<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,457,958,1014" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 22 2026 03:54:11 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260822T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="22082026-TRY-03" position.sequence="03" ex-ref="22082026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="34">‘மேகதாது அணை கட்டக்கூடாது’ என ஒரு வார்த்தைகூட பேசாதது ஏன்?</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="34"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="58">தொகுதி மறுவரையறையில் பல்டி அடித்த விஜய் –  ராகுல் காந்தி கூறிய எட்டப்பர் விஜய்யா? </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="41">தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் பேசியது தொடர்பாக தயாநிதி மாறன் எம்.பி. பேட்டி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Dhiyanithimara_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சென்னை, ஆக.22 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">மேக­தாது அணை கட்­டக்­கூ­டாது என ஒரு வார்த்தை கூட பேசா­தது ஏன் ? என்­றும், Delimitation-–ல் பல்டி அடித்த விஜய் என்­றும், ராகுல்காந்தி கூறிய எட்­டப்­பர் விஜய்யா?  என்­றும் தென்­மா­நில முத­ல­மைச்­சர்­கள் மாநாட்­டில்முதல்­வர் விஜய் பேசி­யது தொடர்­பாக கழக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தயா­நிதி மாறன் அவர்­கள் பேட்­டி­யில் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது குறித்து தயா­நிதி மாறன் எம்.பி. செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அளித்த பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்ற மாதம் தமிழ்­நாட்­டிற்கு வடக்­கி­லி­ருந்து ஒரு பெரும் கட்­சி­யின் தலை­வர் வந்து நிரு­பர்­களை பார்த்து Delimitation யை யார் ஆத­ரிக்­கி­றார்­களோ அது­வும் குறிப்­பாக Fair Delimitation யை யார் ஆத­ரிக்­கி­றார்­களோ அவர் தமிழ்­நாட்­டின் விரோதி அவர்­கள் எட்­டப்­பர் என்று கூறி­விட்டு வீர வச­னம் பேசி­விட்டு சென்­றார். அப்­பொ­ழுது அந்த டிலி­மி­டே­ஷன் மசோதா நாடா­ளு­மன்­றத்­தில் வர­வி­ருப்­ப­தா­க­வும் அந்த மசோ­தா­வில் தி.மு.க. நிலை என்ன என்று ஒரு கேள்­வி­யினை எழுப்­பி­விட்டு சென்­றார். வராத மசோ­தா­வுக்கு வரப்­போ­கி­றது என்று அந்த கட்­சி­யின் தலை­வரே எடுத்­துக் கொடுத்­த­வு­டன் அந்த கட்­சி­யின் வாலாக செயல்­ப­டும் தமிழ்­நாட்­டின் அந்த கட்­சி­யின் தலை­வர் ஒரு­வர். வரும் 16ம் தேதி வரு­கி­றது மசோதா. 17 ஆம் தேதி வரு­கி­றது மசோதா. தி.மு.க. நிலைப்­பாட்டை பாருங்­கள் என்ன செய்ய போகி­றார்­கள் பாருங்­கள் என்று அவ­ரும் அவர் பங்கு வீர வச­னம் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தொகுதி மறு­வ­ரை­யறை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டிற்கு பாதிப்பு வரக்­கூ­டாது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­பொ­ழுது நாங்­கள் சொன்­னோம் வராதா மசோதா பற்றி ஏன் பேசி கொண்­டி­ருக்­கி­றீர்­கள் Delimitation யை பொறுத்­த­வ­ரைக்­கும் தி.மு.க.வின் நிலைப்­பாடு ஒரே நிலைப்­பாடு தான். தமிழ்­நாட்­டுக்­கும் எள் அள­வுக்­கும் எந்த தீங்­கும் வர­வி­டக்­கூ­டாது. தி.மு.க.வின் நிலைப்­பாடு தமிழ்­நாட்­டில் இருக்­கின்ற தற்­போ­தைய 7.18% ஒதுக்­கீடு சட்­ட­மன்­றத்­தி­லும் சரி நாடா­ளு­மற்­றத்­தி­லும் சரி அதே இட ஒதுக்­கீடு இருந்தே தீர வேண்­டும். தமிழ்­நாட்­டுக்கு எந்­த­வித பாதிப்­பும் வரக்­கூ­டாது என்று கடந்த மார்ச் மாதம் முதல்­மு­றை­யாக தென்­னக முதல்­வர்­களை எல்­லாம் தமிழ்­நாட்­டிலே அழைத்து ஒரு சிறப்பு கூட்­டத்தை வைத்து அங்கே தீர்­மா­னத்தை செய்­த­வர் எங்­கள் தலை­வர் அவர்­கள். சரித்­தி­ரம் தெரி­யா­த­வர்­கள் ஏதோ திடீ­ரென்று அவர்­க­ளின் கைப்­பா­வை­யாக தமிழ்­நாட்­டிலே ஒரு­வர் வந்­து­விட அவ­சர கதி­யிலே அனைத்து கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கூட்­டத்தை நடத்­தி­னார்­கள். அப்­பொ­ழுது நாங்­கள் சொன்­னது முத­லில் காவி­ரி­யில் தண்ணி வரல, மேக­தாது அணை கட்­டப்­ப­டு­கி­றது. தமிழ்­நாட்டு முத­ல­மைச்­சர் விஜய் அவர்­களே அனைத்து கட்சி தலை­வர்­கள் கூட்­டத்தை கூட்டி ஒரு தீர்­மா­னத்தை போடுங்­கள் ஒரு முடிவு எடுங்­கள் என்­றோம். ஆனால் தமிழ்­நாட்டு முதல்­வரோ அதை பற்றி எந்த முடி­வும் எடுக்­கா­மல் தமிழ்­நாட்­டில் உள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கூட்­டத்தை வைத்து ஒரு தீர்­மா­னத்தை போடு­கி­றார்­கள். என்ன தீர்­மா­னம்? டிலி­மி­டே­ஷன் இப்­ப­டியே இருக்க வேண்­டும். நோ டிலி­மி­டே­ஷன் இப்­போது இருக்­கின்ற 543 தொகு­தி­க­ளும் அப்­ப­டியே இருக்க வேண்­டும் ஃப்ரீஸ் செய்ய வேண்­டும் என்று தீர்­மா­னத்தை போட்­டார்­கள். அதில் காவேரி நதி நீர் பற்றி மேக­தாது அணை பற்றி பேசவே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">காங்­கி­ரஸ் கைப்­பாவை விஜய்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பிறகு தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் தொகுதி மறு­வ­ரை­யறை தீர்­மா­னத்தை கொண்டு வந்து நிறை­வேற்­றி­னார்­கள். அதில் 543ல் ஃப்ரீஸ் செய்ய வேண்­டும். தொகுதி மறு­வ­ரை­யறை கூடாது என்­றார்­கள். ஆனால் இன்று மாலை என்ன ஆயிற்று? தமிழ்­நாட்­டின் முதல்­வர் இங்கு இரண்டு தீர்­மா­னங்­களை போட்ட முதல்­வர் விஜய் அவர்­கள் காங்­கி­ரஸ் பேச்சை கேட்டு கைப்­பா­வை­யாக நடந்து கொள்­ளும் விஜய் அவர்­கள் அமித்­ஷாவை பார்த்த உடனே நிலைப்­பாட்டை மாற்­றி­விட்­டார். என்ன நிலைப்­பாடு Fair Delimitation முதல்ல சொன்­னது டிலி­மி­டே­ஷன். 71ல் எப்­படி இருந்­ததோ அப்­ப­டியே ஃப்ரீஸ் செய்­யுங்­கள் என்­பது. ஆனால் சட்­ட­மன்­றத்­தில் ஏக­ம­னத்­து­டன் தீர்­மா­னம் போட்­டு­விட்டு அமித்­ஷாவை பார்த்­த­வு­டன் கூட்­டணி மாறி­விட்­டாரா விஜய்.? காங்­கி­ரஸ் கூட்­ட­ணியை விட்டு பா.ஜ.க. கூட்­ட­ணிக்கு மாறி­விட்­டாரா.? இல்­லையா அவ­ருக்கு அமித்­ஷாவை பார்த்­த­வு­டன் பயம் வந்­து­விட்­டதா.?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பல்டி அடித்த முதல்­வர் விஜயை பார்த்து கேட்­கி­றோம் உங்­கள் நிலைப்­பாடு என்ன.? தி.மு.க.வை பொறுத்­த­வ­ரைக்­கும் எங்­கள் தலை­வ­ரும் சரி எங்­கள் எதிர்க்­கட்சி தலை­வ­ரும் சரி தமிழ்­நாட்­டுக்கு எந்­த­வித பாதிப்­பும் இல்­லா­மல் இருக்க வேண்­டும் என்­ப­தில் ஒரே நிதா­ன­மான நிலை­யில் நாங்­கள் இருக்­கி­றோம். ஆனால் நீங்­கள் என்ன செய்­தீர்­கள் அங்கே தென்­னக முதல்­வர் கூட்­டத்­திலே டிகே சிவ­கு­மார் காவிரி நதி­நீர் பங்­கீடு பற்றி பேசி­னா­லும் ஒத்­து­ழைப்பு என்ற புதிய வார்த்தை ஒன்றை கொண்டு வரு­கி­றார் அந்த ஒத்­து­ழைப்பு படி இனி மேக­தாது அணையை கட்ட வேண்­டும் மேக­தாது அணை கட்­டு­வ­தில் தமிழ்­நாட்­டுக்­கும் கர்­நா­ட­கத்­திற்­கும் ஒத்­து­ழைப்பு வேண்­டும். என்று சொல்­கி­றார் அங்கே இருக்­கின்ற தமிழ்­நாடு முதல்­வர் விஜய் அவர்­கள் அதை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசா­மல் அமைதி காக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">காவேரி நதி­நீர் பங்­கீடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் இதே காவேரி நதி­நீர் பங்­கீடு பற்றி அவர் பேசும்­போது ஏற்­க­னவே உச்ச நீதி­மன்­றத்­திலே வந்த தீர்ப்பு படி நடந்து கொள்ள வேண்­டும் என்­கி­றார். அதை தானே எங்­கள் தலை­வர் கூறி­னார். அது தானே தி.மு.க.வின் நிலைப்­பாடு? நாங்­கள் அப்­போது அதை சொல்லி கர்­நா­ட­கா­வுக்கு சென்று அங்­குள்ள முத­ல­மைச்­சரை சந்­தித்து பேச வேண்­டாம் என்று நாங்­கள் கூறி­ய­போது, “நான் சென்று பேசு­வேன்” என்று நீங்­கள் கூறி­னீர்­கள். அது தவ­றான முடிவு என்­பதை இப்­போது புரிந்­து­கொண்­டீர்­களா? தமிழ்­நாட்­டின் உரி­மை­கள் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளில் அனு­ப­வம் வாய்ந்த கட்­சி­யான தி.மு.க. கூறும் கருத்­து­களை விஜய் கவ­னத்­தில் கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­கள் கூட இருக்­கின்ற கூட்­டணி தேசிய கட்­சி­யில் ஒருத்­த­ருக்­கும் அனு­ப­வம் இல்லை. ஏன்னா காங்­கி­ர­ஸில் ஒன்னு ரெண்டு படித்த மேதா­வி­கள் வரு­வாங்க தமிழ்­நாட்டு அர­சி­யல் பற்றி ஒன்­றும் தெரி­யாது அவர்­க­ள­தான் கரைத்து குடித்து தமிழ்­நாட்டு அர­சி­யல் நிலையை மாற்ற போகி­றார் என்று தவ­றான அறி­வுரை கூறு­வார்­கள். தமிழ் தமிழ்­நாட்­டின் உரி­மை­க­ளைப் பறிப்­பார்­கள். எங்­கள் கேள்வி என்­றால் இந்­திய நாட்­டின் பெரிய கட்­சி­யின் தலை­வரே நீங்க சொன்ன எட்­டப்­பர் யார் இன்று No Delimitation வேண்­டவே வேண்­டாம் என்று சொல்லி தன் நிலையை மாற்றி Fair Delimitation வேண்­டும் என்று கேட்­கின்ற அந்த எட்­டப்­பர் யார்.? அப்­போது ராகுல் காந்தி யாரை எட்­டப்­பர் என்­கி­றார்.? விஜய்யா.? அதுக்கு விஜய் பதில் சொல்­வாரா.? இல்லைமாணிக்­கம் தாகூர் முதல்­வர் விஜய் பேசி­யது தவறு என்று கண்­டிப்­பாரா.?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் உரி­மைக்­காக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தி.மு.க. மட்­டும்­தான் போரா­டு­கி­றது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காங்­கி­ரஸ் நிலைப்­பாட்ட சொல்­லுங்க கர்­நா­ட­கா­வில் ஒரு நிலைப்­பாடு தெலுங்­கா­னா­வில் நிலைப்­பாடு ஒவ்­வொரு மாநி­லத்­துக்­கும் மாறி மாறி பேசு­றீங்­களே இங்க நிலைப்­பாடு என்ன காவரி நதி நீர் பங்­கீட்டை பற்றி ஏன் தமிழ்­நாடு காங்­கி­ரஸ் வாய் திறக்­க­வில்லை.? தமிழ்­நாட்­டுக்கு வரு­கின்ற காங்­கி­ரஸ் தலை­வர்­கள் ஏன் பேச­வில்லை.? இதை கேட்­பது தவறா.? எங்­கள் மாநி­லத்­தின் உரி­மைக்கு போரா­டு­கி­றோம். தி.மு.க. மட்­டும்­தான் தமிழ்­நாட்­டின் மாநில உரி­மைக்­காக போரா­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பல்டி அடித்த விஜய் அவர்­களே உங்­கள் உண்­மை­யான நிலைப்­பாடு என்ன .? இது அறிய நீங்­கள் நாங்­கள் மட்­டு­மில்ல தமிழ்­நாட்டு மக்­க­ளும் ஆர்­வ­மாக இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு தயா­நிதி மாறன் எம்.பி. பேட்­டி­ய­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>