<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,870,959,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Aug 23 2026 03:54:38 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260823T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="23082026-TRY-06" position.sequence="06" ex-ref="23082026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">100 நாட்கள் த.வெ.க. ஆட்சியில் மாணவர்கள் படுகொலைகளால்  </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="56">தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">திருவொற்றியூர் பொதுக்கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="R.S.Bharathi_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">சென்னை, ஆக. 23 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">சென்னை வட­கி­ழக்கு மாவட்­டம்  திரு­வொற்­றி­யூர் கிழக்கு பகுதி தி.மு.க. சார்­பில் தவெக அர­சின் சட்டம் ஒழுங்கு சீர்­கு­லைவை கண்­டித்து மாபெ­ரும் கண்­டன பொதுக்­கூட்­டம் திரு­வொற்­றி­யூர் எழுத்­துக்­கா­ரன் தெரு­வில் நடை­பெற்­றது. பகுதி செய­லா­ளர் தி.மு.தனி­ய­ரசு இக்­கூட்­டத்­திற்­கான ஏற்­பா­டு­களை செய்து வர­வேற்­பு­ரை­யாற்­றி­னார். வட கிழக்கு மாவட்­டச் செய­லா­ளர் மாத­வ­ரம் சுதர்­ச­னம் தலை­மை­­யு­ரை­யாற்­றி­னார் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இக்­கூட்­டத்­தில் தி.மு.க. அமைப்புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி பங்­கேற்று சிறப்­பு­ரை­யாற்­றி­ னார்,  அவர் பேசி­ய­தா­வது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தி.மு.க. ஆளுங்­கட்­சி­யாக இருந்­த­போது இதே இடத்­தில் பல பொதுக்­கூட்­டம் நடை­பெற்­றது, ஆனால் அப்­போ­தெல்­லாம் இல்­லாத எழுச்சி திமுக எதிர்க்­கட்­சி­யாக உள்ள போது இங்கு நடை­பெ­று­கின்ற இந்த கூட்­டத்­தில் காண முடி­கி­றது,  நலத்­திட்ட உத­வி­கள் என்ற பெய­ரில் கூட்­டத்தை கூட்­டா­மல் இக்­கூட்­டம் வெறும் கொள்கை மற­வர்­கள் நிறைந்த கூட்­ட­மாக இக்­கூட்­டம் நடை­பெ­று­கி­றது. அது­வும் இரண்டே நாளில் இக்­கூட்­டம் சிறப்­பாக ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">முத­லில் இக்­கூட்­டத்தை வழக்­க­றி­ஞர் அணிமூலம் நடத்­த­லாம் என்று  நினைத்­தி­ருந்­தோம்,  ஆனால் தனி­ய­ரசு நானே நடத்­து­கி­றேன் என்று கூறி இக்­கூட்­டத்­தைச் சிறப்­பாக ஏற்­பாடு செய்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தி.மு.­க.­வினரை பற்றி கலை­ஞர் அவர்­கள் சொல்­லும் பொழுது ஒரு கருத்தை சொல்­லு­வார்,  திமுக காரன் தூங்­கி­னால் கும்­ப­கர்­ணன் எழுந்­தால் இந்­தி­ர­ஜித் என்­பார்,  அதே­போல் இன்று திமுக தோற்­றப்­பி­றகு தான் திமு­க­வி­னர் அனை­வ­ரும் இந்­தி­ர­ஜித்­தாக  வீறு­கொண்டு எழுந்­துள்­ளதை காண முடி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">அந்த எழுச்­சியை நமது இளந்­த­லை­வர் சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் கைது செய்­யப்­பட்­ட­போது கண்­கூ­டாக காண முடிந்­தது, அவர் கைது செய்­யப்­பட்ட. ஒரு சில மணி நேரத்­தி­லேயே தமிழ்­நாடு முழு­வ­தும் நடை­பெற்ற போராட்­டங்­க­ளில் சுமார் ஒரு லட்­சம் பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்,  ஒவ்­வொரு திமு­க­கா­ர­னும் தானாக களத்­தில் வந்து நின்­றான், கட்­சிக்கு மட்­டும் அல்ல தமிழ்­நாட்­டிற்கு ஒரு ஆபத்து என்­றா­லும் முதல் நாளாக காப்­பாற்­று­வ­தற்கு களத்­தில் இருப்­பது தி.மு.க.காரன் மட்­டுமே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">நமது சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் கைது என்­பது இந்த மைனாரிட்டி அர­சுக்கு பெரிய பின்­ன­டைவு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">சம்­பந்­தமே இல்­லாத பிரிவு­ களில் வழக்குப் பதிவு செய்து, அதி­கா­லை­யில் இருந்து ஒரு பெரும் போலீஸ் படையே தஞ்­சா­வூ­ரில் இருந்து புறப்­பட்டு உத­ய­நிதி ஸ்டாலின்வீட்­டிற்கு வந்து கைது செய்ய முற்­பட்­டது,  உடனே திமுக சட்­டத்­துறை சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு ஒன்றை தொடர்ந்­தது,  அவ­சர வழக்­காக எடுத்­துக் கொண்ட நீதி­ய­ர­சர்­கள் உத­ய­நிதி ஸ்டாலினை 12 மணி வரை கைது செய்­யக்­கூ­டாது என்று உத்­த­ரவு பிறப்­பித்­த­னர்,  ஆனால் அந்த உத்­த­ர­வை­யும் மீறி தவெக அர­சின் அரா­ஜக போலீ­சார்உத­ய­நி­தியை கைது செய்து தஞ்­சா­வூ­ருக்கு அழைத்­துச்­சென்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">வழக்கு விசா­ரணை மீண்­டும்  பிற்­ப­கல் 2 மணிக்கு வர இருந்த நிலை­யில்,  யாரோ ஒரு மூத்த வழக்­க­றி­ஞர் அர­சுக்கு அறி­வு­ரைத்­த­தின் பெய­ரில் உயர் நீதி­மன்­றத்­தில் அர­சின் சார்­பில் உத­ய­நி­தியை நாங்­கள் விசா­ரித்து அனுப்பி விடு­வோம் கைது செய்­ய­வில்லை என்று அறி­விக்­கி­றார்­கள்,  இது தவெக அர­சுக்கு ஏற்­பட்ட பெரிய தலை­கு­னி­வா­கும் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">உண்மை நிலை எப்­படி இருக்க இந்த அர­சில் அமைச்­ச­ராக உள்ள ஆதவ் அர்­ஜுனா கைது செய்ய போலீ­சார் வந்த பொழுது இரண்டு மணி நேர­மாக உத­ய­நிதி வீட்டை விட்டு வர­வில்லை என்று ஒரு அப்­பட்­ட­மான பொய்­யான தக­வலை அளிக்­கி­றார், இது முற்­றி­லும் அயோக்­கி­யத்­த­ன­மான செய­லா­கும். இதனை நாட்டு மக்­கள் புரிந்து கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">த.வெ.க. ஆட்­சிப் பொறுப்­பேற்று இந்த நூறு நாட்­க­ளில் சட்­டம் ஒழுங்கு முற்­றி­லும் சீர்­கு­லைந் ­துள்­ளது,  பள்ளி கல்­லூ­ரி­க­ளில் மாண­வர்­கள் கொலை செய்­யப்­ப­டு­கி­றார்­கள்,  மாண­வர்­க­ளுக்கு கஞ்சா மற்­றும் போதைப் பொருட்­கள் எளி­தாக கிடைப்­ப­தாக சொல்­லப்­ப­டு­கி­றது,  இதனை தடுக்க திரா­ணி­யற்ற அரசு,  கடந்த கால தி.மு.க. ஆட்­சியை குறை சொல்­கி­றார்­கள், அதற்கு சட்­ட­மன்­றத்­தி­லேயே எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி உட­ன­டி­யாக பதி­லடி கொடுத்­துள்­ளார். கடந்த திமுக ஆட்சி காலத்­தில் போதைப் பொருள் தடுப்­புத் துறைக்கு தலை­வ­ராக இருந்த அமல்­ரா­ஜை­தான் தற்­பொ­ழுது சென்னை மாந­கர கமி­ஷ­ன­ராக நிய­மித்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">அப்­படி என்­றால் கடந்த காலத்­தில் போதைபொருள் தடுப்பு நட­வ­டிக்­கை­க­ளில் திமுக அரசு திற­மை­யாக செயல்­பட்­டதை அவர்­களை ஒப்­புக்­கொள்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">அது­மட்­டு­மல்லஇந்த அரசு பொறுப்­பேற்று 100 நாட்­க­ளில் பல்­வேறு குற்ற சம்­ப­வங்­கள் தினம் தினம் அரங்­கேறி வரு­கின்­றன,  குறிப்­பாக சொல்ல வேண்­டும் என்­றால் இந்த குற்­றச்­சம்­பங்­க­ளில் பெரும்­பா­லா­னோர் ஈடு­ப­டு­வோர்  தவெ­கவை சார்ந்­த­வர்­க­ளா­கத்­தான் இருக்­கி­றார்­கள்,  அது மட்­டு­மல்ல தற்­பொ­ழுது காவல் நிலை­யங்­க­ளில் எந்­தப் பொறுப்­பி­லும் இல்­லாத  த.வெ.க.வின­ரின் அத்து மீறிய செயல்­பா­டு­க­ளால் போலீஸ் அதி­கா­ரி­களே குமுறி வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தற்­பொ­ழுது தமிழ்­நாடு சட்­ட­மன்ற நட­வ­டிக்­கை­களை பார்த்­தால் மிக­வும் வேடிக்­கை­யாக உள்­ளது,  நமது சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் ஒரு துறை­யின் மீது கேள்வி கேட்­டால் அதற்கு சம்­பந்­தமே இல்­லாத ஒரு அமைச்­சர் அதற்கு பதில் அளிக்­கி­றார்,   தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தின் மர­புத் தெரி­யா­மல் அமைச்­சர்­கள் உள­று­கி­றார்­கள், இந்து சமய அற­நி­லைத்­துறை அமைச்­சர் ரமேஷ் சட்­ட­மன்­றத்­தில் ஆண­வத்­தோடு பேசு­கி­றார்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">முதல்­வர் வரும்­பொ­ழுது உத­ய­நிதி எழுந்து நிற்க வேண்­டு­மாம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">சபா­நா­ய­கர் ஒரு­வ­ருக்கு மட்­டும்­தான் எழுந்து நிற்க வேண்­டும் என்ற மரபு கூட தெரி­யா­த­வர்­கள் இவர்­கள்,  அது­மட்­டு­மல்ல மரி­யாதை என்­பது கேட்­டுப் பெறக் கூடாது தானாக கிடைக்க வேண்­டும், இதற்­கெல்­லாம் கார­ணம் தனது சட்­ட­மன்ற தேர்­த­லின் போது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தமிழ்­நாட்டு மக்­கள் தெரி­யாம வாக்­க­ளித்த கார­ணத்­தால், தமிழ்­நாடு பல்­வேறு தலை­கு­னி­வு­களை சந்­தித்­துக் கொண்­டுள்­ளது ,  தமிழ்­நாடு பல்­வேறு வகை­க­ளி­லும் பின்­ன­டைவை நோக்கி சென்று கொண்­டி­ருக்­கி­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">குறிப்­பாக திரு­வொற்­றி­யூ­ரில் நடை­பெற்ற மாண­வர் கொலை வழக்­கில் உரிய நட­வ­டிக்கை எடுக்­காத போலீஸ் அதி­கா­ரி­களை கண்­டிக்க கூட த.வெ.க. கூட்­டணி கட்­சி­க­ளுக்கு தைரி­யம் கிடை­யாது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தற்­பொ­ழுது முதல்­வர் விஜய்தன்­னு­டன் இருக்­கும் எம்.எல்.ஏ.க்­களை தக்க வைத்­துக் கொள்­வ­தற்­கா­கத்­தான் எம்.எல்.ஏ.க்­க­ளுக்கு கார் வழங்­கும் திட்­டத்தை அறி­வித்­துள்­ளார், தமிழ்­நாட்­டில் எவ்­வ­ளவோ பிரச்சி­னை­கள் இருக்­கி­றது,  அதற்­கெல்­லாம் நிதி இல்லை என்று கையை விரித்து காட்­டும் விஜய்க்கு இத்­திட்­டத்­திற்கு மட்­டும் நிதி எப்­படி கிடைத்­தது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">அது­மட்­டு­மல்ல நேற்று சட்­ட­மன்­றத்­தில் முதல்­வர் விஜய் சவால் விடு­கி­றார்,  நான் பேசி­னால் என்ன ஆகும் தெரி­யுமா என்று,  என் மேசை மீது மூன்று பைல்­கள் உள்­ளது,  அதைப் பிரித்­தால் அவ்­வ­ளவு தான் என்று பூச்­சாண்டி காட்­டு­கி­றார்,  இது­போன்ற எவ்­வ­ளவு பூச்­சாண்­டி ­களை,  அதா­வதுகீரிப்­பாம்பு மோடிமஸ்­தான் வித்தை­ களை­யெல்­லாம்,எம்.ஜி.ஆர். ஆட்­சிக் காலத்­தில் இருந்தே பார்த்துவந்த இயக்­கம் தான் தி.மு.க., தி.மு.­க.வை பழி­வாங்க வேண்­டும் என்­ப­தற்­காக 
எம்.ஜி.ஆர். சர்க்­கா­ரியா கமி­ஷன் என்ற வழக்கை கலை­ஞர் மீது தொடுத்­தார், ஆனால் அதில் ஒன்­று­மில்லை என்ற கார­ணத்­திற்­காக அவரே திரும்­பப்பெற்­றார் என்­ப­தெல்­லாம் வர­லாறு,  அது மட்­டு­மல்ல 2001 இல் ஜெய­ல­லிதா ஆட்­சிக்கு வந்­த­வு­டன்,  தி.மு.க. ஆட்சி காலத்­தில் கட்­டிய மேம்­பா­லத்­தில் ஊழல் என்று கூறி கலை­ஞர் அவர்­களை இர­வோடு இர­வாக கைது செய்து சிறை­யில் அடைத்­தார்­கள்,  25 ஆண்­டு­கள் ஆகி­றது இது­வரை அந்த வழக்­கில் எதை­யும் அவர்­க­ளால் நிரூ­பிக்க முடி­ய­ வில்லை,  இந்த வர­லாறு எல்­லாம் நேற்று முளைத்த காளான்­க­ளுக்கு தெரிய வாய்ப்பு கிடை­யாது ,  இப்­பொ­ழுது விஜய் பூச்­சாண்டி காட்­டு­கி­றார்,  நீயும் அந்த மூன்று பைல்­களை பிரித்­துக் காட்டி முடிந்­தால் தி.மு.க. குற்­றம் செய்­தி­ருந்­தால் நிரூ­பித்­துக் காட்டு, நாங்­க­ளும் ஊழல் பட்­டி­யலை தயார் செய்து வரு­கி­றோம்,  கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற தி.மு.க. சட்­டத்­துறை கூட்­டத்­தில் பேசிய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">எங்­க­ளது இளந்­த­லை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் தி.மு.க. வழக்­க­றி­ஞர்­க­ளுக்கு ஒரு கட்­டளை இட்­டுள்­ளார்,  ஒவ்­வொரு ஊரி­லும் ஆட்­சி­யா­ளர்­கள் செய்­யும் தவ­று­களை ஊழல்­களை ஆதா­ரத்­து­டன் சேக­ரிக்க உத்­த­ர­விட்­டுள்­ளார்,  இப்­பொ­ழுது 10 15 ஊழல் பட்­டி­யல்­கள் தயா­ராகி 
உள்­ளது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">அதில் முதல் ஊழல் முதல்­வர் அலு­வ­ல­கத்தை புண­ர­மைப்­ப­தில் விடப்­பட்ட டென்­ட­ரில் இருந்து தொடங்­கு­கி­றது,  இப்­பொ­ழுது இருந்து தான் முத­ல­மைச்­ச­ருக்கு கெட்ட காலம் தொடங்­கு­கி­றது,  1991 ஆம் ஆண்டு ஜெய­ல­லிதா முதல்­வ­ராக வந்­த­வு­டன் அர­சுக்கு சொந்­த­மான டான்ஸிநடத்­திய வாங்­கி­ய­தில் கிடுக்­கிப்­பி­டி­யாக மாட்­டிக் கொண்டு தண்­டனை பெற்­றது போல்,  தற்­போ­தைய முத­ல­மைச்­சர் விஜய்க்­கும் அது நிச்­ச­யம் நடக்­கும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இரண்­டா­வது ஊழல் பழனி திருக்­கோ­வி­லுக்கு சொந்­த­மான 100 கோடி மதிப்­புள்ள நிலத்தை 2 கோடிக்கு பத்­திர பதிவு செய்­தது தொடர்­பான வழக்­கில் பிர­தான குற்­ற­வா­ளி­யும் முக்­கிய சாட்­சி­யு­மான ஒரு­வர்  சிறை­யில் மர­ண­ம­டைந்­த­தற்­கும் இந்த ஆட்சி பதில் சொல்­லியே ஆக வேண்­டும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">மூன்­றா­வ­தாக இங்கு ஆட்­சிக்கு வந்து 100 நாட்­க­ளில் 6 உயிர்­கள் போலீஸ் கஸ்­ட­டி­யில் பலி­யாகி உள்­ளது,  இதை­யும் நாங்­கள் சும்மா விட­மாட்­டோம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">மிக முக்­கி­ய­மான ஊழ­லாக கடந்த சில நாட்­க­ளுக்கு முன்பு 11 மது­பான கம்­பெ­னி­க­ளுக்கு இந்த அரசு தடை விதித்து உத்­த­ரவு பிறப்­பித்­தது,  ஆனால் 24 மணி நேரத்­தில் அந்த உத்­த­ரவு திரும்ப பெறப்­பட்­டுள்­ளது, அப்­படி என்­றால் திரை மறை­வில் நடந்­தவை என்ன என்­பதை நாங்­கள் அம்­ப­லப்­ப­டுத்­து­வோம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">அது­மட்­டு­மல்ல அடுத்த ஊழ­லாக அரசு வக்­கீ­லாக நிய­மிப்­ப­தில் நடை­பெற்ற மெகா ஊழல்,  இதில் எந்­தெந்த பொறுப்­பிற்கு எவ்­வ­ளவு பணம் கொடுத்­தார்­கள் என்ற பட்­டி­யல் எங்­க­ளி­டம் உள்­ளது, இதை­யும் நாங்­கள் சட்­ட­ரீ­தி­யாக கையாண்டு இந்த அர­சின் ஊழலை வெளிச்­சத்­திற்கு கொண்டு வரு­வோம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">75 ஆண்டு கால சரித்­தி­ரம் படைத்த திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­டம் சட்­ட­ரீ­தி­யாக மோதி எவ­னும் வென்­ற­தாக சரித்­தி­ரம் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தற்­பொ­ழுது நடை­பெற்று வரும் தவெக அரசு எந்த ஸ்திரத்த ன்மையும் இல்­லாத  , நம்­ப­கத்­தன்மை இல்­லாத அரசு என்­ப­தற்கு ஒரே ஒரு எடுத்­துக்­காட்டு தொகுதி மறு­வ­ரை­யறை குறித்த விஷ­ யத்­தில் விஜய் அடித்த பல்டி , மெக அந்­தர்­பல்டி ஆகும். அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தில்  தொகுதி மறு வரை­ய­றையை எதிர்க்­கி­றோம் என்று தீர்­மா­னத்தை நிறை­ வேற்­றி­விட்டு,  நேற்று அமித்­ஷாவை கண்­ட­வு­டன் அஞ்சி நடுங்கி நியா­ய­மான மறு வரை­யறை வேண்­டு­மென்று அந்­தர் பல்டி அடித்­துள்­ளார்,  அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தில் கலந்து கொள்­ளாத கட்­சி­களை எட்­டப்­பர்­கள் என்று கூறிய ராகுல் காந்­திக்கு, இப்­போது புரிந்து இருக்­கும் யார் எட்­டப்­பர்­கள் என்று,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நம்­மி­டம் இருந்து கூட்­ட­ணி­யில் வெற்றிபெற்ற காங்­கி­ரஸ் காரர்­கள்,  வெற்றி பெற்ற உடனே நன்­றியை மறந்து பதவி சுகத்­திற்கு ஆசைப்­பட்டு அணி மாறி அமைச்­சர் பதவி ஒட்­டிக் கொண்­டுள்ள இரு­வ­ரும் என்னை விமர்­சிக்­கி­றார்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">என்­னை­யெல்­லாம் விமர்­சிக்க அவர்­க­ளுக்கு துளி கூட தகுதி கிடை­யாது என்­பதை நாட்டு மக்­கள் அறி­வார்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">அந்த காலத்­தில் காங்­கி­ரஸ்­கா­ரர்­களை இரண்டு வகை­யாக பிரித்­துக் சொல்­வார்­கள், ஒண்ணு பக்கா காங்­கி­ரஸ்,  இன்­னொன்று சொக்கா காங்­கி­ரஸ்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">பக்கா காங்­கி­ரஸ் என்­றால் சுதந்­தி­ரத்­திற்­காக போரா­டி­ய­வர்­கள்,தேசிய உணர்வு மிக்­க­வர்­கள், சொக்கா காங்­கி­ரஸ் என்­றால் பத­விக்­காக வந்த பந்­தா­கா­ரர்­கள், எனவே சொக்கா காங்­கி­ரஸ் காரர்­கள் பேசி­ய­தைப் பற்றி நான் பெரி­தாக எடுத்­துக் கொள்ள மாட்­டேன்,  அவர்­கள் அவ்­வாறு பேசி­னால் தான் அந்­தப் பத­வி­யில் அவர்­கள் ஒட்­டிக் கொண்­டி­ருக்க முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தி.மு.க. ஆட்­சிப்­பொ­றுப்­பில் இருந்­த­போது   தகைசால் தமி­ழர் விருது சங்­க­ரய்யா அவர்­க­ளுக்­கும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">நல்­ல­கண்ணு அவர்­க­ளுக்­கும், ஆசி­ரி­யர் கி.வீர­மணி,  குமரி ஆனந்­தன் ஆகி­யோ­ருக்கு வழங்­கப்­பட்­டது,  தி.மு.க. மீண்­டும் வெற்றி பெற்று இருந்­தால் நமது தலை­வர் அவர்­கள் இந்த வருட தகை­சால் விருதை பாமக நிறு­வ­னர் ஐயா ராம­தாஸ் அவர்­க­ளுக்கு வழங்­க­லாம் என்று என்­னி­டம் தெரி­வித்­தி­ருந்­தார்,  நாம் வெற்றி பெற முடி­யாத­தால் அந்த வாய்ப்பு நழு­விச் சென்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">நிச்­ச­யம் விரை­வில் ஆட்சி மாற்­றம் ஏற்­ப­டும்,  நிர்­வாக திறன் இல்­லாத,  ரீல்ஸை மட்­டுமே மூல­த­ன­மாக கொண்ட இந்த மக்­கள் விரோத ஆட்சி நீண்ட நாள் நீடிக்­காது,  நமது கட்­சி­யி­னர் உற்­சா­கத்­தோடு இருங்­கள்,  விரை­வில் உள்­ளாட்­சித் தேர்­தல் வர­வுள்­ளது,  அந்­தத் தேர்­த­லையே நாம் தான் நடத்­தும் அள­வில் கூட ஆட்சி மாற்­றம் 
ஏற்­ப­டும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இந்த ஆட்சி நீடிக்­கும் ஒவ்­வொரு நாளும் தமிழ்­நாடு பின்­ன­டைவை நோக்­கித்­தான் சென்று கொண்­டி­ருக்­கி­றது என்­பதை தமிழ்­நாட்டு மக்­கள் தற்­பொ­ழுது நன்­றாக உணர்ந்­துள்­ளார்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தேர்­த­லுக்கு முன்பு அளித்த வாக்­கு­று­தி­கள் எதை­யுமே நிறை­வேற்­ற­வில்லை என்­பதை மக்­கள் நன்கு புரிந்து கொண்­டுள்­ள­னர்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் தலை­மை­யில் நடை­பெற்ற திரா­விட மாடல் ஆட்­சி­யில் பெற்ற நன்­மை­களை எண்­ணிப் பார்க்க தொடங்­கி­யுள்­ள­னர்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">அதை­யெல்­லாம் மறந்து வீட்­டில் குழந்­தை­கள் சொன்­னார்­கள் என்­ப­தற்­காக வாக்­க­ளித்­ததை எண்ணி வருந்­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தமிழ்­நாட்டு மக்­கள் தான் செய்த தவ­றுக்கு உரிய பரி­கா­ரத்தை நிச்­ச­யம் வழங்­கு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இவ்­வாறு அவர் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இக்­கூட்­டத்­தில் முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் கே பி சங்­கர்,  மாநில நிர்­வா­கி­கள் கண்­ண­தா­சன், ஜி சந்­தி­ர­போஸ், என் மரு­து­க­ணேஷ், வீ.கவி கணே­சன், மாவட்­டத் தலை­வர் குறிஞ்சி கணே­சன்,  பகுதி செய­லா­ளர்­கள் வை.ம. அருள்­தா­சன்,  ஏவி ஆறு­மு­கம்,  வட்ட செய­லா­ளர்­கள் வி.சதீஷ்­கு­மார், மற்­றும் கழக நிர்­வா­கி­கள் பொது­மக்­கள் திர­ளாக பங்­கேற்று சிறப்­பித்­த­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>