<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,32,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 22 2026 03:44:34 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260822T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="22082026-CHN-14" position.sequence="14" ex-ref="22082026-CHN-14.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">22.08.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="45">சுமார் 640 ஏக்கர் பரப்பளவு கள்ளப் பெரம்பூர் ஏரியைச் சீரமைத்து தஞ்சை மாநகர நிலத்தடி நீரை உயர்த்துவீர்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="72">தி.மு.க. ஆட்சியில்தான் உள்ளாட்சித் துறைகள் மிகச்சிறப்பாக இயங்கின! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">சட்டப் பேரவையில் – திருவையாறு துரை. சந்திரசேகரன் பேச்சு!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="55">தடுப்புச் சுவர் அமைத்து – 650 ஏக்கர் பரப்பளவுள்ள    சொரக்குடிபட்டி பெரிய ஏரியை ஆழப்படுத்துவீர்!   </lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup862712_14_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626431_14_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="DuraiChandiras_14_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை, ஆக. 22–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ர­வை­யில் மானி­யக் கோரிக்கை மீதான விவா­தத்­தில் பேசிய திரு­வை­யாறு தொகுதி கழக உறுப்­பி­னர் துரை. சந்­தி­ர­சே­க­ரன், ‘‘தி.மு.க. ஆட்­சிக் காலத்­தில்­தான் உள்­ளாட்­சித் துறை­கள் மிகச் சிறப்­பாக இயங்­கின!’’ எனப் பெரு­மி­தத்­து­டன் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சட்­டப் பேர­வை­யில் அவர் பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பேர­வைத் தலை­வர் அவர்­களே, பகுத்­த­றி­வுப் 
பக­ல­வன் தந்தை பெரி­யார், அறி­வு­லக ஆசான் 
பேர­றி­ஞர் அண்ணா, நவீன தமி­ழ­கத்­தின் சிற்பி முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஆகி­யோரை வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) திரா­விட மாடல் நாய­கர் கழ­கத் தலை­வர் அவர்­க­ளுக்­கும்,  எதிர்க்­கட்­சித் தலை­வர் எங்­க­ளு­டைய இளந்­த­லை­வர் அவர்­க­ளுக்­கும் என்­னு­டைய வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) மாமன்­றத்­தில் உள்ள அனைத்து  சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் என்­னு­டைய வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திரு­வை­யாறு தொகு­தி­யில் 1989 ஆம் ஆண்டு முதல் தொடங்கி ஐந்து முறை என் நெஞ்­சம் நிறைந்த தலை­வர் ஐயா கலை­ஞர் அவர்­க­ளும், அதன்­பின் கழ­கத் தலை­வர் அவர்­க­ளும், இளந்­த­லை­வர் அவர்­க­ளும் மூன்று முறை என மொத்­தம் எட்டு முறை கழ­கத்­தின் சார்­பாக போட்­டி­யி­டு­வ­தற்­கான வாய்ப்­பினை வழங்­கி­னார்­கள். ஆறா­வது முறை­யாக வெற்றி பெறு­வ­தற்­காக எனக்­காக தேர்­தல் பிரச்­சா­ரம் செய்த எங்­கள் கழ­கத் தலை­வர் அவர்­க­ளுக்­கும், (மேசை­யைத் தட்­டும் ஒலி)  எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­க­ளுக்­கும் என்­னு­டைய நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். வெற்­றிக்கு துணை நின்ற கழ­கத்­தி­னு­டைய முதன்­மைச் செய­லா­ளர் அண்­ணன் கே.என். நேரு அவர்­க­ளுக்­கும், மேனாள் மத்­திய அமைச்­சர் அண்­ணன் பழ­னி­மா­ணிக்­கம் அவர்­க­ளுக்­கும், தஞ்­சா­வூர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தம்பி முர­சொலி அவர்­க­ளுக்­கும், கூட்­டணி கட்­சி­யின் தோழர்­க­ளுக்­கும், கழ­கத்­தின் ஒன்­றி­யச் செய­லா­ளர்­கள், பேரூர் செய­லா­ளர்­கள், கழக நிரு­வா­கி­கள், திரு­வை­யாறு தொகுதி வாக்­க­ளாப் பெரு­மக்­க­ளுக்­கும் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">2026-–2027 ஆம் ஆண்­டுக்­கான நீர்­வ­ளத் துறை, ஊரக வளர்ச்சி மற்­றும் ஊராட்­சித் துறை மற்­றும் சுற்­று­லா-­கலை மற்­றும் பண்­பாடு ஆகிய மானி­யக் கோரிக்­கை­க­ளின்­மீது திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பாக என்­னு­டைய கருத்­து­கள் சில­வற்றை எடுத்­து­வைக்க விரும்­பு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">உல­கப் பாரம்­ப­ரிய பாச­னக் கட்­ட­மைப்பு விருது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டி­னு­டைய  முத­ல­மைச்­ச­ராக கடந்த ஐந்­தாண்­டு­க­ளில் சிறப்­பான திரா­விட மாடல் ஆட்­சியை நடத்­திய எங்­க­ளு­டைய தலை­வர் காலத்­தில் நீர்­வ­ளத் துறைக்கு 2022 ஆம் ஆண்­டில் சர்­வ­தேச நீர்ப்­பா­ச­னம் மற்­றும் வடி­கால் ஆணை­யம் ICID, காளிங்­க­ரா­யன் அணைக்­கட்டு, வாய்க்­கால் அமைப்பு, கல்­லணை, வீரா­ணம் ஏரி, கொள்­ளி­டம் கீழ் அணைக்­கட்டு ஆகிய 4 கட்­ட­மைப்­பு­க­ளுக்கு உல­க­ள­வில் அங்­கீ­கா­ரம் அளித்து தமிழ்­நாடு நீர்­வ­ளத் துறைக்கு உல­கப் பாரம்­ப­ரிய நீர்ப்­பா­சன கட்­ட­மைப்பு விரு­து­கள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அதே­போல, மத்­திய நீர்ப்­பா­சன மற்­றும் எரி­சக்தி வாரி­யம் CBIP விருது 2022 ஆம் ஆண்­டில் கச்­ச­மங்­க­லம் என்ற என்­னு­டைய தொகு­தி­யி­லுள்ள அணைக்­கட்­டுக்கு சிறந்த திட்­டம், சிறந்த கட்­டு­மா­னப் பணிப் பரா­ம­ரிப்­புக்­கான விருது மத்­திய நீர்ப்­பா­சன மற்­றும் எரி­சக்தி வாரி­யத்­தி­ட­மி­ருந்து வழங்­கப்­பட்­டது.  2025 ஆம் ஆண்­டில் சர்­வ­தேச நீர்ப்­பா­ச­னம் மற்­றும் வடி­கால் ஆணை­யம் ICID செய்­யாறு அணைக்­கட்டு, கொடி­வேரி அணைக்­கட்டு மற்­றும் வாய்க்­கால் அமைப்பு, நொய்­யல் ஆறு முறை­சாரா அமைப்­பு—­ஆ­கிய மூன்று கட்­ட­மைப்­பு­க­ளுக்கு உல­க­ளா­விய அங்­கீ­கா­ரம் அளிக்­கப்­பட்டு, தமிழ்­நாடு நீர்­வ­ளத் துறைக்கு உல­கப் பாரம்­ப­ரிய பாச­னக் கட்­ட­மைப்பு விருது வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அத­னைத் தொடர்ந்து கடந்த ஐந்­தாண்­டு­க­ளாக இந்த நீர்­வ­ளத் துறைக்கு எங்­க­ளு­டைய  முத­ல­மைச்­ச­ராக இருந்த திரா­விட மாடல் நாய­கர் 2021-–2022 ஆம் ஆண்­டிற்கு 6,607 கோடி ரூபா­யும், 2022-–2023 ஆம் ஆண்­டில் 7,338.36 கோடி ரூபா­யும், 2023-–2024 ஆம் ஆண்­டில் 8,208,21 கோடி ரூபா­யும், 2024--–2025 ஆம் ஆண்­டில் 8,398 கோடி ரூபா­யும்,  2025–-2026 ஆம் ஆண்­டில் 9,460 கோடி ரூபா­யும் நிதி ஒதுக்­கீடு செய்­தி­ருக்­கி­றார். சென்ற இடைக்­கால பட்­ஜெட்­டில் 2026-–2027 ஆம் ஆண்­டில் 10,076 கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­தி­ருக்­கி­றார். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நம்­மு­டைய நீர்­வ­ளத் துறை அமைச்­சர் அவர்­க­ளி­டம் நான் கேட்க விரும்­பு­வது— தற்­போ­தைய பட்­ஜெட்­டில் நீர்­வ­ளத் துறைக்கு 9,267 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.  கடந்த முறை­யைக் காட்­டி­லும், கிட்­டத்­தட்ட 8 சத­வி­கி­தம் குறை­வாக ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை தங்­கள் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரு­கி­றேன்.  நீங்­கள் அதி­க­மாக அதில் கவ­னம் செலுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல, மேட்­டூர் அணை­யைப் பொறுத்­த­வ­ரை­யில், கடந்த ஐந்­தாண்­டு­க­ளில் எங்­க­ளு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில், எங்­க­ளு­டைய தலை­வ­ரு­டைய ராசிக்­கு—­மேட்­டூர் அணை­யா­னது 2021 ஆம் ஆண்டு 12.-6-.2021 அன்று நாங்­கள் திறந்­தி­ருக்­கி­ றோம். (மேசை­யைத் தட்­டும் ஒலி) 2022 ஆம் ஆண்­டில் 24.-5-.2022 அன்று நீர் இருப்பு கார­ண­மாக முன்­கூட்­டியே திறந்­தி­ருக்­கி­றோம். 2023 ஆம் ஆண்­டில், ஜுன் 12 ஆம் நாளன்று திறந்­தி­ருக்­கி­றோம். 2024 ஆம் ஆண்­டில் 28-7-2024 அன்று திறந்­தி­ருக்­கி­றோம்.  2025 ஆம் ஆண்­டில் 12.6.-2025 அன்று திறக்­கப்­பட்­டது.  அன்­றைய  முத­ல­மைச்­ச­ராக இருந்த தள­பதி அவர்­கள், மேட்­டூ­ரிலே 12.-6-.2025 அன்று மேட்­டூ­ரிலே தண்­ணீர் திறந்து, அதி­லி­ருந்து ஒரு­வா­ரத்­திற்கு பிறகு அந்த தண்­ணீர் கல்­ல­ணையை அடைந்த பிறகு, கல்­ல­ணை­யை­யும் திறந்து வைத்­தார். ஒரு முத­ல­மைச்­சர் இந்த இரண்டு அணை­க­ளி­லும் தண்­ணீர் திறந்த பெருமை எங்­க­ளு­டைய தலை­வ­ருக்கு உண்டு. (மேசை­யைத் தட்­டும் ஒலி) தற்­போது மேட்­டூ­ரில் நீர் வறண்­டி­ருப்­ப­தால், தற்­போது திறக்­கப்­ப­ட­வில்லை.  இதை அர­சின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">காவிரி பிரச்­சி­னை­யில் adamant ஆக மாதாந்­திர நீர் பங்­கீடு இது­வ­ரை­யில் கொடுக்­க­வில்லை, கொடுக்க முடி­யாது என்று சொல்­கி­றார். அதற்­காக நம்­மு­டைய அரசு எடுத்த நட­வ­டிக்கை என்ன? நாம் மென்­மை­யாக செல்­கி­றோம் என்­பது என்­னு­டைய கருத்து. த.வெ.க. அரசு,  முத­ல­மைச்­சர் அவர்­கள்,  துறை­யி­னு­டைய அமைச்­சர்   மிக­வும் soft ஆக செல்­கி­றீர்­கள் என்­பது என்­னு­டைய கருத்து. நம்­மு­டைய  முத­ல­மைச்­சர் அவர்­க­ளு­டைய பய­ணத்தை யார் முடிவு செய்ய வேண்­டும்?  முத­ல­மைச்­சர் அவர்­க­ளு­டைய அலு­வ­ல­கம் முடிவு செய்ய வேண்­டும்,  முத­ல­மைச்­சர் முடிவு செய்ய வேண்­டும். ஆனால், 3 ஆம் தேதி தமிழ்­நாடு முத­ல­மைச்­சர்   வரு­கி­றார் என்று கர்­நா­ட­கா­வின் முத­ல­மைச்­சர்  சொல்­கி­றார். அது எந்­த­வி­தத்­தில் நியா­யம், அதை எப்­படி நீங்­கள் விட்­டுக்­கொ­டுக்­கி­றீர்­கள், அது நியா­யத்­தி­லேயே வராது. நமக்­கென்று ஒரு prestige இருக்­கி­றது. நான் இப்­போ­தும் சொல்­கி­றேன்,  முத­ல­மைச்­சர் அவர்­கள் அன்­றைக்­குக்­கூட உருக்­க­மாக சொன்­னார். நான் எந்த அவ­மா­னத்­தை­யும் தாங்க தயா­ராக இருக்­கி­றேன் என்று கூறி­னார். அவ­மா­னப்­பட வேண்­டிய அவ­சி­யம் இல்லை. அப்­படி  தமி­ழக முத­ல­மைச்­சர் அவர்­கள் அவ­மா­னப்­பட்­டால் தமிழ்­நாட்­டி­லுள்ள ஒவ்­வொரு குடி­ம­க­னும் அவ­மா­னப்­ப­டு­கிற மாதிரி. நீங்­கள் பயப்­ப­டா­மல், சில அர­சி­யல் சூழ்­நி­லை­க­ளைக் கருதி, காங்­கி­ர­சை­யும் பகைத்­துக்­கொள்­ளக் கூடாது, BJP-யும் பகைத்­துக்­கொள்­ளக் கூடாது என்­றெல்­லாம் பார்க்­கக் கூடாது.  முத­ல­மைச்­சர்   மக்­கள் செல்­வாக்கு இருக்­கி­றது என்று நீங்­கள் நினைக்­கி­றீர்­கள். அப்­ப­டி­யி­ருக்­கை­யில் ஏன் பயப்­பட வேண்­டும்? நமக்­கான தண்­ணீரை நியா­ய­மா­கக் கேளுங்­கள். (குறுக்­கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பேர­வைத் துணைத் தலை­வர் அவர்­களே, நாம் நிதிப் பங்­கீட்­டில் கொஞ்­சம் கவ­ன­மாக இருக்க வேண்­டும் என்­ப­து­தான் என்­னு­டைய கவலை. நான் டெல்டா விவ­சாயி என்­கிற முறை­யில் சொல்­கி­றேன். எங்­க­ளுக்கு பாதிப்பு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் அவர்­கள் 5 மார்ச் 2025 அன்று ஒரு அரு­மை­யான அறிக்­கையை வெளி­யிட்­டார். நான் அந்த அறிக்­கை­யைப் படித்­தி­ருக்­கி­றேன். அதை வைத்­தி­ருக்­கி­றேன். அதில் என்ன சொல்­கி­றார் என்­றால், நாடா­ளு­மன்ற, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் பற்­றாக்­குறை என்­ப­தெல்­லாம் மக்­கள் பிரச்­சி­னையே இல்லை. அதை­விட மிக முக்­கி­ய­மான ஜன­நா­ய­கம் சார்ந்த பிரச்­சி­னை­கள் நாட்­டில் இருக்­கின்­றன. அவற்­றைக் களை­வ­து­தான் நமது முதன்­மைப் பணி­யாக இருக்க வேண்­டு­மென்று சொல்­லி­யி­ருக்­கி­றார். ஆனால், இப்­போது அதே  முத­ல­மைச்­சர் அவர்­கள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைக் கூட்டி, இன்­னும் தொகுதி மறு­வ­ரை­ய­றையே Parliament-ல் சொல்­ல­வில்லை, இவர் முன்­கூட்­டியே கூட்­டம் போட்டு, அந்த கவ­னத்தை மேக­தா­து­வில் அணைக்­கா­கவோ, காவி­ரிப் பிரிச்­சி­னை­யில் தண்­ணீர் விட­வில்லை என்­ப­தற்­காக நடத்­த­வில்லை என்­ப­து­தான் என்­னு­டைய குற்­றச்­சாட்டு. இதை­வி­டக் கொடுமை  முத­ல­மைச்­சர் அவர்­கள் மௌன­மாக இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அந்­தக் காவி­ரிப் பிரச்­சினை குறித்­துப் பேசு­வதை விட்­டு­வி­டு­கி­றேன். நீர்­வ­ளத் துறை­யில் வட­வாறு, வெண்­ணாறு, வெட்­டாறு, குட­மு­ருட்டி, காவிரி என்று 5 நதி­கள் ஓடு­வ­தால்­தான், திரு­வை­யாறு சிவ­னுக்கு பஞ்­ச­ந­தீஸ்­வ­ரர் ஐயா­றப்­பர் என்ற பெய­ரும், ஊருக்கு திரு­வை­யாறு என்­கிற பெய­ரும் வந்­தது. உல­கில், ஒடு­கின்ற நதிக்கு முத­லில் கட்­டிய அணை கல்­லணை, கட்­டி­ய­வர் நம்­மு­டைய கரி­கால் பெரு­வ­ளத்­தான். அதன் பின்­னர்­தான் நைல் நதி­யில் கட்­டு­கி­றார்­கள். வேறு எங்­கும் இல்­லாத ஒரு சிறப்பு கல்­ல­ணைக்கு இருக்­கி­றது. அங்கு கருங்­கல் எது­வும் கிடை­யாது, கருங்­கல் மலை கிடை­யாது. அவ்­வ­ளவு பெரிய அணையை மிகச் சிறப்­பாக கட்­டிய பெருமை நம்­மு­டைய கரி­கால் பெரு­வ­ளத்­தான் அவர்­க­ளுக்கு உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­றைக்­கும் சிறப்­பாக அந்த அணை­யைப் பரா­ம­ரிக்­கின்­ற­னர். அந்த அணை­யைக் கட்­டி­ய­தற்­குப் பிற­கு­தான் டெல்டா பகுதி மிக வள­மான பகு­தி­யாக, பல்­வேறு ஆறு­க­ளா­கப் பிரித்து, மிகச் சிறப்­பான ஒரு நீர்ப்­பா­சன மேலாண்­மையை கரி­கால் பெரு­வ­ளத்­தான் செய்­தி­ருக்­கி­றார். அதை நான் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்­றேன். கல்­ல­ணை­யி­லி­ருந்து காவிரி, வெண்­ணாறு, கல்­ல­ணைக் கால்­வாய் கொள்­ளி­டம் ஆறு­கள் பிரிந்து பாச­னப் பகு­தி­கள் ஆரம்­பிக்­கின்­றன. திரு­வை­யாறு தொகு­தி­யில் மட்­டும்­தான் 5 divisions. அதா­வது குறிப்­பாக, காவிரி கோட்­டம், வெண்­ணாறு கோட்­டம், கல்­ல­ணைக் கால்­வாய் கோட்­டம், அக்­னி­யாறு கோட்­டம் மற்­றும் ஆற்­றுப் பாது­காப்­புக் கோட்­டம் ஆகிய 5 பரா­ம­ரிப்­புக் கோட்­டங்­கள் உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆற்­றுப் பாது­காப்­புக் கோட்­டத்­தில் உள்ள கட்­டளை மேட்டு வாய்க்­கால் மிக முக்­கி­ய­மாக நம்­மு­டைய காவிரி ஆற்­றி­லி­ருந்து கரூர் மாவட்­டத்­தில் மாய­னூ­ரில் பிரி­கி­றது. கிட்­டத்­தட்ட 135 கி.மீ. தூரத்­திற்கு அந்த வாய்க்­கால் ஓடி தஞ்­சா­வூ­ருக்கு வரு­கி­றது. கரூர், திருச்சி, தஞ்­சா­வூர் மாவட்­டங்­க­ளில் பாச­னப் பரப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றது. கடை­மடை பகு­தி­யான தஞ்­சா­வூ­ரில், பூத­லூர் தஞ்­சா­வூர் ஒன்­றி­யப் பகு­தி­யில் கிட்­டத்­தட்ட 63 பெரிய ஏரி­கள் இருக்­கின்­றன. பெரிய ஏரி­கள், சிறிய ஏரி­கள் அனைத்­தும் இருக்­கின்­றன. ஆண்­டாண்­டிற்­கும் எங்­க­ளுக்­குப் பெரிய பாதிப்பு என்­ன­வென்­றால், திருச்சி மாவட்­டத்­தி­லும் கரூர் மாட்­டத்­தி­லும் விவ­சா­யம் மூன்­று­போ­க­மும் செய்­வார்­கள்; tail end ஆன நம்­மு­டைய தஞ்சை மாவட்­டத்­திற்கு தண்­ணீர் வரு­வ­தே­யில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இது ஆண்­டாண்­டு­கா­ல­மாக நடை­பெ­று­கி­றது. கிட்­டத்­தட்ட 4,295 ஏக்­கர் ஆண்­டு­தோ­றும் விவ­சா­யம் செய்­யா­மல் தடை­ப­டு­கி­றது. இதற்­குக் கார­ணம், இந்­தப் பாசன வச­தி­யைப் பெறு­வ­தற்கு என்ன செய்­ய­லாம் என்­றால், அந்த வாய்க்­கா­லில் 250 கன அடி தண்­ணீர் எடுத்­தாலே, வாய்க்­கால் உடைந்­து­வி­டு­கி­றது. ஆகை­யால், 250 கன அடிக்­குக் கீழே­தான் எடுக்­கி­றார்­கள். Tank-ஐ fill செய்ய முடி­ய­வில்லை அதற்­குள் வரு­டம் முடிந்­து­வி­டு­கி­றது. என்­னு­டைய வேண்­டு­கோள் என்­ன­வென்­றால், அந்த வாய்க்­கா­லில், வாய்க்­கா­லி­னு­டைய இயல்பு கொள்­ள­ள­வான 1,000 கன அடி வர வேண்­டும். அதற்­காக, நீங்­கள் ஒரே stretch ஆக ரூ.500 கோடி, ரூ.600 கோடி செலவு செய்ய முடி­யாது. நான் நிதி­நி­லை­மையை புரிந்து சொல்­கி­றேன். 3 phase ஆகவோ அல்­லது 4 phase ஆகவோ செய்­ய­லாம். அந்த 1,000 கன அடி வரு­வ­தற்கு புதிய கட்­டளை மேட்டு வாய்க்­காலை நீங்­கள் சீர்­செய்து கொடுத்­தால், தஞ்சை மாவட்­ட­டத்­தில் விளை­கின்ற நெல், அத்­தனை டெல்டா மாவட்­டத்­திற்­கும் உணவு உற்­பத்­தியை நிச்­ச­ய­மாக பெருக்­கும். இது கிட்­டத்­தட்ட பெரிய scheme. அதை அர­சின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">ஆற்­றுப்­பா­சன வாய்க்­கால் புன­ர­மைப்பு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல, ஆற்­றுப்­பா­சன வாய்க்­கால் கோட்­டத்­தில் மற்­று­மொரு பாசன வாய்க்­கா­லான உய்­யக்­கொண்­டான் வாய்க்­கால் இருக்­கி­றது. அதில் ரூ.15 கோடி கொடுத்து, 2 phases வேலை நாங்­கள் பார்த்­தி­ருக்­கி­றோம். எங்­க­ளு­டைய அன்­றைய  முத­ல­மைச்­சர் அவர்­கள், தஞ்­சா­வூர் அரசு விழா­விற்கு வந்­தார்­கள். அப்­போது 6 schemes அறி­வித்­தார்­கள். அதில் ஒரு scheme தான் உய்­யக்­கொண்­டான் வாய்க்­கா­லைச் சீர­மைக்­கின்ற பணி. ரூ.15 கோடி செல­வில் இப்­போது வேலை நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது. அதில் ஒரு stretch,--மூன்­றாம் phase நடக்­க­வில்லை. மூன்­றாம் phase-ஐ நாங்­கள் அறி­விக்­க­வில்லை. அந்­தப் பணி­யினை,  சாயல்­குடி ஏரி­யி­லி­ருந்து வீர­ம­ர­சன்­பேட்டை கிரா­மத்­தி­லுள்ள சேராண்டி ஏரி வரை, மூன்­றாம் நீட்­டிப்பு பாசன வாய்க்­காலை concrete lining செய்து புன­ர­மைக்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆற்­றுப்­பா­சன கோட்­டத்­தி­லுள்ள மிகப் பெரிய ஏரி­யான, சொரக்­கு­டி­பட்டி ஏரி என்று ஓர் ஏரி இருக்­கி­றது. அது என்­ன­வென்­றால் தண்­ணீர் வந்­த­வு­டன் அந்த ஊரே பயந்­து­கொண்டே இருக்­கும். என்­னக் கார­ணம் என்­றால், border-ல் தாழ்­வாக இருக்­கி­றது; தண்­ணீர் ஏற, ஏற இரவு நேரங்­க­ளில் விளக்கு வைத்­துக் கொண்டு காவல் பார்ப்­பார்­கள். எனவே, அதற்கு தடுப்­புச் சுவர் அமைத்து, சொரக்­கு­டி­பட்டி பெரிய ஏரியை ஆழப்­ப­டுத்தி, அது கிட்­டத்­தட்ட 650 ஏக்­கர் பரப்­ப­ள­வுள்­ளது. அதை நம்­மு­டைய அர­சின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­கி­றேன். அதே­போல, என்­னு­டைய மிக முக்­கி­ய­மான கோரிக்­கையை அமைச்­சர் அவர்­க­ளின் கவ­னத்­திற்­குக் கொண்டு வரு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திருச்சி மாவட்­டத்­தில் எங்­க­ளு­டைய தலை­வர் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது ஒரு தடுப்­பணை கட்­டி­னார்­கள். அந்­தத் தடுப்­ப­ணை­யைக் கட்­டிய பிறகு, திருச்சி மாவட்­டத்­திற்கு மேற்கே இருக்­கின்ற பகு­தி­க­ளின் நிலத்­தடி நீர் மிக செறி­வாக ஏற்­பட்டு, பல கூட்­டுக் குடி­நீர் திட்­டங்­கள் சிறப்­பாக இயங்­கு­கின்­றன. அது­மட்­டு­மல்ல, கிரா­மங்­க­ளில் நிலத்­தடி நீர்­மட்­டம் ஏறி­யி­ருக்­கி­றது. ஆனால், கல்­ல­ணை­யி­லி­ருந்து பார்த்­தீர்­க­ளென்­றால், என்­னு­டைய தொகு­தி­யின் அணைக்­குடி வரை கிட்­டத்­தட்ட 40 கிலோ மீட்­டர். அந்த 40 கிலோ மீட்­ட­ரில் 39 கூட்­டுக் குடி­நீர் திட்­டங்­கள் இலால்­குடி, பேரா­வூ­ரணி, பட்­டுக்­கோட்டை, அறந்­தாங்கி, புதுக்­கோட்டை இவ்­வாறு பல்­வேறு ஊர்­க­ளுக்கு பல ஆட்­சிக்­கா­லத்­தில், செல்வி. ஜெ. ஜெய­ல­லிதா அவர்­க­ளின் ஆட்­சிக்­கா­லத்­தில் போட்­டார்­கள். அதன்­பி­றகு கலை­ஞர் அவர்­க­ளின் காலத்­தில் போட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நிலத்­தடி நீர் மட்­டம்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­போது, எங்­க­ளு­டைய தலை­வர் அவர்­க­ளின் காலத்­தில் திரு­வா­ரூ­ருக்கு போட்­டார்­கள். எங்­க­ளுக்கு என்ன பெரிய விஷ­யம் என்­றால், நாங்­கள் ஒரு 10, 15,--நான் 1989-ல் முதன்­மு­த­லில் MLA ஆன­போது, கிரா­மங்­க­ளில் போனால் 15 அடி. காலை­யில் ஒரு­வர் செல்­கி­றார் என்­றால், borewell போட்டு தண்­ணீர் எடுத்­து­வி­டு­வார். 15 அடி­தான் நீர்­மட்­டத்­தின் உய­ரம். இன்­றைக்கு 150 முதல் 200 அடி வரை சென்­று­விட்­டது. கார­ணம் எல்­லோ­ரும் இந்­தக் கூட்­டுக் குடி­நீர் திட்­டத்­திற்­காக எல்லா இடங்­க­ளி­லும் borewells போட்டு பெரிய, பெரிய ராட்­சத borewells போட்டு அந்­தத் தண்­ணீரை உறிஞ்­சி­ய­தால், இன்­றைக்கு நிலத்­தடி நீர் மட்­டம் கீழே சென்­றுள்­ளது. அதற்­காக எங்­க­ளுக்கு என்ன செய்ய வேண்­டும் என்­றால், விஷ்­ணம்­பேட்டை என்ற ஒரு கிரா­மம் இருக்­கி­றது. அந்த level-ஐ எல்­லாம் ஏற்­கெ­னவே பொறி­யா­ளர்­கள் எடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல, அணைக்­குடி என்று ஒரு கிரா­மம் இருக்­கி­றது. அந்த இரண்டு இடத்­தி­லும் படுக்கை அணை என்று பெயர்—­எப்­போ­தும் கொள்­ளி­டத்­தில் தடுப்­பணை கட்ட முடி­யாது, அடித்­த­தென்­றால் ரூ.3 இலட்­சம், ரூ.4 இலட்­சம்—­எப்­போ­தா­வது வெள்­ளம் வந்­தால் அடித்து தூக்­கிக்­கொண்டு போய்­வி­டும். அதில் ஒன்­றும் இல்லை. அந்த engineers, experts-ஐ கேட்­டீர்­க­ளென்­றால் தெரி­யும். ஒரு குறிப்­பிட்ட அள­வுக்கு மேல் தண்­ணீர் overflow ஆகி செல்ல வேண்­டும். அந்­த­மா­திரி வடி­வ­மைத்து விஷ்­ணம்­பேட்­டை­யி­ லும் என்­னு­டைய தொகு­தி­யில் உள்ள அணைக்­கு­டி­யி­லும் தரை­மட்­டப் பாலம், தடுப்பு கொள்­ளி­டத்­தில் கட்­டித் தர வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன். இது நிலத்­தடி நீர் செறி­வூட்­டு­வ­தற்கு பயன்­ப­டும். கூட்­டுக் குடி­நீர் திட்­டத்­திற்கு தண்­ணீர் எடுப்­ப­தற்கு easy ஆக இருக்­கும். கிராம விவ­சா­யி­கள் 100 அடி, 200 அடி borewell போட்­டுள்ள ஆழ்­துளை கிண­றுக்கு, செறி­வூட்­டல் மூல­மாக பாசன வசதி உறுதி செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">காவிரி வடி­நிலக் கோட்­டம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல காவிரி வடி­நி­லக்­கோட்­டம், காவி­ரி­யில் அதே scheme தான். கொள்­ளி­டத்­தில் கட்­டப்­பட்­டது. இது நேமம் திருச்­சென்­னம்­பூண்டி இடையே தள­மட்ட சுவர் என்று பெயர், தமி­ழில் தள­மட்ட சுவர் என்று சொல்­வார்­கள். ஒரு அடி, ஒன்­றரை அடி உய­ரம்­தான் கட்­டு­வார்­கள். அப்­படி கட்­டி­னால் அந்­தப் பாசன வாய்க்­கா­லில் அந்­தத் தண்­ணீர் ஏறி பாயும். சாதா­ரண நாட்­க­ளில், கோடை நாட்­க­ளில் தண்­ணீர் தேங்கி, நிலத்­தடி நீர் செறி­வூட்­டப்­ப­டும். காவி­ரி­யில் விடு­பட்ட கிளை வாய்க்­கால்­கள் மற்­றும் பாசன வாய்க்­கால்­களை, கட்­டு­மா­னங்­களை சீர­மைக்க வேண்­டும் என்று துறை­யி­னைக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல், வெண்­ணாறு கோட்­டம். வெண்­ணாற்­றின் குறுக்கே மஹா­தே­வ­பு­ரம், இந்­த­லூர் என்று இரண்டு ஊர்­க­ளுக்­கி­டை­யில் இதே­போல் தரை­மட்ட சுவர் அமைக்க வேண்­டும். அப்­போ­து­தான் அந்­தப் பகு­தி­யி­லுள்ள 10 கிரா­மங்­கள் பாசன வசதி எளி­தா­கப் பெற முடி­யும். திரு­வை­யாறு தொகு­தி­யி­லுள்ள வெண்­ணாறு கோட்­டப் பாசன பகு­தி­க­ளி­லுள்ள பழ­மை­யான மத­கு­கள், நீரொ­ழுங்­கி­கள், குறுக்கு கட்­டு­மா­னங்­கள் மற்­றும் வாய்க்­கால்­கள் சேத­ம­டைந்­துள்­ளன. அவற்றை சீர­மைக்க துறை­யின்­மூ­லம் நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டு­மென கேட்­டுக்­கொள்­கி­றேன்.  புள்­ள­வாய்க்­கால் நிறைய நல்ல பாச­னம் உள்ள பகுதி. அது பாத­ர­குடி, செய்­யா­மங்­க­லம், கச்­ச­மங்­க­லம், மகா­தே­வ­பு­ரம் போன்­ற­வற்­றிற்­குச் செல்­லும் வாய்க்­கால். தற்­போது செல்­வ­தில்லை. அவர்­க­ளும் விவ­சா­யத்தை விட்­டு­விட்­டார்­கள். எனவே,  புள்­ள­வாய்க்­காலை modernise செய்ய வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன். வெண்­ணாறு கோட்­டத்­தைச் சேர்ந்த மிக முக்­கி­ய­மான பிரச்­சினை, வெண்­ணாறு கோட்­டத்­தில் கள்­ளப்­பெ­ரம்­பூர் ஏரி என்று ஓர் ஏரி இருக்­கி­றது. நம்­மு­டைய தஞ்­சா­வூர் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் அங்கே வந்­தார். இப்­போது தன்­னார்­வத் தொண்டு உறுப்­பி­னர்­கள் கிட்­டத்­தட்ட ஊர் கிரா­மத்து இளை­ஞர்­க­ளெல்­லாம் சேர்ந்து desilting-க்கு பணம் கொடுங்­கள் என்று கேட்­டார்­கள். நான் ரூ.50,000, எங்­க­ளு­டைய MP ரூ.1 இலட்­சம், தஞ்­சா­வூர் எம்.எல்.ஏ. ரூ.50,000 கொடுத்து, அந்த கள்­ளப்­பெ­ரம்­பூர் ஏரியை சீர­மைத்து வரு­கி­றார்­கள்; கரை அமைத்து வரு­கி­றார்­கள். தனி­யார் எந்­த­ள­வுக்கு அதனை சிறப்­பா­கச் செய்ய முடி­யும் என்­பது தெரி­ய­வில்லை. ஆனால், துறை எடுத்து செய்­தால், சுமார் 640 ஏக்­கர் பரப்­ப­ளவு கொண்ட கள்­ளப்­பெ­ரம்­பூர் ஏரியை சீர­மைத்­துக் கொடுத்­தால், தஞ்­சா­வூர் நக­ரத்­தில் groundwater நிச்­ச­ய­மாக recharge ஆகும். கிட்­டத்­தட்ட 2,662 ஏக்­கர் நில பாச­னப் பரப்பு பாசன வச­தி­யைப் பெறும். அது உறுதி செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நீர் மேலாண்மை – தடுப்­பணை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல்­தான் அல்­லூர் அர­சக்­கு­டி­யில் ஓர் ஏரி­யி­ருக்­கி­றது. அதை தூர்­வார வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன். இந்த அல்­லூர் அர­சக்­குடி ஏரிக்­கும், கள்­ளப்­பெ­ரம்­பூர் ஏரிக்­கும் ஒரு வர­லாறு இருக்­கி­றது. கல்­ல­ணை­யைக் கட்­டிய கரி­கால பெரு­வ­ளத்­தான், ஏதோ ஒரு போருக்கு சென்­று­விட்டு வரும்­போது, அந்­தப் பகு­தி­யில் உள்ள விவ­சா­யி­க­ளெல்­லாம் ஒன்று திரண்டு, மன்­னரை சென்று பார்த்­தி­ருக்­கி­றார்­கள். ஐயா, நீங்­கள் கல்­ல­ணையை கட்­டி­ய­வு­ட­னே­தான் எங்­க­ளால் விவ­சா­யம் செய்ய முடி­ய­வில்லை. திடீ­ரென்று வெள்­ளம் வரு­கி­றது, திடீ­ரென்று வறட்சி வரு­கி­றது. கரி­கா­ல­னு­டைய பெரிய அறிவு, நீர் மேலாண்­மை-­தன்­னு­டைய அமைச்­சரை அனுப்பி, ஆய்வு செய்­து­விட்டு வர சொல்­கி­றார். ஆய்வு செய்­த­போது, அந்­தப் பகு­தி­யில் வெறும் மண்­தான் இருந்­தது; ஒரே­யோர் இடத்­தில் கச்­ச­மங்­க­லம் என்ற ஊரில் 7 அடி ஆழத்­தில் கீழே ஒரு பெரிய பாறை இருந்­தி­ருக்­கி­றது. மன்­னர் கரி­கால பெரு­வ­ளத்­தா­னி­டம் கச்­ச­மங்­க­லம் குறித்து தெரி­வித்­தார்­கள். கரி­கா­லன் உடனே அந்த இடத்­தைப் பார்த்­து­விட்டு, இரண்டு வாய்க்­கால் வெட்டி, அந்த இடத்­தில் ஒரு சிறிய தடுப்­பணை அமைத்­தார். அன்­றைக்கு போட்ட அணை­தான் இன்­ன­மும் இருக்­கி­றது. அதற்­குத்­தான் உலக பரிசு கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். இரண்டு வாய்க்­கால்­களை வெட்டி, ஒன்­றிற்கு பிள்ளை வாய்க்­கால் என்­றும், மற்­றொன்­றிற்கு ஆனந்த காவிரி என்­றும் பெயர் வைத்­தார் கரி­கா­லன். அப்­படி ஆனந்த காவி­ரி­யி­னு­டைய end தான் கள்­ளப்­பெ­ரம்­பூர் ஏரி, நம்­மு­டைய தஞ்­சா­வூர் எம்.எல்.ஏ வந்த பார்த்­தது. இந்­தப் பக்­கம் வரு­வது, அல்­லூர் அர­சக்­குடி ஏரி. அந்த ஏரி­யை­யும் நாம் சீர்­ப­டுத்த வேண்­டும். இன்று வரை­யில் அந்­தப் பகு­தி­யி­லுள்ள விவ­சா­யத்­திற்கு மிக கரி­கால பெரு­வ­ளத்­தான் கட்­டிக் கொடுத்த அந்த ஏரி­கள்­தான் பாசன வச­தி­யு­டன் டெல்­டாவை மிகச் சிறப்­பாக வைத்­தி­ருக்­கி­றது என்­பது தங்­க­ளு­டைய கவ­னத்­திற்­குக் கொண்டு வரு­கி­றேன். (மணி­ய­டிக்­கப்­பெற்­றது)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கல்­லணை கால்­வாய் ஏரி­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அடுத்து, கல்­லணை கால்­வா­யில் கடம்­பங்­குடி, தொண்­டாம்­பட்டி, சோழ­கன்­பட்டி, பொன்­வ­ளர்ந்­தான்­பட்டி, இந்­த­லூர் என்று 5 கிரா­மங்­கள் இருக்­கின்­றன. 5 ஏரி­கள் இருக்­கின்­றன. அந்த ஏரி­கள் பட்­டி­ய­லில் இருக்­காது; எந்த division-ல் இருக்­காது. Unclassified tanks என்று வைத்து உங்­க­ளு­டைய துறை­யில் சொல்­வார்­கள். அவற்­றிற்கு தண்­ணீர் விட­மாட்­டார்­கள். மற்ற எந்த ஊராக இருந்­தா­லும், சொந்­தக்­கா­ர­னாக இருந்­தா­லும் சரி, தண்­ணீர் விட­மாட்­டார்­கள். ஒன்று வீர­மங்­க­லம், ஆதி திரா­வி­டர் தெரு­வில் இருக்­கி­றது. நான் பேசி, பேசி, வருடா வரு­டம் சம­ர­சம் செய்து தண்­ணீ­ரை­விட சொல்­வேன். அவர்­க­ளும் தண்­ணீரை விட்­டு­வி­டு­வார்­கள். Unclassified tanks-ஐ துறை­யின்­மூ­லம் ஏதா­வது ஒன்­றில் சேர்க்க வேண்­டும். அப்­படி சேர்­கி­ற­போ­து­தான், நீர்ப்­பா­ச­னம் வசதி வரும். அப்­படி வரு­கின்­ற­போது, அந்­தப் பகு­தி­யில் விவ­சா­யம் செழிக்­கும் என்­ப­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒரு MLA நிம்­ம­தி­யாக, இங்­கே­யி­ருக்­கிற அனைத்து சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் சொல்­கி­றேன், ஊருக்­குள் போக­வேண்­டு­மென்­றால் உள்­ளாட்­சித் துறை நன்­றாக இருக்க வேண்­டும். உள்­ளாட்­சித் துறை கண்­டிப்­பாக நன்­றாக இருக்க வேண்­டும். P.O. நன்­றாக இருக்க வேண்­டும். எங்­கள் கோ.சி. மணி அண்­ணன் சொல்­வார், ஒரு மாவட்­டம் சிறப்­பாக இருக்க வேண்­டு­மென்­றால் மாவட்ட ஆட்­சித் தலை­வர் நன்­றாக இருக்க வேண்­டும், அடுத்­தது P.O. நன்­றாக இருக்க வேண்­டும், அடுத்­தது B.D.O நன்­றாக இருக்க வேண்­டும். மிகச்­சி­றந்த தீர்க்­க­த­ரிசி அவர். அவர் சொன்­ன­தைப் பார்த்­தால், நாங்­கள் அவ­ரி­டம் எது­வும் கேட்­க­மாட்­டோம். நல்ல P.O. எங்­கள் தஞ்­சா­வூர் மாவட்­டத்­திற்கு நிய­மித்­தார். பிர­மா­த­மாக வேலை வாங்­கு­வார். நிறைய விஷ­யங்­கள் அவ­ரி­டம் இருக்­கின்­றன. நான் எல்லா மாவட்­டத்­திற்­கும் அவ­ரு­டன் tour செல்­வேன். மிக அற்­பு­த­மாக இரண்­டு­நாள் இங்கே விவா­தத்தை நடத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சிக்­கா­லத்­தில் உள்­ளாட்­சித் துறை­கள் மிகச் சிறப்­பாக இயங்கிஇருக்­கின்­றன. நினை­வில் வாழும் கோ.சி. மணி அவர்­கள். திரா­விட மாடல் நாய­கர், கழ­கத் தலை­வர் அவர்­கள்,   இ. பெரி­ய­சாமி அவர்­கள்.   இ. பெரி­ய­சாமி அவர்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய record என்­ன­வென்­றால் நாங்­கள் எல்­லாம் தேர்­தல்­களை எதிர்­கொள்ள அவர்­தான் கார­ணம். ஒன்­று­மில்லை, தலை­வ­ரி­டம் பேசி­னார். 4,000 கோடி வாங்­கி­னார், அடுத்த வரு­டம் 4,000 கோடி மொத்­தம் 8,000 கோடி. முத­ல­மைச்­ச­ரின் சாலைத் திட்­டம் என்று சொல்லி, Highways standard-ல், இன்­றைக்­கும் எந்த ஊருக்­குச் சென்­றா­லும் வெள்­ளைக்­கோடு போட்டு மிகச் சிறப்­பா­க—­இன்­றைக்கு அசோக்­கு­மார் அவர்­கள் பேரா­வூ­ரணி தொகு­தி­யில் வெற்­ற­பெற முடி­யுமா, வெற்­றி­பெற்­றார் என்­றால் அந்த road தான். அண்­ணா­துரை வெற்­றி­பெற்­றார், வெற்­றி­பெற்­றார் என்­றால் அந்த road தான். ஒன்­றே­யொன்­றில் தான் நாங்­கள் ஏமாந்­து­விட்­டோம். நான் வெற்­றி­பெற்­றா­லும் அதே­போல வைத்­தி­லிங்­கம் அவர்­கள் வெற்றி பெற்­றா­லும் அதற்­கெல்­லாம் கார­ணம் அண்­ணன் இ. பெரி­ய­சாமி   அவ்­வ­ளவு சிறப்­பாக அந்­தச் சாலை­கள் உள்­ளன. தற்­போது நீங்­கள் 7,000 கோடி ஒதுக்­கி­யுள்­ளீர்­கள். நன்­றாக சாலையை போடுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நாங்­கள் என்ன செய்­தோம் என்­றால், ஒரு கிலோ­மீட்­டர்­தான் எடுத்­தோம். ஒரு கிலோ­மீட்­டர் உள்ள சாலை­களை எடுத்­தோம். தற்­போது நீங்­கள் 800, 900, 750, 850 மீட்­டர் உள்ள சாலை­கள் எல்­லாம் இருக்­கி­றது. அதை நீங்­கள் அவ­சி­ய­மாக எடுத்­தீர்­கள் என்­றால்­தான், அதனை relaxation செய்­ய­வேண்­டும். ஒரு கிலோ­மீட்­ட­ருக்கு கீழே­யுள்ள சாலை­களை எடுத்­து—­கி­ரா­மச் சாலை­கள் என்­பது யாருமே போட­வில்லை. இப்­போ­து­தான் முதன்­மு­றை­யாக கடந்­த­முறை தேர்­தல் வரு­கி­றது என்று எங்­கள் அண்­ணன் இ. பெரி­ய­சாமி  போட்­டார்­கள். குறை­வாக உள்­ள­தற்­கும் போட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒரு comparison இந்து பத்­தி­ரி­கை­யில் கடந்த 16 ஆம் தேதி­யன்று ஒரு article வந்­தி­ருக்­கி­றது.  அமைச்­சர் அவர்­க­ளின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­கி­றேன். நீர்­வ­ளத் துறைக்கு 15 CE இருக்­கி­றார்­கள். 39 SE-மேற்­பார்வை பொறி­யா­ளர்­கள், 152 EE-செயற்­பொ­றி­யா­ளர்­கள், 508 உதவி செயற்­பொ­றி­யா­ளர்­கள் பேர் இருக்­கி­றார்­கள். ஆனால், அந்த 9,264 கோடி­தான் நிதி கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள். அதை implement செய்­வற்கு இவ்­வ­ளவு பேர். அதற்­க­டுத்து நெடுஞ்­சா­லைத் துறை­யில் பார்த்­தீர்­கள் என்­றால் 10 CE இருக்­கி­றார்­கள், 35 SE இருக்­கி­றார்­கள், 169 EE இருக்­கி­றார்­கள், 538 AE இருக்­கி­றார்­கள். ஆனால், அதை implement செய்­வற்கு 21,524 கோடி நிதி ஒதுக்­கி­யி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆனால், ஊரக வளர்ச்­சித் துறை­யில் கிட்­டத்­தட்ட 40,000 கோடி நிதி ஒதுக்­கி­யி­ருக்­கி­றீர்­கள். ஆனால் CE இரண்டே பேர்­தான். சென்­னை­யில் இருக்­கி­றார்­கள். அதற்­க­டுத்­தது மூன்று பேர் SE, அதற்­க­டுத்து 45 EE, அதற்­க­டுத்து 191 AE இருக்­கி­றார்­கள். உண்­மை­யில் இந்­தத் திட்­டம் failure ஆகி­றது, சரி­யாக நடக்­க­வில்லை, வீடு பெயர்ந்து விழு­கி­றது என்­றால் அதற்­கெல்­லாம் கார­ணம் EE-க்களெல்­லாம் இல்லை. நீங்­கள் நிதியை உயர்த்த வேண்­டும். நெடுஞ்­சா­லைத் துறை மற்­றும் பொதுப் பணித் துறை­யில் இருப்­ப­தைப்­போல உள்­ளாட்­சித் துறைக்­கும் நிதியை உயர்த்த வேண்­டும். அதே­போல நெடுஞ்­சா­லைத் துறை­யில் நாம் தரக்­கட்­டுப்­பாடு வைத்­தி­ருக்­கி­றோம். ஆனால் உள்­ளாட்­சித் துறை­யில் தரக்­கட்­டுப்­பாடு இல்லை. ஆனால் உள்­ளாட்­சித் துறை­யில் தரக்­கட்­டுப்­பாடு வேண்­டும். உள்­ளாட்­சித் துறை­யில் தனி­யாக engineer தரக்­கட்­டுப்­பாடு செய்­ய­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல உதவி செயற்­பொ­றி­யா­ளர் two-wheeler-ல் வரு­கி­றார்­கள். அத­னால் அவர்­க­ளுக்கு ஒரு jeep கொடுக்­க­வேண்­டும். ஒரு jeep கொடுத்து, நீங்­கள்­தான் work அதி­கம் அறி­வித்­துள்­ளீர்­கள். வீடு­கள் எல்­லாம் கட்ட வேண்­டி­யி­ருக்­கி­றது. 70,000 வீடு­கள் கட்­டப்­ப­டும் என்­பதை ஒரு இலட்­ச­மாக சொல்­ல­வேண்­டும். அதை நான் பார்த்­துக்­கொள்­கி­றேன். நகர்ப்­பு­றத்தை ஒட்டி peri-urban village என ஊர்­கள் இருக்­கின்­றன. அங்கு அடிப்­படை வச­தி­கள் எது­வும் இல்­லா­மல் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">Group house என்று சொன்­னார்­கள் அதை­யெல்­லாம் பரா­ம­ரிக்க வேண்­டும். என்­னு­டைய திரு­வை­யாறு தொகு­தி­யில் மட்­டும்­தான் Union office பழைய காங்­கி­ரஸ் காலக் கட்­ட­ட­மாக இருக்­கி­றது. மீத அனைத்து Union office-ஐயும் நாங்­கள் எங்­கள் ஆட்­சிக் காலத்­தில் புது அலு­வ­ல­கம் கட்­டி­யி­ருக்­கி­றோம். அத­னால் திரு­வை­யாறு தொகு­திக்கு ஒரு அலு­வ­ல­கம் கட்­டித்­தர வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன். என்­னு­டைய நண்­பர் கோபித்­துக்­கொள்­வார். சுற்­று­லாத் துறை­யில் இரண்டே இரண்டு உள்­ளது. வேறு ஒன்­றும் இல்லை. முடித்­து­வி­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சுற்­று­லாத் துறை­யில் கல்­ல­ணை­தான் அதி­க­மாக சுற்­று­லாப் பய­ணி­கள் வரு­கிற பகுதி. அது என்­ன­வென்­றால் சிறிய இடம். கொஞ்­ச­மாக வரு­கி­றார்­கள். திருச்­சி­யி­லி­ருந்து அதி­க­மாக வரு­கி­றார்­கள். என்­னு­டைய வேண்­டு­கோள் அங்கு பொதுப் பணித் துறை­யி­னு­டைய இடம் நிறைய இருக்­கி­றது. நிறைய வயல்­க­ளாக இருக்­கி­றது. இப்­போது நட்­டுக்­கொண்­டி­ருக்­கி­ றார்­கள். விவ­சா­யம் செய்­து­கொண்­டி­ருக்­கி­றார்­கள். நீங்­கள் துறை­யின் மூல­மாக எடுத்து நல்ல புல் தரை, கல்­ல­ணை­யில் light அலங்­கார மின் விளக்கு, infrastructure அதா­வது latrine, bathroom இவை­ய­னைத்­தும் கட்­ட­வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல், தென்­பெ­ரம்­பூர் என்று என்­னு­டைய தொகு­தி­யில் ஓர் ஊர் இருக்­கி­றது. அந்த இடத்­தில் என்­ன­வென்­றால் வட­வாறு, வெண்­ணாறு, வெட்­டாறு மூன்­றும் பிரி­கிற இடம். தஞ்­சா­வூ­ரி­லி­ருந்து 8 கி.மீ.-ல் உள்­ளது. ஏரா­ள­மான நபர்­கள் வரு­கி­றார்­கள். ஆனால் அங்கு எந்த வச­தி­யும் இல்லை. அதை ஒரு சுற்­று­லாத் தல­மாக நீங்­கள் அறி­விக்க வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன். அதைப்­போல், கச்­ச­மங்­க­லத்­தில் ஒரு சிறிய சிறு­வர் அமைக்­க­லாம். சிறிய இடம் அது. அதை நன்­றாக, சிறப்­பாக புதிய சுற்­று­லாத் தல­மாக அமைக்க வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நம்­மு­டைய  கலை­ஞர் அவர்­கள் மிகப்­பெ­ரிய தீர்க்­க­த­ரிசி. அவர்­க­ளி­டம் நான் இது­போன்று இருக்­கி­றது என்று ஒரு மனு கொடுத்­தேன். அது இருக்­கி­றது. அது என்­ன­வா­யிற்று என்று கேட்­டார். அதில் எழு­தி­னார். அர­சர் கல்­லூ­ரி­யின்­கீழ் ஒரு துறை இருக்­கி­றது. நம்­மு­டைய  தங்­கம் தென்­ன­ரசு அவர்­க­ளுக்கு எல்­லாம் நன்­றா­கத் தெரி­யும். அந்த college-ஐப் பற்றி முழு­வி­வ­ர­மும் தெரி­யும். கலை­ஞர் அவர்­கள் என்ன செய்­தார்­கள் என்­றால் ஒரு துறையை தூக்கி, திரு­வை­யாறு அரசு இசைக் கல்­லூ­ரி­யாக அறி­வித்­தார். அந்­தக் கல்­லூ­ரி­யில் இன்­றைக்கு பல்­லா­யி­ரம், 2,000 நபர்­கள் படிக்­கி­றார்­கள். அதில் ஏரா­ள­மான குறை­பா­டு­கள் உள்­ளன. கடந்த வரு­டம் hostel வாங்­கிக்­கொ­டுத்­தேன்.    ராஜ்­மோ­கன்  அதை கள­ஆய்வு செய்து ladies hostel இல்லை என்று நினைக்­கி­றேன். அதி­கப் பாடப்­பி­ரி­வு­கள் வேண்­டு­மென்று கேட்­கி­றார்­கள். எனவே, அதை­யெல்­லாம் செய்­து­தர வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்வாறு துரை.சந்திரசேகரன் உரையாற்றினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>