<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,136,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 22 2026 15:50:30 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260823T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="23082026-CBE-05" position.sequence="05" ex-ref="23082026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="85">கழக ஆட்சியில் இரண்டே ஆண்டுகளில் 2 இலட்சம் வீடுகள் கட்டிக் கொடுத்தோம்! </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="39">சட்டப் பேரவையில் – முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Vairam" fontStyle="Regular" size="40">தமிழ்நாட்டில் – கிராமப்புறம் முழுக்க சாலைகள் அமைக்கச் சிந்தித்து- 
1972ஆம் ஆண்டே திட்டம் உருவாக்கியவர் எங்கள் தலைவர், கலைஞர்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தொடர்ச்சி 6 ஆம் பக்கம்</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="iperiysami1_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்னை, ஆக. 23–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சட்டப் பேரவையில், ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய, கழக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இ.பெரியசாமி அவர்கள், “கழக ஆட்சியில் இரண்டே ஆண்டுகளில் 2 இலட்சம் வீடுகள் கட்டிக் கொடுத்தோம்” என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்டப் பேரவையில் அவர் பேசியதாவது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வர் அவர்­களே,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த அவை­யிலே 1989–ஆம் ஆண்­டில் வரு­வ­தற்கு எனக்கு வாய்ப்­ப­ளித்து, தொடர்ச்­சி­யாக ஆத்­தூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் 9 முறை போட்­டி­யி­டு­வ­தற்­கும் வாய்ப்­ப­ளித்து, என்னை 7 முறை வெற்றி பெறச்­செய்து, இந்த அவை­யில் என்னை 3 முறை அமைச்­ச­ராக்கி, பல்­வேறு பொறுப்­பு­களை வழங்கி வளர்த்­தெ­டுத்த என்­னு­டைய உயி­ரி­னும் மேலான தலை­வர், கழ­கத்­தி­னு­டைய முன்­னாள் தலை­வ­ரும் முன்­னாள் முத­ல­மைச்­ச­ரு­மான, தமி­ழ­கத்தி னுடைய சிற்பி, எங்­க­ளு­டைய உயி­ரி­னும் மேலான தலை­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் திசை நோக்கி நான் முதற்­கண் வணங்­கு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இரண்­டா­வ­தாக, நம்­மு­டைய இந்­தி­யா­வில் அனைத்­துத் துறை­க­ளி­லும் முதல் மாநி­ல­மாக உயர்த்தி, தமி­ழ­கத்தை தலை­நி­மி­ரச் செய்த, தமி­ழ­கத்­தின் உரி­மை­க­ளுக்­காக மற்ற மாநி­லங்­களை விட குரல்­கொ­டுத்து, அந்த உரி­மை­க­ளைப் பெறு­வ­தற்­காக பல இழப்­பு­களை கடந்த 5 ஆண்டு காலத்­தில் சந்­தித்த எங்­கள் தலை­வர், முன்­னாள் முத­ல­மைச்­சர் தள­பதி அவர்­க­ளுக்­கும் என்­னு­டைய நன்­றி­யை­யும் வணக்­கத்­தை­யும் தெரி­வித்­துக்­கொள்ள விரும்பு கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவ­ரைத் தொடர்ந்து இன்­றைக்கு இளை ஞர­ணி­யின் செய­லா­ள­ரா­க­வும், சட்­ட­மன்­றத் 
தினு­டைய எதிர்க்­கட்­சித் தலை­வ­ரா­க­வும் தேர்வு செய்­யப்­பட்டு, இன்­றைக்கு மக்­கள் பணி­யில் மிகச் சிறப்­பாக பணி செய்து கொண்­டி­ருக்­கின்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் தம்பி உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்­கும் என்­னு­டைய வணக்­கத்­தைத் தெரி­வித்­துக் கொள்ள விரும்­பு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவை­யில் இருக்­கின்ற அனைத்து உறுப்­பி­னர்­க­ளுக்­கும் மற்­றும் அமைச்­சர் பெரு­மக்­க­ளுக்­கும், முத­ல­மைச்­ச­ருக்­கும் மற்­றும் நம்­மு­டைய பேர­வைத் தலை­வர் அவர்­க­ளுக்­கும் என்­னு­டைய நன்­றி­யை­யும் வணக்­கத்­தை­யும் தெரி­வித்­துக் கொள்ள விரும்­பு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">கலை­ஞர் கனவு இல்­லத் திட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குறிப்­பாக, ஊரக வளர்ச்­சித்­துறை இன்­றைக்கு தமி­ழ­கத்­தி­னு­டைய கிரா­மப்­பு­றத் 
தி­னு­டைய வளர்ச்­சியை உள்­ள­டக்­கிய துறை. இதிலே குறிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், பல உள்­ளாட்­சி­யிலே பல திட்­டங்­கள் இன்­றைக்கு வரு­கின்­றது. இருந்­தா­லும் கடந்த 5 ஆண்டு காலத்­திலே மக்­கள் மன­தில் நீங்கா இடம்­பெற்ற திட்­டம் கலை­ஞ­ரி­னு­டைய கன­வுத் திட்­டம். கலை­ஞ­ரு­டைய கனவு இல்­லத் திட்­டம்­தான் மக்­க­ளின் மன­தில் இன்­றைக்கு நிலைத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குறிப்­பா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், 23–24, 24–25–லே அவர்­கள் இன்­றைக்கு ஆண்­டிற்கு 1 லட்­சம் வீடு­கள் கட்ட வேண்­டும் என்று முன்­னாள் முத­ல­மைச்­சர் தலை­வர் தள­பதி அவர்­கள் முடிவு செய்து, முதல் ஆண்­டி­லேயே 1 லட்­சம் வீடு­கள் ₹3,500 கோடி ரூபா­யில் அறி­விக்­கப்­பட்டு, அந்­தத் திட்­டங்­கள் எல்­லாம் நிறை­வேற்றி முடிக்­கப்­பட்­டன. இது­வ­ரைக்­கும் எந்­தக் காலத்­தி­லும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கே கூட நம்­மு­டைய கல்­வித்­துறை அமைச்­சர் அவர்­கள் நேற்று சொன்­னார்­கள். நீங்­கள் வந்து பசுமை வீடு திட்­டத்தை மாற்­றி­விட்­டீர்­கள், அதே­போல் நாங்­க­ளும் காலை உண­வுத் திட்­டத்தை மாற்­றி­யி­ருக்­கி­றோம் என்று கூட சொன்­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், தமி­ழ­கத்­தி­னு­டைய அர­சி­யல் வர­லாற்­றில் ஏழை எளிய மக்­கள் குடி­சை­யிலே வாழ்ந்த மக்­க­ளுக்­காக, குடி­சையை அகற்ற வேண்­டும், 15 லட்­சம் குடிசை இருக்கு, அவை­யெல்­லாம் அகற்ற வேண்­டும் என்று 1971–லே எங்­க­ளு­டைய முன்­னாள் முதல்­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் 1 லட்­சம் கான்­கி­ரீட் வீடு­களை இந்­தி­யா­விலே எந்த மாநி­லத்­தி­லும் இல்­லாத அள­விற்கு ஏழை எளிய மக்­க­ளுக்கு, குடி­சை­யில் வாழக்­கூ­டிய மக்­க­ளுக்கு 1 லட்­சம் வீடு­களை அன்­றைக்கு கட்­டிக் கொடுத்து இந்­தி­யா­விற்கு வழி­காட்­டி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதன் தொடர்ச்­சி­யா­கத்­தான் முன்­னாள் முதல்­வர் தள­பதி அவர்­கள், இங்கே நாம் தர­மான வீடு­க­ளைக் கட்­டித் தர வேண்­டும் ஏழை எளிய மக்­க­ளுக்கு, குடி­சை­யிலே வாழ்­கின்ற மக்­க­ளுக்கு, 8 லட்­சம் வீடு­களை 2030–க்குள் கட்­டிக் கொடுக்க வேண்­டும் என்று சூளு­ரைத்து, இதே அவை­யிலே முதல் ஆண்­டிலே 1 லட்­சம் வீடு வழங்­கப்­பட்டு கட்டி முடிக்­கப்­பட்­டது. இரண்­டா­வது ஆண்­டிலே ₹3,500 கோடி வழங்கி அந்­தத் திட்­டத்­தைத் தொடங்கி கிட்­டத்­தட்ட இப்­போது 80% பணி­கள்முடிந்து 80,000 வீடு­கள் வரை கட்டி முடிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது, மற்­ற­வை­கள் கட்­டும் பணி­யில் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">இரண்டே ஆண்­டு­க­ளில் 
2 லட்­சம் வீடு­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆக, இரண்டே ஆண்­டு­க­ளில் 2 லட்­சம் வீடு­களை முடித்­தி­ருக்­கி­றோம். மூன்­றாம் ஆண்டு 26 ஜன­வ­ரி­யில் இன்­னும் 1 லட்­சம் வீடு கட்­டு­வ­தற்­காக அறி­விப்பு செய்­யப்­பட்டு, கிட்­டத்­தட்ட 36,000 பேருக்கு வீடு கட்ட அனு­மதி வழங்கி, அதிலே கிட்­டத்­தட்ட 8,000 பேர் இது­வரை பல்­வேறு நிலை­யிலே அந்த வீடு­களை, கலை­ஞர் கனவு இல்­லத்தை இன்­றைக்கு கட்­டிக் 
கொண்­டிருக்கிறார்­கள். இது­தான் எதார்த்­த­மான உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு... உள்­ளாட்­சித்­துறை அமைச்­சர் கிரா­மங்­க­ளிலே கலை­ஞர் வீடு வழங்­கும் திட்­டத்­தைப் பார்த்­தி­ருப்­பார். இன்­றைக்கு உங்­கள் ஆட்சி வந்­த­வு­டனே நீங்­கள் அந்­தத் திட்­டத் 
தி­னு­டைய பெயரை கலை­ஞர் கனவு இல்­லத்தை மாற்றி விட்­டீர்­கள், பர­வா­யில்லை. நீங்­கள் வெற்றி வீடு கட்­டும் திட்­டம் என்று மாற்­றி­யி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வெற்றி வீடு கட்­டும் திட்­டம் என்­ப­தற்கு மாற்றி, அத­னு­டைய அள­வுக்கு, ஒரு வீட்­டி­னு­டைய அள­வுக்கு ₹5 லட்­சம் என்று உயர்த்­தி­யி­ருக்­கி­றீர்­கள். ₹5 லட்­சம்னு உயர்த்தி, வீட்­டி­னு­டைய எண்­ணிக்­கையை ஆண்­டிற்கு 70,000 வீடு­தான் கட்­டப்­ப­டும் என்­பதை குறைத்­தி­ருக்­கி­றீர்­கள். ஆக மொத்­தம் ₹3,500 கோடி­தான். நீங்க நிதி ஒதுக்­கி­யி­ருப்­பது ₹3,500 கோடி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­க­ளுக்கு என்ன மனசு வச்சு நீங்க 1 லட்­சம் வீடு அதை அறி­விச்­சி­ருந்­தீங்­கன்னா உங்­க­ளுக்கு பெரு­மையா இருந்­தி­ருக்­கும். ஏன்னா நாங்க வரு­ஷத்­துக்கு 1 லட்­சம் வீடு கட்­டி­னோம், ரெண்டு வரு­ஷத்­துல 2 லட்­சம் வீடு கட்­டு­னோம். மூன்­றா­வது வரு­ஷம் 1 லட்­சம் வீடு­கள் அறி­விக்­கப்­பட்டு, 36,000 வீடு­க­ளுக்கு அனு­ம­தி­யும் வழங்­கி­யி­ருக்­கி­றோம். வீடு­கள் கட்­டு­கின்ற நிலை மையில் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், வீடு­க­ளு­டைய எண்­ணிக்கை இன்­றைக்கு குறைக்­கப்­பட்டு இருப்­பது, 5 ஆண்டு காலத்­தில் நீங்க மூன்­றரை லட்­சம் வீடு­தான் கட்ட முடி­யும். 5 \times 70 = 350 [ஐந்­தேழ் முப்­பத்­தஞ்சு] தான் கட்ட முடி­யும். எப்­படி 8 லட்­சம் வீடு இன்­றைக்கு கட்டி முடிக்க முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­போக, நீங்­கள் வந்து இதில் வந்து முழுக்க முழுக்க பார்த்­தால், அடுத்து வந்து பார்த்­தீர்­கள் என்­றால், நாம வந்து மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்­புத் திட்­டம்... 20 வரு­ஷமா நடக்­குது. 2006–லிருந்து இன்­றைக்கு 2026 வரை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தத் திட்­டம் எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­திலே மிகச் சிறப்­பாக செயல்­ப­டுத்­தப்­பட்­டது. நான் அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற உடனே, ஏறத்­தாழ தமிழ்­நாட்­டில் இருக்­கின்ற அத்­தனை கிரா­மங்­க­ளை­யும் கிளஸ்­டர்­கள் பூரா... ஏதா­வது ஒரு கிரா­மத்­தில் இருந்து 100 நாள் வேலைன்னா, இன்­னொரு கிரா­மத்­திற்கு வேன்ல 407–ல் அந்த டாடா...பஸ்ல ஏறி கூட்­டு­கிட்டு போவாங்க. அங்க வேலை முடிச்­சுட்டு ஊருக்கு போவாங்க. இப்­ப­டிப்­பட்ட நிலையை பார்த்து நான் அமைச்­ச­ரா­ன­வு­டன், உடனே அதற்­காக மாற்­ற­மா­கத்­தான் எல்லா கிளஸ்­ட­ரும் எடுக்­க­ணும். அப்­பத்­தான் இந்த 100 நாள் வேலை திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக நடத்த முடி­யும் என்று அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வு­றுத்தி, அந்த திட்­டத்தை அந்த ஆண்டு நடத்­தி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­பொ­ழுது நடத்­தின உடனே, 23–24–ல, கிட்­டத்­தட்ட பார்த்­தீர்­கள் என்­றால் 13,000 சொச்­சம் கோடி அந்த ஆண்டு. ஏனென்­றால், மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்­புத் திட்­டத்­துல வந்து 100 சத­வீத கூலி­யும் ஒன்­றிய அரசு கொடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், இப்­பொ­ழுது அவர்­கள் புதிய ஒரு கொண்டு வந்­தி­ருக்­காங்க. நீங்­கள் பார்த்­தீர்­கள் என்­றால், ஜி ராம்ஜி திட்­டம்னு ஒன்னு ஒன்னு கொண்டு வந்­தி­ருக்­காங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தத் திட்­டத்­துல என்­னன்னா, 60% கூலி அவங்க கொடுப்­பாங்­க­ளாம்... 60% கொடுப்­பாங்­க­ளாம்... அது உத்­தே­சம்! அவங்க கொடுத்­தாத்­தான் போச்சு, கொடுக்­க­லைன்னா அதை கேட்க முடி­யாது ஒன்­றிய அரசை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">போன ஆண்டு கூட, 25–26–ல் கூட 12 கோடி வேலை­நாட்­கள் கொடுத்­தார்­கள். நாங்க 40 கோடி வேலை­நாட்­களை முடித்து, இந்­தி­யா­வி­லேயே முதல் மாநி­லம் என்ற உயர்­விற்­குப் பெற்ற ஒரே மாநி­லம் தமி­ழ­கம். 40 கோடி வேலை­நாட்­களை உரு­வாக்­கி­னோம். அதுல ஏறத்­தாழ 13,000 கோடி செல­வ­ழித்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மொத்­தம் இருக்­கக்­கூ­டிய அனை­வ­ருக்­கும், இந்த திட்­டத்­திலே இடம்­பெ­றக்­கூ­டிய அனை வருக்­கும் ஏறத்­தாழ 52–லிருந்து 53 நாட்­கள் வேலை­நாட்­கள் கொடுக்­கப்­பட்­டது. 50–லிருந்து 52 நாட்­கள் வேலை...”இதெல்­லாம் நீங்க கணக்­கிட்டு பார்த்தா, நம்ம வந்து 100 நாள் வேலை திட்­டம்­தான் பேரு. ஆனா, அதி­க­பட்ச வேலை கொடுத்த நாள் என்­பது இந்த 13,000 கோடி கொடுத்து, 23–24–ல 40 கோடி வேலை நாட்­கள், நடந்த நாட்­கள் தான் 50 நாட்­கள் வேலை, 50–லிருந்து 52 நாட்­கள் வேலை நடந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்ப இவங்க வந்து ஒன்­றிய அரசு 125 நாள் அறி­விச்­சுட்டு, அவங்க வந்து 60 சத­வீ­தம் அவங்க கொடுப்­போம், நீங்க 40 சத­வீ­தம் கொடுங்­கன்னு சொல்­லி­ருக்­காங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் உதா­ர­ணத்­துக்கு சொல்­றேன்... பிர­த­மர் வீட்டு வசதி திட்­டத்­தி­லயே வந்து அவங்க பார்த்­தீங்­கன்னா, மொத்­தத்­துக்கே 38 சத­வீ­தம் தான் கொடுக்­க­றாங்க. அவங்க கொடுக்க வேண்­டி­யது 60... 60 சத­வீ­தம் கொடுக்­க­ணும். ஆனா கொடுக்­க­ற­தில்லை. 38 கொடுக்­க­றாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஏட்­டுச் சுரைக்­காய்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வேற நம்ம வந்து நிறை­வேற்­றா­மல் இருக்க முடி­யாது. இது பாதிக்­கப்­பட போறது யாரு? தமிழ்­நாட்டு மக்­கள். ஆக, அதற்­காக தமிழ்­நாடு அரசு நம்ம நிதியை கொடுக்­கி­றோம். இப்­ப­வும் இந்த 100 நாள் வேலை திட்­டத்தை தொடர வேண்­டும் என்­ப­தற்­காக வேறு வழி இல்­லா­மல் 60... நீங்க 60 நாங்­கள் 40 கொடுத்தா நம்ம கொடுக்­க­லாம்னு கொண்டு வந்­தி­ருக்­காங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நிச்­ச­ய­மாக சொல்­லு­கி­றேன்... 125 நாட்­கள் வேலையை முடித்­த­வர்­க­ளுக்கு நாங்­கள் வந்து ‘150 வெற்றி’ என்ற ஒரு திட்­டத்தை நீங்­கள் அறி­வித்­தி­ருக்­கி­றீர்­கள், வர­வேற்­கி­றேன். அறி­விங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனா, எல்­லா­ருக்­கும் 150 நாட்­கள் கொடுக்க முடி­யுமா என்­பதை நாம் யோசித்து பார்க்க வேண்­டும். பொது­வாக வச்சு பார்க்­க­ணும். நான் சொல்­றது... இந்த திட்ட உயர்­வுக்­குத் தேன், அதுல 125 நாள் வேலை பார்த்து முடித்த ஏழை, எளிய மக்­க­ளுக்கு... ஏழை, எளிய மக்­க­ளுக்கு இந்த திட்­டத்­தில 125 நாள் வேலையை கூடு­த­லாக நாங்­கள் கொடுப்­போம். அந்த திட்­டத்­திற்கு பெயர் ‘150 நாள் வெற்­றித் திட்­டம்’ என்று வைத்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதெல்­லாம் வந்து பேப்­பர்ல தான் இருக்கு. ‘ஏட்­டுச் சுரைக்­காய் கறிக்கு உத­வாது’ என்­ப­து­தான் உண்மை. நிச்­ச­ய­மாக இந்த விபிஜி ராம் திட்­டம் என்­பது எந்த அள­விற்கு நடை­பெ­றப்­போ­கி­றது என்­பது சொல்ல வேண்­டும் என்­றால்... கட­க­டன்னு உடனே ஒன்னு முடிச்­சி­றேங்க. ஜூலை மாதத்­தில்மட்­டும் சொல்­றேன்...”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்ன கார­ணம்னா, இப்ப 12,600 சில்­லறை கோடி ஒதுக்­கி­யி­ருக்­கீங்க. அவங்க 7,200 கோடி கொடுத்­தி­ருக்­காங்க, நீங்க ஒரு 5,057 கோடி கொடுத்­தி­ருக்­கீங்­கன்னு நினைக்­கி­றேன். ஆக மொத்­தம் 12,000 சில்­லறை கோடி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">13,000 கோடி செல­வ­ழிச்சு, சம்­ப­ளம் அன்­னைக்கு வந்து 260, 268–தான் கொடுத்­தி­ருப்­பாங்க. 268–ஆ 270–ஆ கொடுத்­தி­ருப்­பாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்ப சம்­ப­ளம் உயர்த்­தப்­பட்­டி­ருக்கு. இப்­படி இருக்க சூழ்­நி­லை­யில, நீங்க 13,000 கோடி செல­வ­ழிச்சு ஒரு ஆண்­டில் 50 நாட்­கள்­தான் வேலை கொடுத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்ப நீங்க இன்­னொன்னு... நீங்க 125 நாள் வர­ணும்னா, 100 நாள் கொடுக்­க­ணும்­னா­லும் இன்­னும் 12,000 கோடி ஒதுக்­க­ணம். அதுக்கு உத்­தே­ச­மாக கொடுத்த... ஒன்­றிய அரசு இனி 7,000 கோடி கொடுக்­குதா இல்­லையா தெரி­யல. அதே சம­யத்­துல 25,000 கோடி வேணும். நீங்க தய­வு­செய்து 12,000 கோடிங்­கி­றது 100 நாளைக்கு நீங்க செய்­ய­ணும்னு சொன்னா, 25,000 கோடி வேணும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">நிதி­நி­லைச் சுமை!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்ப மீண்­டும் நம்­மு­டைய மாநி­லத்­தி­னு­டைய நிதி­நிலை சுமை அதி­க­மாக இருக்­கின்ற இந்த கால­கட்­டத்­திலே, இன்­னும் ஒரு 5,000 கோடி நீங்க ஒதுக்­கீடு செய்ய வேண்­டிய அவ­சி­யம் வரும். மக்­க­ளுக்­காக வேண்டி செய்­ய­லாம், ஒன்­னும் தப்­பில்ல; மத்த வேலை­க­ளெல்­லாம் நிறுத்­திட்­டுக்­கூட நீங்க செய்­ய­லாம். நீங்க முடி­வெ­டுங்க அதுல!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதுக்­குத்­தான் சொல்­றேன், எல்­லாம் வந்து மக்­க­ளுக்கு வேலை கிடைத்­தால் போதும். கார­ணம், எங்­கே­யும் தமிழ்­நாட்­டில் எந்த நதி­யும் ஓட­வில்லை. எந்த நதி­யும் இல்லை தமிழ்­நாட்­டுல. எங்கு பார்த்­தா­லும் வறட்­சி­யாக இருக்­கி­றது. மழைப்­பொ­ழிவு ரொம்ப குறைந்­தது. எங்க மாவட்­டத்­தி­லெல்­லாம் 86% பெண்­கள் இதை நம்­பித்­தான் இருக்­காங்க. நீங்க 100 நாள் வேலையை ஆரம்­பிச்­சாச்­சுனா, பூரா எல்­லா­ரும் வந்து நிப்­பாங்க, பதிவு செய்­வாங்க, வேலைக்கு வர­ணும்ம்­பாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெண்­கள் மட்­டு­மல்ல, மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் வரு­வார்­கள்; அதே­போல ஆண்­க­ளும் வரு­வார்­கள். 10 தோட்­டம் இருக்­கும், ஒரு தோட்­டத்­து­லக்­கூட ஒரு சொட்டு தண்ணி இல்லை. 100 நாள் வேலை­யில வந்து காத்­தி­ருப்­பதை நான் பார்த்­தி­ருக்­கி­றேன் நேர­டி­யாக. எத்­த­னையோ விவ­சா­யி­கள்... பெரிய தோட்­டங்­கள் வைத்­தி­ருக்­கின்­ற­வர்­கள் 100 நாள் வேலைக்கு வரு­வ­தைப் பார்க்­கின்ற பொழுது கண்­ணீர்­தான் வரும். அந்த அள­விற்கு இந்­தத் திட்­டம் ஏழை எளிய மக்­க­ளுக்கு, கிரா­மப்­புற மக்­க­ளுக்கு, வேற எந்த வேலை­வாய்ப்­பும் இல்­லாத... இந்த வேலை ஒன்றை நம்­பி­யி­ருக்­கின்ற பெண்­கள் 87% இருக்­காங்க. பெண்­கள் தான் பூரா அது­தான் நம்­பி­யி­ருக்­காங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீங்க 12,000 கோடி ஒதுக்­கி­யி­ருப்­பது சந்­தோ­ஷம். ஆனால், இதுல எவ்­வ­ளவு வேலை செய்ய முடி­யுங்­கி­றதை நீங்க நிர்­ண­யிச்­சுக்­கோங்க. 100 நாள் வேலை கொடுப்­பது என்­றாலே 25,000 கோடி, கண்­டிப்­பாக 20,000 கோடிக்கு மேல உங்­க­ளுக்கு தேவைப்­ப­டும் என்­பதை நான் சொல்லி, அடுத்­த­தாக கிரா­மப்­பு­றச் சாலைத் திட்­டத்­திற்கு வரு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்ம வந்து கிரா­மப்­பு­றச் சாலைத் திட்­டம் என்­றால், தமிழ்­நாட்­டில் ‘72–ல வந்து கிரா­மத்­திற்­குச் சாலை அமைக்க வேண்­டும் என்று சிந்­தித்த ஒரே தலை­வன் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர். அவர்­தான் கிரா­மப்­பு­றச் சாலைத் திட்­டத்­தைக் கொண்­டு­வந்­தார். வேற யாரும் கொண்­டு­வ­ரல; எந்த காங்­கி­ர­ஸாட்சி காலத்­து­ல­யும் கொண்­டு­வ­ரல, எந்த காலத்­து­ல­யும் கொண்­டு­வ­ரல. ‘72–ல கொண்­டு­வந்­தாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">கிரா­மப்­பு­றச் சாலைத் திட்­டம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்­தத் திட்­டம் இப்ப மீண்­டும் முத­ல­மைச்­சர் “கிரா­மப்­பு­றச் சாலைத் திட்­டம்” என்று எடுத்து, ஏறத்­தாழ 8,700 கோடிக்கு மேல் செல­வி­டப்­பட்டு, அந்­தச் சாலை­கள் எப்­படி அமைக்க வேண்­டும் என்­பதை முத­ல­மைச்­சர் அவர்­கள்... 15 mm இருக்­கக்­கூ­டிய சாலை­களை 20 mm உயர்த்த வேண்­டும், அந்த பிட்­டு­மின் கான்­கி­ரீட் என்­பதை 15–ஐ 20–ஆக்­க­ணும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த பிட்­டு­மின்... பிட்­டு­மின் மேக்­க­டமை என்­ப­தும், BMC, BMBC என்­பதை மாற்றி, நெடுஞ்­சா­லைத் துறைக்­குச் சம­மாக... நெடுஞ்­சா­லைத் துறை வந்து உங்­க­ளுக்கு எவ்­வ­ளவு எஸ்­டி­மேட்ன்னு தெரி­யும், நீங்க ரெண்­டை­யும் கம்­பேர் பண்­ணிப் பாக்­க­ணும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எங்­க­ளு­டைய உள்­ளாட்­சித் துறை­யில் போடப்­பட்ட சாலை­கள் தமிழ்­நாட்­டில் இருக்­கின்ற கிரா­மத்தை இணைத்த சாலை­க­ளைப் பார்க்க வேண்­டும்! பார்த்­து­விட்­டுப் பேச வேண்­டும்! கிரா­மப்­பு­றத்­திலே இருக்­கின்ற மக்­கள்... நம்­மு­டைய கலை­ஞர் கன­வில்­லத்­தை­யும், நம்­மு­டைய முத­ல­மைச்­சர் சாலைத் திட்­டத்­தை­யும் இன்­னும் மறக்க மாட்­டார்­கள். இப்­ப­டிப்­பட்ட சாலை­கள் போடப்­பட வேண்­டும் என்­பார்­கள். அந்த அள­விற்­குத் தர­மான சாலை­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு திட்­டம் தீட்­டு­கின்ற பொழுது 36% ‘லெஸ்’ போட்­டி­ருக்­காங்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆக மொத்­தம் 20,000 km நாங்க... நாங்க வந்து அந்­தப் பணி­க­ளைச் செய்­தி­ருக்­கி­றோம். மொத்­தம் 28,600 km. பல்­வேறு திட்­டங்­கள்ல, PMGSY எல்­லாம் தமிழ்­நாட்­டில் முடிந்­து­விட்­டது. 5 km–க்கு மேல­தான் போக­ணும் ஒன்­றிய அர­சின் திட்­டம். ஆனால், நாங்­கள் 2 km வரை போட­லாம் என்று ஒன்­றிய அர­சி­டம் அனு­மதி கேட்­டும் கொடுக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் PMGSY திட்­டமே முடிந்­து­விட்­டது, 10ஆண்­டு­க­ளுக்கு மேலா­கி­விட்­டது. அதெல்­லாம் சீர்­செய்ய வேண்­டிய கட்­டா­யம் வரு­கா­லத்­தில் இருக்­கி­றது. நீங்­கள் செய்­வீர்­கள், அதைச் செய்­யுங்­கள், கேட்­டுச் செய்­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போல PMGSY திட்­டத்­துல இப்ப வந்து, அந்­தச் சாலை­க­ளு­டைய நீளத்­தைக் குறைக்க வேண்­டும். நாங்­கள் தமிழ்­நாட்­டில் கிட்­டத்­தட்ட 28,600 km சாலை­கள் 15,000 கோடி­யில் மிகத் தர­மான சாலை­கள் உள்­ளாட்­சித் துறை­யின் மூல­மாக... நபார்டு திட்­டம், PMGSY திட்­டம், தமி­ழக முத­ல­மைச்­ச­ரின் முத­ல­மைச்­சர் சாலைத் திட்­டம்... இவை­யெல்­லாம் மிகச் சிறந்த திட்­டங்­க­ளாக மக்­க­ளால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட திட்­டங்­கள் எல்­லாம் இன்­றைக்கு முடி­வ­டைந் 
திருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆக, சாலை மேம்­பாட்­டுத் திட்­டத்­திலே நம்ம வந்து ரொம்ப சிறப்பா பண்­ணி­யி­ருக்­கோம். முத­ல­மைச்­சர் அவர்­கள்­கூட சொன்­னார்­கள், அதற்கு எவ்­வ­ளவு செல­வா­யிற்று என்­பதை நீங்­கள் நெடுஞ்­சா­லைத் துறைக்­கும், உள்­ளாட்­சித் துறைக்­கும் நீங்­கள் ஒப்­பிட்­டுப் பார்க்­க­லாம். அந்த அள­விற்­குத் தர­மான சாலை­க­ளெல்­லாம் நம்­மு­டைய தமி­ழ­கத்­திலே கடந்த காலத்­திலே நிலை­நி­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­போக மக­ளிர் திட்­டத்­தைப் பற்­றிச் சொல்­கின்ற பொழுது, 1989–ஆம் ஆண்டு முதன் 
மு­த­லாக தர்­ம­புரி மாவட்­டத்­தில், சுய­உ­த­விக் குழு பெண்­கள் தங்­கள் சொந்­தக் காலால் நிற்க வேண்­டும் என்று நினைத்து, அந்­தத் திட்­டத்தை இந்­தி­யா­வி­லேயே உரு­வாக்­கிய ஒரே முத­ல­மைச்­சர் எங்­கள் முதல்­வர், தமி­ழ­கத்­தி­னு­டைய சிற்பி முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் என்­பதை நான் நினை­வு­கூர விரும்­பு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர் திட்­டத்­தைத் துவக்­கி­னார். அந்­தத் திட்­டம் சிறப்பா நடை­பெற்­றது. எந்­தக் கடன் வாங்­கி­னா­லும் பெண்­கள் வயித்­தக் கட்டி, வாயைக் கட்­டிக்­கூட கடனை... ஆண்­க­ளுக்கு யாரும் கடன் கொடுக்க மாட்­டான், பெண்­க­ளுக்­குன்னா கடன் கொடுப்­பான். பெண்­க­ளுக்­குக் கடன் கொடுத்தா அதை ரொம்ப சிக்­க­ன­மாக வைத்து, அந்­தக் கட­னைத் திருப்பி வைப்­பார்­கள். பால் கணக்­குன்­னா­லும் காலை­யில கோடு போட்­டுக்­கிட்டு இருப்­பாங்க கிரா­மங்­கள்ல வீடு­கள்ல. பார்க்­க­லாம்... என்ன கோடு போட்­டு­ருக்­குன்னு, எத்­தனை லிட்­டர் பீய்ச்­சி­ருக்­காங்­கன்னு. அந்த அள­விற்கு ஒரு பெண்­க­ளுக்­காக உரு­வாக்­கப்­பட்ட சுய­உ­த­விக் குழு திட்­டம், they are standing on their own legs.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெண்­கள் மக­ளிர் அவர்­கள் சொந்­தக் காலால் நிற்க வேண்­டும் என்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட அரு­மை­யான திட்­டம் இன்­றைக்கு இந்­திய அள­விலே ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது. அதற்­குப்­பின்­னால் மக­ளிர் திட்­டம் — Women Development Corporation, Skill Development Corporation — இதெல்­லாம் வந்து அதைத் தொடர்ந்து உரு­வாக்­கிய திட்­டங்­கள். திறன் மேம்­பாடு, அது மக­ளிர் மேம்­பாடு... இதெல்­லாம் கொண்­டு­வந்­தி­ருக்­கீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே சம­யத்­திலே, நீங்­கள் இப்போ... அதா­வது எந்த ஒரு திட்­ட­மாக இருந்­தா­லும் தவறு இருக்­க­லாம்; அதற்­காக வேண்டி திட்­டத்தை நிறுத்த முடி­யாது. இருக்­கக்­கூ­டிய அலு­வ­லர்­கள் போய்... அவங்க வந்து சோதிக்க அலு­வ­லர்­கள் நேர­டி­யாக தேர்வு அவங்­க­தான் தேர்வு செய்­றாங்க. நான் ஒன்னே ஒன்னு உங்­க­ளுக்கு சொல்­லி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்னை பொறுத்­த­வ­ரை­யில் என்­னு­டைய துறை­யிலே, இதே அவை­யி­லி­ருக்­கின்ற அனைத்து உறுப்­பி­னர்­க­ளுக்­கும் தெரி­யும், நம்ம எந்த திட்­டத்தை ஆரம்­பித்­தா­லும் எந்த எந்த கட்­சியை சார்ந்­த­வர்­கள் என்­றும் பார்ப்­ப­தில்லை. ஏன்னா வீடு கேட்டு வரு­கின்­ற­வர்­கள் யாராக இருந்­தா­லும் அவர்­க­ளுக்கு வழங்­கு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏன்னா அது அதி­மு­க­வாக இருந்­தா­லும் சரி, அது எந்த கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யாக இருந்­தா­லும் சரி, காங்­கி­ரஸ் இயக்­க­மாக இருந்­தா­லும் சரி, எந்த இயக்­க­மாக இருந்­தா­லும் சரி, எந்த ஜாதியை சார்ந்­த­வர்­க­ளாக, எந்த மதத்­தைச் சார்ந்­த­வர்­க­ளாக இருந்­தா­லும் சரி, யாரு வந்­தா­லும் சரி, வீடு கலை­ஞர் கன­வில்­லத்­தில் வீடு கேட்டு வந்­த­வர்­க­ளுக்கு ஒரு ஒன்­றி­யத்­தில எந்­தெந்த ஒன்­றி­யத்­தில் வந்­தாங்­களோ, அத்­தனை ஒன்­றி­யத்­தி­லும் யார் வீடு கேட்டு வந்­தா­லும் அவர்­க­ளுக்கு இல்லை என்று சொல்­லக்­கூ­டாது. தேர்வு செய்­வ­தற்கு ஒரு கமிட்டி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">கட்­டு­மா­னப் பணி­கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த... நீங்க அமைச்­சர் சொல்­வ­திலே, இல்ல... பெனிஃ­பி­ஷி­ய­ரிய பெனிஃ­பி­ஷி­யரி... இப்ப IRDP இருக்­குன்னு வச்­சுக்­கோங்க, லோன் கொடுக்­கி­றோம். அதுல பெனிஃ­பி­ஷி­ய­ரிய தேர்வு செய்­வது அதற்கு ஒரு கமிட்டி இருக்­கி­றது. அந்த கமிட்­டி­தான் அதை தேர்வு செய்­யுது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்ம சுற்­றுப்­பு­றச் சூழல் துறை அமைச்­சர் சொன்­னார், ஜல்­லி­யெல்­லாம் விலை அவர்­கள் குறைத்­துக் கொடுத்­த­தற்கு கார­ணம் இது­வல்ல. இயற்­கை­யா­கவே விலை­வா­சி­கள் குறை­வாக இருந்­தது. இப்ப எல்­லாமே அவங்க இஷ்­டம்­போல ஏத்­திக்­கிட்டே போறாங்க. அதை கட்­டுப்­ப­டுத்­த­ணும். விலை­வாசி ஏற்­றத்­தைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும், அது­தான் எங்­க­ளு­டைய கோரிக்கை. கார­ணம், அர­சிற்கு ஏற்­ப­டு­கின்ற இழப்­பு­க­ளை­யெல்­லாம் நாங்க குறைக்­கி­ றோம்னு சொல்­றீங்க. அது குறைப்­ப­தற்கு இது உத­வி­யாக இருக்­கும். எது­வாக இருந்­தா­லும் இது குறைப்­ப­தற்கு உத­வி­யாக இருக்­கும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>