்­புக்­கு­ரி­ய­வர் என்­பதை பதிவு செய்ய கட­மைப்­பட்­டுள்­ளேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2023ல் தி.மு.க. அரசு NEET தேர்வு ஒரு பொது நுழைவு தேர்­வாக இருக்க முடி­யாது. இருக்க கூடாது என்று Original Suit அர­சி­யல் சட்­டத்­தில் 131 பிரி­வின் அடிப்­ப­டை­யில் உச்ச நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தி­யா­வின் (Federal Structure) கூட்­டாட்சி முறை­யில் இப்­படி ஒரு அகில இந்­திய பொது நுழை­வுத் தேர்வு இருக்­கக் கூடாது என்று எங்­கள் திரா­வி­ட­மா­டல் அரசு, 
முன்­னாள் முத­ல­மைச்­சர் தலை­வர் தள­ப­தி­யா­ரின் வழி­காட்­டு­த­லோடு ஒன்­றிய அர­சுக்கு எதி­ராக உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்கு தொடுத்­தி­ருக்­கின்­றது. இந்த வழக்­கில் அர­சின் நிலைப்­பாடு என்ன என்­பதை அறிய விரும்­பு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அரசு பள்ளி மாண­வர்­க­ளுக்­கான NEET பயிற்சி, தேர்வு அழுத்­தத்­தால் பாதிக்­கப்­ப­டும் மாண­வர்­க­ளுக்­கான மன­நல ஆத­ரவு (Counselling). அல்­லது இவர்­கள் இப்­போது பேசும் நீட் “ஒழிப்­புக்கு ஒரு உறு­தி­யான நட­வ­டிக்கை இவற்­றுக்கு ஒரு ரூபாய் ஒதுக்­கப்­பட்­டுள்­ளதா என்று இந்த பட்­ஜெட்­டில் நான் தேடி­னேன். வெற்று கூச்­சல் தான் உள்­ளது. “இந்­தத் திண்­ணைப் பேச்சு வீர­ரி­டம் ஒரு கண்­ணா­யி­ருக்­க­னும் அண்­ணாச்சி!” என்ற பாடல் வரி­கள்­தான் நினை­வுக்கு 
வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு அவர் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>