<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="41,70,949,752" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 22 2026 00:03:56 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260822T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="22082026-VLR-09" position.sequence="09" ex-ref="22082026-VLR-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="90">‘பல்டி’ அடிக்கும் விஜய் -– ‘பல்பு’ வாங்கும் த.வெ.க.!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">பல்டி- –</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் 12.8.2026 அன்று தொகுதி மறு­வ­ரை­யறை தொடர்­பான தீர்­மா­னத்­தில் மறு­வ­ரை­ய­றயே கூடாது  (No delimitation) என்று அறி­வித்­தது விஜய் அரசு. ஒன்­றிய பா.ஜ.க அர­சின் உள்­துறை அமைச்­சர் அமித்ஷா தலை­மை­யில் 20.8.2026 அன்று நடந்த தென்­மா­நில முதல்­வர்­கள் கூட்­டத்­தில் மாநி­லங்­க­ளின் விகித்­தாச்­சா­ரம் மாறா­மல் மறு­வ­ரை­யறை (Fair delimitation)என பல்டி அடித்­தார் முதல்­வர் விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">பல்பு- –</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­டப்­பே­ர­வைக்கு முத­ல­மைச்­சர் வந்து வணக்­கம் வைக்­கும்­போது எதிர்க்­கட்­சித் தலை­வர் எழுந்து நிற்­ப­தில்லை என்­றும், அவ­ருக்கு கண்­ணி­யத்­தைக் கற்­றுத்­தர வேண்­டும் என்­றும் அதி­கப்­பி­ர­சங்­கி­யான அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் ரமேஷ் அவை­யில் பேசி­னார். அதற்கு பதி­ல­ளித்த தி.மு.க.வின் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும் முன்­னாள் முத­ல­மைச்­ச­ ரு­மான ஓ.பன்­னீர்­செல்­வம் அவர்­கள், “சட்­டப்­பே­ர­வை­யில் பேர­வைத் தலை­வர் வரும்­போ­து­தான் எழுந்து நிற்க வேண்­டும். முத­ல­மைச்­ச­ருக்கு எழுந்து நிற்க வேண்­டும் என்­றால் எதிர்க்­கட்­சித் தலை­வ­ருக்­கும் அதே மரி­யா­தை­யைத் தர வேண்­டும்“ என்­றார். பேர­வைத் தலை­வர் ஜே.சி.டி.பிர­பா­க­ரன் அவர்­கள், அவை­யில் பேர­வைத் தலை­வர்­தான் முதன்­மை­யா­ன­வர் என்­ப­தை­யும், முத­ல­மைச்­ச­ருக்­கும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ருக்­கும் எழுந்து நிற்­பது அவ­ர­வர் விருப்­பம் என்­றும் தெரி­விக்க, அமைச்­சர் ரமேஷ் பல்பு வாங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">பல்டி- –</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஜூன் 12ஆம் நாள் திறக்­கப்­பட­ ­வேண்­டிய மேட்­டூர் அணை ஆகஸ்ட் மாதக் கடைசி வாரத்­தி­லும் திறக்­கப்­ப­டாத நிலை­யில், நடு­வர் மன்­றம்- காவிரி மேலாண்மை ஆணை­யம்- உச்­ச­நீ­தி­மன்­றம் ஆகி­யவை அளித்­துள்ள தமிழ்­நாட்­டின் உரி­மை­களை அட­மா­னம் வைக்­கும் வகை­யில், கர்­நா­ட­கா­வுக்கு நேரில் சென்று அம்­மா­நி­லத்­தின் காங்­கி­ரஸ் முத­ல­மைச்­சரை  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் விஜய் சந்­திக்­கப் போவ­தாக த.வெ.க. அமைச்­சர்­கள் மாற்றி மாற்­றித் தெரி­வித்­த­னர். தி.மு.க தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் இத­னைக் கண்­டித்து அறிக்கை வெளி­யிட, கர்­நா­டக முதல்­வ­ரும் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் இப்­போது வர­வேண்­டாம் என்று வழியை அடைத்­து­விட்­ட­தால், “கர்­நா­ட­கப் பய­ணத்­தைக் கைவி­டு­வ­தாக” விஜய் அரசு பல்டி அடித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">பல்பு –-</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எல்­லாத் துறைக்­கும் தான்­தான் அமைச்­சர் என்­பது போல செயல்­ப­டும், முதல் போட்ட அமைச்­ச­ரான ஆதவ் அர்­ஜூனா அவை­யில் பேசும்­போது, “ஒன்­றிய அர­சுக்கு 1 ரூபாய் வரி­யா­கச் செலுத்­தி­னால் அவர்­கள் நமக்கு 40 ரூபாய் தரு­வ­தாக” உள­றி­னார். எதிர்க்­கட்சி வரி­சை­யி­லி­ருந்து 29 பைசா­தான் ஒன்­றிய அரசு தரு­கி­றது என்று குரல் வந்­த­தும், பல்பு வாங்­கி­யதை உணர்ந்து, அதையே திருப்­பிச் சொன்­னார் ஆதவ் அர்­ஜூனா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">பல்டி –-</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">த.வெ.க. ஆட்­சியை ஆத­ரிக்­கும் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளான இந்­திய கம்­யூ­னிஸ்ட், மார்க்­சிஸ்ட்  கம்­யூ­னிஸ்ட் கட்­சி­க­ளில் உள்­ள­வர்­கள் பற்றி விவ­ரங்­க­ளைச் சேக­ரிக்­கு­மாறு கிராம நிர்­வாக அலு­வ­லர்­க­ளுக்கு குஜி­லி­யம்­பாறை வட்­டாட்­சி­யர் சுற்­ற­றிக்கை அனுப்­பி­னார். அது­போ­லவே, கல்­லூ­ரி­க­ளில் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­க­ளின் மாண­வர் அமைப்­பு­க­ளின் செயல்­பா­டு­க­ளில் பங்­கேற்­கக்­கூ­டாது என்று மாண­வர்­க­ளுக்­குத் தடை விதித்­தார் கல்­லூ­ரிக் கல்வி இயக்­க­கத்­தின் ஆணை­யர். த.வெ.க ஆட்­சிக்கு முட்­டுக் கொடுக்­கும் கம்­யூ­னிஸ்ட்­டு­க­ளுக்கே இந்த நிலை­மையா என்று தி.மு.க உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­கள் விமர்­சித்­த­தும் இரண்டு சுற்­ற­றிக்­கை­க­ளை­யும்  வாபஸ் வாங்­கு­வ­தா­கக் கூறி அந்­தர் பல்டி அடித்­தது விஜய் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">பல்பு –-</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கர்­நா­டக மாநில வனத்­து­றை­யால் 3 தமி­ழர்­கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டது தொடர்­பா­கப் பேர­வை­யில் கொண்டு வரப்­பட்ட கவன ஈர்ப்­புத் தீர்­மா­னத்­திற்­குப் பதி­ல­ளித்த அமைச்­சர் ஆல் இன் ஆல் அழ­கு­
ரா­ஜா­வான நிர்­மல்­கு­மார் தேவையே இல்­லா­மல் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரைப் பற்றி அவ­தூ­றா­கப் பேசி­னார். பேர­வைத் தலை­வர் குறுக்­கிட்டு, “அமைச்­சர்­கள் கவன ஈர்ப்­புத் தீர்­மா­னத்­தின் பொருள் மீது மட்­டும்­தான் பேச வேண்­டும். தேவை­யில்­லா­த­வற்­றைப் பேசி­னால் அவை குறிப்­பி­ லி­ருந்து நீக்­கப்­ப­டும்” என்று சொல்லி, கலை­ஞர் பற்­றிய அமைச்­ச­ரின் அவ­தூ­றுப் பேச்சை அவைக் குறிப்­பி­லி­ ருந்து நீக்க உத்­த­ர­விட்­ட­தால் நிர்­மல்­கு­மார் பல்பு வாங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">பல்டி- –</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2026 மே 10ஆம் நாள் முத­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்ற விஜய், தனது தனிப்­பட்ட ஜோதி­டர் மற்­றும் ஆலோ­ச­க­ராக உள்ள ரிக்கி ரத்­தன் பண்­டிட் வெற்­றி­வேல் என்­ப­வரை சிறப்­புப் பணி அதி­கா­ரி­யாக நிய­ம­னம் செய்­தார். இதற்­கான அர­சாணை வெளியே தெரி­யா­த­படி மறைக்­கப்­பட்­டது. மே 12 அன்று அது தெரி­ய­வந்­தது. ஆஸ்­தான ஜோதி­ட­ருக்கு அர­சுப் பணி வழங்­கப்­பட்­டி­ருப்­பதை கூட்­ட­ணிக் கட்­சி­களே கண்­டித்த நிலை­யில், ஜோதி­ட­ருக்கு வழங் ­கப்­பட்ட அர­சுப் பத­வியை ரத்து செய்து உத்­த­ர­விட்டு, தனது முதல் பல்­டியை அடித்­தார் விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">பல்பு –-</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞர் கனவு இல்­லம் திட்­டத்­தில் கடந்த ஆட்­சி­யில் கட்­டப்­பட்ட வீடு­கள் சேத­ம­டைந்து ஒழு­கு­வ­தாக ஆதா­ர­மின்றி குற்­றம்­சாட்­டி­னார் அமைச்­சர் வினோத். அதற்கு பதி­ல­ளித்த எதிர்க்­கட்­சித் துணைத் தலை­வர் கே.என்.நேரு, “இந்­தத் திட்­டத்­தின் கீழ் வீடு கட்ட அரசு பணம்­தான் தரு­கி­றது. வீடு­க­ளைக் கட்­டிக்­கொள்­வது பய­னா­ளி­கள்­தான்” என்று தெரி­வித்­த­தும் அமைச்­சர் பல்பு வாங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">பல்டி- –</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காவிரி மேலாண்மை ஆணைய உத்­த­ர­வுப்­படி தமிழ்­நாட்­டிற்­கு­உரிய தண்­ணீ­ரைத் திறந்து விட வேண்­டும் என தி.மு.க சார்­பில் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் மனு தாக்­கல் செய்­யப்­பட்­டது. கர்­நா­ட­கா­வில் அணை­கள் நிரம்பி தண்­ணீ­ரைத் திறந்து விட்­டு­விட்­ட­தா­க­வும், மேட்­டூர் அணை­யில் தண்­ணீர் நிரம்­பி­விட்­ட­ தா­க­வும், இந்த நிலை­யில் தி.மு.க. மனு தாக்­கல் செய்­தி­ருப்­ப­தா­க­வும் விஜய்­யின் விர்ச்­சு­வல் வாரி­யர்ஸ் சமூக வலைத்­த­ளங்­க­ளில் தி.மு.க. மீது பாய்ந்­தார்­கள். அடுத்த இரண்டு நாட்­க­ளில், முதல்­வர் விஜய் உத்­த­ர­வுப்­படி தமிழ்­நாடு அர­சின் சார்­பில் கர்­நா­ட­கா­வி­டம் தண்­ணீர் கேட்டு தமிழ்­நாடு அரசு சார்­பில் மனு தாக்­கல் செய்­யப்­பட்­டது. விஜய் அர­சின் ஆகாச பல்டி இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">பல்பு- –</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நிதி அமைச்­சர் மரி­ய­வில்­சன் தமிழ்­நாடு அர­சின் கஜா­னா­விற்கு கடந்த சில மாதங்­க­ளில் மட்­டும் 15ஆயி­ரம் கோடி ரூபாய் வரு­வாய் கிடைத்­தி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தார். இது குறித்து கேள்வி எழுப்­பிய முன்­னாள் நிதி அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு, “இந்த வரு­வாய் ஒன்­றிய அர­சின் பங்­காக வந்த வரி வரு­வாயா? மாநில அர­சின் சொந்த வரு­வாயா? என்ன கணக்கு?” என்று கேட்­ட­தும், உரிய பதில் இல்­லா­மல் மரிய வில்­சன் பல்பு வாங்­கி­னார். 15ஆயி­ரம் கோடி ரூபாய் வரு­வாய் வரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­கக் கதை­ய­ளந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">பல்டி- –</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக­ளிர் விடி­யல் பய­ணம் போன்ற மகத்­தா­னத் திட்­டங்­க­ளுக்கு எதி­ராக தன் கட்­சிப் பெண்­க­ளைப் பேச வைத்­த­வர் விஜய். மக்­க­ளுக்கு நன்மை தரும் இல­வ­சத் திட்­டங்­களை நிறுத்த வலி­யு­றுத்­திய விஜய், எம்.எல்.ஏக்­க­ளுக்கு இல­வச கார்  வழங்­கும் திட்­டத்தை அறி­வித்­தி­ருக்­கி­றார். 12 கார் வைத்­தி­ருக்­கும் த.வெ.க எம்.எல்.ஏ.வுக்­கும் மக்­க­ளின் வரிப்­ப­ணத்­தில் ஓசி கார் வழங்கி ஆகா­யத்­துக்­கும் பூமிக்­கு­மாக பல்டி அடித்­தி­ருக்­கி­றார் விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">பல்பு –</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ரேஷன் கடை­யில் தற்­போது வழங்­கப்­ப­டும் அரி­சிக்­குப் பதில், சன்­ன­ரக அரிசி வழங்­கு­வ­தற்­கா­கத்­தான் சன்­ன­ரக நெல்­லுக்கு அர­சின் ஆதார விலை உயர்த்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும், டெல்டா விவ­சா­யி­கள் இனி சன்­ன­ரக நெல்­லைப் பயி­ரி­டு­வார்­கள் என்­றும் பேர­வை­யில் ஆதவ் அர்­ஜூனா ஏக்­கர் கணக்­கில் அளந்து விட்­டார். அதற்­குப் பதி­லடி தந்த முன்­னாள் அமைச்­சர் கே.என்.நேரு, “டெல்டா மாவட்­டங்­க­ளில் குறுவை, தாள­டிப் பரு­வங்­க­ளில் சன்­ன­ரக நெல் விளை­விப்­பது சாத்­தி­ய­மில்லை” என்­பதை ஆதா­ரத்­து­டன் எடுத்­துக்­கூறி, தற்­போது விளை­யும்  அரி­சி­தான் ரேஷ­னில் வழங்­கப்­ப­டு­வ­தை­யும், அது சர்க்­கரை நோயைக் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டி­யது என்­கிற மருத்­து­வக் கார­ணத்­தை­யும் விளக்­கி­ய­ தால் ஆதவ் அர்­ஜூனா ஹைவோல்ட்ஸ் பல்பு வாங்­கி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>